Pages

Wednesday, December 30, 2009

ஒளி படைத்த 2010 வா வா வா...

ஒரு வாரம் லீவுல பாலக்காடு போறோம். திடீர்னு முடிவுபபண்ணப்பட்ட ஒரு பயணம். என் மாமியாருக்கு சப்தபதி நடத்துறாங்க. கூடவே கோவிலில் அய்யப்ப பூஜை எல்லாம் இருக்காம். அப்படியே சொந்தபந்தத்தை எல்லாம் பார்க்கலம்னு இவருக்கு ஒரே குஷி. தமிழ்மண்ணை மிதிக்காததால் எனக்கு வருத்தமே. என்ன செய்யறது. ஒரு வாரத்தில் எவ்வளவு தான் கவர் பண்ண முடியும்? அதான், யாதும் ஊரே யாவரும் கேளிர்ன்னு சொல்லிருக்காங்க இல்லே? அப்போ புது வருட ஆரம்பத்துல நாங்க ஊர்ல இருப்போம்னு ஒரே சந்தோஷமா இருக்கு.

இந்த வர்ஷத்தின் கடைசிப்பதிவு இதாத்தான் இருக்கும்.


பணத்துல கொழிச்ச,  வீண் ஆடம்பரத்தில் மிதந்த பலருக்கு 2009  மண்டையில் ஒரு கொட்டு வெச்சது.இந்த வணிக ரீதியான அடி வாங்கினதுனால,தலைகீழ விழுந்த எல்லாருக்கும் ,அர்த்த ராத்திரியில குடை பிடிச்சவங்களுக்கும்  தொப்பியும் பல்பும் மாத்தி மாத்தி கிடைச்சது Englishஷே தெரியாதவங்க கூட அடிக்கடி 2009 இல் உபயோகிச்ச வார்த்தை cost cutting.

இந்த Economic Slowdown நால,உலகமக்கள் மாதிரி தான் துபாய் வாழ் மக்கள் பட்ட பாடும் கொஞ்ச நஞ்சமில்ல. நிறைய இந்தியர்களுக்கு வேலை போச்சு, புள்ளைகுட்டி எல்லாம் கூடிண்டு பலர் இந்தியா போய் செட்டில் ஆயிட்டாங்க. பலர் எக்கசெக்கமா கடனை வாங்கிட்டு கட்ட வழியில்லாம abscond ஆயிட்டாங்க.துபாய்ல டிராபிக் கம்மியாயிடுத்து.வாடகை படிப்படியா குறைஞ்சு இப்போ வாடகைக்கு வரதுக்கு ஆள் இல்லாம காலி வீடுகள் நிறைய ஆயிடுத்தாம்.முன்னாடி ஷேரிங்ல இருக்ககூடாதுன்னு ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ் போட்ட பல்தியா(நம்மூர் பஞ்சாயத்து மாதிரி - Municipality) கூட இப்போ ரூல்ஸ் எல்லாம் தளத்தி இருக்காங்களாம்.

முக்காவாசிபேருக்கு வேலை போய்டுத்து. அப்படியே வேலை போகாட்டியும் சம்பளத்தில் பெரும்பகுதி கட். optimum utilizationனு சொல்லிட்டு வேலைப்பளு முழுவதும் ஒரு சிலர் மேல போட்டு தாக்குறாங்கஇதுனால வேலையில motivation இல்லேன்னு பயங்கர complaints.

20௦ பக்க இணைப்பா வந்துண்டு இருந்த Gulf News Appointments (நம்மூர் தி ஹிந்து opportunities மாதிரி)இப்பெல்லாம் முன்னும் பின்னுமாக 3 பக்கம் தான். ஒரு புல் Sheet, ஒரு Half Sheet. சுத்தமா வேலையே இல்லை. எத்தனையோ பேர், visa cancel ஆயிகூட, ஊருக்கு திரும்பி போகறதுக்கு பைசா இல்லாம இங்கேயே மாட்டிண்டு இருக்காங்க. Overall,  இந்த வர்ஷம் பயங்கர Disasterous. Things are likely to get better early next yearன்னுபேசிக்கறாங்க. பாக்கலாம்.2010, இந்த ரணங்களை ஆத்தணும். இந்த கஷ்டங்களை எல்லாம் கழுவணும்.  வேலை இல்லாதவங்களுக்கு வேலை கிடைக்கணும் (ஹீ ஹீ என்னை மாதிரி நிறைய பேரு இருக்காங்களே, எல்லாருக்கும் தான் சொல்றேன்) Salary Cuts எல்லாம் cut   ஆயி, பழைய படி salaries எல்லாம் reinstate பண்ணணும். எல்லா தொழில்களும் வளர்ந்து செல்வம் கொழிக்கணும். உலகமே சுபிக்ஷதுல செழிக்கணும். இதான் என்னுடைய பிரார்த்தனை. சர்வ ஜகத் சுகினோ பவந்து.


எல்லோருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Sunday, December 27, 2009

சினிமாப்பக்கம்சினிமாப்பக்கம்

முன்னாடி எல்லாம் மனம் ஒரு குரங்கு series ல நான் பார்த்த படத்தை பத்தி எழுதிண்டு இருந்தேன். அதுக்கு நண்பர்கள் வட்டத்துல ஏக எதிர்ப்பு. அதுனால தனித்தனியா போஸ்ட் போட ஆரம்பிச்சேன். வளவளன்னு ஒரு படத்தை பத்தி எவ்வளோ தான் எழுதறது. அதுனால இரத்தின சுருக்கமா, நான் பார்த்த  ஒவ்வொரு படத்தை பத்தியும் இப்படி சினிமாப்பக்கம்ன்னு ஒரு headingல எழுதலாம்ன்னு நினைக்கறேன். மகேஷை தவிர வேற யாரு எதிர்த்தாலும் செவி சாய்க்கப்படும்.

Wake up Sid


வேக்கப் சித் என்னமோ ஆஹா ஓகோனு பேசிண்டாங்க. எடுத்து பார்த்தா,பயங்கர பல்பு. ஒரு ரெண்டு மூணு  காட்சிகளைத்தவிர ஒண்ணுமே ரசிக்கும்படியா இல்லே. நொந்து போயிட்டேன். கொங்கனா சென் இத மாதிரி படங்கள்ள நடிக்கறது நிறுத்தணும். முதலில் வந்த முன்னுரைக்காட்சிகளை பார்த்தப்போ 'அடேடே, அவசரப்பட்டு DVD எடுத்துட்டோமோ?, இது பொம்மரில்லு ஹிந்தி ரீமேக்கா இருக்குமோன்னு தோணற மாதிரி அப்படி ஒரு Striking resemblence. நல்லவேளை,தப்பிச்சேன்.. போக போக ட்ராக் மாறி. ஒரு தெளிவில்லாத,இலக்கில்லாத இளைஞனின் கதைய சொல்றாப்புல படம் போகுது. இப்போ நிறைய பேரு இத மாதிரி தானே இருக்காங்க.காலேஜ் போகாத, டென்த் பெயில் ஆன ஹீரோக்கள் எல்லாம் ஏதாவது ஒரு பெரிய எடத்து, posh ஹீரோயினுக்கோசம் டான்ஸ் என்ன பைட்என்ன, அடேங்கப்பா அமர்க்களப்படுமே நம்மூர் படங்கள்.எஸ் வீ சேகர் நாடகத்தில் வர்ற ஒரு டயலாக் தான் நெனவுக்கு வரும்.

கிராம எல்லைச்சாமி: இது வரைக்கும் 7  காதல் சோடி ஆத்தத்தாண்டி ஓடிருக்கு தம்பி.

எஸ் வீ : ஏன்யா, ஆத்ததாண்டி ஓடிட்டா காதல்ல வெற்றியாயிடுமாய்யா? நான் பார்தேன்யா, ஆத்தத்தாண்டி போயி, ரெண்டு பெரும் ஜோடி ஜோடியா பக்கத்துக்கு கிராமத்துல பிச்சை எடுக்கறாங்க..


இந்த மாதிரி சரக்கே இல்லாம காதல்ல விழுந்து, பல்பு வாங்காதீங்க. ஒரு இலக்கு வெச்சுக்கோங்க ன்னு வலியுருத்துற படம்.  என்னமோ காமா சோமான்னுஇருக்கு .மும்பயி மான்சூன், ஆபீஸ்ல இருந்து களைச்சுப்போய் வரும் கொங்கனாவுக்கு , வீட்டை குப்பைத்தொட்டியா வெச்சிருக்கும் சிட், ஆம்லேட் பண்ண (கத்துண்டு!) பண்ணிதறது.. இந்த மாதிரி ஒரு சில காட்சிகள் தான் நான் ரொம்ப ரசிச்சேன். அனுபம்கேர், சுப்ரியா பாடக் வர்ற காட்சிகள்ல எல்லாம் படம் நிமிந்து உக்காருது.மத்தபடி, சொல்லிக்கராப்புல ஒண்ணுமே இல்லே. மன்னிக்கவும். சித் எழுதிருக்கவே இல்லை. or rather, எனக்கு வயசாயிடுத்து , இந்த மாதிரி டுபாகூர் படங்களையெல்லாம் ரசிக்கும் திறன் போய்டுத்து. either one of the two.


Triangle:


என் நண்பன் கனி ஒரு படம் நல்லா இருக்குனு சாமான்யதுல சொல்ல மாட்டான். அப்படி சொல்லிட்டா, அது நிஜமாவே சரக்குள்ள படம்தான்னு எனக்கு திட்ட வட்டமா தெரியும். Triangle  பாரு பாருன்னு சொல்லிண்டே இருந்தான். அந்த கட்டளைய சிரமேற்கொண்டு,பார்த்தோம். அது Horror genreல இருந்தாலும் ஒரு Psychological Thriller. ரொம்ப வித்தியாசமா இருந்தது.பயங்கரமா மனசை என்னமோ தொந்தரவு பண்ணின படம்ன்னு சொல்லலாம். நிறைய புரியலை.நிறைய விவாதிச்சோம். IMDB Discussion boardல போய் படிச்சப்போ கொஞ்சம் வெளங்கிச்சு.ஒரு பெண்ணோட வாழ்கை எப்படி Indefinite Loop  ல மாட்டிக்கறதுன்னு புது விதமா out of the box thinkingல சொல்லி இருக்காரு டைரக்டர் Christopher Smith.நான் என்ன சொல்ல வர்றேன்னா, புரியுதோ புரியலையோ இத மாதிரி ஹாலிவுட் படங்களைப்பதி எல்லாம் எழுதினா தானே ஒரு கெத்து இருக்கும் ப்ளாகுக்கு.

15, Park Avenueஒரு ரெண்டு வாரத்துக்கு முன்னாடி டிவி மொக்கை தாங்க முடியாம E Masala ல போய் நின்னேன். ஏதோ படம் ஓடிண்டு இருந்தது. அடேடே, நாம இது வரைக்கும் இந்த காட்சி பாத்ததில்லையேன்னு கொஞ்சம் வெயிட் பண்ணினேன். கொங்கனா சென் யார்கிட்டயோ அட்ரஸ் விசாரிச்சுண்டு இருந்தா.ஷபானா இளமையாகவும் கொங்கனா நரைமுடியோட இருந்ததுனால எனக்கு பயங்கர ஆச்சர்யம் அப்போ தான் படம் பேரு தெரிஞ்சுது. கொஞ்ச நேரம் தான் ஆயிருக்கும் படம் போட்டுன்னு உக்காந்து பாக்க ஆரம்பிச்சுட்டேன். Mr and Mrs Iyer  க்கு அப்புறமா கொங்கனா சென் நடிச்சு அபர்ணா சென் எடுத்த படம் தான் இந்த 15,  Park Avenue. கொஞ்ச நாளா பார்க்கணும்னு நெனச்சுண்டு இருந்தேன்.TVலேயே போட்டுட்டான்னு எனக்கு வாயெல்லாம் பல்லு. இந்த படத்தின் தரத்தை பத்தி சொல்லறதுக்கு பதிலா, பேசாம சர்வேசனின் (இவற்றை வெல்லும் சொற்கள் வேறில்லை) கமெண்ட்ஸ் suggestionsஐ காப்பி பேஸ்ட் பண்ணிடலாம் . கொங்கனாவின் நேர்த்தியான நடிப்பு, ஷபானாவின் பாதிரப்படைப்பு,  ஒரு மிக மெல்லிய கதைக்களம் -இதெல்லாம் சேர்ந்து,  இந்த படத்தை என்னால் மறக்கவே முடியாம பண்ணிடுத்து . எதிர்பார்க்காம படம் முடியும்போது நமக்கே ஒரு வித அதிர்ச்சி கொடுக்கறது. என்ன இது? எப்படி சாத்தியம்?ன்னு நம்ம அப்படியே ஷாக் ஆறது நிஜம். இந்த மாதிரி படங்களை நிச்சியம் வரவேற்கணும்.. 15 park avenue - 'A -Class' Address.

