Pages

Wednesday, October 21, 2009

பல்புகள் பலவிதம்





பல்புகள் பலவிதம்













'பல்பு அடிப்பது', 'பழம் சாப்பிடுவது', 'லட்டு சாப்பிடுவது' இப்படி வழக்கில் பல சொற்கள் இருந்த போதிலும் இவை எல்லாமே 'ஏமாந்து போவதையே' குறிக்கும்.

வாழ்க்கையில் பல்பு வாங்குவது மனிதனாக பிறந்தவர்கள் எல்லாருக்கும் பொதுவென்றாலும் , சிலர் அதை நினைத்து வெட்கப்படுவார்கள் , சிலர் அதை கண்டுகொள்ளாமல் போய் விடுவார்கள் . நான் இந்த ரெண்டு வகையிலும் இல்லை. அடிக்கடி நினைத்து சிரித்துக்கொள்வேன். நான் வாங்கின இரண்டு 'சிறந்த' பல்புகளைப்பற்றி சுருக்கமாக இங்கே சொல்கிறேன் . ஒன்று கொசுறு.

எனக்கு ஒரு பதினான்கு வயது இருக்கும். ஒன்பதாவது படித்து கொண்டு இருந்தேன். என் தந்தை பம்பாயில் வங்கியில் பணி புரிந்து வந்தார். எங்களுக்கு தங்குவதற்கு தனியாக குவார்டர்ஸ் கொடுத்து இருந்தார்கள்.நாங்கள் அங்கு ஏழடுக்கு மாடி கட்டிடத்தில் நாங்கள் ஆறாவது மாடியில் இருந்தோம். இதே போல மூன்று கட்டிடங்கள். அம்மாவிற்கு நிறைய நண்பர்கள். ஆண்கள் அலுவலகம் சென்ற பின்னர் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு பெண்கள் எல்லாரும் காம்பௌண்டில் இருக்கும் புல்வெளியில் நடக்க செல்வது வழக்கம். நாங்கள் வீட்டில் இருந்து ரேடியோ கேட்போம்.அதில் புதிய ஹிந்தி பாடல்கள் போடுவார்கள். அன்றும் அப்படி தான் அம்மா வாக்கிங் போய் இருந்தார். காலிங் பெல் சத்தம் கேட்டு கதவு திறந்தேன். ஒரு பெண் கையில் ஒட்டடைக்குச்சியுடன் நின்று கொண்டு இருந்தாள்.அவளிடம் ஒரு குழந்தை இருந்தது, அதை ஒரு துணியில் கட்டி முதுகில் சுமந்து கொண்டு இருந்தாள். என்ன வேண்டும் என்று கேட்டேன். கீழே உங்கம்மாவை பார்த்தேன், இந்த ஒட்டடைக்குச்சியை உன்னிடம் கொடுத்து விட்டு 55 ருபாய் வாங்கிக்கொள்ள சொன்னார், என்றாள். என் கெட்ட நேரம் அப்பொழுது நிஜம்மாகவே வீட்டில் ஒரு ஒட்டடைக்குச்சி வேண்டி இருந்தது. இந்த வீடு தான் என்று எப்படி தெரிந்தது என்று கேட்டேன். 604 இல் கொண்டு கொடுக்க சொன்னார் என்று என் வாயை அடைத்தாள். அது 1990 . சத்தியமாக, ஒரு சாதாரண ஒட்டடைக்குச்சி  55 ரூபாய் எல்லாம் இருக்காது என்று ஏனோ எனக்கு தோன்றவில்லை. மடத்தனமாக கைகேயியின்  சொல்பேச்சு கேட்டு ராமன் காட்டிற்கு சென்றார் போல  நானும் அந்த பெண்ணிடம், வீட்டுப்பணத்திலிருந்து ஐம்பத்தி ஐந்து ருபாய் கொடுத்து என் அன்னையின் ஆணையை நிறைவேற்றியதோடு அல்லாமல், அந்த குச்சியை பெருமையாக வாங்கி வைத்தேன். அம்மா வாகிங் போய்விட்டு திரும்பியதும் என்ன இது என்று கேட்டார். நானும் நடந்ததை கூற, ஆடிபோய் விட்டார் அம்மா. எவளோ தெருவில் போகிறவள் ரெண்டு மூன்று நாளாக கவனித்து ஆட்டைய போட்டு இருக்கிறாள் என்ற உண்மை தெரிந்ததும் இந்த விஷயத்தைசும்மா விடக்கூடாது என்று association இல் சொல்ல, அவ்வளவு தான். வீட்டுக்கு வீடு "பல்பு வாங்கிய அருமைச்சிகாமனியே" என்று எனக்கு poster ஒட்டாத குறை தான் தான். corridor எல்லாம் என் 'புகழ்' பாடினார்கள்.காலனியில் உள்ள குழந்தைகள் என் மேல் காமடி வெண்பாவே இயற்றி விட்டார்கள்.கீழே காலனி குழந்தைகளுடன் கூடி கும்மியடித்து விட்டு வந்த என் அருமை தங்கை,என்னை ஏளனமாக ஒரு பார்வை பார்த்து," நீ இன்னும் உயிரோட தான் இருக்கியா" என்று கேட்கும் அளவிற்கு விஷயம் போய்விட்டது ஒரு வாரம் வெளியில் தலை காட்ட முடியவில்லை. எங்கள் குடியிருப்பில் வேறு எங்கும் அந்த பெண் சென்று ஆட்டைய போட்டார் போல தெரியவில்லை.. நான் தான்  கிடைத்தேனா? நாறிவிட்டது நாறி..


