Pages

Monday, September 30, 2013

விஜயவாடா விசும்பல்ஸ்


விஜயவாடா விசும்பல்ஸ்:

அவளுக்கு 7 வயசு தான் எனக்கு 10 வயசு. நான் ஒரு வருஷம் வெயிட்டீஸ் பண்ணி ரெண்டாவது வாட்டியா 3வது படிச்சுட்டு, இப்போ 5வது படிக்கறேன். (பாஸ் தான், இருந்தாலும் போடியில் ஸ்டாண்டர்ட் போறாதாம், விஜயவாடாவில் தான் மிகவும் ஹைஐஐ ஸ்டாண்டர்டாம் மறுபடியும் பாஸ் பண்ண பாடத்தையே வேற ஊர்ல வெச்சு சேர்த்தாச்சு - மை மதர் தெரஸா) அவள் யூ கே ஜீ யோ ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்டோ..

ச்செய்த்தன்யா பப்ளிக் ஸ்கூல் விஜயவாடாவிலேயே.. சரி இல்லை.. க்ருஷ்ண லங்காவிலேயே.. சரி சர்வீஸ் ரோடு பக்கத்திலேயே.. அதெல்லாம் வாண்டாம். ஒரு குட்டி ஸ்கூல். மை நைனாவின் அலஹாபாத் பேங்க் குவார்ட்டர்ஸுக்கு மிக மிக அருகில் இருந்தது. எங்கேயா? ஸ்கூல் கிரவுண்டு ஃப்ளோர்..வீடு ஃபர்ஸ்ட் ஃப்ளோர். அம்மாம்பெரிய இஸ்கோலு! அக்காங்!

தினமும் ஸ்கூலிலிருந்து வந்தவுடன் கெக்கே பிக்கேன்னு இருக்காளேன்னு மை மதர் தெரஸாவுக்கு மூக்குல வேர்ந்திங்.. அண்டு கொண்டு போயிங் அண்டு ஜாயினிங் தி அப்போதைய ஃபேஷன் ஹிந்தி ட்யூஷன்ஸ். ”பிராத்மிக் ராஸ்துந்தண்டீ”ன்னு சொல்லிட்டா மிஸ்! செம்ம கடுப்பு. "அவ என்ன சொல்றது. நான் ராய மாட்டேம்மா"ன்னு சொல்லிப்பார்த்தேன். அப்பெல்லாம் மை மதர், ”எதிர்த்தா பேசுறே”ன்னு பளார் பளார்ன்னு அறைஞ்சிங்ஸ் ஒன்லி.. இப்போத்தான் சாந்த ஸ்வரூபி மதர் தெரஸா அவதாரம் டேக்கிங்ஸ்! சரி விஷயத்துக்கு வரேன்.

தினசரி சாயந்திரம் 4.15க்கு ட்யூஷனுக்கு போற வழியில் எங்க பில்டிங்குக்கு பக்கத்திலேயே ஆந்திரா பாங்க் கிட்டக்க ஒரு டீக்கடை இருந்தது. ’பே....’ ன்னு பிராக்கு பாத்துண்டே போவேனா.. அந்தக் கடையில அடுக்கி வெச்சிருந்த ஜாடிகள்ல Croissant மாதிரி ஏதோ ஒரு சமாச்சாரம். அதுக்குள்ளே பச்சையா, வெள்ளையா ஏதோ ஒண்ணு. அதை திங்கணும்ன்னு ரொம்ப நாளா ஆசை. மை மதர் தெரஸா அடிச்சிங்ஸ்.. அதுனால கேட்கலை.

தங்கைசனியும் சாரி.. தங்கைமணியும் கூடவே வரும் ஹிந்தி டியூஷனுக்கு. சும்மா இன்ஸ்பெக்‌ஷனுக்கு மை மதர் அனுப்பிங்ஸ் ஹர். போலீஸ் உத்தியோகத்துக்கு தான் அது லாயக்குன்னு நினைச்சுக்குவேன். நான் டியூஷன்ல எழுதாம வேடிக்கை பார்த்தது, இன்னொரு ஸ்டூடெண்டோட ஓடிப்பிடிச்சு வெளாண்டது எல்லாத்தையும் வந்து பிராம்ப்டா போட்டுக் 

கொடுத்து எனகு அடி வாங்கிக் கொடுத்திடும் அது.




இவ்வளோ செக்யூரிட்டி பிரச்சினைகளுக்கிடையில் எனக்கிது தேவையில்லை தான். பக்கித்தனம், ஆசை யாரை விட்டுது? ஒரு நல்ல சுபயோக சுபலக்னமா பார்த்து, அந்த சுப காரியத்தை செஞ்சேன். ஒரு 50 பைசாவை அலமாரியில இருந்து நைஸா எடுத்து புக்குக்குள்ளே வெச்சுண்டேன். அதே நாலேகால், அதே ரோடு, அதே டீக்கடை. “இருடீ நம்மா”ன்னு அதை ரோட்டிலேயே நிக்க வெச்சுட்டு, எப்படியோ தைரியத்தை வரவழைச்சுண்டு ”இதெந்த்தா?”ன்னு அந்த ஜாடியை காட்டி கேட்டேன். (அருஞ்சொற்பொருள் - இது எவ்வளோ?) அடடே.. ஒரு குட்டி தேவதை வந்திருக்கே நம்ம கடைக்குன்னு அகமகிழ்ந்த அந்த கடைக்காரர், ”பாவலா (paavalaa)நே...தீஸ்க்கோம்மா"ன்னு ரெண்டை எடுத்து என் கையில அதிவாத்ஸல்யத்துடன் கொடுத்துட்டார். (”காலணா தான், இந்தா எடுத்துக்கோம்மா”)

திரு திருன்னு முழிச்சுண்டே ஒண்ணை வெறுப்புடன் என்னை நோக்கிய தங்கை சனிக்கு கொடுத்துட்டு, வேகமாக அந்த ட்ரீம் கம் ட்ரூவை ரசித்து கடித்து சாப்பிடும்போது சுவர்க்கம் இது தான் போல்ருக்குன்னு நினைச்சுண்டேன். மீண்டும் கடைக்காரர் வந்து, “டீ தாகுத்தாராம்மா?”ன்னு கேட்டார்.( அருஞ்சொற்பொருள்: டீ குடிக்கறீங்களா குழந்தைகளா) ”ஹேன்? டீயா?” ன்னு நான் முழிக்க, தங்கைசனி முறைக்க, ”மீ நான்னகாரு ரோஜு இக்கடேனம்மா டீ தாகுத்தாரு”ன்னு (அருஞ்சொற்பொருள் - ”உங்க நைனா டெய்லி இங்கே தாம்மா வந்து டீ குடிப்பார்”) அவர் எங்களை கன்வின்ஸ் பண்ண, சரின்னு மண்டையை ஆட்டினேன்.

மை மதர தெரஸா போடும் லாஸா லம்ஸா சாக்லெட் டீ மாதிரியெல்லாம் வருமா என்னன்னு நினைச்சுண்டே அங்கே நின்னு அந்த மைதா சமாச்சாரத்தையும் முழுவதும் சாப்பிட்டு டீயும் குடிச்சுட்டு 50 காசையும் கொடுத்துட்டு (இன்னும் 50 காசு கொடுக்கணும் அவருக்கு, ”பரவாலேதுலேம்மா, மீ நான்னகாரு இஸ்தார்லே”ன்னுட்டார் அவர் - அருஞ்சொற்பொருள்: பரவாயில்லையாம் மை நைனா குடுப்பாராம் பாக்கி 50 பைசா)

ஆச்சா.. அந்த க்ரீம் பன்னோ என்ன இழவோ அதைத்தின்ன சந்தோஷத்தில் மிதந்து டியூஷனில் பூரா அதையே நினைத்து அகமகிழ்ந்து, அடிவாங்கி, உதை பட்டு வீட்டுக்கு போனா.. என்ன நடந்திருக்கும்ன்னு உங்களுக்கு இன்னேரம் தெரிஞ்சிருக்குமே? அதே தான். என் உடன் பிறந்த எட்டப்பி, நேராக மை மதர் தெரஸாவிடம் போட்டுக்குடுத்துட்டள். “அம்மா இவ டீக்கடையில போய் டீயெல்லாம் வாங்கி குடிக்கறாம்மா” ”அடிப்பாவி சண்டாளீ.. நீயுந்தானே டீ குடிச்சே” ன்னு நான் நினைக்கறதுக்குள்ளே.. சர்ர் சர்ர் சர்ர்ன்னு முதுகில் 3 தோசை விழுந்தது. மதர் தாடகா தான்.. சாரி தெரஸா.. ”டீயா குடிச்சே? டீ குடிப்பியா”?ன்னு கத்தி ரகளை பண்ணி மொத்து மொத்துன்னு மொத்தினாள். ”இல்லேம்மா.. இனிமேல் காஃபியே குடிக்கறேன்மா”ன்னு நான் அழுதுண்டே சொன்னது யார் காதுலேயுமே விழலை!

“காசு எங்கேந்து கிடைச்சது”ன்னு கேட்க (நானெல்லாம் தான் பேசவே தேவையில்லையே.. எட்டப்பி எதுக்கிருக்கா.. எடுத்துக் கொடுத்தா) “அந்த அலமாரியில நீங்க வைக்கறதை இவ புக்குக்குள்ளே திருடி, வெச்சுண்டு எடுத்துண்டு வர்றாம்மா.. “ ஆச்சு, நான் என்னமோ பிறவியிலேயே திருடி மாதிரி ஒரு ருத்ர பார்வை, விஜயவாடாவில் கால் குத்திய தினத்திலிருந்து நான் அந்த டீக்கடையின் ரெகுலர் கஸ்டமர்ங்கற ஹோதாவுல கற்பனை பண்ணிண்டு அந்த விளாசு விளாசியிருக்கா மை மதர் தாடகா. அன்னிக்கி வாங்கின மொத்து இருக்கே இப்போ வரைக்கும் மறக்கவே மறக்காது.

இதை பஞ்சாயத்து பண்ணி வைக்க வந்த மை நைனாவுக்கும் கடுங்கோபம். சனியன், கழிசடை இன்ன பிற விலங்குகளின் பெயர்களைச் சொல்லி எனக்கு அஷ்டோத்திரம் வாசித்தார். எனக்கானா எக்கச்செக்க கோபம்ஸ். பின்னென்னங்கறேன். “மீ நான்ன காரு ரோஜூ இக்கடேனம்மா டீ தாகுதாரு”ன்னு அவர் சொன்னதும் தானே நான் குடிச்சேன்? இந்த டயலாக்கை நைனாவிடம் சொல்லியே விட்டேன். மை மதர் தாடகா உடனே மை நைனாவை ஒரு உக்கிரப் பார்வை பார்த்தார். ஹை ஜாலி அனதர் ஆக்‌ஷன் ரீப்ளே ஆகும்ன்னு ஆசையா பார்த்தா, ”ச்சே.. நான் எதுக்கு அங்கே போய் டீ குடிக்கப் போறேன்? பொய் வேற பேச ஆரம்பிச்சிருக்கா இவ” ன்னு சொல்லி அவசரமா டாப்பிக்கை மாத்தி, விட்ட இடத்துல இருந்து அஷ்டோத்திரத்தை தொடராம, மறுபடியும் மொதல்ல இருந்து சொல்ல ஆரம்பிச்சுட்டார்.

அவர் அஷ்டோத்திரம் வாசிக்க மை மதர் தாடகா எனக்கு ”அலங்காரம்” பண்ணிவிட திருட்டுத்தனமா என்னை மாட்ட வெச்ச மை ஜென்ம விரோதி தங்கை சனி கமுக்கமாக அடுத்த ரூமுக்கு போயாச்சு!

தங்கையுடையாள் டீ குடிக்கக் கூட அஞ்சணும் போல்ருக்கே!!!

வதனமே சந்திர பிம்பமோ!

இதை ஃபேஸ்புக்கில் ஏற்கனவே போட்டுட்டேன், இருந்தாலும் ஒரு ரெக்காடுக்காக இங்கேயும் போடுறேன். மறுபடியும் படிக்க வேண்டாம் என்று தாழ்மையுடன் வேண்டிங்க்ஸ்!
முதல் வாட்டி பியூட்டி பார்லர் போனது 1993யில். ரெண்டு புருவத்தையும் வில்லாக வளைத்துக் கொடுத்தாள் - ஆம்ரபாலியில் - மலாட் ஈஸ்ட், மும்பய். அவ்வாவிடம் சத்தமாக ஆர்க்யூ பண்ணி, அம்மா அழைச்சுண்டு போனார். காடாய் வளர்ந்த புருவத்தை அவள் வெடுக் வெடுக் இழுத்த போது விண் விண் வலி இருந்தாலும் ஏதோ மாற்றம் வரப்போறதுன்னு திடுக் திடுக் இதயத்தோடு ஆசையா இருந்தேன்.

புருவச் செதுக்கல் முடிஞ்சு, கண்ணாடியில் பார்த்தபோது, அடேடே.. முகமே மாறிவிட்டதேன்னு படு சந்தோஷப்பட்டேன். அந்த சந்தோஷம் அதிக நாள் நிலைக்கவில்லை. குரோம்பேட்டையில், தி நகரில் திருச்சியில்(ஜங்ஷன் பக்கத்தில்) எங்கேயும் பாம்பே எஃபக்ட் கிடைக்கலை. தமிழ்நாட்டில் ஒரு தம்ப் ரூல் வைத்திருந்தார்கள். நிச்சியம் ரெண்டு புருவமும் ஐடெண்டிக்கலாக இருக்கக்கூடாது.. கட்டாயம் ஒன்று வளைந்தும் அடுத்தது கோடு மாதிரியும் அமைப்புடையதாகத் தான் இருக்கணும் என்று ஒரு சட்டம் வைத்திருந்தார்கள். அல்லது ஒன்றரை வயதுக் குழந்தை சுவற்றில் க்ரேயான்ஸால் போடும் தீற்று மாதிரி இருக்கணும் என்றும் சில பார்லர்களில் சொல்லிக்கொடுத்திருந்தார்கள். அந்த மாதிரியான பார்லர்களில் ட்ரெயினிங் செண்டர் அட்டாச்டு என்றும் போர்டு போட்டிருந்தார்கள். சொல்லிவைத்தாற்போல ஒரு கத்துக்குட்டி வந்து என் புருவத்தை பதம் பார்த்துவிடும்!

”ஏற்கனவே இவ மஹா மேதாவி. இதுல புருவத்தை வேற என்னமோ கோரம் பண்ணிண்டு வந்திருக்கா பாரு மூதேவி என்று நைனாவின் (ஹைக்கூ) நான்ஸ்டாப் லட்சார்ச்சனைக்கு அஞ்சாமல், அஞ்சால் அலுப்பு மருந்து சாப்பிட்டு, நான் மட்டும் மஹா நம்பிக்கையுடன் உருப்படியாக புருவம் செதுக்குபவளை தீவிரமாக தேடிக்கொண்டிருந்தேன்.

அடுத்த படியாக அந்தக் கால கட்டத்தில் ஃபேஷியல் படு ஃபேமஸ். இப்போ இருக்கற மாதிரி விதவிதமாக எல்லாம் இருக்காது. ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு ஹெர்பல் ஃபேஷியல். வித விதமான வாசனைப் பூச்சுக்களை முகத்தில் தடவி,ஊறவிட்டு, வேகவிட்டு, அப்புறம் மேல் பூச்சு பூசி, சுண்ணாம்பு மாதிரி அடித்து, காயவிட்டு, அப்புறம் அலம்பிவிட்டு அனுப்பி விடுவார்கள். இதற்கு நடுவில் மூக்கின் மேற்பரப்பில் ப்ளாக் ஹெட்ஸ் எடுக்கிறேன் பேர்வழி என்று (Saw - Part 1-7) ஜிக்ஸாவை (Jigsaw) விட அதிகமாக ரூம் போட்டு யோசித்து டார்ச்சர் செய்வார்கள். இதனால் மூக்கின் கரும்புள்ளிகள் போயிடும். ஆனால் மூக்கின் டிஃபால்ட் ஷேப் அப்படியே தான் ரீட்டெயின் ஆகும் என்பதை நினைவில் கொள்க! என்னைப்போல மூக்கு டிஃபெக்டிவ்வாக இருப்போருக்கு எந்த முன்னேற்றமும் தெரியாது.

இந்த மூக்கு ப்ளாக்ஹெட்ஸ் ரிமூவ் பண்ணப்பட்ட பெண்களுக்கு மூக்கு மட்டும் ஆஞ்சு டார்லிங் மாதிரி சிவந்து வீங்கி விடும். மோஸ்ட்லி வீட்டுக்கு வந்தவுடன் வடைமாலை போட்டு, வெண்ணைக்காப்பு சார்த்தி விடுவார்கள். மூக்கின் மேல் இருக்கும் வலிக்கு சில சமயம் கருப்பாக திட்டு திட்டாக அகிவிடும். மூக்கு ஒரு வாரத்தில் ஒரு வழியாக சரியாவதற்குள், முகம் வழக்கம் போல கருத்து விடும். இதனால் ஃபேஷியல் செய்யாமல் இருப்பதே பெட்டர் அல்ல, பெஸ்டாக்கும்.

பிஃபோர் ஃபேஷியல் அண்ட் ஆஃப்டர் ஃபேஷியல் முகத்தை பார்த்தால் பிஃபோரே பெட்டர் என்று தோன்றும். இதில் வேக வைத்து முகமசாஜ் கொடுத்த பெண், “பாத்தீங்களா மேடம், டேன் எல்லாம் நல்லா போயிடுச்சு, பளிச்சுன்னு க்யூட்டா இருக்கீங்க” என்பாள். சரிதான் போல்ருக்குன்னு ஈன்னு மவுத்ஃபுல்லாஃப் டீத்துடன் மறுபேச்சு எதுவும் பேசாமல் 200 ரூபாய்(அப்பெல்லாம் அவ்வளவு தான்) கொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்தால், ”என்னடீ மூஞ்சிக்கு ஒண்ணுமே பண்ணிக்கலையா, நாளைக்கி யாரோ பார்க்க வராளாம்” என்பார் மை மதர் தெரஸா! செல்லவ்வா வந்து, ”மூஞ்சி கருப்பா அழுக்கா இருக்கு, சோப்போட்டு அலம்பி பவுடர் போட்டுக்கோ” என்பார். (இந்த ரெண்டுமே செய்யக்கூடாது என்று அந்த பார்லர் பெண் வேலை மெனக்கெட்டு அறிவுருத்தியிருப்பாள்) அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்! மை மைண்ட் வாய்ஸ் - 200 ரூபாய்க்கு சங்கா???? (செல்லவ்வாவிற்கு பீட்டி பார்லர் எல்லாம் சுத்தமா பிடிக்காது. அதுனால மூச்!)

அப்புறம் நாள் பட, இந்த ஃபேஷியல் பண்ணிக்க போகும்போது, மேடம் புதுசா பிக்மெண்டேஷன் பேக், டிஃப்ராக்மெண்டேஷன் பேக், அமல்கமேஷன் பேக், மெட்ரிக்குலேஷன் பேக் இருக்கு. ஆய்லிஸ்கின், ட்ரை ஸ்கின், டேமேஜ்ட் ஸ்கின், ப்ளேடால கீச்சின ஸ்கின் இதுக்கெல்லாம் போட்டா அதிகமான பலன் கிடைக்கும். விலை 300 ரூபாய் தான். போட்டுக்கோங்க, முகம் கருக்கவே கருக்காதுன்னு க்ராஸ் ஸெல்லிங், அப்ஸெல்லிங் எல்லாம் செய்வார்கள். ஃபேஷியலுக்கு 300, தனியாக போடும் பேக்குக்கு இன்னொரு 300! கடைசியில் அந்த டிஸ்க் டிஃப்ராக்மெண்டேஷன் பேக்கானது நம்ம கேசவ முதலியார் நாட்டு மருந்து கடையில் கிடைக்கக்கூடிய முல்த்தானி மிட்டி/நெல்லிக்காய்ப் பொடி/கருஞ்சீரகப்பொடி, பெருஞ்சீரகப்பொடி, கடுக்காய்ப்பொடி இதில் ஏதாவது ஒன்றாகத்தான் இருக்கும்! இதுக்கு 300 ரூபாயா! 10 ரூபாயில் முடிய வேண்டிய விஷயம்!

ஒரு வாட்டி குரோம்பேட்டையில் பார்லருக்கு போயிட்டு, ப்ளீச் போட்டுக்கோங்க ப்ளீஸ்ன்னு கெஞ்சினார்கள். நானும் சூனாப்பானா வடிவேலு மாதிரி சர்த்தான் களுதைய போட்டுப்பாப்போம்ன்னு போட்டுண்டா, மூஞ்சி பூரா பொசுங்கிடுத்து! அவ ஏதோ ஆஸிட்டை போய் ப்ளீச்சா போட்டுட்டா போல்ருக்கு! ஃபயர் சர்வீஸுக்கு ஃபோனைப்போட்டு வரவழைக்க வேண்டிய கட்டாயம். நான் மட்டும் அப்போ ஒரு கஸ்டமர் சர்வீஸ் ஸ்பெஷலிஸ்டா இருந்திருந்தா அவங்களை கன்ஸ்யூமர் கோர்ட்டுக்கே இழுத்திருப்பேனாக்கும். மூஞ்சி எறிஞ்சிங் + டார்க் பேட்சஸ். இம்மீடியட்டாக ஜில் தண்ணி ஊத்தி, ஏதேதோ கிரீமெல்லாம் தேய்ச்சு கொஞ்சம் அந்த டார்க் பேட்சஸ் குறைஞ்சது! அன்னீல இருந்து நோ ப்ளீச் ப்ளீஸ்ன்னு நான் தீர்மானமா சொல்லிடுறது.

ஒரு 4-5 வருஷம் முன்னாடி ஒரு பார்லர்ல போனப்போ ஸ்டீமிங்க் பண்றதுக்கு ஒரு மெஷின் வெச்சிருந்தா. அடடே.. டெக்னாலஜி ஹேஸ் இம்ப்ரூவ்ட் வெரி மச்ன்னு மகளிர் மட்டும்ல வர பேஷண்ட் மாதிரி சந்தோஷப்பட்டுண்டு மூஞ்சியை கொடுத்தா.. அந்த மெஷின் ஏதோ ரிப்பேர் போல்ருக்கு.. அதுலேந்து கொதிக்கும் வென்னீர்த்துளிகள் தேமேன்னு படுத்துண்டு இருந்த எம்மேல விழு, அலறி அடிச்சுண்டு ஓடியாந்துட்டேன்! பாருங்க, ஃபேஷியலுக்கு போன இடத்துல தீப்புண்கள்! ப்ளடி பிட்பாக்கெட்!

கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம் மாதிரி மை நைனா முகலிவாக்கம்ங்கற ஒரு இடத்துல வீடு கட்டினார். அத்துவானக்காடு. அங்கே பார்லரே இல்லை. எதுக்கெடுத்தாலும் போரூர் ஜங்க்ஷன் தான் போகணும். கொஞ்ச காலத்துல பக்கத்துலேயே ஏஞ்சல்ன்னு ஒருத்தி பார்லர் திறந்தா. பழக்கப்படுத்திண்டு அக்கவுண்ட் வெச்சுக்கலாமேன்னு போய்ப்பாத்தோம். பேர் தான் ஏஞ்சல். அங்கே வேலை செஞச ரெண்டு ஸ்டாஃபும் பூச்சாண்டீஸ் மாதிரி தான் இருந்தா. அந்த CEO அதை விட பயங்கரம். உஸ்ஸ்.. சரி.. அவங்க வேலை எப்படின்னு பார்த்தோமானா.. புருவம் ஷ்யுவர் ஷாட் அலங்கோலம் பண்ணிட்டுத்தான் விடுவாள். கண்டிப்பாக ஏதாவது ஒரு சொதப்பல் இருக்கும். நகங்களை வெட்டாமலே பெடிக்யூர் பண்ணிடுவா. எல்லா வேலையுமே அரைகுறை. மொத்தத்துல அங்கே ஐஸ்வர்யா ராய் போனாலும் பூச்சாண்டி மாதிரி தான் திரும்பி வரணும். பேசாம பூச்சாண்டி பேஸ் ஸ்டேஷன்னு பேரை கன்வீனியண்டா மாத்தி வெச்சுக்கலாம் இல்லே?

