Pages

Saturday, March 27, 2010

திவாகர ப்ரத்யக்ஷ மஹிமை

தொடர்பதிவுக்கு அழைத்த அப்பாவி தங்கமணிக்கு நன்றிகள்.

டிஸ்கி: திவாகரன் அ திவாகர் என்ற பெயருடைய எவரையும் இந்த கட்டுரையில் குறிப்பிடவில்லை என்பதை பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

சுமார் எட்டு வருடங்களாக எனக்கு வரன் தேடித்தேடி நொந்து போன என் பெற்றோர் எப்படியாவது கல்யாணம் ஆனா சரின்னு முடிவு பண்ணிவிட்டார்கள்.

குப்பை பொறுக்கும் பையனிலிருந்து வேர்க்கடலை மடிக்கும் வண்டிக்காரன் வரை எல்லோருக்கும் பல்க்காக கிடைத்த ஒரே பேப்பர்க்கத்தை என் ஜாதகம்! எங்கப்பா ஒரு பிரிண்டிங் ப்ரெஸ் வெச்சா சீப்பா இவ ஜாதகம் சர்குலேட் பண்ணலாம் என்று நினைக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டது. சுமார் நூற்றுக்கும் மேல பையன் வீட்டார் வந்து பார்த்தாச்சு. இருநுறுக்கும் மேல ஃபோட்டோக்கள் விதவிதமான புடவைகள் கட்டி, சுடிதார் போட்டும், சிரித்தும், முறைத்தும். லொக்கேஷன் சேஞ்சு பண்ணியும், ஃபோட்டோகிராஃபர்கள் ராசி பார்த்தும், சில சமயம் தலையை வழித்து வாரியும். சில சமயம் தூக்கி வாரியும். சில சமயம் குங்குமம் வைத்தும், சில சமயம் விபூதி வைத்துக்கொண்டும், என்னென்னமோ பரீக்ஷ்ணம் எல்லாம் பண்ணி பார்த்தாச்சு. ஒண்ணுமே நடக்கலை. செல்லவ்வா சில சமயம் செடியை குறை சொல்லுவார் சில சமயம் புடவையை குறை சொல்லுவார். மொத்தத்தில ஜிப்ஸி ட்ரெஸ் அணிந்து கொண்டு நடராஜர் மாதிரி போஸ் கொடுக்காதது தான் பாக்கி. அந்த அளவுக்கு வரைட்டி பண்ணியாச்சு என்னை எடுக்கப்பட்ட ஃபோட்டோகள் எல்லாமே ஏனோ தெரியவில்லை சொல்லி வைத்தாற்போல கண்றாவியாய் தான் இருக்கும்..பல பிருஹஸ்பதிகள் வந்து என்னை பார்த்திருக்கிறார்கள். சிலருக்கு என்னை மிகவும் பிடித்து விடும் பார்த்தால் அதுகள் 10வது பாஸ் என்றிருக்கும். பலருக்கு பாவம், வந்து பார்த்துவிட்டு ஜாதகம் பொருந்தவில்லையாம். பெரும்பாலானவர்களுக்கு பாருங்கள், ஹைட் கம்மி, கலர் கம்மி போன்ற கம்ப்ளெயிண்டுகள். எல்லோருக்கும் அவரவர் விருப்பு வெறுப்பு இருக்குமே.அப்பா அம்மாவின் கஷ்டம் தான் மனதை மிகவும் பாதித்தது. சரி நாமே தேடுவோம் என்று தங்கைமணி ஏற்படுத்திய மேட்ரிமோனி ஐடி கொண்டு தேட ஆரம்பித்தேன். ஒரு மாதத்தில சுத்தமாக வெறுத்து விட்டது. எல்லோருமே வெறும் டைம்பாஸூக்காகத்தான் இந்த தளத்தில இருப்பது போன்ற ஒரு பிரமை. யாருமே சீரியஸாக பெண்ணோ பையனோ தேடுவதில்லை என்று தோன்றியது.போகட்டும் விடுங்கள் என்று பெற்றோரை சமாதானப்படுத்தி விட்டு தேமே என்று கால் செண்டரில் ஃபோன் கால்கள் மானிட்டர் செய்து கொண்டு இருந்தேன்.

