Pages

Monday, October 19, 2009

மனம் ஒரு குரங்கு 5
மனம் ஒரு குரங்கு 5

அபுதாபியில் பெண்கள் இப்போதெல்லாம் "பொம்பளைங்கன்னா உங்களுக்கென்ன கிள்ளுக்கீரையா ?" என்று கேட்பதில்லை.ஆண்கள் தப்பித்தவறி அப்படி கிள்ளுக்கீரை என்று கூறிவிட்டாலும் பெண்கள் கோபித்துக்கொள்ள மாட்டர்கள். பின்னே சாதரண கிள்ளுக்கீரை கருவேப்பிலை கன்னா பின்னா என்று விலை ஏறி விட்டதே! நம்மூரில் 2-3 காய்கறிகளை மொத்தமாக வாங்கினால் காய்கறி வண்டிக்காரன் கொசுறாக ஒரு பெரீய கொத்து அழகான அப்போதே பறித்த fresh கருவேப்பிலை கொடுப்பது வழக்கம். இங்கே காட்டு கருவேப்பிலை தான் கிடைக்கும். (காட்டுகருவேப்பிலைக்கு ராட்சத இலைகள் இருக்கும்). இருந்தாலும் இந்த மட்டும் கிடைக்கிறதே என்று திருப்தி அடைந்து கொண்டு இருந்தோம்.இப்பொழுது அதுவும் போயிற்று. சுமார் ஒரு கொத்து காட்டு கருவேப்பிலை ஆக ஒரு சிறிய கவரில் போட்டு சீல் பண்ணி ஒரு திராம் வாங்கிக்கொண்டு இருந்தார்கள்.
என்ன ஆயிற்றோ தெரியவில்லை சென்ற மாதம் முழுதும் கருவேப்பிலை கிடைக்கவே இல்லை. பின்னர் இப்போது பார்த்தால், அதே ஒரு திராம் காட்டு கருவேப்பிலை கிட்ட தட்ட மூன்று திராம் ஆகி விட்டது. அதாவது நம்மூரில் கிடைக்கும் அதே கொசுறு இப்போ 36 ருபாய்!!! இப்போவே கண்ணக்கட்டுதே..
இத்தனை நாள் ஒரு திராம்க்கு கருவேப்பிலை வாங்கி முழுவதும் உபயோகப்படுத்தாமல் வீணாக்கி வந்த நான், சரியாக அது இங்கே கிடைக்காத போது அதை மிகவும் மிஸ் செய்தேன். அப்போது தான் எனக்கு கருவேப்பிலை பொடி, கருவேப்பிலை தொகையல் முதலியவை பண்ணி சாப்பிட வேண்டும் என்றெல்லாம் தோன்ற ஆரம்பித்து விட்டது.(என் கணவரின் பாட்டியும் இதே போல தானம், கேரளாவில் பந்த அன்று தான் அவருக்கு பால் பாயசம் எல்லாம் பண்ண வேண்டும் என்று தோன்றுமாம்.) கடைசியாக ,விலை அதிகமானாலும் ஒரே ஒரு பாக்கெட் வாங்கி பத்திரமாக air tight containerல் போட்டு வைத்து உபயோகப்படுத்திக்கொண்டு இருக்கிறேன். அதனால் தான் சொல்கிறேன் இனி கிள்ளுக்கீரை என்றுசொன்னால் யாரும் கோபித்துக்கொள்ள மாட்டார்கள்
இங்கே என்ன காரணத்திற்காக கறிவேப்பிலையை ban செய்தார்கள் என்று தெரியவில்லை. எதற்கெடுத்தாலும் பல்தியா (இங்கே உள்ள local government body) தான் ban செய்தார்கள் என்று தகவல் கூறுவார்கள். இந்தியக்காய் எல்லாம் இங்கே துபாய் அருகே ஆவீர் என்ற இடத்தில் பயிர் செய்கிறார்களாம். எல்லா காய்கறிகளும் கிடைக்கும் அனால் சுவை நம்மூர் போல இருக்காது. உரத்தால் ஏதோ நச்சுத்தன்மை ஏற்பட்டு விட்டதால் இவர்கள் கருவேப்பிலையை ban செய்து விட்டார்களாம்!!!