Paranormal Activity


நம்ம ஊரு புலிவருது கதை மாதிரி பேய் வருது பேய் வருதுன்னு சொல்லிச்சொல்லியே ஒரு படம் சூப்பர் ஹிட் ஆயிடுத்து. பைசா செலவில்லாம எப்படி Block Buster எடுக்கறதுன்னு இந்த டைரக்டர் கிட்ட எல்லாரும் tuition எடுத்துக்கணும். ஒரே ஒரு Handy Cam, ஒரு வீடு, ரெண்டு நடிகர்கள் - இவங்களை வெச்சுண்டு ஒரு Horror  படம் எடுத்துருக்காங்க. அந்த Horrifying factor  என்னமோ அவ்ளோ scope இல்லை தான். ஆனாலும் படம் முடியற வரைக்கும் அது என்ன, ஏன் இந்த மாதிரி நடந்துக்குதுங்கற கேள்விக்கெல்லாம் நம்மூர் பாணில ஒரு மசாலா பிளாஷ்பாக்ல சொல்லாம அம்போன்னு அந்தரத்துல விட்டுட்டாங்க பின்னணி இசை இல்லாம,கிராபிக்ஸ் பிதற்றல்களும் இல்லாம, மேக்கப் பயங்கரங்களும் இல்லாம, ஒரு பேய்ப்படத்தை தையிரியமா புதிய கோணத்துல சொன்னதுக்கு இயக்குனருக்கு ஒரு ஸ்பெஷல் பூங்கொத்து. ஒரு stageல கடுப்பாகி நான் கிச்சனுக்கு போயிட்டேன். இவர் கூப்பிடும்போது  மட்டும் இடை இடையே பாத்துண்டு இருந்தேன்.சத்தமே இல்லாத இந்தப்படத்துல அந்த 'அது' குடுக்கற சத்தங்கள் தான் கொஞ்சம் வயித்துல புளியையைக்கரைச்சது. நாங்க இந்தப்படம் பாக்கும் நேரத்துல தான் மாடி வீட்டுல சோபாவை நகர்த்தணுமா? உலுக்கி விழுந்தோம் (ரெண்டுபேருமே) கிளைமாக்ஸ் ல 'அது' போனதுக்கப்பறம் இந்தப்பொண்ணு எழுந்துக்க முயற்சி பண்ணும்போது கரெக்டா எங்க வீட்டு landlineல ஒரு போன் கால் வந்து, நான் பயத்துல அலறி அடிச்சுண்டு போயி எடுத்தேன். அவங்களுக்கு போன் பண்ண்றதுக்கு வேற நேரமே கிடைக்கலையா?கஷ்டம் கஷ்டம்.


Yes Man.


ஜனரஞ்சக நாயகன் ஜிம் காரியின் தீவிர ரசிகையானஅடியாள், இந்த படத்தை E View(movie on demand)ல காசு கட்டி பார்க்க இஷ்டமில்லாததால், Torrent ல டவுன்லோட் பண்ணி பார்த்தாள். ஹீ ஹீ.. பரவால்ல, Bandwidth fullஆ occupy பண்ணின்டாலும், it was worth downloading. சமீபமா விவாகரத்தான,எப்போவுமே எதுக்கும் No சொல்ற, வாழ்கையே வெறுத்து போயி, நண்பர்களை ஓரங்கட்டி, தன பிளாட்டுல தனியா உக்காந்து DVD பாக்கற ஒரு வங்கி ஊழியர்  ஜிம். யாரோ ஒரு நண்பன் சொன்னதைக்கேட்டு ஒரு செமினார் attend பண்ணறான். வாழ்கை எப்பெல்லாம் ஒரு opportunity வழங்குதோ, அப்பெல்லாம் நீ 'Yes'தான் சொல்லனும்னு இந்த Self Imporvement seminarல சொல்ல, தேவையோ தேவை இல்லையோ Yes சொல்றான் ஒவ்வொண்ணுக்கும் அவன் Yes  சொல்லிண்டே வர, அவன் வாழ்கையே வண்ணமயமாக மாறுது.மனசுக்கு பிடிக்காம கூட Yes  சொல்ல வேண்டி இருக்கே,. இது எங்கே போய் முடியபோகுதுன்னு நமக்கே ஒரு கவலை வருது. எப்பையும்போல வித விதமான முக கொணஷ்டைகள், வாயை 360 ௦ டிகிரி கோணத்துலேயும் சுழற்றி டையலாக் பேசும் ஜிம்மை  இந்தப்படத்துலேயும் காணலாம் .மொத்ததுல.எல்லார்கிட்டேயும் ஒரு positive impact create  பண்ணறதுக்காக எடுக்கப்பட்ட படம் ஒரு நிமிஷம் மனசு Yes சொல்ல நினைக்கும்போது வாய் No சொல்ல கூடாதுன்னு புரியவைக்கிற படம். வாழ்க தங்கதலைவர் ஜிம்.

Thursday, December 24, 2009

Taxi Taxi

Taxi Taxiஎன்னோட விசேஷ ஜாதக மகிமையைப் பத்தி போன பதிவுல சொல்லி இருந்தேன். அது எங்கே போனாலும் தன பெருமையைபத்தி எனக்கு ஞாபகப்படுத்திடும். நாங்க இருக்கறது சென்னை ஆற்காடு ரோடு மாதிரி அபுதாபியிலுள்ள ஒரு பிரதான சாலை. ஆமா இங்கே இருக்கறதே ஒரு 9  சாலைகள் தான். எல்லாமே intersecting at right angles. சிட்டி architecture  அப்படி. இதுல நாங்க பாஸ்போர்ட் ரோடு ல இருக்கோம். நான் எப்போ தனியா வெளீல போனாலும் எனக்கு வயத்தகலக்கிடும். ஏன்னா, போகும்போதும் சரி, வரும்போதும் சரி, டாக்ஸி கிடைக்காது. இவர் கொண்டுவிட்டு கூட்டிண்டு வந்தா ஈன்னு சிரிச்ச மூஞ்சியோட இருக்கும் நான், தனிச்சு விடப்படா, ஒரே ஙொய் ஙொய் தான். இன்னிக்கி நேத்திக்கி இல்லே, ஒரு 3 வர்ஷமா இதே கதை தான்.  துபாயை விட அபுதாபியிலே டாக்ஸி சீப். சரி ஒத்துக்கறேன். பட் டாக்ஸி கெடைச்சா தானே சீப்? கிடைக்காத டாக்ஸி சீப்பா இருந்தா எனக்கென்ன- இல்லாட்டி எனக்கென்ன? Does it make any difference.?


நிற்க. என்னடா இவ்ளோ ஹை வோல்டேஜ்ல புலம்பறாளேன்னு நினைக்காதீங்க. நேத்திக்கி நடந்த ஒரு world class நிகழ்ச்சிய வெச்சு தான் இந்த போஸ்டே எழுதறேன்.

இங்கே வந்த புதுசுல நான் தனியா வெளீல போய் பண்ணின சாஹசத்துல என் வீட்டுக்காரர், நொந்துட்டார். ப்ரஹஸ்பதி மாதிரி எங்கியாவது போயி மாட்டிண்டு, டாக்ஸி கிடைக்கலைன்னா, இப்போவே வந்து பிக்கப் பண்ணுங்கோன்னு போன் பண்ணி உயிரை வாங்குவேன். சரிம்மா வர்றேன்ன்னு சொன்னா,  அவன் பிழைச்சார். இல்லேம்மா, இப்போ வர முடியாது, மீட்டிங்ல இருக்கேன்னு எல்லாம் சொன்னா, சாயந்தரம், ருத்திர தாண்டவம் தான்.

இந்த மாதிரி ஒரு வாட்டி, ரெண்டு வாட்டி இல்லே, பல வாட்டி மாட்டிண்டு இருக்கேன். சில சமயம் அவர் official pressures புரிஞ்சுண்டு இருக்கேன். பலசமயம் சண்டை போட்ருக்கேன். பலப்பல சமயம்,  உர்ருன்னு மூஞ்சிய தூச்கிவெச்சுண்டு நடராஜா சர்வீஸ்ல ஆறு கிலோமீட்டேர் எல்லாம் நடந்து , சொங்கி மாதிரி வீடு வந்து சேர்ந்திருக்கேன்.

விசாகா (என்னோட தோழி) முன்னாடி எங்க வீட்டுக்கு கொஞ்சம் , சமீபமாத்தான் இருந்தா. ஒரு அரைமணி நேரம் நடை. கூப்டான்னா, நடந்தே போய்டுவேன். எதுக்கு அனாவச்யமா டாக்ஸி கோசம் நின்னுண்டு பொழுதை கடத்தணும்? எப்படியும் டாக்ஸி கிடைக்காது. நின்னு நின்னு Stress தான் ஜாஸ்தியாகும்னு நடந்தே போய்டுவேன்.

இப்போ அவ வீடு சலாம் Streetக்கு மாத்திட்டா, நெனச்சப்போ போகமுடியாது. ஏன்னா, அங்கே என்னமோ fly over வருதாம்(அபுதாபியிலுமா fly over தொல்லை, ஆமாம் பின்னே, ஜாதக விஷேஷமாச்சே, இத்தனை நாள் கிண்டி கத்திப்பாரா flyoverன்னு சொல்லி கழுத்தறுத்தாங்க, இப்போ சலாம் ஸ்ட்ரீட் flyover. நடத்துங்க நடத்துங்க) பாதசாரிகளுக்கு ஒரு சௌகரியமும் கிடையாது. எல்லா இடத்துலேயும் தட்டி போட்டு மறைச்சு வெச்சுருக்காங்க(பின்னே, கண் பட்டரும் இல்லே?) அதுனால அவ, என்னை, தன் வீட்டுக்கு கூப்பிடும் போதெல்லாம் ஏதாவது சாக்கு சொல்லி தப்பிசுண்டு இருந்தேன். இப்போ நேத்திக்கி அவ husband பர்த்டே. எதாச்சும் gift வாங்கணும், நீ வந்தே ஆகணும் அனந்யான்னு ஒரே தொந்தரவு. எனக்கு வேற வழி தெரியலை. பிள்ளையாருக்கு ஒரு ரூபா முடிஞ்சு வெச்சுட்டு வீட்டை விட்டு புறப்பட்டேன். நமக்காவது taxiயாவதுன்னு பில்டிங் வாசல்ல இருக்கற Taxi Drop off point ல போயி நின்னது தான் தாமதம். சர்ர்ன்னு ஒரு கிரே டாக்ஸி வந்து கிரீச்சிட்டு நின்னது.(இங்கே ரெண்டு விதமான டாக்ஸி இருக்கு, பழைய பட்டாணி டாக்ஸி, புதிய கிரே டாக்ஸி. பழைய பட்டாணி டாக்ஸி விலை கம்மியாவும், பட்டாணிகளோட மொக்கை ஜாஸ்தியாவும் இருக்கும், புதிய கிரே டாக்ஸியில் விலை ஜாஸ்தியா இருந்தாலும் டிரைவர்ஸ் பேசாமல் professional ஆ ஓட்டுவாங்க.முக்கியமான விஷயம்: இந்த ரெண்டு வண்டியிலேயும் மீட்டருக்கு மேல காசு கேக்க மாட்டாங்க). அந்த கிரே டாக்ஸியைப்பார்த்துட்டு  என்னை நானே கிள்ளி பார்த்துண்டேன். அப்படியே புல்லரிச்சு போய்டுத்து. கண்கள்ல வழிஞ்ச ஆனந்தக்கண்ணீரை துடைச்சுண்டு வேகமா ஏறி உக்காந்தேன். டிரைவரிடம் சலாம் வழிய அபுதாபி மால் போகணும்னு சொன்னேன். அவனுக்கு சலாம் எப்டி போறதுன்னு தெரியலையாம். சரி நான் வழி சொல்ல்றேண்டா பேர்வழினு அடுத்த சிக்னல்ல left  எடுன்னேன். அந்த மண்டு, அவசராவசரமா முன்னாடி இருந்த ஒரு diversionல திரும்பி இங்கே தானேனு கேக்கறான்.வந்த கோபத்தை அடக்கிண்டு, சரி, இப்படியும் போகலாம் போன்னேன். எத்திசலாத் தாண்டி செம்ம பல்பு. அங்கே ரோடு closed due to construction work. சரி நீங்க வந்த வழி போங்கனு சொல்லிட்டு விசாகாவை எங்கே பிக்கப் பண்ணறதுன்னு கால் பண்ணி பேசிண்டு இருந்தேன். வந்த வழி  திரும்பினா, ஒரே சிக்னல்ஸ், டிராபிக். சுமார் 8  திராம் டாக்ஸி fare.
எனக்கு கண்ணை கட்டிடுச்சு. நான் இதுவரைக்கும் இங்கே குடுத்த maximum டாக்ஸி சார்ஜ் 6 திராம் தான். அதுக்குமேலே இல்லே. முக்கால்மணிநேரதுக்கு மேல ஆச்சு, டிராபிக் நகர்ராமாதிரி தெரீல.எனக்கோசம் சலாம் ஸ்ட்ரீட் ல வெயிட் பண்ணிண்டு இருந்த விசாகா, மண்டை காஞ்சு போயி, அனன்யா, நான் நேரே மால்க்கு போறேன், என்னாலே குழந்தையை வெச்சுண்டு சமாளிக்க பண்ண முடியலைன்னு சொல்லிட்டு ஈசியா அடுத்த டாக்ஸி பிடிச்சு (!!!) கிளம்பி போய்ட்டா. நான் தான் பேக்கு மாதிரி யு டுர்ன் எடுக்கரதுக்கோசம்  கிளம்பின இடத்துலேயே டாக்ஸில உக்காந்து இருந்தேன். ஒரு வழியா நாஜ்தா சிக்னல் தாண்டி சலாம் சிக்னல்ல மாட்டிண்டப்போ ஒரு மணி நேரம் கடந்தாச்சு. சரி, இந்த சிக்னல் மட்டும் தானே, சீக்கிரம் போய்டலாம்னு நினைச்சு   மனசத்தேத்திண்டேன். அதென்னமோ தெரீல சலாம் சிக்னல்ல ரெண்டு ரெண்டு வண்டியா தான் விடுவான் போல இருக்கு. ரெண்டு கார் போகும், மறுபடியும் சிக்னல் விழும். இப்பிடி தவணை முறையில என் நம்பர் வரதுக்கு இன்னும் ஒரு பன்னெண்டு நிமிஷம் ஆச்சு. ஹப்பாடா, 'இனி எண்டே நம்பர் ன்னு' நிம்மதி பெருமூச்சுவிட்டு, 'I am almost there' ன்னு உல்லு லுக்கு ஒரு டெக்ஸ்ட் விசாகாவுக்கு அனுப்பரதுக்குள்ள 'ட்டாம்' ன்னு ஒரு சத்தம். பயத்துல கத்திட்டேன்.என் டாக்ஸி டிரைவர், முன்னாடி போற வண்டிய கிட்டதெட்ட உரசர அளவுக்கு போயி பிரேக் போட்ருக்கான், பின்னாடி வந்த வண்டி, எங்க வண்டி மேல போகும்னு நெனச்சு accelarator அழுத்த எங்க வண்டிக்காரன் பிரேக் போட, செம்ம டிங்கு. ஆச்சு. Accident. இனி வண்டி புறப்படாது. ஏன்னா, போலீஸ் வந்து கம்ப்ளைன்ட் file  பண்ணி அவன் ரிப்போர்ட் குடுக்கரவரைக்கும் எந்த Garageலேயும் இந்த டாக்ஸியை ரிப்பேர்க்கு எடுதுக்கமாட்டாளாம். சோ எனக்கு புரிஞ்சு போச்சு.ஒரே அதிர்ச்சி பரபரப்புடன் இறங்கி வண்டிச்சத்தம் 15  திராம் (மூக்கால அழுதுண்டே) குடுத்தேன் .

