Pages

Friday, October 23, 2009

காமடி டாடி

காமடி டாடி

இந்த வருடம் வெகேஷனில் வந்திருந்த பொழுது, எனக்கு ஷீரடி செல்ல வேண்டும் என்ற ஆவல் அதிகமாகிக்கொண்டே இருந்தது. எல்லோரும் கூறுவது போல நாம் நினைத்தல் மட்டும் போறாது, பாபா மனசு வைக்க வேண்டும் என்று பொறுமையாக காத்திருந்தேன். முதலில் என் கணவருடன் செல்லலாம் என்றிருந்தேன். வழக்கம் போல பல்பு அடித்து அவர் லீவு போட முடியாது என்று கூறிவிட, நான் என் அப்பாவுடன் செல்லலாம் என்று முடிவு செய்தேன்.
இவ்வளவு தூரத்து ரயில் பயணம் மேற்கொண்டு சில வருடங்கள் ஆன காரணத்தினால் ஜாலியாக சென்றோம். எங்களுடன் இன்னொரு குடும்பமும் வந்து இருந்தது. எங்களை அழைத்து செல்ல ஒரு கைடு.

இதற்கு முன்னர் ஒரு முறை ஷிர்டி சென்ற போதிலும் அவ்வளவாக நினைவு வைத்துக்கொள்ள முடியாத அளவிற்கு அந்த இடம் மாறி இருந்தது. அப்பாவும் ஒரு முறை சென்று இருக்கிறார். ஷீரடி சென்று இறங்கியவுடன் ரூமில் குளித்து நானும் அப்பாவும் மதிய உணவிற்கு ஹோட்டல் தேடி நடந்து இடத்தை பரிச்சய படுத்தி கொண்டோம். மீண்டும் எல்லோருடன் மற்ற இடங்களை எல்லாம் தரிசித்து விட்டு கோவிலுக்கு சென்று கியூவில் நின்று ஆரத்தி பார்க்க காத்திருந்தோம். சுமார் இரண்டு மணி நேரத்திக்கு பின்னர் நன்கு தரிசனம் கிடைத்த மகிழ்ச்சியில் உதி வாங்க வரிசையில் நின்றோம்.

