Pages

Tuesday, October 27, 2009

Happy Birthday Naa...

இன்று  இவருக்கு பிறந்த நாள். அதனால் நேற்று இரவே கமலாம்மாவின் அறிவுரைப்படி அதிரசதிற்கு மாவு தயாரித்து விட்டு பயந்து கொண்டே பாகு வைத்து கிளறி எடுத்து வைத்து விட்டேன். காலையில் அரக்க பறக்க ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து (இவர் இன்று அல் எயின் செல்ல வேண்டி இருந்தது அதனால் காலை ஆறரை மணிக்கு புறப்படுவேன் என்று கூறி இருந்தார்) பிறந்த நாள் வாழ்த்திவிட்டு அவசர அவசரமாக குளித்து, சாதம் வைத்து பிள்ளையாரை வேண்டிக்கொண்டு அதிரசம் பண்ணி பொறித்து எடுத்தா.............ல், திடீரென்று சமயலறையில் நுழைந்து, என்ன இது என்று கேட்கிறார்.. என்ன கொடுமை சரவணா.. தூக்கத்தில் எழுப்பி (கண்கள் மூடி இருக்கும்போது கூட) மூக்கின் அருகில் ஒரு அதிரசத்தை கொண்டு போய் வைத்தால்"ஹை அதிரசம் " என்று  வாசனைக்கே பக்கித்தனமாக ஒரே கவ்வாக கவ்வி விடும் இவருக்கா நான் இவ்வளவு கஷ்டப்பட்டு செய்த அதிரசம் என்ன என்றே தெரியவில்லை ? . உடனே  நீங்க சொல்லுவீங்க,  ஆமாம் மா, நீ அந்த லெட்சணத்துல பண்ணி இருப்பேன்னு .. இத இத இத நான் முன்னாடியே  எதிர்பார்த்தேன். அதான் படம் எடுத்தேன். நீங்களே பாருங்க..




 அவ்ளோ கேவலமாவா   இருக்கு? 'இல்லே ... ஆனா  இருக்கு'ன்னு  சொன்னீங்க, .... அப்புறம் மணிக்கு  ஒரு போஸ்ட் போட ஆரம்பிச்சுருவேன். எப்படி வசதி?


எது எப்படி போனாலும் இவருக்கு பர்த்டே சோ இவரைப்பற்றிய சில நல்ல விஷயங்கள் சொல்கிறேன்




  • என் பொறுமைக்கும்  ஒரு  எல்லை  இருக்குன்னு  நம்ம  நிறைய   dialogues  பேசுவோம்  . but இவருக்கு  அந்த  எல்லை  எல்லாம்  இல்லை . எல்லையற்ற   பொறுமை  நிறைந்தவர் . (அதுனால  தானே  என்னை  கல்யாணம்  பண்ணிண்டு  காலக்ஷேபம்  பண்ணறார்    !)
  • யார்மேலும்  பகை வைத்துக்கொள்ள   மாட்டார்  . (அதுனால  நான்  சூப்பரா  இவரை  வெறுப்பேத்தலாம்  . no backfiring. )
  • எல்லோரிடமும்   இனிமையாக   பழகுவார்  . (இதை  என்  கிட்ட  இருந்து   copy அடிச்சுட்டார் )
  • கடும்சொற்கள்    அறவே   பேச    மாட்டார்  . (யாராவது  ரொம்ப  தப்பு  பண்ணிட்டாங்கன்னா    அவங்களை  உச்சகட்ட   கோபத்தில்   திட்டும்   வார்த்தை   - He/She/It is Hopeless!!!! அவ்ளோ  தான் . )
  • உலகத்துல வாழற மக்கள் எல்லோருமே இரண்டு வகையை சேர்ந்தவர்கள் என்ற தீவிர நம்பிக்கை உடையவர். 1. நல்லவர்கள் 2.மிகவும் நல்லவர்கள் (கஷ்டம்!!!) 
இதெல்லாத்தையும் கண்டுபிடிச்ச மகேஷ், ஆராதனை செய்யவேண்டிய  என்னை புறம்தள்ளிவிட்டு இவரைப்பற்றிய ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரத்தை தனது ஒரு பழைய அபுதாபி பதிவில்  போட்டது நினைவிருக்கலாம் .  நன்றி மகேஷ்.


இன்று இனிய   surprise   ஆக   ரகு மாமாவின்   காமெடி   மெயில்   ஒன்று  வந்திருந்தது . அவருடைய  ஈமயிலில்  ஏதோ  பிரச்சனையாம் . doesnt matter.. welcome back mama.. and please start blogging. முக்கியமான  மேட்டர் .. இன்னிக்கி  அவரோட   wedding anniversary.. Wishing you and athai a happy anniversary.. Many more Happy returns of the Day. .

நேற்றைக்கி இரவு "ஆறுநூறு பேரு என் ப்ளாக்கை படிசுட்டான்னா" என்றேன். "லோகத்துல வேலையில்லா திண்டாட்டம் ஜாஸ்திஆயிடுத்து இல்லியோ என்றார்.." நறநறநற...

