Pages

Wednesday, June 25, 2014

தூசி உறிஞ்சி

தூசி உறிஞ்சி

இன் 1992ல மை நைனா சென்னைக்கு ட்ரான்ஸ்ஃபர் ஆகி வந்தார். ரெண்டு எஸ்டாப்ளிஷ்மெண்டா இருந்ததில் இருந்து சிங்கிள் எஸ்டாப்ளிஷ் மெண்ட் ஆனதிலிருந்து கொஞ்சம் செழிப்பா இருந்தோம்.

ஒரு நாள் சாயந்திரம் ஒரு ஆள் வந்தார். கையில ஒரு பெய்ய்ய்ய்ய Bag! வந்து அம்மாகிட்டே ஏதோ சொன்னார். அம்மாவும் தி நைனா வரும் நேரத்தை சொன்னவுடன் அவர் நைனா இருக்கும்போது வருவதாக சொல்லிட்டு போயிட்டார். எனக்கும் தங்கைமணிக்கும் ஒரே ஆசை! அப்படி என்னம்மா இருக்கும் அந்த பேக்லன்னு பேசிண்டு இருந்தோம்.

னெக்ஸ்ட் டைம் அவர், மை நைனா இருக்கும் நேரமா பார்த்து வந்துட்டார்! சார் சார்ன்னு மரியாகதையா பேசிண்டு வாக்யூம் க்ளீனர் விற்பதாகவும் யூரேக்கா ஃபோர்ப்ஸிலிருந்து வருவதாகவும் சொன்னார். மை நைனாவுக்கு அனாவஸ்ய செலவெல்லாம் பிடிக்கவே பிடிக்காது. மோரோவர் ராஜகுமாரின்னு ஒரு லேடி வேலைக்கு இருக்கும்போது எதுக்கு வாக்யூம் க்ளீனரெல்லாம்ன்னு அந்த சேல்ஸ் மேனை விறட்டி விட்டுட்டார். நான் தங்கை மணி அம்மா மூணு பேரும் புஸ்ஸ்ஸ்ஸ்ன்னு ஆயிட்டோம்.

அடுத்த வாரம் அந்தாள் மறுபடியும் வந்தார். ”சார் நீங்க வாங்க வேண்டாம். எனக்கு டெமோ டார்கெட்ஸ் இருக்கு நான் இத்தனை பேருக்கு டெமோ காட்டியாகணும் ப்ளீஸ் டெமோ பார்த்துட்டு உங்க ஃபீட்பேக் சொல்லுங்க சார்”ன்னு கெஞ்சினார். இரக்க குணம் அதிகமாக படைச்ச மை நைனா இதுக்கு ஒத்துண்டார். அப்போத்தான் அதை முதன் முதலாக நாங்க பார்த்தோம்!

சிவப்பும் க்ரீமுமாக இருந்த அந்த வாக்யூம் க்ளீனரை பார்த்த நிமிஷமே 15 மெக்டவர் பர்கர்களுக்கு திறப்பது போல வாயை பிளந்தோம்ன்னா அது மிகையல்ல! (இதை வைக்கறதுக்கு ஒரு பேக் வேறு, ஹை பேக் ஃப்ரீயாம்மா) டெமோ ஆரம்பிச்சார். சக்‌ஷன் ப்ளோயர், அட்டாச்மெண்ட்ஸ், டஸ்ட் பேக், கார்ப்பெட் க்ளீனிங், பில்லோ க்ளீனிங், டீவீ க்ளீனிங் ரேடியோ க்ளீனிங், டைனிங் டேபிள் க்ளீனிங் சிங்க் க்ளீனிங்(ஹிஹி)  போன்ற பல விஷயங்களை டெமோவினார். ஆக்சுவலி ஒரு வெள்ளை கர்ச்சீப்பை அந்த ட்யூபில் சொறுகி, ”தலைகாணிக்குள் எவ்வளோ டஸ்ட் இருக்கு பாருங்க” என்று அவர் கர்ச்சீஃப்பின் ரவுண்டு வடிவ அண்டப்பிரபஞ்சத்தின்  அழுக்குத்திட்டை காட்டியப்போ நிஜம்மாகவே மிரண்டு தான் போனோம்!

டெமோ முடிந்து நன்றி சொல்லிட்டு அவர் போயாச்சு. போகும்போது ஒரு கார்டு கொடுத்துட்டு போனார். என்னிக்கி அந்த கர்ச்சீஃப் அழுக்கை பார்த்தோமோ அன்னிக்கே நானும் தங்கை மணியும் முடிவு கட்டிட்டோம் இதை வாங்கியே தீருவதுன்னு (பிற்காலத்துல அஃப்கோர்ஸ்) மை நைனா அண்டால் இதுக்கு சுத்தமா மசியவே மாட்டார்ன்னு தெரியும் எங்களுக்கு.

ஆனா பாருங்க, ஆச்சர்யம்ஸ் ஆஃப் இண்டியா, அவர் டீவீயின் ஸ்க்ரீனை அந்த நாஸில் அட்டாச்மெண்ட் கொண்டு உறிஞ்சினார் இல்லியா, அன்னீல இருந்து ”டீவி நல்லா தெரியுது இல்லே?”ன்னு அடிக்கடி மை நைனா சொல்லிண்டு திரிஞ்சார்.. (ஆமா பெரிய HDTV, துணியை வெச்சு துடைச்சுட்டு பார்த்தா நன்னாத்தான் தெரியும்)

மெதுவாக நைனா பேங்க்லிருந்து சுரேஷ் குமார்(அதான் அந்த சண்டாளனின் பேர்)க்கு ஃபோன் பண்ணி, வீட்டுக்கு வரச்சொல்லி, ஃபுல் பேமெண்ட் கேஷாவே கொடுத்து(அதுவும் ஏதோ லோல் போட்டு.. சாரி லோன் போட்டு) 4000 ரூபாயோ என்னவோ(அப்பெல்லாம் அது ஒரு 35000க்கு சமானம்) வாங்கினோமோ இல்லியோ.. அவ்ளோ தான்.. மெஷின் வேலையே செய்யலை!