இப்பெல்லாம் நோ ஃபேஷியல். இருக்கற முகமே போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து! இப்போ தெரிஞ்சதா என் அழகின் ரகஸியம்?

Tuesday, August 20, 2013

அருண் வருணின் வரலக்ஷ்மி விரதம்



தங்கையாத்துல பூஜை பார்த்துட்டு, நோன்புச்சரடு கட்டிக்கலாம்ன்னு போயிருந்தேன். வழக்கம் போல வீடு ரெண்டா இருந்தது. உபயம்: அருண் வருண். கிடுகிடுன்னு பேசிண்டு, சிரிச்சுண்டு, வேடிக்கை பார்த்துண்டு, ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் கதை எல்லாம் அம்மாகிட்டே சொல்லிண்டு, வருண் பண்ற ரகளையெல்லாம் ஃபாலோ அப் பண்ணிண்டே,  கொழக்கட்டை பண்ணி முடிச்சோம்.

நான் போறதுக்குள்ளே அம்மா பாயஸம், சித்ரான்னம், மம்மு, பப்பு எல்லாம் பண்ணியாச்சு. அம்மனை அழைக்கணும் போய் கோலத்தை போடுன்னு அம்மா சொல்லவும். நானும் ட்ரை அரிசி மாவை எடுத்துண்டு போய் ப்ரும்ம ப்ரய்த்னம் பண்ணி படுத்துண்டு படிக்கோலம், ஹால் பூரா எக்ஸ்டெண்டடா வர மாதிரி போடணும்ன்னு தான் நினைச்சேன். ஆனா பாருங்க.. அந்த படிக்கோலமானது.. ஒரு ராம்பஸ் மாதிரி ஆயிடுத்து. என்னமோ ஏரோபிக்ஸ் பண்ணறா மாதிரி கையெல்லாம் கோணலா.. ஒரு பக்கமா இழுத்துண்டு சாய்ச்சு, மஹா கண்ணறாவியா போயிடுத்து.

ஒரு சின்ன சதுரம் போடுறதுக்கு இவ்வளோ நேரமான்னு அம்மா வந்து பார்த்துட்டு ஹை குட் ஜாப்ன்னு சொன்னப்போ நான் அதிர்ந்தேன். அதுக்கு அம்மா,  அவங்க வரைஞ்ச கோலத்தை காட்டினாங்க. என்னமோ கிட்னி ஃபெயிலியர் ஆன வியாதிஸ்தன் மாதிரி ரொம்ப அகலமா, மந்தமா இருந்தது. வேறு யாருக்காவது படிக்கோலத்தை பார்த்தா இப்படியெல்லாம் தோணுமா? பின்னூட்டம் ப்ளீஸ். பல முகங்கள், பாவங்கள், குணாதிசயங்கள் எனக்கு பளிச்சுன்னு நினைவுக்கு வரும். இது கூட ஒரு வியாதி தான்!

வஸ்த்திரம் பண்ணியாச்சான்னு வழக்கமா லாஸ்ட் மினிட் ஷவுட்டிங் எதுவும் இல்லை.. இப்பெல்லாம் ரெடிமேடா கிடைக்கிறாதாம். (நிம்மதி, அந்த இலவம் பஞ்சை கிள்ளி, விதை எடுத்துட்டு, அதை கண்டிஷன் பண்ணி, அதை ஒரே மாதிரி உருட்டி நடுவுல பே பேன்னு வராம, ஸ்ப்ரெட் பண்ணி, அதுக்கு மஞ்சள் குங்குமம் வெச்சு.. உஸ்ஸ்.. நமக்கு டிஸைனர் வஸ்த்ரம் தைக்கறது கூட சுலபம் போல்ருக்கே?)

சரடு ரெடியா ரெடியான்னு ரெண்டு மூணு வாட்டி அம்மா ஞாபகப்படுத்தினப்போ தான் தங்கைமணிக்கு சரடு வாங்க மறந்த விஷயமே ஞாபகத்துக்கு வந்தது. உடனே அவசரத்துக்கு இந்த மளிகைக் கடையில் பொட்டலம் கட்டும் நூல் சரடு இருக்கே.. அதை எடுத்துண்டு வந்தா.. அவாத்துல இன்னும் 8-10 ஜென்மத்துக்கு வரலக்ஷ்மி நோன்புக்கு சரடு வாங்க வேண்டி இருக்காது. அவ்ளோ பெரிய பண்டில் சரடு இருக்கு. சொல்ல விட்டுப்போச்சு.. அந்த சரடைக் கையில கட்டிண்டு மூணாவது நாளே ஒரே கையெல்லாம் அரிச்சிங்ஸ்.. வீசி எறிஞ்சுட்டேன். மூணாவது சரட்டில் ஏழாவது முடிச்சை கொஞ்சம் அழுத்தி போடும்போதே.. பொட்டுன்னு அறுந்து போயிடுத்து!

ஒரு வழியா அம்மனை அழைச்சாச்சு. வருண் மட்டும் உட்காராமல் ரகளையை மஹா ஆவேசமாக தொடர்ந்தான். பூஜை ஆரம்பிக்கும் சமயம் வந்தப்போ அவனை அடக்கி பக்கத்துல உக்கார வெச்சுண்டேன். வருண் பாரு, இப்போ கணபதி பூஜை பண்ணணும். எங்கே சொல்லு, கஜானனம்..ன்னு சொல்லி அவனை பூஜையில இண்ட்ரெஸ்ட் வரும்படி மோட்டிவேட் பண்ணிணேன். உடனே, சமர்த்தா சுலோகம் மொத்தத்தையும் சொல்லிட்டு மறுபடியும் முதல்லேந்து சொல்ல ஆரம்பிச்சான். பாரு, பிள்ளையார் ஜேஜா தான் எப்போவுமே எல்லாத்துக்குமே ஃபர்ஸ்ட் ஜேஜா.. ”பெய்யம்மா அப்போ செகண்ட் ஜேஜா யாரு?”ன்னு “டாடி எனக்கொரு டவுட்டு”அப்படீங்கற முன்னுரையே இல்லாமல் கேட்டுட்டான். நானும் எவ்வளவோ சமாளிச்சிங்ஸ் ஆஃப் இண்டியா..வுட மாட்டேங்கிறான். ”செகண்ட் ஜேஜா யாரு பெய்யம்மா”ன்னு விடாம நச்சினான். சரி சொல்லு.. கஜானனம்ன்னு மறுபடியும் ஆரம்பிச்சு விட்டேனா, அதையே இண்டெஃபனட் லூப்ல சொல்லிண்டு இருந்தான்.

பூவை மூணு பங்கா பிரின்னு அம்மா சொல்லியிருந்தா.. எல்லாத்தையும் ஆய்ஞ்சு மூணு பாத்திரத்தில் போட்டிருந்தேன். அது வரைக்கும் சோஃபாவில் உக்காண்டிருந்த அருண், எழுந்து வந்து அவாம்மா பக்கத்துல ஒட்டிண்டு உக்காந்து, பூ வெச்சிருந்த பாத்திரத்தை பக்கத்துல இழுத்து வெச்சுண்டு..அஷ்டோத்திரத்துக்கு அத்தனை பூவையும் ஃப்ரிஸ்பீ மாதிரி எறிய ஆரம்பிச்சுட்டான். பூவெல்லாம் பூஜை ரூம் பூரா சிதறி, ஒரே களேபரம். பார்க்க படம். சின்ன வயசுல வாசல் தெளிப்போமே.. அதே மாதிரி பூ பாத்திரத்தை வருண் வெச்சுண்டு பூக்களை நீர் போல் பாவித்து அள்ளி அள்ளி தெளிச்சுண்டு இருந்தான். ச்சே.. இறைச்சுண்டு இருந்தான். நிற்க.. இப்போ வெறும் பிள்ளையார் பூஜை மட்டும் தான் முடிஞ்சிருக்கு. இன்னும் அங்க பூஜை, லக்ஷ்மி அஷ்டோத்திரம் எவ்வளவோ இருக்கு.. அட்சதை கூட மிஞ்சாது போல்ருக்கேன்னு நினைக்கும்படி அருண் வருண் பூவெல்லாம் கேட்டுப்பார்ன்னு மொத்தத்தையும் இறைச்சுட்டாங்க!

தூபம் தீபம் காட்டும்போது மணி அடின்னு அருண் கிட்டே ஒரு ஜாப் டெலிகேட் பண்ணி இருந்தாங்க. அவன் இன்னொரு மணியும் எனக்கு வேணும்ன்னு சொல்லி மேல் வீட்டுத்தாத்தாவுக்கு ஹார்ட் அட்டாக் வரும்படியாக, அவருக்கு ஆம்புலன்ஸ் மணி அடிக்கும் அளவுக்கு மஹா ஆக்ரோஷத்துடன் தலைகீழாக பிடிச்சுண்டு அந்த மணியை அடிச்சு உஸ்ஸபா...

மந்த்ர புஷ்பம் போடும்போது அம்மா, அருண் வருணிடம் “தாயே நல்ல புத்தி கொடும்மான்னு, நான் சமர்த்தா இருக்கணும்மா”ன்னு வேண்டிக்கோங்க ன்னு சொல்ல, தங்கைமணி ’களுக்’குன்னு சிரிச்சுட்டா.” என்ன சிரிப்பு?”ன்னு அம்மா முறைக்க, ”அதில்லைம்மா.. இந்த மாதிரியெல்லாம் பிரார்த்தனை பண்ணா, வரலக்ஷ்மி தேவி பாவாடையை (இந்தியன் படத்துல மாப்பிள்ளையின் காரில் சாணி தட்டும் கஸ்தூரியை மாதிரி) வரிஞ்சு கட்டிண்டு தலையில இருக்கற தேங்காயை பாலன்ஸ் பண்ணியுண்டு எஸ்கேப் க்ரேட் எஸ்கேப்புன்னு கத்தியுண்டே ஓடிடுவாம்மா”ன்னு ரொம்ம்ப அப்பாவியா மூஞ்சியை வெச்சுண்டு சொல்றா!ஏண்டீன்னு அம்மா கேட்டப்போ, ”பின்னென்னம்மா நிச்சியம் கொடுக்க முடியாததை, நடக்காததையெல்லாம் பிரார்த்தனையில கேட்டா? அம்மன் என்ன பண்ணுவா? ”

கொஞ்ச நேரம் நிம்மதியா பூப் போட்டு அம்மனை ஸ்மரிச்சு,  நிவேத்யம் பண்ணி சரடு கட்டும் சடங்கு ஆகறதுக்குள்ளே இப்போவே எனக்கு ஆக்ட் 2 பாப்கான் வேணுன்னு வருண் அடம். இதுல காமெடி என்னன்னா.. ஒரு பெரிய டப்பா நிறைய ராஜாராம்ஸ் பாப்கான் (பொறிச்சதே) இருக்கு. அதை தின்ன மாட்டானோ.. இல்லே இது தான் வேணும்.. இன்னிக்கே.. இப்போவேன்னு ரகளை. மை மதர் முடியாதுன்னு ரொம்ப ஸ்ட்ரிக்டா மறுக்கவே, நான் வீத்தை வித்து போறேன்னு(அருஞ்சொற்பொருள்: வீட்டை விட்டு போறானாம்) அவன் செருப்பை போட்டுண்டு கிளம்பிட்டான். ஒருத்தரும் அவனை கண்டுக்கலை. அதிர்ச்சியில நான் நிக்கறதை பார்த்து, ”தங்கைமணி, அதெல்லாம் சும்மா.. பில்டப்பு.. கீழே போய் ஃப்ளாட் பசங்க கூட விளையாடிட்டு வந்துருவான்” அப்படீங்கறா. அதே மாதிரி 5 நிமிஷத்துலேயே (இன்னும் கொஞ்ச நேரம் விளையாடி இருக்கக் கூடாதோ) வந்துட்டன்!(பஞ்ச தந்திரத்தில் யூகி சேது சொல்லுவாரே அதை அப்படியே ஆண்பாலுக்கு மாத்திக்கோங்க)

இந்தக் களேபரத்துல அருண் மட்டும் ரொம்ப அக்கறையா சோஃபா கைப்பிடியின் மேல் ஏதோ துணியை போட்டுண்டு இருந்தான். ஆஹா.. இதுவல்லவோ குழந்தைன்னு அவனை கட்டிண்டு கொஞ்சினா.. குறும்பு கொப்பளிக்க சிரிக்கறான். என்னன்னு பார்த்தா, விபூதி டப்பா காலியா அவன் கையில வெச்சுண்டு இருக்கான்! என்ன பண்ணினே அருண்ன்னு ஹை டெஸிபெல்ல கத்தினேன். சிரிச்சுண்டே இருக்கான். மெதுவா அந்த துணியை நீக்கிப்பார்த்தேன். சோஃபா கைப்பிடியின் மேல் மூணு லேயர்கள் போட்டிருந்தான். 1. சோஃபா கவர், 2. ஒரு ஈரத்துண்டு 3.மூங்கிலால் ஆன ஜபிக்கும் பாய், அந்த சோஃபா கவருக்கு மேல மொத்த விபூதியையும் கொட்டி வெச்சிருக்கான்! நைஸ்ஸா அதை மறைக்கறதுக்காக இவ்ளோ டெக்கரேஷன்.. ஒரு ஈரத்துண்டு வேற.. ஏதாவது சைண்டிஃபிக் அப்ஸார்ப்ஷன் டெக்னிக்கா இருக்குமோ? இவன் ஏன் (இன்னும்) ஏதாவது ஒரு சாக்கை வெச்சுண்டு கோச்சுண்டு வீட்டை விட்டு போகலைன்னு யோசிக்க ஆரம்பிச்சுட்டேன்.



ஆரத்தியின் போது சாமலே மினாஸி... சுண்டரேஸ ஸாஸி (சியாமளே மீனாக்ஷி சுந்தரேஸ்வர சாக்ஷியாமா)ன்னு வருண் பாடியது அம்மனுக்கு மஹா பிரஸன்னம்!இதி வரமஹாலக்ஷ்மி பூஜை சம்பூர்ணம்!

Sunday, August 4, 2013

ஃபில்டர் காஃபி

ஆளாளுக்கு ஃபில்டர் காஃபியை பத்தியே ஸ்டேட்டஸ் போடுறாங்க ஃபேஸ்புக்ல.. அதான் நாம அதைப் பத்தி இதுவரை ஒண்ணுமே எழுதலியேன்னு எழுத வந்தேன். 

போடியில் எஸ்டேட்டிலிருந்து காப்பிக்கொட்டை வரும். அதை அவ்வா பார்த்து பத்திரமாக வறுத்து, ஒரு பெஞ்சியில் கனெக்டப்பட்ட காஃபி கிரைண்டிங் மெஷினில் போட்டு அதன் கைப்பிடியை சுழற்றினால் திரித் திரியாய் பொடி விழும். 



பெரிய பித்தளை ஃபில்டரில் தான் காஃபி போடுவார் அவ்வா. விறகடுப்பு (அ) கும்முட்டி அடுப்பில் (ஆமா, அதுலே எல்லாம் எப்படி அடுப்பை ’சிம்’ பண்ணினாங்களோ?) ஃப்ரெஷ் எருமைப் பாலை காய்ச்சி நுரை ததும்ப, ஆவி பறக்கும் காஃபி அருமையாக டபராவுடன் கொடுப்பார். 

காலப்போக்கில் அது ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஃபில்டர் ஆச்சு. தீக்‌ஷித் காஃபி, சித்ரா காஃபி, ராஜாஸ் காஃபி, அப்புறம் 90களில் லியோ, நரஸுஸ், காஃபி டே, கோதாஸ் காஃபி  என்று பொடியும் மாறியது. 


முன்னெல்லாம் நம்மாத்துல பெரிய ஃபில்டர்ல ரொம்ம்ம்ம்ப ஸ்ட்ராங் எல்லாம் இருக்காது. சுமாரா ஒரு மாதிரி சிக்கனமா போடுவா. ஸ்பூன் கணக்கு தான். 5 ஸ்பூனுக்கு மேல போடாதேன்னு அம்மா இன்ஸ்ட்ரெக்‌ஷன் குடுத்துட்டு வெளீல போவா. அவ்ளோ தான் முதல் முதலான என் காஃபி எக்ஸ்பீரியன்ஸ். 

கல்யாணத்துக்கப்புறமா ரங்ஸ் வந்து தான் காஃபி போடும் என் திறமையை வளர்த்தார். ஒரு நாள் ஃபில்டரில் தண்ணீரை , நாயர் கடையில் சாயா ஆத்துர மாதிரி தூக்கி விட்டேன்.. ரங்ஸ் துடிச்சு போயிட்டார். காஃபியோ கன கண்றாவி! அப்போ தான் எனக்கு ஞானோதயம், கீத்தோபதேசம் எல்லாம் ரங்ஸ் கிட்டேந்து கிடைச்சது. ரெண்டு பேர் தானே.. குட்ட்ட்டியூன்ன்ன்ன்ண்டு ஃபில்டர். அதுல கரெக்டா பொடி போட்டு, மெதுவா துளியூண்டு  தண்ணி ஊத்தி, ஒரு bed form பண்ணணுமாம். அதுக்கப்புறம் ஒரு சில நிமிஷங்கள் கழிச்சு அடுத்த ரவுண்டு மறுபடியும் இன்னும் கொஞ்சூண்டு. இப்படி ரெண்டு மூணு வாட்டியா விட்டா.. செம்ம திக்க்க்க்க்க்க்க்க்க்கா ’கள்ளிச்சொட்டு’ என்று அன்புடன் அழைக்கப்படும் டிகாஷன் இறங்கும்ங்கற அந்த சீக்ரெட்டை எனக்கு சொல்லிக் கொடுத்தார். அத்துடன் அல் ரவாபி ஃப்ரெஷ் மில்க்கை காய்ச்சி அளவ்வா சர்க்கரை போட்டு ஒரே ஆத்து ஆத்தி, நுரை ததும்ப குடிச்சா.. யப்பா... Blissful! (எல்.கே இந்த அருமையான காஃபியை குடிச்சா கிடைக்கும் உணர்வுக்கு என்ன பேர்ன்னு கேட்டிருந்தார் - அதுக்கு பெயர் : ’ஜென்ம சாபல்யம்’) .. ஆஹா.. அதி அற்புதம்!

நான் அம்மாகிட்டே அடிக்கடி ”அம்மா காஃபி கிடைக்கும்ங்கற ஒரே காரணத்துக்குத்தாம்மா நான் காலேல எழுந்துக்கறேன்.. இல்லேன்னா தூக்கத்தை மத்தியானம் வரை கண்டின்யூ பண்ணிடுவேனாக்கும்”ன்னு சொல்லிருக்கேன். அம்மாவும், “ஆஹா, இதுவல்லவோ வாழ்க்கைக் குறிக்கோள்.. சூப்பர்டா செல்லம்”னு உச்சி முகர்ந்து ச்சே.. உச்சி மண்டையில நணங்குன்னு சவுண்டு வரமாதிரி ஒரு குட்டு வெச்சு, அடி உதையெல்லாம் கொடுத்திருக்கார். ஹி ஹி!

முன்னாடியெல்லாம் ரங்ஸ் எந்த ஹோட்டலுக்கு போனாலும் டபுள் ஸ்ட்ராங், டபுள் சர்க்கரைன்னு ஆடர் பண்ணுவார். தனக்கு மட்டும் சொல்லிண்டா தான் பரவாயில்லியே! எனக்கும் அப்படியே ஆடர் பண்ணித் தொலைச்சு.. நான் கொஞ்சம் பால், இன்னும், இன்னும்ன்னு கேட்டு மொத்தம் மூணு காஃபி ஆயிடும்.(எனக்கு மட்டுமே சொன்னேன்!) கஷ்டம் கஷ்டம்!

ரங்ஸுக்கு ஒரு டம்ப்ளர் கள்ளிச்சொட்டில் ஒரு சொட்டு, ஒரே சொட்டு பால் போறும். எனக்கு காலரைக்கால் டம்ப்ளர் கள்ளிச்சொட்டில் மீதி ஃபுல்லா பால். சரி ரெண்டு பேர் தானே.. கொஞ்சம் வேரியேஷன்ஸ் இருந்தாத்தான் என்ன?ன்னு நீங்க கேக்கலாம். கரெக்ட்.. ஆனா பெரிய குடும்பங்களில் இருக்கும் வேரியேஷன்ஸ் இருக்கு பாருங்க... 

அம்மாவின் நிர்வாகத்தில் இருக்கும் கிட்டத்தட்ட ஒரு காஃபி ஷாப் தங்கைமணியின் கிச்சனாகும். மை நைனா மீடியம் ஸ்ட்ராங்.. சுகர் ஃப்ரீ போடணும்.  தங்கையாத்துக்காரருக்கு தக்குனூட்டு டம்ளரில் முழுதும் கள்ளிச்சொட்டு ப்ளஸ் இன்க் ஃபில்லரில் பால் விடணும். சர்க்கரை பிடாது.. டிஸயர் ஷுகர்.  தங்கை மீடியம் ஸ்ட்ராங்.. ஆனா வெரி வெரி லைட் சுகர் அல்லது டிஸயர், அருண் வருண் ஃபுல் மில்க் ப்ள்ஸ் இன்க் ஃபில்லரில் கள்ளிச்சொட்டு டிகாஷன்.இதுல செல்லவ்வாவுக்கு மட்டும் ஒன்றரை டம்ளர் வெந்நீர் ப்ளஸ் இன்க் ஃபில்லரில் கள்ளிச்சொட்டு காப்பி(கலந்தது தான், இந்த மாதிரி கள்ளிச்சொட்டு பூலோகத்துல யாரும் குடிக்க மாட்டாங்கப்பா, எனக்கெல்லாம் ஜீரணம் ஆகாது”!) அப்பாடி எல்லாருக்கும் கொடுத்தாச்சுன்னு நிம்மதி பெருமூச்சு விடும் நேரத்தில் மை நைனா செக்கண்ட் காப்பிக்கு ரெடி! இவ்ளோ களேபரத்தில் மை மதர் தெரஸா - பாவம் தான் ஃபர்ஸ்ட்  காஃபி குடிச்சோமா இல்லியான்னு மறந்துஃபையிங்..இதுனாலேயே இந்த கஸ்டமைஸ்டு காஃபி செக்‌ஷனை அவுட்ஸோர்ஸ் பண்ணலாமான்னு ஷி இஸ் யோசிச்சிங் ஆஃப் தி!ஆனா நிச்சியம் எக்ஸ்பெக்டட் அவுட்கம் இருக்காதுன்னு ஷி இஸ் வெரி வெரி ஷ்யூர்! த்சோ த்சோ! 

இந்த ஃபில்டர்கள் சில சமயம் செய்யும் புல்லுருவி வேலைகள் இருக்கு பாருங்க. மெதுவ்வ்வ்வா பத்திரமா பார்த்து விட்டாலும் டர்ர்ர்ர்ர்ன்னு குட்டிப்பாப்பா மூச்சா போனாமாதிரி இறங்கிடும். வாசனையும் மிஸ்ஸிங்.. லை....ட்ட்டா இருக்கும். இதுக்கு முக்கியமான காரணம் வந்து, பொடியை ரொம்ம்ம்ம்ப லூஸாக ஃபில்டரில் போடுவது. அந்த மாதிரி தருணங்களில் மை மதர் தெரஸா என்ன சொல்லியிருக்கான்னா, விழுந்திருக்கும் டிகாஷனை மறுபடியும் சர்வ ஜாக்கிரதையாக எடுத்து அகெய்ன் புட் இட் இன் தி காஃபி பொடின்னு சொல்லி இருக்கா. அப்படி பண்ணும்போது இந்த வாட்டி திக்கா விழுமாம். பேக் டு கள்ளிச்சொட்டு ஃபார்ம். 