Many more happy returns of the Day to my dear Husband

17 comments:

Unknown said...

CHEERS ANANYA..KEEP UP THE GOOD WORK!!

on behalf of all of us from Nanmangalam cosmo and Mugalivakkam chinna cosmo...MANY MORE HAPPY RETURNS OF THE DAY MAHADEVAN!!!

RAVI
(FOR THOSE WHO DO NOT KNOW ME, I AM ANANYA'S UNCLE..)

Unknown said...

அக்கா... மாப்புக்கு செம ஐஸ் தான் போ... பாவம் தும்மி தும்மியே 2 கிலோ இளைச்சுடுவார்... ஹா! ஹா! ஹா!

நீ மாப்புவை பத்தி இன்னும் நல்லா எழுதியிருக்கலாம்... நிற்க. அதென்ன மாப்பு? நீ எனக்கு அக்கான்னா உன் கணவர் எனக்கு - மச்சான் / மாப்பிள்ளை. மாப்பிள்ளையை செல்லமா ‘மாப்பு’, ’மாப்பி’.... மகாதேவன், கடவுள் உங்களுக்கு எல்லா வளத்தையும், நலத்தையும் கொடுக்கட்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

மகாதேவன் மிகவும் மென்மையாக பேசும் சுபாவம் கொண்ட நல்ல, இனிய ந(ண்)பர். அவர் உனக்கு கணவராக கிடைத்தது உன்னுடைய புண்ணியம், அவருடைய.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
பாக்கியம்னு சொல்ல வந்தேன்க்கா... கொஞ்சம் மூச்சு விட்டுக்கிட்டேன்...

Ananya Mahadevan said...

போனாபோறதுன்னு ஒரு பர்த்டே போஸ்ட் போட்டதுக்கு இந்த கலாய் கலாய்க்கிறியே
எல்லாம் என் நேரம் .
மாப்புவை பத்தி இன்னும் நல்லா எழுதி இருக்கலாம் .. - நானா மாட்டேங்கறேன்? விஷயம் இருந்தா எழுதுவேனே! ஹீ ஹீ

Anonymous said...

Wishes to your husband! Adhirasam seems to be good. enaku oru parcel anupi vaiyungo..

I read maheshwarn's post about you. Intresting!! Till now i was thinking that he must be your cousin or so by the way he mentioned you as akka in your blog. You guys rock!

Ananya Mahadevan said...

Thanks Mittu. Yeah Mahesh is my good friend.. can say best friend. we must chat sometime. let me know if you googletalk. ananya.mahadevan@gmail.com

Anonymous said...

Shall i add you in my Gtalk??

Ananya Mahadevan said...

சின்ன புள்ள தனமா இல்லே இருக்கு மிட்டு
வேற எதுக்கு id குடுப்பாங்க?
மகேஷ் என்னோட நல்ல நண்பன் தான் ஆனா அப்பப்போ இந்த மாதிரி எட்டப்பன் வேலை எல்லாம் செஞ்சுடுவான் . மத்தபடி 'ரொம்ப நல்லவன்'

Ananya Mahadevan said...

Ravi Mama,
Thanks for your wishes. I told him your greetings. It is good to see you are expressing your views through comments. Please continue doing so.

Akila P said...

Hi anna,

Happy B'day to u.. Nalla njoy panninga pola akka prepare panna sweet sappittu..
Enna akka annaku vera spcl illaiya?

Car race ponathu pathi sonna flow romba nalla irrundhadhu.

Ananya Mahadevan said...

Akila,
Thanks for your wishes dear.
adhaan ungannavukku special next post pottaachey.. adha vida va oru special venum???

Thanks akila for the comments.
Ananya

Annamalai Swamy said...

Hi,
Convey my birthday wishes to your hubby.

-Annamalai

Ananya Mahadevan said...

Thank you, Annamalai for the greetings.

Mohan said...

You are really a knowledgeable lively person. Keep the spirit up !!!

Ananya Mahadevan said...

knowledgeable??? நான்???
ஹய்யோ ஹய்யோ!!!

Unknown said...

Usuallaaa Mohan every birthday enakku 10,001/- rupees dhaanam kudupapaaru.. for that particular years paapa moksham...2 varshamaa varala.. 2 perumaaa.. paapa moottai eppo venamnaaalum tharalaam.. naan busy.. ennodu bank a/c No.662277 la pottudungoooo.. other bank details mohanukku theriyum...

Ananya Mahadevan said...

பிறந்த நாளுக்கு ஒரு வார்த்தை வாழ்த்து சொல்லத்துப்பில்லை, வந்துட்டாரு, பாவ மூட்டை வாங்கிக்க... போயி புள்ளை குட்டிகளை படிக்க வையுங்க, கப்பித்தனமா பேசிகிட்டு!

(இன்னுமா இந்தூரு நம்மளை நம்பிகிட்டு இருக்கு????)

InfosphereMDM said...

Hi Ananya,
I accidently came across your blog and read this one. Very interesting... I almost forgot I am at office... :) Anyway, keep writing. I will definitely find time to go through your writings.
- Lavanya

Related Posts with Thumbnails