Pages

Sunday, December 27, 2009

சினிமாப்பக்கம்சினிமாப்பக்கம்

முன்னாடி எல்லாம் மனம் ஒரு குரங்கு series ல நான் பார்த்த படத்தை பத்தி எழுதிண்டு இருந்தேன். அதுக்கு நண்பர்கள் வட்டத்துல ஏக எதிர்ப்பு. அதுனால தனித்தனியா போஸ்ட் போட ஆரம்பிச்சேன். வளவளன்னு ஒரு படத்தை பத்தி எவ்வளோ தான் எழுதறது. அதுனால இரத்தின சுருக்கமா, நான் பார்த்த  ஒவ்வொரு படத்தை பத்தியும் இப்படி சினிமாப்பக்கம்ன்னு ஒரு headingல எழுதலாம்ன்னு நினைக்கறேன். மகேஷை தவிர வேற யாரு எதிர்த்தாலும் செவி சாய்க்கப்படும்.

Wake up Sid


வேக்கப் சித் என்னமோ ஆஹா ஓகோனு பேசிண்டாங்க. எடுத்து பார்த்தா,பயங்கர பல்பு. ஒரு ரெண்டு மூணு  காட்சிகளைத்தவிர ஒண்ணுமே ரசிக்கும்படியா இல்லே. நொந்து போயிட்டேன். கொங்கனா சென் இத மாதிரி படங்கள்ள நடிக்கறது நிறுத்தணும். முதலில் வந்த முன்னுரைக்காட்சிகளை பார்த்தப்போ 'அடேடே, அவசரப்பட்டு DVD எடுத்துட்டோமோ?, இது பொம்மரில்லு ஹிந்தி ரீமேக்கா இருக்குமோன்னு தோணற மாதிரி அப்படி ஒரு Striking resemblence. நல்லவேளை,தப்பிச்சேன்.. போக போக ட்ராக் மாறி. ஒரு தெளிவில்லாத,இலக்கில்லாத இளைஞனின் கதைய சொல்றாப்புல படம் போகுது. இப்போ நிறைய பேரு இத மாதிரி தானே இருக்காங்க.காலேஜ் போகாத, டென்த் பெயில் ஆன ஹீரோக்கள் எல்லாம் ஏதாவது ஒரு பெரிய எடத்து, posh ஹீரோயினுக்கோசம் டான்ஸ் என்ன பைட்என்ன, அடேங்கப்பா அமர்க்களப்படுமே நம்மூர் படங்கள்.எஸ் வீ சேகர் நாடகத்தில் வர்ற ஒரு டயலாக் தான் நெனவுக்கு வரும்.

கிராம எல்லைச்சாமி: இது வரைக்கும் 7  காதல் சோடி ஆத்தத்தாண்டி ஓடிருக்கு தம்பி.

எஸ் வீ : ஏன்யா, ஆத்ததாண்டி ஓடிட்டா காதல்ல வெற்றியாயிடுமாய்யா? நான் பார்தேன்யா, ஆத்தத்தாண்டி போயி, ரெண்டு பெரும் ஜோடி ஜோடியா பக்கத்துக்கு கிராமத்துல பிச்சை எடுக்கறாங்க..


இந்த மாதிரி சரக்கே இல்லாம காதல்ல விழுந்து, பல்பு வாங்காதீங்க. ஒரு இலக்கு வெச்சுக்கோங்க ன்னு வலியுருத்துற படம்.  என்னமோ காமா சோமான்னுஇருக்கு .மும்பயி மான்சூன், ஆபீஸ்ல இருந்து களைச்சுப்போய் வரும் கொங்கனாவுக்கு , வீட்டை குப்பைத்தொட்டியா வெச்சிருக்கும் சிட், ஆம்லேட் பண்ண (கத்துண்டு!) பண்ணிதறது.. இந்த மாதிரி ஒரு சில காட்சிகள் தான் நான் ரொம்ப ரசிச்சேன். அனுபம்கேர், சுப்ரியா பாடக் வர்ற காட்சிகள்ல எல்லாம் படம் நிமிந்து உக்காருது.மத்தபடி, சொல்லிக்கராப்புல ஒண்ணுமே இல்லே. மன்னிக்கவும். சித் எழுதிருக்கவே இல்லை. or rather, எனக்கு வயசாயிடுத்து , இந்த மாதிரி டுபாகூர் படங்களையெல்லாம் ரசிக்கும் திறன் போய்டுத்து. either one of the two.


