Pages

Wednesday, October 7, 2009

என் அடுக்களை

என் அடுக்களை

வயித்துல அமிலத்தன்மை காரணமா கஷ்டப்பட்டேன்னு போன போஸ்ட் ல சொல்லி இருந்தேன் இல்லியா?
அதுனால வலையில தேடி என்னவெல்லாம் சாப்பிடலாம் எதெல்லாம் சாப்பிட கூடாதுன்னு கண்டுபிடிச்சேன். அதுல இந்த நெல்லிக்காய் acidity க்கு "ரொம்ப நல்லது"ன்னு படிச்சேன். ஆக கடைக்கு போனப்போ வாங்கியாச்சு. அப்டியே சாப்பிட புளிக்கிது. என்ன பண்ணலாம்னு யோசிச்சப்போ இந்த ஐடியா தோணிச்சு.. இது ரொம்ப சுவையா இருந்தது..

நெல்லிக்காய் தயிர் பச்சடி

தேவையான பொருட்கள்
புளிக்காத தயிர்- 1கப்
நெல்லிக்காய்- 4-5
தேங்காய்த்துருவல்- 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் -1
இஞ்சி - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
கருவேப்பிலை - ஒரு ஆர்க்

தாளிக்க
கடுகு -1 தேக்கரண்டி
வெந்தியம்-2/3 மட்டும் (மணத்துக்கு மட்டும்)
காய்ந்த மிளகாய் -1/2

செய்முறை விளக்கம்
நெல்லிக்காயை பச்சையாக துருவிக்கொள்ள வேண்டும். துருவிய நெல்லிக்காய் , இஞ்சி , பச்சை மிளகாய் , தேங்காய், கொத்தமல்லி , சிறிதளவு கறிவேப்பிலை இதையெல்லாம் சேர்த்து விழுதாக அரைக்கவேண்டும். இந்த விழுதை தயிருடன் கலந்து தாளிக்க வேண்டும்.
இந்த பச்சடி தனிச்சுவையுடன் இருப்பதோடு உடம்புக்கும் நல்லது.

No comments:

Related Posts with Thumbnails