சுரேஷ் குமார் அடுத்த பலியாடு தேடி பிஸி ஆயிட்டான் போல்ருக்கு! ஃபோன் பண்ணிப்பண்ணி பார்த்த நைனா செம்ம கோபம்ஸ். உடனே என்ன பண்ணினார் தெரியுமோ? கன்ஸ்யூமர் கோர்ட்டுக்கு பில்லுடன் ஒரு லெட்டர் எழுதி அதை சுரேஷ் டார்லிங்குக்கும் அனுப்பினார். அடுத்த நாளே லத்தி போட்டுண்டு சுரேஷும் இன்னொரு லேடியும் ஓடோடி வந்தாங்க. ”இன்ஸ்ட்ருமெண்ட் ஃபால்ட் சார். வேற மாத்தி கொடுத்துடறேன்”ன்னு மரிகாதையா சொல்லிட்டு, அடுத்த நாளே மாத்தி கொடுத்தாங்க! அன்னீல இருந்து என் வாழ்வே சந்தோஷமா மாறியது. நானும் தங்கைமணியும் எக்ஸைட்மெண்ட்டில் நீந்தினோம்!

முதல் ரெண்டு வாரம் தலைகாணி படுக்கை டைனிங் டேபிள் ஃப்ரிஜ் டீவீ ஃப்ளோரிங், டோர்மேட்(கார்ப்பெட் எல்லாம் இல்லை எங்காத்துல) எல்லாத்தையும் ஜரூராக க்ளீன் பண்ணினோம்.  அப்புறம் மூணு மாசத்துக்கு ஒரு வாட்டி ஜன்னல்ல்லாம் திறந்து விட்டு ப்ளோயர் போடுவோம். தூசி தூள் பறக்கும்!ஒட்டடை,  குப்பை, பல்லி , பூச்சி, எதுவானாலும் நொடியில் உறிஞ்சிடும்.”எந்த அட்டாச்மெண்டை எதுக்கு யூஸ் பண்ணனும்ன்னு நிம்மிக்குத்தான் நன்னா தெரியும்”ன்னு மதர் தெரஸா, வீட்டுக்கு வரும் மாமிகள் கிட்டே பீத்தினார். கால் சுளுக்கு வலின்னு வந்துட்டா எடு வேக்யூம் க்ளீனரை, வேப்பரைஸர்ன்னு ஒரு அட்டாச்மெண்ட் அதுல அம்ருதாஞ்சனத்தை போட்டு கால்ல காமிச்சுண்டா சூடான ஹெர்பல் காத்து வந்து கால்வலியை போக்கிடுமாம். என்ன எழவோ. அப்புறம் ஸ்ப்ரே பெயிண்டிங் பண்றதுக்கு ஒரு பாட்டில், அது இதுன்னு காலணாவுக்கு பிரயோஜனமில்லாத எக்கச்செக்க ஆப்ஷன்ஸ். ஹேர் ட்ரையர் ஆப்ஷன் எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்தது. ஆனா வழக்கம் போல  அவ்வா அதுக்கும் அப்ஜெக்‌ஷன்!

வாக்யூம் க்ளீனர் போட்டா, ஃபாக்ட்ரில மெஷின் ஓடுறாப்புல அப்படி ஒரு சத்தம்! தி நைனாவுக்கு சத்தமே ஆகாது. ஆனா அவர் செம்மையா கத்துவார், அதெல்லாம் நாம தட்டிக் கேட்கக்கூடாது! அடுத்த ரூம்ல இதை இழுத்துண்டே  போய் க்ளீன் பண்றது கஷ்டமா இருந்தது. கூடவே டஸ்ட் பேக்ஸ் மாற்றும் நச்சு! லா ஆஃப் டிமினிஷிங் மார்ஜினல் யூட்டிலிட்டியின் பிரகாரம், கொஞ்ச காலத்துலேயே வாக்யூம் க்ளீனர் வெறுத்துடுத்து! மை நைனா அதை பரண்ல எடுத்து போட்டார்.

முந்தா நாள் அதைப் பார்த்தேன். அதன் சிவப்புக்கலர் மேற்பரப்பில் ஒரே தூசி. அந்த க்ரீம்கலர் பரப்பில் எக்கச்செக்க ஒட்டடை !ஹும். எல்லாம் நேரம்.
;-) ;-)

Monday, June 16, 2014

ஸ்லீப்பர் பஸ்

ஸ்லீப்பர் பஸ்

எனக்கு வாழ்க்கையில் ஒரே ஒரு ஆசை தான். ஸ்லீப்பர் பஸ்ஸில் போகணும். அதுவும் பெங்களூர் போகணுங்கறது மட்டுந்தான். வழக்கம்போல இருக்கற குழப்பங்கள்ல அதெல்லாம் அடுத்த ஜென்மாவுல போயிக்கலாம்ன்னு விட்டுட்டேன். இது ஒரு இனிய சர்ப்ப்ரைஸ் ஏன்னா அஃபிஷியலா ஒரு கல்வித்திருவிழாவுக்கு  தஞ்சாவூர் போக அவாளே டிக்கெட்லாம் வாங்கிக்கொடுத்து முடிஞ்சா ஆவின்ல ஹாட்மில்க் வாங்கிக்கொடுத்து, அஷோக்பில்லர்ல வந்து பஸ்ஸேத்தியும் விடுறோம்னு சொல்லியிருந்தா. டிட்டோ அண்ணாச்சி மாதிரி அஹோ பாக்யம்ன்னு எக்ஸ்க்ளெய்ம் பண்ணிண்டே பஸ்ஸில் ஏறினேன்.