2005 ஜனவரியில் ஏதோ எதேச்சையாக மேட்ரிமோனியல் ஐடியை திறந்து பார்த்த போது ஒருவர் விண்ணப்பித்து இருந்தார். அவருக்கு என் ப்ரொஃபைல் மிகவும் பிடித்து இருக்கிறதாம். ஜாதகம் வேணுமாம். ஆஹா.. ஜாதகம் கேட்கிறார்களே என்று அம்மாவை அழைத்தேன். மேற்கொண்டு முன்னேறியது ஆனால் அவர்களுக்கு ஜாதகப்பொருத்தம் இல்லை என்று கூறிவிட அது இல்லை என்று ஆயிற்று.இதற்குள் நான் வேறு வேலை மாறி பெங்களூர் சென்று குடியேறி விட்டேன். நல்ல வேலை அமைதியான வாழ்க்கை என்று இருந்த எனக்கு இதே வருட ஜூன் மாதம் ஒரு ஈ மெயில். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? உங்களுக்கு வரன் திகைந்து விட்டதா என்று கேட்டிருந்தார் அந்த பழைய புரொஃபைல் காரர். அதான் ஜாதகம் பொருந்த வில்லையே அப்புறம் ஏன் கேட்கிறீர்கள் என்றேன். தலைகீழாக நின்றாவது நான் உங்களை தான் திருமணம் புரிவேன் என்று ஒற்றைக்காலில் நின்றார். வீட்டில் தெரிவித்து மேற்கொண்டு ஏற்பாடுகள் ஆயின. சரி ஒரு வழியாக எனக்கு திருமணம் ஆகும் போல இருக்கிறதே என்று பெற்றோருக்கு மிகவும் மகிழ்ச்சி.கிட்டத்தெட்ட இது தான் என்று முடிவு ஆகி விட, ஜூலை மாதம் நான் மீண்டும் சென்னையில் தஞ்சம் புகுந்தேன். இவருடன் ஒரு மணி நேரம் சாட் பெர்மிஷன் தந்திருந்தார் அம்மா. அவர் துபாயில் வேலை, ஷார்ஜாவில் குடியிருந்தார். வார இறுதியில் ஒரு முறை வெப்காமில் வந்தார். ஆக, நான் அவரை ஒரு முறை தான் பார்த்திருக்கிறேன். என்னுடைய பழைய ஆல்பத்தில் சில பல போட்டோக்கள் இவருக்கு அனுப்பி இருந்தேன்.ஒரு நாள் இவரிடம் இருந்து வீட்டு நம்பருக்கு ஃபோன்.”எனக்கு லேபர் பெர்மிட் கிடைச்சாச்சு, எக்ஸிட் பண்ணனும் நான் பெஹ்ரைன்ல இருக்கிற என் ஃப்ரெண்டாத்துக்கு போறேன் ” என்றார். அடுத்த நாள் நான் பாஸ்போர்ட்டு ஆபீஸ் போவதாக இருந்தது. என்னை பாஸ்போர்டு எடுக்கச்சொல்லி இவர் சொல்லி இருந்தார்.” அப்போ நீ நாளை பாஸ்போர்டு ஆபீஸ் போகறியா” என்றார். ஆமாம் என்றேன். ”என் ஃப்ரெண்டு திவாகர் இருக்கான் அங்கே. அவனை போய் பார். உனக்கு வேண்ட ஹெல்ப் பண்ணுவான்” என்றார். ”சரி அந்த திவாகர் நம்பர் குடுங்கோ ”என்றேன். ”இல்லை, நான் அவன் கிட்டக்க உன் நம்பர் கொடுத்து இருக்கேன் அவனே உன்னை கூப்பிடுவான்” என்றார்.