Pages

Wednesday, November 22, 2017

Biiiiiiiigg fun!

Duday's memareez on paacebuk
1985ன்னு ஞாபகம். விஜயவாடா வாசம்.  பிக்ஃபன் வாங்கி சாப்பிடுவோம். bubble விட தெரியாது ரெண்டு பேருக்கும். ஆனா மேக்ஸிமம் மென்னுட்டுத்தான் அதை கட்டிலுக்கடியில, ட்ரெஸ்ஸிங் டேபிள் ஸ்டூலுக்கு சைடுல ஒட்டி வைக்கறது. ஸ்கூல்லன இருக்கவே இருக்கு பெஞ்சு!

எனக்கு செம்ம்ம்மையா அடி கிடைக்கும்போது மை லைஃப் எனிமி, “வேணுங்கட்டிக்கி வேணூம்”ன்னு கத்திண்டே குதிச்சு, கை தட்டி ரகளை பண்ணுவா.  ஆனா நான் இருக்கேனே.. பரம சாது.. மனசுல கல்மிஷம் ஒண்ணும் இல்லை எனக்கு. கை தட்டி குதிச்சு வேணுங்கட்டிக்கி வேணும்ன்னு எல்லாம் சத்தம் போட மாட்டேன்.. உள்ளூர ரசிச்சு சிரிச்சுப்பேன். அப்படிப்பட்ட மனித குல மாணிக்கமாகிய நான்... யாருய்யா மூஞ்சிக்கி நேரா வந்து துப்பறது? போங்கய்யா தள்ளி!

இந்த பப்பிள்கம்மை மெல்லும்போது, இடையில் வேறு ஏதாவது திங்கவோ குடிக்கவோ நேர்ந்தால், அதை ஒரு தட்டில் ஒட்டி வைச்சுட்டு, அந்த வேலையை முடிச்சப்புறம் அதை திருப்பி எடுத்து போட்டு மெல்லுவது..  அதுல என்ன பிரச்சினைன்னா ரெண்டு பேரும் ஒரே பச்சைக்கலர் பிக்ஃபன்னை ஒரே தட்டுல மென்னுட்டு வைப்போம். அப்படி ரெஸ்யூம் பண்ணப்படும் போது”அம்மா இவ என் பப்பிள்கம்மை எடுத்துண்டுட்டாம்மா” என்ற பழிச்சொல்லுக்கு நான் கிட்டத்தெட்ட அடுத்த 20 வருஷம் வரை ஆளேனேன்னு உங்களுக்கு எல்லாம் சொல்லியா தெரியணும்? நானா இருக்கக்கொண்டு அந்த மாதிரி ஒரு கிராதக தங்கையுடன் ஒரே குடும்பத்தில் இருந்தேன். வேற யாராவது இருந்திருந்தால், உடனே டிக்கெட் வாங்கிண்டு செல்வராகவன் படத்துக்கு போயிருப்பாங்க!

இப்படித்தான் ஒரு நாள் சாயந்திரம் பப்பிள்கம் வாங்கிண்டு வந்து மென்னுண்டு இருந்தோம்.. டீவீ பார்த்துட்டு, டின்னர்க்கப்புறம் நான் துப்பிட்டு படுத்துண்டேன். இது என்ன பண்ணித்துன்னு தெரியலை. காத்தால இது முடியெல்லாம் தலைகாணியில ஒட்டிண்டு .. ஹாஹா..ஹேஹே.. ஹூ ஹூ.. ஹைய்ய்ய்ய்யா.. ஜாலி! அப்படீன்னு பி.எஸ் வீரப்பா ரேஞ்சுக்கு சிரிச்சுண்டேன்(மனசுக்குள்ளே தான்).

தி மதர் தெரஸா பயந்து ஓடி வந்து பார்த்தாங்க. என்னம்மா ஆச்சுன்னு ஒரே கவலை துக்கம். அது தலைகாணியை தலைமுடியில இருந்து பிய்க்க முயற்சி பண்ணிண்டு இருந்தது. ஒரே அழுகை. அது தூங்கறதுக்கு முன்னாடி பப்பிள் கம்மை துப்பலை. அதனால வாயில இருந்த பபிள் கம் தூக்கத்தில வெளியில வந்து ஈஷ் பூஷ்ன்னு தலைகாணிக்கும் அவள் தலைக்கும் கல்யாணம் பண்ணி வெச்சுடுத்து! இவள் முடியும் அந்த தலைகாணியும் இணை பிரியா கணவன் மனைவி ஆயிடுத்து.

