"விடியாமூஞ்சி வந்துருச்சு டும் டும் டும்
வீட்டை வெள்ளை அடிச்சிருச்சு டும் டும் டும்"
என்னமோ ஜுரம் போல இருந்ததால் இவரை ஆபீஸ் கு அனுப்பிவிட்டு பேசமால் லாப்டாப்பை மூடி வைத்து விட்டு சூர்யா வை on பண்ணிக்கொண்டு படுத்துக்கொண்டேன். காலை சுமார் 8.30 ௦ மணிக்கு டிங் தாங் என்று கல்லின் பெல் அடித்தது. காலங்கார்த்தால நம்ம ஹீரோ விடியாமூஞ்சி கையில் பெயிண்ட்பிரஷ் ஷுடன் நின்று கொண்டு இருந்தார். அவரை பார்த்த ஆச்சர்யத்தில் முகம் மலர சிரித்துவிட்டேன். பின்னே ஏழெட்டு மாதமாக துரத்தி துரத்தி follow up பண்ணிண்டு இருக்கோம், எப்டி தண்ணி காட்டினாங்க தெரியுமா?அவரை அன்புடன் வரவேற்றேன்.
சுவர்களை எல்லாம் பார்த்துவிட்டு போனவர், ஒரு நேஷனல் பெயிண்ட்ஸ் பத்து லிட்டர் பக்கெட்டுடன் வந்தார். ஆஆஹா நன்னா செழும்பா பெயிண்ட் எடுத்துண்டு வந்து இருக்கார், நாம தான் அவசரப்பட்டு இவரை விடியாமூஞ்சின்னு சொல்லிட்டோம்ன்னு நெனச்சது தான் தாமதம், அந்த பக்கெட்டில் எனக்கு என்னமோ சந்தேகமா இருந்தது. உள்ளே பெயிண்ட் இருக்கும்ன்னு நம்... பி அண்ணாந்து பார்த்தபொழுது அதில் (வருண் பாபா மூச்சா போனமாதிரி ) சுமார் 100 ml ௦ பெயிண்ட் மட்டுமே இருப்பது தெரிந்தது. மவராசன் இதுவாவது எடுத்துண்டு வந்தாரே சந்தோசம்.
ரோலர் பிரஷ், பெயிண்ட் பிரஷ், ஒரு நீளமான குச்சி சஹிதம் வேலையை ஆரம்பித்து விட்டார். அவருடைய முகத்தில் ஏதேனும் ஒரு expression எப்படி வரவழைப்பது என்று யோசித்தேன். பேச்சு கொடுத்து பார்க்கலாம் என்று முடிவு பண்ணினேன். நீங்க எப்படி எல்லா வேலையும் பண்ணறீங்க என்றேன் ஹிந்தியில். ஒரு புன்சிரிப்பு உதிர்ந்தது.. உலக அதிசியம். எதனை வர்ஷமா இருக்கீங்க என்றேன். பன்னிரண்டு வரஷமாச்சு இங்கே வந்து என்றார். அதன் பிறகு நான் பேசுவதை விட்டு விட்டேன்.டீ எடுதுக்கரீங்களா என்றேன். வேண்டாம் என்று மறுக்காததால் டீ தயாரித்து நானும் குடித்து அவருக்கும் கொடுத்தேன்.
நிற்க. இங்கேயெல்லாம் நம் வீட்டில் எதாவது ரிப்பேர் செய்ய வருவோருக்கு டீ காப்பி எல்லாம் கொடுத்தால் அவர்கள் நம்மை வேற்று கிரக மனிதர்களை போல பார்ப்பார்கள். அதில் இந்தியர்களாக இருப்பின் குறிப்பாக தென்னிந்தியர்களாக இருப்பின் கண்களில் நீர் மல்க காபி குடித்து விட்டு சிறப்பாக வேலை செய்து முடித்து விட்டு செல்வார்கள். வேற்று நாட்டவராயின் ஆச்சர்யப்பட்டு போவார்கள். இதெல்லாம் cultural barriers. அவ்ளோ தான். நமக்கு அதெல்லாம் ஒத்து வராது. துபாயில் ஒரு முறை Pest Control பண்ண வந்த தென்னிந்தியகர்கள் எனது உப்புமாவையும் காப்பியையும் மெச்சி பாராட்டு பத்திரம் வழங்கி விட்டு அரைகுறையாக Pest Control பண்ணிவிட்டு சென்றார்கள் என்பதை இங்கே நான் குறிப்பிட விரும்பவில்லை. அதிலும்(கரப்பான்) பூச்சி கொல்லி போட்டார்களா, இல்லே பூச்சி(இனப்)பெருக்க மருந்து தெளித்தார்களா தெரியவில்லை, சை.. மகா அருவெறுப்பு. துபாய் வாழ்கை வெறுக்க அதுவும் ஒரு காரணமாக இருந்தது.
விடியா மூஞ்சி பாவம் வயதானவர். கஷ்டமான வேலை . நாம் நினைக்கும் அளவிற்கு ரோலர் பிரஷ் ஐ கையாள்வது சுலபமல்ல . தோள்களும் கைகளும் வலி பின்னி எடுத்து விடும் போல தோன்றியது. எந்த ஊர் என்று மட்டும் கேட்டு வைத்தேன் . பங்களாதேஷ் என்றார் . முதலில் ஹால் சீலிங் அடித்தார் . வீடே Centralized AC யினால் கருப்பு கருப்பாக பூஞ்சைக்காளான் வந்து திட்டுதிட்டாக இருந்தது. அந்த கருப்பு திட்டுகள் மேல உப்பு காயிதம் தேய்ப்பார் என்று எதிர்பார்த்தேன். ம்ஹூம். ஏனோ தானோ என்று கடனுக்கு அதன் மேலேயே பூசி விட்டார்.
