Pages

Sunday, January 31, 2010

சினிமாப்பக்கம்

சினிமாப்பக்கம்


போன வாரம் நிறைய படங்கள் பார்த்தோம்.

வார இறுதியில் கோபாலண்ணா வந்திருந்தார். ஹிந்திப்படம் சீ டி எடுக்கலாம் என்றதும் அலறி அடித்துக்கொண்டு மறுத்தார். அவருடைய டீனேஜ் குழந்தைகளால் தான் அந்த அலர்ஜி. இப்போ வெளியாகும் ஹிந்திப்படங்களில் எப்போப்பாரு கன்னா பின்னா டான்ஸ் தான் இடம்பெறும் வேண்டாமே என்று மன்றாடினார். அவரை தாஜா பண்ணி, கடைக்கு கூட்டிண்டு போயி, மதுர் பண்டார்கரின் ஜெயில் என்ற படம் எடுத்தோம். கடைசி வரை அண்ணா, ”ஹிந்திப்படம் வேணாம், என்னை விட்றுங்க” என்று கெஞ்சினார். ம்ஹூம், நாங்க விட்டாத்தானே?
படம் போட்டப்புறம், அண்ணா முழுதும் ஒன்றிவிட்டார். நீல் நிதின் முகேஷின் நடிப்பில் லயித்துவிட்டோம். இந்தப்பையனுக்கு நவரசமும் எப்படி இவ்ளோ அனாயாசமா வருகிறது?முதலில் இவர் பழம்பெரும் வில்லன் நடிகர் தலீப் டாஹெரின் மகனாக இருக்கலாம் என்றே நினைத்தோம். இவர் ராஜ்கபூருக்கு பாடிய முகேஷின் பேரன் என்பது தெரிந்து ரொம்ப ஆச்சர்யப்பட்டோம்.  மதுர் யதார்த்த டைரக்டர் வேறு. பாலிவுட் ஃபார்முலாப்படி ஒரு அரைகுறை டான்ஸ் மட்டும் தான் வைப்பார் இவர். (படத்தை விக்கணுமே, மன்னித்தேன்.)மத்தப்படி பாலிவுட் அம்சங்களா? மூச். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கதைக்களம் எடுத்துக்கொண்டு பிச்சு உதறுவார். சாந்தினி பார், பேஜ் 3, கார்ப்பரேட், டிராபிக் சிக்னல், ஃபேஷன், இந்த வழியில் இப்போது ஜெயில். முதலில் நான் கொஞ்சம் பயந்துகொண்டு தான் இருந்தேன். வழக்கமான மதுர் படங்களெல்லாம் உள்ளது உள்ளபடி தோலுறித்து காட்டிவிடுவார். போதாக்குறைக்கு நம்ம மிகைப்படுத்தப்பட்ட மசாலாப்படங்களில் காட்டப்படும் ஜெயில் வன்முறையெல்லாம் இதிலும் இருக்குமோ என்று கொஞ்சம் டென்ஷன் இருந்தது. நல்ல வேளை. ஜெயிலில் வன்முறை எதுவும் இல்லை. மனித உணர்வுகளை சரியாக பிரதிபலிக்கும்படியாக அழகா எடுத்திருக்கார். நான் நினைக்கறேன், இந்த மதுரிடம் ஒரு குண்டூசியைக்கொடுத்து இதைப்பத்தி படம் எடுங்கன்னு சொன்னாக்கூட எடுத்துவிடுவார் போல இருக்கு, மனிதரிடம் அவ்வளவு திறமை இருக்கிறது.மலையாள இயக்குனர் பிளெஸ்ஸி என்றால் என் கணவருக்கு அதீத ஆர்வம். இந்த இயக்குனரின் ரெண்டு படங்கள் பார்க்க முடிந்தது.சமீபமாக ’பிரமரம்’ டீவீடீ காபிடல் வீடியோஸில் கிடைத்தது. பிரமரம் அருமையான படம். ஒரு எக்ஸண்ட்ரிக் மனிதனின் கதையை மிக அழகாக நயத்துடன் சொல்லி இருக்கிறார், ப்ளஸ்ஸி. கூடவே அழகான கேரளத்தை இன்னும் அழகுடன் காட்டிய அஜயன் வின்சென்டுக்கு உஜாலா ஃபில்ம்ஃபேர் அவார்டு கிடைத்தது.மீண்டும் மீண்டும் மோஹன்லால் ‘என்னை மிஞ்ச முடியுமா’ என்று நினைவு படுத்தும் படம். பாதிபடத்தின் போதே படத்தின் சஸ்பன்ஸ் ஊஹிக்க முடிவதாக இருப்பது தான் நெருடல். ஆனால் ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட மனிதனின் உணர்ச்சிகளை மிக அலட்சியமாக நடிக்க முடிந்தது, லாலின் திறமையேயன்றி வேறில்லை. எல்லோரும் படத்தில் கச்சிதமாக ஒட்டுகிறார்கள், பூமிகாவைத்தவிற. சம்பந்தமே இல்லாமல் அவர் உடல்மொழியும், அவர் இருப்பும் படத்திற்கும் அவருக்கும் ஒரு கனக்டிவிட்டி இல்லை. தேவை இல்லாமல் பூமிகாவை போட்டாச்சே என்றொரு பாட்டு. யூ டூ ப்ளெஸ்ஸி? பல இடங்களில் இந்த காட்சி எதற்கு என்ற குழப்பம் ஏற்படுவது தவிர்க்க முடியவில்லை. நடுவில் ஃபைட் எல்லாம் - சாரி ப்ளெஸ்ஸி.