Pages

Thursday, January 16, 2014

மதர் தெரஸாவின் மோட்டர் பைக் மெமரீஸ்

மதர் தெரஸாவின் மோட்டர் பைக் மெமரீஸ்

வலையில் சுத்திக்கொண்டிருக்கும் மாமிகளைப் பத்தின ஒரு பதிவை படிச்சு டிஸ்கஸ் பண்ணிண்டு இருக்கும்போது இரா முருகன் ஜி ஆரம்பிச்ச ஒரு ஸ்பார்க் தான் இது! Thank you Sir!

மதர் தெரஸா ரொம்ப கஷ்டப்பட்டு சைக்கிள் எல்லாம் கத்துண்டு வண்டி ஓட்ட ஆரம்பிச்சா! தி நைனா in 1997 வாங்கிக்கொடுத்த முதல் பைக் TVS Champ.

1. மதர் தெரஸா முதலில் புடவையை துக்கிக்கட்டிப்பார். இல்லாட்டி புடவை சக்கரத்தில் சிக்கி ரெண்டு ஆபத்து வரும். 1. புடவை கிழியும், 2. நமக்கு ஆக்ஸிடெண்டு ஆகும்!

2. ஸ்டாண்டு போட்டவாரே க்ளட்சையும் ஆக்ஸிலரேட்டரையும் கெட்டியா பிடிச்சுண்டு பெடலை சுழட்டி, ஸ்டாட்டெல்லாம் ஜம்முன்னு செய்வார். எக்காரணத்தை கொண்டும் மெயின் ரோட்டுக்கு போயிடக்கூடாது என்ற மிக மிக ஸ்ட்ரிக்ட் கொள்கைகளை உடையவர்! 90களியேலே ட்ராஃபிக்கை பார்த்து பயந்தவர்!

3. காலை அந்தப்பக்கம் போட்டு சீட்டில் உட்கார்ந்தவுடன் நாமெல்லாம் என்ன பண்ணுவோம்? காலைத்தூக்கி பெடலின் மேல் வைச்சுப்போமா இல்லியா? மதர் தெரஸா காலை தொங்கபோட்டுண்டே (போர்க்கால நடவடிக்கை, பாலன்ஸ் போயிடுமாம், விழுந்துடுவாளாம்) 2 கிலோமீட்டரும் போயிடுவா! (அவ்ளோ தான் பெர்மிட்டட் டிஸ்டன்ஸ்!) ரெண்டு கிலோமீட்டருக்கு ஒரு மில்லிமீட்டர் ஜாஸ்தியானாலும் நிம்மியோ (ஹிஹி நான் தேன்) அல்லது நம்மாவோ தான் ஓட்ட வேண்டும்!

4.பெர்மிட்டட் ஸ்பீடு லிமிட் = 5 கிலோமீட்டர் பெர் அவர். ஸ்டார்ட் பண்ணின உடனேயே காலை கீழே தேய்ச்சுண்டே போனால் அப்படித்தான் போக முட்யிஉங்கறேன்! 25 ல போனாலே முட்டிவரைக்கும் தேய்ஞ்சு ரத்தம் வந்திடாது?

5. சில சமயம் வண்டி நகரவே நகராது! ரெண்டு பிரேக்கையும் கெட்டியா பிடிச்சுண்டு உக்காண்டா எப்படி நகருங்கறேன்?

6. முக்கியமான பாயிண்டை கவனிக்கவும், பைக்கை ஓட்டும்போது தோள்பட்டை, கை கால் எல்லாம் மஹா ஸ்டிஃப்ஃப்ஃப்ஃபாக வைத்தல் வேண்டும். ரிலாக்ஸ்டாக ஓட்டினால் ஆக்ஸிடெண்ட் ஆகிவிடும்!

7. தூ...........ரத்தில ஒரு பஸ் வந்தா, அவ்வளவு தான்! சைடில் தென்படும் ஏதாவது கடைக்குள்ளே பைக்கை நிறுத்திட்டு காத்துண்டு இருப்பாங்க. கடைக்காரர் முறைப்பார்! (கடையின் ஸ்டோர் ரூமில் எல்லாம் பைக்கை வைக்கக் கூடாதாமே?)

