Pages

Thursday, September 16, 2010

அருண் மாஞ்சாரோ செல்ல வருண் மாஞ்சாரோ...

பல்லாயிரக்கணக்கான மெயிலின் மூலம் ப்ளீஸ் அநன்யா அருண் வருண் பத்தி இன்னும் நிறைய எழுதுங்கன்னு ரசிகர்கள்(!!??!!) கேட்காததுனால இத்தனை நாள் கழிச்சு இந்த போஸ்டு. இந்தப்பதிவு நம்ம சந்தியாவுக்காக மட்டும்.. ஹிஹி!

சந்தியா நான் எதை விடுவேன் எதைச்சொல்லுவேன்?. நிறைய அழகழகா பண்றாங்க.

ஃபோன்ல இஷ்டத்துக்கு நம்பர் டயல் பண்ணிண்டு இருந்த வருண் திடீர்ன்னு பயந்து அழ ஆரம்பிச்சுட்டான். என்னம்மான்னு ஓடிப்போய் கேட்டா, ”ஆடோ திட்டா” ன்னு சொன்னான்.(அருஞ்சொற்பொருள்= யாரோ திட்றா) ரீஸீவரை எடுத்து காதுல வெச்சுண்டு பார்த்தா, ”திஸ் டெலிஃபோன் நம்பர் டஸ்னாட் எக்ஸிஸ்ட்” னு ஒரு பொண்ணு கொஞ்சம் கடுமையா சொல்லிண்டு இருக்கா!!!

பெய்யம்மா ஹாப்பி பர்த்டே ஆச்சு. அம்மா ஹாப்பி பர்த்டேக்கு கேக் கட் பண்ணி கொண்டாடியாச்சு. கிருஷ்ணா ஜேஜா பர்த்டேக்கு பாட்டி ஏகப்பட்ட பலகாரம் பண்ணினாங்க. அதே மாதிரி பிள்ளையார் ஜேஜா ஹாப்பி பர்த்டேன்னு சொன்னது தான் தப்பா போயிடுத்து.. உஃப்ஃப்ஃப்ஃப்ஃப்ன்னு ஊதி, விளக்கை பூஜை நேரத்துல அணைச்சுட்டாங்க..

அன்னிக்கு அப்படித்தான் ஹோட்டலில் இருந்து ஏதோ ஆர்டர் பண்ணி இருந்தா தங்கை மணி. வருண் பாப்பா அவசரமா போய் கதவை திறந்து,” சவரண பவன் சவரண பவன்”னு கத்தி, டெலிவரி பாய்க்கு சிரிச்சு சிரிச்சு, வயித்த வலியே வந்திடுத்து! ஆமாங்க சரவணபவன்ல தான் ஆர்டர் பண்ணி இருந்திருக்கா.

அருண் சாதாரணமா பேசும் போது ரொம்ப energy conservation conscious ஆ இருப்பான். ரொம்பவே சின்ன குரல்ல தான் பேசுவான். அன்னிக்கி அப்படித்தான் ”சோமஸேறி போடிங்க பெய்யம்மா சோமஸேறி போடிங்க”ன்னு சொல்லிண்டு என் பின்னாடியே சுத்திண்டு இருந்தான். அவனை இழுத்து காதுகிட்டே வெச்சுண்டு என்ன அருண்னு கேட்டா சோமசேறின்னு தெளிவா(!!) மழலையில கேக்கறான். ஒரு கட்டத்துல அவனுக்கு பொறுமை போயி அழ ஆரம்பிச்சுட்டான். எனக்கு இன்னும் புரிஞ்சபாடில்லை. அப்புறம் வருண் குத்து மதிப்பா எடுத்து சொன்னப்போ தான் புரிஞ்சது. any guesses? TOM AND JERRY வேணுமாம் டீவீயில.. உஸ்ஸ்!! சிரிச்சு சிரிச்சு முடியலை. எப்போவுமே யுவன் ஷங்கர் ராஜாமாதிரி லேசா அலட்டிக்காம காத்தை மட்டும் உள்வாங்கி வெளியே விட்டு பேசி முடிச்சுடுறானேன்னு ரொம்பவே ஆதங்கப்பட்டேன்!

வருணுக்கு கதை சொல்ற ப்ராஜக்டு இருக்கே, அது ரொம்ப லொள்ளு! இவனுக்கு இப்படித்தான் ஒரே ஒரு வாட்டி Noddy கதை சொல்ல ஆரம்பிச்சேன், அது டெய்லி பழகிடுத்து. முதல்லே ஒரு 10 கதை தான் கேட்டுண்டு இருந்தான். இப்போ தினமும் அது கிராஜுவலா அதிகரிச்சு 289 கதை கேக்கறான். 7 மணிக்கு கதை சொல்ல ஆரம்பிச்சா சுமார் 11.00 மணி வரைக்கும் கேக்கறான். அதுக்கப்புறமும் நாம முழிச்சிருந்தா, ஏதோ அவனாலான உபகாரம், பெய்யம்மா, ட்வாகன் கட சொல்லிங்கன்னு கேக்கறான்! ட்வாகன் அருஞ்சொற்பொருள் = Dragon! என்னால முடியலை!