மனைவியை வெறுப்பேத்துவது எப்படி என்று என் கணவர் ஸ்பெஷல் கோர்ஸ் படித்து இருப்பார் போல. தொல்லை தாங்கவில்லை . சமயலறையில் நான் வேலை செய்து கொண்டு இருக்கும்போது கூடவே நின்று கொண்டு running commentary குடுப்பார். என்னவென்றால், அவர் சொல்லிக்கொடுத்து தான் நான் எல்லாம் செய்கிறேனாம். அதுவும் எப்படி என்றால் நான் செய்து கொண்டே இருக்கும்போது பார்த்து பார்த்து வேகமாக சொல்லுவார். உதாரணத்திற்கு அடுப்பை சிம் செய்த உடன், ஆங்,சிம் பண்ணு , சப்பாத்தியை கல்லில் போட்டதும் சப்பாத்தியை போடு என்பார். நான் வேண்டுமென்றே செய்து கொண்டிருப்பதை நிறுத்தி விட்டால் அதையும் தனக்கு சாதகமாக்கிக்கொண்டு வெயிட் பண்ணு அனன்யா என்பார். இங்கே வீட்டில் சில வேலைகள் அவருடையது. குப்பை கொட்டுவார், வாட்டர் கேன் தண்ணீர் மாற்றுவார், இத்யாதிகள். நான், "நா, ட்ராஷ் டிஸ்போஸ் பண்ணிடுங்கோ" என்று கூறினால், வேலை மெனக்கெட்டு வந்து என்னை
தூக்க(முடியாது என்றபோதிலும்) முயற்சி செய்வார். நாங்கள் இது போல் இருப்பதால் எங்கள்
வீட்டில் அனைவரும் எங்களை Tom and Jerry என்று கூறுவது வழக்கம்.

விகடன் பொக்கிஷம் நன்றாக இருக்கிறது என்று சென்ற பதிவில் சொன்னாலும் சொன்னேன், திருஷ்டி மாதிரி ஆகிவிட்டது .இந்த வாரம் பொக்கிஷத்தில் சரக்கே இல்லை.முத்து ராமனின் பேட்டி மட்டுமே கொஞ்சம் பரவாயில்லை.டைரக்டர் சசிகுமாரின் பேட்டியை படிக்க மறக்க வேண்டாம்.. சினிமா சாயப்பூச்சு இல்லாமல் இயற்கையாக பேசும் மனிதர்.
வருண் பாப்பா என்னிடம் தீபாவளிக்கு முதல் நாள் போனில் பேசினான்."Hello பீயம்மா பீயம்மா" என்று அழைத்து" டப்பா டப்பா "என்று சொன்னான். அங்கே ஒரே பட்டாசு சத்தமாம் அவனுக்கு பயமாம். அவன் பேசுவான் என்று நான் கவனமாக கேட்டுக்கொண்டு இருந்ததால் அவனுக்கு நான் எதிர்முனையில் இருக்கிறேனா என்று பலத்த சந்தேகம். அடிக்கடி என்னை அழைத்து பார்த்துக்கொண்டான். நான் இருப்பது தெரிந்தே மேற்கொண்டு பேசினான்.
ஒன்றரை மாதங்களில் எத்தனை மாற்றங்கள்? அவன் பேச்சு, புதிய சொற்கள், அவனுடைய புரிந்து கொள்ளும் திறமை.. அப்பப்பா.. அதிசயித்து போனேன்.ஒன்றே ஒன்று மட்டும் தான் மாறவில்லை.. அவன் அன்பு.
2 comments:

Anonymous said...

"நா, ட்ராஷ் டிஸ்போஸ் பண்ணிடுங்கோ" என்று கூறினால், வேலை மெனக்கெட்டு வந்து என்னை
தூக்க(முடியாது என்றபோதிலும்) முயற்சி செய்வார்."
ROFtL :).. ur husband has a very good sense of humour. Now a days most people lack it.
Loved ur writing..

Ananya Mahadevan said...

Thanks Mittu. Apart from selling ERP Solutions, his chief occupation is pulling my legs by all means. That is why I mentioned that he mustve done some special course on irritating me . :-)
Thanks for dropping by. I would like to read more of yours too. Please continue writing.
Regards

Related Posts with Thumbnails