Pages

Wednesday, December 9, 2009

மனம் ஒரு குரங்கு 11

மனம் ஒரு குரங்கு

இந்த வார விடுமுறை மிக சிறப்பாக கழிந்தது.ஷார்ஜாவிலிருந்து கோபால் அண்ணா வந்திருந்தார்.கோபால் அண்ணா மிக சுவையான மனிதர். நிதானமானவர். அமைதியானவர். யோசித்து செயல்படும் திறம் படைத்தவர். தேவை இல்லாமல் யாரைப்பற்றியும் பேச மாட்டதவர். எல்லாவற்றுக்கும் மேலே எளிமையானவர். அவர் வருகிறார் என்றவுடன் எனக்கு ஒரே குதூகலம் தான். அவருக்கு பிடித்த சமையல் பண்ணி வைத்துக்கொண்டு தயாராக இருந்தோம். பர்துபாயில் அய்யப்ப பூஜையாம் அதை முடித்துக்கொண்டு மாலை 6  மணிக்கு வந்தார். சூடான பஜ்ஜி காபியுடன் வரவேற்றோம். மாலை ஆறு மணிக்கு மேல் கார்னிஷ் சென்றோம். புல்வெளியில் உட்கார்ந்து பேசினோம்.நல்ல நேரத்தில் வாண வேடிக்கை ஆரம்பித்தது. Night Photography பற்றி அண்ணா  நிறைய விஷயங்கள் பேசினார். அவருடைய கேமரா லென்ஸ் மிகவும் powerful. Stand எடுத்துக்கொண்டு வராதது எவ்வளவு பெரிய தப்பு என்று அடிக்கடி புலம்பினார்.

கோபால் அண்ணாவிற்கு போட்டோகிராபியைத்தவிர விவசாயம் பிடிக்கும். இதான் சாக்கு என்று அவருக்கு facebookகில் id  ஓபன் பண்ண வைத்து Farmville introduce பண்ணினேன். அண்ணாவிற்கு பயங்கர ஆச்சர்யம். சிறு குழந்தை போல உட்கார்ந்து விளையாட ஆரம்பித்து விட்டார்.  இப்போ எல்லாம் என் அண்டை விவசாயி ஆக இருக்கிறார்.தினமும் எனக்கு பரிசுகள் அனுப்பி, என் வயலை பார்வையிட்டு, உரம் தெளித்துவிட்டு போகிறார். கோபால் அண்ணாவின் மோட்டோ -Slow and Steady wins the race.  நிதானமாக எதையும் செய்வார். அவர் செய்யும் வேலை Perfection உடன் இருக்கும் . அவரை பழக்குவதற்காக என் வயலில் அறுவடை செய்யுமாறு கூறினேன். முறையாக எல்லாம் முடித்த பின்னர் prompt ஆக, "அநன்யா , Harvest எல்லாம் பண்ணியாச்சு கேட்டியா" என்று ரிப்போர்டினார். :)





அநேகமாக சன் சானலை ஸ்கிப் / boycott செய்து விடுவேன் என்று நினைக்கிறேன். எப்போவாவது காட்டப்படும் வடிவேலு கௌண்டமணி காமடி காட்சிகளுக்காக மட்டும் நான் சன் பார்த்துக்கொண்டு இருந்தேன். இப்போதெல்லாம் தரம் மகா மட்டமாக போய் விட்டது. ஐந்தாறு மூன்றம் தர நடிகைகளை கொண்டு வந்து ஜட்ஜாக உட்கார வைத்து அவர்களையே அரை குறையாக குத்து நடனம் ஆட விடுகிறார்கள். ஆபாசம் தாங்க முடியவில்லை. வீட்டு வரவேற்பறையில் ஆபாசம் தலைவிரி கோலமாக ஆடுகிறது என்றே சொல்ல வேண்டும்.சென்ற வாரம் இடம் பெற்ற டீலா நோ டீலா நிகழ்ச்சியில் ஒரு பெண்," என் புருஷன் கிட்ட சாந்த்ரோ கார் இருக்கு,  (கிடைத்த gapபில் பீத்தல் வேறு)ஆனா அவருக்கு அதை விட நல்ல கார் வாங்கி குடுக்கணும் அதுனால தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன்" என்று கூறி, ஓவென்று ஒப்பாரி வைத்தாள்.அவனவன் அடுத்த வேளை சோற்றுக்கு சிங்கி அடித்துகொண்டு இருக்கும்போது,இருப்பதைக்காட்டிலும் பெரிய கார் வாங்க இருப்பதைக்காட்டிலும் பெரிய கார் வேண்டும் என்று எக்குதப்பாக உளறிக்கொட்டி அழும் பெண்களை என்னவென்று சொல்லுவது? இந்த அபத்தத்தை பப்ளிசிட்டி கோசம் program promoவில் போடும் சன் தொலைகாட்சி தான் உருப்படுமா? முன்பெல்லாம் ரியாலிடி ஷோக்களில் இதே போல வேண்டுமென்றே பங்கு கொள்வோரை சண்டை போடும்படி கிளப்பி விட்டு(எல்லாமே சும்மா தான்!!) அதை படம் பிடித்து பப்ளிசிட்டி தேடிக்கொண்டார்கள், இப்போது இந்த மாதிரி பேத்தல்களில் இறங்கி இருக்கிறார்கள்.ஒரு மூன்றாண்டுகளுக்கு முன்னர் அரட்டை அரங்கத்தில் எந்த அளவு உண்மை இருக்கிறது என்று ஒரு விளக்கமான மெயில் பார்த்திருக்கிறேன்.அது கூட எல்லாம் செட்டப்பாம்.பங்கு கொள்வோரை எல்லாம், என்ன பேச வேண்டும், எப்படி பேசவேண்டும் என்று கூறி விடுவார்களாம். எல்லாம் முன்னரே எழுதப்பட்ட Script டாம். : அந்த மெயில் கிடைத்தால் விரைவில் பதிவு போடுகிறேன். இனி தப்பி தவறி சன் பக்கம் தலை வைத்து படுக்க கூடாது என்று முடிவு செய்து விட்டேன்.

