Pages

Friday, November 13, 2009

போடி வளர்த்த சில சுவையான மனிதர்கள்
கோகர்ணம்  :
இவருடைய  சிறப்பம்சம்,  ஒன்றுமே  இல்லாவிட்டாலும் தலைகீழே விழுவாராம் . நாமெல்லாம் கால்களால் நடந்து வருவது போல அவர் கை விரல்களால் தான் நடப்பாராம். அவ்வளவு தலைக்கனமாம்.  இறுமாப்பில்  மேலே பார்த்துக்கொண்டே    தான்  பேசுவாராம் . தன் level க்கு கீழே  பார்க்கவே மாட்டாராம்  . செம்ம ஓவர் confidence ல ?அதனால்  யாரவது அல்பனுக்கு  வாழ்வு  வந்தமாதிரி  நடந்து கொண்டால் அவரை  அன்புடன் கோகர்ணம் என்றே  அழைப்பார்கள்

சுந்தரக்க :
 இவருடைய  speciality, பொட்டு எப்போதும்  கோணலாகத்தான்  வைத்துக்கொள்வாராம்  . வீட்டில் பொட்டு கொஞ்சம் கோணலாக வைத்துக்கொண்டாலோ ,கோலம்  சற்று    சொதப்பினாலும்   , மருதாணி வட்டம்  சற்று   பிசகினாலும்  உடனுக்குடன் 'சுந்தரக்க' என்ற  கூக்குரல்கள்  கேட்டு  விடும் .. எமகாதகப்பயபுள்ளைங்க .

அன்னம்மா :
இவர்  சண்டைக்காரி , தீவிரமாக  மற்றவருக்கு  பேச  வாய்ப்பளிக்காமல்  சண்டை  போட்டு தள்ளுவாராம் . பயங்கர  sound effect வேறு . தெருவில்  சண்டை  என்றாலே  அன்னம்மா  தான்  hot talk. அன்னம்மாவின் speciality  நிறைய   bad language தெரிந்து வைத்திருந்ததோடு  குரலில்  நல்ல  hightech dolby sound effect, high volume இல்  continuous  ஆக  சண்டை போடக்கூடிய திறன் பெற்று திகழ்ந்தார். அன்னம்மா மாதிரி என்னம்மா சண்டை போடுறா என்பார்கள்.