எங்களுடன் வந்த அந்த இன்னொரு குடும்பமும் எங்களுடன்  இருந்தனர். அம்மா, முடிந்த வரையில் இரண்டு மூன்று முறை கியூ வில் சென்று நின்று உதி வாங்கிக்கொள் என்று சொல்லி இருந்தார். ஒரு ஆளுக்கு ஒரு பாக்கெட் தான். அதனால் நான் பெண்கள் கியூ வில் இரண்டாம் முறை நிற்கும் போது அப்பாவை பார்த்துக்கொண்டே போனேன். ஒரு முறை மட்டும் உதி வாங்கிக்கொண்டு அங்கே நின்று கொண்டு இருந்தார். உதி இரண்டாம் முறை வாங்கிக்கொண்டு வந்து பார்த்தல், என்னே மாயம்?!!! அப்பாவைக்காணவில்லை. கோவில் முழுவதும் தேடியாகி விட்டது.. ம்ஹூம். காணோம். எங்களால் கூட வந்த குடும்பத்திற்கும் சங்கடம். கைடு இங்கே அங்கே தேடிக்கொண்டு இருந்தான். நான் அந்த இடத்தை விட்டு நகரவில்லை. ஒரு பக்கம் கோபம் இன்னொரு பக்கம் அழுகையாக வந்தது. அப்பாவுக்கு சர்க்கரை வியாதி. அவரால் செருப்பு அணியாமல் ரொம்ப தூரம் நடக்க முடியாது. என்ன செய்யவார் என்று மிகவும் வருந்தினேன். அன்று வியாழக்கிழமை ஆதலால்  பயங்கரக்கூட்டம். சாயந்திரம் பல்லக்கு சேவை இருக்கும் என்று முன்னமே எங்கள் கைடு கூறி இருந்தமையால் மக்கள் கூட்டம் திரளாக துவாரகமாயி நோக்கி நடந்து கொண்டு இருந்தது. இந்த கூட்டத்தில் எங்கிருந்து இவரை தேட? அடிக்கடி அம்மா, என்னிடம் "அனன்யா, அப்பா பத்திரம், மருந்து கொடுத்து கூடவே இருந்து பார்த்துக்கோ, அவர் முன்னே மாதிரி இல்லை " என்று கூறியது அடிக்கடி நினைவு வந்து கொண்டே இருந்தது. செருப்பில்லாமல் நடக்க முடியாதே என்று நினைத்து நினைத்து அழுகை வந்து கொண்டே இருந்தது. மெதுவாக கோவிலை விட்டு வெளியே வந்த போது, செருப்பு வைத்த  இடத்தில சென்று தேடினேன். ஒரு வேளை செருப்பைதேடி வருவாரோ என்று. ம்ஹூம். அங்கேயும் இல்லை. அவர் MCP செருப்பை இடது கையில் எடுத்துக்கொண்டு ஷீரடி முழுதும் நடந்து தேடிக்கொண்டே இருந்தேன். அலிபாபாவும் நாற்பது திருடர்களும் கதையில் அந்த திருடர்கள் நாலாபுறமும் போய் திருடிக்கொண்டு வருவார்களே, அதே போல நாலாபக்கமும் எங்கள் குருப் தேடிக்கொண்டு இருந்தது. நான் மட்டும் மிகவும் emotional ஆக தேடிக்கொண்டு இருந்தேன். அவருக்கு நிச்சயம் ரூமிற்கு வழி தெரியும் என்ற போதிலும், அவர் பத்திரமாக வரவேண்டுமே சாயி என்று விடாமல் வேண்டிக்கொண்டு இருந்தேன். ஏழரை மணியிலிருந்து சுமார் ஒன்பதரை மணி வரை நான் கூட்டத்தில் தனியாக தேடி அலைந்தேன். கால் வலி ஒரு புறம், பசி இன்னொருபுறம் , அழுகை வேறு . என்ன செய்வதென்று தெரியாமல் ரூமிற்கு வந்து விட்டேன். சாவி அவரிடம் இருப்பது ஒரு ஆறுதல். எப்படியும் வந்து விடுவார் என்று நம்பி பிரார்த்தித்து கொண்டு வரவேற்பறையில் உட்கார்ந்திருந்தேன். கைடு வந்தான். பாவம் அவன்  கோவில் முழுவதும் தேடி அலைந்து பல்லக்கு சேவை எங்களால் தவற விட்டு விட்டான். அப்பா வந்துவிட்டாரா என்று கேட்டான். அவன் அப்படி கேட்டுக்கொண்டு இருக்கும்போது அப்பா ஹோட்டல் படியேறி வந்து கொண்டு இருப்பது தெரிந்தது. அழுதே விட்டேன். எங்கப்பா போனீங்க என்று கேட்டால் , கைடு பல்லக்கு சேவை பார்க்க அழைத்து செல்லவதாக கூறினாராம் அதனால் எல்லாருக்கும் முன்னர் அவர் போய் எங்களுக்கோசரம் காத்திருந்தாரம் . பின்னர் தான், தான் தொலைந்து போய் விட்ட உண்மையை உணர்ந்து இருக்கிறார். சரமாரியாக திட்டி விட்டேன். எல்லோரும்  குருப்பில் வரும்போது இவர் மட்டும் ஏன் முன்னர் செல்ல வேண்டும்? இவரால் எல்லோருக்கும் டென்ஷன் . அப்பொழுதும் ஒத்துக்கொள்ளாமல் என்னமோ சாக்கு சொன்னார். அதன் பிறகு,  இனி நீங்கள் வெளீல போனீங்க,அவ்வளவு தான் என்று எச்சரித்து விட்டு  நானே போய் ராத்திரி உண்பதற்கு  சாப்பாடு வாங்கி ரூமில் கொண்டு கொடுத்தேன்.  மறுநாள் காகட ஆரத்திக்கு செல்லும் போது கையைப்பிடித்து கொண்டு கூட்டி போனேன் என்று சொல்லி தெரிய வேண்டாம்.