சென்ற வாரம் இங்கே அபுதாபியில் இஸ்க்கான் நடத்திய ஸ்ரீமத் பாகவத சப்தாகம் நிகழ்ச்சியில் பங்கு கொண்டோம். கண்ணனின் லீலைகளை பல விதமாய் சொன்னார்கள். தொடர்ந்து எல்லா நாளும் செல்ல முடியாவிட்டாலும் அங்கு பார்த்து, கேட்ட ஒரு சில கதைகளின் நிகழ்வுகள் மனதில் எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது.கண்ணனின் லீலைகள் தான் எவ்வளவு மதுரம்.திரு ஜகத்சாக்ஷி பிரபுவின் வர்ணனைகளும் அவர் விவரிக்கும் விதமும் நாம் ஏதோ அந்த கதைகள் நடக்கும் இடத்துக்கே சென்று நேரில் பார்ப்பது போன்ற ஒரு பிரமை. Feedback Sesison இல் நான் இதை தெரிவித்தேன் "Though we are physically present in Abudhabi, we are magically transformed to a world of Krisha and we could feel Krishna is all our senses" என்றேன்.  அவர்கள் கூறுவது போல அது ஒரு Nectarian experience. அடுத்த ரெண்டு நாட்களில் வருண் பாப்பவையே ஸ்ரீகிருஷ்ண ஸ்வரூபமாக நினைத்து மகிழ்ந்தேன்.



இஸ்க்கானில் நான் பார்த்த சில சுவையான விஷயங்கள் இதோ

  • ஒவ்வொருவரும் மற்றவரை மரியாதையுடன் அழைக்கிறார்கள். ஆண்களை பிரபு என்றும் பெண்களை மாதாஜி என்றும் பரஸ்பரம் அழைத்துக்கொள்கிறார்கள்
  • நம்மை மாதிரி ஹலோ, ஹாய் என்றெல்லாம் வாழ்த்துவதில்லை. ஹரே கிருஷ்ணா என்று தான் கூறி வரவேற்பார்கள்.
  • எல்லோரும் அழகாக மூக்கிலிருந்து ஆரம்பித்து சந்தனத்தில் நாமம் இட்டுக்கொள்கிறார்கள்.
  • ஒவ்வொரு பக்தர் வீட்டிலும் ஒரு மண்டபம் அமைத்து அதில் கண்ணனை படத்திலோ அல்லது சிலை வடிவமாகவோ வைத்து வழிபடுகிறார்கள்.
  • உணவில் பூண்டு வெங்காயம் சேர்ப்பதில்லை.அவ்வாறு சேர்ப்பதால் சாத்வீக வாழ்வில் ஈடுபட முடியாது என்று கூறுகிறார்கள்
  • அப்படி தயாரிக்கப்பட்ட உணவை கண்ணனுக்கு சமர்ப்பிக்காமல் இவர்கள் உண்பதில்லை. சமர்ப்பிக்கும்போது மண்டபத்தில் திரைசீலை போட்டு மூடி வைத்து விட்டு சிறிது நேரம் கழித்தே எடுத்து பரிமாறுகிறார்கள்
  • அந்த உணவின் சுவையை நாம் எழுத்து மூலம் விளக்குவது கடினம், உண்டு தான் உணர வேண்டும்
  • எல்லோரும் எந்நேரமும் ஜபமாலையுடன் இருக்கிறார்கள். 
  • என்ன நிகழ்சியாக இருந்தாலும் நம்மை அழைத்து கூறுவார்கள், பாலோ அப் பண்ணி வருமாறு அன்புடன் அழைப்பார்கள். 
  • எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் பிரசாதம் அருந்தி விட்டு தான் போக வேண்டும் என்று வற்புறுத்துவார்கள்
  • அவர்கள் பாடும் பஜனைப்பாடல்கள் எல்லாம் தேவகானம் தான். இனிமையான பாடல்களை மெல்லிய ஆட்டத்துடன் இவர்கள் பாடும்போது, மெய்மறந்து போய்விடுவோம். 
ஹரே கிருஷ்ணா.