செம ப்ளெஸண்ட் சர்ப்ப்ரைஸ்!ஏன்னா அஜு ஒரு ஸ்லீப்பர் பஸ். அதுவும் ஏஜி! அக்கா... அச்சரா...ன்னு நம்பர் தேடிண்டு போனா கட்டக்கடைஜீ ஜீட்டு. சாரி, bed! அஜுல பாருங்க பழைய  Non-Ac  1990ஸ் டைப் பஸ்களையெல்லாம் சமீப காலத்துல ஸ்லீப்பர் பஸ்களா மாத்தி பிராணனை வாங்கறா! ரெண்டு நடிகைகளின் பெயர்களை இணைத்த
பஸ்ஸு கொம்பேனி. ஏற்கனவே இவா பஸ்ஸுல சீட்டிருந்தா அதுக்கு ஹேண்ட் ரெஸ்டு இருக்காது. ஹேண்ட் ரெஸ்ட் இருந்தா உட்காரும் இடத்துல ஸ்ப்ரிங் துருத்திண்டு இருக்கும் இப்படி எக்கச்செக்க நச்சூஸ். ச்சே ச்சே.. இதுல அப்படி ஒண்ணும் இருக்காதுன்னு மனஜை தேத்திண்ட்டேன்.

எல்லா ஜன்னல்களையும் ஸெல்லோ டேப் போட்டு ஒட்டி வெச்சிருக்கா. சரி சரி, தின்க் பாஸிட்டிவ்.. ஏறின உடனே இதையா கவனிக்கணும்?ன்னு மைண்ட் வாய்ஸ் திட்டித்து. எனக்கே எனக்குன்னு ஒரு சிங்கிள் படுக்கை. அதுக்கு கர்ட்டன் வேற! அஹோ பாக்யம்!

நெக்ஸ்ட் சென்னை கத்திப்பாராவுலேந்து மடையன் வலது பக்கம் திரும்பாம இடது பக்கம் திரும்பி அடையாறு நோக்கி போக ஆரம்பிச்சுட்டன்! ஈஸீயார் ரூட்டாம்! அடபிரும்மஹத்தி! ரோடோ நன்னாயிருக்காதுடான்னு நான் இங்கேந்து(மனசுக்குள்ளே) சத்தம் போட்டது டிரைவர் காஜுல விழவேயில்லை! கொஞ்சம் படுத்துண்டு பார்த்தேன். என்னமோ கிணத்துக்குள்ளே படுத்துண்டாப்புல ஒரு பீலிங்கி! கருப்பாக போன சிவப்பு உறையணிவிக்கப்பட்ட ஒரு தலைகாணி இருந்தது. முடிஞ்ச வரையில் அதை தூ....................ரக்க வெச்சுண்டு அதுக்கு மேல இவங்க குடுத்த ஒரு ஷாலை போர்த்திவுட்டு மண்டையை அதில் வெச்சுண்டேன். புஸுக்ன்னு ஒரு புதை குழிக்குள் என் மண்டை போயிடுத்து!

படுக்கையில படுத்துண்டப்போ எனக்கு  இதுல ராத்திரி பூரா போயாகணுமான்னு ஒரே மலைப்பு. ஏன்னா என்னமோ ட்ரெக்கிங் மாதிரி இருக்கு படுத்துண்டா. தலையில் ஒரு குழின்னா இடுப்புப் பகுதியிலேயும் சம்திங் ராங். குழின்னு எக்ஸாக்ட்டா சொல்ல முடியலை ஆனா இட் வாஸ் அப்நார்மல்!

எந்தப்பக்கம் படுத்துண்டாலும் அதன் எதிர்ப்பக்கம் தள்ளப்பட்டேன். இப்போ, வலது பக்கம் படுத்துண்டா இடது பக்கமா நாமளே ஆட்டோமேட்டிக்கா திரும்பப்படுவோம். பஸ்ஸின் ஆட்டம் அப்படி. க்ளாக்வைஸ் & ஆண்ட்டி க்ளாக்வைஸ் ரத்த ஓட்டம் இருக்கறாப்புல மோஷன் & ஸ்விங் இருக்கும்.2 டைமென்ஷனில் இடமிருந்து வலமாகவும் வலமிருந்து இடமாகவும் படுத்த வாக்கில் சுத்திண்டே இருப்போம். அடித்து துவைக்கப்பட்டாப்புல ஒரு ஃபீலிங்!

இதுக்கு நடுவுல ஏசி பிடுங்கல் வேறு. சுத்தமா எஃபக்டே இல்லை. வேர்த்து விறுவிறுத்துண்டு கர்ட்டனையெல்லாம் இழுத்து விட்டுண்டு இதென்ன இப்படி ஒரு செல்ஃப் டார்ச்சர் தேவையா? இதற்குத்தானே ஆசைப்பட்டாய் அனன்யான்னு மை மைண்ட் வாய்ஸ் எள்ளி எள்ளி நகையாடித்துன்னா பாருங்களேன்!