இதே இயக்குனரின் இன்னொறு மிக ஆவலாக எதிர்பார்த்த படம் கல்கத்தா நியூஸ். குடியரசு தினத்தன்று ஏஷியனெட்டில் காட்டினார்கள். கஷ்டம் கஷ்டம். பல நல்ல படங்களை எடுத்த ப்ளெஸ்ஸியா இப்படி ஒரு சொதப்பல் படத்தை எடுத்தார் என்று என்னால் நம்ப முடியவில்லை. படம் முதலில் அருமையாக ஆரம்பிக்கிறது. ஏனோ நேரம் போகப்போக வெவ்வேறு ட்ராக்குகளில் பயணித்து கடைசியில் ஒரேடியாகக் குட்டையைக்குழப்பி.. யப்பா. முதலில் சமூஹ அக்கறை படம் என்று தான் நினைத்தேன். அடுத்தடுத்த காட்சிகளில் யூத் படம் என்று தோன்றியது, போகப்போக, மாயாஜால பேய்ப்படமோ? அல்லது அன்னியன் மாதிரி சைக்கோலாஜிக்கல் திரில்லரோ? என்றெல்லாம் குழம்பி, என்னை மாதிரி ஒரு சராசரி பார்வையாளரைக்கூட திருப்தி படுத்த முடியாத மெகா சொதப்பல் படம் என்பது தெரிந்தது.எல்லாப்படங்களிலும் மீரா ஒரே மாதிரி நடிப்பதை தவிர்க்க வேண்டும். அதிலும் இந்த படத்தில் ஒரு பெண் புதிய நகரத்தில் எக்கசெக்கமாக மாட்டியும் அதே ’ஹேப்பி கோ லக்கி’யாக திரிவது ஒன்றும் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை.எல்லா படங்களிலும் கலாட்டா கிங்காக வரும் திலீப் இதில் அடக்கி வாசித்து இருக்கிறார். எனக்கு மட்டும் இவரைத்தவிர வேறு யார் நடித்திருந்தாலும் நன்றாகவே இருந்திருக்கும் என்றே பட்டது. மீண்டும் சாரி மீரா, சாரி பிளஸ்ஸி. இனி ப்ளெஸ்ஸி படங்கள் எல்லாம் ரிவ்யூ பார்த்துவிட்டு தான் எடுக்க வேண்டும். நெட்டில் இந்த ரெண்டு படங்களும் நாரி இருக்கின்றன. இந்த விமர்சனம் அதன் பாதிப்பு அல்ல. அதிலும் பிரமரம் எனக்கு ஓக்கே.ஆனா கல்கத்தா - யப்பா..தேவையே இல்லாமல் 2 தெலுங்குப்படம் பார்த்தோம். கொத்தபங்காரு லோகம் & சிந்தகாயல ரவி. யாராவது சொல்லக்கூடாதாப்பா? வடிவேலு போல ஆள்காட்டி விரலை கண்களுக்கு நேரே வைத்துக்கொண்டு ”பாப்பியா பாப்பியா” என்று கேட்டுக்கொள்ள வைத்தன இவ்விரண்டு படங்களும். ரொம்ப நொந்துட்டோம். இந்தப்படங்களுக்கெல்லாம் என்னால விமர்சனம் எழுத முடியாது. மஹா த்ராபை. சிந்தகாயல ரவி பார்த்த பிறகு தான் தென்றலின் அறிமுகம் கிடைத்தது. இல்லாவிட்டால் ஒரு டிசாஸ்டரை தவிர்த்திருக்கலாம். இந்த தெலுங்குப்படம் எடுப்பவர்கள் திருந்தவேண்டும். இப்படி மொக்கைகள் எடுக்கும் இவர்கள் ஊரில் நாடோடிகள் சக்கைபோடு போடுகிறதாம். அட, பராவாயில்லையே..ஆயிரத்தில் ஒருவன் பார்த்த கையோடு, நான் செய்த முதல் ’காரியம்’ மோஹினித்தீவு என்ற கல்கியின் கதையைப்படித்தது தான். சில பல சைட்டுகளில் இந்தப்படம் கல்கியின் மோஹினித்தீவு என்ற கதையை தழுவியது என்றபடியால், அதை டவுன்லோடு செய்து ஒரே சிட்டிங்கில் படித்து முடித்தேன்.என்ன ஒரு ரிலீஃப்.. ஆஹா.. இதையே படமாக எடுத்திருக்ககூடாதா என்று என்னை ஏங்கவைத்தது அந்த ஹிஸ்டாரிக்கல், திரில்லர். அடுத்தகட்டமாக மகதீரா டவுன்லோடு செய்து பார்த்தேன். இந்த ஆயிரத்தில் ஒருவனுக்கு மகதீரா எவ்வளவோ தேவலாம். சில பல விட்டாலாச்சார்யா காட்சிகள், அபத்தமான லாஜிக் இடிபட்டாலும் இந்தப்படத்தை பற்றிய மஹேஷின் பதிவைப்படித்தபடியால் நான் கிராபிக்ஸ் காட்சிகளையே அதிகம் எதிர்நோக்கி இருந்தேன். என்னை ஏமாற்றவில்லை என்றே சொல்வேன். மகதீரா நிஜமாகவே மாவீரன் தான்.தும் மிலே என்ற படத்தை ஈ வியூவில்(Movie on Demand) அடிக்கடி காட்டி, ”பைசா கட்டு, படத்தை பாரு” என்று கூவிக்கூவி விற்றுக்கொண்டு இருக்கிறார்கள். பெரும்பாலும் இந்த ஈ வியூவில் பாடாவதி தான் இடம்பெறும். ஆனால் இந்த சோஹா கான் மேல் (மும்பை மேரி ஜான்னுக்கு பிறகு) எனக்கு கொஞ்சம் நம்பிக்கை ஏற்பட்டு இருந்தது.சரி இந்தப்படத்தை விட்டுவைப்பானேன் என்று பார்த்தோம். சுத்தமாக தேரவில்லை. எப்போ படம் முடியும் என்று காத்திருக்கச்செய்த்து. ஓவராக அமரிக்க கலாச்சாரம் எரிச்சலூட்டியது. மும்பாய் வெள்ளத்தை வைத்து எடுக்கப்பட்டது என்ற போதினும் நகம்கடிக்க வைக்கும் காட்சிகள் இல்லை. சும்மாங்காச்சுக்கும் ரெண்டு பேரை தண்ணீரில் அலைய விட்டு கடுப்பேத்துகிறார்கள்.
Thursday, January 28, 2010