"இந்த நவரத்தின தைலம் தேய்ச்சுக்காதீங்கோ,தேய்ச்சுக்காதீங்கோன்னு சொன்னா கேக்கறேளா? ,  தலைகாணி எல்லாம் சிவப்பா சாயம் ஒட்டறது" என்றேன் இவரிடம். இவர் சொல்கிறார், "என் தலைகாணியாவது பரவாயில்லை சிவப்பா சாயம் தான் இருக்கு, உன் தலைகாணி பார், ஒரே களிமண் " என்று கூறிவிட்டு ஓடிவிட்டார்..இன்னும் scale லுடன் துரத்திக்கொண்டு இருக்கிறேன் பிடிபட மாட்டேங்கிறார்

7 comments:

Unknown said...

thats true abt sun tv.. quality is degrading. I dont have any opinion abt isckon :)

Unknown said...

அக்கா.. நீ என்ன தான் காட்டு கத்தலா கத்தினாலும் சன் டிவி நம்ம மக்களோட வாழ்க்கையில - பல்லு தேய்க்கிறது, குளிக்கிறது போல அன்றாடமாயிடுச்சு... இப்படி கத்துற நீயும், நானும் எல்லாம் மைனாரிட்டியிலும் மைனாரிட்டி... அதனால கத்தி உன்னோட சக்தியை வீணடிக்காதே... Better stick to Asinet Plus as of now

Ananya Mahadevan said...

அப்படியே ஆகுக!

Ananya Mahadevan said...

கண்ணா, ஆசியாநெட்ல கூட இப்போ லூப் முடிஞ்சு போய்டுத்து. திருப்பியும் போட்ட படமே தான் போடறான்.. ஒரே ஒரு வழி தான் இருக்கு. பேசாம ரிமோட்ல இருக்குற ரெட் பட்டன அமுக்கிட்டு நிம்மதியா பால்கனில நிக்க போறேன்.
என்ன அமைதி, என்ன ஆனந்தம்.எவண்டா அவன் டிவிய கண்டுபிடிச்சவன்?

Priya said...

Ananya - Good blog place. You should change the blog name to AnanyaSpeaks rather than Ananya thinks. I very much like your narration style. Romba yetharama irukku. 12th standard le 10 Mark question oda Answer maathiri pirichu pirichu number pottu point eluthi irukkenga, romba nalla irukku. I gave up my "avaa" to post a comment in Tamil for you, like my bro and hubby says, I am technologically challenged. Keep posting your good work.

Nathanjagk said...

ISKCON பற்றி நீங்கள் குறிப்பிட்டிருப்பது நெகிழ்ச்சியாக இருக்கிறது. உங்கள் அபிதாபி வாழ்க்கை ஒரு நல்ல நாவலுக்குண்டான அர்த்தங்களை உள்ளடக்கியிருக்கிறது.
வித்யாசங்கள், அனுபவங்கள், ​தேடல்கள், ஏமாற்றங்கள், ஏக்கங்கள், சமாதானங்கள்,​கொண்டாட்டங்கள், ப்ரியங்கள் எல்லாம் சேர்ந்ததுதானே வாழ்க்கை - அதுதானே நாவலும் கூட!

Ananya Mahadevan said...

கருத்துக்கு மிக்க நன்றி ஜகன்.
சங்கராபரணம் சங்கர சாஸ்திரி மாதிரி உங்க கவுஜ மட்டுமில்ல, உங்க கமென் ட்டும் கூட புரியறது கஷ்டமா இருக்கு.. என்ன சொல்றீங்க. நாவல் எழுதணுமா இந்த வாழ்க்கையை அடிப்படையா வெச்சு? லைஃப் மெகா சீரியல் மாதிரி மொக்கையா போயிண்டு இருக்கு. இதுல நாவல் வேறயா? க்கும்.. எனிவே. பொறுமையா படிச்சதுக்கு நன்றிகள் பல!

Related Posts with Thumbnails