Triangle:


என் நண்பன் கனி ஒரு படம் நல்லா இருக்குனு சாமான்யதுல சொல்ல மாட்டான். அப்படி சொல்லிட்டா, அது நிஜமாவே சரக்குள்ள படம்தான்னு எனக்கு திட்ட வட்டமா தெரியும். Triangle  பாரு பாருன்னு சொல்லிண்டே இருந்தான். அந்த கட்டளைய சிரமேற்கொண்டு,பார்த்தோம். அது Horror genreல இருந்தாலும் ஒரு Psychological Thriller. ரொம்ப வித்தியாசமா இருந்தது.பயங்கரமா மனசை என்னமோ தொந்தரவு பண்ணின படம்ன்னு சொல்லலாம். நிறைய புரியலை.நிறைய விவாதிச்சோம். IMDB Discussion boardல போய் படிச்சப்போ கொஞ்சம் வெளங்கிச்சு.ஒரு பெண்ணோட வாழ்கை எப்படி Indefinite Loop  ல மாட்டிக்கறதுன்னு புது விதமா out of the box thinkingல சொல்லி இருக்காரு டைரக்டர் Christopher Smith.நான் என்ன சொல்ல வர்றேன்னா, புரியுதோ புரியலையோ இத மாதிரி ஹாலிவுட் படங்களைப்பதி எல்லாம் எழுதினா தானே ஒரு கெத்து இருக்கும் ப்ளாகுக்கு.

15, Park Avenueஒரு ரெண்டு வாரத்துக்கு முன்னாடி டிவி மொக்கை தாங்க முடியாம E Masala ல போய் நின்னேன். ஏதோ படம் ஓடிண்டு இருந்தது. அடேடே, நாம இது வரைக்கும் இந்த காட்சி பாத்ததில்லையேன்னு கொஞ்சம் வெயிட் பண்ணினேன். கொங்கனா சென் யார்கிட்டயோ அட்ரஸ் விசாரிச்சுண்டு இருந்தா.ஷபானா இளமையாகவும் கொங்கனா நரைமுடியோட இருந்ததுனால எனக்கு பயங்கர ஆச்சர்யம் அப்போ தான் படம் பேரு தெரிஞ்சுது. கொஞ்ச நேரம் தான் ஆயிருக்கும் படம் போட்டுன்னு உக்காந்து பாக்க ஆரம்பிச்சுட்டேன். Mr and Mrs Iyer  க்கு அப்புறமா கொங்கனா சென் நடிச்சு அபர்ணா சென் எடுத்த படம் தான் இந்த 15,  Park Avenue. கொஞ்ச நாளா பார்க்கணும்னு நெனச்சுண்டு இருந்தேன்.TVலேயே போட்டுட்டான்னு எனக்கு வாயெல்லாம் பல்லு. இந்த படத்தின் தரத்தை பத்தி சொல்லறதுக்கு பதிலா, பேசாம சர்வேசனின் (இவற்றை வெல்லும் சொற்கள் வேறில்லை) கமெண்ட்ஸ் suggestionsஐ காப்பி பேஸ்ட் பண்ணிடலாம் . கொங்கனாவின் நேர்த்தியான நடிப்பு, ஷபானாவின் பாதிரப்படைப்பு,  ஒரு மிக மெல்லிய கதைக்களம் -இதெல்லாம் சேர்ந்து,  இந்த படத்தை என்னால் மறக்கவே முடியாம பண்ணிடுத்து . எதிர்பார்க்காம படம் முடியும்போது நமக்கே ஒரு வித அதிர்ச்சி கொடுக்கறது. என்ன இது? எப்படி சாத்தியம்?ன்னு நம்ம அப்படியே ஷாக் ஆறது நிஜம். இந்த மாதிரி படங்களை நிச்சியம் வரவேற்கணும்.. 15 park avenue - 'A -Class' Address.

