Pages

Tuesday, August 20, 2013

அருண் வருணின் வரலக்ஷ்மி விரதம்தங்கையாத்துல பூஜை பார்த்துட்டு, நோன்புச்சரடு கட்டிக்கலாம்ன்னு போயிருந்தேன். வழக்கம் போல வீடு ரெண்டா இருந்தது. உபயம்: அருண் வருண். கிடுகிடுன்னு பேசிண்டு, சிரிச்சுண்டு, வேடிக்கை பார்த்துண்டு, ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் கதை எல்லாம் அம்மாகிட்டே சொல்லிண்டு, வருண் பண்ற ரகளையெல்லாம் ஃபாலோ அப் பண்ணிண்டே,  கொழக்கட்டை பண்ணி முடிச்சோம்.

நான் போறதுக்குள்ளே அம்மா பாயஸம், சித்ரான்னம், மம்மு, பப்பு எல்லாம் பண்ணியாச்சு. அம்மனை அழைக்கணும் போய் கோலத்தை போடுன்னு அம்மா சொல்லவும். நானும் ட்ரை அரிசி மாவை எடுத்துண்டு போய் ப்ரும்ம ப்ரய்த்னம் பண்ணி படுத்துண்டு படிக்கோலம், ஹால் பூரா எக்ஸ்டெண்டடா வர மாதிரி போடணும்ன்னு தான் நினைச்சேன். ஆனா பாருங்க.. அந்த படிக்கோலமானது.. ஒரு ராம்பஸ் மாதிரி ஆயிடுத்து. என்னமோ ஏரோபிக்ஸ் பண்ணறா மாதிரி கையெல்லாம் கோணலா.. ஒரு பக்கமா இழுத்துண்டு சாய்ச்சு, மஹா கண்ணறாவியா போயிடுத்து.

ஒரு சின்ன சதுரம் போடுறதுக்கு இவ்வளோ நேரமான்னு அம்மா வந்து பார்த்துட்டு ஹை குட் ஜாப்ன்னு சொன்னப்போ நான் அதிர்ந்தேன். அதுக்கு அம்மா,  அவங்க வரைஞ்ச கோலத்தை காட்டினாங்க. என்னமோ கிட்னி ஃபெயிலியர் ஆன வியாதிஸ்தன் மாதிரி ரொம்ப அகலமா, மந்தமா இருந்தது. வேறு யாருக்காவது படிக்கோலத்தை பார்த்தா இப்படியெல்லாம் தோணுமா? பின்னூட்டம் ப்ளீஸ். பல முகங்கள், பாவங்கள், குணாதிசயங்கள் எனக்கு பளிச்சுன்னு நினைவுக்கு வரும். இது கூட ஒரு வியாதி தான்!

வஸ்த்திரம் பண்ணியாச்சான்னு வழக்கமா லாஸ்ட் மினிட் ஷவுட்டிங் எதுவும் இல்லை.. இப்பெல்லாம் ரெடிமேடா கிடைக்கிறாதாம். (நிம்மதி, அந்த இலவம் பஞ்சை கிள்ளி, விதை எடுத்துட்டு, அதை கண்டிஷன் பண்ணி, அதை ஒரே மாதிரி உருட்டி நடுவுல பே பேன்னு வராம, ஸ்ப்ரெட் பண்ணி, அதுக்கு மஞ்சள் குங்குமம் வெச்சு.. உஸ்ஸ்.. நமக்கு டிஸைனர் வஸ்த்ரம் தைக்கறது கூட சுலபம் போல்ருக்கே?)

சரடு ரெடியா ரெடியான்னு ரெண்டு மூணு வாட்டி அம்மா ஞாபகப்படுத்தினப்போ தான் தங்கைமணிக்கு சரடு வாங்க மறந்த விஷயமே ஞாபகத்துக்கு வந்தது. உடனே அவசரத்துக்கு இந்த மளிகைக் கடையில் பொட்டலம் கட்டும் நூல் சரடு இருக்கே.. அதை எடுத்துண்டு வந்தா.. அவாத்துல இன்னும் 8-10 ஜென்மத்துக்கு வரலக்ஷ்மி நோன்புக்கு சரடு வாங்க வேண்டி இருக்காது. அவ்ளோ பெரிய பண்டில் சரடு இருக்கு. சொல்ல விட்டுப்போச்சு.. அந்த சரடைக் கையில கட்டிண்டு மூணாவது நாளே ஒரே கையெல்லாம் அரிச்சிங்ஸ்.. வீசி எறிஞ்சுட்டேன். மூணாவது சரட்டில் ஏழாவது முடிச்சை கொஞ்சம் அழுத்தி போடும்போதே.. பொட்டுன்னு அறுந்து போயிடுத்து!