நல்ல வேளை ஒரே ஆறுதல் அந்த பஸ்ஸில் படுக்கட்டு இரும்புல வெச்சிருந்தா. அந்தப் படிக்கட்டு இருந்ததோ நான் எதிர் திசையில போய் விழாமல் இருந்தேன். அப்படியே எதிர் திசை bedக்கு கீழே தூக்கியெறிப்பட்டாலும் அந்த எதிர் bedக்கும் பஸ்ஸின் தரைக்குமிடையேயான இடைவெளியில் சிக்கிண்டு ரொம்ப கஷ்டமாயிருக்கும்.ஸ்பீட் பிரேக்கர்ன்னா அப்படி ஒரு ஸ்பீட் ப்ரேக்கர்! தூக்கித்தூக்கி போடுறது! நாம பஸ்ஸில இருக்கோமா இல்லே பஸ் நம்ம மேல ஏறிப்போறதான்னு தெரியாத அளவுக்கு உடம்பு உபாதை பண்றது!

இப்படீ முழிச்சுண்டும் இல்லாம தூங்கவும் இல்லாம நானாவித சிந்தனைகள் என்னை ராத்திரி பூரா ஆட்டிப் படைச்சது! சில சமயங்களில் cliff hanger படம் மாதிரி எதையோ பிடிச்சுண்டு தொங்கறேன். சில சமயம் ஸ்பைடர் மேன் மாதிரியோ குறங்கு மாதிரியோ அங்கிட்டும் இங்கிட்டும் தவ்விண்டு இருக்கேன். ஆட்டம் மட்டும் நான்ஸ்டாப்! கண் திறக்கவேயில்லை ஆனா மூளை மஹா ஆக்டிவா ”ஏய் பத்திரம் விழப்போறே, ஜாக்கிரதை”ன்னு எச்சரிக்கை விடுத்துண்டே இருக்கு!

ஏதோ ஒரு அண்டிஸைரபிள் மொமெண்டில் மாயவரம் மாயவரம்ன்னு கத்திண்டே பஸ் பையன் வந்துட்டன். அட ராமா. இன்னும் தூங்கவே ஆரம்பிக்கலை அஜுக்குள்ளே மாயவரமா!ன்னு நினைச்சுண்டேன். அதிகாலை 3.30 மணி ! இன்னும் கொஞ்சம் அவஸ்த்தையின் எக்ஸ்டென்ஷனில் சேஃபாக தஞ்சாவூரில் இறங்கி கடவுளுக்கு நன்றி சொன்னேன்!

என்னது உங்க ஊர்ல கல்வித்திருவிளாவா? நானே தான் வரணுமா? என்னது ஸ்லீப்பர் பஸ்ஸா? சாரி, ஐயாம் நாட் கேம் ஃபார் திஸ்!

Monday, June 9, 2014

அல்பாயுசில் போன எம்பிராய்டரி எக்ஸைட்மெண்ட்

கொஞ்ச நாளைக்கு முன்னாடி செம டிப்ரெஷன். என்ன பண்ணினாலும் தீரலை. ஒரு நாளைக்கி உக்காந்து யூட்யூபில் கொஞ்சம் டெக்கரேட்டிவ் ஸ்டிச்சிங் பத்தி பார்த்துண்டு இருந்தேன். பளிச்சுன்னு ஒரு பல்பு எறிஞ்சது மனசுக்குள்ளே. (ஆமாமா அதுக்கும் பல்புன்னு தான் பேர், ஏன்னு கட்டுரையின் இறுதியில் தெரிஞ்சுப்பீங்க! )

 ரொம்ப காலமா, நட்ராஜ் ப்ளாஸ்டோ இரேஸர் மாதிரியான ப்யூர் ஒயிட் குர்த்தா ஒண்ணு வெச்சுண்டு பஜனை பண்ணிண்டு இருந்தேனா, பட்டன் டப்பாவை துழாவினப்போ ஒரு எம்ப்ராய்டரி நூல் கிடைச்சது! ஒரே ஒரு கலர் எப்படிண்ணே போதும்ன்னு மைண்ட் வாய்ஸ் இன்ஸ்ட்ரக்‌ஷன் கொடுக்க, உடனே எடு வண்டிய.. நேரா ஒரு ஃபான்ஸி கேலரியாம் - அங்கே போய் வித விதமான கலர் நூல்களை வாங்கிக்குவிச்சேன்.
என் செலக்‌ஷன் எல்லாம் எப்பவும்போல் பிரமாதம் தான்! அந்தக் கடை தான் சரியில்லை. சொல்லிவெச்சாப்புல எல்லாமே எண்ணெயில் முக்கின மாதிரி கலர்கள் தான் வெச்சிருந்தான். அது என் தப்பா? நானும் ஒரு 15 செட்டுகளை வாங்கிண்டேன். முக்கால் வாசி புத்தம் புதுசாக போட்ட ஃப்ரெஷ்ஷ்ஷான சாணிக்கலர் & கழுதைக்கலர் மட்டும் தான் பளிச்சுன்னு இருந்தது. பாக்கி கலர்கள் எதுவுமே மெச்சிக்கற மாதிரி இல்லை!

கூடவே ஒரு எம்பிராய்டரி ஃப்ரெம், த்ரெட்கட்டர்(கொஞ்சம் ஓவராச்சோ?) எல்லாமும் வாங்கினேன். எப்போவுமே எது செஞ்சாலும் நான் பெர்ஃபெக்‌ஷன் பார்ப்பேன்னு உங்களுக்குத்தான் தெரியுமே? அதுக்குன்னு ஊசி இருக்கான்னு கேட்டப்போ கடைக்காரர் முறைச்சார். பைக்கை எடுத்துண்டு ஓடியாந்துட்டேன்.