இப்போ அடுத்த நிகழ்ச்சி. தக்ஷிண பண்டரிபுரம் என்று அழைக்கப்படும் தென்னாங்கூர் என்ற ஸ்தலத்திற்கு செல்லலாம் என்று முடிவு செய்து காஞ்சீபுரத்தில் இருந்து சுமார் முப்பது கிலோமீட்டர் தொலைவிலுள்ள விட்டல ருக்மாயி கோவிலுக்கு சென்று கொண்டு இருந்தோம். வழியில் காஞ்சிபுரத்தில் சரவண பவனில் டிபன் சாப்பிட்டோம். குழந்தைகளை வைத்துக்கொண்டு நானும் அப்பாவும், என் தங்கையும் ஹோட்டலில் சாப்பிட்டோம். அம்மா சுவாமி தரிசனம் பண்ணிவிட்டு தான் காலை உணவருந்துவேன் என்று மறுத்து விட்டார்.


சரியாக ஏழரை மணிக்கு கோவிலில் இறங்கினோம். குழந்தைகளை வைத்துக்கொண்டு தரிசனம் முடித்து விட்டு பிரகாரம் சுற்றினோம். அது வரை  கூட இருந்த அப்பா திடீரெண்டு மீண்டும் காணோம்!!!! இந்த சின்ன ஊர்ல எங்கே போய் விட  போறார் என்று நினைத்தாலும், நிம்மதியாக வந்த இடத்தில சுவாமி கும்பிட முடியாமல் எங்கே போய்விட்டார் என்று நாங்கள் குழம்பினோம். கோவிலுக்கு எதிரில்  ஞானானந்தரின் சமாதி உள்ளது. அங்கே சோடசாக்ஷரி அம்மனை பிரதிஷ்டை செய்துள்ளனர். கோவில் தரிசனம் செய்து விட்டு அங்கே போவதாக தான் பிளான் . அம்மாவுக்கு பயங்கர டென்ஷன்.அறையும் குறையுமாக சமாதி பீடத்தை பார்த்து விட்டு திரும்பினோம்.  அம்மாவையும் குழந்தைகளையும் காரில் விட்டு விட்டு என் தங்கை வேகமாக கோவிலுக்குள் அப்பாவை தேட புறப்பட்டாள். நானும் அவள் கூட ஓடினேன். டிரைவர் இருப்பதால் கொஞ்சம் ஹெல்ப் பண்ணி குழந்தைகளை பார்த்துக்கொள்வார்.கோவில் வாசலில் விட்ட  அப்பாவின் செருப்பை காணவில்லை. அப்போ அவர் கோவிலுக்குள் இல்லை என்று கத்திக்கொண்டே நான் என் தங்கையை பின் தொடர்ந்தேன். ரெண்டு பேரும்  தீவிரமாக தேடினோம். ம்ஹூம்.

பாவம் காரில் அம்மாவின் நிலை என்னமோ என்று அறிய ஏமாற்றத்தோடு திரும்பினோம். அம்மா எதைப்பத்தியும் கவலை இல்லாமல் காலை சிற்றுண்டி தின்று கொண்டு இருந்தார். நாங்கள் இருவரும் சிரித்தே விட்டோம். அம்மா டென்ஷனில் அழுது கொண்டிருப்பாரோ என்று நினைத்தோம். ஆனால் வயறு அதையெல்லாம் கண்டுக்காதே என்று சிற்றுண்டியை உள்வாங்கிக்கொண்டு இருந்தது. அப்பா காணாமல்  போன கவலையில் நாங்கள் அம்மா சாப்பிடவில்லை என்பதை மறந்து விட்டோம்.