ஒரு வழியா அம்மனை அழைச்சாச்சு. வருண் மட்டும் உட்காராமல் ரகளையை மஹா ஆவேசமாக தொடர்ந்தான். பூஜை ஆரம்பிக்கும் சமயம் வந்தப்போ அவனை அடக்கி பக்கத்துல உக்கார வெச்சுண்டேன். வருண் பாரு, இப்போ கணபதி பூஜை பண்ணணும். எங்கே சொல்லு, கஜானனம்..ன்னு சொல்லி அவனை பூஜையில இண்ட்ரெஸ்ட் வரும்படி மோட்டிவேட் பண்ணிணேன். உடனே, சமர்த்தா சுலோகம் மொத்தத்தையும் சொல்லிட்டு மறுபடியும் முதல்லேந்து சொல்ல ஆரம்பிச்சான். பாரு, பிள்ளையார் ஜேஜா தான் எப்போவுமே எல்லாத்துக்குமே ஃபர்ஸ்ட் ஜேஜா.. ”பெய்யம்மா அப்போ செகண்ட் ஜேஜா யாரு?”ன்னு “டாடி எனக்கொரு டவுட்டு”அப்படீங்கற முன்னுரையே இல்லாமல் கேட்டுட்டான். நானும் எவ்வளவோ சமாளிச்சிங்ஸ் ஆஃப் இண்டியா..வுட மாட்டேங்கிறான். ”செகண்ட் ஜேஜா யாரு பெய்யம்மா”ன்னு விடாம நச்சினான். சரி சொல்லு.. கஜானனம்ன்னு மறுபடியும் ஆரம்பிச்சு விட்டேனா, அதையே இண்டெஃபனட் லூப்ல சொல்லிண்டு இருந்தான்.

பூவை மூணு பங்கா பிரின்னு அம்மா சொல்லியிருந்தா.. எல்லாத்தையும் ஆய்ஞ்சு மூணு பாத்திரத்தில் போட்டிருந்தேன். அது வரைக்கும் சோஃபாவில் உக்காண்டிருந்த அருண், எழுந்து வந்து அவாம்மா பக்கத்துல ஒட்டிண்டு உக்காந்து, பூ வெச்சிருந்த பாத்திரத்தை பக்கத்துல இழுத்து வெச்சுண்டு..அஷ்டோத்திரத்துக்கு அத்தனை பூவையும் ஃப்ரிஸ்பீ மாதிரி எறிய ஆரம்பிச்சுட்டான். பூவெல்லாம் பூஜை ரூம் பூரா சிதறி, ஒரே களேபரம். பார்க்க படம். சின்ன வயசுல வாசல் தெளிப்போமே.. அதே மாதிரி பூ பாத்திரத்தை வருண் வெச்சுண்டு பூக்களை நீர் போல் பாவித்து அள்ளி அள்ளி தெளிச்சுண்டு இருந்தான். ச்சே.. இறைச்சுண்டு இருந்தான். நிற்க.. இப்போ வெறும் பிள்ளையார் பூஜை மட்டும் தான் முடிஞ்சிருக்கு. இன்னும் அங்க பூஜை, லக்ஷ்மி அஷ்டோத்திரம் எவ்வளவோ இருக்கு.. அட்சதை கூட மிஞ்சாது போல்ருக்கேன்னு நினைக்கும்படி அருண் வருண் பூவெல்லாம் கேட்டுப்பார்ன்னு மொத்தத்தையும் இறைச்சுட்டாங்க!