என்ன தான் 15 திராம் taxiக்கு செலவு பண்ணினாலும் According to my grand horoscope,அதெப்படி நான் சௌகர்யமா அதும் கிரே Taxiல போகலாம்? நான் நடந்து தான் போகணும் . பின்னே, நல்ல உச்சி வெயில் வேற.. எதுக்கு மிஸ் பண்ணனுங்றேன்? சொல்லி சொல்லி மாளலை.
ஜாதக மகிமையே மகிமை.. ஜெய் ஜாதகஸ்ய.

Tuesday, December 22, 2009

பஸ் பயணங்கள்

பயணங்கள்


என் ஜாதகப்படி பயணங்கள் எப்போவுமே ஊத்தி மூடிக்கும்.(பயணங்கள் மட்டுமா???) நிச்சியம் ஏதாவது ஒரு கஷ்டப்பட்டுண்டே தான் ஊர் போயிசேர்ற மாதிரி இருக்கும். இது ரொம்ப வருஷமா நடக்கறது.


நான் ஏறும் சிட்டி பஸ்ல, பருவ நிலைக்கு ஏத்த மாதிரி ஏதாவது ஒரு தொந்தரவு துரத்தி துரத்தி வரும். உதாஹரணதுக்கு, பயங்கர வெய்யில்ன்னு வெச்சுக்குவோம். எனக்கு by chance, அதாவது .௦1% ல உக்கார சீட் கிடைச்சுடுச்சுன்னு வெச்சுக்குவோம். என்ன இது, summerல ஜன்னல் மூடி இருக்கேன்னு திறக்க முயற்சி பண்ணுவேன் பாருங்க. அது ஜாம் ஆயி இருக்கும். சரி, இதே scenario,winter la(சென்னைல winter இல்லை இருந்தாலும் மார்கழி மாசம் பஸ்ல போனா குளிர் காத்து மூஞ்சில அடிக்கும்) பாப்போம். இதே சீட் ல போயி உக்காருவேன், பல்லாவரம் தாண்டி ஜில்லுனு காத்து மூஞ்சில அடிக்கும். அச்சிச்சோ  ரொம்ப குளிருதே , மூக்கடைக்கற மாதிரி இருக்கேன்னு நினச்சு, அந்த ஜன்னலை மூட முயற்சி பண்ணினா, அது ,"Sorry Access Denied" ன்னு பல்லிளிக்கும்

முக்காவாசி நின்னுண்டு தான் போக முடியும்.அப்படியே உக்கார இடம் கிடைச்சாலும் , அதுக்கு நின்னுண்டே போலாம்ன்னு தோணும். ஏன்னா அது டயர் மேல இருக்கும்  சீட்.டயர் மேல சீட்டா இருந்தாலும் விண்டோ சீட்ல அந்த மரண வேதனை தெரியாது. ஏன்னா கவனம் முழுசும் வெளீல இருக்கும். பட் இந்த aisle சீட் இருக்கு பாருங்க, அது கொடூரத்துலேயும் கொடூரம். என்னமோ குரோர்பதி ஷோல,அந்த ஏணி சேர்ல பாலன்ஸ் இல்லாம உக்காந்து இருக்கற மாதிரி இருக்கும். அதும் நம்மூர் பஸ்ல போடுற பிரேக்குகள் கேக்கவே வேண்டாம். நிறைய வாட்டி இந்த மாதிரி டயர் சீட் ல உக்காந்துருக்கேன். மொதல்ல கொஞ்சம் சந்தோஷமா இருக்கும், அட நமக்கு கூட சீட் கிடைச்சுடுச்சேன்னு, அப்புறம் கொஞ்சம்கொஞ்சமா மூஞ்சி விளக்கெண்ணை குடிச்ச மாதிரி அஷ்டக்கோணல் ஆயி, வேணாஞ்சாமின்னு விட்ருக்கேன் ஜூட் . நானும் அடிக்கடி யோசிப்பேன், அதெப்படி நமக்கு மட்டும் தான இப்படி ஆறதா இல்லே நம்ம மாதிரி நிறைய விக்டிம்ஸ் இருப்பாங்களான்னு.

ஒரு 10 வருஷம் முன்னாடி இருக்கும், மவுண்ட் ரோடு இந்தியன் ஓவர்சீஸ் பாங்க்ல ஹிந்தி வகுப்புக்கள் எடுத்துண்டிருந்தேன். ஒரு வாட்டி தீபாவளிக்கு சில நாட்களே இருக்கும்போது வகுப்பு முடிச்சுட்டு, தேனாம்பேட்டை stoppingல இறங்கி ஸ்டாண்டர்ட் fireworks கடையில் ஏதோ கொஞ்சம் பட்டாசெல்லாம் வாங்கிண்டு மீண்டும் பஸ்ஸ்டாப்பில் வந்து நின்னப்போ பயங்கர மழை. பட்டாசை மகாராசன் ரெண்டு கவரா போட்டு குடுத்ததால தப்பிச்சேன்.பட்டாசு தப்பிசுட்டாலும் நான் மட்டும் தொப்பலா நனைஞ்சாச்சு. PP1B ல ஏறினா, நல்லவேளை அவ்வளவா கூட்டம் இல்லை. கம்பியைபிடிசுண்டு சௌகர்யமா நின்னுண்டேன்(இதுல என்ன சௌகர்யம்?) டிக்கெட் வாங்கிட்டு பார்த்தா, பின்னங்கழுத்துல தண்ணி வழியற மாதிரி ஒரு பீலிங்கி. ஆமா, அது உச்சி மண்டையில விழுந்து பின்கழுத்துல வழிஞ்சிருக்கு. எனக்கு தான் தெரியல. அடேடே, நாம ஜாதகத்தை மறந்துட்டோமேன்னு நெனைச்சுண்டு, கொஞ்சம் தள்ளிப்போய் நின்னுண்டேன். அங்கேயும் அதே நிலை. இந்த வாட்டி, உச்சி மண்டையில் விழாமல் எப்படியோ தப்பிச்சுட்டேன் . உசிமண்டையிலிருந்து ஒரு 2  சே.மீ தள்ளி விழுந்துண்டு இருந்தது. நர நரன்னு வந்தது. உக்கார இடம் கிடைக்கும்போல இருந்தது.அதீத சாமர்த்தியத்துடன் அந்த இடத்தை கபளீகரம் செஞ்சேன். நல்லவேளை  ஜன்னலோர சீட். பரவால்லியே நம்ம ஜாதகம் கூட சில சமயம் பல்டி அடிக்கறதேன்னு நெனச்சது தான் தாமதம், மீண்டும் தொப் தொப் தொப்... மத்ததெல்லாம் கூட பரவல்ல.. இது full fledged shower தான். அந்த ஜன்னலோரம் shutter வொர்க் பண்ணலை . அதானே பார்த்தேன்.. ஏதோ ஒரு மாதிரி குளிசுண்டே வீட்டுக்கு போய் சேந்தேன் . அப்பிடியாவது அந்த சீட்ல உக்காந்து தான் வரணுமான்னு அம்மா கேட்டப்போ தான் என்னோட அறிவுஜீவித்தனம் புலப்பட்டது.. டன்டன்னா அசடு வழிஞ்சுண்டு, 'ஞ' ன்னு மூஞ்சிய வெச்சுண்டு அம்மாகிட்ட திட்டு வாங்கிண்டேன்.


சரி இதெல்லாம் நடந்து முடிஞ்சு போயிடுத்தே.. அதெல்லாம் அந்த காலம், இப்போ தான் நமக்கு சுக்ர திசையாச்சேன்னு மனசத்தேத்திண்டு, போன vacation  சென்னைல இருந்து மாயவரம் போலாம்ன்னு நாராயணமூர்த்தி travelsல டிக்கெட் புக் பண்ணிண்டோம். HitechVolvoBus, DVD, Dolbyனு என்னெல்லாம் கற்பனை பண்ணிண்டு போனோம் தெரியுமா. வழக்கம்போல, superbus. என் வீட்டுக்காரர் நம்பர் பாத்தேன்,சீட் சூப்பர், என் மாமியார் சீட்டும் சூப்பர். என் சீட் நம்பர் பாத்தேன், வழக்கம்போல aisle சீட். வலது புறம் aisle ,இடது புறம், கைப்பிடி இல்லாமல், அங்க ஹீனமாய். அட்ரா அட்ரா அட்ரா சக்கை..

Friday, December 18, 2009

வாலிப வயசு

வாலிப வயசு

டீவீக்களில், காட்டப்படும் படங்களே தான் மீண்டும் மீண்டும் காட்டுகிறார்கள் என்று இவரிடம் வருத்தம் தெரிவித்துகொண்டு இருந்தேன். அது எப்படின்னு தெரியலை, ஒரு 5-6 DVDயை வெச்சுண்டு indefinite loop ல படங்கள் போடறாங்கன்னு சொன்னேன். "நா, உங்க மேஜர் Stats  (Statistics) தானே?" என்றேன். "ஆமாம், Maths and Statiscs" என்றார். அந்த Permutation & Combination Formula  வருமே,nCr ன்னு அதை சொல்லுங்கோ என்றேன். ஹீ ஹீ, மறந்து போய்டுத்து டீ, என்று வழிந்ததோடு நிறுத்திக்கொண்டு இருக்கலாம். படிப்பு முடிச்சு அஞ்சு வருஷமாசோல்யோ என்றாறே பார்க்கலம். ஆடிபோய்விட்டேன். எது? எப்டி எப்டி? அஞ்சு வர்ஷமா,"ஏய்" என்று Kitchenனிலிருந்து சொர்ணாக்கா மாதிரி கையில் கிடைத்ததை எடுத்துக்கொண்டு ஓடி வருவதற்குள் அய்யா பாத்ரூமில் அடைக்கலம் புகுந்துவிட்டார். டிகிரி முடித்து ஐந்து வருடம் அல்ல, ஒரு ஐம்பது வருடம் இருக்கும். இதே ரேஞ்சில் இவர் விடும் பீலாக்கள் இருக்கிறதே, அப்பப்பா..அதைக்கேட்பதற்கு பதிலாக பேசாமல் விஜயின் சமீப கால படங்கள் பார்க்கலாம். அவ்வளவு  டாப் ராகம்.

உடனே எனக்கு , வைகாசி பொறந்தாச்சு என்ற காவியத்தலைவன் பிரசாந்த் நடித்த படத்தில்,"ஒரு பொக்கை வாய் ப்பாட்டி தன் சுருங்கிய உதட்டில் லிபிச்டிக் பூசி,தலையில் ரிப்பன் கட்டி காதில் தொங்கட்டான் போட்டு ,தாவணி கட்டிக்கொண்டு, ஊஞ்சலில் " ல ல லாலா லா லா ல லா" என்று பாடிக்கொண்டே ஆடுவது தான் பளிச் என்று நினைவுக்கு வந்தது.

அதே மாதிரி இவருக்கு தலையில் Styling Gel போட்டு, முடி எல்லாம் முள்ளம்பன்றி மாதிரி குச்சி குச்சியாக பண்ணி, RMKV புடவையில் இருப்பது போல ஐந்பதாயிரம் வண்ணங்களில் ஹேர் கலர் Stripes/Highlights/Flashes  போட்டு, காதில் கடுக்கண் போட்டு, மூக்கில் வளையம் போட்டு, கழுத்தில் சிவபெருமானின் பாம்பு போல earphone சுத்தி இருக்க, கையில் Ipod, மிகt ightடாக தொப்பை மட்டும் தெரியும் T Shirt & Blue Jean னுடன் இவரை கற்பனை செய்து பார்த்தேன். அது ,இவர், என்னை இம்ப்ரெஸ் பண்ணுவதற்குDanceஆடுவதைவிட மிகவும் காமடியாக இருந்தது.

