Pages

Showing posts with label மோஹனின் மொக்கைகள். Show all posts
Showing posts with label மோஹனின் மொக்கைகள். Show all posts

Sunday, February 14, 2010

மோஹனின் மொக்கைகள்

இந்த வார இறுதி ரொம்ப நாள் கழித்து துபாய் செல்ல நேர்ந்தது. சனியன்று மத்தியானம் ஜெயாக்கா சாப்பிட அழைத்திருந்தார். ஜெயாக்கா சமீபமாகத்தான் வீடு மாற்றி இருக்கிறார். இவரும் அத்திம்பேரிடம் இடம் விசாரித்துக்கொண்டு, ஷார்ஜா போஸ்டாபீஸ் பக்கத்தில் இருந்த சந்தில் திரும்பி கார் பார்க்கிவிட்டு பில்டிங் தேடி போனோம்.

இதாத்தான் இருக்கும்ன்னு இவர் சொன்ன ஒரு பில்டிங்ல சுமார் 15 பேர் போகக்கூடிய பெரிய லிஃப்ட். லிஃப்ட் பட்டனை அமிழ்த்திவிட்டு காத்திருந்தோம். கதவு திறந்ததும் ஒரு ஆள் அவசரமாக வெளியே ஓடினார். பெரிய லிஃப்டாச்சே, கதவுக்கு சைடில் ஆள் நிற்கும் அளவுக்கு இடம் இருந்திருக்கிறது. வெளியில் தெரியவில்லை. இவர் வேகமாக லிஃப்டுக்குள் நுழைய, கதவருகே நின்றுகொண்டிருந்த ஒரு (இளம்)பெண் வெளியே வரமுயல, ரெண்டு பேரும் தமிழ் சினிமாவுல வர்ற மாதிரி ஒரு டிங்கு!!! இதைச்சற்றும் எதிர்ப்பார்த்திராத என் கண்வர், மிகவும் வருந்தி மன்னிப்பு கேட்டார். அந்தப்பெண் நம்மூர் மாதிரி தான் தெரிந்தது, சற்றே அவமானத்துடன் ஓடிவிட்டாள்.

இவர், லிஃப்டுக்குள் புகுந்து வழிந்துகொண்டு இருந்தார். நான் முறைத்தேன் என்று சொல்லித்தெரியவேண்டாமே. கெக்கே பிக்கே என்று சிரித்துக்கொண்டே, இனி, 1 வாரம் அவள் தூங்கவே மாட்டா, என்னையே நெனைச்சுண்டு இருப்பா என்றாரேப்பார்க்கலாம்! G யிலிருந்து 7வது மாடி போவதற்குள் லிஃப்டிற்குள் டிஷ்,டிப்ஷ்,டுக்‌ஷ் என்று ஒரெ சத்தம் தான். 7வது மாடியில் வெளியே வந்த போது இவர் தலைக்கு மேலெ கார்ட்டூன் மாதிரி ஒரே நட்சத்திரங்கள். அங்கங்கே முகத்தில் கருப்பு காயங்கள். சரி, ஆச்சு, ஜொள்ளியாச்சு, மறந்து இருக்கலாம் இல்லையா?

சாயந்திரம் கோபாலண்ணா வீட்டில் பூரி பண்ணிக்கொண்டு இருந்தேன். சமயலறையில் வந்து, ஹிக், ஹிக் ஹிக்ன்னு ஒரே விக்கல். அச்சிச்சோ, என்ன இவ்ளோ விக்கல், தண்ணி எடுத்துக்கோங்கோன்னு டம்ளர் எடுக்கப்போன போது, என்னமோ தெரீலம்மா, ஆரோ என்னையே நினைச்சுண்டு இருக்கான்னு ஒரு திருட்டு முழி.. புரீல?அதான் அந்த லிஃப்டு பொண்ணு, இவரையே நினைச்சு நினைச்சு உருகறாளாம், அதான் விக்கலாம்..

 இப்போது மீண்டும் சமயலறையில் டிஷ், டுப்ஷ், டஷ்,
சத்தங்கள் கேட்டன. கொஞ்சம் விட்டா பிஷ்க்யூன்,டும்க்யூல், டுமீல்,சரக், சதக்ன்னெல்லாம் சத்தம்  கேட்டிருக்கும்!!!