யூட்யூபிலும் ப்ளாக்களிலும் டுட்டோரியல்களை பிரிச்சு மேய்ஞ்சேன். அழகழகா தையல்களை நொடிப்பொழுதில் காலணா செலவில்லாமல் கற்றுத்தேர்ந்தேன்னு சொல்லிக்க ஆசைதான். ஹிஹி.. எங்கே.. நமக்கெல்லாம்.. நான் தான் க்ராஃப்ட்ஸ் க்ளாஸ்ல புலின்னு முன்னமே சொல்லியிருந்தேனே?

கழுத்தை ஒட்டி ரெண்டு கலர்ல செயின் ஸ்டிச் போட்டேன். ஆஹா.. என்ன ஒரு கலைநயம்? நேரத்தை உருப்படியாக க்ரியேட்டிவாக செலவு செய்யறதை விட்டுட்டு என்ன சதா ஃபேஸ்புக் வேண்டிக்கிடக்குன்னு மைண்ட்வாய்ஸ் முதன் முறையாக என்கரேஜிங்காக பேசித்து. உடனே அதை சிரமேற்கொண்டு, நானும் முழுமூச்சாக எம்பிராய்டரியில் இறங்கினேன். ரங்ஸும் அடடே, வெரி குட் என்று சம்பிரதாயத்துக்காக சொல்லி வைக்க,  அப்படியே  நான் வான வெளியில் பறந்தேன்!

ரெண்டே நாள்ல சிங்கர் ஃபேஷன் மேக்கர் மெஷின் வாங்கி ட்வின் நீடில் ஸ்டிச்ல கலக்கற மாதிரி கனவு கண்டேன். டிஸ்க் மாத்திபோட்டு மெட்டிக்யுலெஸாக வொர்க் பண்ணி அப்ளிக் வொர்க்கில் அவார்டு வாங்கவும் செய்தேன்! வெள்ளைக் குர்த்தாவில் கழுத்தில் மட்டும் இல்லாமல் கைகளின் ஓரத்திலும் செயின் ஸ்டிச்சை போட்டேன். என் கண்ணையே என்னால நம்ப முடியலை.  (”ஒரு 3 வயசுக்குழந்தை கூட செயின் ஸ்டிச் போடும்,இதுக்கெல்லாமா இவ்ளோ பில்டப்பு”ன்னு சவுண்டு விடுபவர்கள் வெளிநடப்பு செய்யும் படி உத்தரவிடுகிறேன், ப்ளடி பிட்பாட்கேட்ஸ்)

கூகிளாரிடம் கெஞ்சிக் கூத்தாடி, இமேஜஸ்ல போய் ஒரு மாங்காய் டிஸைனை டவுன்லோடினேன். உடனே கற்பனைக்குதிரையை தட்டி விட்டு குர்த்தாவில் அதை பேனாவால் வரைந்து,  அதை அப்படியே எக்ஸ்டெண்ட் செய்தேன். என்னமோ ஃப்ரெஞ்ச் நாட்டாம். அதை மாங்காயைச் சுத்தி ஊசியின் கழுத்தை நூலால் 10 வாட்டி நெறித்து உண்டாக்கினேன். ஃப்ரெஞ்ச் நாட் என்னமோ குருவிச்சிக்கு படிஞ்சு ஆங்காங்கு முடிச்சு முடிச்சா விழுந்து அப்படி ஒண்ணும் பெரிய அட்ராக்டிவா எனக்கு தோணலை. ஹூம். இதுக்குப்போயா இவ்ளோ பில்டப்பு?

மார்வாடிக்காரர்கள் போடும் மருதாணி டிஜைன் மாதிரி மாங்காய்க்குள் ஃபில்லிங் பண்ணுவோம்ன்னு இருக்கறதுலேயே பளிச்சுன்னு இருந்த சாணிப்பச்சையால் கோணல் கோடுகளை போட்டு  நிரப்பினேன். என்ன அவசரமோ சாணிப்பச்சை ரெண்டு கண்டும் அதுக்குள்ள தீர்ந்து போயிடுத்து. அப்பு”றம் தான் யாரோ சொன்னாங்க அடியில எல்லாம் நூலை இழுக்க கூடாதாம். அப்படியே எட்ஜ்ல விட்டு வெளியெ எடுத்தாத்தான் சிக்கனமாவும் எஃபீஷியண்டாவும் எம்பிராய்டரி போடலாமாம். முன்னமே சொல்லியிருக்க வேண்டாம். நான்ஸென்ஸ்! சரி சாயந்திரம் கடைக்கி போகலாம் அதே கலர் வாங்லாம்ன்னு நினைச்சுண்டேன். அதுக்குள்ள அரக்கு நூலும் அல்பாயுசுல பிராணனை விட்டுடுத்து.


நேரா கடைக்கு போனேன். அன்னிக்கி அந்த கேலரி லீவாம். இன்னொரு கடையில் எக்கச்செக்க தெலுங்குப் பட ஹீரோவின் ட்ரெஸ் கலர்கள் கிடைச்சது! பளிச்சு பளிச்சுன்னு அப்படி ஒரு பிரைட் கலர்ஸ். மஹா சந்தோஷம். அப்படியே அள்ளீட்டேன்ல? என்ன பிரயோஜனம்? அந்த சாணியும் அரக்கும் மட்டும் கிடைக்கவேயில்லை!

