மனம் ஒரு குரங்கு
கண்டுபிடிச்சேன் கண்டுபிடிச்சேன் ..
பாதி காதல் பாட்டு (படம்: மோதி விளையாடு ) எனக்கு மிகவும் பிடித்துள்ளதாகவும் , அதை கேட்கும் பொழுது எனக்கு பழைய indie pop music எல்லாம் நினைவுக்கு வருவதாகவும் கூறி இருந்தேன் இல்லையா?. நேற்றைக்கு ஒரு மெகா கண்டுபிடிப்பு. அது நான் சொன்ன மாதிரியே Colonial Cousins பேண்டின் ஒரு பழைய tune reuse தான். Leslie Lewis இசையில் சுனிதா ராவ் பாடிய 'Pari Hoon Main' பாடலின் அச்சு அசலான தமிழ் பதிப்பு தான் இந்த பாம்பே ஜெயஸ்ரீ பாடிய 'பாதி காதல்' பாட்டு . வழக்கமாக இசைஅமைப்பாளர்கள் மாதிரி ditto வாக reuse பண்ணாமல் கொஞ்சம் creative ஆக பண்ணி இருக்கிறார்கள். தென்னிந்தியர்கள் ரசனைக்கேற்ற படி அதை மெருகூட்டி, இங்கே அங்கே கர்நாடக touch ups கொடுத்து ஜெயஸ்ரீ என்ற அருமையான படகியைக்கொண்டு பாட வைத்து இருக்கிறார்கள்.
நிற்க. இந்த 90 களில் வந்த indie pop பாடல்கள் எல்லாம் என்ன கனவா என்று நினைக்கும்படி மாயமாய் மறைந்து விட்டதே? அந்த நாட்கள் திரும்ப கிடைக்கபெருமா என்றெல்லாம் ஏங்கி இருக்கிறேன். தினம் தினம் ஒரு புதிய பாட்டு launch பண்ணுவார்கள்.
நானும் என் தங்கையும் விடாமல் Mtv Channel V, DD2 பார்ப்போம். Super Hit Muquabla என்ற நிகழ்ச்சியில் இருந்து இந்த trend ஆரம்பம் ஆயிற்று . இதை பார்த்து சுரேஷ் பீட்டர்ஸ் , அனுராதா ஸ்ரீராம் , தேவன் , பாப் ஷாலினி , யுகேந்திரன் இவர்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு பாப் ஆல்பம் தமிழில் ரிலீஸ் செய்தது நினைவிருக்கலாம். இருந்தும் அது எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை என்பதே உண்மை.
நானும் என் தங்கையும் விடாமல் Mtv Channel V, DD2 பார்ப்போம். Super Hit Muquabla என்ற நிகழ்ச்சியில் இருந்து இந்த trend ஆரம்பம் ஆயிற்று . இதை பார்த்து சுரேஷ் பீட்டர்ஸ் , அனுராதா ஸ்ரீராம் , தேவன் , பாப் ஷாலினி , யுகேந்திரன் இவர்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு பாப் ஆல்பம் தமிழில் ரிலீஸ் செய்தது நினைவிருக்கலாம். இருந்தும் அது எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை என்பதே உண்மை.
அனைடா, அலிஷா சினாய் , அனாமிகா , ஸ்வேதா ஷெட்டி , சுனிதா ராவ் ,ராஜேஷ்வரி, லக்கி அலி , ஷங்கர் மகாதேவன் , ரமண கோகுலா, KK, ஹரிஹரன் , லெஸ்லீ லூயி, சோனு நிகம் ஜோஜோ - : இது போன்ற (முன்பு அறியப்படாத ) பெயர்கள் எல்லாம் எங்களுக்கு பரிச்சயம் ஆயின. தினம் தினம் எதாவது ஒரு புதிய பாடலுக்கு காத்திருப்போம். அம்மா அப்பாவும் கூட விரும்பி பார்க்கும் அளவிற்கு அவற்றில் சில நன்றாக இருக்கும்.
ஒரு Pop Album Music Video என்பது ஒரு விளம்பரத்தை காட்டிலும் சற்றே நீளமான ஒரு venture ஆகும். அந்த சில நிமிடங்களில் பார்பவர்களை ஈர்க்கும்படி அமைக்க வேண்டிய கட்டாயத்தில் almost அனைத்து டைரக்டர்களும் தத்தம் கற்பனைத்திறனை நன்கு வெளிப்படுத்தி வெற்றி பெற்றே இருந்தனர் என்பது என்னுடைய தாழ்மையான அபிப்பிராயம் .
இந்த பாடல்களில் என்ன விசேஷம் என்றால், எதாவது ஒரு Theme இருக்கும் . பார்ப்பதற்கும் கேட்பதற்கும் இனிமையாக இருப்பதோடு , சில பாடல்கள் நம் இதயம் தொடும் படி படம் எடுத்து இருப்பார்கள் . lucky ali யின் 'Anjaane Raahon' என்ற பாடல் நம் கண்களை குளமாக்கி விடும் .சில பாடல்கள் கிச்சு கிச்சு மூட்டும் படி இருக்கும். 'Saamne yeh koun aaya' என்ற பாட்டு Instant Karma என்ற ஆல்பத்தில் இடம் பெற்றது. ஒரு எளிமையான concept ஐ mid 70s theme கொண்டு எடுத்து இருந்தார்கள் .இப்போதுள்ள trend க்கு எல்லாம் முன்னோடியாக இந்த பாட்டை தான் கூற முடியும்.