சில சமயம் இந்த ஃபில்டர்ல பொடியும் போட்டு தண்ணியும்  விட்டா கல்லூளி மங்கன் மாதிரி கம்முன்னு இருக்கும். டிகாஷன் விழுந்தாத்தானே? இதுக்கு முக்கியமான ரீஸன்ஸ் ஃபில்டர் துவாரங்கள் அடைச்சுஃபிக்கேஷன் தான். கான்ஸ்டிப்பேஷன் வந்தாப்புல முக்கி முனகி ஒரே ஒரு சொட்டு ஒன்லி ஃபாலிங்ஸ்.. வெரி ஏமாத்திங்ஸ் அண்ட் ஃபீலிங்ஸ்.. சில பேர் ஆத்துல இடுக்கியைக் கொண்டு ஃபில்டரின் மண்டையில் லொட்டு லொட்டுன்னு தட்டுவா.. இதனால் ஃபில்டரின் மண்டை விளிம்பில் பலத்த காயம் ஏற்படுமேயன்றி கள்ளிச்சொட்டு விழாது என்பதை புரிந்த மங்கையர் அரிதாததலால், முக்காவாசிப்பேர் ஆத்துல அந்த ஃபில்டரானது, நசுங்கிப் போன அலுமினியப் பாத்திரம் மாதிரி தான் இருக்கும். ப்ளஸ், இவா அதை படுத்தின பாட்டுக்கு அது தன்னொட மூடியை டைவர்ஸ் செய்திருக்கும். காஃபியின் மணம் எஸ்கேப்பாகமல் இருக்க மூடலாம்ன்னு பாத்தா, கொள்ளாது. 

அதுக்கு அவ்வா என்ன பண்ணுவான்னா, அந்த பித்தளை ஃபில்டரின் அடிப்பாகத்தை விறகடுப்பில் கொஞ்ச நேரம் காட்டுவா.. அதுல அடைஞ்சிருக்கற காப்பிப் பொடியெல்லாம் எரிஞ்சு, துளைகள க்ளியர் ஆயிடும். அப்போ வெளிச்சத்தில் வெச்சு பாத்தா, க்றிஸ்டல் க்ளியரா.. பெர்ஃபெக்ட்லி கான்ஸெண்ட்ரிக் சர்க்கிள்ஸில் புள்ளிகள் தெரியும்.. அது கூட ஒரு சந்தோஷமா இருந்தது. 

இந்த மாதிரி பொடி போட்டும் டிகாஷன் விழாம சதி பண்ணறதுக்கு இன்னோரு காரணம் வாட் மீன்ஸ், பொடி ரொம்ம்ம்ம்பவும் நைஸாக போட்டு அரைத்துவிடுகிறார்கள் கடையில்.

 பாலக்காடு கல்பாத்தியில் என்ன ஒரு ஐடியா பாருங்களேன்.. அக்ரஹாரத்துக்கு நடுவில் ஒரு காஃபி டே அவுட்லெட் திறந்திருக்கா! மாமி, கொஞ்சம் காப்பிப் பொடி தரேளான்னு யாரும் இரவல் கேட்டு வந்தா.. அதான் கடை திறந்திருக்கேன்னு சொல்லி விரட்டி விட்டுடுவா! ”ஹி ஹி.. மாசக்கடைசியா இருக்கேன்னு கேட்டேன்” னு தலையைச் சொறிஞ்சா.. என்ன பண்ணுவாளா இருக்கும்?

பொடியை ரொம்ம்பவே நைஸாக அரைச்சா, ஃபில்டரில் விழாது..விழவே விழாது.. ஒன்லி காஃபிமேக்கரில் தான் விழும். வொய் மீன்ஸ் காஃபி மேக்கரில் ஃபில்டர் படு ஃபைன் துவாரங்ள்ஸ் ஆர் தேர். ஹவ் எவர்.. எங்களுக்கு காஃபி மேக்கர் அவ்வளவாக பிடிக்கறதில்லை. ஒன்லி ட்ரெடிஷனல் மெத்தட்ஸ் ஆர் பெஸ்ட் சூட்டட் ஃபார் அவர்  காஃபி நீட்ஸ்!

அபுதாபியில் இருந்தப்போ “இத்னி ஸ்வாதிஷ்ட் காஃபி மைன்னே கபி நஹி பீ ஹை”ன்னு விஷாகாவும், “ஆப்கி காஃபி கைஸே இத்னா ஸ்பெஷல் பன்தா ஹை”ன்னு ரேஷ்மாவும் கேட்டது அடிக்கடி நினைவுக்கு வரும்.. நாக்கு நாலடி நீளமா இருந்தா.. காஃபி என்ன, தண்ணி கூட ஸ்வாதிஷ்ட்டா சவரணையா குடிக்கலாம்! 

நமஹ்  காஃபீ... பத்தயே.. ஹர் ஹர மஹாதேவா...... :P :P :P

Friday, July 26, 2013

கம்ப்யூட்டர் கன்ஃப்யூஷன்ஸ் - எனக்கும் கம்ப்யூட்டருக்குமான அபூர்வ பந்தம் Part -2 - முற்றும் :)

பாத்தீங்களா.. நான் நினைச்ச மாதிரியே.. இது ரொம்ப நீள்... பதிவா போயிடுத்து.. மன்னிக்கவும்.

இதனுடைய முந்தய பதிவு  பாகம் -1 இங்கே இருக்கு

அப்படியாக ”இவள் கோலப்பொடி விற்கத்தான் லாயக்கு”ங்கற ரீதியில எனக்கு ப்ரில்லியண்ட்ஸ் சர்டிஃபிக்கேட் எல்லாம் கொடுத்தாங்க.. அதான் ஏதோ டிப்ளமா இன் சம்திங் சம்திங்.. அதெல்லாம் எங்கே இருக்கோ.. ஒருத்தருக்கும் தெரியாது. இது வரை ஒரு நாய் கூட அதை சீண்டினதில்லை! இதுக்கு யூனிவர்ஸிட்டி மாதிரி ஒரு சிவப்பு சீல்! அதுக்கு ஒரு வைஸ் சான்ஸில்லர் சிக்னேச்சர் வேற! ஹய்யோ ஹய்யோ! ஒவ்வொரு வாட்டி இண்டர்வ்யூவுக்கு போகும்போதெல்லாம் அப்பா, அந்த சர்டிஃபிகேட் எடுத்துண்டியான்னு மறக்காம கேப்பார்.. ஃபைலெல்லாம் எடுத்துண்டு வேகாத வெயில்ல டி.எம்.எஸ் போய் இறங்கினா.. லேசு பாசா கேள்வியெல்லாம் கேட்டுட்டு ”வீ வில் கெட் பேக் டு யூ”ன்னு கழட்டி விட்ருவாங்க.. நான் தான் படு பயங்கர ப்ரில்லியண்ட்ன்னு எல்லாருக்கும் தெரியுமே!

பைடெக் வந்தப்போ கொஞ்சம் அட்வான்ஸ்ட் கோர்ஸஸ் எல்லாம் படிக்கலாம்ன்னு நினைச்சேன்(க்கும் பேஸிக் கோர்ஸ்ல தான் புலி ஆயிட்டேன்ல?)ஸி++, ஜாவா, விஷுவல் பேஸிக், ஆரக்கிள், பவர் பில்டர், ஹெச்.டி.எம்.எல், ஸி.ஜி.ஐ பேர்ல், இப்படி புரியாத மொழியில் பல கோர்ஸுகளுக்கு சேர்ந்தேன்.24 அவர்ஸ் லேப் உண்டு என்றார்கள், அதுக்கு அட்வான்ஸ் புக்கிங் உண்டாம். இருக்கற செஷனே நான் ஒழுங்கா அட்டெண்ட் பண்ணினதில்லை. இதுல எக்ஸ்ட்ரா செஷன்ஸ் வேறு!  ஒரு எழவும் சத்தியமா என் (மர) மண்டையில் ஏறவே இல்லை! போனாப்போறது.. அப்பா பாவம்ன்னு க்ளாஸுக்கு போயிட்டு வந்தேன். பின்னே என்னவாம், ”இவ பணத்தை கட்டிடு க்ளாசுக்கே போக மாட்டேங்கிறா பீடை”ன்னு அஷ்டோத்திரம் வாசிக்கறார் அவர். இதுக்கு ஒரு சில ரெக்காடுகளை ஃபில்டர் போட்டு புழிஞ்சு எடுத்துட்டு grant/revoke பண்ணும் புரியாத SQL Queryஏ எவ்வளவோ பெட்டராக இருந்தது.

கம்ப்யூட்டர் க்ளாஸுக்கு போகும்போது நடக்கும் ஒரே நல்ல விஷயம் குரோம்பேட்டையிலிருந்து தாம்பரம் வரை சைக்கிளில் ட்ராஃபிக்கே சுத்தமாக இல்லாத ஜி.எஸ்.டி ரோடில் ஜாலியாக போவது. என்ன ஒரு சிம்பிள் வாழ்க்கை அது? அங்கே நடந்த சுவாரஸ்யமான விஷயம் இதான்: அங்கே lab அஸிஸ்டெண்டுகள் இருப்பார்கள்.

லேப் செஷன் முடியும் போது நிச்சியமாக கம்ப்யூட்டரை ஆஃப் பண்ணனுமாம். ப்ளீஸ் ஷட்டவுன் தி கம்ப்யூட்டர் வென் யூ லீவ்ன்னு சொல்லி இருந்தார். அவர் பார்க்கும்போது நான் ரொம்ப பெருமையா, நேரா அந்த ஆன்/ஆஃப் சுவிட்சை டப்புன்னு ஆஃப் பண்ணிட்டேன்.. கையெழுத்து போடாதீங்க தம்பீ.....ன்னு அவர் ஓ....டி வருவதற்குள் பாவம் அந்த கம்ப்யூட்டர் சப்த நாடியும் ஒடுங்கி ஆஃப் ஆயிருந்தது. அடுத்த பதினஞ்சு நிமிஷம் அந்த Lab faculty எங்கப்பா மாதிரி ஒரே அஷ்டோத்திர சத நாமாவளி சொல்லி எனக்கு அர்ச்சனை பண்ணினார்.. ஓஹோ. இதுல இவ்ளோ இருக்கான்னு நினைச்சுண்டேன். அந்த ஒரு வருஷத்தில் எனக்கு பிடிச்ச ஒரே விஷயம் ஒவ்வொரு சனிக்கிழமையும் ஜாலியா பஜனை இருக்கும்.. ஃபேக்கல்டியும் ஸ்டூடண்ட்ஸும் சேர்ந்து புதுப்புது டாப்பிகில் ப்ரெஸெண்டேஷன்(யாருக்கு வேணும்?), க்விஸ் (ரெண்டு வருஷம் இந்தமாதிரி இன்ஸ்டிட்யூட்களில் பஜனை பண்ணினதுனால, இதெல்லாம் கொஞ்சம் தெரிஞ்சது எனக்கு) அப்புறம் ஆட்ஸாப்(ஹை), டம்ப்சராட்ஸ்(அடெடே, பட் ஒன்ல்லி டெக்னிக்கல் டேர்ம்ஸ் :( )இதெல்லாம் நடந்தது. ஷி இஸ் வெரி ஸ்மார்ட்ன்னு சொல்லிகிட்டாங்க..  பொத்தாம் பொதுவா. ஹி ஹி.. நான் ராம் இன்ஃபோடெக்(வேளச்சேரி)ல போய் ஒரு ப்ரோக்ராமிங் டெஸ்டு எழுதி, அந்த ரிஸல்டப்போ என்னை (மட்டும்) பெர்ஸனலா கூப்பிட்டு..காரித்.. சரி விடுங்க.. அந்தக் கதையெல்லாம் இப்போ எதுக்கு? தோ பாருங்க.. கல்லெல்லாம் விட்டெறிஞ்சீங்கன்னா உங்க மானிட்டர் தான் பாழாகும்! அப்புறம் ரீயெம்பர்ஸ்மெண்ட்டெல்லாம் கேட்கலாது... ஓக்கே? ப்ளீஸ் கூல் டவுன்.

கொஞ்ச நாள்ல ப்ரவுஸிங் செண்டர்ஸ் வந்துடுத்து. மெட்ரோ சிட்டியான குரோம்பேட்டையிலும் அப்படி ஒரு அபூர்வ சாதனமாக சக்திகுமார் சாஃப்ட்னெட் விளங்கித்து. இப்போ நளாஸ்/ பூர்வீக்கா இருக்கும் இடமானது 1998ல் ஒரு ஸ்டோரி பில்டிங்.. சரி சரி.. ஒரு மாதிரி கொட்டகை போட்ட மொட்டை மாடியாக இருந்தது. அங்க தான் சக்திகுமார் சாஃப்ட்னெட்டை ஆப்பரேட் பண்ணிண்டு இருந்தாங்க. எங்களது எல்லா இண்டர்னெட் சேவைகளையும் அந்த கடை தான் பார்த்துண்டது. நானும் தங்கைமணியும் போய் 1998ல் ஹாட்மெயிலில் ஒரு அக்கவுண்ட் ஓப்பன் செஞ்சோம். பேரே செம்ம காமெடி.. nirmmalanarmadha@hotmail.com ப்ர்ர்ர்ர்ர்ர்... அதுக்கு பாஸ்வேட் அதை விட காமெடி - மூர்த்தி (எங்கப்பா பேராம்.. என்ன ஒரு அன்பு அர்ச்சனை பண்ணும் நைனாவிடம்?) அங்கே தான் resume அடிக்கறதும் ப்ரிண்டவுட் எடுப்பதும்.. ஏக பிஸியான இடம் அது அப்போ. அப்பெல்லாம் இண்டர்னெட் படு காஸ்ட்லியாக்கும். அரை மணி நேரத்துக்கு 50 ரூபாய் வாங்கிண்டு இருந்தான் தட் பகல் கொள்ளைக்காரன். ஆனாலும் கம்ப்யூட்டர் மோகம்! வாட் டு டூ.. 4000 ரூபாய் சம்பளத்திலும் மாசம் 200 ரூபாய் அங்கே கொண்டு போய் மொய்யெழுதிட்டு வருவேன்.

அப்புறம் சகாய விலையில் படு சூப்பர் இன்ஃப்ராஸ்ட்ரக்சருடன் கூடிய பிரவுஸிங் செண்டர் ஆக்வகாம் வந்தது. அங்கே போய் ஜாலியா தங்கைமணியும் நானும் மெயில் பார்ப்பதும் சாட் செய்வதும்.. ஹய்யோ ஹய்யோ.. அதுக்கும் தி நைனா திட்டோ திட்டுன்னு.. சரி.. வேறென்ன பண்ணுவார்...ஆக்சுவலி அவர் என்ன சொன்னார்னா.. சம்பளத்தையெல்லாம் முழுசா கொண்டு போய் ஆக்வகாம்ல மெம்பர்ஷிப்புக்கு கட்டக்கூடாதாம்.கொஞ்சம் பேங்க்ல போடணுமாம்.. ஏன்ப்பா இவ்ளோ அவுட்டேட்டடா இருக்கீங்கன்னு கேப்பேன். இப்படியாக நான் கம்ப்யூட்டரில் சால சிறந்து விளங்கிண்டு இருந்த அந்த காலகட்டத்தில்... ஹெல்லோ, யாருங்க அது சாணியெல்லாம் விட்டெறிஞ்சுண்டு? வெள்ளை சுரிதார்ல கறை பட்டா நீங்களா ட்ரை க்ளீன் பண்ணித்தருவீங்க?

என்ன சொல்லிண்டு இருந்தேன்.. ஆங்.. அந்த காலகட்டத்தில்.. மை  நைனா.. ஸ்டில் நம்புஃபைட் மீ.. ஆஹா குழந்தை சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்யறாளேன்னு (சாஃப்ட்வேர் கம்பெனி தான், என்ன உத்தியோகம்ன்னு அவர் யோசிக்க வாண்டாம்? நான் ரெக்ரூட்மெண்டில் குப்பை கொட்டிண்டு இருந்தேன்!!) எனக்கே எனக்கா ஒரு கம்ப்யூட்டர் வீட்டுலேயே வாங்கலாம்ன்னு டிஸைடு பண்ணினார்.. கம்ப்யூட்டர் வாங்கிய கால கட்டம் 2000 அக்டோபர்.. தீபாவளி ஆஃபர் எல்லாம் பார்த்து.. ஸ்ரீனியை கூட்டிண்டு போய் (விஷயம் தெரிஞ்சவனாம்) மவுஸ் பேட் ஃப்ரீயா கிடைக்குமான்னு 2க்கு 4வாட்டி கேட்டு  ப்ரிண்டர் சகிதம் ஒரு HCL Busy Bee வாங்கிண்டு வந்தோம்.

காலையும் நீ யே.. மாலையும் நீயேன்னு பாடிண்டே... அதை ஒரு குழந்தை போல பாவித்து சிஸ்ருக்ஷை பண்ணிண்டு இருப்போம்.. ஒகே தூசின்னு அவ்வா அதை துடைப்பாங்க.. துணி போட்டு மூடணும்ன்னு அம்மா சொல்லுவாங்க. அதுக்குன்னு ஒரு கவர் கூட தைச்சாங்க. அடுத்த ஆயுத பூஜைக்கு அதுக்கும் குங்குமம் சந்தனம் வெச்சு பூ வெச்சு பாலாஜி நமஸ்கரிச்சான், யாரும் பார்க்காதப்போ கம்ப்யூட்டருக்கு ஒரு கிஸ் கொடுத்தான். அலைபாயுதே.. கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் ஹே ராம் போன்ற பாடல்களை அதில் போட்டு கேட்டால் அந்த சுகம் இருக்கே! ஆஹா.. அற்புதம்.

லோன் எல்லாம் போட்டு க்ம்ப்யூட்டர் வாங்கிக்கொடுத்த எங்கப்பாவை திருப்தி படுத்த நான் அனாயாசமா ராவும் பகலும் உழைச்சேன். மனுஷன் ஆடிப்போயிட்டர். அதாவது அந்த நேரத்துல சி.டி ஆடியோ ஃபார்மெட்ல இருக்கற பாடல்களை எம்.பி.3யா கன்வெர்ட் பண்ற ஒரு ஃப்ரீ சாஃப்ட்வேர் இருந்தது. அதை ஸ்ரீனி தேடி தர, அதை யூஸ் பண்ணி ரெண்டு ஸி.டில இருக்கற பாட்டை எம்.பி3யா கன்வெர்ட் பண்ணி நைனாவிடம் காட்டினப்போ ”இவ ரொம்ப கெட்டிக்காரியா இருக்கா”ன்னு அம்மாவிடம் கிச்சனில் போய் நைனா சொல்லியிருக்கார். (எச்சி துப்பணும்ன்னா ப்ளாக் ல எல்லாம் துப்பக்கூடாது..உங்க ஸ்க்ரீன் தானே பாழாகுது? போய் வாஷ்பேஸின்ல துப்பிட்டு வாங்க)

ஆப்ஜக்ட் ஓரியண்டட் ப்ரோக்கிராமிங்கில் மிகச்சிறந்து விளங்கிய நான்(எனக்கு தெரியாது, உங்க கம்ப்யூட்டர், உங்க மானிட்டர், சதா துப்பறது, உடைக்கறது, சாணி, அழுகல் தக்காளி, அந்து போன செருப்பை  விட்டெறியறது இதெல்லாம் பண்ணாமல், பல்லைக்கடிச்சுண்டு, முஷ்டியை மடக்கிண்டு பேசாம மேல படிங்க) , ஏதோ ஒரு பிரபலமான ஜாவா புஸ்த்தகம் வாங்கி வீட்டுல வெச்சுண்டேன். ஹெலோ வேல்டுன்னு அவுட்புட் வரா மாதிரி ஒரு ப்ரோக்ராம் எழுதி அம்மா, அவ்வா, அப்பா இவாளையெல்லாம் செம்மையா இம்ப்ரெஸ் பண்ணினேன். ஆடிப்போயிட்டாங்க.. அப்புறம் ஓவர்ரைடிங் பத்தி அவாளுக்கு புரியற மாதிரி க்ளாஸெல்லாம் எடுத்தேன்.. பாவம் யாருக்கும் ஒண்ணும் தெரியலை.. ஆனா இவ ஜாவாவுல சூரப்புலின்னு மட்டும் அப்பா நினைச்சுண்டார்.

ஒரு டயல் அப் ஃபோன் லைன் கொடுத்து.. கீ... பூ... ட்ட்ட்ட்ர்... க்கீக்கீ... புர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... பீஈஈஈஈஈஈஈப்.. இப்படி வினோதமான சத்தங்களுடன் அது ஆத்தண்டிக்கேட் பண்ணி கனெக்ட் பண்ணும் அந்த நிமிடங்கள் படபடப்பாக இருக்கும். ஏன்னா முக்காவாசி அது ஏதாவது சொதப்பி விடும். அப்படி பிரும்ம ப்ரய்த்னம் பண்ணி கனெக்டப் படுகிற கம்ப்யூட்டர்களில் முதன் முதலாய் ஓப்பன் செய்வது ஹாட்மெயிலாகவோ.. ரிடிஃப் மெயிலாகவோ.. USA.net, லைகாஸ்  மெயிலாகவோ தான் இருக்கக்கூடும். ஆனா பாருங்க.. எப்போவும் 0 அன்ரெட் மெஸேஜஸ்ன்னு தான் காட்டும்.. ஏன்னா அப்போ மெயில் அனுப்ப ஆளேயில்லையே! யாருமே இல்லாத டீக்க்டடையில் யாருக்குடா சிங்கு டீ ஆத்துறேன்னு கேட்டுக்குவோம். MSN மெஜஞ்சர் தான் அப்போ படு ஹாட். நேரா அதுல லாகின் பண்ணி USஇல் இருக்கும் நட்பு வட்டத்துடன் பேசுவது..வட்டம்ன்னா

நீங்களா 10-20 பேர்ன்னு நினைச்சுண்டா நான் என்ன பண்றது? ஒண்ணோ ரெண்டோ பேர் அங்கே இருந்தாங்க.. ஜாலி அரட்டை.. ஈமெயில் இதெல்லாம் வீட்டில் இருந்த படியே.. ஆஹா.. என்ன இன்பமயமான நாட்கள் அவை! நைனா மட்டும் ஏதாவது படியேண்டீன்னு திட்டுவார். பாவம். வெட்டி வேலை எதுவானாலும் தான் நான் ரெடியாச்சே.

அதுக்கடுத்தாப்புல ரிடிஃப் சாட் வந்தது.. சகட்டு மேனிக்கி எல்லாரையும் யாஹூவில் சேர்த்துண்டு கும்மி அடிக்க வேண்டியது.. அப்படி கிடைத்த ஒரு அபூர்வ மாணிக்கமான சரத்பாபு இன்னிக்கும் என் மிக நெருங்கிய நட்பு வட்டத்துல இருக்கான்னு சொல்லிக்கறதில பெருமைப் படறேன். 