8.மை நைனா இஸ் எ உலக மகா நச்சு கேஸ். அவர் ஓட்டவும் மாட்டார். மதர் தெரஸா பின்னாடி உக்காண்டு நச்சிண்டே போறது!  தெருவின் நடுவில் ஏதாவது பள்ளம் வந்தால் கொஞ்சமே கொஞ்சூண்டு ஹேண்டிலை திருப்பி தள்ளி ஓட்டிண்டு போறதெல்லாம் ரொம்பவே போர்க்கால நடவடிக்கை ஃபார் மை மதர் தெரஸா! நைனா கதறக் கதற பள்ளத்துக்குள் டமால்ன்னு வண்டியை இறக்க - ஏத்தி, பைக்குடன் சோமர்சால்டெல்லாம் அடிச்சு...  பாவம் தி நைனா.. வீட்டுக்கு வந்து உங்கம்மா கூட வண்டியில போனா உடம்பெல்லாம் வலிக்கிதும்பார்! நேரா பள்ளத்தையோ அல்லது ரோட்டுக்கு நடுவில் இருக்கும் பெரிய கல்லையோ  டார்கெட் பண்ணி ஓட்டுறாங்களாம்!

9. ரோட்டில் அம்மா போகும்போது யார் ஹான் அடிச்சாலும் இம்மீடியட்டாக அவருக்கு வழி விடப்படும். தேவைப்பட்டால் சைடில் இருக்கும் டிவைடரின் மேல் வண்டியை ஏத்தி நின்னுப்பாங்க. ஆனா நிச்சியம் மத்தவாளின் செளரியமும் நேரமும் தான் முக்கியம்!

10.சின்ன்ன பூனைக்குட்டி போனாலும் உயிரைக்கொடுத்து சேம்பின் ஹான் அடிக்கப்படும். ஆனால் அதுவோ ட்ராஃபிக் சத்தத்தில் அடிக்கும் மொபைல் மாதிரி ஹீனஸ்வரத்தில் மந்த்ரஸ்தாயியில் தான் அடிக்கும்!

11.அதுல பாருங்க முகலிவாக்கம் ரொம்ப பாஷ் லொக்காலிட்டி. ஹான் அடிச்சா எல்லாம் ஒருத்தரும் நகரமாட்டா! நாம தான் ஹான் அடிச்சுண்டே வளைஞ்சு வளைஞ்சு மாட்டு மந்தை கூட்டத்தை தாண்டி போயாகணும். நாங்க மெயின் ரோட்டுக்கு போய் ஏதாவது வாங்கிண்டு வரணும்னா 20 நிமிட்ஸ் ஆகும். ஆனா மதர் தெரஸா போனாசுமார் 1.15 மணி நேரம் ஆகும். பின்னே? அவா எல்லாரும் (காலேல தூக்கக் கலக்கத்தில்) மொள்ள நடப்பா. மதர் அவா நகரும் வரை பிரேக் போட்டு காத்துண்டு இருந்து அதுக்கப்புறான்னா காய்கறி கடைக்கு போவா?

12. ஒரு வேளை மை மதர் தெரஸா நாம பின்னாடி உக்காண்டு வந்தால், நாம கண்ணை தகிரியமா மூடிண்டுடலாம்! ஏன்னா மதர் தெரஸா,” ஓரமா போ, மெதுவா போ, ஸ்லோ பண்ணு, பஸ் போகட்டும், சேலை முள்ளுல விழுந்தாலும் முள்ளு சேலையில விழுந்தாலும் நஷ்டம் என்னமோ சேலைக்குத்தான், பாத்து அவன் இடிக்கற மாதிரி வரான், அவனை முன்னாடி விட்டுடு, நமக்கு அவசரம் இல்லை(நிஜம்மாவே அவசரமா இருந்தாலும்) , இன்னும் நிறைய்ய்ய்ய்ய்ய டயம் இருக்கு” போன்ற பொன்மொழிகளை ஒப்பிச்சுண்டே வருவார்! அதாவது ஓட்டாமல் வண்டியை ஓட்டுவார்!