வருணுக்கு வைப்பர் வருண்ன்னு ஒரு பட்டப்பேரே வெச்சுடலாம் போல இருக்கு! அந்த அளவுக்கு wind shield wipers மேல அவனுக்கு தீவிர லவ்வு. ரெண்டு ஆள்காட்டி விரல்களையும் நேரா வெச்சுண்டு தி வைப்பர்ஸ் ஆன் தி பஸ் கோ வீஸ் வீஸ் வீஸ் (ஸ்விஷ் ஸ்விஷ் ஸ்விஷ்ஆமா!!!, வருணுக்கு ஷ இன்னும் வரலை, ஸவர், கோல்டு ஃபிஸ்) ன்னு பாடும்போது அப்படி ஒரு அழகு. அன்னிக்கு அப்படித்தான் செம தூக்க கலக்கத்தோட கட சொல்லுங்க பெய்யம்மான்னு கேட்டான். நாடி என்ன பண்ணினான்....ன்னு நான் ஆரம்பிக்கும்போதே, ஒரே மழையான்னு கேட்டான். குழப்பத்தோட என்னன்னு கேட்டேன். மழை எதுக்கு வருண்னு கேட்டா, மழை வந்தாத்தான் வைப்பர் போடுவாங்க பெய்யம்மான்னு சொல்றான்!!.

 ஒரு கட்டத்துல செம்ம டென்ஸனாயிட்டேன். மழையெல்லாம் இல்லை வருண், ப்ரைட் சன்னி டே தான்னு சொன்னேனோ இல்லையோ, ஒரே அழுகை.. கட்டாயம் வைப்பர் பத்தி தான் கதை சொல்லணும்ன்னு ஒரே ரகளை! நானும் அழுதுண்டே வைப்பர் துடைச்சான், வைப்பர் ஸ்டக் ஆனது, வைப்பர் ரிப்பேர் ஆன கதை எல்லாம் சொல்லி பார்த்தேன்.. ம்ஹூம்.. அப்போவும் விடலை..கடைசியில தமிழ் சினிமா ரேஞ்சுக்கு பிள்ளையார் சதுர்த்தி அன்னிக்கு பிள்ளையார் வாங்கப்போன நாடி ஃப்ரெண்ட்ஸ்கூட கார்ல மழையில மாட்டிண்டு வைப்பர் ரிப்பேர் ஆயி, மெக்கானிக் ஷெட்ல போய் ரிப்பேர் பண்ணி, வீட்டுக்கு ரிட்டன் ஆன கதையை ஃபுல் டால்பி டிஜிட்டல் எஃபக்ஸோட சொன்னேன், திருப்தியா 12.30க்கு தூங்கிட்டான்!

அருணுக்கு சளி ஜாஸ்தி ஆனப்போ ஹாஸ்பிடலுக்கு போய், நெபிலைஸர் வெச்சாங்க, அப்போ அவன் அமைதியா இருந்தானாம், நர்ஸ் அகமகிழ்ந்து, இப்படி ஒரு குழந்தையான்னு ஆச்சரியப்பட்டாளாம்! இதுவே வருணா இருந்தா, அந்த நர்ஸூக்கே நெபிலைஸர் வெக்க வேண்டி வந்திருக்கும்ன்னு தங்கைமணி சொன்னா.. சிரிப்பு தாங்கலை!

கொஞ்ச நேரம் ஹாலில் இருந்துட்டு கிச்சனுக்கு போனால் அங்கே அருணின் கைவண்ணம்! உடனே ஃபோட்டோ எடுத்தேன். நான் போட்ட சத்தத்தில் அவன் மறுபடியும் வந்து ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்தான்!
படத்தில் அருண் இட்லி வார்த்த அழகு உங்களுக்காக.

காடாக வளர்ந்துட்ட முடியை வெட்டலாம்ன்னு ஒரு சலூனுக்கு கூட்டிண்டு போனோம். முதன் முறையா ஆண்கள் சலூனில் நானும் அம்மாவும் நுழைஞ்சோம். வருணின் அழுகை, நச்சு எல்லாம் பார்த்து அந்த கடைக்காரர் கொஞ்சம் ஆடித்தான் போயிட்டார். எப்படியோ சமாதானப்படுத்தி குத்துமதிப்பா வெட்டி விட்டார். இன்னும் கொஞ்சம்ன்னு கேட்டிருந்தா அவர் சலூனை மூடிட்டு எஸ்கேப்பாகி இருப்பார் என்பது மட்டும் திண்ணமா தெரிஞ்சது!
சலூன்லேயும் பெய்யம்மா ஃபோட்டோ எடுப்பா இல்லே?எப்பூடீ?


டெய்லி ஸ்கூலுக்கு போகும்போது, ஒவ்வொரு பொய்க்கு மசிவதும், அதை நம்புவதும், இவங்களை விட்டுட்டு வெளீல போகும்போது ஏதாவது சொல்லி சமாதானப்படுத்துவதும் இந்த பருவத்துக்கே உரிய அப்பாவித்தனமும் அழகும், அப்பப்பா..

டென்னிஸ் தி மெனஸ் பார்த்துண்டு இருந்தேன்.(அது வேற தனியா எதுக்கு? வீட்டுலேயே டபுள் டென்னிஸ் இருக்காங்களே!!) அதுல ராட்சத ரகளைகள் பண்ணி மிஸ்டர் வில்சன் என்ற பக்கத்துவீட்டுக்காரரை டார்ச்சர் செய்யும் டென்னிஸ், அவர் வீடு காலி பண்ணிண்டு போகும் தருவாயில், ”மிஸ்டர் வில்ஸன், யூ ஆர் மை பெஸ்டெஸ்டு ஃப்ரெண்ட் இன் தி ஹோல் வேர்ல்ட்’ன்னு சொன்னப்போ என்னையும் அறியாமல் வருணை வாரி அணைத்து முத்தம் கொடுத்தேன். சிரிச்சுண்டே, பெய்யம்மா கட (kada) சொல்லுங்க என்றான்!
Related Posts with Thumbnails