அதுக்கப்புறம் என்னாச்சா? ஏன் இவ்ளோ ரணகளம் போறாதா? சரி ஆசைப்பட்டுட்டீங்க சொல்றேன்.. நான் அதுக்கப்புறம் மேன்மேலும் சிறப்படைந்து Windows OS, MSWord, Ms Excel,Ms Powerpoint, Notepad, Word pad, MS Paint, Windows Media Player, VLC Player இப்படி பலப்பல புதுப்புது லேட்டஸ்ட் சாஃப்ட்வேர்களை கரைச்சு குடிச்சுட்டேன். சும்மா இதே வேலை உங்களுக்கு.. கல்லால அடிக்கறது.. போங்க எல்லாரும்.. இதுக்கு மேல சொல்ல மாட்டேன்! X-(

ஆக இத்துடன் இந்த பதிவு நிறைவடைகிறது. மேலும் இந்த பதிவை தொடர நான் அழைக்கப்போவது:

1. அப்பாவி தங்கமணி டாலிங்
2.ரேவதி வெங்கட் டாலிங்
3.எல்.கே மை பிரதர் டாலிங்
4.RVS அண்ணா
5.திரு ஜவர்லால் ஜி

இன்னும் யார் யாருக்கு எழுதணும்ன்னு தோணுதோ.. எழுதுங்க.. ஆனா இங்கே லின்க் மட்டும் கொடுத்துடுங்க! :) :)

கம்ப்யூட்டர் கன்ஃப்யூஷன்ஸ் - எனக்கும் கம்ப்யூட்டருக்குமான அபூர்வ பந்தம் Part -1

இந்த மாதிரி ஒரு தொடர்பதிவை எழுதச்சொன்ன ஸ்ரீராம் அண்ணாவுக்கு பல கோடி நன்றீஸ்.. ஏன்னா என்னதான் எழுதறதுன்னு யோசனை பண்ணிண்டே இருந்தேனாக்கும். பஹுத் பஹூத் தான்க்ஸ் ஹை! நெக்ஸ்ட், டைட்டில் மட்டும் என்னிஷ்டத்துக்கு வெச்சிருக்கேன்.. கண்டெண்ட்ஸ் கூட கொஞ்சம் வித்தியாசமா இருக்கும். என் அனுபவங்களை மட்டும் சொல்லி இருக்கேன்.. செலக்டிவா.. இல்லாட்டா படா பேஜாராயிடும்.. மொக்கைஸ் ஆஃப் இண்டியா.. ஹூ வில் ரீட்? ஹி ஹி இல்லாட்டா மட்டும்??? :)


நான் முதன் முதலா கம்ப்யூட்டரைப் பார்த்தது 1992வில். ”+1ல காமர்ஸ், மேத்ஸ், அக்கவுண்ட்ஸ் கூட கம்ப்யூட்டர் எடுத்திண்டுருக்கா”ன்னு அம்மா எல்லார்கிட்டேயும் ரொம்ம்ம்ப பெருமையா சொல்லிண்டா. கம்ப்யூட்டராம், என்னன்னே தெரியாது.. ஆனா மார்க் ஸ்கோர் பண்ண உபகாரமா இருக்கும். ஏன்னா அதன் ஆல்டர்னேட்டிவான எகனாமிக்ஸ் வெறும் தியரி, மஹா அறுவை, மார்க் ஸ்கோர் பண்றதும் கஷ்ட்டம்ன்னு சொல்லிட்டு நம்ம்ம்ம்பி இறங்கினேன்.

புது மிஸ். பாவம், மலங்க மலங்க விழித்தார். அரித்மெடிக் அண்ட் லாஜிக் யூனிட், பைனரி கன்வர்ஷன், பஸ் இப்படி பல புதுப்புது விஷயங்கள் அதுல இருந்தது. சுத்த்த்த்தமா ஒண்ணுமே புரியலை. ஒரு நாள் அந்த மிஸ்ஸை முடிஞ்ச வரைக்கும் டார்ச்சர் பண்ணி மிஸ் அந்த அரித்மெட்டிக் அண்ட் லாஜிக் யூனிட் எப்படி இருக்கும்? அந்த சி.பி.யூ இருக்கே, அதை ஒரே ஒரு வாட்டி எங்களுக்கு காட்டறீங்களா?, அது ஏன் இன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் குடுத்தாத்தான் ஒர்க் ஆகுமா? அப்புறம் எப்படி ஆட்டோமேஷன்னு சொல்றோம் என்கிற ரீதியில் ஒருபாடு இன்னொஸெண்டான நான் கேள்விகளை தொடுக்க.. மிஸ் பேஸ்த்தடித்து போயிட்டா. பாவம்.. ஆனா நான் அந்த சி.பி.யூவை மட்டும் விடலை. மிஸ் ப்ளீஸ் மிஸ் அதை எங்களுக்கு பாக்கணும்ன்னு சொல்லிண்டே இருந்தேனா.. அதுக்கு மிஸ்ஸின் பதில் கேட்டு ஆடிப்போயிட்டேன்.. என்ன பதிலா? “அதை நானே பார்த்ததில்லை” அப்படீன்னாங்க.. ஐய்யோ பாவம்.

12வது வகுப்பில் எங்க சார் படு ஸ்ட்ரிக்ட். அதிகம் சிரிக்க மாட்டார். அவருக்கு தினேஷ் ரோபோன்னு செல்லப்பேர் வெச்சிருந்தான். ஒரு புல்லாங்குழல் அடுப்பூதுகிறது என்ற மெளலி (?) படத்தில் வரும் ராக்கெட் ராமனாதனை நினைவு இருக்கோ? ”ஏண்டா இப்படி விறைப்பா நிக்கறே? அதுவா, துணிக்கு போடற கஞ்சியை எடுத்து கார்த்தால குடிச்சுட்டேன்” அப்படீம்பாரே.. அதே மாதிரி தான் கம்ப்யூட்டர் சர் இருப்பார். நேரே உள்ளே வந்து நீ எழுந்திரு, நீ எழுந்திருன்னு இளையராஜா மாதிரி விரலால் ஜாடை பண்ணுவர்.(அசப்பிலும் சிவப்பு இளையராஜா மாதிரி தான் இருப்பர்) முதல் நாள் நடத்தின பாடத்தை மறுநாள் கேட்டே தீரணும். அதுனால் நோட்ஸ் எல்லாத்தையும் ஒழுங்கா படிச்சுண்டு போயிடுவோம். BASIC அப்படீங்கற லேங்குவேஜ் தான் பாடம். அதில் விதவிதமான ப்ரோக்ராம்கள் - மல்டிப்ளிக்கேஷன் டேபிள் ( ஒரு வாய்ப்பாட்டு புஸ்த்தகம் வாங்கிண்டா போறாதா?) கூட்டல், கழித்தல், பாலினாமியல், அதுக்கு லாஜிக் யோசிக்க வேண்டுமாம். அந்த கண்றாவியை பத்தின புரிதலுக்கு ஒரு ஃப்ளோசார்ட் வேறு.. அதை வரைய விதவிதமான உபகரணங்கள்! நாரயாணா.. எக்கனாமிக்ஸ் எவ்வளவு இனிமையான பாடம்ன்னு நினைச்சுப்பேன். ஒரு எழவும் என் மண்டையில் ஏறாது.

 அப்போத்தான் முதன் முதலாய் கம்ப்யூட்டரை பார்த்தேன். பெரிய வெள்ளை டப்பா, நடுவில் பச்சைத்திரை, கீழே ஒரு பெட்டி அதில் ஃப்ளாப்பி டிஸ்க் போடணுமாம்.  லேப் சூப்பரா இருக்கும். ஜில்ன்னு. ஸ்கூல் ஷூவை கழட்டிட்டு உள்ளே போகணும். ஒவ்வொரு கம்ப்யூட்டரிலும் 3-4 பேரா உட்காருவோம். 10வது லீவில் ஒரு மாசம் டைப்பிங்  படிக்க போனதால் ஓரளவுக்கு  எழுத்துக்களை தேட வேண்டிய அவசியம் ஏற்படலை. கஷ்ஷ்ஷ்டப்பட்டு ஒரு 8 வரி பேஸிக் ப்ரோக்ராமை டைப்பி, ரன் பண்ணா, அதென்னமோ என்ன மாயமோ சதா சிண்டாக்ஸ் எர்ரர் காட்டும். ரவீந்திரன்ங்கற பையன் தான் அதுல கில்லாடி. சிண்டாக்ஸ் எர்ரரால் வாடும் எல்லாருக்கும் அவன் தான் ஆபத்பாந்தவன் அனாதரக்ஷகன்.”நீ செமி கோலனை விட்டிருக்கே பாரு ”அப்படீம்பான். அதே செமிக்கோலனை அடுத்த வரியில் விட்டிருப்பதை அப்போ கவனிக்கறதில்லை.. மறுபடியும் ப்ரோக்கிராமை ஓட்டி மறுபடியும் அவனை அழைத்து, பல்பு வாங்கி, ஒரு வழியா எல்லாம் சரியாகி ரன் கொடுத்தால், சின்னூண்டாக ராஜா மாதிரி கம்பீரமா பதில் வரும் - அதான் அவுட்புட்.. கர்ஸர் அமைதியாக பக்கத்தில் பணிவாக நிற்கும் அமைச்சர் மாதிரி நின்னுண்டு இருக்கும். இதுக்கா இந்தப்பாடு? யப்பா!

இவளுக்கு கம்ப்யூட்டர் ஒண்ணுமே தெரியலையாம்ன்னு அம்மா, தி நைனாவிடம் சிபாரிசு செய்ய என்னை அவர் பேங்கிலிருக்கும் கம்ப்யூட்டரை பார்க்க குரோம்பேட்டையிலிருந்து மவுண்ட் ரோடில் இருந்த அப்பா பேங்குக்குப்  போனோம் - குடும்ப சஹிதம்!! ஆனா அந்த சிஸ்டம் அட்மின் ஃப்ளாப்பி வேணும்ன்னு சொல்லிட்டார்.. இளையராஜா சர் கிட்டே அந்த பிம்பிளிக்கி பிளேப்பியை.. சாரி ஃப்ளாப்பியை வாங்கிண்டு போய் கொடுத்தா அங்கேயும் பச்சை மானிட்டரில் ஒரே சிண்டாக்ஸ் எரராத்தான் வருது! பேங்கில் ரவீந்திரன் கிடையாதே.. அதுனால அப்பா உங்க ஆபீஸ் கம்ப்யூட்டர் எல்லாம் ஃபால்ட்ட்.. ஹெட்டாஃபீஸுக்கு உடனடியா தகவல் கொடுத்திருங்கன்னு சிபாரிசு பண்ணேன்.. சிஸ் அட்மின் என் கழுத்தை நெறித்துவிடுவது போல பார்த்தான். அம்மா எதிர்ப்பார்த்த மாதிரியே நான் கம்ப்யூட்டர் சயின்ஸில் 196 வாங்கியிருந்தேன்னு நினைக்கறேன்.. எதுக்கும் நாளைக்கி சர்டிஃபிக்கேட்டை செக் பண்ணிடுறேன். 

அடுத்த படியா என்னுடைய ப்ரில்லியன்ஸை பறைசாற்றிய இடம்- ப்ரில்லியண்ட்- 1994ல் ”காலேஜ் ஃபர்ஸ்ட் இயர் ஜாயின் பண்ணினப்போவே.. இதையும் படிச்சுட்டேன்னா உனக்கு நல்ல வேலையா கிடைக்கும்”ன்னு நைனா நம்ம்ம்பி கொண்டு போய் சேர்த்து விட்டார். சாயந்திரம் 5.15க்கு காலேஜ் முடியும். நேரா க்ளாஸுக்கு போயிடுவேன். முக்கால் மணி நேரம் லேப் இருக்கும். ஒண்ணும் புரியாது. லோட்டஸ், வேர்ட்ஸ்டார், க்ளிப்பர், டி பேஸ் இதெல்லாம் கத்தீ கத்தீ குடுத்தாங்க.  கோர்ஸ் மெட்டீரியல்ன்னு ஒரு எழவை கொடுப்பாங்க. ஒரு நாள்.. ஒரு நாள் கூட அதை பிரிச்சு பார்த்ததேயில்லை! அவ்ளோ மொக்கையா இருக்கும். ஆனா அதை ஒரு இன்ஸ்டிட்யூட் குடுக்காட்டி மட்டும்.. மல்லுக்கு நின்னும், டேட் போட்டு ஃபாலோ அப் பண்ணி வாங்குறது.  சும்மா போக வேண்டியது.. பஜனை பண்ணிட்டு வர வேண்டியது. இதே வேலையாக இருந்தேன். வேரியபிள், ஸ்டோரேஜ், கான்ஸ்டண்ட், லாஜிக், ஃப்ளோசார்ட், சாஃப்ட்வேர், டேட்டா, ப்ரைமரி, செக்கண்டரி இப்படி பல மொக்கையான வார்த்தைப் பிரயோகங்களை கற்று தேர்ந்தேன். சத்தியமா ஒண்ணுத்துக்கும் அர்த்தம் மட்டும் புரியலை. நான் வேர்ட்ஸ்டார் ரொம்ப நன்னா பண்றேன்னு எங்க ஃபேகல்டி சொன்னார். நான் அந்த இன்ஸ்டிட்யூட்டில் எஞ்சாய் பண்ணின ஒரு நாள்.. ஒரே நாள் - ஆனிவர்ஸரின்னு அவா கொண்டாடின நாள் தான். மாரியோ, பேக்மேன் இப்படி பல கேம்ஸ்களை எங்களை  விளையாட சொன்னாங்க. ஏதோ சில கலை நிகழ்ச்சிகள், பாட்டு, க்விஸ் இப்படி நடத்தினாங்க.. ”மேரி பாத்தேன் சுன்கே தேக்கோ ஹஸ்னா நஹீ”ன்னு ஒரு கோவிந்தாவின் ராப் சாங் ஹிந்தி பாட்டை எஸ்பிபி மாதிரி மூச்சு விடாமல் பாடி சாதனை படைத்தேன்.. வழக்கம் போல நான் ஃபேமஸ் ஆகிட்டேன்.. இது வெத்து வேட்டு.. பூலோக மட சாம்பிராணின்னு எல்லாருக்கும் தெரிஞ்சுடுத்து.

- நாளைக்கி கடைசி பாகம் போடுறேன்.. இதுக்கு மேல இந்தப் பதிவு நீண்டா.. எல்லாரும் கொட்டாவி தான் விடுவீங்க.. ஓக்கே?

Tuesday, July 9, 2013

ரங்குவின் ரொமான்ஸ்கள்

”ஏன்னா, நேக்கு ஒரு முழம் பூ வாங்கிக்கொடுக்கக்கூடாதோன்னு உங்க கேள்ஃப்ரெண்ட்ஸுக்கு தினமும் வாங்கித்தரேளே”ன்னு நான் கேட்டேன்னு வைச்சுக்கோங்களேன், உடனே இவர் சொல்லும் சால்ஜாப்பு இருக்கே, ”அவாள்ளாம் ஒரு கண்ணி பூ தான் வெச்சுக்கறா, நீ மூணு முழம் கேக்கறாய், நூறு ரூபாய் ஆறது.. அதுக்கு நான் ஒரு லிட்டர் பெட்ரோல் போட்டுக்கலாம். சில சமயம் பூ விலை ஜாஸ்த்தியானா, செம்பருத்திப்பூவை செடியில இருந்து பிச்சுக்கொடுத்தாலும் என் கேள்ஃப்ரெண்ட்ஸ் சந்தோஷிக்கறா.. நீ புலம்பறாய்” அப்படீங்கறார்!

தினமும் சாயந்திரம் ஃப்ரெஷ்ஷா குளிச்சுட்டு பட்டையெல்லாம் போட்டுண்டு 6 மணிக்கு ஆசமனீயம் பண்ணிட்டு, இவர் “ஒருத்தரை சந்திக்கணும்”ன்னு கூசாம என்கிட்டே பொய் சொல்லிட்டு போகும் இடம் - அயோத்தியா மண்டபம். அங்கே ஸ்ரீஅண்ணாவின் மஹாபாரத சொற்பொழிவு நடக்கறதில்லையா.. அதுக்கு போகலை.. அங்கே வரும் வயசான மாமிகளை சைட்டடிக்க போறார். வாசல்லேயே நிப்பார்.. ஆட்டோ, டூவீலரில் வரும் மாமிகளை கையை பிடிச்சுண்டு கூட்டிண்டு போய் உள்ளே ( ஏற்கனவே ஆத்துல இருந்து எடுத்துண்டு போன) ஜமுக்காளத்தில் உட்கார வெச்சுட்டு தண்ணி, வென்னியெல்லாம் கேட்டு உபச்சாரம் பண்ணிட்டு மறுபடியும் நெக்ஸ்டு மாமி வேட்டைக்கு ரெடி ஆயிடுவார். இதெல்லாம் போதாதுன்னு அவா முன்னாடி ஸ்ரீ அண்ணாவுக்கு வரும் டவுட்ஸ் க்ளேரிஃபை  பண்ற மாதிரி ஃபிலிம் காட்டுவார்! இந்த சின்ன பசங்க ரெண்டு கையையும் விட்டுட்டு சைக்கிள் ஓட்டுவாங்களே.. சேம் டைப்ஸ்.

அந்த மாமிகளை ரோட் க்ராஸ் பண்ணிவிடுவது, தீர்த்தம் வாங்கிண்டு வந்து அவா பொக்கை வாயில் (ர்ர்ர்ரொமாண்டிக்காக) ஊற்றுவதுமாக இவர் பண்ணும் ரவுஸு தாங்கலையாம்,  அந்த அயோத்தியா மண்டப ஆஃபீஸ்காரா சொல்லி சலிச்சுக்கறா. இவரை உள்ளே விடக்கூடாதுன்னு ஜெனரலா பேசிக்கறா.

சரி இந்தக்கால யூத்ஸ் மாதிரி அப்படி என்னெல்லாம் பண்ணி ரங்ஸ் மாமிகளை மடக்கறார்ன்னு ஒரு சின்ன ஆராய்ச்சி பண்ணறோமா?

1.யூத்ஸ் எல்லாம் தத்தம் ஃபிகர்களை மடக்க செய்யும் பேஸிக் டெக்னிக் இது
கேள்ஃப்ரெண்ட்: ”ஏதாவது இண்ட்ரெஸ்டிங்கா பேசேண்டா”
பாய்ஃப்ரெண்ட்: ”அனிதா”(அதான் கேள்ஃப்ரெண்டின் பெயர்)
கேள்ஃப்ரெண்ட்: ”ஹி ஹி ஹி” (இது போதாதா? அவள் விழுந்தாச்சே!) 

இப்போ ரங்ஸின் டெக்னிக் பார்க்கலாம்: 
ரங்ஸ்: மாமி ஜடபரதர் உபாக்யானத்தில் வர கதை தெரியுமோ உங்களுக்கு
மாமி: தெரியாதே.. (ஆச்சு அடுத்து ரங்ஸ் அந்த மாமியை இம்ப்ரெஸ் பண்ண ஒரு ஐஞ்சு நிமிஷம் போறுமே!) 
இந்த ஜடபரதர் உபாக்யானம், காஞ்சி வரதராஜர் வைபவம், நாலாயிரத் திவ்விய பிரபந்தம் இப்படி கைவசம் நிறைய சரக்கு வெச்சுண்டு இருக்கார். தினசரி ஸ்ரீஅண்னாவின் ஆடியோ பிரவசனங்கள் எல்லாம் கேட்டு கிளைக்கதைகள் ஆயிரம் கைவசம் இருக்கே!ஆல் தி மாமீஸ் ஃப்ளாட்டல்லவோ? இதுவே நான் டவுட்டு கேட்டா மட்டும், அதான் டீவில வரதே.. பார்த்தாத்தானே? சதா ஃபேஸ்புக், ஜிடாக்! நீயெல்லாம் எங்கே உருப்படறதுக்கு அப்படீங்கறார்! க்கும்!

2. இப்போ யூத்ஸ் எல்லாம் தத்தம் கேள்ஃப்ரெண்ட்ஸுக்கு டெட்டி பேர், பூ பொக்கே, ஆண்டிக் ஜுவல்லரி,  ஊஸ்மணி, பாஸ்மணி எல்லாம் வாங்கிக்கொடுப்பாங்க இல்லியா.. அதே மாதிரி நம்ம ரங்ஸின் டெடிக்கேஷன் என்ன தெரியுமோ? சுகர் டெஸ்ட் கிட், BP Test கிட், பல்செட்டு, க்ளாஸ் டம்ளர்,  latest prescription two weeks drug sponsorship, அம்ருதாஞ்சனம், மூட்டுவலி வாலினி ஸ்ப்ரே, ஜெல் இப்படியா வாங்கி கொடுத்து மடக்கிடுவார்.நான், “நேக்கெதாவது வாங்கிண்டு வந்தேளான்னா”ன்னு ஆசையா கேட்டா பர்ஃபி ரன்பீர் மாதிரி காலி பாக்கெட்டை வெளியே எடுத்து காட்டுவார்! ஹும்..

3. பாய்ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் அவா அவா கேள்ஃப்ரென்ட்ஸை பைக்ல கூட்டிண்டு போய் காலேஜ், ஆஃபீஸ்ல ட்ராப் பண்ணியூட்டு பிக் பண்ணுவாளே.. அதே மாதிரி தான் நம்ம ரங்ஸ் 6 மணிக்கெல்லாம் ஆல் மாமிஸ் பிக்கப்.. அவா அவா ஆத்துல இருந்து.. அப்புறம் நேரே அயோத்தியா மண்டபம் ட்ராப்.. ராத்திரி பிரவசனம் முடிஞ்சுட்டு மறுபடியும் அ.ம பிக்கப் பண்ணிட்டு, மாமிஸை ஆத்துல ட்ராப் பண்ணிடுவாருக்கும்.. இதுல வேல்யூ ஆடட் பேக்கேஜ் என்னன்னா, மாமிகள் நடுவுல் பூ வாங்கணும், காப்பிப்பொடி வாங்கணும், கீரை வாங்கணும்ன்னு சொன்னா, ரங்ஸ் பொறுமையா நிறுத்தி சமர்த்தா ஸ்பான்ஸர் பண்ணி வாங்கிக்கொடுபபார். இதுவே நான் கேட்டா, ஸ்கூட்டி எதுக்கு வெச்சுண்டு இருக்கே? எடுத்துண்டு போய்  வாங்கிக்க வேண்டியது தானேன்னு கலாட்டா பண்ணுவார்.. வெவ்வ்வ்வே!

4. யூத்ஸெல்லாம் கேள்ஃப்ரெண்டுகளின் ஆபத்பாந்தவனாக அனாதரக்ஷகனாக இருக்கா இல்லையா... அப்ளிக்கேஷன் ஃபார்ம் லாஸ்ட் டேட், அர்ஜெண்டா பேங்குக்குப் போய் டீ.டீ எடுக்கறது இந்த மாதிரியான விஷயங்களுக்கு ஹெல்ப் பண்ணுவா இல்லையா.. அதே மாதிரி ரங்ஸை மாமிஸ் கிரி ட்ரேடிங் போறதுக்கு, அபிஷேகப்பால் கோவில்ல கொண்டு குடுக்கறதுக்கு, செருப்பு டோக்கன் பத்திரப்படுத்துறதுக்கு,பிரசாதம் வாங்கிண்டு வந்து கொடுக்கறதுக்கு  இப்படியெல்லாம் யூஸ் பண்ணிப்பா. தாளிக்க எண்ணெய் வெச்சுட்டு “நா கடுகு காலி ஆயிடுத்துன்னா ப்ளீஸ் கொஞ்சம் வாங்கிண்டு வந்துடுறேளான்னு நான் கேட்டா, உடனே இதெல்லாம் முன்னாடியே பார்த்து ரீஃபில் பண்ணி வெச்சுக்கறதுக்கென்ன நோக்கு?”ம்பார். கிர்ர்ர்ர்.. ரொம்ப ஓவர் இது.