மறு நாள் எனக்கு தெரியாது என் வாழ்விலேயே மறக்க முடியாத வெள்ளிக்கிழமை அது என்று . ஜூலை மாத வெயிலுக்கு ஏற்றார்போல ஒரு காட்டன் புடவையை சுற்றிக்கொண்டு நான் பாஸ்போர்டாபீஸூக்கு போனேன். கியூவில் நின்றப்போ ஒரு ஃபோன் திவாகர் தான். ”எங்கே இருக்கிறீர்கள்? மஹாதேவன் உங்களைப்பற்றி சொல்லி இருக்கிறார். நீங்கள் இம்மிக்ரேஷன் ப்ளாக்குக்கு வாருங்கள் இப்போது” என்றார். அடடே, நமக்கு இன்னிக்கி டைம் நன்னா இருக்கு என்றவாரே, இம்மிக்ரேஷன் ப்ளாக்குக்கு நடந்தேன். மீண்டும் திவாகர் விளித்தார். ஹலோ ”நீங்க வந்தாச்சா” என்று.. எனக்கு ஏதோ சந்தேகம்.. எதுக்கு ரெண்டு வாட்டி ஃபோன் பண்றார் என்று. குரல் வேறு எங்கேயோ கேட்ட மாதிரி... என்று யோசனையில் ஆழ்ந்த்தேன்.பின்பக்கமாக ஹலோ என்ற குரல்.. திரும்பினால் இரண்டு கைகளையும் ஷாருக்கான் மாதிரி விரித்துக்கொண்டு ரொமாண்டிக் ஹீரோ போல ஒரு யுவன். ”இவன் தானா இவன் தானா” என்ற பாட்டு சம்பந்தமே இல்லாமல் என் மண்டையில் ஒலித்தது. முகம் கூட எங்கேயோ பார்த்தமாதிரி..... ”ஹய்யோ... நீங்களா? நீங்க பெஹ்ரைன் போகலியா?” என்று அலறினேன்.”இல்லை நான் இண்டியா தான் வந்தேன். இங்கே வந்ததே உன்னை பார்க்க தான். சர்ப்ரைஸ் ” என்றார் கண்சிமிட்டிய படியே. இவரை வெப்காமில் ஒரு வாட்டி பார்த்திருக்கிறேன். தலையே சுற்றி விட்டது. விட்டால் இவர் டூயட் பாடி விடுவார் போல இருந்தது. வேகமாக நகர்ந்து வெளியே வந்தோம். எனக்கு ஆச்சர்யம் அதிர்ச்சி, அவமானம், எல்லா ரசமும் ஒன்றாக சேர்ந்து முகத்தில டன் டன்னாக அசடு வழிந்த படியே நடந்தேன். இவரும் சிரித்துக்கொண்டே சிறு குழந்தை போல பேசிக்கொண்டு நடந்தார். நேச்சுரலா நீ எப்படி இருக்கேன்னு பார்க்கணும்ன்னு தான் இந்த ஐடியா.அப்படீன்னார். " ஓஹோ, சரி, எப்படி இருக்கேன்?” என்று சும்மாங்காச்சுக்கும் கேட்டேன். வழிந்த வழிசலிலேயே தெரிஞ்சதே.. இருந்தாலும் புகழ்ச்சின்னா யாருக்கு தான் பிடிக்காது..” ஜோரா இருக்காய்” என்றார். ஹப்பா நிம்மதி .. பெண் பார்க்க வந்தவங்க கிட்டே நான் பாஸ்.. என்ன ஒண்ணு சூழல் தான் வேறு.. சடங்கெல்லாம் ஒண்ணு தானே. அப்படியா ரெண்டு குடும்பமும் பேசியும் பரஸ்பரம் விரும்பியும் எங்க கல்யாணம் இனிதே நடந்தது.

ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே... கெட்டி மேளம் கெட்டி மேளம்!!!!

சுபம்!

தொடர் பதிவுக்கு நான் அழைக்க விரும்புவது

அண்ணாமலையான்

துபாய்ராஜா

ஸ்டார்ஜன்

ஹுஸைனம்மா

முகுந்தம்மா

36 comments:

ஜிகர்தண்டா Karthik said...

இவ்வளோ பெரிய தில்லாலங்கடியா அத்திம்பேர்... பாத்தா இந்த பூனையும் பீர் குடிக்குமா மாதிரி இருக்கார்...
செய்யற வேலைய பாத்தா ஒரு குவாட்டர கப்புன்னு கவுத்தர மாதிரி இல்ல இருக்கு... :)
சூப்பர் அனுபவம்... என்னிக்கும் மறக்கவே முடியாது...
ஏதோ மௌன ராகம் படத்துல வர கார்த்திக் மாதிரி பண்ணிருகார்....
ஹாட்ஸ் ஆஃப்....

முகுந்த்; Amma said...

அனன்யா, ரொம்ப சுவாரஸ்யமா எழுதி இருக்கீங்க. இந்தியாவில பெற்றோர் பெண்ணை கட்டி கொடுக்கிறதுக்கு படற கஷ்டத்தையும், பெண் பார்க்கபடும் போது நாம படற அவஸ்தையையும், கஷ்டத்தையும் அழகா சொல்லி இருக்கீங்க. மொத்ததில touching ஆ இருந்தது.

என்னையும் இதில மாட்டி விட நெனச்சதுக்கு நன்றி. ஆனா பாருங்க, எனக்கு இந்த மாதிரி ஒரு சான்ஸ் கிடைக்கவே இல்லயே, ஏன்னா, எங்களோடது Love marriage.

ஹி ஹி ஹி (Great எஸ்கேப் இல்ல)

அண்ணாமலையான் said...

ஆனா பாருங்க இது திகில் கம்மியா இருக்குது,,

Prathap Kumar S. said...

//என்னை எடுக்கப்பட்ட ஃபோட்டோகள் எல்லாமே ஏனோ தெரியவில்லை சொல்லி வைத்தாற்போல கண்றாவியாய் தான் இருக்கும்.. //

அங்க என்ன இருக்கோ அதாங்க போட்டோவுல வரும்... கேமராவை குத்தம் சொல்லி பிரயோசனம் இல்ல... :))

வசயசானவங்க எழுத வேண்டிய தொடர்பதிவா இருக்கே... எங்களை மாதிரி யூத்துக்கு இங்க என்னவேலை... எலே பசுபதி எட்றா வண்டியை....

Ananya Mahadevan said...

@ஜிகர்தண்டா,
மெளனராகம் கார்த்திக்.. அதே அதே! எனக்கு மட்டும் பயத்தில் வேர்த்து கொட்டி, நடுங்கி, அசடு வழிந்து, பழம் சாப்பிட்டு, குதூகலித்து எல்லாம் ஆச்சு!

@முகுந்தம்மா,
வாங்கின பல்பெல்லாம் அமிக்கிட்டேன், ரொம்ப லைட்டாத்தான் எழுதி இருக்கேன். உங்க ப்ளாக் லிங்க் விட்டுப்போச்சு. மன்னிக்கவும்.

@அண்ணாமலையான்,
திகில் எல்லாம் இருக்கட்டும். உங்களை தொடர் பதிவுக்கு கூப்பிட்டு இருக்கேன். கவனிக்க.

Ms.Chitchat said...

Enjoyed ur post. super a irukku. I can imagine the scene and the feelings behind it :):) Wish you both a very happy married life.

மங்குனி அமைச்சர் said...

நல்லா தான் இருக்கு , நீங்க என்னா பன்னிருகனும்னா , நான் அவள் இல்லை , அவளோட சிஸ்டர் , நாங்க ரெண்டு பெரும் டுவின்சுன்னு ஒரு புருடா விட்ருக்கணும்

ஹுஸைனம்மா said...

அப்பவே மஹாதேவன் சார் இத்தனை ஹீரோயிஸம்லாம் பண்ணிருக்காரா, அதான் குருவிக்காலுக்கெல்லாம் அஞ்சாம இருந்திருக்கார்.