ஒரு இளஞ்சன் படிச்சு முடிச்சு அம்பது வர்சமானாலும் அஞ்சு வர்சம்னு தான் சொல்லுவான் ஏன்னா இது வாலிப வயசு என்று மெதுவாக பாத்ரூமிலிருந்து குரல் கேட்டது. கஷ்டம் கஷ்டம் கஷ்டம்

நிற்க, இந்த போஸ்ட்டை படித்த பிறகு , யாரேனும் இடக்கு மடக்காக கமெண்ட் எழுதினாலாகட்டும், என்னை எதிர்த்து அவருக்கு support பண்ணி கமெண்ட் எழுதினாலாகட்டும், அது பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இதில் நான் மகேஷை கூறவில்லை,கூறவே இல்லை என்பதையும் கவனத்தில் கொள்க.

Monday, December 14, 2009

Take it easy policy..

1994 இல் வெளிவந்த காதலன் படத்தில் Take it easy  பாட்டு ஒரு பசுமையான பாட்டு.செப்டம்பரில் வெளிவந்ததாக நினைவு. நவராத்திரி தீபாவளி எல்லாம் சென்னையில் அடாது மழை பெய்தாலும் விடாமல் எல்லோராலும் முணுமுணுக்கப்பட்ட பாட்டு.இந்த பாடலின் சிறப்பம்சம் எளிமை & நகைச்சுவை.குரோம்பேட்டை நியூ காலனியில் இருந்த பொது, நவராத்திரி சமயத்தில் ஒரு மாமி வெற்றிலை பாக்கு வாங்கிக்கொள்ள வந்திருந்தார். உடன் வந்த சிறுவனுக்கு ஒரு 3-4 வயது இருக்கும். பாட்டு   பாடினாத்தான் சுண்டல் என்று அம்மா கறாராக கூறிவிட, மழலையில் அக்குழந்தை ஊர்வசி பாட்டு பாடியது இன்னும் எனக்கு நினைவு இருக்கிறது.

சரி, இப்போ ஊர்வசி பாட்டுக்கு என்ன வந்ததுன்னு கேக்கறீங்களா? சொல்றேன் சொல்றேன்.. வெயிட் வெயிட்.

இன்று காலைசிற்றுண்டி சாப்பிடும் பொழுது இவர் இந்த வர்ஷம் லீவ் எல்லாம் ஃப்ரைடே தான் வருது என்று புலம்பினார். ஃப்ரைடே வந்தா என்னவா? அட ஃப்ரைடே தாங்க இங்கெல்லாம் சண்டே மாதிரி weekend. நியூ இயர் ஃப்ரைடே, அப்புறம் ஏதோ முக்கியமான பண்டிகை தினமாம் 25. அதுக்கு வியாழன் லீவா இருக்கும்ன்னு இவர் முன்னமே சொல்லி இருந்தார். இப்போ அப்டி எல்லாம் ஒரு லீவும் இல்லைன்னு Gulf News ல Bulb news போட்டுட்டா. நோ லீவ்  ன்னு மூஞ்சிய ரொம்ப சோகமா வெச்சுண்டு இருந்தார். நான் அவரை cheer up பண்ண்றதுக்கு 'பண்டிகை தேதி சண்டே யில் வந்தா டேக் இட் ஈசி பாலிசி' ன்னுபாடினேன். இதுக்கப்புறம் விஷயத்தை மறந்தாலும் பாட்டை மறக்க முடியல. So, சமயலறையில் பாடிண்டு இருந்தேன். தமிழ் நாட்டுல இருக்குற 99% பேரைப்போல, எனக்கும் தான் அந்த full பாட்டு அத்துபடியாசே. பாடிண்டு இருந்தேன். கூடவே மனது 1994க்கு போயிட்டது.


திடீர்னு நினைவுகள் ல இருந்து ஒரு பிரேக். பெட்ரூமில் இருந்து இவர் பாடும் சத்தம். அட, இவருக்கு கூட லிரிக்ஸ் தெரியுமான்னு எனக்கு ஒரே ஆச்சர்யம். Yes, I heard it right. இவர் தான் பாடுறார். நான் என்னை Mute  பண்ணிட்டு காதைத்தீட்டிண்டு கூர்ந்து கவனிச்சேன்.
இவருக்கு தமிழில் ச சொல்ல வராது. ச வுக்கு பதிலா ஷ தான் சொல்லுவார்.     உ:  கசப்பு = கஷப்பு,  ஊசி = ஊஷி

இவர் பாடுறார், "கட்டின பொண்டாட்டி அஷடா இருந்தா டேக் இட் ஈசி பாலிசி."

நர நர.. கண்களில் கொலைவெறியுடன், ருத்திரகாளியாக, அடிவயிற்றிலிருந்து ஹா........ன்? என்று நான் அலற, என் பதம் பணிந்து, என் பொண்டாட்டி இல்லேம்மா, அந்த இன்னொருத்தன் பொண்டாட்டி அஷடாக்கும் என்று சரண் அடைந்தார்.

Hmm... thats better!

இப்போ பாடுறேன் எல்லாரும் கேட்டுக்கோங்க, "கட்டின புருஷன் அம்மாஞ்சியா இருந்தா டேக் இட் ஈசி பாலிசி....ஊர்வசி ஊர்வசி "

பழிக்கு பழி புளிக்கு புளி நானும் ரௌடியாக்குங்கேட்டேளா?

Sunday, December 13, 2009

மழையே மழையே....டிசம்பரில் மழையா? அதுவும் அபுதாபியிலா என்று எல்லோரும் வாயை பிளக்கிறார்கள். வழக்கமாக இங்கு டிசம்பரில் நல்ல குளிர் காற்று ஆரம்பித்து விடும். குளிர்கால உடைகள் ஏதுமின்றி வெளியில் செல்ல முடியாது. குளிர் என்றால் பனிக்கட்டி எல்லாம் இல்லாவிட்டாலும் கத்தி போல் கிழிக்கும் குளிர் காற்று படு வேகமாக அடித்துக்கொண்டு இருக்கும். முடி, உதடுகள், தோல் எல்லாம் வறண்டு போய் விடும். மிக greasy  கிரீம் தேய்த்துக்கொண்டு வெளியில் போனால் கூட விளம்பரங்களில் காட்டுவது போல நகத்தால் கோடு போட்டால், அழுத்தமாக விழும்! ஹூம்.. அப்படி இருந்த அபுதாபியில் இப்போது மழை. மழை எல்லாம் இங்கு ஜனவரியில் (பொங்கல் போது) தான் வரும். இந்த வருடம் குளிர் சுத்தமாக இல்லை, மழையும் சீக்கிரமே வந்து விட்டதால் குளிர்காலம் கோவிந்தா தான் போலிருக்கிறது


எனக்கு இந்த ஊரில் மிகவும் பிடித்த கால நிலை குளிர் காலம் தான். முற்றிலும் புதிய வானிலை என்பதாலோ என்னமோ. ஸ்ரீமத் பாகவதம் இங்கு நடத்திய திரு ஜகத்சாட்சி பிரபு அவர்கள், பிருந்தாவனத்தின் தன்மையைப்பற்றி கூறும்போது,"நான் தமிழகத்தை சேர்ந்தவன், எங்களுக்கு மூன்றே மூன்று பருவ காலம் தான் தெரியும். கோடைக்காலம், தீவிர கோடைக்காலம், அதை விட அதி தீவிரகோடைக்காலம் என்று கூற, அரங்கம் சிரிப்பால் அதிர்ந்தது.

சுமார் 16 ஆண்டுகள் சென்னை வாசத்திற்கு பிறகு பெங்களூருவில் முதன் முறையாக,அக்டோபர் மாதம் அதிகாலை வெளியில் நடக்க போன போது குளிர் அனுபவித்த ஆனந்தம் இருக்கிறதே, அது ரிசஷனில் வேலைகிடைப்பதைக்காட்டிலும் அதிக ஆனந்தம். ஆகா இதனை நன்றாக இருக்குமா இந்த குளிர் காலம் என்று உணர்ந்தேன்.

அதன் பிறகு இங்கு துபாய் வந்த பொழுது தான் குளிர் காலம் என்பதன் பொருள் அறிந்தேன். அக்டோபரில் ஆரம்பிக்கும் பருவநிலை மாற்றம், அப்படியே மார்ச் வரை ஜில்லென்று இருக்கும். அதுவும் டிசம்பரில் கடுங்குளிர் இருக்கும். பாத்திரம் தேய்க்க அழுகையாக வரும், பாத்ரூம் போவதற்கு பதில் வேறென்ன என்ன options இருக்கிறது,  முடிந்தால் கதீட்டர் போட்டுகொள்ளலாம் என்றெல்லாம் தோன்றும், fur செருப்பு போட்டுக்கொண்டு தான் நடமாடவேண்டும், எந்நேரமும் fleece கம்பிளி மற்றும் தலையணையே சரணம் என்றிருப்போம்.நன்றாக நினைவிருக்கிறது, 2006 டிசம்பரில் நாங்கள் கார் பயணத்தின் பொது கார் ஹீட்டர் போட்டுக்கொண்டோம். எனக்கு அதெல்லாம் உலக அதிசியம்.சுவிட்சை இந்தப்பக்கம் திருப்பினால் AC, அந்த பக்கம் திருப்பினால் ஹீட்டராமே? அடியாத்தீ "என்று நினைத்துக்கொண்டேன். என்னே டெக்னாலஜி.

சாதாரணமாக வெட்ட வெளியில் புல்தரையில் மல்லாந்து படுத்துகிடக்கும் பட்டாணிகள் கூட, கப்சிப்பென்று,வாலைச்சுருட்டிக்கொண்டு அவரவர்  வீட்டில் முடங்கிவிடுவார்கள். யாரும் வெளியில் சுற்ற மாட்டார்கள், அநேகமாக எல்லோரும் டிவி முன்னாடி உட்கார்ந்து விடுவார்கள்.பாகிஸ்தானி ரொட்டி வியாபாரம் கனஜோராக நடக்கும்.

என்னமோ தெரியவில்லை இரண்டு வருடமாக குளிரே இல்லை. அக்டோபரில் எல்லாம் வெயில் சுட்டு தள்ளியது. நவம்பரில் காற்று வீசியது என்றாலும் அது வழக்கமான குளிர் காற்று அல்ல. டிசம்பரில் குளிர் இருக்கும் என்று எதிர்பார்த்த எனக்கு பல்பு.எனக்கு பல்பு கிடைப்பது தான் விஜய் படம் flop ஆவது போல சர்வ சாதாரணமாயிற்றே..so whats new?டிசம்பர் எட்டு தேதி வரை காற்றே இல்லை அப்புறம் தானே குளிர், ஆனால் திடீரென்று வியாழன் முதல் வெயில் காணமல் போய்விட்டது. வியாழன் இரவு மழை பெய்தது. வெள்ளியன்று காலை இதமான வானிலையில், காலை சிற்றுண்டி முடித்து நாங்கள் வாராந்திர ஷாப்பிங் சென்றிருந்தோம். எப்படியும் கலீதியா சென்றதால் திரும்பும்போது இந்த வானிலையால் ஈர்க்கப்பட்டு கார்னிஷ் சென்று விட்டோம். சுமார் மூன்று மணி நேரம், அங்கேயே உட்கார்ந்து விட்டோம். ஏதோ பெயிண்டிங் போல இருந்தது இந்த ஊர். முதன் முதலாக இந்த ஊரை எனக்கு பிடித்திருந்தது. பச்சை பசேல் என்ற புல்வெளி, அழகிய பூக்கள், சமுத்திரம், இதெல்லாம் பார்த்து மனது ரொம்ப மகிழ்ச்சியாகி விட்டது.
என் UAE  வாழ்க்கையில் அந்த நாள் தான் மிகசிறப்பான நாள் என்பேன்.என் கணவரும் அவசரப்படுத்தாமல் அமைதியாக இந்த இனிமையான வானிலையை ரசித்துக்கொண்டு இருந்தார் . வழக்கம் போல நான் தான் மித மிஞ்சிய சந்தோஷத்தில் உளறிக்கொட்டிகொண்டு இருந்தேன்.நாள் முழுதும் இளிச்ச வாயுடன் இருந்தேன்


அன்று இரவே நல்ல மழை. நேற்று முழுவதும் மழையோ மழை. நள்ளிரவு ஹோ என்று இரைச்சல்.ஜன்னல் வழி பார்த்தபோது கனமழை. பேசாமல் பெல்மெட் கதவை திறந்துவைத்துக்கொண்டு, மழையை ரசித்துக்கொண்டே, சூடான இஞ்சி டீயுடன் எதாவது கல்கியின் கதை எடுத்து படிக்கலாம் என்றிருக்கிறேன். காலையிலிருந்து சுமார் 8 முறை பால்கனியில் போய்  நின்று வேடிக்கை பார்த்தாகி விட்டது.. தீரவே இல்லை. பார்கிங்கில் நிறுத்திவைக்கப்பட்ட கார்கள் எல்லாம் சுத்தமாக தலைக்கு குளித்து இருக்கின்றன. சாலைகளும் அவ்வாறே.பதினைந்து மாடி இருபது மாடிக்கட்டிடம் எல்லாம் நனைந்து வெளிப்புரக்கண்ணாடி எல்லாம் பளிச் என்று சிரிக்கிறது.சில மக்கு பிலிப்பினோக்கள் மட்டும், ரெயின்கோட்டு அணிந்து செல்கிறார்கள். மழை ஒரு நாளோ ரெண்டு நாளோ அதை ரசிக்காமல் ரெயின்கோட்டு அணிவதனால் மக்கு என்றே நான் சொல்லுவேன்.  லேசான மஞ்சு வேறு. இன்னும் மேகங்கள் இருப்பதால் நிச்சயம் இன்னும் மழை இருக்கும்போல தோன்றுகிறது.நகரமே மந்தமாக இருக்கிறது.இதுவே சென்னையாக இருந்தால் கிண்டியில் பாலாஜி மருத்துவமனை அருகே எப்படி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கும் என்று நினைத்துக்கொண்டேன். இங்கு சாலைகளில் அங்கங்கு வைக்கப்பட்டு இருக்கும் Drainage slotசில் தண்ணீர் தேங்காமல் வடிந்துவிட்டன.

