Pages

Monday, November 30, 2009

பாசஞ்சர்


ஈத் விடுமுறையில் நாங்கள் உருப்படியாக பார்த்த ரெண்டு மூன்று படங்களில் இது தான் முதன்மையானது


ரொம்ப நாளைக்கப்புறம் ச்சே , இதுவல்லவோ படம் என்று தோன்றியதோடு மட்டும் நில்லாமல், இது போன்ற படங்கள் நம் தமிழ்கூறும் நல்லுலகில் வரும் நன்னாள் எந்நாளோ என்று ஏங்க  ஆரம்பித்துவிட்டேன்.


இந்த கலிகாலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நாம் மறந்து வரும் சில ethics, சில Cultural valuesஐ எல்லாம் தூசு தட்டி எடுத்து நமக்கு நினைவூட்டி இருக்கிறார்கள். இதற்கு முன்னர் இவ்வளவு விறுவிறுப்புடன் நாங்கள் பார்த்த படம் 'A Wednesday ' . ('உன்னைப்போல் ஒருவன்' அல்ல)அனால் இந்த படம் சற்றே வித்தியாசமானது. மனதைதொடும்படியான ஒரு  முடிவுரையுடன் படம் நிறைவடைகிறது. இந்த படத்தின் one liner - 'சத்யமேவ ஜெயதே'. வாய்மையே வெல்லும்.

ஆபீசில் ஓவர்டைம் செய்யும் ஸ்ரீனிவாசன் பாசஞ்சர் ரயிலில் தான் இறங்க வேண்டிய stationநில் தூங்கிவிட சில நிமிடங்கள் மட்டுமே  ஏட்டிக்கி போட்டியாக பேசி பரிச்ச்சயப்படும் திலீப்பை காப்பாற்ற எடுக்கும் முயற்சிகளின் படமாக்கமே  பாசஞ்சர் . இந்த படத்தின் கதையைப்பற்றி வேறெதுவும் நான் கூற விரும்பவில்லை. அவ்வளவு சுவாரஸ்யமான படம் இது.


தோற்றத்துக்கும் கதாபாத்திரத்துக்கும் நல்ல பொருத்தம் ஸ்ரீனிவாசன். அதுதான் மலையாள சினிமாவின் சிறப்பம்சம். கிழடு தட்டி போயிருந்தாலும் டயிட்டாக  பான்ட்  ஷர்ட் அணிந்து கொண்டு திங்கு திங்கு என்று ஹீரோயின் கூட குதிக்க மாட்டார்கள். கழுத்தில் ஸ்கார்ப்  கட்டிக்கொண்டு பஞ்ச் டயலாக் எல்லாம் பேச மாட்டார்கள். Introduction பேத்தல் பாடல் இருக்காது. படத்தின் நடுவில் சம்பந்தமே இல்லாமல் எங்கிருந்தோ வந்து ஒரு (அ)கௌரவ நடிகையின் கேவலமான மூன்றாம்தர குத்து நடனம் ஏதும் இருக்காது. கதை மட்டுமே கதாநாயகன் என்று இன்றளவும் நம்பி வரும் ஒரு தொழிற்சாலை என்றால் அது மாலிவுட் தான் என்று அடித்து கூறுவேன். சில technical  சமாச்சாரங்களை புகுத்தி இருக்கிறார்கள்.அங்கங்கு சில தொய்வுகள் இருந்தாலும் அவை மன்னிக்கப்படலாம்.

மொத்தத்தில் மிகவும் நிறைவான ஒரு படம். படத்தில் வேகத்தடை செய்யும் பாடல்களே இல்லை. எனக்கு மம்தா : மோகன்தாசை (மாயூகதிற்கு அடுத்து) மிகவும் பிடித்த படம் இது தான். திலீப்பிற்கு அவ்வளவாக scope இல்லாவிட்டாலும், வருகின்ற காட்சிகளில் சிறப்பான நடிப்பு.அடர்த்தியான புருவங்களுடன் நெடுமுடி வேணு டாக்ஸி டிரைவராக  வருகிறார். அவர்களுக்கெல்லாம் நடிப்பு சொல்லியா தரவேண்டும்.. கிங்ஆச்சே.. கலக்கி இருக்கிறார்

மொத்தத்தில் பாசஞ்சர், ஒரு விறுவிறுப்பான, உண்மையான இந்தியப்பயணி. வெல்க வாய்மை!!!

3 comments:

Unknown said...

உனக்கு முன்னாடியே சொன்ன சந்தோஷமான சமாச்சாரம் தான் - பாஸஞ்சர் தமிழில் (’நான் அவன் இல்லை’ புகழ்) செல்வா இயக்கத்தில் ‘முறியடி’ என்கிற பெயரில் படமாகிக்கொண்டு உள்ளது

Ananya Mahadevan said...

பழங்கால ஹீரோயின் மாதிரி வாயிக்கு பக்கத்துல உள்ளங்கையை வெளிப்புறமா வெச்சுண்டு, "இல்லே......................."ன்னு உரக்க அலறணும்போல இருக்கு.
'நல்லது செய்தல் ஆற்றீராயினும் அல்லது செய்தல் ஓம்புமின்' ன்னு யாராவது செல்வா கிட்ட சொல்லுங்கப்பூ.

SurveySan said...

hmm. seekkaram paakkanum.

Related Posts with Thumbnails