கேமராவை மீட்ட சுந்தர மாறன்

மாறன் என் தங்கை கணவர் சேகரின் கார் டிரைவர். ஒவ்வொரு முறையும் ஊருக்கு போகும்போதும் சேகரிடம் இவரைப்பற்றி புகழாமல் இருந்ததில்லை. சென்னையின் கோரமான டிராஃபிக்கில் லாவகமாக வண்டி ஓட்டுவது மட்டுமல்லாமல் வெளியிடங்களுக்கு போகும்போது என் தங்கையின் ரெண்டு வாலுகளையும் பார்த்துக்கொள்ளும் பொறுப்பான ஊழியர்.என் மிக மிக முக்கியமான நண்பன் சரத் என் திருமணத்தில் தந்த பரிசுப்பொருள் என் அன்பான கேனன் டிஜிடல் கேமரா. அது லிக்விட் ஸ்பில்லேஜினால் வேலை செய்யாமல் போகவே, தங்கை அதை சரி செய்து தருவதாக கூறி இருந்தாள். இப்போது அந்த கேமராவின் கதை தான் நான் சொல்லப்போவது.ரிப்பேர் செண்டருக்கு எடுத்துகொண்டு போக நேரம் பார்த்துக்கொண்டிருந்த என் தங்கை, அதை அலமாரியின் ஓரத்தில் இந்த அருண் வருண் கையில் கிடைக்காதபடி வைத்திருந்தாள். சில நாட்களில் அது காணவில்லை. அம்மா என்னிடம் தேடி எடுப்பதாக கூறினார். ஏனோ அது கிடைக்கவில்லை. நானும் இந்த விஷயத்தை மறந்துவிட்டேன். இன்று என் தங்கை வாய்ஸ் சாட்டில் உனக்கு ஒரு சஸ்பன்ஸ் திரில்லர் கதை சொல்லப்போறேன் என்ற பீடிகையோடு தான் ஆரம்பித்தாள். வழக்கம்போல இந்த முன்னுரையினால் நான் பதற சிரித்துக்கொண்டே அவள் சொன்ன கதை இது தான்.வீடு பூரா தேடியும் அந்த கேமரா காணவில்லையாம். எங்கே போனது என்று குழம்பியவாறே இவர்கள் இருந்த போது, குழந்தைகளின் பிறந்தநாள் பார்ட்டியின் போது படம் எடுத்த ஃபோட்டோகிராஃபர் (நிஜம்மாவே இந்த இடம் சினிமா மாதிரி தான் இருக்கு!!!!) வந்தாராம். மேடம், சார் நம்பர் தர்றீங்களா என்று கேட்டு வாங்கிக்கொண்டு போனாராம். ஃபோட்டோ எடுத்தாச்சே, சீடீயும் கொடுத்தாச்சு, இன்னும் இவருக்கு சார் நம்பர் எதுக்கு என்று நினைத்திருக்கிறாள் தங்கை. அன்று இரவு சேகர் வந்த போது விஷயம் தெரிந்திருக்கிறது. எவனோ ஒருத்தன் ஒரு கேமராவைக்கொண்டு வந்து நம்ம ஃபோட்டோகிராஃபரிடம் கொடுத்து இருக்கிறான். அதை சரிசெய்யும்படி கேட்டிருக்கிறான். மெமரி கார்டை ஸ்கான் செய்து பார்த்த போது அதில் குழந்தைகள் படமும் மற்ற படங்களும் இருக்க, அவருக்கு என்னமோ சந்தேஹம் வந்திருக்கிறது. அதைக்கூற தான் சேகரின் நம்பர் கேட்டிருக்கிறார். மஹானுபாவன் சேகரிடம் உங்க வீட்டுல எதாவது கேமரா தொலைந்து போயிருக்கிறதா என்று கேட்டிருக்கிறார். ஆச்சிர்யப்பட்டு சேகர் விஷயத்தை அவரிடம் கூற, அவர் தான் தகவல் சொல்லி இருக்கிறார். சேகரும் கேமரா கொண்டு வந்த ஆள் எப்படி இருந்தான் என்று கேட்க, மூக்கில் பெரிய மச்சம் (!!!!) இருந்ததாக கூறி இருக்கிறார். இந்த இடத்தில் தான் டிபிகல் சினிமா டச். ஒருவேளை அந்த ஆளுக்கு மூக்கில் மச்சம் இல்லாமல் போயிருந்தால்? கேமராவுக்கு எள்ளு தான். சரி மேலே போவோம். மூக்கில் மச்சம் என்றவுடன் என் அதிசூட்சும தங்கை சரியாக கண்டுபிடித்து விட்டாள். அது இவர்கள் வீட்டில் குழந்தைகளை பார்த்துக்கொண்டு இருந்த லதா என்ற பெண்ணின் கணவனாம்!!!அப்போ அவள் தான் காமெரா திருடி இருக்கிறாள். அவர்கள் சொந்தக்காரர்கள் எல்லாரும் பெரும் அரசியல் செல்வாக்கு உடையவர்களாம். அதனால் போலீஸுக்கு போனால் நமக்கு தான் பிரச்சினை வரும். வேண்டாம் என்றிருந்திருக்கிறார்கள். என் தங்கைமட்டும் கொதித்திருக்கிறாள்.மறுநாள் ஏதோ பேச்சுவாக்கில் விஷயத்தை மாறனிடம் சொல்லி இருக்கிறாள். மேடம், இதை நான் ஹாண்டில் பண்ணட்டுமா? என்றிருக்கிறார். இவளும் பெரிய நம்பிக்கை வைக்காமல் சரி என்றாளாம். ஒரு ரவுண்டு எங்கோ போய்விட்டு திரும்பிய மாறனின் கையில் என் கேமரா இருந்ததாம்!!!மாறன் செய்தது இது தான். அந்தப்பெண் வீட்டிற்கு சென்று, சாதாரணமாக பேசி இருக்கிறார். அவளும் என்ன எப்படி இருக்கிறாய் என்றெல்லாம் கேட்க, ”ஒரே பிரச்சினைக்கா. அவுங்க வீட்டுல போலீஸ் காரா வந்துகினு கீது. அவுங்க வீட்டுல ஹிட்டன்(!!!!) காமெரா செட் செஞ்சிருக்காங்க. என்னமோ பொருள் எல்லாம் காணாமபோச்சாம். அதெல்லாம் காமெரால ரெக்கார்டு ஆயிருக்காம்.  போலீஸ் வந்து ஒவ்வொருத்தரையா விசாரிக்கறாங்கக்கா. என்னையும் கேட்டாங்க, நான் உள்ளேயே வர்ல மேடம்ன்னிட்டேன்க்கா. அந்த திருடன் எட்த்த காமெராவ எதோ போட்டோ கடையில கொண்டுபோயிருக்கான் போலகுது, அது கம்பியூட்டர்ல போட்டவொடனே சார்க்கு எஸ்.எம்.எஸ் (!!!!!!) போய்கிது. அந்த எஸ்.எம்.எஸ் வந்த லொக்காலிட்டிய வெச்சு(!!!) , போட்டோ கடையையும் கண்டுபுட்ச்சிட்டாங்களாம்”.இப்படி அவர் சொல்லிக்கொண்டே இருக்கும்போது, திருதிரு என்று விழித்த அந்த பெண் வேகமாக உள்ளே போய், அந்த காமெராவை கொண்டு வந்து மாறனிடம் கொடுத்து, புத்தி கெட்டுபோய் எடுத்துட்டேன்ப்பா, மன்னிச்சுக்கோப்பா என்றாளாம். இது மட்டும் தான் நான் எடுத்தேன், என் புள்ள மேல சத்தியமா வேறேதுவும் எடுக்கலப்பா என்றும் சொன்னாளாம்.இந்த விஷயத்தை என் தங்கை சொன்ன போது என்ன இவள் ஏதாவது கதை எழுதுகிறாளோ என்று தோன்றியது. என்ன தான் சாதாரண டிரைவராக இருந்தாலும் மாறன் டெக்னிகலாக எவ்வளவு அட்வான்ஸ்டு பாருங்கள்? கொஞ்சம் கூட லாஜிக் பிசகாமல் ஒரு கதையைச்சொல்லி அழகாக என் கேமராவை மீட்டு வந்துள்ளார்.(சில இயக்குனர்களும் இருக்காங்களே- நான் செல்வாவை சொல்லவில்லை-அதுக்கும் சண்டக்கு வருவாய்ங்க) மாறன் ஒரு தீரன். நன்றி மாறன் - எனக்கு மிகவும் நெருங்கிய பொருளை மீட்டுக்கொடுத்ததற்கு.

எனக்கோசரம் இல்லாட்டியும் மாறனின் மதிநுட்பத்துக்கு தமிலிஷில் வோட்டு போடவும்.