ஆனா அம்மாக்கு கெட்ட புத்தி. அந்த அன்பு ஜோடியை பிரிச்சே தீரணும்ன்னு கத்திரிக்கோலை எடுத்துண்டு வந்து நறுக் நறுக்குன்னு சைடு வாக்குல தலைகாணியிடம் அன்பு கொண்ட முடியை வெட்டி விட்டுட்டாங்க.. மீதம் உருப்படியா இருந்த முடியில ஒரே ஈஷ் பூஷ்ன்னு பப்பிள்கம் ஒட்டிண்டு இருக்க, அதையெல்லாம் மஞ்சள் ஹேலோ ஷாம்பூ கொண்டு மூணு நாலு வாட்டி அலசி, இனிமேல் பப்பிள்கம்மே வாண்டாம்ன்னு ரொம்ப ஸ்ட்ரிக்டா ஆர்டர் போட்டாங்க.

அப்பெல்லாம் நாங்க ரெண்டு பேருமே ரொம்ப முடி கான்ஷியஸ். அய்யிய்யே.. என்ன இப்படி இருக்கு இவ முடின்னு ரொம்ப கிண்டல் அடிச்சேன். இதைக் கவனிச்சு ஆறே வயசுதான்னாலும் குமுறிக்குமுறி அழுதா.. என் நீண்ட முடியை பாத்து ஒரே வயத்தெரிச்சல் ஆஃப் தி! இத இத இதத்தானே நான் எதிர்ப்பார்த்தேன்?

நாள் பட, சைட்ல கொஞ்சூண்டு முடி ரொம்பவே அழகா காதுக்கிட்ட விழ ஆரம்பிச்சு அது ஒரு ஸ்டைலா ஆயிடுத்து. அப்புறம் என்ன பழைய படி அவளுக்குத்தான் மவுஸு.. நான்ஸென்ஸ்!!!

ரங்குவின் ஃபோட்டோகிராஃபிக் எக்ஸ்பர்ட்டீஸ்

ரங்குவின் ஃபோட்டோகிராஃபிக் எக்ஸ்பர்ட்டீஸ்

அதாவது, சின்னவயசுலேந்தே எனக்கு ஃபோட்டோல 'விழறது'ன்னா ரொம்ப ஆசை.

ஃபோட்டோக்கள்ல இருக்கறதை  குறிக்க, பல மொழிகளில் பல மாதிரி verbs வரும். மஹா சுவாரஸ்யம். ஃபோட்டோவுல ’விழறது’ எண்பதுகளின்  சொலவடை. தெலுங்கில் , “ஃபோட்டோ திகுதாமா?” ஃபோட்டோவில் ’இறங்கலாம்’, ஃபோட்டோவில் இறங்கினான்.. இப்படி ‘இறங்கறது!’ இந்தியில் ஃபோட்டோ கீஞ்ச்ச்னா, ஃபோட்டோ லேனா.. எடுக்கறது, இழுக்கறது..  :) இண்ட்ரெஸ்டிங் ரைட்? வேற ஒரு பஜிவுல இதை அலசலாம்.

இந்த கல்யாணங்கள்ன்னா மாப்பிள்ளை அழைப்பு கார் ஊர்வலத்துல மாப்பிள்ளை பக்கத்துல போய் உக்காந்துப்பேன். அப்பெல்லாம் மொத்தம் ஒரு மூணு ஃபோட்டோ எடுப்பா. அதுல மாப்ப்பிள்ளை அழைப்பு ஊர்வலமும் ஒண்ணு.

போகட்டும். பொண்ணாத்து சைடுன்னா பந்தில உக்காண்டு இருப்பேன். விடியோ எடுப்பாளேன்னு. வாயை ஹிப்போப்போட்டமஸ் மாதிரி திறந்துண்டு போஸ் கொடுக்க வேண்டீது,, எம்பாரஸ்மெண்ட் இல்லியோன்னு கொஞ்சமாவது சூடு சுறணை. ம்ஹூம். அப்பாவி ஜனங்கள்.