கயல்விழி:
இவர் அன்னம்மா, பாலாமணி, குட்டியம்மா, சுந்தரக்க போல அவ்வளவு பழைய ஆள் இல்லை .நாங்கள் போடியில் இருந்தபோது இவள் கூட தான் நான் விளையாடுவேன்.
நாங்கள் வாழ்ந்த அரண்மனை அக்கிரகாரத்தில் எனக்கு இருந்த இரண்டு தோழிகளில் இவள் தான் முதன்மையானவள்.    எனக்கு ஒரு மூன்று வயது இருக்கும்போது அவளுக்கு ஒரு ஐந்து ஆறு வயது இருக்கும் .இன்னொரு பெண்ணின் பெயர் மகேசு.
நாங்கள் ஐந்தலான்தெருவில் விளையாட செல்வோம். அது எங்கள் ஊரை மெயின் ரோட்டோடு இணைக்கும் ஒரு circle. எண்பதுகளில் அங்கு 'Traffic' அடிக்கடி Jam ஆகும்!!! அதுனால அங்கு செல்ல செல்லவ்வா தடை விதித்திருந்தார். இருந்தாலும் ஆர்வக்கோளாறு. நான், கயல், மகேசு மூன்று பேரும் ஐந்தலாந்தெருவிற்கு ஓடிவிட்டோம். ஐந்தலான் தெருவின் attractions யாதெனின் அங்கு ஒரு மிட்டாய் கடை உண்டு. நாங்கெல்லாம் கேட்டால் அந்த கடைக்காரர் மிட்டாய் இலவசமாக வழங்கி விடுவார். அப்புறம் லாரி, பஸ்சுகள் எல்லாம் பார்க்கலாம். எங்கள் வீட்டு கொல்லைப்புறத்தில் இருந்து பார்க்க முடியும் என்றாலும் சாக்கடை நாற்றம் இல்லாமல் நிம்மதியாக வாகனங்களை மிட்டாய் தின்றுகொண்டே ரசிக்கலாம்.(போடியில் அப்போதெல்லாம் open drainage system. இப்போ  எப்படியோ  தெரியாது ) .அன்றும் அப்படிதான் விளையாட ஐந்தலான் தெரு சென்றுவிட்டோம். செல்லவ்வா விஷயமறிந்து பதைபதைப்பில் ஓடி வந்தார். கயலு, அவ எங்கே என்று கேட்ட பொழுது, கயல் சராமாரியாக எடுத்து விட்டாள் பாருங்கள், அவ்வாவிற்கு தலையே சுற்றி விட்டது. "பாட்டி நான் அந்தபுள்ளைய போகாத போகாத னு சொன்னேன். நான் சொல்றதைக் கேக்காமல் அது ரோட்டல ஒடிச்சு பாருங்க லாரி அடிச்சு செத்துபோச்சு" என்றாள் cool ஆக. என்னே கயலின் கற்பனைத்திறன்!பாட்டி அழுது புரட்டிக்கொண்டு கண்ணீரும் கம்பலையுமாக அங்கு ஓடி வந்து பார்த்தாராம். விபத்து ஏதும் நடந்த மாதிரி தெரியவில்லையாம். நான் போடி Municipality அருகே மண்ணில் விளையாடிக்கொண்டு இருந்தேனாம் . ஏதோ கயலின் புண்ணியத்தால் என் அவ்வாவின் BP எக்கசெக்கமாக எகிரியதோடு மட்டுமல்லாமல் இனி அவள் பேச்சு மொத்தத்தையும்  100% தள்ளுபடி செய்து விட வேண்டும் என்று நிர்ணயித்துக்கொண்டோம்.
அய்யப்பா அண்ணா:
அய்யப்பா அண்ணா ஒரு மன நோயாளி. பாவம். அக்கிரகாரத்தில் அவர்கள் வீடு தெருக்கோடியில் இருக்கும். தெரு முழுதும் அய்யப்பா அண்ணா பக்கவாட்டில் திரும்பியே குதித்து குதித்து போவார். கொக்கரிக்கும் சிரிப்பு, இசுக்கு புசுக்கு என்று கூறும் சமிஞ்யை இதையெல்லாம் காட்டிக்கொண்டே தெரு கோடியிலிருந்து ஊரெல்லாம் இதே போல போவார்.  அவருக்கு அடிக்கடி காக்காய் வலிப்பு வரும். தெருவெல்லாம் களேபரம் ஆகும். எனக்கு அவர் மீது மிகவும் அனுதாபம். அந்த பருவத்தில் அவரது உடல் நிலை கஷ்டங்கள் அறியாமல் நான் அவரைமாதிரி செய்து காட்டுவேன். குதித்து குதித்து பக்கவாட்டில் ஓடுவேன், கஷ்கங்களில் கைவைத்து டுர்ர் என்று சத்தம் பண்ணுவேன். குழந்தைகள் எல்லோரும் ரசித்து சிரிப்பார்கள்.  நாங்கள் போடியைக்காலி செய்த சில வருடங்களில் அவர் இறந்து விட்டார் என்ற தகவல் கிடைத்தது.

3 comments:

Anonymous said...

its really good to recollect our memories. we feel like reliving those moments :) Nice one ananya!

Ananya Mahadevan said...

Yes, Mittu. I have only fainty memories associated with Bodi. Still the characters which lived there are vivid in my heart. Thanks for commenting.

Shanlax said...

it is very interesting to read bodi memories. ple. continue... and write about santhi, her mother, jothi and others in your next post

Related Posts with Thumbnails