தூபம் தீபம் காட்டும்போது மணி அடின்னு அருண் கிட்டே ஒரு ஜாப் டெலிகேட் பண்ணி இருந்தாங்க. அவன் இன்னொரு மணியும் எனக்கு வேணும்ன்னு சொல்லி மேல் வீட்டுத்தாத்தாவுக்கு ஹார்ட் அட்டாக் வரும்படியாக, அவருக்கு ஆம்புலன்ஸ் மணி அடிக்கும் அளவுக்கு மஹா ஆக்ரோஷத்துடன் தலைகீழாக பிடிச்சுண்டு அந்த மணியை அடிச்சு உஸ்ஸபா...

மந்த்ர புஷ்பம் போடும்போது அம்மா, அருண் வருணிடம் “தாயே நல்ல புத்தி கொடும்மான்னு, நான் சமர்த்தா இருக்கணும்மா”ன்னு வேண்டிக்கோங்க ன்னு சொல்ல, தங்கைமணி ’களுக்’குன்னு சிரிச்சுட்டா.” என்ன சிரிப்பு?”ன்னு அம்மா முறைக்க, ”அதில்லைம்மா.. இந்த மாதிரியெல்லாம் பிரார்த்தனை பண்ணா, வரலக்ஷ்மி தேவி பாவாடையை (இந்தியன் படத்துல மாப்பிள்ளையின் காரில் சாணி தட்டும் கஸ்தூரியை மாதிரி) வரிஞ்சு கட்டிண்டு தலையில இருக்கற தேங்காயை பாலன்ஸ் பண்ணியுண்டு எஸ்கேப் க்ரேட் எஸ்கேப்புன்னு கத்தியுண்டே ஓடிடுவாம்மா”ன்னு ரொம்ம்ப அப்பாவியா மூஞ்சியை வெச்சுண்டு சொல்றா!ஏண்டீன்னு அம்மா கேட்டப்போ, ”பின்னென்னம்மா நிச்சியம் கொடுக்க முடியாததை, நடக்காததையெல்லாம் பிரார்த்தனையில கேட்டா? அம்மன் என்ன பண்ணுவா? ”

கொஞ்ச நேரம் நிம்மதியா பூப் போட்டு அம்மனை ஸ்மரிச்சு,  நிவேத்யம் பண்ணி சரடு கட்டும் சடங்கு ஆகறதுக்குள்ளே இப்போவே எனக்கு ஆக்ட் 2 பாப்கான் வேணுன்னு வருண் அடம். இதுல காமெடி என்னன்னா.. ஒரு பெரிய டப்பா நிறைய ராஜாராம்ஸ் பாப்கான் (பொறிச்சதே) இருக்கு. அதை தின்ன மாட்டானோ.. இல்லே இது தான் வேணும்.. இன்னிக்கே.. இப்போவேன்னு ரகளை. மை மதர் முடியாதுன்னு ரொம்ப ஸ்ட்ரிக்டா மறுக்கவே, நான் வீத்தை வித்து போறேன்னு(அருஞ்சொற்பொருள்: வீட்டை விட்டு போறானாம்) அவன் செருப்பை போட்டுண்டு கிளம்பிட்டான். ஒருத்தரும் அவனை கண்டுக்கலை. அதிர்ச்சியில நான் நிக்கறதை பார்த்து, ”தங்கைமணி, அதெல்லாம் சும்மா.. பில்டப்பு.. கீழே போய் ஃப்ளாட் பசங்க கூட விளையாடிட்டு வந்துருவான்” அப்படீங்கறா. அதே மாதிரி 5 நிமிஷத்துலேயே (இன்னும் கொஞ்ச நேரம் விளையாடி இருக்கக் கூடாதோ) வந்துட்டன்!(பஞ்ச தந்திரத்தில் யூகி சேது சொல்லுவாரே அதை அப்படியே ஆண்பாலுக்கு மாத்திக்கோங்க)

