Pages

Monday, November 9, 2009

நில் கவனி தாக்கு - சுஜாதா





சுஜாதாவின் இந்த நூற்று இருபத்தேட்டே பக்க நாவலை நான் இன்று சில மணிநேரங்களுக்குள் இடை விடாமல்(எனது வயலைக்கூட உதாசீனப்படுத்திவிட்டு டாஷ்போர்ட் பக்கம் செல்லாமல் டி வீயையும் ஆப் பண்ணி விட்டு ) படித்து முடித்து விட்டேன். இப்படி கூட கதைகள் எழுத முடியுமா என்று ஆச்சர்யப்பட்டேன். இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் இந்த கதை எழுபதுகளில் எழுதப்பட்டதாம். நம்பமுடியவில்லை. அந்தக்காலத்திலேயே எவ்வளவு பெரிய  Trend Setter ஆக இவர் செயல்பட்டு இருக்கிறார் என்பதை நினைக்கும்போது ஆச்சர்யப்படாமல் இருக்க முடியவில்லை.



தேசிய பாதுகாப்பு - இதான் கதையின் முக்கிய crux. அது எப்பேர்ப்பட்ட அபாயத்தில் இருக்கிறது என்பதை என்னைபோன்றவர்களுக்கும் விளங்குமாறு தெளிவாக விளக்குகிறார்.கதை தில்லியின் பாலம் விமான நிலையத்தில் ஆரம்பித்த உடனேயே சூடு பிடிக்கிறது. சுஜாதாவின் அக்மார்க் ரக 'நச்' வசனங்களுடன் கதை ஒரு ரோலர்  கோஸ்டர் போல விறுவிறுப்பாக நகர்கிறது. அந்தக்காலத்துலேயே இவ்வளவு போல்டா எழுதி இருக்காரே . அடேயப்பா..

Fight Sequences எல்லாம் பழைய ஜெயஷங்கர் படங்கள் பார்ப்பது போல இருந்தது. எழுத்தில் என்ன ஷங்கர் பட ஸ்பெஷல் EFX ஆ கொண்டு வர முடியும்? அதுவும் ரசிக்கும்படியாக தான் இருந்தது. Deadline கொடுத்து ஒரு அரசாங்க சொதப்பலை சரியாக்க பாடுபடுவது மட்டும் 'விக்ரம்' 'திருடா  திருடா' படத்தை தவிர்க்க முடியாமல் நினைவு படுத்தியது. கதையில் அதிகம் கதாபாத்திரங்கள் இல்லை. வழக்கம் போல mysterious கதைகளில், நாமெல்லாம் யாரை சந்தேகப் படுகிறோமோ  அவர்களுக்கு நேர் எதிரான கதாபாத்திரங்கள் தான் இந்த தில்லு முல்லு திரிசமுல் வேலை எல்லாம் பண்ணுவார்கள். அதுவும் அந்த எழுபதுகளில் வந்த திரைப்படங்களில்  வருவது போல நாம் சரியாக யாரு culprit  என்பதை சுலபமாக கண்டுபிடித்து விடலாம். சந்தேகமில்லாமல் நாம் நமது முதுகை தட்டிகொடுத்தும், Self shake hand கொடுத்தும் மெச்சிக்கொண்டே கடைசி சில பக்கங்கள் படித்தால் நமக்கு ஒரு மெகா பல்பு கிடைக்கிறது.
கதையை படித்து முடிக்கும் தருவாயில் நமது முகத்தில் ஒரு mysterious புன்னகை தவழப்போவது நிச்சயம்.

7 comments:

Unknown said...

அக்கா... விக்ரம், திருடா திருடா ஆகிய படங்களில் சுஜாதாவின் பங்களிப்பு அதிகம்... எனவே உனக்கு ‘நில் கவனி தாக்கு’வில் அதன் மூலம் தெரிந்ததில் ஆச்சரியம் இல்லை....

Ananya Mahadevan said...

அப்போ இதுல இருந்து தான் திருடி இருப்பாங்கன்னு நினைக்கறேன்.worth giving a read.

Anonymous said...

Great writer! love his novels. Ennoda 10th summer holiday la appaku theriyama sujatha novels thirututhanama padipen :)

"Self shake hand கொடுத்தும் மெச்சிக்கொண்டே கடைசி சில பக்கங்கள் படித்தால் நமக்கு ஒரு மெகா பல்பு கிடைக்கிறது." bulb vaangaradhu Ananya ku pudhusa?

Ananya Mahadevan said...

why thiruttuthanamaa?
bulb vaanguaradhu pudhusillai nu sonnaalum, sujatha kooda bulb kuduthuttaare nu thaan kavalai.
Actually as we proceed to the midpoint of the story, we start suspecting someone and sujatha proves our doubt is right. I thought, what big deal? even a naive like me found the culprit. for a moment I wondered, is it really sujatha who has scripted this story? It went on fine with the expected turns .. untill.. untill the very laaaaaaaaaaaaaaast page. come to page 127, we understand something totally unexpected. you must givit a try.

vetti said...

Alpa....vacation-nu vandhu avvlow Sujatha books-ai kelambaradhukku rendu naal munnaadi vaangindu kannu-la kooda kaattaama pack panni eduthundu oditta illa? vaadi vaa...indha dhadavai unakku kaappi podi kuduthanuppaama vanjanai pannren...

Ananya Mahadevan said...

sis!
yen kavalai padura? yaaravadhu varum bodhu naan padichu mudicha books ellam unakku kudutthu vidaren. but it is a common repository. can u assure you will keep them safe and return it back? when I ask "where is it?" can u refrain from saying"yaarukku theriyum? thelusaadhey" ? appadi sollamaatten nu nee sathiyam adichu sonnaa kandippaa kuduthu vidren.

Anonymous said...

Bayangara blackmail. kaappi podi venum nu dhane ippo unga sis ku book anupividaradha sollarenga :)

Dad says i was too young to read sujatha's novels. So thirutuathanama dhan padipen

Related Posts with Thumbnails