Paranormal Activity


நம்ம ஊரு புலிவருது கதை மாதிரி பேய் வருது பேய் வருதுன்னு சொல்லிச்சொல்லியே ஒரு படம் சூப்பர் ஹிட் ஆயிடுத்து. பைசா செலவில்லாம எப்படி Block Buster எடுக்கறதுன்னு இந்த டைரக்டர் கிட்ட எல்லாரும் tuition எடுத்துக்கணும். ஒரே ஒரு Handy Cam, ஒரு வீடு, ரெண்டு நடிகர்கள் - இவங்களை வெச்சுண்டு ஒரு Horror  படம் எடுத்துருக்காங்க. அந்த Horrifying factor  என்னமோ அவ்ளோ scope இல்லை தான். ஆனாலும் படம் முடியற வரைக்கும் அது என்ன, ஏன் இந்த மாதிரி நடந்துக்குதுங்கற கேள்விக்கெல்லாம் நம்மூர் பாணில ஒரு மசாலா பிளாஷ்பாக்ல சொல்லாம அம்போன்னு அந்தரத்துல விட்டுட்டாங்க பின்னணி இசை இல்லாம,கிராபிக்ஸ் பிதற்றல்களும் இல்லாம, மேக்கப் பயங்கரங்களும் இல்லாம, ஒரு பேய்ப்படத்தை தையிரியமா புதிய கோணத்துல சொன்னதுக்கு இயக்குனருக்கு ஒரு ஸ்பெஷல் பூங்கொத்து. ஒரு stageல கடுப்பாகி நான் கிச்சனுக்கு போயிட்டேன். இவர் கூப்பிடும்போது  மட்டும் இடை இடையே பாத்துண்டு இருந்தேன்.சத்தமே இல்லாத இந்தப்படத்துல அந்த 'அது' குடுக்கற சத்தங்கள் தான் கொஞ்சம் வயித்துல புளியையைக்கரைச்சது. நாங்க இந்தப்படம் பாக்கும் நேரத்துல தான் மாடி வீட்டுல சோபாவை நகர்த்தணுமா? உலுக்கி விழுந்தோம் (ரெண்டுபேருமே) கிளைமாக்ஸ் ல 'அது' போனதுக்கப்பறம் இந்தப்பொண்ணு எழுந்துக்க முயற்சி பண்ணும்போது கரெக்டா எங்க வீட்டு landlineல ஒரு போன் கால் வந்து, நான் பயத்துல அலறி அடிச்சுண்டு போயி எடுத்தேன். அவங்களுக்கு போன் பண்ண்றதுக்கு வேற நேரமே கிடைக்கலையா?கஷ்டம் கஷ்டம்.


Yes Man.


ஜனரஞ்சக நாயகன் ஜிம் காரியின் தீவிர ரசிகையானஅடியாள், இந்த படத்தை E View(movie on demand)ல காசு கட்டி பார்க்க இஷ்டமில்லாததால், Torrent ல டவுன்லோட் பண்ணி பார்த்தாள். ஹீ ஹீ.. பரவால்ல, Bandwidth fullஆ occupy பண்ணின்டாலும், it was worth downloading. சமீபமா விவாகரத்தான,எப்போவுமே எதுக்கும் No சொல்ற, வாழ்கையே வெறுத்து போயி, நண்பர்களை ஓரங்கட்டி, தன பிளாட்டுல தனியா உக்காந்து DVD பாக்கற ஒரு வங்கி ஊழியர்  ஜிம். யாரோ ஒரு நண்பன் சொன்னதைக்கேட்டு ஒரு செமினார் attend பண்ணறான். வாழ்கை எப்பெல்லாம் ஒரு opportunity வழங்குதோ, அப்பெல்லாம் நீ 'Yes'தான் சொல்லனும்னு இந்த Self Imporvement seminarல சொல்ல, தேவையோ தேவை இல்லையோ Yes சொல்றான் ஒவ்வொண்ணுக்கும் அவன் Yes  சொல்லிண்டே வர, அவன் வாழ்கையே வண்ணமயமாக மாறுது.மனசுக்கு பிடிக்காம கூட Yes  சொல்ல வேண்டி இருக்கே,. இது எங்கே போய் முடியபோகுதுன்னு நமக்கே ஒரு கவலை வருது. எப்பையும்போல வித விதமான முக கொணஷ்டைகள், வாயை 360 ௦ டிகிரி கோணத்துலேயும் சுழற்றி டையலாக் பேசும் ஜிம்மை  இந்தப்படத்துலேயும் காணலாம் .மொத்ததுல.எல்லார்கிட்டேயும் ஒரு positive impact create  பண்ணறதுக்காக எடுக்கப்பட்ட படம் ஒரு நிமிஷம் மனசு Yes சொல்ல நினைக்கும்போது வாய் No சொல்ல கூடாதுன்னு புரியவைக்கிற படம். வாழ்க தங்கதலைவர் ஜிம்.