5.  யூத்ஸ் அவா கேள்ஃப்ரென்ட்ஸை எல்லாம் ஜாலியா பீச், பப், சினிமா, மால் இப்படி கூட்டிண்டு போவா இல்லையா.. அது மாதிரி இவர் சாரதா பீடம், சங்கர மடம், நவக்கிரக கோவில்ஸ், கும்பகோணம், காஞ்சி கோவில் டூவர் இப்படியா கூட்டிண்டு போவார். என் பர்த்டேன்னா.. கோவிலுக்கு போலாமான்னு கேட்டாக்கூட அவசரமா டைரியை புரட்டி ஷெட்யூல் செக் பண்ணிட்டு , இன்னிக்கி சுலோ மாமியை கூட்டிண்டு மைலாப்பூர் கபாலி கோவில் வரை போயாகணும்ம்மா.. நீ தனியா போயிட்டு வந்துடேங்கறார்..இதெல்லாம் அந்த பகவானுக்கே அடுக்காது. 

இதே ரேஞ்சுல போச்சுன்னா பேசாம இவரையும் ஒரு நல்ல ஓல்டேஜ் ஹோமா பார்த்து சேர்த்து விட்டுடுவேன் நான்! முடியலை!

Sunday, July 7, 2013

வீட்டை மாத்திப்பார்

முன்னாடியெல்லாம் வீட்டைக்கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப்பார்ன்னு சொல்லுவாங்க.. இப்போ ஜஸ்டு ஒரு சின்ன சேஞ்ச்.. வீட்டை மாத்திப்பார், கல்யாணத்துக்கு போயிப்பார்ன்னு மாத்திக்கலாம். அவ்ளோ கஷ்டமா ஆயிடுத்து வீடு மாத்தறது! 

நான் எப்போவுமே வீடெல்லாம் மாறினா 6 மாசம் எடுத்துப்பேன்.. மெதுவா தான் அரேஞ்ச் பண்ணுவேன்.. நெக்ஸ்டு 6 மாசம் பாக்கிங் பண்ண சரியா இருக்குமே! 

வீடு பார்த்து மாற ரெடியானப்புறமும் நான் ஃபேஸ்புக்லேயும் ரங்ஸ் ஃபோன்கால்ஸிலேயும்(ஆஃபீஸாம்) உட்கார்ந்திருக்க, எங்கம்மா ஓடோடி வந்து கிடுகிடுன்னு குனிஞ்சு நிமிர்ந்து பாக்கிங் எல்லாம் பார்த்துண்டாங்க. அது வரைக்கும் நாங்க ரெண்டு பேரும் படு பிஸி! நாங்க கூப்பிட வண்டிக்காரங்க வந்து சேர சுமார் 3 மணி நேரம் தான் லேட்டு. அதுலேயும் ரெண்டு பேர் கத்திண்டே இருந்தாங்க.. "டேய் தூக்கு தூக்கு வுட்ராதே" இப்படி.. ஒருத்தனும் உருப்படியா எதையும் கேரி பண்ணலை.. நாங்க கைல எடுத்துண்டு போக வெச்சிருந்த காப்பிப் பொடி, சர்க்கரை, டம்பளர், வால் பாத்திரம் இதெல்லாம் மொத்தத்துல கலந்து எங்கியோ கொண்டு போயிட்டாங்க! நாளை காலை அரோஹரா தான்னு நினைச்சுண்டோம். நல்ல வேளை புது வீட்டுச்சாவி என்கிட்டே பத்திரமா இருந்தது. தப்பிச்சோம். 

முதல் ரவுண்டு போயிட்டு நான் முன்னின்று(க்கும், நின்னுட்டாலும்) எதை எங்கே வைக்கணும்ன்னு சொல்லிட்டு ரெண்டாவது ரவுண்டு அடிக்கலாம்னு பேச்சு.. நான் மேலே வீட்டுல கோஆர்டினேட் பண்ண, ரங்ஸ் கீழே சாமான் இறக்கறதை சூப்பர்வைஸ் பண்ண போயிட்டார். நடுவுல ஒரு வாட்டி ஏதோ காலி கூடையை எடுத்துண்டு அதுவும் லிஃப்டுல வந்துட்டு போனார்.

இந்த கூலிபெருஸ் (பின்னே எல்லாமே வயசான முசுடூஸ்) எல்லாம் லிஃப்டுல இருந்து வாசல் படியில் பெட்டிகளை எல்லாம் முக்காவாசி காலால் தள்ளிட்டு ஓடிடுத்து. நான் தான் உள்ளே உக்காந்து எல்லாத்தையும் பார்த்துண்டு இருந்தேனாக்கும்.. அப்புறம் அவா நெக்ஸ்ட் டைம் வந்தப்போ சத்தம் போட்டேனா.. அவா அதை ஜஸ்டு படிக்கந்தண்டை வெச்சு குடுத்துட்டு போனா. என்ன எஃபீஷியன்ஸி பாருங்கோளேன்?

கிச்சன் ஐட்டம்ஸ் வெச்ச பெட்டி பில்டிங் ஸ்ட்ராங் தான்னாலும் பேஸ்மெண்ட் கொஞ்ச்ச்சம் வீக்கு.. லிஃப்டில் இருந்து அந்த பெட்டியை முரட்டுத்தனமா எடுத்து வெச்சப்போ பெட்டி பாட்டம் மட்டும் பேதி ஆகும் மனிதன் போல பிச்சுண்டுடுடுத்து! அது பேன்னு ஆகி ஸ்பூன், குக்கர் வெயிட், மிக்ஸீ மூடியின் மேல் இருக்கும் குட்டி மூடி இத்யாதிகள்  எல்லாமே சிதறி கீழே விழுந்துடுத்து.. இந்த அழகுல நாங்க சரியா பேக் பண்ணலையாம் ஒரு முசுடு பயங்கரமா சத்தம் போட்டுத்து..சரின்னு எல்லாத்தையும் வாரி எடுத்துண்டு வந்து உள்ளே போட்டு அரேஞ் பண்ண ஆரம்பிச்சேன்.. அடுத்த லாட் வந்தட்டு ரங்ஸ் என்னை கூட்டிண்டு போவார்ன்னு வெயிட் பண்ணிண்டு இருந்தேனா.. லோடும் வரலை, ரங்குவும் காணோம்!!! 

என்னை மட்டும் புது வீட்டில் விட்டுட்டு ரங்ஸும் வண்டியும் பழைய வீட்டுக்கு போயாச்சு.. ஃபோனும் நான் எடுத்துக்கலையா.. என்ன பண்றதுன்னு ஒரே கோபமா வந்தது.. சுமார் ஒரு மணி நேரம் ஆயிடுத்து ரங்ஸ் என்னை மீட்டுண்டு போக.. அந்த சமயத்தை நான் எவ்ளோ எஃபக்டிவா யூஸ் பண்ணினேன் தெரியுமோ? கோலப்பொடி இருந்ததா, அதை வெச்சு புதுப் புது டிஸைனெல்லாம் போட்டு பார்த்து அழிச்சுண்டு இருந்தேன். அப்புறம்மும் கொஞ்சம் டைம் இருந்ததா, இன்னேரம் ஃபேஸ்புக்ல யார் யார் இருப்பாங்கன்னு யோசிச்சுண்டு இருந்தேன்.(இப்பென்னாச்சுன்னு இப்படி எல்லாரும் என்னை திட்டுறீங்க?)

9 மணிக்கு ப்ரேக் போன மூவர்ஸ் அண்டு பாக்கர்ஸ் அப்புறம் என்ன ஆனாங்கன்னே தெரியலை.. ஒருத்தன் கீழே வாட்ச்மேன் பக்கத்துல தாச்சுண்டு தூங்கிட்டானாம். ஒருத்தன் கீழாத்து 500 ரூபாய் செருப்பைத்தூக்கிண்டு இருட்டுல எஸ்கேப் ஆயிட்டானாம்! இந்த அழகுல இவாளுக்கு ஆளுக்கு 500 ரூபாய் கூலியாம்! 12.30க்கு மேல ரெண்டு பேர் மட்டும் வந்து லிமிட்டெடா பேசி (டாஸ்மாக் உபயம்) ஃப்ரிஜ், வாஷிங் மெஷின் இத்யாதிகளை இறக்கிட்டு ஓட்டம் பிடிச்சாங்க. இல்லியோ பின்னே எல்லாத்தையும் லாஃப்டுல ஏத்தச்சொல்லிடுவோம்னு பயமான பயம் !

ஒரு வழியா அப்படி இப்படீன்னு எல்லாத்தையும் எடுத்துண்டு புது வீட்டுக்கு வந்துட்டோம். இந்த புது வீட்டை க்ளீன் பண்ணி குடுத்தாங்களாம்.. கால் ஃபுல்லா கருப்பா இருந்தது! 3 இன்ச்சுக்கு தூசு படர்ந்து இருந்தது. அதுல பாருங்க கிச்சன்ல மட்டும் அப்படி ஒரு எண்ணெய் பிசுக்கு! சன்ஃப்ளவர் ஆயில் 30 கோட்டிங் போட்டு இருந்தாப்புல கையெல்லாம் டைல்ஸ்ல தொட்டா அப்படியே பச்ச்ச்சக்! அவ்ளோ பிசுக்கு. முதல்லே அதை க்ளீன் பண்ணிடுறேன்னு பார்த்தா சிஃப்ஃபையும் காணோம் ஸ்டீல் ஸ்க்ரப்பரை காணோம். தேடித்தேடி பார்த்து ஒரு பிளாஸ்டிக் ஸ்கரப்பர் தான் கிடைச்சது.. முதல்லே கிடைச்சது லைஸால் தான்.. நல்ல ஃப்ளோர் க்ளீனர் இதை வெச்சு ட்ரை பண்ணி பார்ப்போம்ன்னு லைசால் விட்டு டைல்ஸை துடைச்சுப் பார்த்தேன்.. பிசுக்கு என்னை பார்த்து க்கிக்க்கீன்னு சிரிச்சது. நெக்ஸ்டு, மிஸ்டர் மஸில், என் மிக நம்பகமான லிக்விட் சர்ஃபேஸ் க்ளீனர். பிசுக்கு  என்னை மஹாக்கேவலமாக காலில் போட்டு மிதித்து துப்பியது! மிஸ்டர் மஸிலும் ஃபெயிலா.. இதுக்கெல்லாம் நான் ஒரு சூப்பர் ஐடியா வெச்சிருக்கேனே.. வல்லவனுக்கு புல்லும் ஆயுதமாச்சே! சரின்னு கார்த்தால பால் காய்ச்சறதுக்கு முன்னாடி போட்ட கோலப்பொடியை வெச்சு கொஞ்சம் வாஷிங் டிடர்ஜெட்டையும் சேர்த்து  இருக்கற எல்லா சக்தியையும் போட்டு தேய் தேய்ன்னு தேய்ச்சேனா.. கொஞ்சூண்டு விட்டுக்கொடுத்தது.. 30 கோட்டிங்காச்சே அவ்ளோ ஈஸியா போகுமா? ரொம்ப  முயற்சி பண்ணி தோத்துட்டேன். ஒரு 1 மணி நேரம் கழிச்சு வெளியே வந்தேன்.. வீரத்திலகம் வெச்சுண்டு.. சுவத்தோரமா இருந்த பெட்டியில என்ன இருக்குன்னு திறந்து பார்த்தா, மஞ்சள் சிஃப்! அட நாதாரி உன்னைத்தானே இவ்ளோ நேரம் தேடினேன், பக்கத்துலேயே கள்ளூளிமங்கனாட்டம் ஸ்டீல் ஸ்க்ரப்! கொஞ்சம் முன்னாடி கிடைச்சிருக்ககூடாதோ? 

கொஞ்சம் கொஞ்சமா இன்ஸ்டால்மெண்ட்ல வேலை பண்ணிக்கலாம்ன்னு எடுக்கறது வைக்கறதுமா இருந்தேன். ஒரு அரை மணி வேலை செய்வேன், ஒரு 4 மணி நேரம் ஃபேஸ்புக், ஸ்கைப் இதெல்லாம் பார்ப்பேன்.. ஒரு 2 மணி நேரம் தூக்கம்(அசதி இருக்குமே) :) 

ரங்க்ஸின் காண்ட்ரிப்யூஷன் பத்தி சொல்லியே ஆகணும். என்ன சுறுசுறுப்பு.. ஃபோன் பேசறதும், வெளியில் போறதும், கான்ஃபரன்ஸ் கால்ஸில் இருப்பதும். மெயில் அனுப்புவதும். . ஆஹா.. அப்புடி ஒரு ஹெல்ப் வீடு அரேஞ்ச் பண்ண.. ஏதோ இன்னிக்கி வீடு இப்படி ஜொலிக்கிதுன்னா அது அவர் போட்ட பிச்சை தான். 

 இடம் காலியான உடனே 3 இன்ச் தூசியை க்ளீனா பெருக்கிட்டேன்.. கையோட ஒரு மாப்பை வெச்சுண்டு சுத்த்த்தமா துடைக்கவும் துடைச்சேனா.. வீடு பள பள.. மேடம் ஏஸி இன்ஸ்டால் பண்ண வந்திருக்கோம்ன்னு சொன்னாங்க. 2 மணி நேரத்துக்கெல்லாம் ஏசி அப் & ரன்னிங் ஆயிடுத்து. அவா போனதுக்கப்புறம் பார்த்தா பெட்ரூம் ஃபுல்லா குப்பை போட்டு வெச்சிருக்காங்க! அடக்கஷ்டமே.. மறுபடியும் பெருக்குதல் துடைத்தல்.

நாங்க இங்கே வந்தவுடன் படு பயங்கர லோ வால்டேஜ்! லிஃப்ட் வேலை செய்யலை. அட அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பான்னு நினைச்சுண்டேன். நெக்ஸ்டு, தண்ணிக்கஷ்டம்! ஒரு நாள் பூரா தண்ணி இருக்கலை! சென்னையில மழையில்லையோன்னோன்னு நினைச்சுண்டேன். ஒரு நாள் சமயல் இல்லை.. வெளியில போய் சாப்பிட்டோம். நெக்ஸ்ட் டே, என்னமோ லைட் எரியும், பல்ப் எரியும் ஆனா ப்ளக் பாயிண்ட் ஒர்க் பண்ணாது. ஸோ, நெக்ஸ்ட் டேயும் சமைக்கலை. இண்டக்‌ஷன் ரைஸ் குக்கர் இதெல்லாம் இல்லாட்டி என்னால சமைக்க முடியாதே. பயந்து போய் எலக்ட்ரீஷியனை கூப்பிட்டா அவன் வந்த் ஃப்யூஸ் பார்த்துட்டு சரி பண்ணிட்டு போயிட்டான். வாஷிங் மெஷின் ஓவர்லோடு ஆகுதுன்னு சொன்னான். சரி இப்போ என்ன பண்ணலாம்ன்னு கேட்டப்போ, இனி அப்படி ஆகாதுன்னு கூசாம (பொய்) சொல்லிட்டு போயிட்டான்! நான் இண்டக்‌ஷன் ஆன் பண்ணினேனோ இல்லியோ, அது ப்யூம்னு போயிடுத்து மறுபடியும்!


ஆக இனி வேண்டாதவர்களை சபிக்கணும், விரோதிகளுக்கு சூன்யம் வெக்கணும்னு நினைச்சா, பேசாம வீட்டை ஷிஃப்ட் பண்ணச்சொல்லி சாபம் விட்ருங்க! எல்லாம் சரியாயிடும்.. ஆ.. அதுக்குள்ளே 4 மணி நேரம் ஆச்சா? நான் போய் ஒரு அரை மணி பீரோல கொஞ்சம் துணி அடுக்கிட்டு வரேன். டாட்டா!:)





Sunday, June 30, 2013

அப்பாவியுடன் ரெண்டு நிஜ அப்பாவிகள்!

அந்த நிஜ அப்பாவிகள் வேற யாருமில்லீங்க, நானும் கோவிந்த் அண்ணாவும் தான்.. அதான் அப்பாவியின் ரங்ஸ்! ஐய்யோ பாவங்க அவர்! சரி விஷய்த்துக்கு வரேன்.. நேத்திக்கு கோவைக்கு அலுவல் விஷயமா போயிருந்தேனா.. அப்போ இவளை கார்த்தாலேயே கூப்பிட்டு, சாயந்திரம் மீட்டலாம்ன்னு சொல்லி இருந்தேன். இவளும் ரொம்ப துணிகரமா ஓக்கேன்னு சொன்னான்னு சந்தோஷப்பட்டா.. அது இவ்ளோ பெரிய சதியா இருக்கும்ன்னு நான் நினைக்கலை! 

3 மணிக்கு கூப்பிட்டு, நீ நேரா என் ஹோட்டல் ரூமுக்கு வந்திடுன்னு சொன்னேன்.. ”நான் இப்போ புடவை எடுக்க வந்திருக்கேன். எனக்கொண்ணு எங்க அத்தைக்கு ஒண்ணுன்னு ” சொன்னா. சர்த்தான் களுதையை எடுத்துட்டு வரட்டுமேன்னு நானும் 4 மணி வரை பொறும்ம்ம்ம்ம்மையா காத்துண்டு இருந்தேனா.. இவளை ஆளையும் காணோம் ஃபோனையும் காணோம். சென்னை சில்க்ஸ் 2 நிமிஷ நடைதானேன்னு நானே கிளம்பி(மூஞ்சி கூட அலம்பாமல்) போனா.. அம்மணி கிரவுண்ட் ஃப்ளோர்ல தான் இருக்கா. என்னைக்காண பிள்ளையார் சிலை கிட்டே ஓடோடி வந்து, என் பக்கத்துல இருந்த ஹேங்கரில் தொங்கிய புடவை என்ன விலைன்னு பார்த்தா! ”அப்புறம் அநன்ஸ், எப்படி இருக்கே, என்ன வேலை, இந்த புடவை ஓக்கேவா, கார்த்தாலே எத்தனை மணிக்கு வந்தே, இந்த பார்டர் சரியில்லை இல்லே? மத்தியானம் எங்கே சாப்பிட்டே, இது கலர் அடிக்கிதோ?, க்ளையண்ட் ஆபீஸ் எங்கே?, இதெல்லாம் என்னால காலேஜுக்கு கட்டிண்டு போக முடியுமோ?”போன்ற அதி முக்கிய(!) விஷயங்களை பத்தி கேட்டா.நானும் குழம்பிய படியே ரெண்டு மூணு கேள்விகளுக்கு தெரிஞ்ச மட்டுல பதிலைச் சொன்னேன். 

மிக குழப்பமான முக பாவத்துடன் ஆக்சுவலி (pava) பாவத்துடன் அவள் ரங்ஸ் நின்றிருந்தார். கோவிந்தண்ணா ரொம்ப சாது, படு சாஃப்ட் டைப்! இதை கட்டிண்டு என்ன பாடு படுறாரோன்னு நினைக்கும்படி இருக்கார்.

அடுத்ததா நாம சந்திக்க இருக்கும் அதி முக்கியமான கேரக்டர் நம்ம சேல்ஸ்மேன் சிங்காரவேலு(பெயரில் என்னப்பா இருக்கு? ஏதோ ஒரு பையன், விடுங்களேன்) அந்த சிங்காரவேலுவின் முகத்தில அதி பயங்கர குழப்ப ரேகைகள் ஓடின. அது ஏன்னு அப்புறம் சொல்றேன்.  அப்பாவி ரெண்டு ரெண்டு ஹேங்கராக அந்த சி.வேலுவிடம் குடுத்துண்டே வந்தா. அவனும் எல்லாத்தையும் ஒரு இடத்தில் அக்காமடேட் பண்ணிட்டு வந்தான். அவனில்லாத சமயத்தில் கோவிந்தண்ணாவின் பத்து விரல்களில் 300 ஹேங்கர்களை திணித்தாள். ஹேய், இது நல்லா இருக்குல்லே?ன்னு நான் சொன்னா, உடனே அதை எடுத்து அண்ணாவின் காதில் தொங்கவிட்டா, பின்னே கையெல்லாம் ஹவுஸ் ஃபுல்லாச்சே! போறபோக்கில் சட்டை பட்டன் ஹோலில் கூட மாட்டிடுவா போல இருக்கேன்னு அண்ணா டென்ஷன் ஆகி சிங்காரவேலா... சிங்கார வேலான்னு கத்திண்டே சேல்ஸ்மேனை நோக்கி ஓடினார்.

இந்தக்கலர் ஏற்கனவே என் கிட்டே இருக்கு, இந்த பார்டர் நல்லா இல்லே, வொயிட் ஃபால் கடையில கிடைக்காது, இந்த மெட்டீரியலை பீக்கோ பண்ண முடியாது, பிளவுஸ் ராமராஜன் மாதிரி இருக்கு, இதே தான் போனவாரம் (!!!) வந்து வாங்கினேன், டல்லா இருக்கு, வெளிச்சத்துல நல்லாயில்லை, வேண்டாம், நல்லாயில்லை, சரியில்லை, துணி உழைக்காது, இழை சரியில்லை, பிஞ்சிருக்கு, இதுல ஒரு லைட் ஷேட் வெச்சிருக்கேன் இப்படி ஷார்ட்லிஸ்ட் பண்ணி வெச்சிருந்த 2478 புடவைகளிலிருந்து எல்ல்ல்ல்லாவற்றையும் நீக்கினாள்.  மீதமிருந்தது ஒரு 4 புடவை தான். அந்த நாலையும் 2 மணிநேரம் திருப்பித் திருப்பி பார்த்தாள். நானும் கோவிந்தண்ணாவும் தேமேன்னு நின்னுண்டு இருந்தோம். அனன்ஸ் நீ என்ன சொல்றே.. ஏங்க, நீங்க?ன்னு ரொம்ப பவ்வியமா ஒரு 550 வாட்டி கேட்டா! எனக்கு வந்த எரிச்சலுக்கு ஓனர்கிட்டே போய் உங்க கடை பேஸ்மெண்ட்ல இவளை வெச்சு பூட்டிடுங்கன்னு சொல்லலாம்ன்னு தோணிச்சு. எனக்கே இப்படி தோணுதே, கோவிந்த் அண்ணாவுக்கு என்னெல்லாம் தோணி இருக்கும்? அந்த சிங்கார வேலு நம்மளை அனுப்பிட்டு ஒரு ஓரமா உக்காண்டு குலுங்கி அழுதிண்டு இருந்தான். யாரு பெத்த புள்ளையோ என்னமோ?

ஒரு வழியா ஓக்கே பண்ணி அந்த 4 புடவைக்கு பில்லை போட்டு பணம் கட்டிட்டு வந்தப்போ தான் எனக்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது. இப்போ சல்வார் பாக்க போகலாம். ஃப்ர்ஸ்ட் ஃப்ளோர் தான்னு என் தலையில கல்லைத்தூக்கி போட்டா! நானும் அண்ணாவும் அதிர்ச்சியை வெளிக்காட்டிக்காம, ஓ.. போலாமே.. அதுக்கென்னான்னு எச்சில் முழுங்கிட்டு மேல லிஃப்ட்ல போனோம். பின்னே 4 புடவைக்கு 4 மணி நேரம் நின்னிருக்கோமே.. கால் வலி. 