ஏற்கனவே புதுகைத் தென்றலும் என்னை அழைச்சுட்டாங்க தொடரெழுத; நீங்களும் இவ்வளவு வருந்தி கூப்பிடும்போது வராம முடியுமா, இன்னிக்கே எழுதிடுறேன்.

ஸ்ரீராம். said...

”ஹய்யோ... நீங்களா? நீங்க பெஹ்ரைன் போகலியா?” என்று அலறினேன்"//

என்னங்க இவ்வளவு லேசா விட்டுட்டீங்க...பின்னால் நின்றவர் கிட்ட "நினைச்சேன்...ஹலோ...கொஞ்சம் பொறுங்கள் அநன்யா இதோ வந்துடுவாங்க..நான் அவங்க ஃபிரெண்ட்.." என்று கலாய்த்திருக்க வேண்டாமோ?

துபாய் ராஜா said...

சுவாரசியமான விஷயம்தான். சீக்கிரம் எழுதிடுவோம்.

மெளனராகம் கார்த்திக் மாதிரி துறுதுறுப்பா இருந்தவரை இப்படி துருப்பிடிக்க வச்சுட்டேளே... ம்ம்ம்ம்ம்ம்ம்... வீட்டுக்கு வீடு வாசப்படி...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஹுஸைனம்மா said...
அப்பவே மஹாதேவன் சார் இத்தனை ஹீரோயிஸம்லாம் பண்ணிருக்காரா, அதான் குருவிக்காலுக்கெல்லாம் அஞ்சாம இருந்திருக்கார்.// ரிப்பீட்டேய்.. :)

தக்குடு said...

நான் ஒன்னும் சொல்லலப்பா!! நமக்கு எதுக்கு பொல்லாப்பு...:)

எல் கே said...

//அங்க என்ன இருக்கோ அதாங்க போட்டோவுல வரும்... கேமராவை குத்தம் சொல்லி பிரயோசனம் இல்ல... :))//

i like this...

Porkodi (பொற்கொடி) said...

ஆஹா.. அத்திம்பேர் பயங்கர ரொமாண்டிக்கான ஆளா இருப்பார் போலயே! (என்னோட கதை அப்படியே ஆப்போஸிட் எல்லா விதத்துலயும்!) சூப்பரா இருக்கு இந்த கதை. "கட்டினா உங்களை தான் கட்டுவேன்"னு ஏன் சொன்னாரம், அத சொல்லவே இல்ல?

அன்னிக்கு உங்களை பாத்து வழிஞ்சது மட்டும் உங்களுக்கு பிடிச்சது, சாவித்ரி தேவிகாவை பாத்து வழிஞ்சா கோவம் வர்றதே? என்ன பாரபட்சம் இது? :)

ப்ரியமுடன் வசந்த் said...

//பின்பக்கமாக ஹலோ என்ற குரல்.. திரும்பினால் இரண்டு கைகளையும் ஷாருக்கான் மாதிரி விரித்துக்கொண்டு ரொமாண்டிக் ஹீரோ போல ஒரு யுவன். ”இவன் தானா இவன் தானா” என்ற பாட்டு சம்பந்தமே இல்லாமல் என் மண்டையில் ஒலித்தது. முகம் கூட எங்கேயோ பார்த்தமாதிரி..... ”ஹய்யோ... நீங்களா? நீங்க பெஹ்ரைன் போகலியா?” என்று அலறினேன்.”இல்லை நான் இண்டியா தான் வந்தேன். இங்கே வந்ததே உன்னை பார்க்க தான். சர்ப்ரைஸ் ” என்றார் கண்சிமிட்டிய படியே. //

ரசித்தேன்...

வித்யாசமான திருமணம்தான்...

Unknown said...

பயங்கர ரொமாண்டிக்.... நீ ஏற்கனவே சொல்லியிருந்தாலும் இந்த பதிவை படிக்கும்போது பயங்கர சுவாரசியமா இருந்தது...

ஹுஸைனம்மா said...