Wednesday, January 27, 2010

கொதிக்கும் குழம்பும் பதினோறாவது வகுப்பும்

கொதிக்கும் குழம்பும் பதினோறாவது வகுப்பும்


குழம்பு கொதித்துக்கொண்டு இருந்தது. தேங்காயுடன் இன்ன பிற ஐட்டங்களை வறுத்து அரைத்த விழுதைப்போட்டு, கொதி வந்த பிறகு குக்கரிலிருந்த துவரம்பருப்பை எடுத்து கொதிக்கும் சாம்பாரில் போட்டேன். தள தள என்று கொதித்த சாம்பார் சட்டென்று அடங்கியது. மீண்டும் பழைய படி கொதிக்க சில நொடிகள் தேவைப்பட்டது. இதைப்பார்த்த எனக்கு திடீரென்று ஒரு ஃப்ளாஷ். புது பள்ளியில் முதல் நாள் வகுப்பில் சத்தம் போடும் மாணவர்களின் நடுவில் திரு திருவென்று விழித்துக்கொண்டு நான் போன போது எல்லோரும் எப்படி சட்டென்று என் பக்கம் பார்த்தவாறே அடங்கிபோனார்களோ, அதான் நினைவுக்கு வந்தது. (இதற்கும் என் கணவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை இங்கேயே சொல்லிவிடுகிறேன்.)
1991. மஹாகவி பாரதியார் நூற்றாண்டுவிழா பெண்கள் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஜாலியாக முக்கால்வாசி நாள், படிக்காமல், குணா, கேளடி கண்மணி, தளபதி, அமரன், ஊரு விட்டு ஊரு வந்து, புதுப்பாட்டு போன்ற படங்களில் இடம்பெற்ற பாடல்களை கேட்டும், குரூப் குரூப்பாக உட்கார்ந்து பாடியும் பொழுதைக்கழித்துக்கொண்டு இருந்தோம்.பத்தாவது போர்டு பரீட்சை என்ற காரணத்தினால் பீர் பிரஷரின் பேரில் பீதி அடைந்து, ஆனந்தி, லஷ்மி என்ற இரு தோழியரின் மோடிவேஷனில் துளி கூட விருப்பமே இல்லாமல் படிக்க ஆரம்பித்து, எல்லா பரீட்சையுமே சுமாரா எழுதி, மார்க்கும் அதே போல வாங்கி, கணக்கில் மட்டும் 100% (இதற்கு என் அம்மா ஈன்றதினும் பெரிதுவத்தார் என்பது குறிப்பிடத்தக்கது) வாங்கி தேறினேன். 1992 ஆம் ஆண்டிலும் இதே பள்ளியில் +1 காமர்ஸ் எடுத்துக்கொண்டு வின்னர் வடிவேலு மாதிரி வெட்டி சவடால் விட்டுக்கொண்டு திரியலாம் என்று மனப்பால் குடித்துக்கொண்டு இருந்தேன்..அம்மா போய்க்கொண்டு இருந்த தையல் கிளாஸின் ரூபத்தில் எனக்கு வந்தது வினை. ஏதோ ஒரு மாமியின் பெண்ணாம், அதுவும் பத்தாவது முடிச்சிருக்காம். என்.எஸ்.என் ல சேர்க்கபோறாங்க, ”அப்ளிகேஷன் வாங்கிண்டு வந்திட்டேன், நீ அங்கே தான் படிக்கணும்”-இது அம்மா. ”இது ரொம்ப கஷ்டம்மா, இந்த ஸ்கூல்ல இங்கிலீஷ்ல தான் பேசணும். என்னால முடியாதும்மா.ரொம்ப ஹை ஸ்டாண்டர்டு, சரிப்பட்டு வராதும்மா”-இது நான். அம்மா எதையும் கண்டு கொள்வதாக தெரியவில்லை.ஆச்சு, சேர்ந்தாச்சு. இரண்டு வருடம் பெண்கள் பள்ளியில் படித்த எனக்கு என்னமோ முதல் முறையாக என் வகுப்புக்குள் நுழையும் போதே அவமானமாக இருந்தது. அப்போதெல்லாம் managing change பற்றி நான் ஒன்றும் அறிந்திருக்கவில்லை.அங்கே ஏற்கனவே பத்தாவது படித்த மாணவ மாணவியர்கள், ஒருவரை ஒருவர் பார்த்து பேசிக்கொண்டு இருந்தார்கள்.நிறைய பேர், அழகாக சிவப்பாக இருந்தார்கள்.பெண்களில் பலர் அழகாக் முடி வெட்டி இருந்தார்கள். சிலர் கொஞ்சம் மேக்கப் எல்லாம் போட்டுக்கொண்டு வந்திருந்தார்கள். ஏகப்பட்ட பையன்கள் இருந்தார்கள். நல்ல வேளை அந்தப்பக்கமாக உட்கார்ந்திருந்தார்கள். அந்த பதின்மவயதினருக்கே உரிய இன்ஃபீரியாரிட்டி காம்ப்லெக்ஸ் எனக்கு மட்டும் சற்று தூக்கலாக இருந்தது. பிரேயர் முடிந்து தலையைக் குனிந்தால், லஞ்ச் பிரேக் வரை தலையைத்தூக்க மாட்டேன். அதாவது மிஸ்ஸைப்பார்ப்பேன் மற்ற யாரையும் பார்க்க அவமானமாக இருக்கும். புது இடம் வேறு. டீச்சர்கள் எல்லாம் வீட்டில் என்ன மொழி பேசுவார்கள் என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டேன். அவ்வளவு ஆங்கிலப்புலமை. மாணவர்களும் அப்படியே. (கவிதைபோட்டி எல்லாம் நடத்தினார்கள். அடியாத்தீ.. இங்கிலீஷ் ல கவிதையா? ஆடிப்போய்விட்டேன்.)முக்கால்வாசி புரிந்தாலும் கால்வாசி ஆங்கில பிரமிப்பு இருக்கும். ஆகா, என்னம்மா பேசுராங்க்ய என்றே தோன்றும். யாராவது என்னிடம் வந்து பேச முற்பட்டால் நெளிந்து வழிந்து ரொம்ப அவஸ்தை ஆகிவிடும்.


தினமும் வீட்டில் அம்மாவை குறை சொல்லுவேன். பழைய ஸ்கூல் எவ்ளோ கிட்டக்க இருந்தது. இது இப்போ இவ்ளோ தூரம் என்பதில் ஆரம்பித்து எதாவது சொல்லிக்கொண்டிருப்பேன். முதல் தோழி கவிதா தான். தினமும் அவளுடன் தான் அம்மா என்னை அனுப்புவார்.சைக்கிள் பழகலையாம். விழுந்துடுவேனாம். அவளுக்கு எச்ஸ்பீரியன்ஸ் இருக்காம். முதல் இரண்டு நாளில் அவளுடன் வேவ்லெங்த் செட் ஆகிவிட நிம்மதி பெருமூச்சு விட்டேன். அப்புறம் பிரியா, வித்யா, சுதா, சுபா,சுஜாதா, ஷங்கரி, ஜஸ்வந்தி இவர்கள் நேசக்கரம் நீட்ட கெட்டியாக பற்றிக்கொண்டென். பையன்கள் விஷயத்தில் பயமான பயம். கணேஷ்,கார்த்திகேயன்,தினேஷ் மட்டும் நன்றாக பேசுவார்கள். மற்றபடி பாக்கி மாணவர்களிடம் பழக 4-5 மாதங்கள் ஆயிற்று. ஏதோ ஒரு போட்டிக்காக எல்லோரும் கூடி ஆலோசித்த போது தான் நான் எல்லோரையும் விட ஒரு வயது மூத்தவள் என்று தெரிய வந்தது. அன்றிலிருந்து நான் தீதீ ஆனேன். தீதீன்னா ஹிந்தில அக்கா. எல்லா பையன்களும் என்னை அன்புடன் தீதீ என்றே அழைத்தார்கள்.அப்போதெல்லாம் பள்ளி வளாகத்தில் தீதீ என்றால் தான் திரும்புவேன்.

என் வாழ்நாளிலேயே மறக்க முடியாத இன்பமயமான கூடவே என்னை செதுக்கிய நாட்கள் அவை. அதெல்லாம் திரும்ப வருமா வருமா?

அந்த தினேஷ் பிரும்மஹத்தி எந்த நேரத்துல எனக்கு தீதீன்னு நாமகரணம் வெச்சானோ, இன்னிக்கு வரைக்கும் பாலாஜி, மஹேஷ் ,ஜிகர்தண்டா மூலம் அது தொடர்ந்துகொண்டே தான் இருக்கிறது.என்னைச்சுத்தி அக்கான்னு சொல்றதுக்கு ஒரு கூட்டம் இருக்கே, அதே போதும். தேங்க்யூ காட்.
 
சென்ற ஆண்டு இந்த குரூப்பில் சிலரை தினேஷ் வீட்டில் சந்தித்தது மறக்க முடியாத அனுபவம்.

இந்த எண்ணங்களின் வட்டதிலிருந்து நான் மீண்டபோது, குழம்பு மீண்டும் தளதளத்துக்கொண்டு இருந்தது.

Monday, January 25, 2010

மோஹனின் மொக்கைகள்

மோஹனின் மொக்கைகள்


என் கணவரின் அதிரடி மொக்கைகள் இந்தப்பகுதியில் இடம்பெறும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

ஊருக்கு போகும்போது ஏர் அரேபியாவில் ஷார்ஜாவிலிருந்து போனோம். வழக்கத்துக்கு மாறாக அந்த ஏர் ஹோஸ்டஸ் கடுகடுப்பான
முகபாவத்துடன் பயணிகளை வெறுப்பேற்றிக்கொண்டு இருந்தாள், மன்னிக்கவும் பணிவிடை செய்துகொண்டிருந்தாள்.

கஸ்டமர் சர்வீஸில் சிறிய சறுக்கல்களைக்கூட பொறுக்காத நான், ரொம்பக்கடுப்பானேன்.

ஏதோ டெக்னிக்கல் காரணங்களால் ஃப்ளைட் டிலே என்று காப்டனிடம் இருந்து தகவல் வர, ரிக்லைனர் போட்டுக்கொண்டு சாய்ந்து கொண்டேன். ஏற்கனவே நாள் முழுக்க அலைச்சல், அலுப்பாக இருந்தது. மணி 11 ஆகியும் ஃபிளைட் கிளம்பும் வழியாக தெரியவில்லை. தூக்கம் கண்ணை சுழற்றிக்கொண்டு வந்தது. ஒரு சொக்கு சொக்குவதற்குள் என்னமோ உலுக்கி விழுந்து எழுந்தேன். அந்த ‘சிடுசிடு’ தான் என் கவனத்தை தூக்கதிலிருந்து திருப்பியுள்ளது. "could you" என்று சீட்டை நேராக்கும்படி கைகளால் ஜாடை காட்டினாள். எனக்கு வந்ததே கோபம், “let us first get a confirmation that we are taking off, I will then adjust the recliner" என்றேன் சாதாரணமாக.