அங்கே போய் இது வாண்டாம், அது வாண்டாம், பூ சரியில்லை(அதான் எங்க காதுல பூ வெச்சாச்சே), துப்பட்டா மோசம் (நான் துப்பட்டா?) , இதே கலர்ல போன வாரம்(!!!) (மறுபடியுமா?)வந்து எடுத்தேன், இப்படியெல்லம பெனாத்திண்டே சுமார் ஒரு மணி நேரம் நடந்தா. நான் பெர்ஸனலா ரெண்டு செலக்ட் பண்ணி ஷார்ட்லிஸ்டிங்க்கு அனுப்பினேன், I kept my fingers crossed. இல்லையோ பின்னே.. இவ இந்த வாட்டி ஷார்ட்லிஸ்ட் பண்ணிது ஒன்லி 5 தான். நான் போன வாரம் எது எடுத்தேன் தெரியுமான்னு அவ கொண்டு வந்து காட்டின ட்ரெஸ் செம்ம்ம்ம சூப்பர். நான் சொன்னேன், ”ATM, இதை போட்டுண்டு ... அப்படியே “ன்னு நான் சொல்லிண்டு இருக்கும்போது அவள், கோவிந்த் அண்ணா, சேல்ஸ்கேள், அங்கே சுடிதார் பார்த்துண்டு இருந்த இளசுகள் எல்லாரும் என்னை கவனிக்க, நான் கண்ட்ன்யூ செய்தேன்” பத்திரமாகவும் மெதுவாகவும் அந்த கரகத்தை தலையில எடுத்து வெச்சுக்கணும்”ன்னு முடிக்கவும் எல்லாரும் ‘கொல்ல்ல்ல்ல்’. மன்ன்ன்ன்ஞ்சள்ன்னா அப்படி ஒரு ம்ன்ன்ன்ன்ஞ்சள்.. பேசாம புரட்டாசி மாசம் போட்டுண்டா செம்ம்மையா உண்டி குலுக்கி பெரியாளா வரலாம்! 

எப்படியோ நானும் அண்ணாவும், குத்துயிரும் கொலையுயிருமாக தப்பிச்சோம் பொழைச்சோம்ன்னு வெளியில வந்ததுக்கப்புறம் தான் தெரிஞ்சுது இவ வாரா வாரம் சென்னை சில்க்ஸுக்கு வந்துடுவாளாம்.. அதான் அந்த சிங்காஅரவேலுவுக்கு வயித்துல அமிலம் சுரந்திருக்கு.. மூஞ்சியே விளக்கெண்ணய் குடிச்சாப்புல அப்படி ஒரு எக்ஸ்பிரஷன். இவங்க கார் பார்க்கிங்ல உள்ளே போனாலே அந்த பார்க்கிங் செக்யூரிட்டி உடனே சென்னை சில்க்ஸுக்கு வொயர்லெஸ் தகவல் குடுத்துடறானாம்.. அவங்க இம்மீடியட்டா ஷட்டரை போட்டுடறாங்களாம். உள்ளே இருக்கற கஸ்டமர்ஸை எல்லாம் பின்புற வேர்ஹவுஸ் எக்ஸிட் வழியாத்தான் விடுறாங்களாம்!. ஐய்யய்யோ கடை லீவான்னு இவ பி.எஸ்.ஆருக்கு போனா, அங்கேயும் கடை அடைப்பு தானாம். பின்னே, என்னதான் காம்பிடேட்டர்ஸானாலும் கடைக்காரர்களுக்குள் இந்த அளவுக்கு நட்பு இருக்க முடியுமான்னு நான் வியந்தேன். செ.சி முதலாளி உடனே PSRக்கு SMS அனுப்பிடுவாராமே! அந்த சிங்காரவேலு அனேகமா ரிஸைன் பண்றதுக்கே இவ தான் காரணமாம்.

 கோவையில இருக்கற ஸ்ரீதேவி சில்க்ஸ், கணபதி சில்க்ஸ், மஹாவீர்ஸ், ஷோபா போன்ற கடைகள் ஏன் விளம்பரம் செய்யறதில்லைன்னு இப்போ உங்களுக்கு நன்னா புரிஞ்சிருக்குமே? 

இந்த ரகளையில எனக்கு வேற அம்மணி ஒரு புடவை வாங்கி பரிசளிச்சா! நான் இவ கூட ஷாப்பிங் போன பாவத்துக்கு இவள் எனக்கு 15000 ரூபாய்க்கு பட்டுப் புடவையும் கோல்டு ஃபேஷியலும் ஸ்பான்ஸர் பண்ணியிருக்கணுமாக்கும். ஆனாலும் அந்த ஒரு புடவைக்கே நான் கண்ணீர் மல்கி பாட்டெல்லாம் பாடினேன். ”கருணை தெய்வமே.... அப்பாவியே.... காண வேண்டும் உன்... கொட்ட்ட்டாவியே”.... அப்படீன்னு.. பின்னே என்னங்க? ஷாப்பிங் போனா ஒருத்தி டயர்டே ஆகமாட்டாளோ? 

திருச்சி சாரதா சில்க்ஸ்ல என் ரங்ஸ் சேல்ஸ்மேனிடம் கேட்ட கேள்வி மறக்கமுடியவில்ல்லை... மறக்க முடியவில்லை! ஏங்க இவங்களுக்கெல்லாம் காலே வலிக்காதா? 

வெளியில் வந்து ஆளுக்கு 1.5 முழம் பூ வாங்கிண்டோம். பூ வெச்சுக்க ஹேர்பின் இல்லை.. சேஃப்டி பின்ல வெச்சுவிடுறேன் வான்னு சொன்னா. எனக்கு பயமான பயம், சேஃப்டி பின்னால பின் மண்டையில குத்திக் குத்தி சீழ்தலை சாத்தனார் மாதிரி ஆக்கியுட போறான்னு.. ச்சே.. அவ ரொம்ப நல்லவ.. அந்த பின்னை அவிழ்க்கவேமுடியாம வெச்சுவிட்டா.. சென்னைவரக்கும் அந்த வாடல் பூவோட ஆட்டோக்காராளெல்லாம் தெரிச்சு ஓடுறாப்புல் அவ எனக்கு வெச்சு விட்டிருந்தா! நீ என்னென்ன செய்தாலும் புதுமை.... அப்பாவி.. 

அப்புறம் லாட்ஸில் ஷூ வாங்கப் போனோமா, அங்கே மெட்டி மாத்தணும், 35 டீ கப்ஸ் வாங்கணும், ஆணி வாங்கணும், ஸ்க்ரூ வாங்கணும், புக் வாங்கணும்ன்னு தெனாலி மாதிரி கண்டினுவஸா சொல்லிண்டு இருந்தா. எதுக்குடீ 35 கப்ஸ்ன்னு கேட்டா, நான் இது வரைக்கும் வீட்டுப்பாத்திரங்கள் ஏதாவது வாங்கி இருக்கேனான்னு கேக்கறா! அதானே, அதுக்கும் சேர்த்து தான் புடவை வாங்கிடுறியேன்னு நான் சொல்ல, ”இனிமே நீ துணி வாங்கினா அதை கிச்சன்ல தான் வைக்கணும்”ன்னு அண்ணா வெச்சாரே ஒரு ஆப்பு! 

அப்புறம் அன்னபூர்னாவுல என் கிச்சடியெல்லாம் எடுத்து சாப்பிட்டுட்டு, தன்னோட பஜ்ஜியை ஒண்ணு கூட எனக்கு குடுக்காம காலி பண்ணிட்டு, சூடான ஃபில்டர் காப்பியை கங்காஜலமாக்கி குடிச்சுட்டு இன்னும் கொஞ்ச நேரம் அளவளாவிட்டு வருத்தத்துடன் பிரிஞ்சோம்.. 

லவ் யூ ATM! You are a rockstar! Best buddy for life! அண்ணா தான் பாவம்! :))))




Saturday, June 1, 2013

ரங்குவின் நவீன சிந்தனைகள்


எனக்கும் ரங்ஸுக்கும் ரசனையில பொருத்தம்ன்னா அப்படி ஒரு பொருத்தம், இதைப்பத்தி ரெண்டு டீ.வீ இருந்தா எத்தனை நன்னா இருக்கும் பதிவுல சொல்லி இருந்தாலும் அவருடைய சிந்தனைகள் சிலவற்றை இந்தப் பதிவில் பகிரலாமேன்னு நினைக்கிறேன்.

சிந்தனைகள்:

1. பெண்கள் தினமும் மஞ்சள் பூசிக்கொள்ள வேண்டும் : தினமும் காலை ஆஃபீஸ் கிளம்பறதுக்கு முன்னாடி மஞ்சள் தேய்ச்சுண்டியான்னு கேப்பார். துபாய்ல இருந்த வரைக்கும் டப்பா டப்பாவா கோபுரம் பூசு மஞ்சள் தூள் தேய்ச்சு குளிச்சு குளிச்சு எல்லா சுடிதார்லேயும் நிரந்தர மஞ்சள் கரை ஆயாச்சு. துண்டு, தலைகாணி எல்லாத்துலேயும் திட்டு திட்டா மஞ்சள் கறை! இதெல்லாம் நான் யாருகிட்டே சொல்ல?

2. குங்குமம் தான் இட்டுக்கணும்: ஸ்டிக்கர் எல்லாம் இட்டுக்கப்பிடாது. சுமங்கலிகள் குங்குமம் தான் இட்டுக்கணும். வகிட்ல குங்குமம் இட்டுண்டாலே கொஞ்ச நேரத்துல போயே போயிடும். இந்த அழகுல நெத்தியிலேயுமா? இந்த தொல்லை தாங்க முடியாம நான் பெரீய ஸ்டிக்கர் இட்டுண்டு, அது மேல குங்கமத்தை வெச்சுண்டு சில நாள் இவரை ஏமாத்தி பார்த்தேன். இதுனால தலைகாணி எல்லாம் கரையாச்சேயொழிய இவருக்கு திருப்தி ஏற்படலை!

3. நைட்டியா? மூச்! : சதா சர்வகாலமும் புடவை தான் உடுத்திக்கணும்.  மடிசார் உடுத்தியுண்டா அதி ப்ரஸன்ன வதனம். சுடிதார் - சுமாரான எக்ஸ்பிரஷன்.  மத்தபடி நைட்டி பைஜாமா எல்லாம்.. ப்டாதுன்னா ப்டாது தான். இவருடைய எக்ஸ் கேர்ள்பிரண்ட் தேவயானி வேணா பொம்மிஸ் நைட்டீஸ் போட்டுக்கலாம் ஆனா கட்டின பொண்டாட்டி நான், விக்காஸ், ராசாத்தி பத்தி எல்லாம் கனவுல கூட நினைக்கக் கூடாது! வாட் எ கொடுமை சரவணா! வாட் எ கொடுமை ஐ ஸே?

4. நான்ஸ்டிக் கேடு: நான்ஸ்டிக்கெல்லாம் உடம்புக்கு மஹா கேடாக்கும். ஒன்ளி வெண்கலம், இரும்புச் சட்டி / ஹிண்டேலியப் பாத்திரம் தான் நல்லதுன்னு சொல்லுவார். அதுல டெஃப்லான் இருக்காம் அதுனால கேன்ஸர் வருமாம்.. அடைமாவை இரும்புக் கல்லுல போட்டு நாலு கரண்டி எண்ணெயில் பொறித்தெடுத்து சாப்பிட்டா மாட்டும் கொளஸ்ட்ராலே (மலையாள ஆக்ஸண்டில் கொலஸ்ட்ரால் கொளஸ்ட்ரால் ஆயிடுமாக்கும்) வராதோ? இதுக்கு கேன்ஸரே தேவலாம்!

5. இண்டக்‌ஷன் கேடு: இண்டக்‌ஷன் ஸ்டவ்வெல்லாம் ரொம்ப கேடாக்கும். எங்க பாட்டியெல்லாம் பாலக்காட்ல விறகடுப்புல தான் சமைப்பா. என்ன ருஜியாக்கும் தெரியுமோ? க்கும், மெட்றாஸுல விறகு கிடைக்குமா? மோரோவர், அதுல வரும் புகையால என் கண்ணு எரிஞ்சாக்கூட உங்களுக்கு பரம த்ருப்தி தான், ஆல் டீட்டெயில்ஸ் ஐ நோ,  ஆனா வாடகை வீட்டு சமயலறை என்னத்துக்காறது? வீட்டுக்கார மாமி சர்ப்ரைஸ் ஆடிட்டுக்கு வந்தா நம்ம ஆட்டம் க்ளோஸ்!ஸ்டாக் பண்ணி வெச்சுண்டு இருக்கற விறகெல்லாம் நீங்க தோள்ல சுமந்துண்டு நடுத்தெருவுல தான் நிக்கணும்.

6. கேன் வெள்ளம் கேடு: கேன் தண்ணி உடம்புக்கு கெடுதல். பானைத் தண்ணி தான் நல்லது. எனக்கு பானைத்தண்ணியும் வேண்டாம் கேன் தண்ணியும் வேண்டாம். குழாய்த்தண்ணியே போதும்.

7. Melamine கேடு: துபாய்க்கு போனப்போ எல்லார் வீட்டுலேயும் மெலமைன் ப்ளேட்டுக்கள் தான் இருக்கும்.. சாதம் சாப்பிடவே.. நான் சரி டிஃபனுக்கு செளகரியமா இருக்கேன்னு ஒரு டஜன் மெலமைன் ப்ளேட்டுக்களை வாங்கினேன். இவர் ஏதோ சினிமாவை பார்த்துட்டு மெலமைன் கேடு, வேணா தங்கத்தட்டுல சாப்பிடலாம்ன்னு ஆரம்பிச்சுட்டார்.. ஆமா பெரிய நவாப் ஃபேமிலி தங்கத்தட்டு வேணுமாம். அங்கே இருந்த வரை சாதத்தை போட்டு கைல வெச்சுண்டு சாப்பிடற பழக்கம் இருந்தது. அப்போ ஸ்டீல் தட்டுல சுடச்சுட ரசஞ்சாதம் சாப்பிட்டா, சங்கராபரணம் சங்கர சாஸ்திரி பொண்ணு சாரதா மாதிரி கை சுட்டு பொசுங்கிடும்!

8. வாஷிங் மெஷின் கேடு: கைல தோச்சாத்தான் பனியனெல்லாம் பளிச்சுன்னு இருக்கு இல்லையான்னு அடிக்கடி சொல்லி காமிப்பார். இத்துனூண்டு பாத்ரூம்ல நான் நுழைஞ்சு துவைச்சு, அலசி, நீலம் போட்டு, கஞ்சி போட்டு உஸ்ஸ்.. மெஷின்ல அழுக்கு போகாததென்னமோ உண்மை தான். இருந்தாலும் ஒரு செளகரியத்துக்கு தானே? எங்கப்பா எல்லாம் அவர் துணியை அவரே துவைச்சுக்கறார்.. நமக்கு சொல்ல முடியறதோ? 

9. Mop ப்டாது: கையால வீட்டை துடைச்சாத்தான் வ்ருத்தியா இருக்கும். மாப்புல முடி எல்லாம் போகவே போகாதுன்னு பின்னாடியே அஷ்டோத்திரம் வாசிச்சுண்டே வருவார். ஃபானை போடுங்கோன்னு பேச்சை மாத்தினாலும் , “ பாத்தியா, சொன்னேன் இல்லையா? அங்கே துடை, இங்கே துடைன்னு கண்டினுவஸா வெறுப்பேத்திண்டே அர்ச்சனையும் பண்ணுவார்.

10.”வாட்டர் பாட்டில்ஸ் எல்லாம் ரொம்ப நாள் வெச்சுக்கப்டாது. அதெல்லாம் ஃபுட் க்ரேட் இல்லை. 6 மாசத்துக்குள்ளே வங்கின எல்லாத்தையும் களையணும், ஏர் டைட் கண்டெயினர்ஸ்(!) உள்ளே வைக்கறது எல்லாமே டாக்ஸின்ஸா ஆயிடும் அதையும் களைஞ்சுடு” மாதிரியான பேச்சை கேட்டு கேட்டு எனக்கு போதும் போதும்ன்னு ஆயாச்சு. 

இனி போற போக்கை பார்த்தா, தீப்பெட்டி, லைட்டர் எல்லாம் கேடு.. இனிமே நீ சிக்கி முக்கி கல் தான் யூஸ் பண்ணணும்ன்னு சொன்னாலும் சொல்லிடுவார்.. இப்போ சொல்லுங்க.. இவரை கற்காலமனிதன்னு நான் சொன்னது தப்பா?

Wednesday, May 8, 2013

ரங்குவின் பிஸினெஸ் ட்ரிப்கள்

ஃபோன் பண்ணி  “இன்னிக்கு lunch சாப்பிட வரமுடியாதும்மா” ன்னு ரங்கு சொல்லும்போது மனசுக்குளே "Yes Yes Yes....”ன்னு வெற்றிக்குறி காட்டிண்டாலும், வெளியே சோகமான முகத்துடன், "ஏன்? அப்போ சாப்பாட்டுக்கு என்ன பண்ணப்போறேள் " போன்ற சம்பிரதாயக் கேள்விகளை சும்மாங்காச்சுக்கும் கேட்டு வைப்போம்.இந்த பதிவும் அதே மாதிரி தான்!

அதே மாதிரி தான் இந்த ரங்குவின் பிஸினெஸ் ட்ரிப்ஸ்! ஹய்யா ஜாலி, ரெண்டு நாள் சமயல் இல்லை, ரங்கு ஊருக்கு போனா நமக்கு இம்மீடியட்டா வெக்கேஷன் மூட் தானே வரது.. டைம் டேபிள் வாழ்க்கைக்கு ஒரு டாட்டா காட்டிடலாம்! நம்ம இஷ்டத்துக்கு இருக்கலாம்.

அதென்னமோ தெரியலை என்ன மாயமோ தெரியலை, அந்த பொற்காலம் மட்டும் என் வாழ்வில இது வரை வந்ததேயில்லை! 

ஒரு வாட்டி அபுதாபியிலேந்து எங்கேயே பக்கத்து ஊருக்கு, சரி சரி.. பக்கத்து நாட்டுக்கு  ரங்ஸ் பிஸினெஸ் ட்ரிப்புன்னு சொன்னார்.. நானும் தலைகாணி பாய், ஃப்ளீஸ் ப்ளான்கெட் எல்லாத்தையும் ரெடியா வெச்சுண்டு இவரை வழியனுப்பிட்டு தாழ் போட்டுண்டு படுத்தா ஒரு மணி நேரத்துல ஃப்ளைட் கான்ஸெல்ன்னு சொல்லிட்டு திரும்பி வந்துட்டார்! பிஸ்னெஸ் ட்ரிப்பும் இல்லே, என் வெக்கேஷனும் இல்லே! 

அதற்கடுத்த வாட்டி நான் அதே மாதிரி தலைகாணி, பாய், ஃப்ளீஸ் ப்ளான்கேட் எல்லாத்தையும் ரெடியா வெச்சுண்டு வழியனுப்பினேன். அப்போவும் சீக்கிரம் வேலை ஆயிடுத்துன்னு ரெண்டு நாள் ட்ரிப்பை ஒரே நாளில் முடிச்சுண்டு ஓடி வந்துட்டார்..

 நானும் இவர் கிளம்பும் போது “ஐ மிஸ் யூ” எல்லாம் சொல்லி, கண்ல ஜலம் வெச்சுண்டு சூப்பரா ஆக்ட்டு குடுத்து பார்த்தாச்சு, மசியவே மாட்டேங்கறார்.. நான் தலைகாணியை திருப்பிவெச்சுண்டு அந்தப்பக்கம் புரண்டு படுத்துக்கறதுக்குள்ள குறு குறுன்னு மூக்குல வேர்த்து ஓடி வந்து டிங் டாங்ன்னு பெல் அடிச்சுடுறார்!நற நற! 

போன வருஷம் இப்படித்தான் பிஸினெஸ் ட்ரிப், 8 நாள் ஆகும்(ஹய்ய்ய்ய்ய்ய்யா) பாம்பே போறேன், நீ இருந்துப்பியா?(இதறகாகத்தானே காத்துக்கொண்டிருந்தேன் மஹாதேவா?) பயம் இல்லையே(பயமா எனக்கா? என்னைப்பார்த்து மத்தவா பயந்துக்காம இருந்தா போறாதா?) ஏதாவதுன்னா எனக்கு ஃபோன் பண்ணு (என் ஃபோனையே எங்கேன்னு தேடணும், நான் தூங்க போறேன்,நீங்க கொஞ்சம் புறப்பட்டா தேவலை) அப்படீன்னெல்லாம் சொல்லி தாஜா பண்ணி அனுப்பி வெச்சா ரயில்லே பாம்பே போயிட்டு கேளுங்க மக்களே.. 5 நாள்.. அஞ்சே நாள்ல குடுகுடுன்னு ஓடி திரும்ப வந்திருக்கார். போன அலுப்பு கூட தீர்ந்திருக்காது.. அதுக்குள்ள புறப்பட்டு வந்தாச்சு.. அதுக்குள்ளேயுமா வந்துட்டார்ன்னு ஊர்ல இருக்கறவா எல்லாரும் ஃபோன் பண்ணி துக்கம் விஜாரிக்கறா.. பின்னே நான் ஊர்வசி மாதிரி எங்காத்துக்காரர் ஊருக்கு போயிருக்கார்ன்னு ட்ரம்பெட் வாசிச்சு சொல்லியாச்சு. 5 நாள் போன வழி தெரியலை! ரயில்ல போனப்போ வந்த பேண்ட்ரி கார் சர்வீஸ் ஸ்டாஃப் தான் வரும்போதும் வந்தாளாம் (க்கும் ரொம்ப முக்கியம், உங்களை சும்மாவா விட்டா?) அதுக்குள்ளே கிளம்பிட்டேளான்னு கேட்டாளாம் (இருக்காதோ பின்னே? யாராவது மும்பய் மாதிரி ஒரு அழகான நகரை சுத்தி பார்க்காம இப்படி கால்லே வென்னீர் ஊத்திண்டு சென்னைக்கு திரும்ப ஓடி வருவாளோ?)வரும்போது ஃப்ளைட் ட்ரை பண்ணினாராம்(நல்ல வேளை, கிடைக்கலை! அது மட்டும் கிடைச்சிருந்தது, மொத்தமா அந்த ப்ரைவேட் ஏர்லைன்ஸ்களையே நாசம் பண்ணி இருப்பேன்)

