Pages

Sunday, April 4, 2010

சினிமாப்பக்கம்

இந்த வார இறுதியில் ஏகப்பட்ட படங்கள் பார்த்தோம். ஒரே குழப்பமாக இருக்கு! புதன் இரவே பார்க்க ஆரம்பிச்சுட்டதால, ஓரளவிற்கு கவர் பண்ணிட்டோம்!!! ஹீ ஹீ..

வழக்கம் போல ஒரு சில படங்கள் தான் தேரித்து. அதுல நினைவுல நின்ற படங்கள் இவை.



ஃப்ராஸ்ட் நிக்ஸன்(2008)

இந்த படத்தோட டி.வீ.டீ ரொம்ப நாளா எங்க வீட்டு ட்ராவுல இருந்தது. நான் கூட பேரைப்பார்த்தப்போ ஏதோ கிக் பாக்ஸிங்கு படம் போல இருக்கு.(மைக்டைசன் மாதிரி ஃப்ராஸ்ட் நிக்ஸன்னு பட்டிக்காட்டுத்தனமா நினைச்சுண்டு) மொக்கைன்னு பார்க்காம விட்டுட்டேன். ”இது என் கொலீக்கோட சீ.டீ ரிட்டன் பண்ணனும்”ன்னு இவர் சொல்ற வரைக்கும் அதை தப்பித்தவறி கூட போடலை! படம் ஆரம்பிச்சப்போ தான் தெரிஞ்சது இது ஒரு 1977ன் மிகமுக்கியமான வரலாற்று நிகழ்வை வெச்சு எடுக்கப்பட்டதுன்னு. ஆரம்பத்துல நம்ம முதல்வன் கதையோன்னு கொஞ்சம் யோசிக்க வைச்சாலும் போகப்போக படம் சூடு பிடிச்சது. ஆனா க்ளைமாக்ஸுல ரொம்ப சாதாரணமா சொல்லி சப்புன்னு முடிச்சுட்டாப்புல எனக்கு ஒரு ஃபீலிங்கி.

ஒரு ஜனாதிபதி தான் பண்ணிய ஊழலை ஒப்புக்கொள்ளாமல் ஜகா வாங்கிண்டு ராஜினாமா செய்யறார். ஒரு காமடி பீஸாக கருதப்பட்ட டீ.வீ நிருபர் இவரை பேட்டி எடுக்கறதுக்கு 2 மில்லியன் டாலருக்கு 12 எபிசோடுகள் ஒப்புதல் போடுறார். பேட்டியில் ஜனாதிபதி பயங்கர டபுள் கேம் ஆடி, வளவளவென்று பேசிப்பேசியே மரண மொக்கை போட்டு நேரத்தை கடத்துகிறார். ”2 மில்லியன் டாலர்களை முழுங்கி விட்டு, கடைசியில் ஒரு விஷயமும் கிரஹிக்க முடியவில்லையே இந்த மொள்ளமாரியிடம்” என்று ஃப்ராஸ்டு நொந்து போகிற இடம் தூள்! கார்ப்பொரேட் டிப்ளோமசியுடன் (வெளியே சிரிப்பு, உள்ளே கடுப்பு) கூடிய அனல் பறக்கும் வசனங்களுடன் என்ன நடக்கிறது என்பது தான் க்ளைமாக்ஸ்!இந்த படத்தில் முக்கியமானவர்கள் ஜனாதிபதியும் அந்த நிருபரும் தான். இரண்டே நடிகர்களைக்கொண்டு இவ்வளவு விறுவிறுப்பான (நிஜக்)கதை சொன்ன விதத்துக்கு ஒரு ஷொட்டு! ஜனாதிபதி ஜார்ஜ் நிக்ஸனாக நடிச்ச ஃப்ரான்க் லாஞ்செலாவுடன் போட்டி போட்டுக் கொண்டு, பிரிட்டன் நாட்டை சேர்ந்த டேவிட் ஃப்ராஸ்ட்டாக  மைக்கல் ஷீன் நடிச்சிருக்கிறார். ரொம்ப நேர்த்தியான நடிப்பு. பெரிய அளவில் பேசப்பட்ட படம். நானும் பார்த்தாச்சு.