இந்தக் களேபரத்துல அருண் மட்டும் ரொம்ப அக்கறையா சோஃபா கைப்பிடியின் மேல் ஏதோ துணியை போட்டுண்டு இருந்தான். ஆஹா.. இதுவல்லவோ குழந்தைன்னு அவனை கட்டிண்டு கொஞ்சினா.. குறும்பு கொப்பளிக்க சிரிக்கறான். என்னன்னு பார்த்தா, விபூதி டப்பா காலியா அவன் கையில வெச்சுண்டு இருக்கான்! என்ன பண்ணினே அருண்ன்னு ஹை டெஸிபெல்ல கத்தினேன். சிரிச்சுண்டே இருக்கான். மெதுவா அந்த துணியை நீக்கிப்பார்த்தேன். சோஃபா கைப்பிடியின் மேல் மூணு லேயர்கள் போட்டிருந்தான். 1. சோஃபா கவர், 2. ஒரு ஈரத்துண்டு 3.மூங்கிலால் ஆன ஜபிக்கும் பாய், அந்த சோஃபா கவருக்கு மேல மொத்த விபூதியையும் கொட்டி வெச்சிருக்கான்! நைஸ்ஸா அதை மறைக்கறதுக்காக இவ்ளோ டெக்கரேஷன்.. ஒரு ஈரத்துண்டு வேற.. ஏதாவது சைண்டிஃபிக் அப்ஸார்ப்ஷன் டெக்னிக்கா இருக்குமோ? இவன் ஏன் (இன்னும்) ஏதாவது ஒரு சாக்கை வெச்சுண்டு கோச்சுண்டு வீட்டை விட்டு போகலைன்னு யோசிக்க ஆரம்பிச்சுட்டேன்.ஆரத்தியின் போது சாமலே மினாஸி... சுண்டரேஸ ஸாஸி (சியாமளே மீனாக்ஷி சுந்தரேஸ்வர சாக்ஷியாமா)ன்னு வருண் பாடியது அம்மனுக்கு மஹா பிரஸன்னம்!இதி வரமஹாலக்ஷ்மி பூஜை சம்பூர்ணம்!

Sunday, August 4, 2013

ஃபில்டர் காஃபி

ஆளாளுக்கு ஃபில்டர் காஃபியை பத்தியே ஸ்டேட்டஸ் போடுறாங்க ஃபேஸ்புக்ல.. அதான் நாம அதைப் பத்தி இதுவரை ஒண்ணுமே எழுதலியேன்னு எழுத வந்தேன். 

போடியில் எஸ்டேட்டிலிருந்து காப்பிக்கொட்டை வரும். அதை அவ்வா பார்த்து பத்திரமாக வறுத்து, ஒரு பெஞ்சியில் கனெக்டப்பட்ட காஃபி கிரைண்டிங் மெஷினில் போட்டு அதன் கைப்பிடியை சுழற்றினால் திரித் திரியாய் பொடி விழும். பெரிய பித்தளை ஃபில்டரில் தான் காஃபி போடுவார் அவ்வா. விறகடுப்பு (அ) கும்முட்டி அடுப்பில் (ஆமா, அதுலே எல்லாம் எப்படி அடுப்பை ’சிம்’ பண்ணினாங்களோ?) ஃப்ரெஷ் எருமைப் பாலை காய்ச்சி நுரை ததும்ப, ஆவி பறக்கும் காஃபி அருமையாக டபராவுடன் கொடுப்பார். 

காலப்போக்கில் அது ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஃபில்டர் ஆச்சு. தீக்‌ஷித் காஃபி, சித்ரா காஃபி, ராஜாஸ் காஃபி, அப்புறம் 90களில் லியோ, நரஸுஸ், காஃபி டே, கோதாஸ் காஃபி  என்று பொடியும் மாறியது. 


முன்னெல்லாம் நம்மாத்துல பெரிய ஃபில்டர்ல ரொம்ம்ம்ம்ப ஸ்ட்ராங் எல்லாம் இருக்காது. சுமாரா ஒரு மாதிரி சிக்கனமா போடுவா. ஸ்பூன் கணக்கு தான். 5 ஸ்பூனுக்கு மேல போடாதேன்னு அம்மா இன்ஸ்ட்ரெக்‌ஷன் குடுத்துட்டு வெளீல போவா. அவ்ளோ தான் முதல் முதலான என் காஃபி எக்ஸ்பீரியன்ஸ். 