அநன்யா அக்கா (அக்கா இல்லைன்னு வாய்வார்த்தையால சொன்னா போறாது, பர்த் சர்டிஃபிகேட் ப்ளீஸ்!!), எழுதிட்டேன் இங்கே - http://hussainamma.blogspot.com/2010/03/blog-post_28.html.

தி. ரா. ச.(T.R.C.) said...

ஓஹோ, சரி, எப்படி இருக்கேன்?” என்று சும்மாங்காச்சுக்கும் கேட்டேன். வழிந்த வழிசலிலேயே தெரிஞ்சதே.. இருந்தாலும் புகழ்ச்சின்னா யாருக்கு தான் பிடிக்காது


நானும் ஒன்னும் சொல்லலப்பா!! நமக்கு எதுக்கு பொல்லாப்பு

sriram said...

ஹூம்ம்ம் அன்னிக்கு மட்டும் ரங்கு உங்களுக்கு இமெயில் அனுப்பாம இருந்திருந்தா, தப்பிச்சு பொழச்சிப் போயிருப்பார், விதி வலிது, யாரையும் விடாது..

My hearty condolences to your RANGU

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//" ஓஹோ, சரி, எப்படி இருக்கேன்?” என்று சும்மாங்காச்சுக்கும் கேட்டேன். வழிந்த வழிசலிலேயே தெரிஞ்சதே.. இருந்தாலும் புகழ்ச்சின்னா யாருக்கு தான் பிடிக்காது..” ஜோரா இருக்காய்” என்றார்.//
கலக்கல் தான் போங்கோ...சூப்பர் சூப்பர் சூப்பர் ஸ்டோரி. எழுதினதுக்கு ரெம்ப ரெம்ப நன்றி

Porkodi (பொற்கொடி) said...

//My hearty condolences to your RANGU//

boss, padhivu padhiva vandhu idhai sonna, poi unmaiyagiduma? :P

Madhavan Srinivasagopalan said...

//சுமார் நூற்றுக்கும் மேல பையன் வீட்டார் வந்து பார்த்தாச்சு. இருநுறுக்கும் மேல ஃபோட்டோக்கள் விதவிதமான புடவைகள் கட்டி, சுடிதார் போட்டும், சிரித்தும், முறைத்தும். லொக்கேஷன் சேஞ்சு பண்ணியும்,....//

சுவாரஸ்யமா எழுதி இருக்கீங்க..
எங்க அக்காவையும் 5-6 பேருக்கு மேல வந்து 'பெண்-பாத்துட்டு' போனாங்க.. அக்காவோட வருத்தம் எனக்குத் தெரியும்.
இந்தமாதிரி எந்த பொண்ணும் வருந்தக்கூடாது என்பதற்கு, நான் ஒரே பெண்ணை 'பெண்-பார்த்து' திருமணம் செய்துவிடவேண்டும் என்பதில் உறுதியாக இருந்து..பெற்றோர்களின் ஆசியோடு செயல் படுத்தினேன்.

sriram said...
This comment has been removed by the author.
sriram said...

//My hearty condolences to your RANGU//

கேடி.. உங்கள மாதிரி ஆளுங்களோட ரங்குகளுக்குத் தருவதற்கு என்னிடம் Condolence தவிர வேறொன்றுமில்லை

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

kargil Jay said...

you have written so nicely. even the painful years of groom finding in a humorous way.. actually these problems, finding partner etc will be very difficult for boys only. seems you have some how suffered.

Also i fully accept that it is the parents that suffer more than we.

Ananya Mahadevan said...

@நாஞ்சில்,
//அங்க என்ன இருக்கோ அதாங்க போட்டோவுல வரும்... கேமராவை குத்தம் சொல்லி பிரயோசனம் இல்ல//
அப்போ பதிவை சரியாப்படிக்கலையா? “ஜோரா இருக்காய்” சொன்னாரில்ல? சொன்னாரில்ல? சொன்னாரில்ல? பேசுறாங்கய்யா பேச்சு!
//வசயசானவங்க எழுத வேண்டிய தொடர்பதிவா இருக்கே... எங்களை மாதிரி யூத்துக்கு இங்க என்னவேலை... எலே பசுபதி எட்றா வண்டியை//- வாடீ வா, இன்னும் ஒரு வருஷத்துல நான் இதே பதிவை மீள் பதிவா போட்டு உன்னை சிக்க வைக்கல, என் பேரு அநன்யா இல்லைடீ... நீ வசம்மா மாட்டுன டீ!