அடுத்தது சமீப காலமாக நான் வேலைக்கு முயன்று வருகிறேன் . ஒன்றும் கிடைத்த பாடில்லை . அதனால் கொஞ்சம் மனம் நொந்து இருந்தேன். ஸ்ரீ சாயி சத்சரித்திரம் படித்து முடித்து பூஜை செய்த அன்று துபாயில் இருந்து ஒரு அழைப்பு, என் மொபைல்இல் வந்தது . . எடுத்தால் core elements என்ற கம்பென்யில் இருந்து அழைத்தார்கள் . என் சம்பந்தப்பட்ட விஷயங்களைக தெளிவாக கூறி விட்டு நேர்முகத்தேர்வுக்கு என்னை துபயிற்கு அழைத்தனர் . நான் இருப்பது அபுதாபியில் . சுமார் 200 கி மீ தொலைவில் நேர்முகத்தேர்வு . நான் மிகவும் தயங்கினேன் . ஆனால் என் கணவர் ஊக்கப்படுத்த நன் ஒத்துக்கொண்டேன் . அவர்கள் சரமாரியாக போனில் sms, email இல் location , landmark ஆகியன எல்லாம் அனுப்பிக்கொண்டே இருந்தார்கள் . நான் கூட என்ன ஒரு professional approach என்று நினைத்து சிலாகித்தேன் . அங்கே சென்ற போது எனக்கு ஒரே ஆச்சர்யம் . துபையில் வேலையில்லாமல் திண்டாடும் அனைவரும் அந்த சிறிய corridor இல் நின்று கொண்டு பேசிக்கொண்டு இருந்தனர் . உள்ளே அமருமாறு அந்த வரவேற்பாளர் கூறவும் , நன் சென்று அமர்ந்த அறையில் எல்லா நாட்டவரும் வேலைக்கு வேண்டி வந்திருப்பது தெரிந்தது. இதில் விசேஷம் என்னவென்றால் அவர்கள் யாவரும் என் வயதல்ல . ஏதோ சரவணா ஸ்டோர்ஸ் இல் துணி வாங்க வருவோர் போல பெரியவர்களும் , சிறியவர்களும் இருந்தார்கள் . ஒரு பிலிப்பினோ பாட்டி தட்டுதடுமாறி வந்து அமர்ந்து கொண்டாள். எனக்கு குழப்பமாக இருந்தது. சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்த பின்னர் உள்ளே அழைத்தனர் . ஒரு பெண் தான் பேசினாள் . ஏதோ ஒரு multinational கம்பென்யில்  வேலை, இது சம்பளம் , medical benefits, leave package எல்லாம் இருக்கும் என்றெல்லாம் சொன்னாள் . என்னைப்பற்றி   அவள் எதுவும் தெரிந்து கொள்ள விரும்பியதாக தெரியவில்லை . கடைசியில்  வைத்தாள் பாருங்கள் ஒரு ஆப்பு  , நான் ஒரு additional information கொடுக்கபோகிறேன் என்றாள். இங்கே 150 டிராம் கட்டினால் உங்களுக்கு எப்போ வேலை வேண்டுமோ உங்கள் வீட்டிற்கே வந்து appointment order தருகிறோம், இந்த நீங்கள் ஊரில் இருக்கும் வரை வேலைஇல்லா திண்டாட்டம் சுத்தமாக இருக்காது, இந்த சலுகை இன்றுமாலை 5 மணி வரையில் தான். முந்துங்கள் என்றெல்லாம்  பிதற்றினாள் . எனக்கு சிவுக் என்றாகி விட்டது . ஏதோ சொல்லி சமாளித்து விட்டு வெளியில் வந்தபொழுது என் கணவர் பணம் தந்து இருக்கலாமே . வேலை கிடைத்தால் போதுமே உனக்கு என்று சொன்னார். நான் மட்டும் ஏனோ  அப்போது , எல்லாம் சாயி பார்த்து கொள்ளவார் என்று கூறி  விட்டு நகர்ந்தேன் . வீட்டிற்கு வந்தபின் google செய்து பார்த்த போது அது ஒரு டுபாக்கூர் கம்பெனி என்பது தெரிய வந்தது. எல்லாவற்றிற்கும் google செய்யும் நான் எப்படியோ இதை செய்யாமல் விட்டு இருந்தேன். பல்பு வாங்கணும் என்று தலையில் எழுதி இருந்தால் யார் மாற்ற முடியும்.? கஷ்டம் .நல்ல வேளை! அந்த நூற்றைம்பது டிராம்  சாயி எனக்கு நஷ்டப்படுத்தவில்லை தப்பித்தேன் . பேக்கு மாதிரி அபுதாபியிலிருந்து துபாய் சென்று ஒரு டுபாகூர் interview attend பண்ணியது நானாக மட்டும் தான் இருக்கும் என்று நினைத்த எனக்கு, complaints board என்ற தளத்தில் நிறைய பேர் என்னை போன்றோ அல்லது பணம் கட்டியோ ஏமாந்து இருக்கிறார்கள் என்று தெரிய வந்தது. அதுக்காக வாங்கின பல்பு இல்லேன்னு ஆயிடுமா என்ன?