கேரளா கஃபே:

நாங்க மிடில் ஈஸ்ட் இண்டர்நேஷனல் ஃபில்ம் ஃபெஸ்டிவெலுக்கு போனப்போ இந்த படம் ஃபீச்சர்டுன்னு போட்ட ப்ரோஷர் பார்த்ததிலிருந்து, இந்த படத்தை பார்த்துடணும்ன்னு  எனக்கு பயங்கர ஆசை. தியேட்டரில் வந்தப்போ அபுதாபியில் ரிலீஸ் பண்ணலை.எனக்கு ரொம்ப வருத்தம். டாரண்டுல ஐலண்டு எக்ஸ்ப்ரஸ் மட்டும் டவுன்லோடு பண்ணி பார்த்தேன். அப்படி ஒண்ணும் இம்ப்ரெஸிவா இல்லே. உண்மை சொல்லப்போனா, பாதி புரியவே இல்லை. ரொம்ப கவிதை நடை வசனம். பேச்சே கொஞ்சம் கஷ்டப்பட்டுத்தான்  புரியும், கவிதை நடை வசனங்கள் எல்லாம் புரியறது பிரும்ம ப்ரயத்னமாச்சே. அதுனால சீ டீ வர்ற வரைக்கும் வெயிட் பண்ணுவது தான் உத்தமம்ன்னு நினைச்சு விட்டாச்சு. படம் பார்த்தப்போ நிச்சியம் ஏமாத்தலைன்னு தோணித்து. இது மாதிரி எல்லாம் தமிழ்ல முயற்சி கூட பண்ண முடியுமான்னு தெரியலை!

10 இயக்குனர்கள், 10 கதைகள். அதுல 7 அருமை! மலையாள திரையின் எல்லா (அ) முக்கால்வாசி நடிக நடிகையர்களை பயன்படுத்தி(மோஹன்லாலைத்தவிர) ஒரு அருமையான கலவை சாதமாக உருவாக்கி இருக்கிறார்கள். பத்துக்கு ஏழு என்பதே இந்த படத்துக்கு என்னுடைய ரேட்டிங்க்.

என் கருத்துப்படி முதல் 7 இடங்கள் தருவது இவற்றுக்கே:



1.தி பிரிட்ஜ் - நெகிழ்ச்சியோ நெகிழ்ச்சி. இந்தக்கதையின் எதிரொலி தான் மனதில் ஓடிண்டே இருக்கு. ஒரு அதிர்வு ஏற்படுத்தித்துன்னு சொன்னா அது மிகையில்லை.

2.புறம் காழ்ச்சகள் - மம்முட்டியின் ஆஹா நடிப்பு

3.மகள்- மனதைத்தொடும் கதை, இயக்குனர் ரேவதிக்கு ஷொட்டு!

4.ஹேப்பி ஜர்னி - ஜொள்ளர் ஸ்பெஷல்

5.அவிராமம்-குடும்ப பிணைப்பின் முக்கியத்துவம்

6.நாஸ்டால்ஜியா - கல்ஃப் மலையாளியின் யதார்த்த முகம்

7.ஐலண்டு எக்ஸ்பிரஸ்-ஹை ஸ்டாண்டர்டு மொழி, கதை ஓக்கே

8.ஆஃப் ஸீஸன்-சுராஜின் கலகலப்பு

9.ம்ருத்யுஞ்சயம்-புரியலை (அ) அப்படி பெருசா என்னை இம்ப்ரெஸ் பண்ணலை! ஹாரராம். சொல்லிட்டு எடுத்தா பரவாயில்லை!

10.லலித ஹிரண்மயம்- இதான் இந்த படத்தின் மொக்கை(யஸ்ட்டு) கதை!

கண்டிப்பாக சப்டைட்டில்ஸுடன் கூடிய டீவீடீ எடுத்துப் பார்க்கவும். ஹைலி ரெக்கமெண்டட்.

வைரம்:

இந்த படம் ஆஹா ஓஹோ என்று சில மாதங்களுக்கு முன் பேசப்பட்டது. ரொம்ப எதிர்ப்பார்ப்புகளுடன் எடுத்துண்டு வந்தோம். அப்படி ஒண்ணும் பெருசா தெரியல. நிறைய நெருடல்கள். கதை ஓரளவுக்கு டீவியில் பார்த்த காட்சிகளிலிருந்து ஊஹிக்க முடிவதா இருந்ததுகூட ஒரு காரணமா இருக்கலாம்.

உண்மைக்கதையை எடுத்ததுக்கு ஒரு பாராட்டு தரலாம்.