சிறிது நேரம் காத்திருந்தோம். தூ.........ரத்தில் அப்பா (நடக்க முடியாமல் நடந்து  ) வருவது தெரிந்தது. ஏதோ ஒரு தெருவில் இருந்து வெளிப்பட்டு ரொம்ப தூரம் நடந்து வருவதாக தெரிந்தார். மீண்டும் நான் எங்கேப்பா போனீங்க என்று கேட்டதற்கு அந்த தெருவில் ஒரு சிவன் கோவில் இருக்கே.. நீங்க அங்கே தான் போறீங்கன்னு நெனச்சு போயிட்டேன் என்றார். அம்மா இதையெல்லாம் கண்டு கொண்டதாக தெரியவில்லை. சாந்தமாக இருந்தார். (வயிறு புல் வேறு) இது தான் சாக்கு என்று,"அம்மா, இப்படிதான் மா ஷிரிடியிலும் இவர் காணமல் போய்ட்டார்" என்று போட்டு கொடுத்து விட்டேன். யாரும் ஒன்றும் பேசாதபோதிலும்  அப்பா மீண்டும் காணமல் போனது எனக்கு சிரிப்பு தாங்கவில்லை. இனிமேல் வெளியில் போனால் அப்பாவை கெட்டியாக கைப்பிடித்து கொண்டு தான் போகவேண்டும் என்று அம்மாவிடம் கூறி விட்டேன். பின்னே.. இப்படி அடிக்கடி தொலைந்து போனால் என்ன செய்வது?
எவ்வளவோ தூரத்தில் தனியாக வாழ்ந்து கஷ்டப்பட்டவர், dynamic ஆக இருந்தவர் இன்று மூப்பு காரணமாக இவ்வளவு dependant ஆகி  விட்டாரே  என்று நினைக்கும்போது கஷ்டமாக இருக்கிறது. அம்மாவிடம் சொல்லி விட்டேன். இனிமேல் மூன்று குழந்தைகளை பார்த்துக்கொள்ள வேண்டும் மா என்று.
போன வாரம் அம்மா சென்னையிலிருந்து போன் பண்ணினார். உனக்கு தெரியுமா நேத்திக்கி நாங்க ஒரு கோவிலுக்கு போனோம் என்றார். நான் கேட்டேன், "என்னம்மா திருப்பியும் அப்பா தொலைஞ்சு போய்ட்டாரா????"

6 comments:

Anonymous said...

I am a devotee of Shirdi Baba. But never got a chance to visit Shirdi. You are blessed. The pic s too good.. :)

Ananya Mahadevan said...

Baba is the best judge and He knows when to bring you to shirdi. Trust me, it will happen very soon. I had been trying ever since 2004 but in vain. After 5 years finally He listened to my prayers.
Thanks for sharing your views. :-)

Unknown said...

உங்க அப்பா கஷ்டம்... உனக்கு காமெடியா???? கடவுளே!!!!

Ananya Mahadevan said...

naangalum thaan avaraala kashtappattom. apram avarum sendhu sirichar.

Priya said...

அனன்யா - அருமையாக சுவாரஸ்யமாக எழுதி உள்ளாய் .... "இது என்னடா நம்ப வீடு கதை போலவே இருக்கே" என்னும் என்னுடைய எண்ணம் உன்னுடைய blog படிக்கும்போது default எண்ணமாக ஆகி விட்டது.. என்னுடய கல்யாணமான நான்காம் நாள் நாங்கள் எல்லாம் திருப்பதி சென்று , எங்கள் அப்பா தொலைந்து போய் விடி காலை வரை தேடி .. சோர்வு கோபமாகி, கோபம் அழுகையாகி , அழுகை பின்பு சிரிப்பான அதே கதை இங்கும்... ஒரு முறை அல்ல பல முறை ....... என் அப்பாவுக்கு நான் IMPLANT GPS device தேடி கொண்டு இருக்கிறேன் .. கிடைத்தால் பகிர்ந்து கொள்ளவும்...

Ananya Mahadevan said...

ஹா ஹா.. ப்ரியா, உங்கப்பாவும் இதே மாதிரி தொலைந்து போயிட்டாரா? திருப்பதில எல்லாம் தொலைஞ்சு போனா ரொம்ப கஷ்டம்பா..அப்புறம் என்னாச்சு? ரெண்டு பேரும் GPS ட்ரை பண்ணலாம். யாருக்கு கிடைக்கறதோ அவங்க ஷேர் பண்றோம். ஒக்கேவா?

Related Posts with Thumbnails