மனம் ஒரு குரங்கு - 4
ஒரு 2 மணிநேரத்தில் சுஜாதா அவர்களின் "ஐந்தாவது அத்யாயம்" படித்தேன். அவர் இறப்புக்கு சில ஆண்டுகள் முன்பு எழுதி இருப்பார் என்று நினைக்கும்படியாக அதில் நிறைய technical விஷயங்கள் . கதையைப்பொருத்த வரை மிகவும் சாதரணமாக இருந்தது . கொஞ்சம் அதிகமாக எதிர்
பார்த்துவிட்டேன். சில இடங்களில் ஏனோ தெரியவில்லை , தவிர்க்க முடியாமல் இதற்கு முன்னர் நான் படித்த "விரும்பிசொன்ன பொய்கள் " என்ற கதையின் ஒரு சாயல் . இந்த கதையுடைய முடிவும் சற்று வித்தியாசமாக இருந்தது . பலருக் கு புரியவில்லையாம். அதனால் மீண்டும் படித்தனராம். மிக கவனமாக படிக்கும் படி சுஜாதா அவர்களின் முன்னுரைப்படி படித்தேன். எனக்கு புரிவதில் பிரச்சினை ஏதும் இருக்கவில்லை..இருந்தாலும் ஏனோ சப்பென்றாகி விட்டது.. Dil hai ke maantha naheen.
விசாகா என்னை அவள் வீட்டில் அகோயீ மாதா பூஜைக்கு அழைத்து இருந்தாள் . இந்தியா முழுவதும் தொன்று தொட்டு ஒரே விதமான ஆசார அனுஷ்டானங்கள் தான் இருந்து வந்து இருக்கின்றன என்பது புரிந்தது . நாம் அரிசி மாவில் கோலம் போடுவது போல அவர்கள் (வட நாட்டவர் ) கோதுமை மாவில் கோலம் போடுகிறார்கள் . என்னை ஹிந்தியில் இரண்டு நோன்புக்கதைகள் படிக்க சொல்லிவிட்டு கையில் ஒரு நோன்பு சரடு கட்டி விட்டாள். அவர்கள் முறைப்படி இதையெல்லாம் அறிவது எனக்கு புதிய அனுபவமாக இருந்தது .
அன்று பூஜையில் அவள் எனக்கு பிரசாதம் கொடுக்க மறந்தாளாம். அதனால் அடுத்த நாள் அதே பிரசாதத்தை(??!!!) கொண்டு வந்து கொடுத்து விட்டு , எங்கள் வீட்டில் ஒரு ராமாஞ்சநேய ஆலிங்கன படம் உள்ளது . அதை காண்பித்து அவளுடைய ஒன்றரை வயது குழந்தையிடம் "ஹன்னுமாமா தேகோ பேட்டா "என்று சொல்லிக்கொண்டு இருந்தாள் . நான் கேட்டபோது , ரக்ஷா பந்தன் அன்று ராகீ கட்ட தம்பி அண்ணா இருக்கவில்லையாம் . அதனால் ஆஞ்சநேயருக்கு ராக்கி கட்டினாளாம் அதனால் , கடவுள்களை எல்லாம் காட்டி உறவு முறை கூறிக்கொண்டு இருந்தாள் .. இதே போல gannu bhayya, mata rani என்றெல்லாம் பிதற்றி கொண்டு இருந்தாள் ..அதை நான் ரசித்து சிரித்தேன் .
வடநாட்டவர் திருமணப்படி விதாயி என்ற ஒரு முறை உண்டு. அதன் படி பெண்கள் வீட்டை விட்டு அனுப்பும் போது மிகவும் உணர்ச்சிபூர்வமாக எல்லாரும் அழுவதை பல படங்களில் பார்த்து இருப்போம். விஷாகா வின் தம்பி திருமண வீடியோ சீடீ எடுத்து வந்து காட்டினாள். அதில் அந்த விதாயி சமயத்தில் ஒரே உணர்சிமயமாய எல்லாரும் அழுதுகொண்டு இருந்த போது என் கணவர் மதிய உணவு அருந்த வீட்டுக்கு வந்து இருந்தார். விஷாகா அந்த காட்சியை பார்த்து சோகமாக இருப்பதை பார்த்து விட்டு என் கணவர் சொல்கிறார். "விஷாகா , எங்கள் கல்யாணத்தின் போதும் என் மாமியார் இதே போல் கண்ணீர் விட்டார்", உடனே விஷாகா பழைய படி "ஆமாம் , பின்னே? பெற்ற மகள் திருமணம் செய்து கொண்டு புகுந்த வீட்டுக்கு போகும் போது எல்லா தாய்மார்களுக்கும் அப்படி தானே இருக்கும் " என்று கூறி மூக்கை உறிஞ்சினாள். படாரென்று என் கணவர் போட்டார் ஒரு போடு.. என் மாமியார் அதற்கு அழவில்லை "மாப்பிள்ளை, நீங்கள் பத்திரமாக உங்களை பார்த்துக்கோங்கோ " என்று கூறி அழுதாள் என்று.. இதை சற்றும் எதிர்ப்பார்த்திராத விஷாகா தன்னையும் மறந்து ரசித்து சிரித்தாள்.அதுக்கு அப்புறம் அவருக்கு சூப்பர் டோஸ் கிடைத்தது என்று நான் சொல்லி தெரிய வேண்டாம்..