Monday, January 25, 2010

மோஹனின் மொக்கைகள்

மோஹனின் மொக்கைகள்


என் கணவரின் அதிரடி மொக்கைகள் இந்தப்பகுதியில் இடம்பெறும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

ஊருக்கு போகும்போது ஏர் அரேபியாவில் ஷார்ஜாவிலிருந்து போனோம். வழக்கத்துக்கு மாறாக அந்த ஏர் ஹோஸ்டஸ் கடுகடுப்பான
முகபாவத்துடன் பயணிகளை வெறுப்பேற்றிக்கொண்டு இருந்தாள், மன்னிக்கவும் பணிவிடை செய்துகொண்டிருந்தாள்.

கஸ்டமர் சர்வீஸில் சிறிய சறுக்கல்களைக்கூட பொறுக்காத நான், ரொம்பக்கடுப்பானேன்.

ஏதோ டெக்னிக்கல் காரணங்களால் ஃப்ளைட் டிலே என்று காப்டனிடம் இருந்து தகவல் வர, ரிக்லைனர் போட்டுக்கொண்டு சாய்ந்து கொண்டேன். ஏற்கனவே நாள் முழுக்க அலைச்சல், அலுப்பாக இருந்தது. மணி 11 ஆகியும் ஃபிளைட் கிளம்பும் வழியாக தெரியவில்லை. தூக்கம் கண்ணை சுழற்றிக்கொண்டு வந்தது. ஒரு சொக்கு சொக்குவதற்குள் என்னமோ உலுக்கி விழுந்து எழுந்தேன். அந்த ‘சிடுசிடு’ தான் என் கவனத்தை தூக்கதிலிருந்து திருப்பியுள்ளது. "could you" என்று சீட்டை நேராக்கும்படி கைகளால் ஜாடை காட்டினாள். எனக்கு வந்ததே கோபம், “let us first get a confirmation that we are taking off, I will then adjust the recliner" என்றேன் சாதாரணமாக.

அவள் பல்பு வாங்கிக்கொண்டு போன பின்னர், இவரிடம் திரும்பி,”ஏன்னா இப்படி சிடு சிடுன்னு மூஞ்சிய வெச்சுண்டு இருக்கா இவ” என்றேன். நான் சற்றும் எதிர்ப்பார்க்காமல் இருந்தது இவர் பதில்.

 வழக்கமாக பிளேனில் ஏறியவுடன் இந்த விமானப் பணிப்பெண்கள் எந்தப்பக்கம் நம் இருக்கை என்று பல்லிளித்துக்கொண்டே!!(நம்மளை வரவேற்கறாங்களாமா) காட்டுவார்கள். எல்லோரையும் இடம் வலம் என்று வழிகாட்டிய அப்பெண், இவர் ’அழகில் மயங்கி’(ஓ, இதான் அழகுல மயங்கறதா?) இவரிடம் மட்டும் மொபைல் நம்பர் கேட்டாளாம் (க்கும், கேட்டுட்டா.........லும்,இவர் நம்பர் கொடுத்துட்டா...............லும்). ஆனா இவர், ”நான் ராமனாக்கும் அதெல்லாம் (அநன்யாவைக்கேக்காம) தரமுடியாதுன்னு சொல்லிட்டாராம்.” அதான் அந்தப்பெண் உர்ன்னு மூஞ்சிய வெச்சுண்டு இருக்காளாம். ஸ்அபா..... அசந்து வரும் அந்த நொடியிலும் இவரின் சில்லித்தனமான இந்த ஜோக்கை கேட்டு சத்தமாக ரசித்து சிரித்துவிட்டேன். நல்லாத்தான் சொல்றாங்ய டீட்டேயிலு.

மணி அண்ணா பையன் சங்கர் வண்டி ரொம்ப தாறுமாரா ஓட்டுறான்னு ஒரே புகார். சாப்பிடும்போது இந்த விஷயத்தை கண்டிக்கும் நோக்கோடு மணி அண்ணா, “கோந்தே, மினிமம் 20 ஃபீட் இடைவேளை விட்டு தான் வண்டி ஓட்டணும், புரிஞ்சதா?”ன்னு சொன்னார். இவர் உடனே இடைப்பட்டு, ”அண்ணா, அப்படீன்னா, பந்த் அன்னிக்கு தான் வண்டி ஓட்ட முடியும்” என்றாரே பார்க்கலாம். கொல்லென்று குடும்பமே சிரித்து விட்டது.
Related Posts with Thumbnails