பசுபதி தமிழிலேயே பேசி நடிச்சு இருக்கலாம்.” எண்டே மோல்(மோள்)” என்று ஒய் ப்ளட் சேம் ப்ளட் ரேஞ்சில் மலையாளம் பேசியே அந்த வைரமணியை கொலை பண்றாரோன்னு எனக்கு டவுட்டு! நடிப்புன்னு பார்த்தா நாம் இதுக்கு முன்னாடியே இதெல்லாம் நாயகன்ல பார்த்தாச்சு. ஒரு டே ஜாவூ எஃபெக்டு. பத்தாக்குறைக்கு நம்ம சுரேஷ் கோபி டயலாக் பேசிப்பேசியே ரவுடிகளை நொறுக்கி எடுக்கும் காட்சிகள்! முடியல. ஓவராக்‌ஷன் கம்மி பண்ணாட்டி சுரேஷ் கோபியின் கரீயர் ஓவர் தான்.. யாராவது சொல்லுங்கப்பா.. எல்லாப்படத்துலேயும் ஒரே மாதிரி வக்கீல் வேஷம் தான் இவருக்கு. இந்த வாட்டி சம்பந்தமே இல்லாமல் முகேஷ் வருகிறார். ரொம்ப நேரம் வெட்டிப்பேச்சு பேசி கடுப்படிக்கிறார். ஆடியன்ஸ் பதபதைத்துக்கொண்டு இருக்கும் வேளையில் சுரேஷ் கோபியும் முகேஷும்,  இவர்கள் பழைய நட்பைப்புதுப்பிக்கும் வசனங்கள் எல்லாம் நற நற டைப்பாக எனக்கு தோன்றியது.

ஷங்கர் மஹாதேவனின் நாட்டு பாட்டு கேட்டோ பாட்டு கொஞ்சம் நல்லாத்தான் இருக்கு. ஆனா ’காற்றே’ங்கற வரியில ஒரு சாஃப்ட் ’ட’ போட்டு பாடாம,’ நாஞ்சி நாட்டு காட்டே’ன்னு அப்பட்டமா அழுத்திப்பாடி இருக்கறது பயங்கர சொதப்பல். நம்ம தமிழ் மாதிரி இவங்க பேசும் போது தப்பு செய்யறதில்லை. இருந்தாலும் இதை இவங்க அனுமதிச்சது எனக்கு பயங்கர ஆச்சிர்யம்! ரொம்ப ரொம்ப சுமார். ப்ளாட் மட்டும் ஓக்கே. திலகனும் கேபிஏசீ லலிதா நடிப்பும் படா தூள்!

டூப்ளிக்கேட்:

அதே எங்க வீட்டுப்பிள்ளையின் (2009?) ரீமேக். ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்,.. முடியல! இன்னும் எத்தனை வருஷ காலம் இதே மாதிரி எடுக்க போறாங்க? மலையாள காமெடி நடிகர் சுராஜை இப்படி எல்லாம் நடிக்க வைக்க வேண்டி இருக்கலை. மொக்கை படம். எல்லாத்துக்கும் மேல இந்த படத்தை இங்கே மென்ஷன் பண்ண ஒரு காரணம் இருக்கு. கோடீஸ்வரனான சுராஜின் கார் ஒரு விபத்துக்குள்ளாகுது. அது அப்படியே ஒரு பாலத்திலிருந்து தொபுக்கடீர்ன்னு தண்ணீருக்குள் விழறது! தூரத்துல இருந்து ஒரு வெள்ளைக்கார்ன்னு மட்டும் தெரியுது. இன்னொசெண்டும் இன்னொரு சுராஜும் உதவப்போறாங்க. பக்கத்துல போய் பார்த்தா, கோடீஸ்வரன் ஓட்டிக்கொண்டு வந்தது ஒரு அம்பாஸிடர் கார்! என்னால முடியல! என்னதான் லோ பட்ஜட் ஃபில்ம் மேக்கிங் என்றாலும் இப்புடியா? டூமச்! தயவு செஞ்சு இந்த படத்தை அவாய்டு செய்யவும். மெகா மொக்கை!