சுவற்றில் அங்கங்கு பேப்பர் டேப்ஸ்ஒட்டி போஸ்டர்ஸ் போட்டு இருக்கிறோம்.அந்த போஸ்டர்ஸ் ஐ எடுத்து விட்டேன். ஆனால் மீதமிருந்த அந்த சிறிய டேப் துண்டுக்களை முழுதும் எடுக்காமல் அதன் மேலேயே பெயிண்ட் அடித்துக்கொண்டு இருந்தார் . அதை எடுத்துவிடுங்கள் என்று சொன்னேன் . பெட்ரூம் அடித்து விட்டு வந்தார் . ஹாலில் ஏற்கனவே அடித்த பெயிண்ட் அதற்குள் காய்ந்து மீண்டும் கருந்திட்டுகள் தென்பட்டன . இங்கே அடியுங்கள் அங்கே அடியுங்கள் என்று ஏவிக்கொண்டே இருந்தேன். துர்வாசர் போல எதாவது சாபம் கொடுத்துவிட்டு இனி எக்காலமும் உன் வீட்டு மராம்மத்து வேலைகளுக்கு தலை சாய்க்க மாட்டேன் என்று போய்விடப்போகிறார் என்று பயந்துகொண்டே மெதுவாக சிரித்துகொண்டே(!!) தான் சொன்னேன். மீண்டும் அதே expression இல்லாத மூஞ்சியுடன் திட்டுக்களின் மேல் அந்த காய்ந்து போன பிரஷை மேலும் கீழும் சுழற்றி விட்டு perfection கோசம் வீடெல்லாம் சுற்றித்திரிந்து பார்த்துவிட்டு தனது வேலை செவ்வனே செய்து முடித்த திருப்தியுடன் கிளம்பினார். சர்பத் குடிக்கிறீர்களா என்று கேட்டு வைத்தேன். வேண்டாம் என்று மறுத்து விட்டார். பால்கனி யில் துணி காயபோடும் மரப்பட்டையை எடுத்து ஆறு மாதங்கள் ஆகின்றன. போகும் முன் இதை சரி செய்து விடுங்கள் என்றேன்.'நகி' என்று போய்விட்டார். இனி எப்போ வருவாரோ
என்ன தான் முகத்தில் சிரிப்பில்லாவிட்டாலும் அவரால் தான் இன்று வீடு பளிச் என்று இருக்கிறது. ஏனோ இனி அவரை விடியா மூஞ்சி என்று அழைக்க மனம் வரவில்லை.அவருக்கு வேறு ஒரு நல்ல பெயர் வைக்க வேண்டும்.யாராவது சொல்லுங்களேன்...
4 comments:
ஐய்யோ பாவம் அக்கா.... இந்த பதிவுக்கு யாருமே பின்னூட்டம் இடவே இல்லை.... அந்த நான் குறையை போக்கறேன்... இந்தியர் அல்லாத பணியாளர்களிடம் வேலை வாங்குவது, மெல்லிய நகைச்சுவை (பூச்சி கொல்லியா இல்லை பெருக்கியா?) மற்றும் மனிதாபிமான முடிவு என கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது.... ’பரிணயம்’ பற்றிய பதிவை எதிர்பார்க்கிறேன்... நேற்று அதன் DVD-ஐ வாங்கிவிட்டேன் (ரூ. 39/- மட்டுமே)
அக்கா.. எனது நெருங்கிய நண்பர் பிரபுஷங்கர் தற்போது பதிவுகள் எழுத தொடங்கியுள்ளார். (http://introspectiontime.blogspot.com). அவர் உனது பதிவை எனது வலைமனையின் மூலம் அறிந்து படிக்க ஆரம்பித்தாராம். உனது வேகம் / வளர்ச்சியை புகழ்ந்து பேசினார்... அவரது கருத்தின் உச்சக்கட்டம் இது - “உனது எழுத்து நடை, குறிப்பாக பிராமண பேச்சுவழக்கை உபயோகித்து எழுதும் முறையை படிக்கும்போது பிரபுவுக்கு மறைந்த சுஜாதாவின் எழுத்துக்களை படிப்பது போல இருக்கிறதாம்”. அவரே இதை உன்னுடைய ஒரு பதிவில் பின்னூட்டமாக இடலாம் என்று இருந்தாராம், பின்பு அதை உனக்கு மின்னஞ்சலில் பிற்பாடு அனுப்பிக்கொள்ளலாம் என்று இருந்தாராம். நேற்று தான் அவருடைய பதிவின் முகவரியையே கொடுத்தார்.. அப்போது மேற்கண்ட அபிப்பிராயத்தை சொன்னார்... வாழ்த்துக்கள் அக்கா!!!! பெரிய ஆளானப்புறம் என்னை மறந்துடாதே....
எனது வலைப்பதிவுகளை படிப்பதர்க்கு திரு பிரபுஷங்கருக்கு எனது நன்றிகள் பல. ஆயினும் சுஜாதா அவர்களை எல்லாம் இதில் இழுக்க வேண்டி இருக்கவில்லை. தெனாலியில் கமல் சொல்ல்றாப்புல, அவர் தெய்வத்திண்ட தெய்வம்.காலங்கார்த்தால, இந்த மாதிரி ஒரு கமெண்ட் எழுதி, you definitely made my day. However, I am not worth his appreciation. Thanks once again Mr Prabhu Shankar.
மகேஷூ, நீ ஓவரா ஜால்ரா அடிக்காம, அடங்கு
Post a Comment