ஒரு வேளை உக்காந்து யோசிப்பாயிங்களோ? குருப் குருப்பா தான்யா கெளம்பிஇருக்காயிங்க.

இங்கே அபுதாபியில் public transport என்றால் taxi தான் . மிகசமீபமாகத்தான் பஸ்கள் ஓடுகின்றன . சிறிய ஊராதலால் , எல்லாரும் taxi யை தான் விரும்புவார்கள் . அனால் பாருங்கள் taxi க்களின் ratio பத்தாயிரம் பேருக்கு ஒரு taxi என்பது . எப்போதும் taxi drop off (main ரோட்டில் டாக்ஸிக்கள் நிற்குமிடம் ) இல் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும் . அனால் டாக்ஸி மட்டும் கிடைக்காது . அவ்வளவு கஷ்டம் . சிக்னல் கிரீன ஆனால் எதாவது ஒரு டாக்ஸி கண்டிப்பாக வரும் என்று நம்பி , விடாமல் கை காட்டி கொண்டே இருப்போம் . கடைசியில் அது "பெப்பே " காட்டி விட்டு போய் விடும் . உள்ளே ஆள் இருப்பார்கள் . இதுவும் ஒரு வித பல்பு அனுபவம் தானே ?






திரைப்படங்களில் பொதுவாக பல்பு அனுபவங்கள் குறைவு . அப்படியே இருந்தாலும் அது ரசிக்கும்படி அமைவது கஷ்டம் . ஆனால்  டிக் டிக் டிக் படத்தில் கமலஹாசன் அசடு வழிவது அக்மார்க் ரகம் . நாட்டியம் பார்க்க வந்து விட்டு அந்த பாடலில் மயங்கி ஸ்வரங்கள் எடுத்து கொடுத்து விட்டு எல்லாரும் திட்டி அமருமாறு கூறும்போது , முகத்தில் டன் கணக்கில் அசடு வழிவார் .. இதுவல்லவோ நிஜம்மான 100 வாட்ட்ஸ் பல்பு!!!