நமக்கே நமக்குன்னு ஒரு பதி தேவ் வந்தாச்சு. இனி நாம இஷ்டப்பட்டாப்ல ஃபோட்டோல்லாம் அவர் எடுப்பார்ன்னு ரொம்ப ஆசையா தான் கல்யாணம் பண்ணிண்டேன். என் மச்சினர்கள் எல்லாருமே அருமையான கலைக்கண்ணோட்டம் உடையவர்கள். ஒருத்தர் ப்ரொஃபஷனல் ஃபோட்டோகிராஃபர். அவ்ளோ நயமா எடுத்துக் கொடுப்பார். இவரும் இருக்காரே! ராமா.. இன்னி தேதி வரை, ஒரு ஃபோட்டோன்னா ஒரு ஃபோட்டோ சரியா எடுத்ததில்லை.

எடுக்கும்போதே அம்பது ஃபோட்டோ எடுப்பார். ”ஒண்ணாவது தேருமோன்னு ஒரு நப்பாஷை தாம்மா”ம்பார்!
”ம், அம்பதுல ஒண்ணு கூட இல்லியேன்னா?” அதுக்கப்புறம் எழுதும் படி இல்லை வர்த்தமானங்கள்.

ஒரு ஷாட்டை மீடியமா எடுக்கணும்ன்னு நாம நினைச்சுண்டு இருப்போம். இவரானா லா..................................................ங் ஷாட்டா எடுத்து வைச்சிருப்பார். நானே ஒரு புள்ளி மாதிரி தெரிவேன்ன்னா பார்த்துக்குங்கோளேன்?

கொஞ்சம் சாதாவா எடுங்கோன்னா, என்னிக்கி கதகளி மேக்கப் மாதிரி மையெல்லாம் அழிஞ்சு கோரமா இருக்கேனோ, அன்னிக்கீன்னு க்ளோஸப்பா எடுத்து வைச்சிருப்பார். அருண் வருண் சாப்பிடல்லைன்னா வாட்ஸப்பில அனுப்பி சாப்பிட வைக்கலாம். அம்மா எப்போவும் இவரைத்தான் கேக்கறா ஃபோட்டோ எதுவும் எடுத்தேளா இன்னிக்கீன்னு. அந்த அழகுல இருக்கு நிலவரம்

நெக்ஸ்ட், ஷேக். ஒரு ஃபோட்டோ கூட கையை ஆட்டாம எடுத்ததேயில்லை. இந்த உக்கந்துண்டே சிலர் காலை ஆட்டிண்டே இருப்பாளே? (எங்கவ்வா, வீடே ஆடிப்போயிடும்ன்னு சொல்லுவா) ஸேம் சிண்ட்ரோம். இவருக்கு கை ஆடிண்டே இருக்கும் போல்ருக்கு. சமஸ்த்த ஃபோட்டோக்களும் ஷேக் மயம். இவர் துபாய்ல இருந்தா? ஃபோட்டோக்களும் ஷேக்காவா இருக்கணும்? காட் நோஸ் (ரோலிங் ஐஸ்)

அப்புறம் ஃபோட்டோக்கு முக்கியமா வேண்டியது ஃப்ரேம் பார்க்கறது. லெவல் பாக்கறது. இவர் மண்டை மட்டும் ஃபுல்லா வரும். என் பாதி கண்ணு மட்டும் இருக்கும். முகம் கட். இப்பிடில்லாம் தான் எடுப்பார்.

ஒரு ஃபோட்டோ எடுக்கறோமே, முடி அட்ஜஸ்ட் பண்ணனுமா? நெக்லஸ் பெண்டண்ட் ஓக்கேவா இருக்கா? ஜிமிக்கி கோணிண்டு இருக்கா? வகிட்டு குங்குமம் மறுபடியும் வெச்சுக்கணுமா? நெத்தில எண்ணெய் பேட்ச் இருக்கா? ஐலைனர் ஸ்மட்ஜ் ஆயிருக்கா? சாரி ப்ளீட்ஸ் முன்ன பின்ன இருக்கா? ஒண்ணும் பார்க்கறதில்லை. அப்படியே பிஸி ஸ்ரீராம்ன்னு நினைப்பு எடுத்து தள்ளிடுவார். ஃபைனல் அவுட்புட் என்னமோ காமா சோமான்னு ஃபோட்டோ!