@சிட்சாட்,
ரொம்ப நன்றிங்க. ஹேப்பி மேரிட் லைஃபா? ஹய்யோ ஹய்யோ! என்னத்த சொல்ல?

@மங்குனி & @எங்கள் ஸ்ரீராமண்ணா,
ரெண்டு பேரும் கிட்டத்தெட்ட ஒரே டெக்னிக் தான் சொல்லி இருக்கீங்க. பேக்கு மாதிரி யாரோ திவாகரனை பார்க்க போன எனக்கு, திடீர்ன்னு இவர் ப்ரத்யக்ஷமானார்ன்னா என்ன புரியும்? நானே இவரை ஒரு வாட்டி வெப்காம்ல தான் பார்த்திருக்கேன். இதுல அவுட்விட் பண்ற அளவுக்கெல்லாம் ஐ.க்யு! ஹய்யோ.. சாரிங்க.. லேது!

Chitra said...

////ஓஹோ, சரி, எப்படி இருக்கேன்?” என்று சும்மாங்காச்சுக்கும் கேட்டேன். வழிந்த வழிசலிலேயே தெரிஞ்சதே.. இருந்தாலும் புகழ்ச்சின்னா யாருக்கு தான் பிடிக்காது////

......அருமையாக எழுதி இருக்கிறீர்கள். அருமையான ரொமான்டிக் நிகழ்ச்சி தொகுப்பு. அருமையான உணர்வுகள். அருமையான எழுத்து நடை. அருமையான ஜோடி.
...இந்த புகழ்ச்சி போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா? ஹா,ஹா,ஹா,ஹா.....

சூப்பர் பதிவுங்க. :-)

Ananya Mahadevan said...

@ஹூஸைனம்மா, @முத்துலெட்சுமியக்கா,

அந்த குருவிக்காலைப்பத்தி இனி யாரும் பேசப்படாது.. ஆமாஞ்சொல்லிப்புட்டேன்.

கருத்துக்கு நன்றி. உங்க பதிவு ஜூப்பரு ஹூஸைனம்மா.. இந்த அக்காவையும் மாட்டி விட்டு இருக்கலாம். விட்டு போச்சு!நெக்ஸ்டு நெனவு வெச்சுக்கறேன்.

@துபாய் ராஜா,
நீங்களும் ரொம்ப ரசிச்சு டாப்பா எழுதி இருக்கீங்க. தூள் போங்க.

@தக்குடு,
இதெல்லாம் உனக்கு ஓவராத்தெரியல?

@LK,
உனக்கும் நாஞ்சிலுக்கு சொன்னது தான். மேல போய் படிச்சுக்கோ. காப்பி பேஸ்டெல்லாம் பண்ண முடியாது.

பொற்ஸ்,
//(என்னோட கதை அப்படியே ஆப்போஸிட் எல்லா விதத்துலயும்!) //
அப்படீன்னா, அப்போ கஷ்டப்பட்டுட்டு இப்போ சந்தோஷமா இருக்கேன்னு சொல்றே அதானே? வாழ்த்துக்கள்.
//"கட்டினா உங்களை தான் கட்டுவேன்"னு ஏன் சொன்னாரம், அத சொல்லவே இல்ல?//
அட, இன்னுமா உனக்கு புரியல? இதான் அளகுல மயங்குறது. ஓ இதானா அதுன்னெல்லாம் சொல்லப்டாது.

@வஸந்த்,
நன்றி! ஆமா, வித்தியாசமான திருமணம் தான்.

Ananya Mahadevan said...

