Pages

Wednesday, January 27, 2010

கொதிக்கும் குழம்பும் பதினோறாவது வகுப்பும்

கொதிக்கும் குழம்பும் பதினோறாவது வகுப்பும்


குழம்பு கொதித்துக்கொண்டு இருந்தது. தேங்காயுடன் இன்ன பிற ஐட்டங்களை வறுத்து அரைத்த விழுதைப்போட்டு, கொதி வந்த பிறகு குக்கரிலிருந்த துவரம்பருப்பை எடுத்து கொதிக்கும் சாம்பாரில் போட்டேன். தள தள என்று கொதித்த சாம்பார் சட்டென்று அடங்கியது. மீண்டும் பழைய படி கொதிக்க சில நொடிகள் தேவைப்பட்டது. இதைப்பார்த்த எனக்கு திடீரென்று ஒரு ஃப்ளாஷ். புது பள்ளியில் முதல் நாள் வகுப்பில் சத்தம் போடும் மாணவர்களின் நடுவில் திரு திருவென்று விழித்துக்கொண்டு நான் போன போது எல்லோரும் எப்படி சட்டென்று என் பக்கம் பார்த்தவாறே அடங்கிபோனார்களோ, அதான் நினைவுக்கு வந்தது. (இதற்கும் என் கணவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை இங்கேயே சொல்லிவிடுகிறேன்.)
1991. மஹாகவி பாரதியார் நூற்றாண்டுவிழா பெண்கள் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஜாலியாக முக்கால்வாசி நாள், படிக்காமல், குணா, கேளடி கண்மணி, தளபதி, அமரன், ஊரு விட்டு ஊரு வந்து, புதுப்பாட்டு போன்ற படங்களில் இடம்பெற்ற பாடல்களை கேட்டும், குரூப் குரூப்பாக உட்கார்ந்து பாடியும் பொழுதைக்கழித்துக்கொண்டு இருந்தோம்.பத்தாவது போர்டு பரீட்சை என்ற காரணத்தினால் பீர் பிரஷரின் பேரில் பீதி அடைந்து, ஆனந்தி, லஷ்மி என்ற இரு தோழியரின் மோடிவேஷனில் துளி கூட விருப்பமே இல்லாமல் படிக்க ஆரம்பித்து, எல்லா பரீட்சையுமே சுமாரா எழுதி, மார்க்கும் அதே போல வாங்கி, கணக்கில் மட்டும் 100% (இதற்கு என் அம்மா ஈன்றதினும் பெரிதுவத்தார் என்பது குறிப்பிடத்தக்கது) வாங்கி தேறினேன். 1992 ஆம் ஆண்டிலும் இதே பள்ளியில் +1 காமர்ஸ் எடுத்துக்கொண்டு வின்னர் வடிவேலு மாதிரி வெட்டி சவடால் விட்டுக்கொண்டு திரியலாம் என்று மனப்பால் குடித்துக்கொண்டு இருந்தேன்..அம்மா போய்க்கொண்டு இருந்த தையல் கிளாஸின் ரூபத்தில் எனக்கு வந்தது வினை. ஏதோ ஒரு மாமியின் பெண்ணாம், அதுவும் பத்தாவது முடிச்சிருக்காம். என்.எஸ்.என் ல சேர்க்கபோறாங்க, ”அப்ளிகேஷன் வாங்கிண்டு வந்திட்டேன், நீ அங்கே தான் படிக்கணும்”-இது அம்மா. ”இது ரொம்ப கஷ்டம்மா, இந்த ஸ்கூல்ல இங்கிலீஷ்ல தான் பேசணும். என்னால முடியாதும்மா.ரொம்ப ஹை ஸ்டாண்டர்டு, சரிப்பட்டு வராதும்மா”-இது நான். அம்மா எதையும் கண்டு கொள்வதாக தெரியவில்லை.ஆச்சு, சேர்ந்தாச்சு. இரண்டு வருடம் பெண்கள் பள்ளியில் படித்த எனக்கு என்னமோ முதல் முறையாக என் வகுப்புக்குள் நுழையும் போதே அவமானமாக இருந்தது. அப்போதெல்லாம் managing change பற்றி நான் ஒன்றும் அறிந்திருக்கவில்லை.அங்கே ஏற்கனவே பத்தாவது படித்த மாணவ மாணவியர்கள், ஒருவரை ஒருவர் பார்த்து பேசிக்கொண்டு இருந்தார்கள்.நிறைய பேர், அழகாக சிவப்பாக இருந்தார்கள்.பெண்களில் பலர் அழகாக் முடி வெட்டி இருந்தார்கள். சிலர் கொஞ்சம் மேக்கப் எல்லாம் போட்டுக்கொண்டு வந்திருந்தார்கள். ஏகப்பட்ட பையன்கள் இருந்தார்கள். நல்ல வேளை அந்தப்பக்கமாக உட்கார்ந்திருந்தார்கள். அந்த பதின்மவயதினருக்கே உரிய இன்ஃபீரியாரிட்டி காம்ப்லெக்ஸ் எனக்கு மட்டும் சற்று தூக்கலாக இருந்தது. பிரேயர் முடிந்து தலையைக் குனிந்தால், லஞ்ச் பிரேக் வரை தலையைத்தூக்க மாட்டேன். அதாவது மிஸ்ஸைப்பார்ப்பேன் மற்ற யாரையும் பார்க்க அவமானமாக இருக்கும். புது இடம் வேறு. டீச்சர்கள் எல்லாம் வீட்டில் என்ன மொழி பேசுவார்கள் என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டேன். அவ்வளவு ஆங்கிலப்புலமை. மாணவர்களும் அப்படியே. (கவிதைபோட்டி எல்லாம் நடத்தினார்கள். அடியாத்தீ.. இங்கிலீஷ் ல கவிதையா? ஆடிப்போய்விட்டேன்.)முக்கால்வாசி புரிந்தாலும் கால்வாசி ஆங்கில பிரமிப்பு இருக்கும். ஆகா, என்னம்மா பேசுராங்க்ய என்றே தோன்றும். யாராவது என்னிடம் வந்து பேச முற்பட்டால் நெளிந்து வழிந்து ரொம்ப அவஸ்தை ஆகிவிடும்.