கிச்சன்ல நின்னுண்டு ஒரு செல்ஃபி எடுத்துக்கலாம்ன்னு நினைச்சு மேல கேமராவை புடிச்சுண்டு ஃப்ரேம் பார்த்தப்போ பயந்தே போய்ட்டேன். பேக்கிரவுண்டில் பரண். அப்படி ஒரு ஊழல்! செல்ஃபி எடுக்கும் ஐடியாவை கைவிட்டேன்.

ஆனா இவர் இருக்காரே, சரி அப்படியே எல்லாமும் பிக்சர் பெர்ஃபக்டா இருந்தா, பேக்கிரவுண்டில் கொசுவத்தி இருக்கும், துவைச்சு காய்ஞ்ச துணி மலை இருக்கும். சுருணை இருக்கும், நாலு பிளாஸ்டிக் கவர் இருக்கும். டோர்மேட் மடிஞ்சிருக்கும். ஸ்க்ரீன் சுருக்கு மாட்டிண்டு இருக்கும். ரெண்டு கரண்டி நாலு ஸ்பூன் ஒரு காபி டம்ப்ளர் டபரா,  அவிழ்த்து போட்ட பனியன் இருக்கும்.  ஒரு பிளாஸ்டிக் பக்கெட், ஒரு மக், ஒரு டூத் பிரஷ், ஒரு மாய்ஸ்சரைஸிங் க்ரீம், ரெண்டு சீப்பு, ஒரு காய்ஞ்சு போன தாம்பூலம், நமுத்து போன பிஸ்கட் பாக்கேட்,  தூரக்க ஜட்டி இருக்கும்! நாராயணா.. கொஞ்சம் கலைக்கண்ணோட்டம் வேண்டாம்? இப்பிடியா ஃபோட்டோ எடுப்பா?

இன்னிக்கி NGSல “ எங்களையெல்லாம் ஒரு ஃபோட்டோ எடுங்கோ”ன்னு சொன்னேனா? ஃபோட்டோ எடுக்கறேன்னு சொல்லிட்டு ரொம்ப நேரம் எடுத்துண்டே இருந்தார். என்னாச்சுன்னு போய் பார்க்கறேன், ஓவரா பவர் பட்டனை அழுத்தி ஃபோனையே ஆஃப் பண்ணிட்டார். இந்த அழகுல உன் ஃபோன்ல டச் ஒர்க்காகலைன்னு பீலா வுட்டிங்ஸ். ப்ளடி பிட்பாக்கேட் ரங்ஸ்! ஆன் பண்ணி பாக்கறேன், ஃபோட்டோவையும் காணோம் ஒண்ணையும் காணோம்

இருட்டுல ஒரு க்ருப்பி  எடுத்து எல்லார்கிட்டேயும் வாங்கிக்கட்டிண்டேன்.

மூன்றாம் பிறை நட்புக்கள்

மூன்றாம் பிறை நட்புக்கள்

போடி ஒண்ணாங்கிளாஸ் ஃப்ரெண்டு சங்கெய்ராஜ் ஹிண்டு நர்ஸரி & பிரைமரி ஸ்கூல் ஃப்ரெண்டு. அவன் ரொம்ப நல்லா படிப்பான். போடிலேந்து அப்பா கூட விஜயவாடா போனதுனால அவன் ஃப்ரெண்ட்ஷிப்பை இழந்தேன்.

ஃபணி பூஷன், ஸ்ரீலக்ஷ்மி, ஸ்வர்ணலதா இவங்க என்னுடைய பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ் விஜயவாடா வரை. அப்பாக்கு ஹைதரபாத் ட்ரான்ஸ்ஃபர் ஆச்சு அவங்களையும் இழக்க வேண்டியதா போச்சு. ஸ்ரீலக்ஷ்மி எனக்கும் நான் அவளுக்கும் ஹைதிராபாத் வரைக்கும் லெட்டர் எழுதிண்டு இருந்திருக்கோம்.