வைரமுத்து சொல்வது போல..

மழை கவிதை கொண்டு வரலாம் யாரும் கதவடைக்க வேண்டாம்.
ஒரு கருப்பு கொடிகாட்டி யாரும் குடைபிடிக்க வேண்டாம் 
இது தேவதையின் பரிசு யாரும் திரும்பிக்கொள்ள வேண்டாம் நெடுஞ்சாலைதனில் நனைய ஒருவர் சம்மதமும் வேண்டாம் 
அந்த மேகம் சுரக்கும் பாலில் ஏன் நனைய மறுக்கிறாய் 
நீ வாழ வந்த வாழ்வில் ஒரு பகுதி இழக்கிறாய்

எப்போதும், மழை வரும்போது இது போன்ற நல்ல பாடல்களை எனக்கு நினைவூட்டிவிட்டு போகும்.

நா மழை வந்தா உங்களுக்கு என்ன தோணும்? என்று கண்களில் ஆர்வம் பொங்க சும்மாங்காச்சுக்கும் இவரிடம் கேட்டு வைத்தேன்.அப்போ தானே பதிலுக்கு இவர் என்னிடம் கேட்பார் இவரை முக்கால் மணி நேரம் அறுக்கலாம்  என்று திட்டம் தீட்டி இருந்தேன்.தீர்க்கமாக யோசித்து விட்டு சொன்னார்,"கார் டயர் செக் செய்ய வேண்டும்". நான் : !@#$@#$@#$@!#$@!#$@#$@#$.

இந்த போஸ்டில் இருந்து எல்லாருக்கும் என்ன தெரியறது?என்னை மாதிரி ரொம்ப வெட்டியா இருந்தா இப்படி எல்லாம் தான் எழுத தோணும்.

Wednesday, December 9, 2009

மனம் ஒரு குரங்கு 11

மனம் ஒரு குரங்கு

இந்த வார விடுமுறை மிக சிறப்பாக கழிந்தது.ஷார்ஜாவிலிருந்து கோபால் அண்ணா வந்திருந்தார்.கோபால் அண்ணா மிக சுவையான மனிதர். நிதானமானவர். அமைதியானவர். யோசித்து செயல்படும் திறம் படைத்தவர். தேவை இல்லாமல் யாரைப்பற்றியும் பேச மாட்டதவர். எல்லாவற்றுக்கும் மேலே எளிமையானவர். அவர் வருகிறார் என்றவுடன் எனக்கு ஒரே குதூகலம் தான். அவருக்கு பிடித்த சமையல் பண்ணி வைத்துக்கொண்டு தயாராக இருந்தோம். பர்துபாயில் அய்யப்ப பூஜையாம் அதை முடித்துக்கொண்டு மாலை 6  மணிக்கு வந்தார். சூடான பஜ்ஜி காபியுடன் வரவேற்றோம். மாலை ஆறு மணிக்கு மேல் கார்னிஷ் சென்றோம். புல்வெளியில் உட்கார்ந்து பேசினோம்.நல்ல நேரத்தில் வாண வேடிக்கை ஆரம்பித்தது. Night Photography பற்றி அண்ணா  நிறைய விஷயங்கள் பேசினார். அவருடைய கேமரா லென்ஸ் மிகவும் powerful. Stand எடுத்துக்கொண்டு வராதது எவ்வளவு பெரிய தப்பு என்று அடிக்கடி புலம்பினார்.

கோபால் அண்ணாவிற்கு போட்டோகிராபியைத்தவிர விவசாயம் பிடிக்கும். இதான் சாக்கு என்று அவருக்கு facebookகில் id  ஓபன் பண்ண வைத்து Farmville introduce பண்ணினேன். அண்ணாவிற்கு பயங்கர ஆச்சர்யம். சிறு குழந்தை போல உட்கார்ந்து விளையாட ஆரம்பித்து விட்டார்.  இப்போ எல்லாம் என் அண்டை விவசாயி ஆக இருக்கிறார்.தினமும் எனக்கு பரிசுகள் அனுப்பி, என் வயலை பார்வையிட்டு, உரம் தெளித்துவிட்டு போகிறார். கோபால் அண்ணாவின் மோட்டோ -Slow and Steady wins the race.  நிதானமாக எதையும் செய்வார். அவர் செய்யும் வேலை Perfection உடன் இருக்கும் . அவரை பழக்குவதற்காக என் வயலில் அறுவடை செய்யுமாறு கூறினேன். முறையாக எல்லாம் முடித்த பின்னர் prompt ஆக, "அநன்யா , Harvest எல்லாம் பண்ணியாச்சு கேட்டியா" என்று ரிப்போர்டினார். :)

அநேகமாக சன் சானலை ஸ்கிப் / boycott செய்து விடுவேன் என்று நினைக்கிறேன். எப்போவாவது காட்டப்படும் வடிவேலு கௌண்டமணி காமடி காட்சிகளுக்காக மட்டும் நான் சன் பார்த்துக்கொண்டு இருந்தேன். இப்போதெல்லாம் தரம் மகா மட்டமாக போய் விட்டது. ஐந்தாறு மூன்றம் தர நடிகைகளை கொண்டு வந்து ஜட்ஜாக உட்கார வைத்து அவர்களையே அரை குறையாக குத்து நடனம் ஆட விடுகிறார்கள். ஆபாசம் தாங்க முடியவில்லை. வீட்டு வரவேற்பறையில் ஆபாசம் தலைவிரி கோலமாக ஆடுகிறது என்றே சொல்ல வேண்டும்.சென்ற வாரம் இடம் பெற்ற டீலா நோ டீலா நிகழ்ச்சியில் ஒரு பெண்," என் புருஷன் கிட்ட சாந்த்ரோ கார் இருக்கு,  (கிடைத்த gapபில் பீத்தல் வேறு)ஆனா அவருக்கு அதை விட நல்ல கார் வாங்கி குடுக்கணும் அதுனால தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன்" என்று கூறி, ஓவென்று ஒப்பாரி வைத்தாள்.அவனவன் அடுத்த வேளை சோற்றுக்கு சிங்கி அடித்துகொண்டு இருக்கும்போது,இருப்பதைக்காட்டிலும் பெரிய கார் வாங்க இருப்பதைக்காட்டிலும் பெரிய கார் வேண்டும் என்று எக்குதப்பாக உளறிக்கொட்டி அழும் பெண்களை என்னவென்று சொல்லுவது? இந்த அபத்தத்தை பப்ளிசிட்டி கோசம் program promoவில் போடும் சன் தொலைகாட்சி தான் உருப்படுமா? முன்பெல்லாம் ரியாலிடி ஷோக்களில் இதே போல வேண்டுமென்றே பங்கு கொள்வோரை சண்டை போடும்படி கிளப்பி விட்டு(எல்லாமே சும்மா தான்!!) அதை படம் பிடித்து பப்ளிசிட்டி தேடிக்கொண்டார்கள், இப்போது இந்த மாதிரி பேத்தல்களில் இறங்கி இருக்கிறார்கள்.ஒரு மூன்றாண்டுகளுக்கு முன்னர் அரட்டை அரங்கத்தில் எந்த அளவு உண்மை இருக்கிறது என்று ஒரு விளக்கமான மெயில் பார்த்திருக்கிறேன்.அது கூட எல்லாம் செட்டப்பாம்.பங்கு கொள்வோரை எல்லாம், என்ன பேச வேண்டும், எப்படி பேசவேண்டும் என்று கூறி விடுவார்களாம். எல்லாம் முன்னரே எழுதப்பட்ட Script டாம். : அந்த மெயில் கிடைத்தால் விரைவில் பதிவு போடுகிறேன். இனி தப்பி தவறி சன் பக்கம் தலை வைத்து படுக்க கூடாது என்று முடிவு செய்து விட்டேன்.

சென்ற வாரம் இங்கே அபுதாபியில் இஸ்க்கான் நடத்திய ஸ்ரீமத் பாகவத சப்தாகம் நிகழ்ச்சியில் பங்கு கொண்டோம். கண்ணனின் லீலைகளை பல விதமாய் சொன்னார்கள். தொடர்ந்து எல்லா நாளும் செல்ல முடியாவிட்டாலும் அங்கு பார்த்து, கேட்ட ஒரு சில கதைகளின் நிகழ்வுகள் மனதில் எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது.கண்ணனின் லீலைகள் தான் எவ்வளவு மதுரம்.திரு ஜகத்சாக்ஷி பிரபுவின் வர்ணனைகளும் அவர் விவரிக்கும் விதமும் நாம் ஏதோ அந்த கதைகள் நடக்கும் இடத்துக்கே சென்று நேரில் பார்ப்பது போன்ற ஒரு பிரமை. Feedback Sesison இல் நான் இதை தெரிவித்தேன் "Though we are physically present in Abudhabi, we are magically transformed to a world of Krisha and we could feel Krishna is all our senses" என்றேன்.  அவர்கள் கூறுவது போல அது ஒரு Nectarian experience. அடுத்த ரெண்டு நாட்களில் வருண் பாப்பவையே ஸ்ரீகிருஷ்ண ஸ்வரூபமாக நினைத்து மகிழ்ந்தேன்.இஸ்க்கானில் நான் பார்த்த சில சுவையான விஷயங்கள் இதோ

 • ஒவ்வொருவரும் மற்றவரை மரியாதையுடன் அழைக்கிறார்கள். ஆண்களை பிரபு என்றும் பெண்களை மாதாஜி என்றும் பரஸ்பரம் அழைத்துக்கொள்கிறார்கள்
 • நம்மை மாதிரி ஹலோ, ஹாய் என்றெல்லாம் வாழ்த்துவதில்லை. ஹரே கிருஷ்ணா என்று தான் கூறி வரவேற்பார்கள்.
 • எல்லோரும் அழகாக மூக்கிலிருந்து ஆரம்பித்து சந்தனத்தில் நாமம் இட்டுக்கொள்கிறார்கள்.
 • ஒவ்வொரு பக்தர் வீட்டிலும் ஒரு மண்டபம் அமைத்து அதில் கண்ணனை படத்திலோ அல்லது சிலை வடிவமாகவோ வைத்து வழிபடுகிறார்கள்.
 • உணவில் பூண்டு வெங்காயம் சேர்ப்பதில்லை.அவ்வாறு சேர்ப்பதால் சாத்வீக வாழ்வில் ஈடுபட முடியாது என்று கூறுகிறார்கள்
 • அப்படி தயாரிக்கப்பட்ட உணவை கண்ணனுக்கு சமர்ப்பிக்காமல் இவர்கள் உண்பதில்லை. சமர்ப்பிக்கும்போது மண்டபத்தில் திரைசீலை போட்டு மூடி வைத்து விட்டு சிறிது நேரம் கழித்தே எடுத்து பரிமாறுகிறார்கள்
 • அந்த உணவின் சுவையை நாம் எழுத்து மூலம் விளக்குவது கடினம், உண்டு தான் உணர வேண்டும்
 • எல்லோரும் எந்நேரமும் ஜபமாலையுடன் இருக்கிறார்கள். 
 • என்ன நிகழ்சியாக இருந்தாலும் நம்மை அழைத்து கூறுவார்கள், பாலோ அப் பண்ணி வருமாறு அன்புடன் அழைப்பார்கள். 
 • எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் பிரசாதம் அருந்தி விட்டு தான் போக வேண்டும் என்று வற்புறுத்துவார்கள்
 • அவர்கள் பாடும் பஜனைப்பாடல்கள் எல்லாம் தேவகானம் தான். இனிமையான பாடல்களை மெல்லிய ஆட்டத்துடன் இவர்கள் பாடும்போது, மெய்மறந்து போய்விடுவோம். 
ஹரே கிருஷ்ணா.