அவள் பல்பு வாங்கிக்கொண்டு போன பின்னர், இவரிடம் திரும்பி,”ஏன்னா இப்படி சிடு சிடுன்னு மூஞ்சிய வெச்சுண்டு இருக்கா இவ” என்றேன். நான் சற்றும் எதிர்ப்பார்க்காமல் இருந்தது இவர் பதில்.

 வழக்கமாக பிளேனில் ஏறியவுடன் இந்த விமானப் பணிப்பெண்கள் எந்தப்பக்கம் நம் இருக்கை என்று பல்லிளித்துக்கொண்டே!!(நம்மளை வரவேற்கறாங்களாமா) காட்டுவார்கள். எல்லோரையும் இடம் வலம் என்று வழிகாட்டிய அப்பெண், இவர் ’அழகில் மயங்கி’(ஓ, இதான் அழகுல மயங்கறதா?) இவரிடம் மட்டும் மொபைல் நம்பர் கேட்டாளாம் (க்கும், கேட்டுட்டா.........லும்,இவர் நம்பர் கொடுத்துட்டா...............லும்). ஆனா இவர், ”நான் ராமனாக்கும் அதெல்லாம் (அநன்யாவைக்கேக்காம) தரமுடியாதுன்னு சொல்லிட்டாராம்.” அதான் அந்தப்பெண் உர்ன்னு மூஞ்சிய வெச்சுண்டு இருக்காளாம். ஸ்அபா..... அசந்து வரும் அந்த நொடியிலும் இவரின் சில்லித்தனமான இந்த ஜோக்கை கேட்டு சத்தமாக ரசித்து சிரித்துவிட்டேன். நல்லாத்தான் சொல்றாங்ய டீட்டேயிலு.

மணி அண்ணா பையன் சங்கர் வண்டி ரொம்ப தாறுமாரா ஓட்டுறான்னு ஒரே புகார். சாப்பிடும்போது இந்த விஷயத்தை கண்டிக்கும் நோக்கோடு மணி அண்ணா, “கோந்தே, மினிமம் 20 ஃபீட் இடைவேளை விட்டு தான் வண்டி ஓட்டணும், புரிஞ்சதா?”ன்னு சொன்னார். இவர் உடனே இடைப்பட்டு, ”அண்ணா, அப்படீன்னா, பந்த் அன்னிக்கு தான் வண்டி ஓட்ட முடியும்” என்றாரே பார்க்கலாம். கொல்லென்று குடும்பமே சிரித்து விட்டது.

Saturday, January 16, 2010

பயணக்கட்டுரை - 2 குருவாயூர் தரிசனம்


குருவாயூர் தரிசனம்


ரூமில் செக்கின் பண்ணிட்டு 1 மணிக்கு அலாரம் வெச்சுண்டு படுத்தால், ஒரு சொக்கு சொக்குவதற்குள் அது 1 மணின்னு அலறித்து.தலையில பச்சை தண்ணிய விட்டுண்டு அவசர அவசரமா ஒரு குளியல். சீல் ஆயிருந்த கண் மைக்கோசம் கூட திறக்க மறுத்தது. மையிட்டுண்டு கண்ணாடி பார்த்தா, நம்ம மனீஷா கொய்ராலா மாதிரி தக்குனூண்டா இருக்கு கண்ணு. நம்ம எதுக்கு வந்துருக்கோம்? படுத்து தூங்கறதுக்கான்னு என்னை நானே அதட்டி சரிபண்ணிண்டேன். ஒரு மாதிரி ரெண்டு பேரும் குளிச்சு ரூமைப்பூட்டிண்டு வெளீல வந்தப்போ மணி அதிகாலை 1.30. இவ்வளோ சீக்கிரம் யார் எழுந்துக்கபோறான்னு ஒருமாதிரி செருக்கோட கோவிலை நோக்கிபோன எனக்கு கண்ணபிரான் அதிகாலை பல்பு அதிக வாட்சில் குடுத்தான்.

 கடல் மாதிரி சபரிமலை பக்தர்கள் கூட்டம். பாவம், நாங்கள் ஹோட்டல் செக்கின் பண்ணினப்போவே இவாள்ளாம் இங்க கியூவில வந்து நின்னுண்டு இருப்பா போல இருக்கு. என்ன ஒண்ணு, ஒரு சாமி கூட குளிக்கலை.இப்போ குருவாயூரிலும் செல்போன்,ஹாண்ட்பேக் எல்லாம் எடுத்துண்டு கோவிலுக்குள் போக முடியாதாம்.திருட்டு ஜாஸ்தியாம். நிராயுதபாணியாக ரெண்டுபேரும் கியூவில் போய் நின்னப்போ இவர் என்னை லேடீஸ் தனி Q இருக்கே அதுல போய்க்கோ என்றார். அதுல பார்த்தப்போ 30 -40 வயதான பெண்கள் இருந்தா. எனக்கு தான் இந்த சபரிமலைக்கூட்டத்தை பார்த்து ஒரே பயம். கையில போன் கூட இல்ல. வேண்டாம்னா, நான் உங்க கூடவே வந்துக்கறேன்னேன். முதல் மூவாயிரம் சாமிகளில் நான் மட்டும் தான் பெண் போல இருக்கு. நிக்கறதுக்கே ஸ்ரமமாஇருந்தது. பின்னே, சாமியெல்லாம் கீழே உக்காந்தாச்சே. சொன்னாலும் புரியலை. ஒரு மாதிரி மாங்காடு காமாக்ஷியம்மன் மாதிரி ஒத்தைக்காலில் நின்னு பாலன்ஸ் பண்ணிண்டு கண்ணனின் நிர்மால்ய தரிசனத்திற்கு காத்திருந்தோம். ல சாமிகள் வெளிப்புறத்தில் இருந்து கியூவுக்குள் குதிச்சுண்டிருந்தா. எனக்கு தான் எங்கே போனாலும் பொலம்பறதுக்கு ஒரு விஷயம் கெடைச்சுடுமே. சே, தப்பு பண்ணிட்டோம், பெண்கள் கியூவில் நிம்மதியா நிக்கறதை விட்டுட்டு இப்படி பழம் சாப்படணுமான்னு யோசிச்சுண்டு இருந்தேன். இப்போ போய் நின்னா என்னன்னு திரும்பிப்பார்த்ததுதான் குறை, ஆடிப்போயிட்டேன். எங்களுக்கு அப்பால் ஒரு 2000 சாமிகள் தள்ளிண்டு நிக்கறாங்க. கஷ்டம். சரி, இது ஒரு பாடம்னு மனசைதேத்திண்டேன்.

சுமார் 3.10க்கு நடை திறக்கப்பட்டதும் சர சரன்னு கியூ நகர்ந்தது. சில சமயம் திருப்பதி மாதிரி ஓடினோம். ஒருவழியா கோவில் பிரகாரத்துக்குள்ள நுழைஞ்சோம்.ஏதோ ஒரு தமிழ்ச்சாமி புலம்பிண்டு வந்தார். ”ரொம்ப மோசஞ்சாமி, எப்படி தள்றாங்க பாருங்க”. கோவில்கள்ல தள்ளறது ஒரு டிசிப்ளின். இதுக்கு போயி அலட்டிக்கலாமான்னு நினைச்சுண்டேன். எதிரில் ஒவர்பிரிஜ் இருந்தது. இதன் மேல் ஏறி இறங்கினால் உள்பிரகார வாசலில் போய்விடலாம். பிரிஜ் பூராவும் புலம்பல் விடவில்லை. பொறுமை என்னை விட்டு மெதுவாக கிளம்பிக்கொண்டு இருந்தது.அதிகாலை 3.45மணி. இது விடாமல் மத்த சாமிகளை குறைசொல்லிக்கொண்டு வந்தது. பிரிஜ் ஏறி, இறங்கி தோ, வந்தாச்சு, உள் பிரகார வாசலிலும் அதே புலம்பல் இப்போது இன்னும் பலமாக. விஜயசாந்தி மாதிரி அது  கன்னத்துல ஒரு பளார் விடலாமான்னு தோணித்து. நம்ம வாய்ல இருந்து வர்ற சொற்கள் மத்தவாளை எப்படி பாதிக்கறதுன்னு கொஞ்சம் யோசிக்கணும் இல்லையா? எனக்கு நற நறன்னு எரிச்சல். க்ருஷ்ணா, நாராயணா, குறையொன்றுமில்லையப்பான்னு நிம்மதியா மனசு பிரார்த்திக்க முயற்சி பண்ணித்து. yes, here we are.. உள் பிரகாரம். அழகான குட்டி கிருஷ்ணன் மேல் தயிரை அபிஷேகம் பண்ணிக்கொண்டு இருந்தாங்க. முடிஞ்ச வரை ஓம் நமோ நாராயணான்னு சொல்லிண்டு இருந்தேன். ”ஏஞ்சாமீ இப்புடி புடிச்சு தள்றீங்க” மட்டும் தரிசனம் முடிந்து பிரத்க்ஷிண்ம் வைக்கும்போதும் கேட்டுக்கொண்டு தான் இருந்தது. அந்த புலம்பல் சாமி தரிசனம் பண்ணித்தா தெரியலை.ஸ்வாமி எதிரில் இருக்கும்போது கூட பின்னாடி திரும்பி பெனாத்திக்கொண்டு இருந்திருக்கும்.