கல்யாணத்துக்கப்புறமா ரங்ஸ் வந்து தான் காஃபி போடும் என் திறமையை வளர்த்தார். ஒரு நாள் ஃபில்டரில் தண்ணீரை , நாயர் கடையில் சாயா ஆத்துர மாதிரி தூக்கி விட்டேன்.. ரங்ஸ் துடிச்சு போயிட்டார். காஃபியோ கன கண்றாவி! அப்போ தான் எனக்கு ஞானோதயம், கீத்தோபதேசம் எல்லாம் ரங்ஸ் கிட்டேந்து கிடைச்சது. ரெண்டு பேர் தானே.. குட்ட்ட்டியூன்ன்ன்ன்ண்டு ஃபில்டர். அதுல கரெக்டா பொடி போட்டு, மெதுவா துளியூண்டு  தண்ணி ஊத்தி, ஒரு bed form பண்ணணுமாம். அதுக்கப்புறம் ஒரு சில நிமிஷங்கள் கழிச்சு அடுத்த ரவுண்டு மறுபடியும் இன்னும் கொஞ்சூண்டு. இப்படி ரெண்டு மூணு வாட்டியா விட்டா.. செம்ம திக்க்க்க்க்க்க்க்க்க்கா ’கள்ளிச்சொட்டு’ என்று அன்புடன் அழைக்கப்படும் டிகாஷன் இறங்கும்ங்கற அந்த சீக்ரெட்டை எனக்கு சொல்லிக் கொடுத்தார். அத்துடன் அல் ரவாபி ஃப்ரெஷ் மில்க்கை காய்ச்சி அளவ்வா சர்க்கரை போட்டு ஒரே ஆத்து ஆத்தி, நுரை ததும்ப குடிச்சா.. யப்பா... Blissful! (எல்.கே இந்த அருமையான காஃபியை குடிச்சா கிடைக்கும் உணர்வுக்கு என்ன பேர்ன்னு கேட்டிருந்தார் - அதுக்கு பெயர் : ’ஜென்ம சாபல்யம்’) .. ஆஹா.. அதி அற்புதம்!

நான் அம்மாகிட்டே அடிக்கடி ”அம்மா காஃபி கிடைக்கும்ங்கற ஒரே காரணத்துக்குத்தாம்மா நான் காலேல எழுந்துக்கறேன்.. இல்லேன்னா தூக்கத்தை மத்தியானம் வரை கண்டின்யூ பண்ணிடுவேனாக்கும்”ன்னு சொல்லிருக்கேன். அம்மாவும், “ஆஹா, இதுவல்லவோ வாழ்க்கைக் குறிக்கோள்.. சூப்பர்டா செல்லம்”னு உச்சி முகர்ந்து ச்சே.. உச்சி மண்டையில நணங்குன்னு சவுண்டு வரமாதிரி ஒரு குட்டு வெச்சு, அடி உதையெல்லாம் கொடுத்திருக்கார். ஹி ஹி!

முன்னாடியெல்லாம் ரங்ஸ் எந்த ஹோட்டலுக்கு போனாலும் டபுள் ஸ்ட்ராங், டபுள் சர்க்கரைன்னு ஆடர் பண்ணுவார். தனக்கு மட்டும் சொல்லிண்டா தான் பரவாயில்லியே! எனக்கும் அப்படியே ஆடர் பண்ணித் தொலைச்சு.. நான் கொஞ்சம் பால், இன்னும், இன்னும்ன்னு கேட்டு மொத்தம் மூணு காஃபி ஆயிடும்.(எனக்கு மட்டுமே சொன்னேன்!) கஷ்டம் கஷ்டம்!

ரங்ஸுக்கு ஒரு டம்ப்ளர் கள்ளிச்சொட்டில் ஒரு சொட்டு, ஒரே சொட்டு பால் போறும். எனக்கு காலரைக்கால் டம்ப்ளர் கள்ளிச்சொட்டில் மீதி ஃபுல்லா பால். சரி ரெண்டு பேர் தானே.. கொஞ்சம் வேரியேஷன்ஸ் இருந்தாத்தான் என்ன?ன்னு நீங்க கேக்கலாம். கரெக்ட்.. ஆனா பெரிய குடும்பங்களில் இருக்கும் வேரியேஷன்ஸ் இருக்கு பாருங்க... 