என்னதான் இத்தனை பிரச்சினைகளும் இருக்கட்டுமே, நான் ஷீரடிக்கு சென்றிருந்த போது, தி நைனாவுக்கு ஒரு தடவை டயப்படீஸினால் பாராலிட்டிக் அட்டாக் வர, மனந்தளராமல்,  தனியாளாக பைக்கில் போரூர் ட்ரன்க் மெயின் ரோட்டில்நைனாவை அவ்வை சண்முகி மாமி மாதிரி அழைச்சுண்டு போய் ராமச்சந்திராவில் அட்மிட் செய்து அவரை காப்பாற்றிய அம்மவாரு திஸ் லக்ஷ்மி! அதே மாதிரி நடக்குமான்னு நினைச்சுண்டு இருந்த மை கல்யாணத்துக்கு மண்டபம் ஃபிக்ஸ் பண்ண பைக்குல போனதும் தி மதர் லக்ஷ்மி தான்!

ரங்ஸ் வெர்ஸஸ் வெஜிட்டபிள்ஸ்

 காய்கறி வாங்கிண்டு வரதுல இந்த ரங்க்ஸை மிஞ்சவே முடியாது. அப்புடி ஒரு கெட்டிக்காரத்தனம்ன்னேன்.

கல்யாணம் கழிஞ்சு துபாய்ல குடியேறின புதுசுல எனக்கு சதா பீன்ஸ் கேரட் சாப்பிட்டு அலுத்துப் போயிடுத்து. இந்த வெண்டைக்காய், வெண்டைக்காய்ன்னு ஒரு சமாஜாரம் நம்மூர்ல உண்டே.. அதெல்லாம் இங்கே கிடைக்காதான்னு ரொம்ப ஏக்கமா கேட்டேன். ”நான் ஷார்ஜாவுல இருக்கேன். வர வழியில லூலூ ஹைப்பர் மார்கெட்ல பார்த்து வாங்கிண்டு வரென்ம்மா”ன்னு ஃபோன்ல சொன்னார். ஆஹா ஆஹான்னு அன்னிக்கின்னு (RVS அண்ணா மாதிரி) எம்ளிச்சம்பழ ரஸத்தை எல்லாம் உண்டாக்கி வெச்சுண்டு காத்துண்டு இருந்தா.. ரங்ஸ் மிகப்பெரிய பிரும்மாண்டமான லூலூ கேரி பேக்கை என் கையில கொடுத்தார். நான் கூட ரொம்பவே ஆவலா பிரிச்சு பார்த்தா, அதுல ஒரே குழந்தைங்க சமாச்சாரமா இருக்கு. அதான் அவருக்கு பிடித்தமான ஜூஸ், சாக்கலேட், கிட்கேட், லிண்ட்ஸ்,பொட்டேட்டோ சிப்ஸ் இத்யாதி இத்யாதிகள்.

என்னன்னா வெண்டைக்காய் கிடைக்கலையான்னு கேக்கறேன், “ஓ வாங்கினேன்மா”ன்னார். நிராசையுடன் மேலும் தேடினேன். பார்த்தா எண்ணி.. மக்களே.. இதை டைப்படிக்கும்போதே கண்ல தாரை தாரையா கண்ணீர் பெருகுது மக்களே.. நம்புங்க.. எண்ணி... ஆறே ஆறு வெண்டைக்காய் வாங்கிண்டு வந்திருக்கார். ”இந்த ஜென்மத்துல இதுக்கு முன்னாடி நீங்க வெண்டைக்காய் வாங்கினதேயில்லியா?”ன்னு கேட்டுப்புட்டேன். நான் என்னத்த கண்டேன்.. இவருக்கு அளவு சொன்னாத்தான் வாங்கத்தெரியும்ன்னு. ”என்னமா வெண்டைக்காய் ஃப்ரெஷ்ஷா இருக்கா?” ன்னு ஒரு அசட்டுக் கேள்வி வேற.. அன்னிக்கித்தான் என்னுடைய நான்ஸ்டிக் பேன் வளைஞ்சுடுத்து. சரி வுடுங்க.