மாங்காய் ஓட்டைப்பல்லுடன் சதா என்னை பார்த்து சிரிச்சுண்டே இருக்கு! ஸ்டோர் ரூம் கட்டிலின் மேல் போட்டு வெச்ச வெள்ளைக் குர்த்தா தூசு படிஞ்சு இப்போ பிரவுன் குர்த்தாவா ஆயிண்டு வருது! ஹூம்! என்ன பண்ணலாம்? மொத்தமா பார்த்தேன்.

இந்த எம்பிராய்டரி ஒர்க் அப்பிடி ஒண்ணும் சூப்பர்ன்னு சொல்லிக்கற மாதிரி இல்லையேன்னு மைண்ட்வாய்ஸ் சொல்லித்து.. ஏன் இப்பிடியெல்லாம் நேரத்தை வேஸ்ட் பண்றே? பேசாம ஃபேஸ்புக்ல லாகின் பண்ணிடு. அதான் பெஸ்டுன்னு. என் மைண்ட் வாய்ஸ் சொன்னா சரியாத்தான் இருக்கும். தெலுங்கு பட ஹீரோ ட்ரெஸ் கலர்ஸ் எம்பிராய்டரி நூல்ஸ் யாருக்காவது வோணுமா? ப்ளீஸ் கால் மீ - இல்லாட்டா மதியம் Cell foneஐ Sell foneஆ மாத்திடுவேனாக்கும்!

Sunday, June 8, 2014

Sun Suit

"ஏய் கிளம்பிட்டியா? "
"ஆச்சும்மா"
"ப்ரேக்ஃபஸ்ட்?"
"வேண்டாம்மா லேட் ஆச்சு"
"லஞ்ச் பேக் பண்ணி வெச்சிருக்கேன் பார் டேபிள்ல"
”Ok Thanks மா”
”கொஞ்சம் பாலாவது குடிக்கறியா?”
”டிஸ்கஸ்டிங்ம்மா.. கொஞ்சூண்டு கோக் வேணா தா”
”என்ன எழவோ கோக்.. எங்க காலத்துல எல்லாம் கார்த்தால காஃபி தான் குடிப்போம்... இந்த கோக்கெழவை ban பண்ணனும்ன்னா பேசிண்டு இருந்தா.. என்ன பண்ணினாலும் அழியாது போல்ருக்கு கரப்பான் பூச்சியாட்டம்!”
”யக்!”
”சரி bookpad? palmy?”
”எல்லாம் எடுத்துண்டாச்சு”
”என்ன palmy யோ? எங்க காலத்துல எல்லாம் ஃபோன்ல தான் எல்லாம் பார்ப்போம் பேசிப்போம் சோஷல் நெட்வொர்க்கிங் எல்லாம். இப்பிடியா.. ”
”ohh! Come on Mom, how old fashioned!”
”சரி சரி. ’அதை இங்கேயே போட்டுண்டுடு.. இப்பெல்லாம் தான் கார்த்தால 6 மணிக்கே 48 டிகிரி வெயில் கொளுத்தறதே. எங்க காலத்துல எல்லாம்.... ”

stop it Mom..I am late already...  bye!

அந்த sun suitஐ எடுத்து லாவகமாக நம்ம காலத்து ரெயின் கோட் போல அணிந்து சீல் செய்து கொண்டாள். உள்ளே இன்ஸ்டண்ட் கூலிங் ஆரம்பம் ஆகியது.முதலில் முதுகில் ஜில்லென்று பரவியது. பின்னர் அக்குள்களில் தாக்கி வயிற்றில் குளுமை படர்ந்தது.  தலையிலும் ஹெல்மெட் போன்ற சாதனத்தை மாட்டிக்கொண்டு க்ளக் என்று கழுத்துடன் சேர்த்து சீலிட்டுக் கொண்டாள். ஹெல்மெடின் பனி கண்களை மறைக்காமல் இருக்க ஒரு வைப்பர் உட்புறமாக ஆட்டோமேட்டிக்காக துடைத்துக்கொள்ளும்.  இனி முகத்தில் மேக்கப் போகாது, வியர்க்காது, எண்ணெய் வழியாது, தூசி படியாது. பேசுவது மற்றவர்களுக்கு கேட்க வேண்டுமானால் மைக்கை ஆக்டிவேட் செய்ய வேண்டி வரும்! அவ்வளவே.

நீரஜா போன சில நிமிடங்களில் யாரோ ஒரு டிரைவர் தனது sun suit micகிலிருந்து சத்தம் போட்டார்.” ஏம்மா வூட்டுல சொல்ட்டு வந்திட்டியா” என்று fading outல் கேட்டது! இந்த டயலாக் மட்டும் ஃப்யூச்சரிலும் உண்டு போலும்!

பின்குறிப்பு: படு பயங்கரமன சூட்டில் சிக்கி சின்னா பின்னமாகும் ஒவ்வொரு நாளும் நான் கற்பனை பண்ணிப்பார்க்கும் ஃப்யூச்சரிஸ்டிக் இன்னோவேட்டிவ் சமாச்சாரம் இந்த சன் சூட். என்னிக்காவது இது உண்மையாகும். அன்னிக்கி என்னை சரித்திரம் போற்றும். என் கற்பனைக்கு complimentary ticket குடுத்தது இந்த ஃபோட்டோ.. நல்லாருக்குல்ல?

