Pages

Wednesday, December 2, 2009

நிலநடுக்கம்

விடியற்காலை உறக்கம். மிக ஆனந்தமாக உறங்கிக்கொண்டு இருந்தேன். வழக்கமாக தூக்கமின்மை காரணமாக விடி காலையில் தான் தூங்குவேன். டிசம்பர் மாதம் வேறு. ஜன்னல் வழி ஜிலு ஜிலு காற்று, கல்கியின் சரித்திர நாவல்களை காப்பி அடித்துக்கொண்டு இருந்தது. ச்சே , காத்து கூட ஒரிஜினலா இருக்க மாட்டேங்குதே என்று தூங்கிக்கொண்டு இருந்தேன். முடிந்த வரையில் யோசித்து பார்த்துவிட்டேன், கனவு நினைவுக்கு வரமாட்டேனென்கிறது.



திடீரென்று ஒரு படு பயங்கர அதிர்வு.கட்டிலுடன் சேர்ந்து நானும் அதிர்ந்தேன்
விழி திறக்காவிட்டாலும், மூளை விழித்துக்கொண்டது. ஹய்யய்யோ நிலநடுக்கம் போல இருக்கு, நம்ம பில்டிங் ஏற்கனவே பழைய பில்டிங், நாம வேற பதினாலாவது மாடியில் இருக்கிறோம், இறங்கி ஓட வேண்டுமே, இல்லாட்டா இந்த பில்டிங்கோட கோவிந்தா தான் என்றெல்லாம் கணக்கு போட்டேன். சுனாமி முடிந்த பிறகு, ஏதோ ஒரு சானலில் நில நடுக்கம் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்று ஒரு டாக்குமென்ட்ரீ காட்டினார்கள். அது எவ்வளவு யோசித்தாலும் நினைவுக்கு வரவில்லை அதிர்ச்சியிலும் பயத்திலும் எழுந்தேன். இவர் அமைதியா..................க விழித்துக்கொண்டு இருந்தார்



"என்னன்னா???" என்று ஒரு அலறு அலறினேன். இவர் மெதுவாக எழுந்து," ஒண்ணுமில்லை டீ, காது குடைஞ்சேன்" என்றார்..

கஷ்டம் கஷ்டம் கஷ்டம்!!!!!

4 comments:

Unknown said...

நீங்க ரெண்டு பேரும் வரவர நவீன Tom & Jerry / Laurel & Hardy ஆயிட்டே வர்றீங்க... உன்னோட கடைசி பஞ்ச் காமெடி சூப்பர்... இப்போ எல்லாம் உன்னோட பதிவை நான் கடைசியில் இருந்து தான் ஆரம்பிக்கிறேன்..

Ananya Mahadevan said...

நான் நடந்ததை அப்படியே எழுதி இருக்கேன்.
காலையிலே காபி குடிக்கும்போது எனக்கே சிரிப்பு தாங்கலை. முதல் வேலையா
உக்காந்து இந்த போஸ்ட் எழுதி முடிச்சுட்டு தான் பாக்கி வேலைக்கே போனேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சரி என்னைப்போல நிஜ நிலநடுக்கத்தைப் பார்த்தவங்களாக்கும் என்னடான்னு கேட்டுட்டு போலாம்ன்னு வந்தேன் :)

Ananya Mahadevan said...

:) வருகைக்கு நன்றி முத்துலெட்சுமி அவர்களே
மீண்டும் வருக.

Related Posts with Thumbnails