வெட்டியாக இருந்த படியால் கடந்த இரண்டு நாட்களில் இரண்டு நல்ல படங்கள் பார்த்தேன். முதலில் பைத்ருகம் என்ற மலையாளப்படம்.
என்னைப்போன்ற ஆத்திகர்களுக்கு இந்த படம் மிகவும் விரும்படியாக இருக்கும். ஒரு சிறந்த நம்பூதிரியின் வீட்டில் இரண்டு மகன்கள். ஒருவன் கோவில் குருக்கள், மற்றவன் நாஸ்திகன், டைம்ஸ் ஆப் இந்தியாவில் journalist. தீவிர ஆஸ்திகனும் நாஸ்திகனும் ஒரே வீட்டில் தத்தம் கொள்கைகளோடு வாழ்கிறார்கள் . அன்பில் ஒரு குறைவும் இல்லை . திடீரென்று தம்மை நாஸ்திகன் என்று கூறிக்கொள்ளும் ஒரு ஊழல் அரசியல் வாதிக்கு தன் தந்தை ஏதோ ஹோமம் செய்து கொடுத்தது குறித்து மனஸ்தாபத்தில் நாஸ்திகம் பாராட்டும் மகன் தந்தையிடம் மரியாதை குறைவாக பேசபோக, தந்தை அவனை வீட்டை விட்டு போகும்படி சொல்லிவிடுகிறார். தனிமையை விரட்ட மூத்த மகன் தான் காதலித்த பெண்ணை ஆதர்ச திருமணம் புரிந்து கொள்கிறான். கிராமத்தில் தீய சக்திகள் இருப்பதாக கருதப்பட்ட ஒரு வீட்டில் வீம்புக்காக தான் கொள்கை நிலைநாட்டும் நோக்கத்தோடு குடி போகிறான். கதை இப்படியாக விறுவிறுப்பாக போகிறது . நிச்சயமாக ஆஸ்திகர்கள் விரும்புவார்கள். எனக்கு பிடிக்காத ரெண்டு விஷயங்கள்.
1. ஏன் படம் முழுவதும் இவ்வளவு இருட்டு? நல்ல விஷயத்தை கூறும்போது பளிச் என்றல்லவா கூறி இருக்க வேண்டும்.. கிளைமாக்ஸ் தவிர படம் முழுதும் ஒரே இருட்டுகசம். அப்பப்பா ..
2. பைத்ருகம் என்று பெயர் வைத்ததற்காக கடைசியில் அந்த மகா நம்பூதிரியை கொல்ல வேண்டுமா? நரேந்திர பிரசாத் என்ற அந்த நடிகரின் நடிப்பும் பாத்திரப்படைப்பும் மிகவும் பாரட்டபடவேண்டியவை. ஆங் சொல்ல மறந்துட்டேன் இந்த படத்தின் டைரக்டர் ஜெயராஜ் ஆம்..
side line போல இந்த படத்தில் ஜெயராமின் பாத்திர படைப்பு இருந்தாலும் இந்த பையனும் நடிப்பான் என்று திட்டவட்டமாக அழுத்தி கூறும்படி அமைந்து இருந்தது. ஜெயராமின் முகத்தில் எவ்வளவு பாவங்கள். பத்திரிக்கையில் தமது கவிதை வராதபோதிலும், கோவிலுக்கு வரும் பெண்ணை சைட் அடிக்கும் போதிலும், தமது ஆயுள் முடிவடையும் சமயம் வந்து விட்டது என்று அறியும் போதிலும்.. பையன், விளாசி தள்ளி இருக்கிறான் என்றே சொல்ல வேண்டும்.எந்த ஹைப்பும் இல்லாமல் எடுக்கபட்டுள்ளதற்கு hats off...( ஒரே ஒரு காட்சியில் hospital காட்டுகிறார்கள்.. மற்றபடி எல்லாமே கிராமத்து சூழல் தான்). எங்கேயும் டெக்னாலஜி ஊடுருவல் இல்லை..இந்த படம் வெளி வந்த ஆண்டு1993. வாழ்க இதுபோன்ற கதைகள்..இதைபார்த்த போது ஆஹா.. நமது கலாச்சாரம் எப்பேர்ப்பட்ட சிறப்பு வாய்ந்தது என்றே என்ன தோன்றுகிறது. அதும் கேரளத்து ஜோசியம் எத்தனை சக்திவாய்ந்தது அதில் அவர்களுக்கு எவ்வளளவு தேர்ச்சி ..மொத்தத்தில் நல்ல ஒரு படம் மற்றும் பாடம் இந்த பைத்ருகம். Thank you hubby dear for hiring this movie.