Thursday, June 5, 2014

பாலக்காட்டு pronunciations

இங்கே எல்லாமே புரங்கள் தான். சொக்கநாதபுரம், கோவிந்தராஜபுரம், லெக்ஷ்மீ நாராயணபுரம், அந்தப்புறம்..ச்சே சாரி, அந்த புரம், இந்த புரம் எட்செட்றா!

இப்போ இதுல ஒரு சின்ன்ன்ன்ன்ன அப்ஸெர்வேஷன். கொஞ்ச நாளாவே சொல்லலாம்ன்னு தான் யோஜனை பண்ணிண்டு இருக்கேன். இந்த மொழியின் ஸ்பெஷாலிட்டி என்னன்னா முக்கால்வாசி மூக்கால் பேசுவது தான். சரி சாரி.. முழுவதுமே மூக்கால் பேசுவது தான். அதுக்கும் ஒரு தனி ராகம் போட்டு மொழியோட இசையும் சேர்ந்தே ஒலிக்கும். பேசினாலே பாட்டுத்தான்.

இப்போ இந்த புரத்துக்கு மறுபடியும் வரலாம். கோவிந்தராஜபுரம்ன்னு ஒரு வார்த்தை இருக்குன்னு வெச்சுப்போம். இதன் முதல் சிலபெல் = கோவிந்த - இதை நீ...........................ட்டி சொல்லணும்.’கோ’ன்னு ஆரம்பிக்கும்போது ரெண்டு மெக்டவர் பர்கருக்கு வாயைத் திறப்பது போல அகலமாக திறக்கணும். புரியறதோ? ராஜ - இந்த ராஜவுக்கு சுமாரான பர்கருக்கு திறப்போமே அந்த அளவுக்கு திறந்தா போறும். எங்கே சொல்லுங்கோ, கோ.....................விந்த... ரா........ஜ - - ஓக்கே.. ரைட். குட். இந்த புரம் இருக்கு பாருங்கோ, அதை அப்படியே நச்சக்ன்னு அரை மாத்திரையில சுருக்குங்கோ.. புரம் or prm கூட போறும். அட prm is not the short form for போறும், புரத்துக்கு சொல்றேன். இப்போ மனசிலாச்சோ? சரி.. இப்போ தியரியை பார்க்கலாம். முதல் சிலபலில் நெடில் இருந்தா.. அதை நன்னா நீட்டி சொல்லணும். எங்கே சொல்லுங்கோ கோ...........விந்த ரா....ஜபுரம்... ஜபுரம் ரொம்பவே சுருங்கிடணும்.

இப்போ உங்களுக்கு ஹோம்வொர்க். எங்கே லெக்ஷ்மீநாராயண புரம். சொல்லுங்கோ பார்க்கலாம். முதல் ரெண்டு சிலபலில் மூணு நெடில் வருது, லெக்ஷ்மீஈஈஈ .... நா.....ரா.........யணபுரம்.. புரம் வழக்கம் போல குட்டிப்பாப்பா மூச்சா மாதிரி டர்ர்ன்ன்ன்னு ஸ்ப்பீடா சொல்லிடணும்.

அடுத்ததா எந்த சிலபலிலுமே நெடில் இல்லைன்னு வைச்சுக்கலாம்.திருவனந்தபுரம். பாருங்க எல்லாமே ஷார்ட் சவுண்டு தான். ஸோ எப்படி சொல்லணும்ன்னு சொல்லித்தரேன் (இந்த மாதிரி ஃப்ரீ டுட்டோரியல் எல்லாம் ஒருத்தருக்கும் கிடைக்காது, சரி ஃப்ரெண்ட்ஸாச்சேன்னு நானா இருக்கக்கொண்டு சொல்லித்தரேனாக்கும்) தி நன்னா சொல்லிக்கலாம். பாக்கி இருக்கும் எழுத்துக்கள் எல்லாமே ஏதோ சரளைக்கல்லு ரோட்டில் சைக்கிள் ஓட்டின மாதிரி தடதடனு சொல்லிடணும். புரம் மட்டும் அழுத்தணும். எங்கே சொல்லுங்கோ- திருவெனந்த-புரம். ம்.. குட்.. டவுட்டா இருந்தா ஏதாவது படத்தில் லாலேட்டன் சொல்லும் திருவெனந்தபுரத்தை கவனிக்கலாம்.

சரி இன்னிக்கி இந்த லெஸன் போறும்ன்னு நினைக்கறேன். நாளை சந்திப்போமா?