"இந்த நவரத்தின தைலம் தேய்ச்சுக்காதீங்கோ,தேய்ச்சுக்காதீங்கோன்னு சொன்னா கேக்கறேளா? ,  தலைகாணி எல்லாம் சிவப்பா சாயம் ஒட்டறது" என்றேன் இவரிடம். இவர் சொல்கிறார், "என் தலைகாணியாவது பரவாயில்லை சிவப்பா சாயம் தான் இருக்கு, உன் தலைகாணி பார், ஒரே களிமண் " என்று கூறிவிட்டு ஓடிவிட்டார்..இன்னும் scale லுடன் துரத்திக்கொண்டு இருக்கிறேன் பிடிபட மாட்டேங்கிறார்

Friday, December 4, 2009

UAE Day 2nd Dec 2009

It was UAE Day yesterday and a national holiday all over UAE. The special event of the day was about to be held in Corniche in Abudhabi where they had declared lot of fireworks. People fled from all the other emirates to abudhabi and the city was overwhelmed with cars, taxis and other transports. We spent the day watching boring programs on Tv and towards nightfall my husband grew restless. He started getting calls from his colleagues enquiring about the fireworks show in Corniche and he kept talking all about it almost the whole evening. We had an early dinner and thanks to our all in all azhaguraja for fixing the balcony clothes drying rope up so high, we had enough space to stand in our balcony. We had never tried doing this before. We stood in our balcony waiting to see the fireworks.We were amazed to see that our almost deserted passport road is now full of cars and God knows what all types of transportation available in UAE. Upon a close observation we found all the cars were marching towards corniche. Muroor Road was jam packed with cars and we can imagine the crowd in the other parts of the city. Last year we went out on UAE day and caught up in traffic for long. This year we decided to stay indoors. As we watched from the balcony too many horns were being blowed by the drivers which was very very abnormal. Here in the UAE as against the Indian driving ethics, they hardly use the horn. The drivers are very generous that they let the pedestrians pass first instead of honking or rushing through. It was a strange phenomenon to hear too many horns in the jam packed traffic. Kids were sitting on the car tops with waving flags in their hands. some of them sing loudly, some shout at the top of their voices, some try to intimidate strangers and expatriates, some drive crazily on the roads. On the roads they display happiness and spirit of  freedom. 
The sky was clear and here and there we saw helicopters shunting. We discussed about fireworks in India during diwali and recalled many funny moments with fireworks. We talked at length about oosipattasu, lakshmi vedi, kuruvi vedi, bijili vedi, atombomb, saravedi etc.  He was talking about the magnanimous fireworks in their temple utsavams in Kerala during Summer.. He mentioned that trichur pooram festival and kavussery festivals were well known for fire works. They used to burst crackers in a wide play ground where it would cause no problems to the residents. 


According to the local news paper, UAE has aimed to make UAE Day a Big Day and to attract tourists, they will be hosting this fireworks show in a larger base. From next year onwards, this will attract more visitors and it will be a much awaited event it seems. I prepared coffee as we waited for the fireworks to start. We sipped coffee in the balcony and comfortably put two chairs in our little balcony to witness this. More than waiting for the fireworks, it was the very first time we had an exciting chat sitting in our balcony. After a while, the fireworks started and it was a feast to the eyes. Different types of artwork in the sky with lights. first it was a floral pattern, then the concentric circles, then spirals, the cycle spokes and what not. the sky was filled with colored lights. phew.. absolutely breathtaking! After 45 mins of sheer feast to the eyes, when it all ended, We saw a Smiley firework denoting the conclusion. It was a memorable  evening with the fireworks. I will try to get some nice pictures next year. 


Wednesday, December 2, 2009

நிலநடுக்கம்

விடியற்காலை உறக்கம். மிக ஆனந்தமாக உறங்கிக்கொண்டு இருந்தேன். வழக்கமாக தூக்கமின்மை காரணமாக விடி காலையில் தான் தூங்குவேன். டிசம்பர் மாதம் வேறு. ஜன்னல் வழி ஜிலு ஜிலு காற்று, கல்கியின் சரித்திர நாவல்களை காப்பி அடித்துக்கொண்டு இருந்தது. ச்சே , காத்து கூட ஒரிஜினலா இருக்க மாட்டேங்குதே என்று தூங்கிக்கொண்டு இருந்தேன். முடிந்த வரையில் யோசித்து பார்த்துவிட்டேன், கனவு நினைவுக்கு வரமாட்டேனென்கிறது.திடீரென்று ஒரு படு பயங்கர அதிர்வு.கட்டிலுடன் சேர்ந்து நானும் அதிர்ந்தேன்
விழி திறக்காவிட்டாலும், மூளை விழித்துக்கொண்டது. ஹய்யய்யோ நிலநடுக்கம் போல இருக்கு, நம்ம பில்டிங் ஏற்கனவே பழைய பில்டிங், நாம வேற பதினாலாவது மாடியில் இருக்கிறோம், இறங்கி ஓட வேண்டுமே, இல்லாட்டா இந்த பில்டிங்கோட கோவிந்தா தான் என்றெல்லாம் கணக்கு போட்டேன். சுனாமி முடிந்த பிறகு, ஏதோ ஒரு சானலில் நில நடுக்கம் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்று ஒரு டாக்குமென்ட்ரீ காட்டினார்கள். அது எவ்வளவு யோசித்தாலும் நினைவுக்கு வரவில்லை அதிர்ச்சியிலும் பயத்திலும் எழுந்தேன். இவர் அமைதியா..................க விழித்துக்கொண்டு இருந்தார்"என்னன்னா???" என்று ஒரு அலறு அலறினேன். இவர் மெதுவாக எழுந்து," ஒண்ணுமில்லை டீ, காது குடைஞ்சேன்" என்றார்..

கஷ்டம் கஷ்டம் கஷ்டம்!!!!!

Monday, November 30, 2009

பாசஞ்சர்


ஈத் விடுமுறையில் நாங்கள் உருப்படியாக பார்த்த ரெண்டு மூன்று படங்களில் இது தான் முதன்மையானது


ரொம்ப நாளைக்கப்புறம் ச்சே , இதுவல்லவோ படம் என்று தோன்றியதோடு மட்டும் நில்லாமல், இது போன்ற படங்கள் நம் தமிழ்கூறும் நல்லுலகில் வரும் நன்னாள் எந்நாளோ என்று ஏங்க  ஆரம்பித்துவிட்டேன்.


இந்த கலிகாலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நாம் மறந்து வரும் சில ethics, சில Cultural valuesஐ எல்லாம் தூசு தட்டி எடுத்து நமக்கு நினைவூட்டி இருக்கிறார்கள். இதற்கு முன்னர் இவ்வளவு விறுவிறுப்புடன் நாங்கள் பார்த்த படம் 'A Wednesday ' . ('உன்னைப்போல் ஒருவன்' அல்ல)அனால் இந்த படம் சற்றே வித்தியாசமானது. மனதைதொடும்படியான ஒரு  முடிவுரையுடன் படம் நிறைவடைகிறது. இந்த படத்தின் one liner - 'சத்யமேவ ஜெயதே'. வாய்மையே வெல்லும்.

ஆபீசில் ஓவர்டைம் செய்யும் ஸ்ரீனிவாசன் பாசஞ்சர் ரயிலில் தான் இறங்க வேண்டிய stationநில் தூங்கிவிட சில நிமிடங்கள் மட்டுமே  ஏட்டிக்கி போட்டியாக பேசி பரிச்ச்சயப்படும் திலீப்பை காப்பாற்ற எடுக்கும் முயற்சிகளின் படமாக்கமே  பாசஞ்சர் . இந்த படத்தின் கதையைப்பற்றி வேறெதுவும் நான் கூற விரும்பவில்லை. அவ்வளவு சுவாரஸ்யமான படம் இது.


தோற்றத்துக்கும் கதாபாத்திரத்துக்கும் நல்ல பொருத்தம் ஸ்ரீனிவாசன். அதுதான் மலையாள சினிமாவின் சிறப்பம்சம். கிழடு தட்டி போயிருந்தாலும் டயிட்டாக  பான்ட்  ஷர்ட் அணிந்து கொண்டு திங்கு திங்கு என்று ஹீரோயின் கூட குதிக்க மாட்டார்கள். கழுத்தில் ஸ்கார்ப்  கட்டிக்கொண்டு பஞ்ச் டயலாக் எல்லாம் பேச மாட்டார்கள். Introduction பேத்தல் பாடல் இருக்காது. படத்தின் நடுவில் சம்பந்தமே இல்லாமல் எங்கிருந்தோ வந்து ஒரு (அ)கௌரவ நடிகையின் கேவலமான மூன்றாம்தர குத்து நடனம் ஏதும் இருக்காது. கதை மட்டுமே கதாநாயகன் என்று இன்றளவும் நம்பி வரும் ஒரு தொழிற்சாலை என்றால் அது மாலிவுட் தான் என்று அடித்து கூறுவேன். சில technical  சமாச்சாரங்களை புகுத்தி இருக்கிறார்கள்.அங்கங்கு சில தொய்வுகள் இருந்தாலும் அவை மன்னிக்கப்படலாம்.

மொத்தத்தில் மிகவும் நிறைவான ஒரு படம். படத்தில் வேகத்தடை செய்யும் பாடல்களே இல்லை. எனக்கு மம்தா : மோகன்தாசை (மாயூகதிற்கு அடுத்து) மிகவும் பிடித்த படம் இது தான். திலீப்பிற்கு அவ்வளவாக scope இல்லாவிட்டாலும், வருகின்ற காட்சிகளில் சிறப்பான நடிப்பு.அடர்த்தியான புருவங்களுடன் நெடுமுடி வேணு டாக்ஸி டிரைவராக  வருகிறார். அவர்களுக்கெல்லாம் நடிப்பு சொல்லியா தரவேண்டும்.. கிங்ஆச்சே.. கலக்கி இருக்கிறார்

மொத்தத்தில் பாசஞ்சர், ஒரு விறுவிறுப்பான, உண்மையான இந்தியப்பயணி. வெல்க வாய்மை!!!

Friday, November 27, 2009

Mr & Mrs Iyer


Mr & Mrs Iyer


2002இல் வெளிவந்து பல வருடங்களாக நான் பார்க்கவேண்டும் என்று நினைத்திருந்த படத்தை இன்று தான் பார்க்க முடிந்தது. அபர்ணா சென் என்ற புகழ்பெற்ற பெண் இயக்குனரின் படம் என்று titles போடும் வரை நான் அறிந்திருக்கவில்லை. அது என்னமோ இந்த கொண்கனா சென் ஷர்மாவின் மேல் அப்படி ஒரு அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு. நிச்சியம் படம் நன்றாக தான் இருக்கும் என்று எடுத்துவிட்டேன். பற்றாக்குறைக்கு நம்ம ஹீரோ ராகுல் போஸ் இறுக்கமான முகத்திலும் அனாயாசமாக வெளிப்படும் பாவங்கள்.ஒரு மொபைல் keypad டின் பட்டனுக்குள் எழுதிவிடக்கூடிய சிறிய கதை தான். (பின்னே, இதை எப்படி எல்லாமா சொல்லிட்டாங்க நான் என் ஸ்டைல் ல சொன்னேன் அவ்ளோ தான்.)


நிற்க இந்தப்படத்தின் வசனங்கள் எல்லாம் ஆங்கிலத்தில் தான். இந்திய நாட்டின் வெவ்வேறு மொழிகளின் கலவை என்பதால் இதை ஒரு மொழியில் எடுக்க வேண்டாம், எல்லோரும் ஆங்கிலத்திலேயே பேசட்டும் அனால் அவரவர் Accent  போட்டு தான் பேச வேண்டும் என்பது அபர்ணா வின் ஸ்ட்ரிக்ட் ஆர்டராம்,கொங்கனாவின் தமிழ் 'ழ' உச்சரிப்பு பிரமாதம் போங்கள் , அம்மணி தமிழில் நடித்தால், dubbing தேவை இருக்காது என்று நம்புவோமாகஇனக்கலவரம் காரணமாக தன்னுடன் பயணிக்கும் சக பயணியை கணவராக அறிமுகப்படுத்துகிறார் கொங்கனா. பெற்றோர் அறிமுகப்படுத்திய நண்பரின் நண்பர் என்பதைத்தவிர வேறெதுவும் தெரியாத நிலையில், இவர்,  தன் கணவர் என்று பிறருக்கு தோன்றும்படியாக பேசுகிறார் கொங்கனா சென். பஸ்ஸில் மற்ற பயணியரின் மனதை பளிச் என்று கண்ணாடி போல காட்டுகிறார் இயக்குனர்
அபர்ணா சென். முதிய இஸ்லாமிய தம்பதியினர், மன நலம் குன்றிய பையனும் அவன் தாயும், முசுடு பாட்டி, குதூகலிக்கும் இளைஞர் பட்டாளம் என்று பஸ்ஸில் பயணிக்கும் மனிதர்களின் பாத்திரப்படைப்பு அபாரம்.