கர்ப்பகிரஹத்தைச்சுற்றி கேரள மியூரல் பெயிண்டிங்ஸ். அனந்தசயனம் என்னை ரொம்பவே கவர்ந்தது. தரிசனம் முடிஞ்சு வெண்டிங் மெஷினில் ஒரு கண்றாவியான காப்பி குடிச்சு திருப்பியும் ரூம்ல போய் அனந்தசயனம் பண்ணினோம். 7 மணிக்கு மீண்டும் கிளம்பி மம்மியூர் மஹாதேவ ஸ்தலத்திற்கு போனோம். அங்கே 11 நாள் அதிருத்ர மஹா யக்ஞம் நடக்கறதாம். ரொம்ப விசேஷமாம்.  நல்ல வேளை இந்த அய்யப்ப சேவார்த்திகளுக்கு இந்தக்கோவிலைப்பத்தி தெரியலை போலிருக்கு.இல்லாட்டி இங்கேயும் அடிதடி சண்டை கலாட்டா தான்.

எதிரில் இருந்த பாட்டுக்கடைக்கு போய்,சும்மாங்காச்சுக்கும் சித்ரா அம்மையார் பாடிய ஸ்ரீமன்நாராயணீயம் இருக்கான்னு கேட்டு வெச்சேன். எங்களுக்கு தெரியாதா, சித்ரா ஒரு ரெண்டு தசகமும் ராசக்கிரீடையும் தான் பாடி இருக்காங்கன்னு, ஹம்மா ல கேட்டுட்டோம்ல? கோவில் பக்கத்துல இருக்கற கடைகளுக்குள்ள போகாட்டி சாமிக்குத்தம் ஆயிடுமோல்யோ?

மீண்டும் நடந்து கோவில் வந்து சேர்ந்தோம்.” நான் கோவில் பிரகாரத்துல போய் உக்காந்து ஜபிச்சுக்கரேன், நீ வேணும்னா இன்னொறுவாட்டி தரிசனத்துக்கு போயிட்டு வா”ன்னு இவர் சொல்லிட்டார். எனக்கு ஒரே குஷி. லேடீஸ் கியூவில போய் கடைசியில அப்பெண்டு ஆயிண்டேன். இதில் பல வயது பெண்கள். சிலர் நிக்க முடியாமல் ஜகா வாங்கினார்கள். பலர் புலம்பினார்கள். என்னாலான உபகாரம்,நிற்கும் பெண்களை ஊக்குவிக்கற நோக்கத்தோடு, நிர்மால்யத்தில் பெண்களை தான் முதலில் விட்டதாக வெளிப்பிரகாரத்தில் நின்னுண்டு தைரியமா ஒரு திரி கொளுத்திப்போட்டேன்.(நிர்மால்யத்துல யாரை விட்டாங்கன்னு சத்தியமா எனக்கு தெரியாது. ஸ்வாமி கார்யம், பொய்மையும் வாய்மையிடத்துன்னு நம்ம காட் ஸ்காலர்(தெய்வப்புலவர்) சொல்லி இருக்கார்ல? அதான் அப்படி சொன்னேன்) மலையாளிப்பெண்கள் பலருக்கு நான் மைக்கில்லாமல் சொன்ன தமிழ் வரி நன்னாவே புரிஞ்சதுபோல, கிளம்ப நினைச்ச பெண்கள் கண்கள்ல பளிச் பிரகாசம்.  காலை நிர்மால்யத்தில் நின்னு எனக்கு  நல்ல பொறுமை கிடைச்சிருந்தது.  சுமார் 1.20 மணி நேரம் ஆச்சு. திருப்பதி எல்லாம் ஒப்பிட்டு பாக்கறச்சே இதெல்லாம் ஜுஜுபீ.  இளம் பெண்களை எல்லாம் விட்டுட்டு, (என் வயசையொத்த) பாட்டிமார் கூட போய் நின்னுண்டேன்.  இஸ்கான் புண்ணியத்தில் ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தை ஜபிச்சுண்டே இருக்க கியூ மெதுவா நகர்ந்தது. 3 பாட்சா விட்டாங்க. இப்போ நங்க நின்ன இடத்துல கொஞ்சம் distraction ஜாஸ்தி. வித விதமான வஸ்த்ரகலா புடவைகள், வண்ணமயமான சுடிதார்கள், கண்ணைக்கவரும் நகைகள் எல்லாம் போட்டுக்கொண்டு வெள்ளை முதுகு பெண்கள்  பிரதக்ஷிணம் பண்ணிக்கொண்டு இருந்தார்கள்.

 இதையெல்லாம் விட என்னை அதிகமா அட்ராக்ட் பண்ணினது ஆறிலிருந்து 12 மாதக்குழந்தைகள் தான்.  குருவாயூர் கோவிலில் அன்னப்பிராஸம் ரொம்பப்பிரபலம். அழகா குட்டியூண்டு முண்டு கட்டி விட்டு, கழுத்துல நெத்தீல சந்தனம் இட்டுண்ட குழந்தைகள் எல்லாம் அவ்வளோ அழகு.அப்படியே அள்ளிக்கொஞ்ச ஆசையா இருந்தது. இந்த stage ரொம்ப அழகா இருக்கும். portable and handy. அருண் வருண் இப்படி அவசர அவசரமா வளரணுமா? கொஞ்சம் நிதானிச்சுக்க கூடாதா?