அப்போத்தான் தி லா ஆஃப் வெஜிடபுள்ஸ் டிமினிஷிங் அப்பான் குக்கிங்க்ற புத்தம் புது கான்ஸெப்டை இவருக்கு சொல்லிக்கொடுத்தேன். அதுக்கப்புறம் ஒழுங்கா முக்கால் கிலோ வெண்டைக்காய் வாங்கிடுவார். என்ன.. எல்லாம் முத்தலா இருக்கான்னு பார்த்து தான் வாங்குவார்! இளசா இருந்தா வேற கடை பார்த்துக்கலாம்ன்னு கிளம்பிடுவார்.

இருக்கறதுலேயே மஹா மட்டமான அழுகல் முத்தல் வெம்பல் காயெல்லாம் அள்ளிண்டு அது 2 திர்ஹாம்ன்னா இவர் உடனே “உனக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம்”ன்னு 3.5 திர்ஹம்ன்னு பேரம்(!) பேசி வாங்கிடுவார். மை ராஸ்ஸ்ஸா! அப்படியெல்லாம் பண்ற அன்னிக்கு காய்ஞ்ச மிளகாய், பச்சை மிளகாய், குறுமிளகு, வஸாபி எல்லாம் சேர்த்து அரைச்சு கண்ல மையா இட்டு அழகு பார்ப்பேன்.

”இதைப்பாருங்கோ காய்கறி எப்படி வாங்கறதுன்னு சொல்லித்தரேன் ”ன்னு சொல்லி கால்தியா மால் லூலூவில் ஸ்பெஷல் க்ளாஸெல்லாம் எடுத்தால் நான் சொல்லுவதை கவனிக்காமல் அங்கு வந்திருக்கும் நம்மூர் பெண்களை சைட்டடிச்சுண்டு இருக்க வேண்டியது!

அபுதாபியில இருக்கும்போது பாஸ்ப்போர்ட் ரோட்டில் ஃபாத்திமா சூப்பர் மார்கெட்ன்னு ஒரு மலையாளி கடை. அவன் மேல இவருக்கு டீப்பு லவ்வு. இவர் அந்தக் கடைக்கு போறதா இருந்தா, அவன் இவர் வருகையை முன்னமே கேமிராவுல பார்த்துடுவான். உடனே அங்கே இருக்கறவா கிட்டே ஜாடை பண்ணி உள்ளே இருக்கும் அழுகல், முத்தல், வெம்பல், தூக்கியெறிய வெச்சிருக்கும் காய்கறியை ரெடியா எடுத்து மேல வெச்சுடுவான். இவர் அவனை பார்த்த உடனே வழக்கம்போல” பிஸ்னஸொக்கே எங்ஙனெயுண்டு சேட்டா”ன்னு பல்லிளிச்சுண்டே பேசிண்டு இருக்கும்போது அவன் நைஸ்ஸா வாடல் முட்டைக்கோஸ், அழுகல் தக்காளி பூச்சி விழுந்த கத்திரிக்காய், வெள்ளையாய் போயிருக்கும் ஃப்ரெஞ்ச் பீன்ஸ் எல்லாத்தையும் இவர் தலையில கட்டிருவான். என் வீட்டுல இருக்கும் முக்கால் வாசி பாத்திரங்கள் நெளிஞ்சு, நொங்கு விழுவதற்கு முழு முதல் காரணமும் ஃபாத்திமா சூப்பர் மார்கெட் தான் என்றால் அது மிகையாகாது!

கீரையெல்லாம் வாங்க அனுப்பினோமானா, அது என்னமோ 6 மணி நேரம் ட்ராஃபிக்ல சிக்கி தத்தளிச்சு வந்த மாதிரி ’ஹோ’ன்னு தலையெல்லேம் கலைஞ்சு கையெல்லாம் ஹேன்ட்ஸப்புன்னு சொல்ற மாதிரி தான் இருக்கும். அப்படியே வாங்கி அப்படியே தூக்கி எறிஞ்சுடலாம். என்னிக்கி நீங்க காய்கறி வாங்க கத்துப்பீங்க?ன்னு ஒரே சண்டை தான்..