அம்மாவின் நிர்வாகத்தில் இருக்கும் கிட்டத்தட்ட ஒரு காஃபி ஷாப் தங்கைமணியின் கிச்சனாகும். மை நைனா மீடியம் ஸ்ட்ராங்.. சுகர் ஃப்ரீ போடணும்.  தங்கையாத்துக்காரருக்கு தக்குனூட்டு டம்ளரில் முழுதும் கள்ளிச்சொட்டு ப்ளஸ் இன்க் ஃபில்லரில் பால் விடணும். சர்க்கரை பிடாது.. டிஸயர் ஷுகர்.  தங்கை மீடியம் ஸ்ட்ராங்.. ஆனா வெரி வெரி லைட் சுகர் அல்லது டிஸயர், அருண் வருண் ஃபுல் மில்க் ப்ள்ஸ் இன்க் ஃபில்லரில் கள்ளிச்சொட்டு டிகாஷன்.இதுல செல்லவ்வாவுக்கு மட்டும் ஒன்றரை டம்ளர் வெந்நீர் ப்ளஸ் இன்க் ஃபில்லரில் கள்ளிச்சொட்டு காப்பி(கலந்தது தான், இந்த மாதிரி கள்ளிச்சொட்டு பூலோகத்துல யாரும் குடிக்க மாட்டாங்கப்பா, எனக்கெல்லாம் ஜீரணம் ஆகாது”!) அப்பாடி எல்லாருக்கும் கொடுத்தாச்சுன்னு நிம்மதி பெருமூச்சு விடும் நேரத்தில் மை நைனா செக்கண்ட் காப்பிக்கு ரெடி! இவ்ளோ களேபரத்தில் மை மதர் தெரஸா - பாவம் தான் ஃபர்ஸ்ட்  காஃபி குடிச்சோமா இல்லியான்னு மறந்துஃபையிங்..இதுனாலேயே இந்த கஸ்டமைஸ்டு காஃபி செக்‌ஷனை அவுட்ஸோர்ஸ் பண்ணலாமான்னு ஷி இஸ் யோசிச்சிங் ஆஃப் தி!ஆனா நிச்சியம் எக்ஸ்பெக்டட் அவுட்கம் இருக்காதுன்னு ஷி இஸ் வெரி வெரி ஷ்யூர்! த்சோ த்சோ! 

இந்த ஃபில்டர்கள் சில சமயம் செய்யும் புல்லுருவி வேலைகள் இருக்கு பாருங்க. மெதுவ்வ்வ்வா பத்திரமா பார்த்து விட்டாலும் டர்ர்ர்ர்ர்ன்னு குட்டிப்பாப்பா மூச்சா போனாமாதிரி இறங்கிடும். வாசனையும் மிஸ்ஸிங்.. லை....ட்ட்டா இருக்கும். இதுக்கு முக்கியமான காரணம் வந்து, பொடியை ரொம்ம்ம்ம்ப லூஸாக ஃபில்டரில் போடுவது. அந்த மாதிரி தருணங்களில் மை மதர் தெரஸா என்ன சொல்லியிருக்கான்னா, விழுந்திருக்கும் டிகாஷனை மறுபடியும் சர்வ ஜாக்கிரதையாக எடுத்து அகெய்ன் புட் இட் இன் தி காஃபி பொடின்னு சொல்லி இருக்கா. அப்படி பண்ணும்போது இந்த வாட்டி திக்கா விழுமாம். பேக் டு கள்ளிச்சொட்டு ஃபார்ம். 