அடுத்ததா நான் பார்த்த படம் Angels and Demons. வழக்கம் போல Dan Brown ஏடாகூடமான ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு சாமர்தயமாக கையாண்டு இருக்கிறார் . வாடிகன் சிட்டி யில் போப் உடல் நிலை கோளாறு காரணமாக இறக்கிறார். அடுத்த போப் யார் என்ற தேர்வுக்கு மக்கள் காத்து இருக்கும் வேளையில் திடீரென்று வரும் மிரட்டல், கடத்தல், கொலை இத்யாதிகளுக்குள் விறுவிறுப்பாக உண்மையை கண்டுபிடிக்கும் cryptologist Professor Robert Langdon. இதான் கதை . இம்முறை Church இன்கொள்கைகளை எதிர்த்தவர்கள் Illuminatists என்ற தலைப்பை வைத்துக்கொண்டு பின்னி இருக்கிறார். வழக்கம் போல நம்ம ஹீரோ Tom Hanks தான் professor langdon.. பாவம், தனியாக அவரால் இயங்க முடியாத காரணத்தினாலும் ஒரு சின்ன பொண்ணு கூட வந்தால் தான் puzzles எல்லாம் solve பண்ண முடியும் என்பதாலும் ஒரு project research scientist பாத்திரத்தில் Ayelet Zurer .வாடிகன் சிட்டி பூராவும் சுற்றி திரிந்து தேவதைகள் காட்டும் திசையில் இருக்கும் clueகளை கண்டுபிடித்து, தாவு தீந்து விடுகிறது.மொத்தத்தில் ஒரு விறுவிறுப்பான படம்.
The best part is so much of Historic information. வெட்டிதனமாக பேசிக்கொண்டிருக்காமல் உபயோகமான வரலாற்று விஷயங்களை தருகிறார்கள். நல்ல விஷயம்
நானும் என் கணவரும் இந்த படத்தை 'சோபா நுனியில்' இரவு 12 மணி வரை பார்த்தோம்.. நடுவில் என் கணவருக்கு தூக்கம் சொக்கி 'லொட்டு' என்று விழுந்த நொடியில் நான் அந்த படத்தின் mysteryஐ கண்டுபிடித்து விட்டேன். நான் போட்ட சதத்தின் விளைவாக அவர் பயந்து போய் எழுந்து விட்டார். சிறிது நேரம் "ஞ" என்று விழித்து விட்டு rewind பண்ண சொன்னார். ஏன் எதற்கு என்று புரியாவிட்டாலும், நான் என் 'ஆழ்ந்த அறிவாற்றல்' கொண்டு கண்டுபிடித்த விஷயத்தை நம்ப மறுத்தார். பின்னர் படத்தின் கிளைமாக்ஸ் பார்த்து விட்டு அவரே ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். என் பாதங்களில் வீழ்ந்து சரண் அடைந்தார். யாமும் அபயம் அளித்தோம்.. ஹீ ஹீ...என்ன ஒரே குழப்பமாக இருக்கா? படத்தை பாருங்க புரியும்.
2 comments:
அக்கா, மாப்பிள்ளைக்கு செம தில்லு தான்... இல்லையென்றால் இப்படி உண்மையை உன் தோழி விசாகாவிடம் பட்டென்று போட்டு உடைத்திருப்பாரா? அடி பின்னுபின்னுன்னு பின்னிட்டியாமே வரை... BBC-ல சொன்னாங்க...
உன் தோழி விசாகா செய்வது ஒருவகையில் நல்லது. தெய்வங்கள் பயந்து பூஜிக்கப்பட வேண்டியவை அல்ல... நேசித்து கும்பிடப்படவேண்டியவை... எனினும் உருவ வழிபாட்டில் obsessed ஆகாமல் இருப்பது உத்தமம்.
நீ மட்டும் எப்படி நல்ல திரைப்படங்களை ஏஷியாநெட்டில் பார்க்கிறாய்? நான் போடும்போது எல்லாம் புதிய / பாடாவதிகளாகத் தான் போடுகிறார்கள்... எனினும் நல்ல படங்கள் பார்க்கும்போது ரசனையும் கூடும்.. வாழ்த்துக்கள்.
I normally dont watch asianet. I watch asianet plus. paithrukam we watched in CD. Capital videos had it. Hey, thanks for taking time to write comments. Highly appreciated.
Post a Comment