Pages

Saturday, August 28, 2010

மதறாஸப்பட்டினமும் என் கஷ்டகாலமும்!

முதன் முதலாக இந்தப்படத்தின் டிரெயிலரை ஜிகர்தண்டா சொல்லி யூ டியூபில் பார்த்தேன்.. நொந்தேன்.. அதென்னம்மோ தெரியலை.. என்ன மாயமோ தெரியலை ட்ரெயிலரே பிடிக்கலை.. லகானின் ஜாடைகளுடன், நாடோடித்தென்றல் மாதிரி இருக்கும்ன்னு மனசுக்கு பட்டது.
சரி சென்னை வந்தப்போ எல்லாருமே மதறாஸபட்டினம் ஆஹா ஓஹோன்னு ஒரே பேச்சு. என் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸாக(!!???!!) இருக்கட்டுமேன்னு என் தங்கையும் சேகருமா சேர்ந்து இந்தப்படத்துக்கு கூட்டிண்டு போயிட்டாங்க. காசி தியேட்டர் கூட்டத்தில் நான் நிஜம்மாவே படம் நல்லாத்தான் இருக்கும்போல இருக்குன்னு நம்ப்ப்ப்ப்ப்பி உள்ளே போய் உட்கார்ந்தேங்க..

உஸ்ஸ்... முடியலை..

என்னம்மோ படம் பூராவுமே ஒரு Dejavu effect! இதை எங்கியோ பார்த்திருக்கோமேன்னு தோணிண்டே இருந்தது. ஒரு redundancy! எரிச்சல் தான் வந்தது.. பாட்டுக்கள் முக்கால்வாசி மொக்கை அல்லது அவற்றை ரசிக்கும் திறன் எனக்கில்லை.. கதை = இது வரை வந்த பல படங்களின் பாதிப்பில் இருந்ததால் கதைன்னு ஒண்ணு இருக்கறாப்புல எனக்கு தெரியலை.
நடிக நடிகையர்களுக்குள்ளே அந்த பிரிட்டிஷ் பொண்ணு மட்டும் தான் மனசுல நிக்கறா.. குறிப்பிட்டு சொல்லணும்ன்னா நம்ம வி.எம்.ஹனீஃபா.. மத்தபடி.. சாரி..
அம்மா படம் ஆரம்பிச்சு மூணு வாட்டி குறட்டை விட்டு தூங்கிட்டாங்க.. எழுப்பிண்டே இருந்தோம். எப்போடீ முடியும்ன்னு கேட்டு நச்சரிச்சுண்டே இருந்தாங்க.. நானோ வேற வழியில்லாம உட்கார்ந்து பார்த்தேன்..

தங்கை மணி ஃபுல் ஃபார்ம்ல செம்ம கமெண்ட்ஸ் பாஸ் பண்ணிண்டே இருந்தா.. பின்னாடி ரெண்டு பொடிமாஸ்(அதாவது டீனேஜ் பையன்கள்) உக்காண்டு படுபயங்கர கலாசல்.. முக்கியமா துரையம்மா(!!!???) ஆர்யாவை தண்ணிக்குள்ளே தள்ளிவிடும் காட்சியில் அவர்களையும் அறியாமல், ஜாக்... ரோஸ்..ன்னு டைட்டானிக் ஸ்டையில்ல கத்திட்டாங்க.. அப்படி ஒரு அட்டக்காப்பி அந்த சீன்ல.. அதே ஸ்டயில்ல அங்கே ஒரு நெக்லஸ் மாதிரி இங்கே ஒரு தாலி!!! தமிழ்ப்படம். என்னிக்கு உருப்படும்? தியேட்டரே கொல்ல்!!! அப்புறம் நம்ம ஈரோயினி தமிழ் பேசினப்போ யம்மா தாயீ, நீ இங்கிலீஷ் பேசினாலே பரவாயில்லை எங்களுக்கு சுமாரா புரியும்.. தமிழை வுட்ரும்மான்னு கலாட்டா..

நான் கேக்கறேன் நம்மூர்ல எந்த சலவைக்காரர் ஓவர்கோட் மட்டும் போட்டுண்டு வேலை பண்றாங்க?

எனக்கு தெரிஞ்சு இந்தப்படத்துல ஒரே ஒரு ஆறுதல் தான்.. ஆர்யாவுக்கு ஒரு முறைப்பொண்ணை வெச்சு, அது இவனை ஒரு தலையா லவ்வி, ஆர்யாவை துரத்தி துரத்தி ஒரு பாட்டு,கல்யாணக்கனவோட இன்னொரு பாட்டு, அப்புறம் அவன் கிடைக்கமாட்டான்னு சோகத்துல ஒரு பாட்டு, இவ உயிரைக்கொடுத்து ஆர்யா உயிரை காப்பாத்திட்டு ஒரு பாட்டுன்னு ரேஞ்சுல இன்னும் ஜவ்வா இழுக்காம க்ரிஸ்ப்பா கதையை முடிச்சதுக்கு இயக்குனர் விஜய்க்கு ஒரு ஷொட்டு.