சில சமயம் இந்த ஃபில்டர்ல பொடியும் போட்டு தண்ணியும்  விட்டா கல்லூளி மங்கன் மாதிரி கம்முன்னு இருக்கும். டிகாஷன் விழுந்தாத்தானே? இதுக்கு முக்கியமான ரீஸன்ஸ் ஃபில்டர் துவாரங்கள் அடைச்சுஃபிக்கேஷன் தான். கான்ஸ்டிப்பேஷன் வந்தாப்புல முக்கி முனகி ஒரே ஒரு சொட்டு ஒன்லி ஃபாலிங்ஸ்.. வெரி ஏமாத்திங்ஸ் அண்ட் ஃபீலிங்ஸ்.. சில பேர் ஆத்துல இடுக்கியைக் கொண்டு ஃபில்டரின் மண்டையில் லொட்டு லொட்டுன்னு தட்டுவா.. இதனால் ஃபில்டரின் மண்டை விளிம்பில் பலத்த காயம் ஏற்படுமேயன்றி கள்ளிச்சொட்டு விழாது என்பதை புரிந்த மங்கையர் அரிதாததலால், முக்காவாசிப்பேர் ஆத்துல அந்த ஃபில்டரானது, நசுங்கிப் போன அலுமினியப் பாத்திரம் மாதிரி தான் இருக்கும். ப்ளஸ், இவா அதை படுத்தின பாட்டுக்கு அது தன்னொட மூடியை டைவர்ஸ் செய்திருக்கும். காஃபியின் மணம் எஸ்கேப்பாகமல் இருக்க மூடலாம்ன்னு பாத்தா, கொள்ளாது. 

அதுக்கு அவ்வா என்ன பண்ணுவான்னா, அந்த பித்தளை ஃபில்டரின் அடிப்பாகத்தை விறகடுப்பில் கொஞ்ச நேரம் காட்டுவா.. அதுல அடைஞ்சிருக்கற காப்பிப் பொடியெல்லாம் எரிஞ்சு, துளைகள க்ளியர் ஆயிடும். அப்போ வெளிச்சத்தில் வெச்சு பாத்தா, க்றிஸ்டல் க்ளியரா.. பெர்ஃபெக்ட்லி கான்ஸெண்ட்ரிக் சர்க்கிள்ஸில் புள்ளிகள் தெரியும்.. அது கூட ஒரு சந்தோஷமா இருந்தது. 

இந்த மாதிரி பொடி போட்டும் டிகாஷன் விழாம சதி பண்ணறதுக்கு இன்னோரு காரணம் வாட் மீன்ஸ், பொடி ரொம்ம்ம்ம்பவும் நைஸாக போட்டு அரைத்துவிடுகிறார்கள் கடையில்.

 பாலக்காடு கல்பாத்தியில் என்ன ஒரு ஐடியா பாருங்களேன்.. அக்ரஹாரத்துக்கு நடுவில் ஒரு காஃபி டே அவுட்லெட் திறந்திருக்கா! மாமி, கொஞ்சம் காப்பிப் பொடி தரேளான்னு யாரும் இரவல் கேட்டு வந்தா.. அதான் கடை திறந்திருக்கேன்னு சொல்லி விரட்டி விட்டுடுவா! ”ஹி ஹி.. மாசக்கடைசியா இருக்கேன்னு கேட்டேன்” னு தலையைச் சொறிஞ்சா.. என்ன பண்ணுவாளா இருக்கும்?

பொடியை ரொம்ம்பவே நைஸாக அரைச்சா, ஃபில்டரில் விழாது..விழவே விழாது.. ஒன்லி காஃபிமேக்கரில் தான் விழும். வொய் மீன்ஸ் காஃபி மேக்கரில் ஃபில்டர் படு ஃபைன் துவாரங்ள்ஸ் ஆர் தேர். ஹவ் எவர்.. எங்களுக்கு காஃபி மேக்கர் அவ்வளவாக பிடிக்கறதில்லை. ஒன்லி ட்ரெடிஷனல் மெத்தட்ஸ் ஆர் பெஸ்ட் சூட்டட் ஃபார் அவர்  காஃபி நீட்ஸ்!

அபுதாபியில் இருந்தப்போ “இத்னி ஸ்வாதிஷ்ட் காஃபி மைன்னே கபி நஹி பீ ஹை”ன்னு விஷாகாவும், “ஆப்கி காஃபி கைஸே இத்னா ஸ்பெஷல் பன்தா ஹை”ன்னு ரேஷ்மாவும் கேட்டது அடிக்கடி நினைவுக்கு வரும்.. நாக்கு நாலடி நீளமா இருந்தா.. காஃபி என்ன, தண்ணி கூட ஸ்வாதிஷ்ட்டா சவரணையா குடிக்கலாம்! 

நமஹ்  காஃபீ... பத்தயே.. ஹர் ஹர மஹாதேவா...... :P :P :P
Related Posts with Thumbnails