அதுக்கப்பறம் ஆனந்தி லக்ஷ்மி. லக்ஷ்மி அதி மதுரமான ஜாலி நட்பு. ஹோஸூர்ல படிக்க போய்ட்டா. அவளும் கட்!

வந்தனா ஷர்மா அப்பா பேங் குவாட்டர்ஸில் ஃப்ரெண்ட். ரொம்ப காலம் வரைக்கும் லெட்டர் எழுதினோம். அவங்கப்பாவுக்கும் ட்ரான்ஸ்ஃபர் ஆகி டெல்லி போய்ட்டாங்க. இப்போ டச்ல இல்லை.

நான் சொல்றதை நீ எதுவும் ஃபாலோ செய்யறதே இல்லை, இனிமேல் கன்ஸல்டேஷன்னா ஐஞ்சு ரூபாய் கொடுன்னு புது டெக்னிக்கில்  என்னை திருத்த முயற்சி பண்ணின சுகன்யா சத்தியமா அபூர்வமான ஃப்ரெண்ட்! அவளும் கடந்து போயாச்சு.

ஸ்ரீனி - அபூர்வமான நட்புன்னா அவந்தான். எல்லாம் சரியாகி நல்ல காலம் பிறக்கும்ன்னு எப்போவும் எனக்காக ப்ரே பண்ணுவான். மெய்ல் அனுப்புவான். இப்போ ஐயா கொஞ்சம் பிசி. குடும்பஸ்தன் ஆகிட்டான்.

ஸ்வப்னா வர்கீஸ் பெங்களூர்ல பூத்த நட்பு. படு க்யூட், ஜாலி கேள். அவளோட பெங்க்ளூரில் சுத்தியது மறக்கவே முடியாது. ஆட்டோல எல்லாம் உரக்க பாட்டு பாடுவோம் லூசு மாரி!

சரத் இவனை மாதிரி ஒரு ஃப்ரெண்டு கிடைக்க என்ன தவம் செய்தனைன்னு தான் நினைச்சுக்கணும். படு க்யூட்ன்னா படு க்யூட்! என்னிக்கும் என் லிஸ்டுல இவனும் இவன் லிஸ்ட்ல நானும் உண்டு.

அப்றம் நம்ம மகேஷ். அவந்தான் இந்த பொன்னியின் செல்வன் பார்த்திபன் கனவெல்லாம் படிக்க சொல்லி உயிரை வாங்கி ப்ளாக்லாம் ஆரம்பிக்க சொல்லி, நான்லாம் எழுதி தமிழ்ச்சேவை பண்ணிண்டு இருக்கேன்! பகவானே! தம்பி இப்போ ஒரு வாட்சப் க்ரூப்ல பல ஃப்ரெண்டிக்களோட போனாப்போறதுன்னு என்னையும் சேர்த்து,  அதுல அளந்து விட்டுண்டு இருக்கான்.

அப்பறம் முக்கியமா இன்னும் ஒரு சிலர்.

ஏன் மூன்றாம் பிறைன்னா நம்ம லைஃப்ல ரொம்பவே சில நாட்கள் தான் ஆக்டிவா இருப்பாங்க ஆனா மிகப்பெரிய தாக்கத்தை உண்டு பண்ணிடுவாங்க. அந்த நினைவுகளை அசை போட்டே சந்தோஷப்பட்டுண்டு இருப்போம். அவங்க கூட செலவழிச்ச நேரமும், சிரிச்சதும், பாடினதும் அழுததும் நினைவுக்கு வந்துண்டே இருக்கும்.

ஹ்ம். இன்னைக்கு ஃப்ரெண்ட்ஷிப்டேல்லாம் இல்லதான். ஆனாலும் எல்லாரையும் நினைச்சுக்க இந்த போஸ்ட் ஒரு வடிகாலா இருக்கே!

I miss you all my dear ones!

 (இப்போ ரஸ்னா வந்து நான் உன் ஃப்ரெண்டு இல்லையா மைக்கேலும்பான், ராஸ்கோலு)
Related Posts with Thumbnails