எங்காத்துல ஒரு சின்ன pool இருக்கு. வாரா வாரம் பழனியிலிருந்து சித்தநாதன் & கோ. விலிருந்து நேரா லாரியில் 200 கிலோ விபூதி வரும். அந்த குளத்துல கொட்டி அவங்களே ஒரு குச்சியை விட்டு நன்னா கலந்துவிட்டுட்டு போயிடுவா. மை ரங்ஸ் தினமும் கார்த்தால 5 மணிக்கு ஏந்து ஸ்நானம் பண்ணிட்டு நேரா அந்தக் குளத்துல போய் தொபுக்கடீர்ன்னு குதிச்சுடுவார். அப்புறம் ஏந்து வந்து சன் பாத் எடுத்துப்பார். அதை சந்தியா வந்தனம்ன்னு கூட சொல்லுவா. நெக்ஸ்டு அப்படியே ஜபம் தபம் எல்லாம் பண்ணிட்டூஅப்படியே அது மேலயே பனியன் போட்டுண்டு ஆஃபீஸ் கிளம்பிடுவார். இதுனால ரெண்டு பயன்கள். 1. பனியன் நெடுநாள் உழைக்கும். 2. உடல் துர்நாற்றக்கவலையே இல்லை! ஒரே ஜவ்வாது பெர்ஃப்யூம் போட்டுண்டாச்சே! இந்த விபூதி பேக் தான் அவர் மேனி எழிலின் ரகசியம்ன்னு சொன்னால் அது மிகையாகாது.
நீரில்லாத நெற்றி பாழ்ன்னு சும்மாவா சொல்லியிருக்கா? ரங்க்ஸின் நெற்றி ஆல்வேஸ் ஃபில்டு வித் ஆல் டைப்ஸ் ஆஃப் பூசபிள்ஸ். விபூதி, குங்குமம், சந்தனம், மணப்புள்ளிக்காவு அம்மனின் சாந்து பிரஸாதம், கணபதியான் பிரஸாதம், ஹோமத்துல தர்ப்பையை எரிச்சு தருவாளே - அது, அப்புறம் ஆஞ்சு டாலிங்கின் செந்தூரம் இப்படி பல பூசபிள்ஸ். ஆக்சுவலி வயலெட் குங்குமமும் மஞ்சளும் எருமைச் சாணமும் மாத்ரம் தான் இட்டுக்கலையாக்கும். பாக்கி எல்லாத்தையும் வெச்சுண்டாச்சு நெத்தியில.
பையன் ஃபோட்டோ வந்திருக்கான்னு எங்கம்மா கேட்டப்போ மெயிலில் வந்திருந்த ஃபோட்டோவை ஓப்பன் பண்ணி காட்டினேன். ஃபோட்டோவை பாத்துட்டு, எங்கம்மா மூஞ்சி காத்து போன பலூன் மாதிரி ஆயிடுத்து. ”ஏம்மா நல்லாத்தானே இருக்கார்”ன்னு சொல்றேன். வாண்டாம்டீ.. இவர் ஏதோ கோவில்ல தான் பூஜை பண்றார், இந்த சம்பந்தம் வாண்டாம்ன்னு அடிச்சு சொல்லிப்புட்டா. அப்புறம் இவருடைய பேஸ்லிப் எல்லாம் பார்த்து தான் நம்பினான்னா பாத்துக்கோங்க. அவ்ளோ விபூதியா ஒருத்தர் பூசிப்பார்?
பெரிய மைத்துனர் பெண்ணிடம் போய் ரீல் மன்னன் பேசிண்டு இருந்தார். ”கோந்தே, சித்தப்பாக்கு மாடலிங் சான்ஸ் வந்திருக்கு தெரியுமோ”ன்னு கேட்டிருக்கார். உடனே குழந்தை கண்களை விரித்து குதூகலத்துடன், ”ஹை, கன்கிராட்ஸ், என்ன product சித்தப்பா”ன்னு கேட்க, “சித்தநாதன் விபூதி கோந்தே”ன்னு சொல்லவும் குழந்தைகள் எல்லாம் சேந்துண்டு இவரை கல்லை வுட்டு எறிஞ்சு அடிச்சு செம்ம கலாட்டா!
எங்க நிச்சியதார்த்தத்துக்கு முன்னாடி ஒரு வாட்டி இவர் கூட தேவராஜப் பெருமாளை தரிசிக்க காஞ்சிபுரம் போயிருந்தேன். 29 வயசு தான் எனக்கு. கோவில் வாசல்ல ஒரு பூ விக்கும் 60 வயசு பாட்டி ஓடோடி வந்து மாமீ.. மாமீ துளசி மாலை வாங்கிக்குங்க மாமீன்னு ஒரே தொந்திரவு.ஏன்னா கேரளா மாதிரி இவர் சட்டையை கழட்டிப்புட்டுத்தான் கோவிலுக்குள்ள வருவேன்னு ரகளை! body packஐ பாட்டி கவனிச்சுட்டா. இவரைப் பாத்துட்டு மடத்துக்கு வந்துருக்கற ஜீயர் போல்ருக்குன்னு என் காது படவே சிலர் பேசிண்டா.. நானும் எவ்ளோ தான் வலிக்காத மாதிரியே நடிக்கறது?
