மனம் ஒரு குரங்கு
'ஹாஸ்ய பிரம்மா' என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட
திரு . தந்தியாலாவின் தெலுங்கு படங்களில் " நா கர்ம பண்டி "(Naa karma pandi) என்ற ஒரு சொற்றொடர் அடிக்கடி இடம் பெறும். இதற்கு சரியான தமிழ் மொழிபெயர்ப்பு "ஊழ்வினை முற்றி" என்று வேண்டுமானால் கூறலாம். (தங்கை மணி பிழை இருந்தால் திருத்துக.எல்லாம் டுபுக்குவின் பாதிப்பு தான் ஹீ ஹீ ) இந்த phrase இன் usage எப்படின்னா , நா கர்ம பண்டி, இப்படி ஆச்சு, அப்படி ஆச்சு நு சொல்லறது. எதுக்கு இப்படி நீட்டி முழக்கி இதெல்லாம் சொல்லிண்டு இருக்கேன்னா வழக்கம் போல என் ஊழ்வினை முற்றி, ஒரு காலை suba mugoortthatthil எங்க வீட்டு Centralized AC வேலை செய்வதை நிறுத்திக்கொண்டது என்ற நற்செய்தியை தெரிவிக்கத்தான். சரி AC வேலை செய்யவில்லை என்ன பண்ணலாம் என்று யோசித்த பொழுது ஒரு fan வாங்கலாம் என்று முடிவாயிற்று.
கைதான் fanகளை வாங்க, ரத்னா fan ஹவுஸ், உஷா fanகளை வாங்க, ரத்னா பேன் ஹவுஸ், Crompton Greaves fanகளை வாங்க ரத்னா fan ஹவுஸ், ரத்னா fan ஹவுஸ்,ராஜா பாதர் தெரு, பாண்டி பஜார், சென்னை என்ற விளம்பரம் தான் முதலில் நினைவுக்கு வந்தது. ஆனா பாருங்க இதுகோசரம் ராஜா பாதர் தெருவுக்கெல்லாம் போக முடியுமா என்ன? அதான் chimmpilla (வடிவேல் style) லுலு ஹைபெர் மார்க்கெட் போய்ட்டோம். ceiling பூ......ர ceiling fans, table பூ......ர table fans, பாக்கி உள்ள காலி இடங்களில் பூ......ர pedestal fans கொண்டு நிரப்பி இருப்பார்கள் என்று நினைத்த எனக்கு பல்பு கிடைத்தது. Electronics section பூரா தேடியும் ம்ஹூம். ஒரு fan கூட காணோம். அங்கே உள்ள ஒரு counter salesman னிடம் கேட்ட பொழுது, மேல பாருங்க என்றான், பார்த்தோம், மேலே false ceiling போட்டு இருந்தார்கள் அதில் ஒன்று இரண்டு பிய்ந்து தொங்கிக்கொண்டு இருந்தது..அட அதில்லை சார், மேல Shelf ல பாருங்க என்றார்.மேல... எல்லா......த்துக்கும் மேல என்றார். Top 3 ஊதுபத்தி மாதிரி நாங்களும் அண்ணாந்து பார்த்தால், அங்கே அங்கே மூன்றே மூன்று fanகள் உருண்டை முகத்துடன் எங்களை பார்த்து சிரித்தபடியே இருந்தன.
மிகசாதரணமாக இருந்த ஒரு சுமார் ரக டேபிள் பேன் விலை 60 dirhamகள் என்று போடப்பட்டு இருந்தது. குரூப் போடோவில் பின்னாடி ஆவலாக எட்டிப்பார்க்கும் ஒரு மாமியின் தலை தெரியுமே அதே போல குட்டியூண்டு முகத்துடன் ஒரு Pedestal Fan எட்டிப்பார்த்துக்கொண்டு இருந்தது. அது எவ்ளோ என்று சும்மாங்காசுக்கும் கேட்டு வைத்தேன். அவன் அதற்கு 123 dirhamகள் என்றான். ஆடி போய்விட்டேன். (ஆடிபோயிட்டு சும்மா இருந்து இருக்கலாம்) இவர் கிட்ட திரும்பி, அதெப்படி நா இந்த Pedestal Fan, இந்த சாதா fan ஐ விட சின்னதா தானே இருக்கு? ஏன் இவ்ளோ விலை ஜாஸ்தியா இருக்குன்னு கேட்டேன்.அப்படி கேட்டது தான் தாமதம், இவர் போட்டாரே ஒரு போடு.." இல்லை, இந்த விலையுயர்ந்த Fan ஐ on பண்ணினா காத்து கூட பன்னீர் வாசனையும் சேந்து வீசும் அதான்." நற நற நற.
உபரித்தகவல்:மனிதர்களின் சோம்பேறித்தனம் மித மிஞ்சி போய் விட்ட நிலையில் இவர்கள் Pedestal Fanகளில் Timer Facilityயுடன் வைத்து விற்கிறார்களாம்.. ஏன்யா டேபிள் Fan க்கு கூட ரிமோட் குடுக்க வேண்டியது தானே? யப்பா... முடியல..
மீண்டும் இவர் தம்பி ரவி 'beyonce' என்ற பாப் இசை பாடகி நடத்தும் live show விற்கு டிக்கெட் இருக்குன்னு சொன்னான்.. நாங்க போய்டுவோமா என்ன?பிரியா கிடைச்சா பினாயிலைக்கூட குடிக்கற அளவுக்கு நாங்க இன்னும் வரல்லை.புலி பசித்தாலும் புல்லை திங்காதுனு சொல்லி கும்பிடு போட்டுட்டோம்லா?
4 comments:
அக்கா... நீ இன்னும் பழைய காலத்துலேயே இருக்கியே... நம்ம் ஊரிலேயே சீலிங்க் ஃபேனுக்கு ரிமோட் வந்து 2-3 மாமாங்கம் ஆயிடுச்சு.... நீ என்னடான்னா இப்போ வந்து பெடஸ்டல் ஃபேனுக்கு ரிமோட் வச்சா என்னான்னு கேக்குறே!!!!
"Pedestal Fanகளில் Timer Facilityயுடன் வைத்து விற்கிறார்களாம்.. ஏன்யா டேபிள் Fan க்கு கூட ரிமோட் குடுக்க வேண்டியது தானே? யப்பா... முடியல.."
adhu yenga kidaikum nu solla mudiyuma ?
Ceiling fans la remote irukku nu enakku theriyum . en post ai thiruppi padi. naan sollradhu table fan pathi. table fan is kept handy on tables. adhukku kooda remote vechuduvaanga pola irukke nu angalaaichu irukken..remmba kevalama pesittiye ettappaa.
Mittu pedestal fans la almost ellaa fans leyum timer irukku. Table fans la innum varalla. seekirame vandurum.
With my akka's permission I would like to wish Mahesh anna my hearty congratulations!!!
Post a Comment