வழக்கமாக எப்போதாவது அழைத்துப் போக வரும் cab டிரைவர்கள் நினைவில் இருப்பதில்லை. அதிகாலை நான்கு மணிக்கே ஃபோன் செய்து ஐந்து மணிக்கு வருவதாக சொல்லி, ஐந்தரைக்கோ ஐந்து நாற்பதுக்கோ வருவார்கள். நாம் கிளம்பி செருப்பெல்லாம் போட்டுக்கொண்டு கீழே காத்துக்கொண்டிருப்போம். சிலர் ஐந்து இருபது என்றுவிட்டு ஐந்து மணிக்கே ஐந்து பேர்களை அழைத்துக்கொண்டு வந்து காத்திருப்பார்கள். நாம் அப்போது தான் இந்த குர்த்தாவின் பேண்ட் எங்கே தொலைந்தது என்று தேடிக்கொண்டிருப்போம். அதே மிஸ்டு கால், அதே மத்திய கைலாஷில் திரும்பும் ரோலர் கோஸ்டர் வேகம். யார் என்னவென்று பெரிதாக ஒன்றும் நினைவிருக்காது அவர்களை.
இன்றும் அப்படித்தான். தினேஷ் என்று ட்ரூகாலர் சொல்லியது. சுமார் 24 வயதிருக்கலாம். கண்ட்ரோல்டு ட்ரைவிங் திறன். எவ்வளவு வேகமெடுத்தாலும் சரேலென்று அதிக ஜெர்க்கில்லாமல் பயணிகளையும் துன்புறுத்தாமல் நிறுத்திவிடுவார். தேவைக்கதிகமாக ஒரு வார்த்தை பேச்சு கிடையாது.
தி நகர் உஸ்மான் ரோடு சர்வீஸ் லேனில் நகைக்கடைகள் வழியாக போய் டெர்மினஸ் பின்னால் ஒரு பெண்ணை ஏற்றிக்கொள்ள வேண்டும்.
ஈரத்தலையை க்ளிப் போட்டுக்கொண்டு, பைக்குள் இயர் ஃபோனை தேடிக்கொண்டே வெளியில் பார்த்தேன்.
இந்த சர்வீஸ் லேன் இருக்கிறதே.. மகா தொந்திரவு. பிக்கப்புகளும், வண்டிகளும், ஆட்டோக்களும் ஆக்கிரமித்துக்கொண்டு அடுத்தவர்களை கஷ்டப்படுத்துவதில் படு திறமை. இது போறாதென்று பொதுமக்களும் இஷ்டத்துக்கு நடப்பார்கள். இரு சக்கர நாற்சக்கர வண்டிகள் அடுத்தடுத்த சந்துகளின்று சரேல் சரேனென்று திரும்பும். சம்பந்தமேயில்லாமல் கார்கள் நிற்கும். நான் ஓட்டினால் படு கோபமாக ஹார்ன் அடித்துக்கொண்டே தான் மிக அக்ரெஸிவாக போவேன்.
என்ன இது சர்வீஸ் லேனில் தினேஷ் இவ்வளவு மெதுவாக ஊர்ந்து செல்கிறாரே என்று பார்த்த போது தான் புரிந்தது.
முன்னால் ஒரு மீன் பாடி வண்டி முழு லோடுடன் ஒருவர் அழுத்த முடியாமல் அழுத்தி சென்று கொண்டிருக்கிறார். தினேஷ் ஹார்ன் அடிக்க கைகளை நகர்த்தி திடீரென்று பின்வாங்கி அமைதி காத்தார். மீன்பாடி மெதுவாக, மிக மெதுவாக சர்வீஸ் லேனிலிருந்து நகர்ந்து மெயின் ரோட்டில் கலந்ததும் சரேலென்று வேகமெடுத்து சில மைக்ரோ நொடிகளில் அடுத்த பாய்ண்ட்டில் நின்றது. ஆச்சர்யபட்டேன்.
கொட்டும் மழையில் கோயம்பேட்டில் சாலையைக் கடக்க நினைத்த அத்தனை பேரும் தொப்பலாக நனைந்திருப்பதை பார்த்தும் சர்ர் சர்ரென்று நிறுத்தாமல் போன வண்டிகளை நினைத்து பார்த்த போது தினேஷ் வித்தியாசமானவராகத்தான் தெரிந்தார்.
சட்டென்று தினேஷ் மேல் மரியாதை அதிகரித்து . நெகிழ்தேன்.
இனி தினேஷை மறக்க மாட்டேன். எல்லோரிடமும் கற்க நிறைய்ய இருக்கிறது.