Pages

Friday, November 27, 2009

Mr & Mrs Iyer


Mr & Mrs Iyer


2002இல் வெளிவந்து பல வருடங்களாக நான் பார்க்கவேண்டும் என்று நினைத்திருந்த படத்தை இன்று தான் பார்க்க முடிந்தது. அபர்ணா சென் என்ற புகழ்பெற்ற பெண் இயக்குனரின் படம் என்று titles போடும் வரை நான் அறிந்திருக்கவில்லை. அது என்னமோ இந்த கொண்கனா சென் ஷர்மாவின் மேல் அப்படி ஒரு அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு. நிச்சியம் படம் நன்றாக தான் இருக்கும் என்று எடுத்துவிட்டேன். பற்றாக்குறைக்கு நம்ம ஹீரோ ராகுல் போஸ் இறுக்கமான முகத்திலும் அனாயாசமாக வெளிப்படும் பாவங்கள்.



ஒரு மொபைல் keypad டின் பட்டனுக்குள் எழுதிவிடக்கூடிய சிறிய கதை தான். (பின்னே, இதை எப்படி எல்லாமா சொல்லிட்டாங்க நான் என் ஸ்டைல் ல சொன்னேன் அவ்ளோ தான்.)


நிற்க இந்தப்படத்தின் வசனங்கள் எல்லாம் ஆங்கிலத்தில் தான். இந்திய நாட்டின் வெவ்வேறு மொழிகளின் கலவை என்பதால் இதை ஒரு மொழியில் எடுக்க வேண்டாம், எல்லோரும் ஆங்கிலத்திலேயே பேசட்டும் அனால் அவரவர் Accent  போட்டு தான் பேச வேண்டும் என்பது அபர்ணா வின் ஸ்ட்ரிக்ட் ஆர்டராம்,கொங்கனாவின் தமிழ் 'ழ' உச்சரிப்பு பிரமாதம் போங்கள் , அம்மணி தமிழில் நடித்தால், dubbing தேவை இருக்காது என்று நம்புவோமாக



இனக்கலவரம் காரணமாக தன்னுடன் பயணிக்கும் சக பயணியை கணவராக அறிமுகப்படுத்துகிறார் கொங்கனா. பெற்றோர் அறிமுகப்படுத்திய நண்பரின் நண்பர் என்பதைத்தவிர வேறெதுவும் தெரியாத நிலையில், இவர்,  தன் கணவர் என்று பிறருக்கு தோன்றும்படியாக பேசுகிறார் கொங்கனா சென். பஸ்ஸில் மற்ற பயணியரின் மனதை பளிச் என்று கண்ணாடி போல காட்டுகிறார் இயக்குனர்
அபர்ணா சென். முதிய இஸ்லாமிய தம்பதியினர், மன நலம் குன்றிய பையனும் அவன் தாயும், முசுடு பாட்டி, குதூகலிக்கும் இளைஞர் பட்டாளம் என்று பஸ்ஸில் பயணிக்கும் மனிதர்களின் பாத்திரப்படைப்பு அபாரம்.

போகும் வழியில்   ஏதோ ஒரு இடத்தில் வெடிக்கும் இனக்கலவரத்தில் நாமும் கலவரம்   அடையும்படியாக நிகழ்வுகள். அங்கே   இங்கே   சுற்றித்திரிந்து   நாய்   படாத   பாடு  பட்டு  ஒரு  வழியாக  குழந்தையுடன்  கொங்கனா கல்கத்தா வந்தடையும்போது நமக்கும் நிம்மதி கிடைக்கிறது அமோகமான  ஒளிப்பதிவு, ஆர்ப்பாட்டமில்லாத கதை சொல்லும் திறன் இவை எல்லாம் இந்த படத்தின் தூண்கள்.