வித்தியாசமான backdrop பில் படமாக்கப்பட்ட நாட்டுபுற இசையை மையமாக கொண்ட Euphoria வின் Dhoom Pichak Dhoom பாட்டை மறக்க முடியாது. நல்ல இசை, நல்ல பாடகர்கள், நல்ல லோகேஷன் , நல்ல தீம் இதெல்லாம் இருந்த ஆல்பங்கள் தோல்வி அடைந்ததாக சரித்திரம் இல்லை.
(பின் குறிப்பு : 'ஒஹ் அந்த நாட்கள்' என்று மூக்கை சிந்தி, கர்சீப்பை பிழிபவரா நீங்கள்? கவலை வேண்டாம் யூ டியூபில் எல்லா பாடல்களும் intact ஆக இருக்கின்றன என்ஜா.........ய்! . ஆனால் அந்த Golden Era மட்டும் திரும்பி வரவே வராது .. )
இந்த சமையல் நிகழ்ச்சிகள் எல்லாம் எனக்கு ரொம்ப இஷ்டம். எதையும் விடுவதில்லை. புரிகிறதோ புரியவில்லையோ சைவ சாப்பாடு சமைத்து காட்டினால் கட்டாயம் பார்ப்பேன்.
வழக்கமாக நம்மூர் பொதிகை சன் விஜய் போன்ற தொலைக்காட்சிகளில் வரும் சமையல் நிகழ்ச்சிகளில் செய்யும் பதார்த்தத்தை விட அதிகமாக கண்களை கவர்வது செய்பவருடைய கையலங்காரம், மோதிரம்(ங்கள்!!!), வளையல், நெயில் பாலிஷ், மெகந்தி, புடவை, நகைகள், மேக்கப் , உபயோகப்படுத்தபடுகின்ற பாத்திரங்கள், கரண்டிகள், அடுப்பு, blender , Microwave safe dishes போன்ற விஷயங்களே!
சமீபமாக கைரளியில் ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சி ஒன்று பார்த்துக்கொண்டு இருந்தேன் . Dr லக்ஷ்மி நாயர் என்பவர், ஊர் ஊராக போய் அங்குள்ள சுவைகளை ருசித்து பார்க்கிறார். காரைக்குடி செட்டிநாடு பக்கம் வருவதாக சொன்னவுடன், ஹை என்று பார்க்க ஆரம்பித்தேன். நிஜம்மாகவே சொல்கிறேன், நம்ம வீட்டு சமையலறைக்குள்ளே எட்டிப்பார்த்த மாதிரி இருந்தது அந்த நிகழ்ச்சி. எந்த ஒரு டாம்பீகமும் இல்லாமல் சாதாரணமாக ஒரு நம்மூர் பெண் வெவ்வேறு வண்ணங்களில் புடவையும் ரவிக்கையும் அணிந்து ஒரு குந்துமணி நகை கூட அணியாமல், ஒரு துளி talcum powder கூட போட்டுக்கொள்ளாமல் , வீட்டில் உபயோகபடுத்துகின்ற மிகச்சாதாரண பாத்திரங்களில் விதவிதமாக அருஞ்சுவை உணவு சமைத்து காட்டி அசத்தினார். Dr லக்ஷ்மி சிறு குழந்தையின் ஆர்வத்தோடு அதை உண்டு ரசித்து மகிழ்ந்து பாராட்டினார். சமையல் நிகழ்ச்சின்னா இப்பிடித்தான் இருக்கணும். பேஷ் பேஷ். Good work guys!.
TV ரிமோட்டில் சேனல்களை surf பண்ணிக்கொண்டே இருந்த பொழுது people tv இல break அடித்து நின்றேன் . என் favourite பாடகர் ஷங்கர் மகாதேவனை ஒருத்தர் பேட்டி கண்டு கொண்டு இருந்தார். நான் பிரேக் அடிக்கத்த சுப லக்னத்தில் பேட்டி முடியபோகிறது என்ற கசப்பான உண்மை தெரிந்தது. ஆங்கிலத்தில் பேசிக்கொண்டு இருந்தார்கள். Taare Zameen Par என்ற படத்தில் இடம் பெறும் 'Maa' பாடலை உணர்ச்சிபூர்வமாக பாடிய ஷங்கரின் திறமையை நான் பிரமித்த அதே நேரம் , பேட்டி எடுப்பவர் அந்த பாடலில் லயித்து , வாய் பிளந்து 'பே ' என்று பார்த்துக்கொண்டு இருந்தார் . பாடி முடித்த shankar, இவரது நிலையை உணர்ந்து , எழுந்து, சுதாரித்து கொண்டு , கைகொடுத்து , பேட்டியை நிறைவு செய்தார் . அப்பொழுதும் பேட்டி எடுப்பவர் புகழ்வதற்கு வார்த்தைளை தேடிக்கொண்டு இருந்தார் Not just breathless, Speechless too .. Kudos Shankar!!!