போகும் வழியில்   ஏதோ ஒரு இடத்தில் வெடிக்கும் இனக்கலவரத்தில் நாமும் கலவரம்   அடையும்படியாக நிகழ்வுகள். அங்கே   இங்கே   சுற்றித்திரிந்து   நாய்   படாத   பாடு  பட்டு  ஒரு  வழியாக  குழந்தையுடன்  கொங்கனா கல்கத்தா வந்தடையும்போது நமக்கும் நிம்மதி கிடைக்கிறது அமோகமான  ஒளிப்பதிவு, ஆர்ப்பாட்டமில்லாத கதை சொல்லும் திறன் இவை எல்லாம் இந்த படத்தின் தூண்கள்.மிகசிறப்பாக பயணிக்கும் கதையானது, ஏனோ தடம் புரண்டு, குழந்தையுடன் இருக்கும் சென் இந்த அறிமுகமற்ற அந்நியனிடம் காதலில் விழுகிறார் போன்ற பேத்தல்களினால் என்னால் முழு மனதுடன் இந்தப்படத்தை மெச்ச முடியவில்லை. என்ன தான் ஆயிரம் இருந்தாலும் நம்மூர்ப்பெண்களின் Psychology எப்படினா, தன் கணவன் தன் குழந்தை பத்தி மட்டும் தான், வள வள என்று பேசுவார்கள். ஒரு மனிதாபிமானத்துடன் காப்பாற்றிய ஒருவனிடம் எதற்கு காதல்வயப்பட வேண்டும் என்ற தெளிவு இல்லை. அப்படியே இருந்தாலும் அது நம் கலாச்சாரத்தின் படி ஏற்புடையதாக இல்லை. ஒரு வயது குழந்தையுடன் ஒரு தாய், கணவன் ஹௌரா ஜங்கஷனில் காத்துக்கொண்டு இருக்கும்போது, மடத்தனமாக காதல் வசனம் பேசுவதெல்லாம்... சாரி..  Rejected Aparna . இந்த ஒரு முக்கியமான cultural jerk   ஜீரணிக்க முடியவில்லை. இந்த மாதிரி எல்லாம் நிஜ வாழ்க்கையில் நடக்குமாக இருக்கும், ஆனால் சினிமா என்ற சக்திவாய்ந்த ஊடகத்தை, இவ்வளவு தவறான ஒரு கலாச்சார சறுக்கை பற்றி சொல்லி வீணடித்திருக்க வேண்டாம். அந்த Love Track ஐ கத்தரிதிருந்தால் படம் நிறைவாக இருக்கும்.இதைப்பற்றி இவ்வளவு நேரம் பேசவேண்டாம் என்று தான் நினைத்திருந்தேன். ஆனால், படத்தின் இறுதியில் நல்ல விஷயங்கள் எல்லாம் அடிபட்டு போய், இந்த சொதப்பல் மட்டும் பூதாகாரமாக தெரிகிறது.

Wednesday, November 25, 2009

ஸ்வர்க்கம் என்பது நமக்கு ....சுத்தமுள்ள வீடு தான்


"விடியாமூஞ்சி வந்துருச்சு டும் டும் டும்
வீட்டை வெள்ளை அடிச்சிருச்சு டும் டும் டும்"


என்னமோ ஜுரம் போல இருந்ததால் இவரை ஆபீஸ் கு அனுப்பிவிட்டு பேசமால் லாப்டாப்பை  மூடி வைத்து விட்டு சூர்யா வை on பண்ணிக்கொண்டு படுத்துக்கொண்டேன். காலை சுமார் 8.30 ௦ மணிக்கு டிங் தாங் என்று கல்லின் பெல் அடித்தது. காலங்கார்த்தால  நம்ம ஹீரோ விடியாமூஞ்சி கையில் பெயிண்ட்பிரஷ் ஷுடன் நின்று கொண்டு இருந்தார். அவரை பார்த்த ஆச்சர்யத்தில் முகம் மலர சிரித்துவிட்டேன். பின்னே ஏழெட்டு மாதமாக துரத்தி துரத்தி follow up பண்ணிண்டு இருக்கோம், எப்டி தண்ணி காட்டினாங்க தெரியுமா?அவரை அன்புடன் வரவேற்றேன்.

சுவர்களை எல்லாம் பார்த்துவிட்டு போனவர், ஒரு நேஷனல் பெயிண்ட்ஸ் பத்து லிட்டர் பக்கெட்டுடன் வந்தார். ஆஆஹா நன்னா செழும்பா பெயிண்ட் எடுத்துண்டு வந்து இருக்கார், நாம தான் அவசரப்பட்டு இவரை விடியாமூஞ்சின்னு சொல்லிட்டோம்ன்னு நெனச்சது தான் தாமதம், அந்த பக்கெட்டில் எனக்கு என்னமோ சந்தேகமா இருந்தது. உள்ளே பெயிண்ட் இருக்கும்ன்னு நம்... பி  அண்ணாந்து பார்த்தபொழுது அதில் (வருண் பாபா மூச்சா போனமாதிரி ) சுமார் 100 ml ௦ பெயிண்ட் மட்டுமே இருப்பது தெரிந்தது. மவராசன் இதுவாவது எடுத்துண்டு வந்தாரே சந்தோசம்.


ரோலர் பிரஷ்,  பெயிண்ட் பிரஷ், ஒரு நீளமான குச்சி சஹிதம் வேலையை ஆரம்பித்து விட்டார். அவருடைய முகத்தில் ஏதேனும் ஒரு expression  எப்படி வரவழைப்பது என்று யோசித்தேன். பேச்சு கொடுத்து பார்க்கலாம் என்று முடிவு பண்ணினேன். நீங்க எப்படி எல்லா வேலையும் பண்ணறீங்க என்றேன் ஹிந்தியில். ஒரு புன்சிரிப்பு உதிர்ந்தது.. உலக அதிசியம். எதனை வர்ஷமா இருக்கீங்க என்றேன். பன்னிரண்டு வரஷமாச்சு இங்கே வந்து என்றார். அதன் பிறகு நான் பேசுவதை விட்டு விட்டேன்.டீ எடுதுக்கரீங்களா என்றேன். வேண்டாம் என்று மறுக்காததால் டீ தயாரித்து நானும் குடித்து அவருக்கும் கொடுத்தேன்.


நிற்க. இங்கேயெல்லாம் நம் வீட்டில் எதாவது ரிப்பேர் செய்ய வருவோருக்கு டீ காப்பி எல்லாம் கொடுத்தால் அவர்கள் நம்மை வேற்று கிரக மனிதர்களை போல பார்ப்பார்கள். அதில் இந்தியர்களாக இருப்பின் குறிப்பாக தென்னிந்தியர்களாக இருப்பின் கண்களில் நீர் மல்க காபி குடித்து விட்டு சிறப்பாக வேலை செய்து முடித்து விட்டு செல்வார்கள். வேற்று நாட்டவராயின் ஆச்சர்யப்பட்டு போவார்கள். இதெல்லாம் cultural barriers. அவ்ளோ தான். நமக்கு அதெல்லாம் ஒத்து வராது. துபாயில் ஒரு முறை Pest Control  பண்ண வந்த தென்னிந்தியகர்கள் எனது உப்புமாவையும் காப்பியையும் மெச்சி பாராட்டு பத்திரம் வழங்கி விட்டு அரைகுறையாக Pest Control  பண்ணிவிட்டு சென்றார்கள் என்பதை இங்கே நான் குறிப்பிட விரும்பவில்லை. அதிலும்(கரப்பான்) பூச்சி கொல்லி போட்டார்களா, இல்லே பூச்சி(இனப்)பெருக்க மருந்து தெளித்தார்களா தெரியவில்லை, சை.. மகா அருவெறுப்பு. துபாய் வாழ்கை வெறுக்க அதுவும் ஒரு காரணமாக இருந்தது.விடியா மூஞ்சி பாவம் வயதானவர். கஷ்டமான வேலை . நாம் நினைக்கும் அளவிற்கு ரோலர் பிரஷ் ஐ கையாள்வது சுலபமல்ல . தோள்களும் கைகளும் வலி பின்னி எடுத்து விடும் போல தோன்றியது. எந்த ஊர் என்று மட்டும் கேட்டு வைத்தேன் . பங்களாதேஷ் என்றார் . முதலில் ஹால் சீலிங் அடித்தார் . வீடே Centralized AC யினால்  கருப்பு கருப்பாக பூஞ்சைக்காளான் வந்து திட்டுதிட்டாக இருந்தது. அந்த கருப்பு திட்டுகள் மேல உப்பு காயிதம் தேய்ப்பார் என்று எதிர்பார்த்தேன். ம்ஹூம். ஏனோ தானோ என்று கடனுக்கு அதன் மேலேயே பூசி விட்டார்.

சுவற்றில் அங்கங்கு பேப்பர் டேப்ஸ்ஒட்டி போஸ்டர்ஸ் போட்டு இருக்கிறோம்.அந்த போஸ்டர்ஸ் ஐ எடுத்து விட்டேன். ஆனால் மீதமிருந்த அந்த சிறிய டேப் துண்டுக்களை முழுதும் எடுக்காமல் அதன் மேலேயே பெயிண்ட் அடித்துக்கொண்டு இருந்தார் . அதை எடுத்துவிடுங்கள் என்று சொன்னேன் . பெட்ரூம் அடித்து விட்டு வந்தார் . ஹாலில் ஏற்கனவே அடித்த பெயிண்ட் அதற்குள் காய்ந்து மீண்டும் கருந்திட்டுகள் தென்பட்டன . இங்கே அடியுங்கள் அங்கே அடியுங்கள் என்று ஏவிக்கொண்டே இருந்தேன். துர்வாசர் போல எதாவது சாபம் கொடுத்துவிட்டு இனி எக்காலமும் உன் வீட்டு மராம்மத்து வேலைகளுக்கு தலை சாய்க்க மாட்டேன் என்று போய்விடப்போகிறார் என்று பயந்துகொண்டே மெதுவாக சிரித்துகொண்டே(!!) தான் சொன்னேன். மீண்டும் அதே expression இல்லாத மூஞ்சியுடன் திட்டுக்களின் மேல் அந்த காய்ந்து போன பிரஷை மேலும் கீழும் சுழற்றி விட்டு perfection  கோசம் வீடெல்லாம் சுற்றித்திரிந்து பார்த்துவிட்டு தனது வேலை செவ்வனே செய்து முடித்த திருப்தியுடன் கிளம்பினார். சர்பத் குடிக்கிறீர்களா என்று கேட்டு வைத்தேன். வேண்டாம் என்று மறுத்து விட்டார். பால்கனி யில் துணி காயபோடும் மரப்பட்டையை எடுத்து ஆறு மாதங்கள் ஆகின்றன. போகும் முன் இதை சரி செய்து விடுங்கள் என்றேன்.'நகி' என்று போய்விட்டார். இனி எப்போ வருவாரோஎன்ன தான் முகத்தில் சிரிப்பில்லாவிட்டாலும் அவரால் தான் இன்று வீடு பளிச் என்று இருக்கிறது. ஏனோ இனி அவரை விடியா மூஞ்சி என்று அழைக்க மனம் வரவில்லை.அவருக்கு வேறு ஒரு நல்ல பெயர் வைக்க வேண்டும்.யாராவது சொல்லுங்களேன்...

Sunday, November 22, 2009

துபாய் அல் கூசில் அய்யப்ப இலட்சார்ச்சனைதுபாய் அல் கூசில் அய்யப்ப இலட்சார்ச்சனை

இன்று விடிகாலை ஐந்து மணிக்கே எழுந்து நாங்கள் துபாயில் அய்யப்ப லட்சார்ச்சனைக்கு புறப்பட்டு விட்டோம். சுமார் ஆறு மணிநேரம், அர்ச்சனையும் வேதங்களும் ஓதி, பாடல்கள் பாடி முடித்தார்கள். மிக சிறப்பாக இருந்தது. ஐயப்பனின் ஆயிரம் நாமங்கள் கூறி அர்ச்சனை செய்தார்கள். கூட்டம் அலைமோதியது. சிற்றுண்டி, தேநீர், பிஸ்கட்டுகள், மதிய உணவு எல்லாம் ஏற்பாடு பண்ணி இருந்தார்கள். இவை எல்லாவற்றிற்கும் அடித்தளமாக பணியாற்றியது திரு பிரகாஷ் என்ற தனி மனிதரும் அவர் ஆரம்பித்த 'for B' என்ற அமைப்பு தான் காரணம் என்று தெரியவருகிறது. அவரும் அவருடைய குழுவும் மிகவும் பாடுபட்டு உழைத்திருக்கிறார்கள் என்பது நன்றாகவே தெரிந்தது.அவர்கள் உழைப்பும் கூட்டு முயற்சியும் நிகழ்ச்சி முழுவதும் பளிச்சிட்டது.

ஜெ எஸ் எஸ் என்ற பள்ளியில் அல் கூஸ் துபாயில் இது நடந்தேறியது. வழக்கம் போல பட்டு பாவாடை சரசரக்கும் பெண் குழந்தைகள்,குட்டியாக அவரவர் சைஸ் இல் ஜிப்பா வேஷ்டி அணிந்த சிறுவர்கள், ஒரு புறம் பட்டு புடவை அணிந்த பெருமை மிகு பெண்கள் என்றால் மறுபுறம், தன நகைகளைக்காட்டி சதா சர்வகாலமும் பீற்றிக்கொள்ளும் பெண்கள். எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஐயப்பனையே தியானம் செய்யும் வயோதிகர்கள், எப்போதும் அலுவலகத்தை மட்டும் பற்றி பேசும் ஆண்களும் இதில் அடக்கம்.