மிகசிறப்பாக பயணிக்கும் கதையானது, ஏனோ தடம் புரண்டு, குழந்தையுடன் இருக்கும் சென் இந்த அறிமுகமற்ற அந்நியனிடம் காதலில் விழுகிறார் போன்ற பேத்தல்களினால் என்னால் முழு மனதுடன் இந்தப்படத்தை மெச்ச முடியவில்லை. என்ன தான் ஆயிரம் இருந்தாலும் நம்மூர்ப்பெண்களின் Psychology எப்படினா, தன் கணவன் தன் குழந்தை பத்தி மட்டும் தான், வள வள என்று பேசுவார்கள். ஒரு மனிதாபிமானத்துடன் காப்பாற்றிய ஒருவனிடம் எதற்கு காதல்வயப்பட வேண்டும் என்ற தெளிவு இல்லை. அப்படியே இருந்தாலும் அது நம் கலாச்சாரத்தின் படி ஏற்புடையதாக இல்லை. ஒரு வயது குழந்தையுடன் ஒரு தாய், கணவன் ஹௌரா ஜங்கஷனில் காத்துக்கொண்டு இருக்கும்போது, மடத்தனமாக காதல் வசனம் பேசுவதெல்லாம்... சாரி..  Rejected Aparna . இந்த ஒரு முக்கியமான cultural jerk   ஜீரணிக்க முடியவில்லை. இந்த மாதிரி எல்லாம் நிஜ வாழ்க்கையில் நடக்குமாக இருக்கும், ஆனால் சினிமா என்ற சக்திவாய்ந்த ஊடகத்தை, இவ்வளவு தவறான ஒரு கலாச்சார சறுக்கை பற்றி சொல்லி வீணடித்திருக்க வேண்டாம். அந்த Love Track ஐ கத்தரிதிருந்தால் படம் நிறைவாக இருக்கும்.இதைப்பற்றி இவ்வளவு நேரம் பேசவேண்டாம் என்று தான் நினைத்திருந்தேன். ஆனால், படத்தின் இறுதியில் நல்ல விஷயங்கள் எல்லாம் அடிபட்டு போய், இந்த சொதப்பல் மட்டும் பூதாகாரமாக தெரிகிறது.

2 comments:

Unknown said...

அக்கா... இந்த படத்தை பற்றி ப்ரியா நிறைய சொல்லியிருக்கிறாள்... எனினும் நான் இன்னும் பார்க்காமல் இருப்பதற்கு ஒரு காரணம் உண்டு.. அந்த பஸ்ஸில் தீவிரவாதிகள் ஒரு வயதான பார்ஸி கனவானை வெளியே இழுத்துக்கொண்டு போகும்போது அவருடைய மனைவி அவரை கொல்ல தான் கொண்டுபோகிறார்கள் என்று உணராமல் ”அவருக்கு வேளாவேளைக்கு மாத்திரை கொடுக்கனும்..” என்று சொல்லி அனுப்பும் க்ளிப்பிங்கை மட்டும் ஏதோ ஒரு interview-இல் பார்த்தேன்... அன்று இரவு தூங்க முடியவில்லை... வன்முறையின் பாதிப்பை இப்படி ஒரே ஒரு காட்சியில் வன்முறையே காட்டாமல் சொல்லப்பட்டது master touch... இப்போது இந்தை எழுதும்போதே மனதில் பாரம் ஏற்படுவதை தவிர்க்கமுடியவில்லை.... அதனாலே இந்த படத்தை பார்க்கும் தைரியம் எனக்கு வரவில்லை

Ananya Mahadevan said...

நீ சொல்லுவது சரி தான். அப்படி இழுத்து செல்லப்படுவது ஒரு இஸ்லாமிய முதியவர். அவர், தன மனைவியிடம், பேசவேண்டும் என்றால் பல்செட்டு வேண்டும் என்று பல் கேட்பார், கண்ணாடி வேண்டுமா என்று மனைவி கண்ணாடி எடுத்து தருவாள், மருந்து மாத்திரை எல்லாம் எடுத்து தருவாள், இந்த sensitivity உணராத தீய இந்துக்கலவரக்காரர்கள் அவர்கள் இருவரையும் இழுத்து கொண்டு வெளியில் செல்லும்காட்சி பயங்கரம் தான். எல்லாவற்றையும் எழுதினால் அப்புறம் படம் பார்க்க ஒண்ணுமே இருக்காது. அதனால் தான் தவிர்த்து விட்டேன். எல்லா framesலேயும் அபர்ணா அபர்ணா அபர்ணா மயம் தான். கொங்கனாவின் கண்களுக்கு அப்பால் இன்னொரு speciality, இந்த படத்தில் அபர்ணாவின் Visuals. இப்படி இந்த முதியவர்களை காட்டி கொடுத்த ஒரு சக பயணியை அந்த மனநலம் குன்றிய சிறுவன் தன sipper bottle ல் அடிப்பது போல ஒரு காட்சி வரும், Beautiful. இதை விட எப்படி ஒரு impact கொண்டு வர முடியும்? அதே போல போலீஸ்காரரிடம் இவர்கள் இருவரும் அந்த முதியவர்களைப்பற்றி எதாவது தகவல் தெரிந்ததா என்று கேட்கும் போது அந்த ஆள் மழுப்புவான். சந்தானம் என்ற அந்த 1 வயது குழந்தையின் ஒரு சிறிய gesture (ஆச்சு, காணோம் என்ற கை அசைப்பு) கூட அவ்வளவு பொருத்தமாக இருக்கும் அந்த காட்சியில். amazing!!!

Related Posts with Thumbnails