ஸ்டேட் ஆஃப் ப்ளே:

இந்த படத்த்தை பத்தி பார்க்கறதுக்கு முன்னாடி ஒரு அபிப்ராயமும் இருக்கலை. பார்த்தப்புறம் ரொம்ப பிடிச்சது. ஒரு பொலிட்டிக்கல் த்ரில்லர்ன்னு சொல்லலாம். ரொம்ப வித்தியாசமா இருந்தது. ரஸல் க்ரோ இருக்கறதுனால இவர் கொண்டு வந்தார். பென் அஃபெலக் என்ற நடிகரின் இறுக்கமான நடிப்பும், ரஸல் க்ரோவின் கண்டுபிடிப்புகளும் படத்தின் க்ரிப்பை அதிகரிக்க வைக்கின்றன.அருமையான திரைக்கதை. சஸ்பென்ஸை ஊஹிக்க முடியவில்லை! நாங்கள் இருவரும் இந்த படத்தை சோஃபா நுனியில் உட்கார்ந்து பார்த்தோம். ஸ்டேட் ஆஃப் ப்ளே ஸ்டேட் ஆஃப் டோட்டல் கேயோஸ் அண்ட் த்ரில்ன்னு சொல்லலாம். கண்டிப்பாக பார்க்கவும்.

Thursday, April 1, 2010

பேன்களும் சில பெண்களும்.

Statutory Warning - இந்த பதிவை படிக்கும்போது தலை அரிப்பதாக செய்திகள் வந்து கொண்டு இருப்பதால் முன் ஜாக்கிரதையாக சீப்பை பக்கத்தில் வைத்துக்கொண்டு படிக்குமாறு வேண்டுகிறேன்.


ச்சே என்ன அநன்யா இவ்ளோ டிஸ்கஸ்டிங் டாப்பிக் போய் எடுத்துண்டு இருக்கேன்னு கேட்பவர்கள் மேற்கொண்டு படிக்க வேண்டாம். நான் எல்லாம் டிஸ்கஸ்டிங் தான். (இந்த வரியை பின்னூட்டத்தில் quote செய்தால்,  நாஞ்சில், LK போன்றவர்களின் கருத்துக்கள், Unconditional ஆக நிராகரிக்கப்படும் என்பதை பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்)பெரிய சோஃபிஸ்ட்டிக்கேட்டட் ஒண்ணும் இல்லை. உள்ளது உள்ளபடி எழுதறேன். (இப்படி ஒரு சீரியஸ் ஸ்டார்ட்டிங் குடுத்தா தானே படிக்க தூண்டும் படி இருக்கும்?)






பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சேரும் வரை பேன் என்றால் என்ன என்றே தெரியாது எனக்கு. அடர்த்தியான கூந்தலில்(அட, நிஜமாத்தாங்க) ரெட்டை ஜடை போட்டுக்கொண்டு மடித்துக்கட்டிக்கொண்டு கருப்பு ரிப்பனில் 4 இதழுள்ள பூ வருவதுபோல knot போட்டுக்கொள்வேன். பள்ளியில் சேர்ந்த பதினைந்து நாட்களில் பேன் தொல்லை ஆரம்பமாகியது. மெதுவாக பென்சில் பேனா கொண்டு தலையை சொறிந்த நான், நாள் பட, காம்பஸ், டிவைடர் போன்றவற்றால் சொறிய ஆரம்பித்தேன். செல்லவ்வாவிற்கு ஒரே கவலை. கண்ணாடியை போட்டுக்கொண்டு வாசலில் உட்கார வைத்து, வேர்க்க விறுவிறுக்க குனிய வைத்து பேன் பார்ப்பார்.






எந்த விஷயத்திலும் என்னுடன் ஒத்துப்போகாத தங்கைமணி இந்த பேன் பார்க்கும் படலத்துக்கு மட்டும் ஓடி வந்து விடுவாள். எல்லோருக்கும் ஒவ்வொரு வீக்னெஸ் இருப்பது போல இவளுக்கு இந்த பேன் பார்க்கும் வீக்னெஸ். நன்றாக சிக்கு எடுத்து வாரிய பிறகு, ரெண்டு பேன்சீப்பால் ஆல்டர்னேட்டிவ்வாக,  செல்லவ்வா வாருவார்.  அவர், லாவகமாக அழுத்தி பேன் சீப்பை பிரயோகிக்க,தங்கை மணி, அந்த சீப்பை, வாழைப்பழத்தை பிடுங்கும் குரங்கு போல பிடுங்கி, பேன் தேடி சொடுக்குவாள். ஏன் உனக்கு இந்த ரத்த வெறி? என்று கேட்கத்தோன்றும் அளவுக்கு எல்லாப்பேன்களையும் சக்ரவ்யூஹம் அமைத்து கொல்லுவாள். சில பேன்ஸ் குடுகுடு என்று சீப்பின் பல்லிடுக்கில் நுழைந்து மறுபக்கம் ஓடி, தப்பிக்க பார்க்கும். இவளிடமா நடக்கும். ம்ஹூம். விரட்டி விரட்டி சொடுக்குவாள். சீப்பில் சாவட்டை எனப்படும் செத்த ஈர் இருந்தாலும் அதையும் விடாமல் சொடுக்கி பார்த்து பல்பு வாங்குவாள்.