Monday, August 23, 2010

வந்துட்டோம்ல?

இவ்ளோ நாள் கழிச்சு மீண்டும் வந்துட்டேன். அதென்னான்னா, இங்கே எனக்கு நெட் ஆக்ஸஸ் இல்லை. அதோட இந்த அருண் வருண் கூட ரன்னிங் ரேஸுக்கே நேரம் சரியா இருக்கா, அதுனால வாரம் ஒருவாட்டி மெயில்
மட்டும் வந்து பார்த்துக்கறது.

ரெண்டு மாசம் முழுசா சென்னையில அமைதியா எந்த ஊருக்கும் போகாம இருக்கறது பயங்கர ஹேப்பியா இருக்கு.  நல்ல வேளை இன்னும் ரங்கு வெக்கேஷனுக்கு வரலை. அதுவரை ஜாலியா இங்கேயே இருந்துக்கலாம்ன்னு சொல்லி இருக்கார்.

பேசாம சென்னையிலேயே இருந்துட்டா என்னன்னு தோணுது!

சரி எல்லாருக்கும் என்னோட ஆவணி அவிட்ட வாழ்த்துக்கள்.

முக்கியமா டேரிக்கு வாழ்த்துக்கள். நேர்ல சொல்லியாச்சுன்னாலும் ஒரு பதிவு போடாட்டி எப்படி?

டேரி எப்படீன்னா, அம்மா பண்ணும் பால் போளிக்காகவே ஆவணி அவிட்டம் கொண்டாடுவார். அதாவது புதுப்பூணல் போட்டுண்டு ஒரு ஐஞ்சு நிமிஷம் ஜபம். தட்ஸால்! ஹிஹி!

அம்மா இதுக்காக கார்த்தால் சீக்கிரம் எழுந்து போளி பண்ணிண்டு இருப்பாங்க!
அன்னிக்கி அப்படித்தான், டேரியை கலாட்டா பண்றதுக்காக காயத்ரி சொல்லுங்கப்பான்னு கேட்டுண்டு இருந்தோம், ஓம் பூர் புவஸ்வஹ, பர்கோ என்றாரேப்பார்க்கலாம்!!!! தங்கை மணி கோபத்தில் ஸ்டாப்பிட்ன்னு கத்திட்டா! நைனா உடனே சுதாரிச்சுண்டு,”நான் என்ன பண்றது? எனக்கு வயசாயிடுத்துன்னு ஒரு சமாளிஃபிக்கேஷன் வேற”! நற நற...

ரெண்டு வருஷம் முன்னாடி வரலக்ஷ்மி விரதத்துக்கு நாங்கள் சென்னையில் கேம்ப் அடிச்சிருந்தோம். ஆவணி அவிட்டம் முடிஞ்சு காயத்ரி ஜபத்தன்னைக்கி அப்பா புதுப்பூணல் போட்டுண்டு, மாடிக்கு  போய் ஜபம் பண்ணிட்டு வந்தார். அப்போ தான் கீழ்க்கண்ட சம்பாஷணை நடந்தது

நான்: அப்பா எத்தனை வாட்டி ஜபிச்சீங்க?

நைனா: நான் சாயி அஷ்ட்டோத்திரம் ஜபிச்சாச்சு

நான்: அதில்லைப்பா  காயத்ரி மந்திரம் எத்தனை சொன்னீங்க?

நைனா: நான் காகட ஆரத்தி, ஸத்சரித்திரம் எல்லாம் சொல்லிட்டு வந்தேன்

நான்:(கொஞ்சம் கடுப்புடன்) அதில்லை, காயத்ரி மந்திரம்ப்பா....

நைனா: (ரொம்ப பெருமிதத்துடன்)நான் 18 வாட்டி சொல்லியாச்சு

நான்:!!!???????!!!!! சமாளித்துக்கொண்டு, அப்பா, zeroவுக்கு value இல்லைங்கறதுக்காக இப்புடியா? கொஞ்ச்ச்ச்ச்சம் ஓவரா தெரியலை? 1008 சொல்ல வேண்டிய இடத்துல 18 ஆ? நம்பருக்கு முன்னாடி இருந்தாத்தான் zeroவுக்கு value இல்லை! டூ மச் ஐ ஸே!

தி நைனா இப்படிஎல்லாம் போங்காட்டம் ஆடினாலும் இந்த பண்டிகை மகிழ்ச்சியை அள்ளித்தெளிக்கும் நாள் தான். இன்னும் சில வருஷத்துல அருண் வருண் கூட இதே மாதிரி போங்காட்டம் ஆடுவாங்களோ? யார் கண்டா? இருந்தாலும் இருக்கும்!!!
Related Posts with Thumbnails