கொதிக்கும் குழம்பும் பதினோறாவது வகுப்பும்
குழம்பு கொதித்துக்கொண்டு இருந்தது. தேங்காயுடன் இன்ன பிற ஐட்டங்களை வறுத்து அரைத்த விழுதைப்போட்டு, கொதி வந்த பிறகு குக்கரிலிருந்த துவரம்பருப்பை எடுத்து கொதிக்கும் சாம்பாரில் போட்டேன். தள தள என்று கொதித்த சாம்பார் சட்டென்று அடங்கியது. மீண்டும் பழைய படி கொதிக்க சில நொடிகள் தேவைப்பட்டது. இதைப்பார்த்த எனக்கு திடீரென்று ஒரு ஃப்ளாஷ். புது பள்ளியில் முதல் நாள் வகுப்பில் சத்தம் போடும் மாணவர்களின் நடுவில் திரு திருவென்று விழித்துக்கொண்டு நான் போன போது எல்லோரும் எப்படி சட்டென்று என் பக்கம் பார்த்தவாறே அடங்கிபோனார்களோ, அதான் நினைவுக்கு வந்தது. (இதற்கும் என் கணவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை இங்கேயே சொல்லிவிடுகிறேன்.)
1991. மஹாகவி பாரதியார் நூற்றாண்டுவிழா பெண்கள் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஜாலியாக முக்கால்வாசி நாள், படிக்காமல், குணா, கேளடி கண்மணி, தளபதி, அமரன், ஊரு விட்டு ஊரு வந்து, புதுப்பாட்டு போன்ற படங்களில் இடம்பெற்ற பாடல்களை கேட்டும், குரூப் குரூப்பாக உட்கார்ந்து பாடியும் பொழுதைக்கழித்துக்கொண்டு இருந்தோம்.பத்தாவது போர்டு பரீட்சை என்ற காரணத்தினால் பீர் பிரஷரின் பேரில் பீதி அடைந்து, ஆனந்தி, லஷ்மி என்ற இரு தோழியரின் மோடிவேஷனில் துளி கூட விருப்பமே இல்லாமல் படிக்க ஆரம்பித்து, எல்லா பரீட்சையுமே சுமாரா எழுதி, மார்க்கும் அதே போல வாங்கி, கணக்கில் மட்டும் 100% (இதற்கு என் அம்மா ஈன்றதினும் பெரிதுவத்தார் என்பது குறிப்பிடத்தக்கது) வாங்கி தேறினேன். 1992 ஆம் ஆண்டிலும் இதே பள்ளியில் +1 காமர்ஸ் எடுத்துக்கொண்டு வின்னர் வடிவேலு மாதிரி வெட்டி சவடால் விட்டுக்கொண்டு திரியலாம் என்று மனப்பால் குடித்துக்கொண்டு இருந்தேன்..
என் வாழ்நாளிலேயே மறக்க முடியாத இன்பமயமான கூடவே என்னை செதுக்கிய நாட்கள் அவை. அதெல்லாம் திரும்ப வருமா வருமா?
சென்ற ஆண்டு இந்த குரூப்பில் சிலரை தினேஷ் வீட்டில் சந்தித்தது மறக்க முடியாத அனுபவம்.
இந்த எண்ணங்களின் வட்டதிலிருந்து நான் மீண்டபோது, குழம்பு மீண்டும் தளதளத்துக்கொண்டு இருந்தது.

அம்மா போய்க்கொண்டு இருந்த தையல் கிளாஸின் ரூபத்தில் எனக்கு வந்தது வினை. ஏதோ ஒரு மாமியின் பெண்ணாம், அதுவும் பத்தாவது முடிச்சிருக்காம். என்.எஸ்.என் ல சேர்க்கபோறாங்க, ”அப்ளிகேஷன் வாங்கிண்டு வந்திட்டேன், நீ அங்கே தான் படிக்கணும்”-இது அம்மா. ”இது ரொம்ப கஷ்டம்மா, இந்த ஸ்கூல்ல இங்கிலீஷ்ல தான் பேசணும். என்னால முடியாதும்மா.ரொம்ப ஹை ஸ்டாண்டர்டு, சரிப்பட்டு வராதும்மா”-இது நான். அம்மா எதையும் கண்டு கொள்வதாக தெரியவில்லை.