இவருக்கு கல்யாணம் ஆன புதிதில் என்ன கிஃப்டு வாங்குவதுன்னு எங்காத்துல ரொம்ப குழம்புவா.வீட்டுக்கு வீடு மாப்பிள்ளை வரான்னா ரெண்டு கிலோ அகர்வால் பவன், கிருஷ்ணா ஸ்வீட்ஸ்ன்னு தான் ஸ்வீட்டு பட்சணமெல்லாம் வாங்குவா. மிடிலீஸ்ட இருந்து லீவுக்கு வரும்போதெல்லாம் ரெண்டு ரெண்டு கிலோ சித்தநாதன், கந்த விலாஸ் வாங்கித்தருவா இவருக்கு. இவருக்கும் அது மட்டுமே சாஸ்வதமான மவுத்ஃபுல்லாஃப் டீத் கொடுக்கும் சமாச்சரமாக விளங்கியது.
விபுதி டப்பாவாக பல வருஷம் ஏதோ ஒரு ஆயூர்வேதிக் லேஹிய டப்பா இருந்தது. அதை மாத்தும் போது இவர் பண்ணும் ரகளை இருக்கே. ஐக்கியா போய் விபூதி டப்பா வாங்கிய முதல் குடும்பம், எங்க குடும்பமாத்தான் இருக்கும். அதுக்குள்ள ஒரு குழிக்கரண்டி போட்டு வெச்சுப்பார். தினசரி ரெண்டு குழிக்கரண்டி.. பின்னே? பாடி பேக் ஆச்சே அது. அதை குழைச்சு போட்டுக்கறதை ஒரு ப்ராஜக்ட் மாதிரி பண்ணுவார். உள்ளங்கையில் தண்ணி விட்டு குழைச்சுண்டு, வலது கையால் நெத்தியில பூசிண்டு, இடது தோள், கையில் அப்பிண்டு, இடது கையால் வலது தோள், கையெல்லாம் போட்டுண்டு, மார்பு, தொப்பை, காந்தக்கணழகியை கெளண்டமணி பூசச்சொல்லுவாரே அதே மாதிரி இடுப்பு, நடு முதுகு தொடை எல்லாம் விபூதியை தாராளமா எடுத்து பூசிப்பார்.
ஆங் சொல்ல விட்டுப்போச்சு, நாமெல்லாம் விளம்பரத்தை பாத்துட்டு சோப்பு, ஷேம்பு இப்படி புதுப்புது products launch பண்ணின உடனேயே வாங்கி பாப்போமே.. இவர் கடைக்கு போனால் நேரா ஊது பத்தி தாழம்பூ குங்குமம், தூபம், கம்ப்யூட்டர் சாம்பிராணி செக்ஷன்ல தான் போய் நிப்பார். புதுசா ஏதாவது விபூதி வந்திருக்கான்னு செக் பண்ணுவார். உடனே வாங்கிப்பார்த்து ரிவ்யூ சொல்லுவார்.
விபூதி ஈரமா இருக்கும்போதே உடனுக்குடன் சந்தனம் ஃபாலோட் பை காண்ட்ராஸ்ட் கலரின் தேவி பிரசாதம் குங்குமத்தையும் இட்டுண்டுடுவார். இல்லாட்டா நல்லா இருக்காது.
பாலக்காட்டுல ஒரு வாட்டி இவாளெல்லாம் செக்கண்ட் ஷோ பாத்துட்டு திரும்பி வந்துண்டு இருந்திருக்கா.. போலீஸ் ரோந்து. ஒரு கான்ஸ்டபிள் இவா எல்லாத்தையும் புடிச்சு குடிச்சிருக்காளான்னு டெஸ்டு பண்றதுக்கு ஒரு இன்ஸ்ட்ருமெண்டில் ஊத சொல்லியிருக்கார். இவரும் ஊதியிருக்கார். ரிஜல்டுக்கு வெயிட் பண்ணிண்டு, ”எந்தா சார்? ”ன்னு கேட்டிருக்கார். கடுப்பான போலீஜு ”ஆங், பஸ்மம் மணக்குந்நூ” ன்னு சொல்லியிருக்கார்!
ரெண்டு வருஷம் முன்னாடி எங்க பழைய ஆஃபீஸுல ஆதார் அட்டை வழங்கறோம்ன்னு ஃபோட்டோ எடுத்துக்க வர சொல்லியிருந்தா. நானும் மேக்கப்பெல்லாம் போட்டுண்டு துப்பட்டாவால் (RPG, வெயிலிலிருந்து காத்துக்க, கோச்சுக்காதேள்) மூஞ்சியை மூடிண்டு இவர் பின்னாடி உக்காண்டு போனேன். இவர் ஹெல்மெட் போட்டுண்டு இருந்தார். டிஷர்ட் போட்டிண்டு இருந்தார் போல்ருக்கு. ஏதோ இல்லீகல் ஜோடி போறான்னு நினைச்சுண்டு, போலீஜு எங்களை ECRல் நிறுத்திப்புட்டா.. நான் துப்பட்டாவை விலக்கி முகங்காட்ட, ரங்ஸ் ஹெல்மெட்டை கழட்டி முகங்காட்ட, அதிர்ந்த போலீஜு, உடனுக்குடன், கிளம்புங்க சார். சாரி சார்ன்னு கால்ல விழாத குறை! யாரு கிட்டே? எங்ககிட்டேயே வா? ;-) இவருடைய ஃபுல் மேக்கப் தான் என்னன்னு உங்களுக்கெல்லாம் இப்போ தெரிஞ்சிருக்குமே?