@TRC அவர்களே,

உங்க கருத்துக்கு நன்றி!

பாஸ்டன் ஸ்ரீராமண்ணா,

அர்ஜெண்ட்டா உங்க தங்கு காண்டாக்ட் வேணுமே.. வீட்டுல உங்களை சரியா ஷோடஸ உபச்சாரம் பண்றதில்லைன்னு நினைக்கறேன் மன்னி! கொஞ்சம் பண்ணினா சரியாப்போயிடும்.

@அப்பாவித்தங்கமணி,

இந்த நன்றி நான் தான் உங்களுக்கு சொல்லணும். கலக்கலான ஒரு தொடர் பதிவுக்கு என்னை அழைத்தமைக்கு.

@பொற்ஸ் கண்ணா,

//boss, padhivu padhiva vandhu idhai sonna, poi unmaiyagiduma?//
கன்னா பின்னா ரிப்பீட்டு.

@ மாதவன் அவர்களே,
இங்கே சொன்னதெல்லாம் ஒரு துளி கஷ்டங்கள் தான். பெண் பார்க்கறதை பத்தி ஒண்ணுமே குறிப்பிடலையே நான். அதை எல்லாம் எழுதினா ஒரு 100 பதிவா போடலாம். அவ்ளோ இருக்கு. ஆனா ஒரேடியா வயலின்ஸ் & ஷெஹனாயி தான் கேக்கும். அவ்ளோ சோகம் அதுல!

கார்கில் ஜெய்,
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! நிச்சியம் பெற்றோருக்கு தான் நம்மை விட மன உளைச்சல். அம்மா அப்பா, இந்த பிரச்சினையால் சில வருடங்கள் தூக்கமின்றி இருந்தார்கள்.

Ananya Mahadevan said...

@சித்ரா,
//......அருமையாக எழுதி இருக்கிறீர்கள். அருமையான ரொமான்டிக் நிகழ்ச்சி தொகுப்பு. அருமையான உணர்வுகள். அருமையான எழுத்து நடை. அருமையான ஜோடி.
...இந்த புகழ்ச்சி போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?//
என்னா வில்லத்தனம்?

Ananya Mahadevan said...

@சித்ரா,
வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றிங்க.

பத்மநாபன் said...

அப்போ ஹீரோவா இருந்தாரு ................... இப்பவும் ஹீரோவா இருக்காரு ..உங்க பதிவுல
கெளப்புங்க ...கெளப்புங்க ..

Ananya Mahadevan said...

@ பத்மநாபன் அங்கிள் ooops, sorry, அண்ணா,
உங்களை லீவு எஞ்சாய் பண்ண சொன்னா நீங்க என்ன ப்ளாகா படிக்கறீங்க? உங்க வெய்ஃப் கிட்டே பத்த வெச்சுட வேண்டியது தான்.
எல்லாரும் செளக்கியம் தானே? விசாரித்ததாக சொல்லவும். :)

Starjan (ஸ்டார்ஜன்) said...

நான் இன்றுதான் மெயில் பார்த்தேன்.. தாமதமாக வந்ததுக்கு தண்டனையா அனன்யா மேடம்..

என்னையும் இதுல இழுத்து விட்டுடிங்களே அனன்யா..

நானும் எனக்கு பொண்ணுபார்த்த கதை எழுத ஆரம்பிக்கணுமா.. நடக்கட்டும் நடக்கட்டும்.

அழைப்புக்கு மிக்க நன்றி.. உங்கள் ஸ்டார்ஜன்.

பத்மநாபன் said...

எல்லாம் சுகம் ..அவங்களையும் உட்கார வச்சு உங்க வாசகி ஆக்கிட்டோமே ..இப்பவே உங்க பி. ஆர். ஒ ..வேலை ஆரம்பிச்சிட்டாங்க ..( ராயல்டி மறந்துராதிங்க ....)

குட்டிசாத்தான் சிந்தனைகள் said...

congrats. Konjam latta solli irruken. narration nalla irrundhadhu

Related Posts with Thumbnails