தினமும் வீட்டில் அம்மாவை குறை சொல்லுவேன். பழைய ஸ்கூல் எவ்ளோ கிட்டக்க இருந்தது. இது இப்போ இவ்ளோ தூரம் என்பதில் ஆரம்பித்து எதாவது சொல்லிக்கொண்டிருப்பேன். முதல் தோழி கவிதா தான். தினமும் அவளுடன் தான் அம்மா என்னை அனுப்புவார்.சைக்கிள் பழகலையாம். விழுந்துடுவேனாம். அவளுக்கு எச்ஸ்பீரியன்ஸ் இருக்காம். முதல் இரண்டு நாளில் அவளுடன் வேவ்லெங்த் செட் ஆகிவிட நிம்மதி பெருமூச்சு விட்டேன். அப்புறம் பிரியா, வித்யா, சுதா, சுபா,சுஜாதா, ஷங்கரி, ஜஸ்வந்தி இவர்கள் நேசக்கரம் நீட்ட கெட்டியாக பற்றிக்கொண்டென். பையன்கள் விஷயத்தில் பயமான பயம். கணேஷ்,கார்த்திகேயன்,தினேஷ் மட்டும் நன்றாக பேசுவார்கள். மற்றபடி பாக்கி மாணவர்களிடம் பழக 4-5 மாதங்கள் ஆயிற்று. ஏதோ ஒரு போட்டிக்காக எல்லோரும் கூடி ஆலோசித்த போது தான் நான் எல்லோரையும் விட ஒரு வயது மூத்தவள் என்று தெரிய வந்தது. அன்றிலிருந்து நான் தீதீ ஆனேன். தீதீன்னா ஹிந்தில அக்கா. எல்லா பையன்களும் என்னை அன்புடன் தீதீ என்றே அழைத்தார்கள்.அப்போதெல்லாம் பள்ளி வளாகத்தில் தீதீ என்றால் தான் திரும்புவேன்.

என் வாழ்நாளிலேயே மறக்க முடியாத இன்பமயமான கூடவே என்னை செதுக்கிய நாட்கள் அவை. அதெல்லாம் திரும்ப வருமா வருமா?