இந்த செல்லவ்வா இருக்காரே, பாவம். ரோடில் ஒரு குறத்தி விடாமல் எல்லோரிடமும் ஒவ்வொரு ஈர்க்கொல்லி எனப்படும் நீண்ட உபகரணத்தை வாங்குவார். இது சரியில்லை, ஈர் வரமாட்டேங்குது என்பார். அந்த குறத்தி இதான் பெஷ்ட்டு என்று விற்று விட்டு போவாள். வீட்டில் மொத்தம் பத்தோ பதினைந்தோ, ஈர்க்கொல்லி இருக்கும். எல்லாவற்றாலும் என் முடியை பிடித்து இழுப்பார். முடி தான் வருமேயோழிய ஈர் பெப்பே காட்டி விடும். ”பாவம் குழந்தை, சதா தலையை அரிச்சுண்டே இருக்கா, அவளால் படிப்பில் கவனம் செலுத்த முடியறதில்லை” என்பார்..(ஐய்யோ பாவம்! செல்லவ்வா, பேன் தொல்லை மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் நான் தான் பத்தாவதில் ஸ்டேட் ஃபர்ஸ்ட் வாங்கி இருப்பேனே, என்னத்த சொல்ல?)






அடுத்ததாக பேன் அத்தியாயத்தில் நாம பார்க்க இருப்பது, எங்க ஸ்கூல் பெண்களை. முதல் முறையா, ஒருத்தி தலையில இருந்து எடுத்த பேனை,  அவள் கையில் கொடுத்தப்போ மிகவும் ஆச்சரியப்பட்டேன். அப்புறம் தான் தெரிந்தது, யார் தலையில் பேன் இருக்கோ, அவங்க தான் அதை சொடுக்கணும்ன்னு. அதான் பேனுலகின் எழுதி வைக்கப்படாத சட்டம்ன்னு தெரிஞ்சுண்டேன். அந்த பெண்களும் ஏதோ நோபல் பரிசை பெற்ற மாதிரி பெருமையுடன் வாங்கிக்கொள்வார்கள். சில ப்ரும்மஹத்திகள் ஜாமெட்ரி பாக்ஸில் போட்டு பத்திரப்படுத்தும். அப்புறம் சொடுக்குவதற்காம்! முடியல!




இந்த பேன் ஆப்ஸர்வேஷன் இருக்கே ரொம்ப இண்ட்ரெஸ்டிங்கா இருக்கும். நம்ம பெஞ்சுக்கு முன்னாடி உட்காரும் பெண்ணின் பின் தலையை நோட்டம் விட்டுக்கொண்டே இருந்தோமானால் சுமார் 30 பேன்கள் வாக்கிங் போய்க்கொண்டு இருக்கும். சிலதுகள், மேலிருந்து உள்ளே டைவ் அடித்துக்கொண்டு இருக்கும். சிலதுகள் மக்குசுப்பன் கணக்காக தேமே என்று ஒரே இடத்தில் இருக்கும். இந்த பெண்ணின் தலையில் இவர் அம்மா அழகாக எண்ணெய் தேய்த்து விட்டு மிகத்துல்லியமாக வகிடு எடுத்து சமமாக பிரித்து ஜடை பின்னி இருப்பார். ஆனால் பாருங்கள், இரு புறமும் நரைத்த முடியோ என்று பதறும் அளவுக்கு கொட்டிக்கிடக்கும் சாவட்டை ஈர்களைப்பற்றி கவலையே பட்டிருக்க மாட்டார். இந்த சாவட்டை ஈர்கள் இரு புறமும் எழுந்து நின்று சல்யூட் அடிக்க, வகிட்டின் நடுவில் இருந்து பேன்கள் மார்ச்பாஸ்ட் பண்ணிண்டு இருக்கும்கள். வயல் வரப்பின் நடுவில் பாத்தி கட்டி இருப்பார்களே அதே மாதிரி வகிட்டில் நடந்து போய்க்கொண்டு இருக்கும். சில பேன்ஸ் பின்னங்கழுத்தில் குடி கொண்டு இருக்கும். சிலது காதுகளின் பின்னாடி தஞ்சம் புகும்.