ஐயப்பனின் ஆயிரம் நாமங்களை நூறு பேர் சொல்லுவது தான் இலட்சார்ச்சனை - இந்த நிகழ்ச்சி சுமார் பத்து மணிக்கு ஆரம்பம் ஆகியது. காலை ஐந்து மணிக்கு எழுந்த எனக்கு கண்ணை சுழற்றி விட்டது. நல்லவேளை என்னிடம் அந்த நாமங்களின் லிஸ்ட் இருந்தது. பிழைத்தேன். என்னை போலவே நான்கு மணிக்கெல்லாம் எழுந்து வந்திருந்த மாமி பாவம் நாமங்கள் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே. தூக்கம் சொக்கி உறங்கி விட்டிருந்தார். அவர் கஷ்டகாலம் என் உறவினர் ஒருவர் பார்த்து அதை எனக்கு சுட்டி காட்டி, எனக்கு பயங்கர distraction. நிறைய பெண்கள் இது போல தான். கடவுளின் நாமத்தை சொல்லும்போது கூட இங்கே அங்கே மனதை அலைபாய விட்டு விடுகிறார்கள். ஒரு இரண்டு நிமிடம் நிம்மதியாக கடவுளை நினைத்திருப்பார்களா என்று எனக்கு சந்தேகம் தான். நான் உட்கார்ந்திருந்த இடத்தில் நிறைய பெண்கள் சள சள என்று பேசிக்கொண்டே இருந்தார்கள். இதில் ஒரு மாமி," என்ன அனன்யா பேசவே மாட்டேங்கற என்று என்னிடம் மிகவும் குறைப்பட்டு கொண்டு இருந்தார்". எல்லாம் என் நேரம் தான்.நறநற
இங்கே ஒரு interesting  டான்ஸ் வாத்தியார் இருக்கிறார். இருந்தா என்ன னு கேக்கறீங்களா? இவர் நன்கு டான்ஸ் ஆடத்தெரிந்த ஒரு வைதீக குருக்கள். நமக்கு அவர்கள் குழு சொல்லும் மந்திரங்கள், பாடல்கள், வேற்றுமொழி சொற்கள் எல்லாம் புரியவில்லை என்றால்  இந்த டான்ஸ் வாத்தியாரை பார்த்தல் மட்டும் போதுமானது. அவருடைய கைகளும், கண்களும், தோள்களும், பற்பல அபிநயங்கள் பிடித்து காட்டி நமக்கு புரியாதவற்றை எல்லாம் உள்ளங்கை நெல்லிக்கனி போல தெளிவாக சொல்லி புரிய வைத்து விடும்.(பார்க்க படம்.)உடனுக்குடன் படங்கள் தந்துதவிய கோபால் அண்ணாவிற்கு நன்றிகள் பல.


பலரையும் பார்த்து பேசுவதால் சரவணா ஸ்டோர்ஸ் மாதிரி எதை எடுப்பது எதை விடுப்பது range இல் நமக்கு யாரிடம் பேசினோம் பேசவில்லை என்று நினைவு இருக்காது. இவருக்கு ஊரெல்லாம் நண்பர்கள். அதிலும் இவர் சொந்த ஊரில் இருப்பவர்கள் எல்லோரும் இங்கே தான் இருக்கிறார்களோ என்று நினைக்கும் அளவிற்கு இவரைதெரிந்தவர்கள் இவரை நோக்கிஅலை மோதுவார்கள். நான்கு வருடங்கள் ஆனாலும் இன்னும் எனக்கு பலரை அறிமுகப்படுத்திக்கொண்டே இருக்கிறார். பாதி பேர் முகம் மறந்து விடும், மீதி நினைவிருக்கும், ஆனால் பாருங்கள், யார் இவர்?எங்கே பார்த்தோம் போன்ற இன்ன பிற கேள்விகளுக்கிடையில் சிக்கிக்கொண்டு, அவர் பெயர் தெரியாமல் விழிப்பேன். கஷ்டகாலம். அவர்கள் மட்டும் " என்னை தெரியறதா அனன்யா? சுதா ஆத்து பகவத்சேவைக்கு வந்திருந்தேனே "என்று தெளிவாக குழப்புவார்கள் மன்னிக்கவும் விளக்குவார்கள். நானும் பாலசந்தர் பட ஹீரோயின் போல "ஆங், என்று உரக்க கூறிவிட்டு  மண்டையை முதலில் மேலும் கீழும் ஆட்டிவிட்டு பிறகு பக்கவாட்டில் ஆட்டுவேன் இந்த முறை கொஞ்சம் பரவாயில்லை. ஓரளவிற்கு மனிதர்களை அடையாளம் தெரிந்து கொண்டிருந்தேன்

மேலார்கோடு வைத்தி அண்ணா மிகவும் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு பாகவதாள்.அவர் பாட ஆரம்பித்தால் அரங்கமே பக்தி பரவசத்தில் மூழ்குமாம். இரண்டாண்டுகளுக்கு முன்னர் தான். யாருமே எதிர்பாராத ஒரு தருணத்தில் காலமாகிவிட்டார். அவருடைய இரண்டு சிறிய பெண்களும் அசாதாரணமாக பாடி அசத்தி விட்டனர்.சிறிய குழந்தைகள் தான் என்றாலும் குரலில் நல்ல வளம். பெரிய பெண்ணின் மைக் வாய் அருகில் வைக்கப்பட்டதால் அவள் குரல் தான் அரங்கமெங்கும் எதிரொலித்தது. சற்றே ஒலி குறைந்தாலும் சிறிய பெண்ணின் குரலில் அந்த supporting vocals  எல்லாம் ஹப்பப்பா... amazing!

இந்த குழந்தைகள் பாடிக்கொண்டிருக்கும்போது ஐயப்பனின் கதையை நினைவுபடுத்தும் ஒரு பாடல் பாடப்பட்டது. பக்கத்திலேயே அரங்கில் ஒரு ஸ்கிட் ஏற்பாடு பண்ணி இருந்தார்கள். ஐயப்பனாக நடித்த சிறுவன் ஜம்மென்று புலிவேடமிட்ட ஒரு ஆளின் மேல் ஏறி  வந்து அசத்தினான்.ஐயப்பனை போல உட்கார முடியாமல் அந்த குழந்தையை ஒரு chair ரில் அமர வைத்திருந்தார்கள். ரொம்ப நேரம் போராடிய பிறகு நல்லவேளையாக பாடல் முடிவு பெற்றது. குழந்தை நாற்காலியிலிருந்து ஒரு வழியாக இறங்கினான் 

பூஜை அரங்கில் உள்ளே நுழைந்ததும் சுற்றி பார்த்தபொழுது, ஓவியங்கள் வைக்கப்பட்டு இருந்தன. ஒவ்வொரு ஓவியத்தின் கீழே ஓவியம் வரைந்தவர்களின் பெயர் போட்டு இருந்தார்கள். எங்கள் உறவுக்கார சிறுமி கிருபா ஜெயராம் கூட மிகச்சிறப்பாக சில படைப்புகளை வரைந்திருந்தாள். பார்ப்பதற்கே எனக்கு மிகப்பெருமையாக  இருந்தது. வித்யா பிரசாத் என்ற பெண் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, தான் வரைந்த ஓவியங்களைப்போய் பார்க்குமாறு கூறினார். வரிசையாக வித விதமான ஓவியங்களை பார்த்த பொழுது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்களே அது போல அப்பெண்ணின் திறமை பளிச்சிட்டது. மகேஷ் போன்ற கலைஞர்களை நினைத்துக்கொண்டே எல்லா வகையான ஓவியங்களை பார்த்து ரசித்தேன். கலம்காரி, மதுபனி,ராஜஸ்தானி, தங்க(THANGKA), தாந்த்றிக்(Tantric), தஞ்சாவூர்,பதிக்,வரளி, இன்னும் என்னென்னமோ விதமான படங்களை வரைந்து தள்ளி இருக்கிறார் .இவர் துபாய் ஜுமேயிராவில் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் வரைகலை  கற்றுத்தருகிராராம். துபாயில் வசிக்கும் வரைகலை ஆர்வலர்கள் vidyaprasad2@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளவும். இவரைப்போன்ற கலைஞர்களை என் வலைதளத்தில் அறிமுகப்படுத்துவது எனக்கு பெருமை தான்.

Thursday, November 19, 2009

மனம் ஒரு குரங்கு 10

In my last post it was an english heading with a tamil post. I thought this time, let me try a new post with tamil heading and an english post. he he.. No that is not it. The Tamil  transliteration feature of google stopped working for the past one week. I have been trying day in and day out. But it wont work. Hence I decided to write an english post for Manam oru Kurangu part 10.


Drama Dilemma:Earlier this week, I have been constantly listening  to SVe Shekhar's comedy dramas. I was surprised that for some strange reasons, I seem to be sleeping only upon switching on these dramas. I mean some conversation puts me to sleep. I had been accustomed to these things long back when I was a kid. Mother bought Mahabharathatthil Mangaaatha in 1989 when TV was little dominant. I mean there were only 2 channels and Channel two always broadcasted documentaries sports etc excepting post 10.00PM dramas, songs and cinema shows. We listened to this Mahabharathatthil Mangaatha with great enthusiasm, ever since then, we both became a fan of SveShekhar. He was quick witted and though his dramas were a garland of jokes, we still enjoyed them a lot. As a next step, we were delighted when Bharani Audios in Chrompet Radhanagar had the video cassettes (VHS Versions)of many of Sve Shekhar's Comedy plays. We managed to watch Aayiram udhai vaangiya aburva sigamani, Adhirshtakkaaran, Kaattula Mazhai etc and rejoiced. Infact we hired the same cassettes over and over again especially when we had guests at home. My Chandru Pinny(Dad's youngest brother) was rolling with laughter upon seeing these dramas.Ever since then, we had been listening to all SVe Shekhar's Dramas. We waited eagerly in 1992 for his release of Periya Thambi which I consider as his best so far. It was a total mockery of foolish tamil movies which were super duper hits then. My sister and I enjoyed listening to this drama numerous times.  So, If he is to offer me or my sister a role to play in his play, we dont need any rehearsals you see.. We are all set for the show because we know all the dialogues bye heart!
Now, coming back to my drama addiction before sleeping, I have to necessarily play a drama as I slip into sleep. deeper and deeper as I sink into my sleep, the conversations get fainter and fainter. Sleep is really getting ecstacic but what happened.. suddenly I wake up only to find some song being played . Oh! the drama is over and I get up for some song. Now I have to turn off that song. Wish that drama couldve been longer...
Strange but true. People normally listen to songs and good music before going to bed. But I am addicted in such a way that I wake up upon the starting of a song... Strange but true.


The Galloping Horse :Mother called ten days ago to say that keeping a Galloping horse would bring good vibes in the house. Though I believe in such vibrations, I find it very hard to convince my husband to buy anything that is artistic in the house. I always felt very conscious when I went to see the other houses in the neighbourhood. We never had any showpiece  at our house. This was an opportunity to convince him and buy a nice horse to decorate our ailing TV Almirah. (this almirah has all the Gods and Goddesses according to the Hindu Mythology). So I set out looking for a galloping horse. To my dismay, wherever I went, it was a big  :-(     NO NO.
I tried in almost all shops far and wide in Abudhabi. They dint have Horses. They had Camels and Elephants  and Monkeys and Birds.. But horses???? Naaaah.. Grrr.... I had to meet a consultant the other day. I returned walking back home due to the non availability of taxis in abudhabi. I found a shop called hyper market in Najda Street. I asked the Philippino sales girl if they have a gallopping horse at their store. She smiled and said Yes. "Turrrrn right and you will find horses there". I did, and what do I see? a huuuuuuge horse gigantically placed on a steel stand. Honestly speaking our little single bedroom apartment cant hold such big statues you know.. he he.. I thanked the girl and left the place quietly.
So I almost gave up the idea of buying a horse. We normally buy all grocery from our nearest supermarket Al falah plaza. We get all glorious Indian vegetables in this store and it is just a few yards away from our building.  So asusual to buy some adhoc veggies we had been to Al Falah Plaza last week. We needed to buy some stationery so had to peep into other segments of the store. There... We were thrilled to see the beautiful white horse galloping . It was not only handy but also very beautiful. We had been looking for this horse all over abudhabi. Phew.! it was so relieving when we instantly bought the horse and decorated it in our almirah. It proudly gallops near our TV. We dont watch TV anymore!


Second CD:I was standing in Capital Videos Passport Road when a man came to the shop. As he was looking at what movie to take, with lot of grief he said, Kandhasami second CD dint work properly. Lot of disturbance. I couldnt stop laughing. I left the place immediately thinking, "CD work aayittaa mattum...."


Vidiyaa Moonji :

There is this  All in All Azhaguraja in our building. He is a Plumber, Carpenter, Electrician, Painter and what not. He is omnipresent in almost all the houses in our building. I do admire his Multi faceted talents, however, I call him 'Vidiyaa Moonji' because whatever we ask for, he would deny it prima facie. He would right away say "NO, IT CANT BE DONE" even if it is as easy as changing a bulb. Moreover we have to follow up with our Nathur(Watchman of the building) numerous times before having this vidiyaamoonji in our place for fixing the various problems that arise from time to time. Recently I have been chasing him to get our apartment whitewashed. Asusual he is not turning up as promised. Even if he comes, I am confident, he would leave one portion of the house without whitewashing due to some disagreement. He would say, "yahaan paint naheen kar sakte". Most important feature of vidiyamoonji is that he wouldnt drop a smile even after getting twice or thrice the cost of his services.


Joke of the Day:


I had been trying to post this article ever since I posted 'Finding Swapna'. I was all excited that I recieved comments immediately after posting that article. I told my husband, Na, I got three comments within 2 hours of posting finding Swapna. He said without waiting for a moment, So they mustve commented asking you not to write such posts again isnt it? Grrr... nara nara...
Related Posts with Thumbnails