போன வாரம் மறுபடியும் என் வாழ்வில் ஜாக்பாட் அடிக்கற மாதிரி இருந்தது. 5 நாள் அத்தியாவசிய பிரயாணம். போயே ஆகணும்(பின்னே.. கிளம்பிடுங்கோ) நீ இருந்துப்பியா? (பின்னே செத்துடுவேனா? ) அப்படி இப்படின்னு கேட்டுட்டு 12 மணிக்கு கிளம்புவேன்னு சொன்னார். நானும் ஆ.......வலா பார்த்துண்டு இருந்தேன். ம்ஹும்.. வடிவேல் மாதிரி ”என் நீ க்ளைண்ட்மா..அவர் வந்து கூட்டிண்டு போவார்”ன்னு வெயிட் பண்ணி கடைசியில அவர் 5 மணிக்கு தான் வந்தார். நற நற...பால்கனியில் எட்டிப்பார்த்து டாட்டா சொல்லிட்டு ஜாலியா பாட்டு பாடிண்டே வெளீல கிளம்பி போய்ட்டு வந்தேன். நைட் எப்பையும் போல தூங்கிட்டு கார்த்தால என்னிக்கும் இல்லாம 8.30 வரை தூங்கி எழுந்தேன். (பின்னே பாக்கி நாள் தான் 8 மணிக்கே வெள்ளென எழுந்துடுவேனே! ;-) )நாள் முழுதும் அருண் வருண் கூட ட்ராயிங் பெயிண்டிங் எல்லாம் பண்ணிட்டு பொழுதை போக்கிட்டு நைட் வீட்டுக்கு வந்துட்டு வேணும்னே தூங்காம டீவீ பார்த்து, ஃபேஸ்புக்கில் காணமல் போனவர்க்ளை பற்றிய அறிவெப்பெல்லாம் படிச்சுட்டு, ஒரே விளையாட்டை வித விதமா விளையாடி, பழைய தந்தியால தெலுங்கு படங்களை டவுன்லோடி பார்த்து சிரித்து(அதான் நான் சிரிக்கும் கடைசி சிரிப்புன்னு எனக்கு தெரியாம போயிடுத்து) சிரிச்சுண்டு இருந்தேனா.. அப்போத்தான் அந்த செய்தி வந்தது.. ரங்கு தான், நான் வந்த வேலை முடிஞ்சது (அதுக்குள்ளேயா?) நான் இப்போ கிளம்பறேன்(அடுத்த ஊருக்கு தானே?) இல்லைம்மா, பாலக்காடு ப்ரோக்ராம் கான்ஸெல்(”அட ராமா”) ஆமா, இப்போ சென்னை வண்டிக்கு வெயிட்டிங், கார்த்தால 7 மணிக்கு சென்னை வந்துடும்(7 மணிக்கேவா, இப்போவே 1 மணி ஆச்சே, எப்படி 7 மணிக்கே சென்னை வரும்?) சரி கார்த்தல பார்க்கலாம்ன்னு சொல்லி கட் பண்ணிட்டார்..
நான் உடனே கவுந்தடிச்சு படுத்தும் தூக்கம் வரலை.. அலாம் வெச்சுண்டும் எழுந்து எழுந்து பார்த்தும் விடியாததால் கண்ணெல்லாம் ஒரே எரிச்சல். கடைசியில 6.10க்கு எழுந்தேன்.. வேகமா ஃபில்டர் போட்டு வெச்சுட்டு பல்லை தேய்ச்சுட்டு மறுபடியும் படுத்தேனா.. அப்படியே சொர்க்கமா தூக்கம்.. ஆஹா.. ரங்குவின் பஸ் அப்படியே கும்மிடிப்பூண்டி வழியா ஆந்திரா போயிடுத்துன்னா நாளைக்கு நைட்டு தான் வருவார்ன்னெல்லாம் இனிய கனவு..
கடைசியில் 9 மணிக்கு டாண்ணு ரங்கு வந்துட்டார். மேலேயும் கீழேயும் பார்த்தார், ”என்ன இன்னும் குளிக்கலையா?”ன்னு ஒரு லுக் விட்டார். எனக்கு  வந்த கோபத்துக்கு ”நீங்க ஏன் நேத்திக்கு மத்தியானமே என்னைக் கூப்பிட்டு இன்னிக்கி கார்த்தால வரேன்னு அப்டேட் பண்ணலை?  நான் ராத்திரி ஃபுல்லா தூங்கவேயில்லை தெரியுமா? இப்போத்தான் எழுந்திரிச்சேன்.. முடியவேயில்லை”ன்னு ஓன்னு அழுதுட்டேன்.. ”போனாப்போறது.. ஏன் கரையராய், நேக்கம்மா கிடையாது அக்கா கிடையாது தங்கை கிடையாது, ஆருங்கிடையாது”ன்னு ரங்கு தன் பழைய பல்லவியை ஸ்டாட் பண்னி  லவ் டாக்ஸ் ஆரம்பிச்சர் . அப்போத்தான் நான் அந்த மில்லியன் டாலர் கேள்வியை கேட்டேன் - ”எப்போன்னா உங்க அடுத்த பிஸ்னஸ் ட்ரிப்? “அடுத்து ஆஸ்திரேலியா போவேண்டி இருக்கும்மா”- வந்ததே எனக்கு கோபம் - “எதுக்கு?  ஒரே நாள்ல திரும்பி வரதுக்கா? கார்த்தால ஃப்ளைட்டுல போயி இறங்கின உடனே, பாக்கேஜ் கலெக்ட் பண்ணீண்டு ஏர்போர்ட்லேந்து ஒரு ஃபோன்.. ஒரே ஃபோன் பண்ணி உங்க பிஸ்னெஸெல்லாம் பேசி முடிச்சு அப்படியே பாகேஜை அடுத்த ஃப்ளைட்டுக்கு செக் இன் பண்ணிடுவேள்? அப்படித்தானேன்னு கேட்டேன்! ஏர்ப்போர்ட்ல காஃபி நன்னால்லை, நேரே  ஆத்துக்கே போய் குடிச்சுக்கலாம்ன்னு புறப்பட்டு டொட்டடொயிங்ன்னு இங்கே வந்து நிப்பேள் இல்லையா?”ன்னு கேட்டுட்டேன்.

Thursday, April 25, 2013

எக்மோர் மியூசியம் தியேட்டரில் சுஜாதா வந்திருந்தார்- இருக்காதா பின்னே? சுஜாதா is God அல்லவோ?

தலைப்பு கொஞ்சம் நீளமோ? பரவாயில்லை... இருந்துட்டு போகட்டும்!
நேத்திக்கு கார்த்தால, எப்பவும்  போல பக்கித்தனமா ட்ரெஸ் பண்ணிண்டு அஃபீஸுக்கு வந்தேன். ஆஃபீஸ் மெயில் ஓப்பன் பண்றேனோ இல்லையோ முகப்புத்தகம் முதல்லே ஓப்பன் பண்ணிடுவேனாக்கும். நெக்ஸ்டு ஜி மெயில், ஸ்கைப், இப்படி ஆஃபீஸுக்கு அத்தியாவசிய பல அப்ளிகேஷன்களை எல்லாம் திறந்துட்டு கடைசியா போனாப்போறதுன்னு ஆஃபீஸ் மெயிலை திறப்பது வழக்கம். (சில நாள் திறப்பதே கிடையாது.)

நேத்திக்கும் அப்படித்தான் 'எங்கள் ப்ளாக்’ கெளத்தமன்ஜி நாடக ரசிகர்களுக்குன்னு போட்டு, கடவுள் வந்திருந்தார் நாடகத்தை பத்தி போட்டிருந்தார். நேரம், இடம் எல்லாம் பார்த்துண்டேன். உடனே ரங்குவை ரிக்வெஸ்ட் பண்ணேன்.இவருக்குத்தான் இந்த ’ஈள் பூள்’ அழுகை மெகா சீரியல் எல்லாம் இஷ்டமாச்சே? அதுனால ”ஃபேமிலி சப்ஜெக்டாம்ன்னா”ன்னு சொல்லி வெச்சேன். பின்னே மடிசார் மாமியெல்லாம் இருந்தா ஃபேமிலி சப்ஜெக்ட் தானே?

இவர் தான் எங்கேயும் சாமான்யமா கிளம்ப மாட்டாரே! நாற்காலியில் பிஷின், காதுல  ப்ளூடூத்தில் பிஷின், கையில் Laptop / Tab / Smart Phone ஆகியவற்றுடன் பிஷின். என்னத்த சொல்ல? ஆனாலும் அவருக்கு என்னை எங்கேயும் கூட்டிண்டு போறதில்லைன்னு ரொம்ப குறை. அதுனால சட்டுன்னு ஒத்துண்டுட்டார்! எனக்கே ஆச்சரியம்! 

சுஜாதாவின் கடவுள் வந்திருந்தார் நாடக வடிவில் பாதி படிச்சிருக்கேன்.  அதை அசை போட்டுண்டே எக்மோரில் இறங்கி நடக்கலாம்ன்னு தான் நினைச்சோம். ஆனா அங்கே இருந்த கடமை தவராத  போலீஸ்காரர், ”17ஈ பஸ் வரும் அதில் தான் போகணும், 10 நிமிசத்துல போயிரலாம்”ன்னு ரொம்பவே வற்புறுத்தினார்.விட்டா, எங்க கூட வந்து நாங்க அந்த பஸ்ஸில் ஏறறோமான்னு செக் பண்ணுவார் போல இருந்தது! சரின்னு ஒப்புத்துண்டேன். ரயில்வே ஸ்டேஷனுக்கும் தியேட்டருக்கும் வெறும் 1.2 கிமி தான்னு கூகிள் மேப்பில் பார்த்தாச்சு, இருந்தாலும் வெக்கமே இல்லாம காலி பஸ்ஸுல உக்காண்டு போனோம். ரங்குவின் கடமை உணர்ச்சியால் நான் நெகிழ்ந்தேன். பின்னே? டிக்கெட்டெல்லாம் வாங்கினார்! 

மியூசியம் தியேட்டரில் போய் உக்காண்டப்போ ஜில்லுன்னு இருந்தது. படு அமைதி. அரங்கம் மெதுவாக நிரம்பிக்கொண்டு இருந்தது. யாரையும் தெரியாது. ஜஸ்டு நாடகம் பார்த்து எஞ்சாய் பண்ணிட்டு போகலாம்ன்னு தான் நான் நினைச்சுண்டு இருந்தேன். திடீர்ன்னு பார்த்தா RVS அண்ணா குடும்பத்தோட வந்திருக்கார். மாதங்கியை சங்கீதா மன்னி தான் ஃபர்ஸ்ட் பார்த்தா. எல்லாரும்  அடுத்தடுத்த ரோக்களில் சேர்ந்து உக்காண்டோம். ஒரு ஃபேமிலியா உக்காண்டு பார்த்தாப்புல பார்த்து ரசிச்சோம். அதிலும் RVS அண்ணாவின் பெண்கள் படுசுட்டி. கூர்மையா கவனிச்சுண்டு இருந்தார்கள். 

இப்போ நாடகத்தை பத்தி: 

நான் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமத்தான் போனேன். நாடகம் முடிஞ்சப்போ திரு பாரதி மணி அவர்களுக்கு Standing ovation கொடுத்திருக்கணும்ன்னு தோணித்து. Hats off to his efforts! இதெல்லாம் பண்றது சாதாரண விஷயம் இல்லை! சொந்தக்காசு போட்டு ஆஃபீஸுக்கு ஒரு பேனா வாங்கினாலே ரீஇம்பர்ஸ்மெண்ட் கேட்கும் இந்த கால கட்டத்துல, கைக்காசு போட்டு நாடகம் நடத்தறது, அதுவும் இப்போ இருக்கும் விலைவாசிக்கு, க்ரேட் சார் நீங்க! அம்ஜத் அப்படீங்கறவருக்கும் இதில் நிறைய பங்களிப்பு இருக்கு. வாழ்க!

பாரதி மணி அவர்கள், தன்  அருமையான நடிப்பால் நம்மை கவர்கிறார். ஒரு டிப்பிகல் மிடில் க்ளாஸ் அச்சு பிச்சு மாமாவாக அருமையாக நடித்திருந்தார். நான் அமரர் பூர்ணம் விசுவனாதன் அவர்களின் டிராமாவை பார்த்ததில்லை. 

வரிக்கு வரி Stand up comedian மாதிரி அவரின் டயலாக் டெலிவரியும் எக்ஸ்ப்ரெஷனும், சிரிப்பொலியால் அரங்கமே அதிர்ந்தது. அவருடைய மனைவியாக வரும் பத்மஜா மாமியும் அடிபொளி, அச்சு அசலாக அந்த கதா பாத்திரத்தில் பொருந்துகிறார். 

சுந்தராக வந்த பையன் படு சூட்டிகை. சுந்தரின் துறுதுறுப்பும், மாறும் முகபாவங்களும் படு சுவரஸ்யம்! Remember, there are no closeup shots in a drama! இன்னும் கொஞ்சம் ப்ராக்டீஸ் பண்ணினால் பிராமண பாஷையும் சுலபமா கத்துண்டுடலாம். ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை.

 தசாவதாரத்தில் வரும் பல்ராம் நாயுடுவைப் போல கதாநாயகி வைஷாலி தமிழ் பேசினாலும், நல்ல எக்ஸ்பிரஷன்களால் நம்மை கவர்கிறார். She needs to work on her Tamil spoken skills. Not a big deal I guess.

ஜோ என்னமொ நம்ம பக்கத்தாத்து பையனாட்டம் படு ஜோவியலாக சீனு மாமாவின் வீட்டில் உலாத்துகிறார் அப்படியே நம் மனதிலும் தான்!லேசாக சுஜாதா ஜாடை வேறு!

டாக்டர், இன்ஸ்பெக்டர், பேய் விரட்டுபவர், ஏட்டு, சேஷகிரிராவ், ராமமூர்த்தி, அவர் அப்பா எல்லாருமே கிடைத்த பாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருந்தார்கள். 

அந்த நிச்சியதார்த்தப் படலம் = a huge laugh riot! என்னதான் தலைவர் எழுதியிருந்தாலும் அதன் execution எவ்வளவு முக்கியம் என்பதை நினைவு படுத்தியது. RVS அண்ணா - நீங்க சேஷகிரிராவாக நடித்திருந்தாலும்  ஜோராக இருந்திருக்கும்! இதில் நடித்தவருக்கும் நல்ல Comical features. அந்தக்கால விகடனில் போடுவார்களே குடுமி வெச்சுண்டு ஒரு கார்டூன் அதே ஜாடை! அவரைப்  பார்த்தாலே சிரிப்பு பொத்துண்டு வரது. குடு குடுன்னு பஞ்சகச்சத்தை பிடிச்சுண்டு மேடையெல்லாம்  ஓடி சிரிப்புச் சரவெடிகளை கொளுத்திப் போடுகிறார். காட்சி முடியும் தருவாயில் லேசான வயிற்றுவலி, சிரிச்சு சிரிச்சு.

என்னுடைய கவலையெல்லாம் ரங்குவை பத்தி தான். நான் தான் சுஜாதாவின் விசிறி! இவர் இல்லையே.. என்ன நினைப்பாரோ, செய்வாரோன்னு ஒரே கவலை. ஃபேமிலி ட்ராமான்னு சொல்லிட்டு ஒரு ஈள் பூள் காட்சி கூட இல்லையேன்னு கேட்பாரோன்னு நினைச்சுண்டே வந்தேன். ஒவ்வொரு காட்சியின் முடியும் போது நன்னா இருக்கான்னு கேட்டுண்டே இருந்தேன். அந்த 2 மணி நேரத்தில,  ஒரு வாட்டி கூட கடிகாரத்தை பார்க்கலை, மொபைலை எடுக்கலை, SMS அனுப்பலை, ஈமெயில் பார்க்கலை, மிஸ்ட்கால்ஸ் செக் பண்ணலை! He was completely stuck to the play!

மாதங்கி, RVS அண்ணா, மாதங்கி அப்பா எல்லார்கிட்டேயும் பேசி சிரிச்சுண்டே பார்த்தேன். சுகானுபவம்!

இண்டர்வெல்லுக்கு சொல்லும்போது கூட ”எங்க காலத்துல இந்த உபாதையெல்லாம் கிடையாது. இருந்தாலும் உங்களுக்காக ஒரு 10 நிமிஷம் இடைவேளை”ன்னு எதிர்கால மனிதன் சொல்றச்சே படு சூப்பர்.. ஊபா.. ஊபா.. ஊபா...

”ஜோ, எங்கே சுந்தருக்காக ஒரு ஏப்பம் விடுன்னு சீனு மாமா கேட்க, ஜோ முயற்சித்து, வரலை”ன்னு சொல்வது, நச் சுஜாதா அக்மார்க் இல்லையோ?


சீனு மாமா, சுந்தர் & ஜோ மூணு பேரும் ப்ளான் பண்ணும் காட்சி முடியும் போது RVS அண்ணாவின் மானசா, ”ரெண்டு வாட்டி மணி அடிக்காமலே ஜோ போயிடுத்தே ”என்றாள் பளிச் மானஸா, வெல் டன்! வெரிகுட் அப்ஸர்வேஷன். 

RVS அண்ணா இண்டர்வெல்லில் வெளியே போயிட்டு வந்தப்போ யாருடனோ பேசிட்டு வந்தார். மாதங்கியிடம் நான் சொன்னேன்,” நிச்சியம் அவர் பிக் ஷாட்டாத் தான் இருக்கும் பாரேன்”னு.” யார் அவர்?”ன்னு அப்பாவியா கேட்டா, நான் சொன்னேன், ”தெரியாது அண்ணா வரட்டும் கேட்கலாம்”ன்னு. மாதங்கி என்னை ரொம்ப கேவலமா பார்த்தா.. ”யார்ன்னு தெரியாமலேயே பில்டப்பா”ன்னு ஹி ஹி. அப்புறம் அண்ணா வந்தப்புறம் தான் தெரிஞ்சது அவர் ப்ரியா கல்யாணராமன் குமுதம் குழும எடிட்டர்! நான் தான் சொன்னேனோல்லியோ? :) 

நேத்திக்கி கார்த்தால திண்டுக்கல் தனபாலன் அனுப்பின ஏதோ ஒரு லின்கில் போலிச்சாமியார்கள் பத்தி படிச்சுண்டு இருந்தேன். ஆனா கண் முன்னே நிதர்சனமா சில உண்மைகளை புரியறமாதிரி சொன்னது எனக்கு double impact! கடவுளாக இருந்தாலும் இருக்கலாம்ன்னு நான் அரை குறையா நினைச்சவர் உண்மையில் பெரிய hoax என்பது மனதை மிகவும் பாதித்த விஷயம். அதை ஊர்ஜிதப்படுத்தியது இந்த நாடகம்! சுஜாதாவோ, சீனு மாமாவோ, சுந்தரோ, லக்ஷ்மி மாமியோ.. உண்மை இதுதான்னு புரிஞ்சது இல்லையா? ஒரு 20% எனக்குள் இருந்த அசட்டு நம்பிக்கைக்கு சரியான சாட்டையடி!

”அப்போ உண்மை சொன்னேன், எல்லோரும் பைத்தியம்ன்னு சொன்னா, இப்போ பொய் சொல்றேன், கடவுள்ன்னு சொல்றா! ”Ironic, but how very true! 

 கடவுளா இருக்கும்போது, சொம்பில் விபூதி வரவழைப்பது, 4 வருஷத்துக்கு ஒரு வாட்டி மேஜிக் பண்ணி காட்டிக்கலாம்ன்னு சுந்தர் சொல்வது,” நிறைய நல்ல விஷயங்களுக்கு நிதி பயன்படுறது” எல்லாமே - it rings a bell. doesn't  it? இதெல்லாம் எதுக்கு சொல்றேன்னா, Nothing was missed at all. Every single dialogue made an impact! 

”இவன் இங்க்லீஷுல ஏமாத்தறான், அவன் தமிழ்ல ஏமாத்தறான்”னு டாக்டரையும் பேய் விரட்டுபவனையும் சொல்வது சுஜாதாவின் டிப்பிகல் நையாண்டி! அதே மாதிரி டாக்டரே, சீனு மாமா கடவுள்ன்னு ஊர்ஜிதப்படுத்திண்ட உடனே, ”எனக்கு 6 வருஷமா குழந்தையில்லை”ன்னு சரண்டர் ஆறது = ultimate class!

பாரதி மணி சார், நீங்க இன்னும் நூறாண்டு வாழ்ந்து, உங்க ட்ரூப்போட  நிறைய நாடகங்கள் போடணும் சார்.Of course with due sponsorship. இவ்வளவு சிறப்பான நாடகத்தை இலவசமா பார்த்த குற்ற உணர்ச்சியிலிருந்து நாங்க விடுபட சீக்கிரமே இன்னொரு நாடகம் போடுங்க.. காசு கொடுத்து தான் பார்ப்போம். இது சத்தியம்! 

எக்மோர் மியூசியம் ஹாலுக்கு போனப்போ ரெண்டு கேட் இருந்தது, மெயின் கேட் மாதிரி தெரியலை. வரும்போது ரங்கு அதே கேட் வழியா போயிடலாம் ஷார்ட்(!!) அப்படீன்னு சொன்னார். எனக்கு அந்த ஐடியா அவ்வளவா பிடிக்கலை. அவ்ளோ தூரம்(!) போயிட்டு பூட்டி இருந்தா கஷ்டம்ன்னு சொன்னேன். சரின்னு மனம் மாறிட்டார். நான் நம்ப முடியாமல், ”எப்படின்னா?”ன்னு கேட்டேன், ”ஒரு வேளை அந்த கேட் பூட்டியிருந்தா நீ அதை வீட்டுக்கு வர வரைக்கும் சொல்லி சொல்லி சொல்லி சொல்லி காட்டுவே”ன்னு சுஜாதாவால் எழுதப்பட்ட சீனு மாமாவின் அதே டயலாக்கை எடுத்து விட்டாரே பார்க்கலாம்!  நான் சொன்ன மாதிரியே அந்த உபரி கேட்டு பூட்டித்தான் இருந்தது. இதுக்கு தான் சொல்லறோம், பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்ன்னு!

Wednesday, April 24, 2013

முப்பத்து மூணு ரூபாயும், எஸ்.எம்.எஸும், பின்னே ஈமெயிலும்!


தெரியாம ஒரு Data Card USB Modem எடுத்துட்டேன்!! என்ன ரகளைங்கறேள்? யப்பா!

ஏப்ரல்14 தேதி வாக்கில ஒரு தோழிக்காக ஒரு டேட்டாகார்ட் வாங்கினேன். என்னுடைய மொபைல் நம்பர், ஆஃபீஸ் ஈமெயில் ஐடி எல்லாம் கொடுத்திருந்தேன். பத்தே நாளில் அதுக்கு பில் வந்தாச்சு. Billing cycleஆம்! சரி இருக்கட்டும். இன்னும் ஆரம்பிக்கவேயில்லையேன்னெல்லாம் சொல்லலை! ஒரு தரம் “பொன்னு ரங்கம் வந்திருக்கேன், மாது வந்திருக்கேன்”ன்னு சொன்னா போறாதா? வித விதமா  அது படுத்தின பாடு இருக்கே! உஸ்ஸ்!

இனிவரும் பத்திகளில் ப்ராக்கெட்டுக்குள் இருப்பது என்னுடைய மைண்ட் வாய்ஸ் என்பது உங்களுக்கு சொல்லித்தெரியவேண்டியதில்லை.

  • ஏப்ரல் 20 - உங்க யூஸேஜுக்கான பில் உங்கள் வீட்டு முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது - SMS - (ஓ.. அதுக்குள்ளேயா?)

  • ஏப்ரல் 21 - உங்கள் கோரிக்கையின் படி(??? நான் கோரவேயில்லையே)  இனிமேல் உங்களுக்கு ஈபில் மட்டும் தான் வரும்!- SMS ( க்கும்.. சரி சரி நல்ல விஷயம் தானே? ரெண்டு பேப்பர் மிச்சம், மரம் வளர்ப்போம் (கோடை) மழை பெறுவோம்)

  • ஏப்ரல் 21- உங்கள் ஈபில் உங்கள் ஈமெயில் முகவரிக்கு அனுப்பியாச்சு.(அப்புடி ஞாபகப்படுத்துறாங்களாமா!) - SMS

  • ஏப்ரல் 21 - ஈ பில் - ஈமெயில் ( ஓக்கே!)

  • ஏப்ரல் 22-உங்கள் பில் அமெளண்ட் 33 ரூபாய், அதை மே ஐந்துக்குள் செலுத்தவும். SMS (சரி செலுத்திருவோம். )

  • ஏப்ரல் 23 - மே-5ஆந்தேதிக்குள் உங்க 33 ரூபாயை செலுத்திடுங்க - ரிமைண்டர் - SMS  (இன்னிக்கு 23 தானே? நற நற)

  • ஏப்ரல் 23 - மே 5ஆந்தேதிக்குள் நீங்க கட்ட வேண்டிய 33 ரூபாயை கீழ்க்கண்ட முகவரிகளிலும் கட்டலாமே - SMS (மறுபடியும் ரிமைண்டர், உன் தலையில தீயை வெக்க)

  • ஏப்ரல் 24 - உங்கள் கோரிக்கைக்கு நாங்க கொடுத்திருக்கும் ரெஃபரன்ஸ் எண் - xxxxxxx. SMS (என்ன கோரிக்கை? ஒரு எழவும் புரியலையே?ஓ அந்த ஈ பில்லுக்கா, அதுக்கெதுக்கு இப்போ கோரிக்கை எண்ணெல்லாம்? நாராயணா.. கட்டித்தொலைச்சுடலாம் இன்னிக்கே!)

33 ரூபாய்க்கு பில் கட்டியவுடன் ஒரு ரெஸீட் கொடுத்தார்கள். அப்பாடி இனிமே இந்த தொல்லை இருக்காதுன்னு நினைச்சுண்டேன்!

அடுத்த செகண்ட் SMS ”நீங்கள் கட்டின தொகையை நாங்கள் பெற்றுக்கொண்டோம், நன்றி” (நீங்க திருந்தவே மாட்டீங்களாடா?)