அந்த தினேஷ் பிரும்மஹத்தி எந்த நேரத்துல எனக்கு தீதீன்னு நாமகரணம் வெச்சானோ, இன்னிக்கு வரைக்கும் பாலாஜி, மஹேஷ் ,ஜிகர்தண்டா மூலம் அது தொடர்ந்துகொண்டே தான் இருக்கிறது.என்னைச்சுத்தி அக்கான்னு சொல்றதுக்கு ஒரு கூட்டம் இருக்கே, அதே போதும். தேங்க்யூ காட்.
 
சென்ற ஆண்டு இந்த குரூப்பில் சிலரை தினேஷ் வீட்டில் சந்தித்தது மறக்க முடியாத அனுபவம்.

இந்த எண்ணங்களின் வட்டதிலிருந்து நான் மீண்டபோது, குழம்பு மீண்டும் தளதளத்துக்கொண்டு இருந்தது.

20 comments:

pudugaithendral said...

ஆஹா,

நானும் தமிழ் மீடியத்துலேர்ந்து ஆங்கில மீடியம் போனப்போ இருந்த மனநிலை மாதிரி இருக்கு.

அருமையான கொசுவத்தி

ungalrasigan.blogspot.com said...

பள்ளி வயது மனோநிலையை அழகாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறீர்கள், ஒரு குழம்பு கொதிக்கும் நேரத்துக்குள்! :)

Ananya Mahadevan said...

தென்றல் அக்கா,
நான் இங்கிலீஷ் மீடியம் தான், ஆனா அரசு பள்ளி. ஏட்டுச்சுரைகாயாக இருந்த என்னை செதுக்கிய நாட்களை நினைவு கூர்கிறேன்.பின்னூட்டத்திற்கு நன்றி.

Ananya Mahadevan said...

ரவிப்பிரகாஷ் சார்,

உங்க வருகைக்கும் பின்னூட்டதிற்கும் நன்றி.
நீங்க என்னோட எழுத்தை படிக்கறீங்கங்கறதே எனக்கு பெருமை தான்.:) நன்றி மீண்டும் வருக.

ஜிகர்தண்டா Karthik said...

//தென்றல் அக்கா//
ஓஒ... இவங்க தீதீ கி தீதீ யா... :)
தீதீ... இவ்வளவு கஷ்டப்பட்டு படிச்சு முன்னேறியதற்கு வாழ்த்துகள் :)

Ananya Mahadevan said...

முன்னேறிட்டேன்னு எதை வெச்சு சொல்லுற கார்த்திக்? இப்படியெல்லாம் காமெடி பண்ணப்படாது.வோக்கே?

துபாய் ராஜா said...

குழம்பு நல்ல ருசி. :))

Ananya Mahadevan said...

:) நன்றி துபாய் ராஜா.

Priya said...

அனன்யா - Very nice post.. all of us would have faced this phase atleast once in our childhood... தெளிவான எழுத்து - எண்ணங்களை பற்றி .... தொடக்கம் தொடங்கி முடிவை படிக்கும் பொது ஏனோ இந்த பழமொழி மனதில் தோன்றுகிறது ... "முழங்காலுக்கும் மொட்டை தலைக்கு முடிச்சு போடறது இது தானா?"

Ananya Mahadevan said...

என்ன பண்றது ப்ரியா, இது என் எண்ணம். புதுசா எதாவது நிகழும்போது நம் இயல்பு நிலை பாதிக்கும் இல்லையா? அது போல தான் புதுசா வந்த துவரம்பருப்பை கொதித்துக்கொண்டிருந்த குழம்புக்கு பிடிக்கவில்லை. அப்புறம்பழகிய பின் பழையபடி எல்லோரும் மகிழ்ச்சியாக குதித்தார்கள். just like my school days.. Managing Change in one way. அதான் இந்த போஸ்ட். பின்னூட்டம் எல்லாம் பின்றீங்க!

Vijayakrishnan said...

Very nice post..Kepp writing more of these types...

Ananya Mahadevan said...

ஓ உங்களுக்கு ஃப்ளாஷ்பாக் தான் ரொம்பப்பிடிக்குமோ? நன்றி விஜய்.

எல் கே said...

நான் பள்ளி மாறிய சமயம் இதுதான் நடந்தது.

Anonymous said...

//என்.எஸ்.என் ல சேர்க்கபோறாங்க, //

இப்பள்ளி எங்கேயிருக்கிறது?