டிஸ்டன்ஸ் டாட்டா மஹாத்மியம்

டிஸ்டன்ஸ் டாட்டா
முந்தியெல்லாம் யார் நம்மாத்துக்கு வந்தாலும் நாம வாசல் வரைக்கும் வந்து வழியனுப்புவோம். கொஞ்சம் ஒரு படி மேலே போய் முக்கு திரும்பும் வரையும் நின்னு டாட்டா காட்டுவோம். இதுக்கு பேர் தான் டிஸ்டன்ஸ் டாட்டா. இந்த வார்த்தையை காயின் பண்ணினது முரளி மாமா தான். பளிச்சுன்னு நினைவுல வெச்சுண்டது சாட்சாத் நானே தான்.
போடியில் கொல்லைப்புறக் கதவைத் திறந்து வெச்சுண்டு வயித்தைக் குமட்டும் சாக்கடை நாத்தத்தையும் மீறி வீரபாண்டித் திருவிளா கொட்டு மேளம் பார்ப்போம். மெயின் ரோடு தெரியும். சிவாஜி எம்ஜார் எல்லாம் வருவது தெரியும்். எண்பதுகளில் எலக்‌ஷன் பிரச்சாரத்துக்கு வந்த ஜிவாஜியின் பிங்க்க்க் உள்ளங்கை தூரக்கே பார்த்து அசந்தோமென்றால் அது எங்காத்து கொல்லைப்புற அமைப்பின் மாயமன்றோ?
அஞ்சு லாந்தர் ஜங்ஷனில் பஸ் நிற்கும். யாராவது பஸ் ஸ்டாண்டுக்கு போறான்னா அவா நிச்சியம் டிரைவருக்கு பின்னாடி எங்கியாவது உக்காண்டு நாங்க கொல்லையில கப்புல நிப்போம்ன்னு முன்னமே தெரிஞ்சு வெச்சுண்டு டாட்டா காட்டிண்டே போவா. இதை டிஸ்டன்ஸ் டாட்டாவின் எக்ஸ்டெண்டட் வெர்ஷன்னு வேணா சொல்லிக்கலாம்.
ஃப்ளாட் வந்தாலும் பால்கனியில் இருந்து டாட்டா சொல்லுவது ஒரு வழக்கமாக தொண்ணூறுகளில் இருந்தது.
போடியில் யாருக்காவது அக்கிரஹாரத்து டிஸ்டன்ஸ் டாட்டா காட்டியாச்சுன்னா, கரெக்டா பதினைஞ்சாவது நிமிஷம் கொல்லைக்கதவு திறக்கப்படும். ”அவா இப்போ மதுர பஸ்ஸுல போவா“ன்னு ஒரு கூக்குரல் கேட்கும்.. எல்லாரும் திமுதிமுவென்று ரயில்பொட்டி வீடு பூரா ஓடுவோம். கொல்லைப்புற நாற்றத்தில் நிற்போம். டாட்டா காட்டுவோம். கதவு மூடப்படும். இது ஒரு சம்பிரதாயமாகவே நாங்கள் போடியை விட்டு வரும்வரை கடைப்பிடிக்கப்பட்டது.
ஒரு வாட்டி திருச்சியில் மை அத்தை வீட்டுக்கு ஹாலிடேக்கு போயிருந்தோம். அத்தை கடைக்குட்டி திவ்யாவின் பொம்மை வாட்சு எங்க ஏர்பேக்(அப்பெல்லாம் அது ஒண்ணு எல்லா ஊருக்கும் எங்க கூட வரும்) சைடு ஜிப்பில் இருந்தது. எங்களுக்குத்தான் தெரியுமே.. வெளியூர் பஸ் எக்ஸிட் பாயிண்ட் விசுவனாதபுரம் சுப்பையா ஸ்கூல் ஸ்டாப்பில், நிச்சியம் டாட்டா காட்ட திவ்யாவும் குமார் மாமாவும் நிப்பான்னு. அதே மாதிரி அவா நின்னா.. மை நைனா பொம்மை வாட்சை தூக்கிப் போட்டார். லபக்ன்னு காட்ச் பிடிச்சுட்டார் குமார் மாமா தற்செயலா. வாட்ச் கிடைச்சதாக ஜெயா அத்தை ப்ளூ இன்லண்ட் கவரில் எழுதினா.
நாங்க எந்தூருக்கு போனாலும் பஸ்டாண்டில் ஏத்தி விட்டு, டாட்டா காட்ட நம்ம சுற்றமும் நட்பும் வராமல் இருந்ததேயில்லை. ஏதோ ஒரு பாதுகாப்பான ஃபீலிங் இருக்கும். நிறைஞ்சு வழியும் அன்பு அவங்க வாங்கித்தரும் பிஸ்கட்டிலும் பஸ்டாண்டு கலரிலும் சேர்ந்து சுவை கூட்டுறது மாதிரி தோணும்.
முந்தா நாள் அத்தை செண்ட்ரல் போனார். 18K பஸ்ஸில் போய் பையை வைச்சுட்டு சீட்டு பார்த்து உட்கார வெச்சுட்டு பஸ் கிளம்பட்டும் என்று நின்றேன். “நீ போ.. வெயில் வெயில்”ன்னு சொல்லிண்டே இருந்தாளேன்னு நான் கிளம்பி பஸ் போற ரூட்ல எங்க ஃப்ளாட் வாசல்ல நின்னுண்டேன் (நிழலா பார்த்து தான்) மதியானம் ஒரு வேலை இருந்ததுனால செண்ட்ரல் போகலை. மாமாவும் அத்தையுடன் போறார்.நீ வேண்டாம்ன்னு சொல்லிட்டா. 15 நிமிஷம் ஆச்சு. வெயில். நெத்திலேந்து வேர்வை வெள்ளமாக பொங்கி மூக்கு நுனியில் சொட்டியது. விடுவோமா நாங்க? மெதுவா பஸ் திரும்பித்தோ இல்லியோ.. இடம் மாறி உக்காந்திருந்த அத்தையும் மாமாவும் என்னை எதிர்ப்பார்த்துண்டு வேகமா கையாட்டினாங்க!
எவ்வளோ sophistication இருந்தாலும் நாமெல்லாம் அடிப்படையில கிராமத்துக் காரங்க - போடிக்காரைங்க தான்! மாறவே முடியாதுன்னேன்! இன்னிக்கும் யாராவது சென்னைக்காரங்க வீட்டில் சொல்லிண்டு கிளம்பும்போது, RVS அண்ணா மாதிரி எழுந்து வாசல் வரைக்கும் வர யத்தனிச்சா அவா நிச்சியம் கிராமத்துக்காரான்னு புரிஞ்சுண்டுடலாம்.
Related Posts with Thumbnails