சில தில்லாலங்கிடிகள், பேன்ஸை தன் தலையில் தடவித்தடவியே பிடித்துவிடுவது வழக்கம்! அவர்களுக்கெல்லாம் சிலை வைக்கவேண்டும் என்று நினைத்துக்கொள்வேன். சில குரூர பெண்கள் பிடித்துத்தரும் பேன்ஸை அவர்களுக்கு பிடிக்காத எதிரி பெண்களின் தலை மேல் போட்டு விட்டு வருவார்கள்! ராட்சஸிகள்.






ரொம்ப ப்ரயத்னம் பண்ணி வசம்பு தேய்த்து, வேப்பெண்ணை தேய்த்து, புஸ்தகத்தில் வரும் (ஏடாகூட) டிப்ஸ் எல்லாம் படித்து தலைகீழே நின்று பார்த்தாச்சு. பேன் தொல்லை ஒழியவில்லை. கென்ஸ் வாங்கிண்டு வா என்று என்னைத்தான் கேசவ முதலியார் கடைக்கு அனுப்பினார்கள். அவரும் தலை சொறிந்துகொண்டே எடுத்துக்கொடுத்த கென்ஸை என் தலை பேன்ஸ் தம் ப்ருஷ்ட பாகத்தால் சிரித்தே விரட்டின. கென்ஸும் என்னிடம் படுதோல்வி அடைந்தது. அப்போ தான் மார்க்கெட்டில் மெடிக்கர் வந்தது. ஒரு 30 வாட்டி தலை அலசியதலாலும், செல்லவ்வாவின் கடின உழைப்பாலும்  தலையில் அரிப்பு குறைந்தது. மெதுவாக பேன் தொல்லை ஒழிந்தது.






சரி இப்போ எதுக்கு பேன் பத்தின பதிவுன்னு தானே கேக்கறீங்க? எல்லாரும் ஏப்ரல் ஒண்ணு முட்டாள்கள் தினம்ன்னு ஏடாகூட பதிவு போடுறாங்க. நான் ஒரு சின்ன விஷயம் சொல்றதுக்கு தான் இவ்ளோ பெரிய முன்னோட்டம்.


இரண்டாவது பத்தியில் தங்கை மணியை பத்தி சொன்னேன் இல்லையா? இதே மாதிரி ஏப்ரல் 1, 1989 என்று நினைக்கிறேன். லீவு விட்டு இருந்தார்கள். வீட்டில் என்ன செயவதென்று தெரியாமல் இருந்த போது தனது அசகாய திறமையினால் என்னை சுமார் 25 வாட்டி முட்டாளாக்கிய தங்கை மணி என்னிடம் ஒரு முறை கூட முட்டாளாகவில்லை. எனக்கு ரொம்ப மூட் அவுட். அதென்ன நாம் மட்டும் ஆவது இவள் தப்பிப்பது என்று தீவிரமாக யோசித்த நான், அவளை லாவகமாக முட்டாளாக்கும் முயற்சி தொடங்கினேன். கொஞ்ச நேரம் தலையை தடவுவது போல பாவலா செய்து கொண்டிருந்தேன். த.ம நோட்டம் விட்டுக்கொண்டு இருந்தாள். மெதுவாக ஆக்டு கொடுத்தேன். “அம்மா, அம்மா, நான் ஒரு பேனை பிடிச்சு இருக்கேன். கொழு கொழு பேன், நீங்க எடுத்துருவீங்களாம்மா? விட்ற மாடீங்களே?” என்று பில்டப்பு எல்லாப் பலம்மாக டெவலப் செய்தேன். ஸ்லோ மோஷனில், தங்கை மணி ஓடி வந்து என் தலையை தாக்கினாள். நானும் ஸ்லோ மோஷனில் என் கையை எடுக்க, பேன்......... காயப், ஹோத்தோ, போயிந்தே, போயேபோச்சு, சோலெகாச்சே, இட்ஸ் கான்! ஏப்ரல் ஃபூல் ஏப்ரல் ஃபூல்...
Related Posts with Thumbnails