அவ்வை ஷண்முகி படத்தில் குழந்தையை பார்க்க துடிக்கும் தந்தையாக கஷ்டப்பட்டு கேட்டின் மேல் ஏறுவார் . அவர் ஏறியவுடன் கேட் மெதுவ்வாக திறக்கும் . அதற்கொரு வழிசல் வழிவார் .
மகாநதியில் முதல் பாதியில் பல பல்பு காட்சிகள் இருக்கும் ஆனால் சிரிக்க தோன்றாது


குஷி படத்தில் ஜோதிகா பல்பு வாங்கினாலும் கொஞ்சம் overaction தவிர்த்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும் . அதற்கு மாயாவி படத்தில் டென்டிஸ்ட் வீட்டில் மீனா படத்தை பார்த்து பல்பு அடிக்கும்போது அவர் நடிப்பு கொஞ்சம் ரசிக்கும்படியாக இருக்கும் . சத்ய ன் அவரிடம் நான் எங்க தலைவி சிம்ரன் போச்டேரையே 3 மணி நேரம் பாப்பேன் தெரியும்லா என்று கேட்பதும் அதற்கு ஜோவின் expressions நல்ல கிச்சு கிச்சு தான .




இப்படி வேறு எதாவது காட்சிகள் நச் என்று உங்கள் மனதில் தோன்றினால் பின்னூட்டத்தில் இடுக.


6 comments:

Annamalai Swamy said...

என்னுடைய இந்தப் பதிவும் நான் என் அக்கா மகளிடம் வாங்கிய பல்பு தான்
http://manipuram.blogspot.com/2009/07/blog-post.html

வேற பல்பு வாங்கியிருந்தாலும் சட்டென்று நினைவு வரவில்லை, வரும் போது எழுதுகிறேன்.

Anonymous said...

nice bulb.keep bloging..

Unknown said...

அக்கா, அண்ணாமலையின் பதிவு உண்மையிலேயே சரியான பல்பு தான்... ஒரு அபிப்பிராயம்... திரைப்படங்களின் தாக்கத்தை கொஞ்சம் கம்மி பண்ணிக்கோயேன்... வாழ்க்கை திரைப்படங்களை விட சுவாரசியமானது... ;-)

Ananya Mahadevan said...

Thank you Annamalai for sharing your link.
Thanks Mittu for stopping by. I enjoyed reading your Ms Sarcasm post.
Thanks Mahesh for the suggestion. I will consider it for sure. Will try to reduce movie impact in my forthcoming posts.

Shanlax said...

ஒரு வாரம் வெளியில் தலை காட்ட முடியவில்லை....
நான் தான் கிடைத்தேனா? நாறிவிட்டது நாறி..
எனக்கு சிவுக் என்றாகி விட்டது.
கஷ்டம் .நல்ல வேளை! அந்த நூற்றைம்பது டிராம் சாயி எனக்கு நஷ்டப்படுத்தவில்லை தப்பித்தேன்.....

வாழ்க்கையில் பல்பு வாங்குவது மனிதனாக பிறந்தவர்கள் எல்லாருக்கும் பொதுவென்றாலும் , சிலர் அதை நினைத்து வெட்கப்படுவார்கள் , சிலர் அதை கண்டுகொள்ளாமல் போய் விடுவார்கள் . நான் இந்த ரெண்டு வகையிலும் இல்லை. அடிக்கடி நினைத்து சிரித்துக்கொள்வேன்.

இப்படி வேறு எதாவது காட்சிகள் நச் என்று உங்கள் மனதில் தோன்றினால் பின்னூட்டத்தில் இடுக......

எனகென்னமோ அம்மா பல்பு வாங்கிட்டு, வாங்கிட்டு புலம்பும் புது ரகமாகவே தெரிகிறது.

Ananya Mahadevan said...

ஹாஹா.. புலம்புவது என் பிறப்புரிமை.

Related Posts with Thumbnails