கியூ இப்போ அடுத்த நிலைக்கு போயாச்சு. நிலைப்படி கிட்டக்க நிறுத்தப்பட்டோம். மனசு தெளிவா இருந்தது. ஜெனரல் கியூவின் வயத்தெரிச்சலைக்கொட்டிண்டு, எங்களை உள்ளுக்கு விட்டப்போ, எல்லாரும் ஓம் நமோ நாராயணான்னு ஒரே குரல்ல சொல்லிண்டே நுழைஞ்சோம். கண்கள்ல நீர் மல்க அந்த குட்டி கிருஷ்ணனின் உருவத்த மனசுல பதிய வெச்சுண்டேன். அந்த உணர்வை என்னன்னு சொல்ல தெரியல. ஒரு வேளை அது என் கூட இருந்த அந்த மூதாட்டிகளின் உண்மையான உருக்கமான பக்தியின் synergy யாகக்கூட இருக்கும். இதே நடையில நிறைய வாட்டி வந்து இதே கண்ணனை பாத்து இருக்கேனே, அப்பெல்லாம் இல்லாத ஒரு மகோன்னத அனுபவம் எனக்கு இந்த தடவை கிடைச்சது. வழக்கமாக வைரல் இன்ஃபெக்‌ஷன் போன்ற கெட்ட இன்ஃபெக்‌ஷன் மட்டும் தொற்றும் எனக்கு இந்த வாட்டி இப்படி ஒரு நல்ல synergical இன்ஃபெக்‌ஷன் தொற்றியது பெருமகிழ்ச்சியா இருந்தது. அந்த ஆனந்த அனுபூதியை எழுத்துல எழுதி சொல்லிட முடியாது. அந்த க்ஷணம் நிச்சயமா சொல்லுவேன், கண்ணனைத்தவிற வேறு எதையும் பத்தி யாருமே யோசிக்கலை. அப்படி ஒரு கடவுளோட ஒன்றிய நிலை.
அக்கம்பக்க சன்னிதிகளில் வீற்றிருந்த சுவாமிகளை வேகமாக நிராகரித்து, அந்த நல்ல சக்தியை எடுத்துண்டு புக்ஸ்டால் கிட்டக்க பிரம்மம் ஒக்கட்டேன்னு உக்காண்டு ஜபம் பண்ணிண்டு இருந்த இவர் பக்கத்துல உக்காந்து கொஞ்சம் இவருக்கும் கொடுத்தேன். பஜனம் இருக்க வந்ததுனால கோவிலுக்குள்ள பிரார்த்தனை பண்ணிண்டு இருக்க சொல்லி இருந்தாங்க. முடிஞ்ச வரைக்கும் வேற சிந்தனைகளை விட்டுட்டு (பிரகாரம் சுத்தறவாளை எல்லாம் வேடிக்கை பார்த்துண்டே!!!) ஸ்லோகம் சொல்லிண்டு இருந்தேன். ஹீஹீ. 1 மணிக்கு கோவிலை விட்டு வெளீல வந்துட்டோம். மீண்டும் ராமகிருஷ்ணா சாப்பாடு, ஹோட்டல், ஊர் திரும்புதல்.                                                                                                                                                                                                                   (தொடரும்)

Friday, January 15, 2010

பயணக்கட்டுரை 1

Statutory Warning: இது கொஞ்சம் பெரிய பதிவு. ஒரு வார காலமா நான் ஊரில் அடிச்ச கொட்டத்தை பத்தினது. பொறுமையுள்ளம் படைச்சவங்களுக்கு மட்டுமே! நேரம் இல்லாட்டி, புக்மார்க்கிண்டு அப்பறம் படிக்கலாமே. எனக்கு travelogue எல்லாம் எழுதத்தெரியாது. இருந்தாலும் ஊருக்கு போயிட்டு வந்த கதையெல்லாம் சுருக்கமாய் சொல்லணுமே. அதுக்குத்தான் இந்தப்பதிவு.வந்து ஒரு வாரமாகப்போறது, இன்னும் ஏன் போஸ்ட் போடலைன்னு கேட்டால், துக்கம் தொண்டை அடைச்சுடுத்து, அதான் போடலை. ஊருக்கு போயிட்டு வந்தாலே இப்படித்தான் இருக்கும். ஒரே blues. இந்த வாட்டி, சென்னை போகலையே, அது வேற வருத்தம். எப்போப்பாரு, திரிச்சூர் பஸ்ஸ்டாண்டு, கொடுங்கலூர் பகவதி அம்மன் கோவில், மாமியாருக்கு ருத்ராபிஷேகம், குருவாயூர் நடைக்குள் பெண்கள் கியூவில் நுழைஞ்சது,மாயவரம் மணிக்கூண்டு, பரிமளரங்கன் கோவில், காளியாக்குடியின் சாப்பாடு, சாஸ்தா ப்ரீத்தியில் திரண்ட மக்கள் கூட்டம், ஒரு 500 பேருக்கு நான் பரிமாரியது, கோவை காந்திபுரம் அன்னபூர்ணா கௌரிஷ்ங்கர் பக்கத்தில் இருந்த புஸ்தகக்கடை, பாலக்காடு மார்ஜின் ஃப்ரீ சூப்பர்மார்க்கெட் இதெல்லாம் தான் அடிக்கடி மனதில் ஃப்ளாஷ் ஆறது. ஏன் தான் இங்கே வந்து மாட்டிண்டோமோன்னு மனசு ரொம்ப வருத்தப்படறது.மார்ச் 2010 உடன் 4 வருடம் ஆச்சு, இந்த அமீரக வாழ்க்கை. இங்கேத்த hyped up life, வீண் ஆடம்பரம், இதெல்லாம் போறும் போறும்ன்னு ஆயிடுத்து. சாதாரண, எளிமையான வாழ்வுக்கு மனசு ஏங்கித்தான் போய்ட்டது.

ஹான்... என்ன பண்ணறது?Day 1 - 01-01-2010நான் Happy New Year முதன் முதலில் சொன்னது, கோழிக்கோடு இம்மிக்ரேஷன் ஆபிஸ்ருக்கு. 4 மணிக்கு இறங்கிய பின் வண்டி வந்து அழைத்துச்சென்றது. பாலக்காடு போய் சேர்ந்த்போது, திருவாதிரைன்னு சொன்னா.அம்மை(மாமியார்) சூப்பர் திரிவாதிரை களி பண்ணி இருந்தார். கிடுகிடுன்னு குளிச்சு, களியை ஒரு பிடி பிடித்து,மந்தக்கரை பிள்ளையாரை லவ் பண்ணிட்டு, வைத்தியநாதப்புரம் சிவனை தரிசனம் பண்ணிட்டு, கோவிந்தராஜபுரம் சாஸ்தா லெட்சார்ச்னையில் போய் உட்கார்ந்தால், தூக்கம் சொக்கிவிட்டது. சாயந்திரம் பாலக்காடு கல்யாண் சில்க்ஸில் ஷாப்பிங். எல்லோருக்கும் பிடிச்ச மாதிரி எல்லாம் புடவை வாங்கறது ரொம்பக்கஷ்டம். அதுலேயும் இந்த வேணு அண்ணாவிற்கு எந்த கலரும் பிடிக்கலை. இதை எடுத்தா அதுங்கறார், அதை எடுத்தா இதுங்கறார். ஒரு வழியா, லக்ஷ்மி சில்க்ஸ்ல உருப்படியா 18 முழம் புடவை அழகாக பிருந்தா மன்னிக்கு கிடைச்சது. இந்த கடையில XXL மடிசார் எல்லாம் வெச்சுண்டுருக்கா. Normal 18 முழம். XXL - 20 முழம். (கடைய நோட் பண்ணி வெச்சுண்டேன்னு சொல்லித்தெரிய வேண்டாம், இவர் கிட்டக்க இந்த பாராவை படிச்சு காட்டினப்போ, வழக்கம் போல no response)Day 2 :அடுத்த நாள் சாஸ்தா பிரீத்தி. கூட்டம்னா கூட்டம் அப்படி ஒரு கூட்டம். பூஜை,பஜனை எல்லாம் முடிஞ்சதுக்கப்புறம் தான் சாப்பாடுன்னு சொல்லிட்டு ஜனத்திரள் பொறுமையா காத்துண்டு இருந்தாங்க. சமயலும் கனஜோர். பஜனையோட கடைசியில் யாருக்காவது சாமி வரணுமாம். அப்போ தான் அய்யப்பன் இந்த பூஜையை approve பண்ணினதா அர்த்தமாம். திடீர்ன்னு சபரீஷுக்கு சாமி வந்து திங்கு திங்குன்னு குதிக்க ஆரம்பிச்சுட்டான். நான் பயந்துட்டேன். அந்த சின்ன கோவில் பிரகாரத்துல அவனை இழுத்து பிடிக்க முடியாமல் எல்லாரும் தெணற ஆரம்பிச்சுட்டாங்க. முதல் முறையா இப்படி பாக்குறேன். phew. scary. கோவிலை ஒட்டி ரெண்டு பக்கமும் பந்தி போட்டிருந்தா. ஊர்க்காரங்கெல்லாம் புள்ளை குட்டிங்களோட வந்து செம்ம கட்டு கட்டிட்டு போனா. ஒரு பந்தி ஓடிண்டு இருக்கும்போதே அடுத்த பந்திக்கு தயாராக சாப்பிடறவங்களுக்கு பின்னாடி நின்னுக்கறாங்க. எப்போய்யா சாப்பிட்டு முடிப்பேன்னு restless ஆ காத்துண்டு இருக்கணும். நான், உஷா மன்னி, பிருந்தா மன்னி, ரம்யா எங்கள் குடும்பத்திலிருந்து பரிமாறினோம்.