பள்ளி குருப்போட்டோவைப் பார்த்தால் தமிழ்நாட்டில் இருப்பதைப்போல தோன்றுகிறது. அங்கே எப்படி தீதி என்றெல்லாம் சொல்கிறார்கள்? அஃது இந்தி மொழிச்சொல் ஆயிற்றே?

//என் அம்மா ஈன்றதினும் பெரிதுவத்தார் //

பெரிதுவத்தல் என்பதன் past tense பெரிதுவத்தாரா அல்லது பெரிதுவந்தாரா?

Anonymous said...

தலைப்பு நன்று.

Ananya Mahadevan said...

பின்னுட்டத்துக்கு நன்றி LK.
ஜோ அமலன், வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி! இந்தப்பள்ளி சென்னையில் இருக்கிறது.பயிற்றுமொழி ஆங்கிலமாக இருந்தாலும் மூன்றாம் மொழி ஹிந்தி எடுத்துக்கொண்ட மாணவர்கள் என்னை தீதீ என்று அழைத்தார்கள்.
”ஈன்றபோதினும் பெரிதுவத்தாள் தன் மகனை “ என்று தானே வரும்? அதை அப்படியே உபயோகித்திருக்கிறேன்.

Anonymous said...

'ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனை
சான்றோன் எனக் கேட்ட தாய்’

இதுவே குறள்.

பெரிதுவக்கும் என்பது சரிதான். அதிலிருந்து உவத்தார் என்ற இறந்தகால் வினைமுற்றை எடுத்திருக்கிறீர்கள்.

இதைப்போல,

அனிச்சக் குழையும் மோப்பம்’ என்வும் புலவர் எழுதிவிட்டார்.

மோத்தல் என்ற வினைச்சொல்லை, இறந்தகால வினையாக்கும்போது, மோந்தார் எனத்தானே சொல்கிறோம்?

அவன் அம்மலரை மோத்தான் எனச்சொல்வோமா அல்லது
அவன் அம்மலரை மோந்து பார்த்தான்ல் அவன் அம்மலரை மோந்தான் என்போமா?

மோந்தான் என்பதே யான் கண்டது; கேட்டது.

நிற்க.

பெரிது உவந்தார் என்பதே சரியெனப்படுகிறது.
உவத்தல் என்பதற்கு பொருள் அலாதி விருப்பம் கொள்ளுதல் என நினைக்கிறேன்.

காயதல் உவத்தல் இன்றி ஆராயவேண்டும் என்று சொல்வரல்லவா? அதைத்தான் புலவர் ”தாய் மிகவும் தன்னிச்சையாக அலாதி ஆனந்தம் அடைவார்” என்கிறார்.

நான் புலவனுமில்லை. நல்ல கவிஞனும் இல்லை. எல்லாம் கேள்வி ஞானம்தான்.

கல்பனா சேக்கிழாரையோ, அல்ல்து முருககவியையோ, அல்லது முனைவர் இளங்கோவனையோ கேட்டுச்சொல்கிறேன்.

பலமுறை என் ஐய்ங்களை முனைவர் கல்பனாவிடம் கேட்டு தெளிந்து உவந்திருக்கிறேன்.

Anonymous said...

சக மாணவர்கள் அப்படி அழைக்க நீங்கள் விட்டுக்கொடுத்திருப்பது உங்கள் பொறுமையைக்காட்டுகிறது. பெண்களின் வயதை இலைமறைகாயாககூட சொல்வது total lack of social manners.

அவர்களை நீங்கள் சரி ‘பையா’ என்று அழைத்திருக்கவேண்டும்.

உங்களுக்கு இந்தி சரியாகத் தெரிய்வைல்லை போலும்.

‘பையா’ என்றால் அண்ணா.

தி. ரா. ச.(T.R.C.) said...

. பிரேயர் முடிந்து தலையைக் குனிந்தால், லஞ்ச் பிரேக் வரை தலையைத்தூக்க மாட்டேன். அதாவது மிஸ்ஸைப்பார்ப்பேன் மற்ற யாரையும் பார்க்க அவமானமாக இருக்கும்.

நம்பிட்டோம்ல.

ஆகா சேரன் படம் பார்ட் 2 பார்த்தாமாதிரி இருக்கு

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான அனுபவங்கள், என்றும் என்றென்றும் நம் மனதைவிட்டு நீங்காதது. அருமை அருமை..

Related Posts with Thumbnails