அன்னிக்கி அப்படித்தான் காலிஃபிளவர் வாங்கிண்டு வரேளான்னு கேட்டேன். பழைய நிகழ்வெல்லாம் ஃப்ளாஷ்பேக்கா வந்து கண்கள் பயத்தினால் வியர்த்து, எப்படி இருக்கணும்ன்னு கேட்டார். ஃப்ரெஷ்ஷ்ஷா இலையெல்லாம் கல கலன்னு பச்சையா இருக்கும், பார்த்தாலே தெரியும்னு சொன்னேன். பூவின் மேலெல்லாம் பச்சை பச்சையா ஃபங்கஸ் படர்ந்த காலிஃபிளவரை வாங்கிண்டு வந்துட்டார். சரி சரி லெட் அஸ் லேர்ன் தி ரைட் வேன்னு சொல்லிக்குடுத்தேன். பாத்தேளா இப்படி இருக்கவே கூடாது.. இந்த பச்சை படர்ந்து இல்லாம, ஒயிட்ட்ட்டா இருக்குமே அதான் ஃப்ரெஷ் காலிஃபிளவர்ன்னு சொன்னேன். உடனே.. அடுத்த வாட்டி மஞ்ஞளா வாங்கிண்டு வந்துட்டார். அந்தப்பூவின் ஸ்டெம் எல்லாம் என்னமோ போலியோவினால் பாதிக்கப்பட்டமாதிரி நோஞ்சானா இருந்தது. “நீ தானே பச்சையா இருக்கக்கூடாதுன்னு சொன்னே”ங்கறார்! வந்துதே கோபம் எனக்கு! பச்சையா இருக்கப்பிடாதுன்னா.. வெள்ளையா இருக்கணும்ன்னு சொன்னேனா இல்லியா? இப்படி மஞ்சளா வாங்கிண்டு வந்திருக்கேளேன்னு மேற்கொண்டு சில பல டம்ளர்களும் - கரண்டிகளும் வளைந்து காயமடைந்தன!

அப்போவாவது திருந்தினாரா? இல்லை.. கரும்புத் துண்டு வாங்கிண்டு வராராம். சுய உதவித்திட்டம். என்கிட்டே சொல்லாமக் கொள்ளாம, பக்கத்துல எவன் கிட்டேயோ போய் ”பிஸனெஸ் எல்லாம் எப்படி போகுது?”ன்னு கேட்டுண்டே நுனிக்கரும்பா வாங்கிண்டு வந்திருக்கார்! எனக்கான செம்ம்ம்ம காண்டு.. நியூ இயருக்கு இண்டக்‌ஷன் ஸ்டவ் கூட ஃப்ரீயா கிடைச்சதோன்னோ.. அந்த இண்டக்‌ஷன் பேஸ் குக்வேர் தவாவை... சரி வுடுங்க..

இனிமேல் இவரை கடைக்கு அனுப்பினா அடுக்களையில் இவரை அடக்குவதற்கு வேறொன்றும் கிடைக்காதபடியால், உங்கள் வீட்டு பழைய பாத்திரங்களையும், பேன், ஹண்டி, குக்கர் (குக்கர்வெயிட் ரொம்ப முக்கியம், அதை மறந்துடப்போறீங்க), தவா, போன்ற எல்லா பொருட்களையும் நான் அதிக லாபத்துக்கு (உங்களுக்கு) உங்க கிட்டேந்து வாங்கிக்கறேன். பழைய குக்கர், பழைய பேன், பழைய தவா.. பழைய குக்கர் வெயிட், பழைய வாஷர், பழைய தோசைத்திருப்பி, பழைய வால் பாத்திரம், பழைய இடுக்கி, பழைய பணியாரக் கல்லு, அதை திருப்பும் குச்சி... இப்படி எதுவா இருந்தாலும் நல்ல விலைக்கி எடுத்துக்கறேங்க.. ஒரு ஸ்கூட்டரை எடுத்துண்டு மைக் வெச்சுண்டு கூவிக்கினே ஒரு பெண் உங்க தெருவுல வந்தா, அது நானாகத்தான் இருக்கும்! நன்றி! நமஸ்காரமுலு!
Related Posts with Thumbnails