11 comments:

அண்ணாமலையான் said...

நீங்க எழுதிட்டீங்க... இவ்ளோ படம் பாத்ததுக்கு வாழ்த்துக்கள்.

Ms.Chitchat said...

Hi, latest padam onnum paarkalaiya??? nandri pada reviewkku. romba naala ezhudhareeenga konjam thamizh pada reviewm vandhaal santhosham :):) naan ungalai follow pannarein to enjoy ur writings.

Chitchat
http://chitchatcrossroads.blogspot.com/

Ananya Mahadevan said...

அண்ணாமலையான், நான் இன்னும் படங்கள் பார்த்தேன், என்னென்ன பார்த்தேன்னு மறந்து போய்டுது. இந்த பதிவு எழுத ஆரம்பிச்சு சுமார் பத்து நாளுக்கு மேல ஆயிடுத்து.

Ananya Mahadevan said...

MS Chitchat,
Thanks for stopping by. ரொம்ப நாளா எழுதலைங்க, இப்போ தான் ஒரு 3 மாசமா எழுதறேன்.தமிழ்ப்படம் review எழுதலாம் தான். ஆனா அதுக்கு மொதல்ல view பண்ண வேண்டாமா? பாக்கற மாதிரி ஒரு படம் வரட்டும், கண்டிப்பா தமிழ்ப்பட review எழுதப்படும்

Ananya Mahadevan said...

என்னோட வெத்து ப்ளாகை தொடரும் எல்லா அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றி நன்றி நன்றி!!!

அண்ணாமலையான் said...

verum nandri mattumthaanaa? neenga paatha padam dvd courierla anuppunga... hi hi hi

Ananya Mahadevan said...

அண்ணாமலையான், நான் இந்த லிஸ்ட் ல எந்தப்படத்தையுமே DVDல பார்க்கலைங்க. 15, park avenue மட்டும் தான் டிவி ல பாத்தேன் பாக்கி எல்லாம் டோர்ரன்ட் ல பார்த்தேன். என்னால DVD எல்லாம் அனுப்ப முடியாது ஏன்னா என்கிட்டே DVD Writer இல்லையே.. ஹீ ஹீ
ஆபீஸ்ல குடுக்கற சம்பளத்துக்கு அப்பப்போ வேலையும் பாருங்க.. ஹீ ஹீ ஹீ

அண்ணாமலையான் said...

இன்னிக்கி மொஹரம் லீவு.. அதான் வூட்லருக்கோம்.. (சம்பளத்த விட அதிகமா உழைக்கிறோம்)

Ananya Mahadevan said...

lol.. chill dude.

Unknown said...

மனம் ஒரு குரங்கில் சினிமா கலப்பதை வன்மையாக ஆட்சேபித்த பிறகு சினிமாப்பக்கம் என்ற தனி category-ஐ ஆரம்பித்ததற்கு நன்றி... Wake Up Sid படம் பார்த்த பிறகு இந்த ஜோஹர், சோப்ரா வகையராக்களுக்கு NRI, பணக்காரர்கள் குடும்பத்தை தவிற வேறு எதுவும் எடுக்க தெரியாதா என்ற சலிப்பு ஏற்பட்டது உண்மை... டிவி சீரியல் பார்த்த எஃபெக்ட்... ஆங்கில படங்கள் பார்க்கும் அளவுக்கு எனக்கு அறிவு இல்லை.. எனவே படத்தை விட உனது அபிப்பிராயங்கள் நன்றாக உள்ளது...

Ananya Mahadevan said...

Thanks for the comment mahesh. The movies which I have discussed here are lucid and easy to understand even for me. So I recommend them to all. :-)

Related Posts with Thumbnails