நேற்று மிகவும் முக்கியமான ஒரு மெயிலை எதிர்ப்பார்த்திருந்தேன். சதா ஆஃபீஸ் மெயிலை ரிஃப்ரெஷ் பண்ணிக்கொண்டும் மற்ற விண்டோக்களில் ஏதோ வேலை செய்தபடி இருந்தேனா.. திடீரென்று வெப் மெயிலில் New Email என்று காட்டிற்று! அடடே.. அவாகிட்டே இருந்து தான் ரிப்ளை வந்திருக்கோன்னு ஓ......டிப்போய் பார்த்தா, மீண்டும் 33 ரூபாய்! இவாளுக்கு ஈமெயில் முகவரி கொடுத்தா பெரிய பிரச்சனைன்னு, யாருமே இல்லாத கடையான என் ஆஃபீஸ் மெயில் ஐடியை கொடுத்தது தவறாச்சு. 

ஈ ரெஸீட்டாம்! நேர்லேயும் ஃபோன்லேயும் ரெஸீட் அனுப்பியாசோல்லியோ? இப்போ ஆகாசமார்க்கமாவும் ஈமெயில் ரெஸீட் அவசியமா? ஏண்டா இப்படி உயிரை வாங்கறேள்? மூதேவிகளா!

இதைப்பற்றி ரங்குவிடன் புலம்பின போது, அவர் சொன்ன விஷயம் மஹா ஆச்சரியமாக இருந்தது.இதே மாதிரி இன்னொரு சர்வீஸ் ப்ரொவைடரின் போஸ்ட் பெய்ட் ஃபோன் கனெக்‌ஷன் வெச்சுண்டு இருக்கார். அந்த பில் கட்டும்போது, ஒவ்வொரு நிலையிலும் SMS வருமாம்! அடக்கஷ்டகாலமே! Payment process initialized, processing, successful இப்படி! கொடுமை! இந்தக் கண்றாவியெல்லாம் முடிஞ்சுட்டு, கடைசியில் மறுபடியும் ஒரு SMS, Email வருமாம்! சுத்தம்!

பேசாம FD மாதிரி ஒரு பல்க் அமவுண்டை கட்டிட்டா இந்த பிரச்சினையில இருந்து விடுபட முடியுமான்னு யோசிச்சேன், அதுக்கும் தொல்லை தான்.. “நீங்கள் கட்ட வேண்டிய 33 ரூபாயை மொத்தத் தொகையிலிருந்து நாங்கள் கழித்து விட்டோம் இப்போ உங்கள் பாக்கிப் பணம் ____ எங்களிடம் தான் இருக்கிறது, உங்கள் யூஸேஜுக்குக் தகுந்தபடி தினசரி எவ்ளோ பணம் குறைந்துள்ளதுன்னு உங்களுக்கு அப்டேட்ஸ் கொடுத்துண்டே இருப்போம்.  நீங்கள் நிம்மதியாகவும்(??!!!) இருக்கலாம் ப்ளஸ் ஆனந்தமாக பிரவுஸ் செய்யலாம்” ன்னு ஆகாசமார்க்கமாவும், சூக்ஷ்மரூபம் எடுத்தும் வந்து என்னை டார்ச்சர் செய்வார்கள்! கஷ்டம் கஷ்டம்!

Wednesday, April 10, 2013

ரயில் பயணங்களில்...



இது கொஞ்சம் நீளமான பஜிவு. அதுனால ரெண்டு பார்ட்டா வந்து படிக்கவும்..

ஃபேஸ்புக்கில் இன்னைக்கு கார்த்தால கீழ்க்கண்ட ரயில் ஃபோடோவை பார்த்துட்டு ஒரே சிரிப்பு.

ஏப்ரல் மேன்னாலே வெக்கேஷன் டைம் தானே. ரயிலில் லீவுக்கு ஊருக்கு போறதுன்னா எவ்ளோ சந்தோஷம்? வழக்கமா விஜயவாடாவில் இருந்து, தி நைனா சென்னைக்கு ஏப்ரல் மாசம் போறதுக்கு ஃபிப்ரவரியிலேயே டிக்கெட் புக் பண்ணிடுவார். பரீட்சையெல்லாம் முடிச்சுட்டு, தாத்தா, பாட்டி , மாமாகூட என்ஜாய் பண்றதுக்கு நாங்களும் ரெடியாயிடுவோம்.

ரயில்னாலே அம்மா டின்க்கிள், சம்பக் எல்லாம் வாங்கித்தருவா. அடுத்த சிக்னல் வரதுக்குள்ளே அதை படிச்சு முடிச்சுடுவோம். அப்புறம் வழியெல்லாம் ரயில் ஆராய்ச்சி, குரங்கு சேஷ்டை, திட்டு, திங்கறது எக்ஸெட்ரா.. எக்ஸெட்ரா.. அட லீவுல இதெல்லாம் ஜகஜமப்பா...

ரயிலில் போகும்போது எல்லாக்குழந்தைகள் மாதிரியே நாங்களும் பக்கிகளாகத் தான் இருந்தோம். அதுக்கப்புறம் தான் - அது பழகிடுத்து. எது வந்தாலும் வாங்கித்தாங்கம்மான்னு பக்கித்தனமா கேட்போம்.. அம்மாவும் கண்களாலேயே பதிலைச்சொல்லுவார். மாட்டாராம். :)

அந்த காலகட்டத்துல தனியா பயணம் பண்றவங்க மட்டும் தான் ரயிலில் பேண்ட்ரியில் வாங்கி சாப்பிடுவாங்க. ரயில்லே எப்போவுமே வீட்டு சாப்பாடு தான்.. இட்லி, புளியோதரை சர்வ சாதாரண ரயில் உண்டிகள். மத்த சமயத்தில் திங்கணும்னா இருக்கவே இருக்கு போன தீபாவளிக்கு பண்ணின பட்சணங்கள் முறுக்கு, தேன்குழல் இத்யாதிகள். ”சூடானே.. கட்லே…..ட்”ன்னு வித்துண்டு வருவா.. நானும் தங்கை மணியும்,”அம்மா”ன்னு திரும்பினாப் போச்சு, ஏதாவது ஒரு சம்படம் வெளியே வரும் அதிலிருந்து அம்ருத துல்யமான ஏதாவது ஒரு தட்டையின் உடைந்த பீஸ் வரும். அத்ருப்தியாக மூஞ்சியை வெச்சுண்டு அதை சாப்பிட்டு தீருவோம். எதிர்த்துப் பேசினால் அடி தான். அடுத்த  படியாக ”வேடி வேடி செனககாயலு”ன்னு வித்துண்டு வருவா(சுடச்சுட வறுத்த வேர்க்கடலையாம் சொல்லும்போதே ஜொள்ளு கொட்டலை? நேக்கு கொட்றதே!) .. மீண்டும் ”அம்மா”ன்னு திரும்பினா ஆத்துல பண்ணின ’சிட்டி பூஸலு’வை கொடுப்பா.(எல்லா தானியங்களையும் எண்ணெயில்லாமல் வறுப்பது.. கரகரன்னு இருக்கும்.. ஆனா சுத்தமா டேஸ்டே இருக்காது அல்லது அந்த வயதில எங்களுக்கு பிடிக்காது) இப்படி ஒவ்வோரு டிஷ்ஷுக்கும் ஏதாவது ஒரு ஹோம் மேட் ஆல்டர்னேட்டிவ்ஸ் வெச்சுண்டு இருப்பா. ரொம்ப மோசம்!

அம்மா அதையெல்லாம் ஏன் வாங்கித்தரலைன்னு பிற்காலத்துல தான் தெரிஞ்சுண்டோம்! நாங்க பண்ணின ரயில் பயணங்களுக்கு அதையெல்லாம் அம்மா வாங்கித்தந்திருந்தால், பாதியிலேயே நானும் தங்கைமணியும் ஃபணால் ஆகியிருப்போம்!

டின்க்கிள், பேண்ட்ரிகார் கட்லட், தண்ணி காஃபி, தண்ணி டீ, மட்கா சாய்(கோரக்பூர்), சிக்கி(லோனாவாலா, கண்டாலா), புலிஹோரன்னம்(குண்டக்கல்),ஆவின் பால் (சென்னை செண்ட்ரல்)  இதெல்லாம் தவிற நினைவுக்கு வரும் சில நிகழ்ச்சிகள் கீழ்க்கண்டவாறு:

ஒரு வாட்டி மாமாவும் அத்தையும் குடும்ப சஹிதம் திருச்சியிலிருந்து வந்திருந்தார்கள். லக்கேஜ் கொஞ்சம் அதிகம். பார்க்கிலிருந்து குரோம்பேட்டை வர லக்கேஜுகளுடன் ஒவ்வொருத்தராக  ஏறுவதற்குள் (அவர்கள் கொன்ன்ன்ன்ன்ச்சம் ஸ்லோவாக்கும்) ரயில் கிளம்பிவிட, மாமா மட்டும் இன்னும் ஏறவில்லை. உடனே அவர் தங்கள் ஊர் சிட்டி பஸ் ஞாபகத்தில் “ஹோல்டான் ஹோல்டான்” என்று கத்த, அந்த ரணகளத்திலேயும் மை நைனா சிரிச்சுண்டே நக்கலடிச்சுண்டே மாமாவை இழுத்து உள்ளே போட்டிருக்கார். அப்புறம் என்ன? ஹோல்டான் ஜோக்கை வர்றவா போறவா எல்லார்கிட்டேயும் சொல்லி சிரிச்சுண்டு இருப்போம். கொஞ்ச நாளைக்கு அவர் பேரே ஹோல்டான் மாமான்னே ஆயிடுத்து.இருக்காதா பின்னே?

இதே குடும்பத்துடனான இன்னோரு ரயில் ஜோக் என்னன்னா, நாங்கள் சப்தகிரி ரயிலேறி திருப்பதி போகலாம்ன்னு ப்ளான் பண்னி இருந்தோம். 1995 டிஸம்பர் - 24ந்தேதி.. நியூ இயர், கிறிஸ்மஸ் லீவு வேற.. கூட்ட்ட்ட்ட்டமான கூட்டம்.. உட்காரவும் இடமில்லை.. ரயில் ஏறியாச்சு. ”ஆனாலும் வெங்கி எப்போவுமே இப்படி சோதிப்பான், பரவாயில்லை போயிட்டு வந்துடலாம்.” அப்படீன்னு அம்மாவும் அத்தையும் பேசிண்டு இருக்க, நைனா, மாமா அண்டு கடைக்குட்டி திவ்ஸ்(திவ்யா) மட்டும் கீழே இறங்கி (ஸ்டையிலாம்) வண்டி கிளம்ப காத்துண்டு இருந்தா. நைனா,” வண்டி இப்போ போகாது, எஞ்சின் மாத்திண்டு இருக்கான்”னு சொன்னார். நாங்கள் இறங்கிப் பார்த்தப்போ சிக்னல் பச்சையா இருந்தது. அப்பா க்ரீன் போட்டாச்சு ஏறிடுங்கன்னு சொன்னோம். இல்ல்லேடீ.. எஞ்சின் மாத்திண்டு இருக்காங்கன்னு அவர் விடாப்பிடியா அதையே சொல்லிண்டு இருந்தார். “அம்மா நாமளும் இறங்கிடலாம்மா, அடுத்த வாட்டி திருப்பதி போயிக்கலாம்”ன்னு நானும் பிரியாவும் சொல்லிண்டு இருந்தோம். தங்கைமணி மட்டும் நியூட்ரல் கியர்ல இருந்தா.

“சிக்னல் இன்னும் போடலை,  இறங்கறதுன்னா இப்போவே இறங்குங்க”ன்னு மை நைனா சொல்ல,ஷாப்பர் பேக் எல்லாம் கைல எடுத்துண்டு  இறங்கிடலாம்ன்னு ஆயித்தம் ஆனோம். ட்ட்ட்ட்டங்ன்னு சத்தத்தோட சப்தகிரியான் கிளம்பிட்டான்! ”அடேடே.. ரயில் கிளம்பிடுத்தே”ன்னு மை நைனா வாயால் சொன்னாலும் பயத்தாலும், முஞ்சியில் பல்பு அடிச்ச அதிர்ச்சியாலும்  அசந்து போய், பிறகு சுதாரிச்சுண்டு (ஹீரோவாக்கும்) ரயிலில் எகிறி ஏறிவிட்டார்.. ஹோல்டான் மாமா பயத்தில் நடுங்கி,தி நைனாவை பிடித்துக்கொண்டு தாவி எறிட்டார். திவ்ஸ் மட்டும் (அவளுக்கு ஒரு 8 வயசு இருக்கும்) பாவம் திரு திருன்னு முழிச்சுண்டு பயந்துண்டு ஸ்டேஷன்லேயெ நின்னுண்டு இருந்தா. எங்க கூட நின்னுண்டு இருந்த ஒருவர் படியில இருந்து இறங்கி குழந்தையை ஒரே கவ்வாக கவ்வி வண்டிக்குள் இறக்கினார். அதற்கப்புறம் அவர் சொன்ன வார்த்தைகள் சரித்திரத்தில் இடம் பெறும் அளவுக்கு பாப்புலர் ஆகிவிட்டது    ” பாப்பா பயந்துருச்சு”

ஆனா பாருங்க, திவ்ஸ் இதெயெல்லாம் பத்தி கவலையே படாமல் அவள் காது தோடு கீழே விழுந்துடுச்சாம். அதை நினைச்சு புலம்பிண்டே வந்தா. அக்காடிங் டு ஹர், உலகத்திலேயே மிகக்கொடுமையான விஷயம் காதில் தோடே இல்லாமல் திருப்பதிக்கு சப்தகிரி ரயிலில் போவதுதானாம்! ஏடுகொண்டலவாடா! காப்பாடு!

இது நடந்தது எண்பதுகளில். 87என்பதாக நினைவு. ஹைத்ராபாதிலிருந்து சென்னைக்கு எண்பது வயதான சுப்பிஅவ்வாவுடன் என்னை அனுப்பினார்கள்(துணைக்காம்!!!??). எனக்கு ஒரு 10 வயசு இருக்கும்.(அடேங்கப்பா என்ன ஒரு மெச்சூரிட்டி?) அப்பெல்லாம் ஒரு  மண்ஜாடியில் தான் தண்ணீர் எடுத்துப்போம். அதுடைய மூக்கில் ஒரு தம்பளரை கவிழ்த்தி எடுத்துண்டு போவோம். படு மோசமான வெயிலாதலால் ரொம்ப தேவையாக இருக்கும். அந்தப்பானைத்தண்ணியின் வாசனையே அலாதி தான். பகல் ட்ரெயின்.

சுப்பி அவ்வாவுக்கு டயாபட்டீஸ் இருந்தது. பாவம் ரொம்ப தாகம் எடுக்கும், தண்ணி ஜில்லுன்னு இருக்குமேன்னு நம்ம்ம்ம்பி அந்த மண் ஜாடியை எடுத்துண்டோம். வழக்கம்போல என் ஊழ்வினை தூண்ட அந்த மண் ஜாடியில் ஓட்டை விழுந்துடுத்து. கம்பார்ட்மெண்ட் பூரா நாங்க கொண்டு போன தண்ணி லீக் ஆகி எல்லாரும் வந்து நமக்கு தெரியாத விஷயத்தை புதுசா கண்டுபிடிச்சு சொல்ற மாதிரி ”தண்ணி லீக் ஆகுதுங்க, பாருங்க” ”நீள்ளு படுதுந்தத்ண்டி” ”ஜக் டூட் கயாஹை க்யா? கித்னா பானி கிரா தியா ஹை?”அப்படீங்கற ஃப்ளாஷ் ந்யூஸை சொல்லிட்டு போயிண்டு இருந்தாங்க. அதுவும் எங்க சீட்டு டாய்லெட்டுக்கு பக்கத்துல இருக்கும் ஃபர்ஸ்ட் சீட் வேறையா, டாய்லெட்ல தண்ணி வராட்டி கூட இந்த தண்ணி இருக்கேன்னு நினைக்கற அளவுக்கு அந்த 3 லிட்டரும் வடிந்து முடிஞ்சுது.

கம்பார்ட்மெண்ட் பூரா ஒரு ஓடை மாதிரி அந்த தண்ணி அடுத்த டாய்லெட்டையும் சேர்த்தி சுத்தம் பண்ணிண்டு இருந்தது. ஒரே கேவலம் ஹைன்னு நினைச்சுண்டேன். ஹி ஹி.. இதெல்லாம் நமக்கு சாதாரணம் தானே? தண்ணி இல்லை.. நல்ல சம்மர் வேற, பாட்டி பாவம்.  ஏதோ ஒரு ஊரில் ரயில் நிற்க, அதிகப்பிரசங்கித்தனமா நான் இறங்கி ஒரு சின்ன வாட்டர் கேன் வாங்கினேன். அதில் ரெண்டு சொட்டு தண்ணி நிறைச்சேனோ இல்லையோ, ரயிலுக்கு மூக்குல வேர்த்து face book chat செய்யும்போது பாதியிலேயே அப்பீடாகும் நண்பர்களைப்போல "அந்ன்ஸ், டாட்டா பை பைன்னு சொல்லிட்டு அப்பீட் ஆயிடுத்து.. “ஐய்யோ குழந்தை குழந்தை”ன்னு சுப்பி அவ்வா டென்ஷனோட கத்த, கூட உட்கார்ந்திருந்தவர்களும் எழுந்து வந்துட்டாங்க. நானா அஞ்சுவேன்?

 தண்ணி அடுத்த ஸ்டேஷன்ல நிறைச்சுக்கலாம்ன்னு மறக்காம குழாயை மூடிட்டு கேனையும் மூடிட்டு, சங்கிலி தம்ப்ளரை சபீனா போட்டு அலம்பி வெச்சுட்டு, சின்கை ப்ரஷ் போட்டு நல்லா தேய்ச்சு அலம்பிட்டு, அந்தப்பக்கம் சொட்டிண்டு இருந்த குழாயை ப்ளம்பிங் ஒர்க் பார்த்துட்டு ஒரு க்ஷண நேரத்தில் ஓ…..டிப்போய் ஏறிட்டேனே! (பின்னே என்னங்க? இதையே தமிழ்ப்படத்துல சொன்னா ஒத்துப்பீங்க.. நான் சொன்னா தப்பா?) அந்த நிகழ்ச்சியை அவ்வா ‘அவள் ஒரு ஜான்ஸிராணியாக்கும்” ரேஞ்சுக்கு எங்க குடும்ப வட்டத்துல பரப்பிட்டா! அதுக்கப்புறம் எங்கே போனாலும் எனக்கு மாலை, மரியாதி, பரிவட்டம், ரயில்வண்டி, ச்ச்சே சாரி வில்லுவண்டி.. ஏன் கேக்கறீங்க போங்க!

1996ல் காசி கயா தில்லி போகலாம்ன்னு அப்பா ப்ளான் பண்ணினார். 12 நாள் ட்ரிப். குடும்ப உறுப்பினர்கள் 8 பேர். மொத்தம் லக்கேஜுகள் 26. தெலுங்கில் ‘சாலந்தானிகி சக்கிலால கெம்ப’ன்னு சொல்லுவாங்க. பின்னே என்ன? முள்ளு முறுக்கு ,தேன்குழல்,தட்டை,மிக்சர், அப்புறம் க்ராண்ட் ஸ்வீட்ஸ் அண்ட் ஸ்னாக்ஸ்ல கிடைக்கும் அத்தனை பதார்த்தங்களையும் சேர்த்து ஏகப்பட்ட ஐட்டம்ஸ் அவ்வாவும் அத்தையும் அம்மாவுமாக பண்ணி எடுத்துண்டு ஆளுக்கு துணி மணிகள், டாய்லடரீஸ்,  இதர சாமானங்களெல்லாம் எடுத்துண்டா இத்தனை லக்கேஜுகள்! எங்களை வழியனுப்ப வந்த சின்ன மாமா சொன்னார் “இவா என்னமோ கழைக்கூத்தாடிகள் மாதிரி டூர் கிளம்பி இருக்கா” . இத்தனை சாமானங்களையும் வெச்சுண்டு வாரணாஸியில் ட்ராஃபிக்கில் சிக்கிண்டு ரயிலை மிஸ் பண்ண இருந்தோம். எப்படியோ லின்க் ரயிலை பிடிச்சு தில்லி போறதுக்குள்ளே பெரும் பிரயத்னம் ஆயிடுத்து.

இப்பெல்லாம் தான் இந்த லக்கேஜ் பிரச்சினையில்லாம பிரயாணம் பண்ணறொம். முன்னாடியெல்லாம் சீடை முறுக்கு எல்லாம் ஒரு நாலு பை நிறையச எடுத்துண்டு தாறுமாறா லக்கேஜ் ஆயிடும். இப்போ நோ சீடை நோ முறுக்ஸ். 

இப்போ லேட்டஸ்டு ட்ரெயின் நிகழ்ச்சிக்கு வருவோம். எங்க கல்யாணம் முடிஞ்ச நாலாவது நாள், நானும் இவரும் பாலக்காட்டுக்கு கிரஹப்பிரவேசத்துக்கு மற்ற குடும்பத்தினரோட போகணும். அங்கிருந்து இதர கோவில்கள், கடைசியில் கோடைக்கானல் போறதா ப்ளான். அடுத்த ஒரு வாரத்துக்கு  டைட் ஷெட்யூல்  இருந்தது. அதனால் ஏகப்பட்ட துணிமணிகளுடன் கிளம்பிட்டோம்.

 போரூரிலிருந்து செண்ட்ரலுக்கு போறதுக்குள்ளே அப்படி ஒரு டென்ஷன். பின்னே வேகம்னா வேகம் அப்படி ஒரு ஆமை வேகம். செம்மத்தியான  ட்ராஃபிக் ஜாம்! நாங்க இப்படி படு ஃபாஸ்டா சென்னையில் தெருக்களையெல்லாம் சுத்தி பார்த்துண்டு இருந்த (அ)சமயத்துல ரயிலுக்கு டைமாச்சுன்னு என் மச்சினர்கள்ஃபோன் பண்ணிண்டே இருந்தாங்க.  நாங்களோ தமிழ் சினிமா மாதிரி பாதி வழியில் இருக்கோம்! (ட்ராஃபிக், ரயில், ரயில் ட்ராஃபிக் இதெல்லாம் மாத்தி மாத்தி இப்போ ஜூம் பண்ணி காட்டணும். )மறுநாள் பாலக்காட்டு வீட்டில் எனக்கு கிரஹப்பிரவேசம். எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சு! அவ்ளோ லக்கேஜும் எடுத்துண்டு அப்படியே செண்ட்ரல் போய்ச்சேர்ந்தாலும் அதையெல்லாம் ட்ரெயினில் வைப்பது அசாத்தியம்,. எப்படியோ 2 நிமிஷம் முன்னாடி ட்ரெயின் கிளம்பறதுக்குள்ளே செண்ட்ரல் வந்தோம். கோபால் அண்ணா ப்ளாட்ஃபார்ம் பூரா எங்களுடன் லக்கேஜுகளை தூக்கிண்டு ஓடி வந்தார். வேர்த்து விறுவிறுத்து கோச்சிலேயே ஏறிட்டோம்! இப்போ நினைச்சாலும் எப்படி ஏறினோமோன்னு ஆச்சரியப்படுவேன்! மன்னி கேட்டா, ”ஏன் மோஹன் இவ்ளோ லக்கேஜ்?” இங்கே இவ்ளோ ரணகளம் ஆயிண்டு இருக்கு, இதுக்கு ரங்குவின் பதில், மன்னி நாங்க ஹனிமூன்ல விதவிதமா ட்ரெஸ் பண்ணிண்டு டூயட் பாடப்போறோம்.. க்க்கும்.. பாடிட்டாலும்!

Related Posts with Thumbnails