அது ஒரு நல்ல அனுபவமா இருந்தது.நிறைய இடங்கள்ல மோஹன், மோஹன்னு இவர் பேர் எதிரொலிச்சுண்டு இருந்தது. இவர் தான் இந்த கோவில் கமிட்டீ மெம்பர் ஆச்சே, பயங்கர துறுதுறுப்பா வேலை செஞ்சுண்டு இருப்பார்ன்னு இவரை தேடி போனேன். கோவில் மெயின் பந்தியில் இவரைக்காணோம். கோவிலுக்குள் ஒரே இருட்டு. மண்டபத்தில் ஒரு சட்டையில்லா மாமா மல்லாக்க படுத்திருக்க, இவர் , அவர் பக்கத்தில் தமிழ்ப்பட ஹீரோயின் மாதிரி குப்புற படுத்துக்கொண்டு முழங்கால்களை ஆட்டிண்டு பேசிண்டு இருந்தார். இதுக்கு, நாங்க நல்லவங்க வல்லவங்க கணக்கா பில்டப்பு வேற. என்னைப்பார்த்ததும், எழுந்து வந்து ”இப்போத்தான்மா ஐந்நூறு பேருக்கு வெளம்பிட்டு வந்தேன்”னு கூசாம பொய் வேற சொல்றார். கேக்கறவன் கேனையா இருந்தா, மோஹன் மொக்கை போட மாட்டான்ன்னு சொல்லுவாங்க போல இருக்கு.Day 3

அடுத்தநாள் குருவாயூர் போனோம். திரிச்சூர்லே இருந்து பாம்புமேக்காடுங்கற சர்ப்ப ஸ்தலத்திற்கு போயிட்டு, குருவாயூர் போகலாம்ன்னு திட்டம். நாங்க ஏறிய பஸ் “அவா ஊதினா இவா வருவா” சமயத்தில் தயாரிச்சிருப்பாங்க போல. பயங்கர Antique values சோட லொட லொட சத்தத்தோட சூப்பரா இருந்தது. அந்த டிரைவருக்கு யாரோ தப்புதப்பா training கொடுத்திருப்பாங்கன்னு நினைக்கிறேன். accelarator கூட hornஐயும் அழுத்தினாத்தான் வண்டி போகும்ன்னு நினைச்சுண்டு அந்த ஆள் பண்ணின அராஜகத்தால பயணிகளுக்கெல்லாம் இலவச தலைவலி கிஃப்டா கெடைச்சது. மத்த பயணிகள் யாரும் இதை பெருசா கண்டுக்கலை, எனக்கு தான் Blood Pressure எகிறிடுத்து. திரிச்சூர் பஸ் ஸ்டாண்டில் தான் கொஞசம் அமைதியை அனுபவிச்சோம்.

அடுத்து மாளைங்கிற இடத்துக்கு போகணும். இந்த பிரைவேட்டு பஸ்கள்ல என்னை மாதிரி XXL passengers போறது ரொம்பக்கஷ்டமாக்கும். இரண்டு பேர் உட்கார வேண்டிய சீட்ல மூணு பேருக்கு allocate பண்ணி இருக்காங்க. அடிச்சிக்கோ பிடிச்சுக்கோன்னு ஏறி,இடம் பிடிச்சு, பாதி தோளை ஜன்னலுக்கு வெளீல வைச்சதும் தான் இடம் பத்தினாப்ல இருந்த்தது.இதுக்காகவே எனக்கு ஜன்னலோர சீட்டை இவர் சமர்த்தா விட்டுக்கொடுத்துடுவார். அந்த மூணாவதாக வந்து உக்கார்ரவங்க பாவம். பின்னே, கண்டக்டர் கிட்டக்க, நான் கூட காசு குடுத்து தான் டிக்கெட் எடுத்துருக்கேன்னு சண்டை போடமாட்டாங்க? எதாவது ஓமக்குச்சி மாதிரி இருந்தார்ன்னா, நான் தப்பிச்சேன். இந்த வாட்டி, ஆஜானுபாஹுவா ஒருத்தர் வந்து உட்கார்ந்துண்டார். இந்தப்பக்கத்தில் இருந்து நான் தள்ள, அந்தப்பக்கத்தில் இருந்த ஆஜானுபாஹு தள்ள,நடுவில் sandwich செய்யப்பட்ட இவரோ, கிட்டத்தெட்ட, முறுக்கு அச்சில் மாட்டிக்கொண்ட மாவு போல squeeze செய்யப்பட்டார். இவ்வளவு கஷ்டத்திலும் எப்படித்தான் இவரால் தூங்கமுடியறதோ, தெரியலை. திரிச்சூர் தாண்டி, நிறைய இடங்களில் கிற்ஸ்துமஸ் கொண்டாட்டம் பாக்கி இருந்த்தது தெரிஞ்சது. வாசலில் நட்சத்திரம் தொங்க, கேட்டுகளில் வாழைத்தண்டுகளில் வண்ணமயமான கொடிகள் நடப்பட்டு இருந்தது. இந்த இடங்களெல்லாம் நான் முதன் முறையா பாக்கறேன். மழை இல்லாட்டியும், பசுமையோ பசுமை.சாலையோர மரங்கள், செடிகள் எல்லாம் பச்சை பசேலென்று ஹலோ சொல்லித்து. பஸ் மட்டும் கழுதை பரதேஸம் போனாமாதிரி போயிண்டே இருந்தது.மாளையில் பாம்புமேக்காடு மாலை 6 மணிக்கெல்லாம் மூடிடுவாங்களாம். எங்களுக்கோ விஷயம் தெரியாது. பல்பு. குத்துமதிப்பா சாமியெல்லாம் பார்த்தோம். இந்த கோவில் ஒரு நம்பூதிரி வீட்ல தான் இருக்கு. இங்கே உக்காராதே, அங்கே சாப்பிடாதே, இதை தொடாதே, அதைக் கீழே போட்டுடாதேன்னு ஏக கிராக்கி பண்ணினாங்க. இந்த terms and conditions ஐ சொல்லிக்குடுக்கறதுக்கே அங்க தனியா ஆளுங்க வெச்சிருப்பாங்க போலிருக்கு. ஒரு வழியாக கிளம்பினோம்.கொடுங்கலூர்ல இருந்து குருவாயூர் கிட்டக்கதான்னு சொன்னதுனால,போறது தான் போறோம், கொடுங்கலூர் பகவதி அம்மனை பார்த்துடலாம்ன்னு ஆசைப்பட்டோம். நல்ல வேளை, சபரிமலைக்கூட்டத்திலும் அம்மன் எங்களுக்கு கருணையுடன் தரிசனம் குடுத்தா. கொடுங்கலூரிலிருந்து நேர் பஸ் குருவாயூருக்கு KSRTC கிடைச்சது. வழக்கமாக, KSRTCன்னாலே,20 kmph போகும் பெங்களூரு பஸ்கள் தான் எனக்கு ஞாபகதுக்கு வரும். இங்கே இவங்க இந்த நெளிவு சுளிவான சாலைகளை எத்தனை லாவகமா ஓட்டுறாங்க? முக்கியமான பாயிண்டு, இந்த பஸ்கள்ல XXL seating arrangement வசதி உண்டு. குருவாயூர் போய்ச்சேறும் போது 9.30. இரவு உணவு ராமகிருஷ்ணால முடித்து ருக்மணியில போய்த்தங்கினோம்.                                                                     
      

                                                                                                                                         ---தொடரும்

Wednesday, January 13, 2010

பொங்கல் வாழ்த்து.

எல்லோருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
 
Related Posts with Thumbnails