ஆச்சு, சேர்ந்தாச்சு. இரண்டு வருடம் பெண்கள் பள்ளியில் படித்த எனக்கு என்னமோ முதல் முறையாக என் வகுப்புக்குள் நுழையும் போதே அவமானமாக இருந்தது. அப்போதெல்லாம் managing change பற்றி நான் ஒன்றும் அறிந்திருக்கவில்லை.அங்கே ஏற்கனவே பத்தாவது படித்த மாணவ மாணவியர்கள், ஒருவரை ஒருவர் பார்த்து பேசிக்கொண்டு இருந்தார்கள்.நிறைய பேர், அழகாக சிவப்பாக இருந்தார்கள்.பெண்களில் பலர் அழகாக் முடி வெட்டி இருந்தார்கள். சிலர் கொஞ்சம் மேக்கப் எல்லாம் போட்டுக்கொண்டு வந்திருந்தார்கள். ஏகப்பட்ட பையன்கள் இருந்தார்கள். நல்ல வேளை அந்தப்பக்கமாக உட்கார்ந்திருந்தார்கள். அந்த பதின்மவயதினருக்கே உரிய இன்ஃபீரியாரிட்டி காம்ப்லெக்ஸ் எனக்கு மட்டும் சற்று தூக்கலாக இருந்தது. பிரேயர் முடிந்து தலையைக் குனிந்தால், லஞ்ச் பிரேக் வரை தலையைத்தூக்க மாட்டேன். அதாவது மிஸ்ஸைப்பார்ப்பேன் மற்ற யாரையும் பார்க்க அவமானமாக இருக்கும். புது இடம் வேறு. டீச்சர்கள் எல்லாம் வீட்டில் என்ன மொழி பேசுவார்கள் என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டேன். அவ்வளவு ஆங்கிலப்புலமை. மாணவர்களும் அப்படியே. (கவிதைபோட்டி எல்லாம் நடத்தினார்கள். அடியாத்தீ.. இங்கிலீஷ் ல கவிதையா? ஆடிப்போய்விட்டேன்.)முக்கால்வாசி புரிந்தாலும் கால்வாசி ஆங்கில பிரமிப்பு இருக்கும். ஆகா, என்னம்மா பேசுராங்க்ய என்றே தோன்றும். யாராவது என்னிடம் வந்து பேச முற்பட்டால் நெளிந்து வழிந்து ரொம்ப அவஸ்தை ஆகிவிடும்.
தினமும் வீட்டில் அம்மாவை குறை சொல்லுவேன். பழைய ஸ்கூல் எவ்ளோ கிட்டக்க இருந்தது. இது இப்போ இவ்ளோ தூரம் என்பதில் ஆரம்பித்து எதாவது சொல்லிக்கொண்டிருப்பேன். முதல் தோழி கவிதா தான். தினமும் அவளுடன் தான் அம்மா என்னை அனுப்புவார்.சைக்கிள் பழகலையாம். விழுந்துடுவேனாம். அவளுக்கு எச்ஸ்பீரியன்ஸ் இருக்காம். முதல் இரண்டு நாளில் அவளுடன் வேவ்லெங்த் செட் ஆகிவிட நிம்மதி பெருமூச்சு விட்டேன். அப்புறம் பிரியா, வித்யா, சுதா, சுபா,சுஜாதா, ஷங்கரி, ஜஸ்வந்தி இவர்கள் நேசக்கரம் நீட்ட கெட்டியாக பற்றிக்கொண்டென். பையன்கள் விஷயத்தில் பயமான பயம். கணேஷ்,கார்த்திகேயன்,தினேஷ் மட்டும் நன்றாக பேசுவார்கள். மற்றபடி பாக்கி மாணவர்களிடம் பழக 4-5 மாதங்கள் ஆயிற்று. ஏதோ ஒரு போட்டிக்காக எல்லோரும் கூடி ஆலோசித்த போது தான் நான் எல்லோரையும் விட ஒரு வயது மூத்தவள் என்று தெரிய வந்தது. அன்றிலிருந்து நான் தீதீ ஆனேன். தீதீன்னா ஹிந்தில அக்கா. எல்லா பையன்களும் என்னை அன்புடன் தீதீ என்றே அழைத்தார்கள்.அப்போதெல்லாம் பள்ளி வளாகத்தில் தீதீ என்றால் தான் திரும்புவேன்.
அந்த தினேஷ் பிரும்மஹத்தி எந்த நேரத்துல எனக்கு தீதீன்னு நாமகரணம் வெச்சானோ, இன்னிக்கு வரைக்கும் பாலாஜி, மஹேஷ் ,ஜிகர்தண்டா மூலம் அது தொடர்ந்துகொண்டே தான் இருக்கிறது.என்னைச்சுத்தி அக்கான்னு சொல்றதுக்கு ஒரு கூட்டம் இருக்கே, அதே போதும். தேங்க்யூ காட்.
சென்ற ஆண்டு இந்த குரூப்பில் சிலரை தினேஷ் வீட்டில் சந்தித்தது மறக்க முடியாத அனுபவம்.
இந்த எண்ணங்களின் வட்டதிலிருந்து நான் மீண்டபோது, குழம்பு மீண்டும் தளதளத்துக்கொண்டு இருந்தது.