Pages

Friday, June 18, 2010

ஹரா பரா டெர்ரர் கபாப்

ஆடிக்கொரு வாட்டி அமாவாசைக்கு ஒரு வாட்டி இங்கே ரெஸ்டாரண்டுகளுக்கு போனால் ஸ்டார்டருக்கு இதான் ரங்குவுக்கு ரொம்பவும் பிடிக்கும். அடைக்கு ஊறவைத்து அரைத்தது போக கொஞ்சம் பாசிப்பயறு ஊறவைத்து வெள்ளி மாலை இந்த கபாப் பண்ணிக்குடுத்துடலாம்ன்னு ப்ளான் பண்ணி வெச்சிருந்தேன். எல்லாம் சுய ரெஸிப்பீ தான். கொஞ்சம் ரெஸிப்பீஸ் பார்த்தா ஐடியா கிடைக்கப்போகுது!

கபாப்ன்னா நம்ம தமிழ்ல வடைன்னு அர்த்தம் போல இருக்கு. பச்சையா இருக்கும் இந்த ஹரா பரா கபாப். பாலக்கீரை, கொத்தமல்லி, ப.மிளகாய் எல்லாம் போட்டு ஜீரக வாசனையா இருக்கும். என்ன பெரிய பிரமாதம், வீட்டுலேயே பண்ணிக்குடுத்துடலாம்னு நினைச்சு தான் வேலையை ஆரம்பிச்சேன். காஃபியுடன் வடையை வெச்சு தந்தால் சந்தோஷப்படுவார்ன்னு மெதுவா கிச்சனுக்குள்ளே நுழைஞ்சுட்டேன். ஈஸ்வரோ ரக்ஷது!

முதல்ல லாப்டாப்பை கிச்சன்ல செட் பண்ணி ஒரு ரெசிப்பீ தேடி எடுத்துட்டேன். பார்த்தா, கீரையை சுடுதண்ணியில போட்டு, ஜில் தண்ணியில அலசி , பிழிஞ்சு, நறுக்கி மிக்ஸியில போட்டு அரைக்கணும். ஜிம்பிள்! அதுல பாருங்க ஒரே ஒரு ஸ்டெப் தான் மிஸ் பண்ணி இருக்கேன், மொத்தமும் கந்தரகோளம்!

எந்த ஸ்டெப்பா? அதாங்க அந்த பிழியற ஸ்டெப்தான். சுடுதண்ணீயில அலசிட்டு, ஜில்தண்ணியில போட்டு , வெளியில எடுத்து, நறுக்கி மிக்ஸியில போட்டு அரைச்சாச்சு.  அரைச்சுட்டு எட்டிப்பார்க்கறேன், கீரை மசியல் மாதிரி இருக்கு! செம்ம ஷாக்! சரி பார்க்கலாம். இன்னும் பாசிப்பயறு இருக்கே.. அதையும் கெட்டியா அரைச்சு பிசைஞ்சுட்டா கெட்டி பட்டுடும்ன்னு நம்பினேன்.


தண்ணி விடாம கரகரப்பா பாசிப்பயிறை அரைச்சாச்சு. பச்சை பட்டாணி கீரை விழுதோட பருப்பை போட்டுட்டு பார்த்தா மொத்தத்துல அது என்னமோ அடை மாவு மாதிரி இருக்கு!!!

சரி போனாப்போறது வேணா ஹரா பரா அடைன்னு பண்ணி கொடுத்துடலாமேன்னு நினைச்சேன்! ரங்கு ஒத்துக்க மாட்டார்.

கவனமா எல்லா மசாலாவும் சேர்த்தேன். உப்பு போட்டு கடைசியா கரண்டி போட்டு கிண்டி பார்த்தேன். அதே அடை மாவு கன்ஸிஸ்டென்ஸியில இருக்கு! சூஃபர்!

இனி இதை எப்படி கெட்டியாக்குறது? மெள்ளமா கொஞ்சம் அரிசி மாவு சேர்த்தேன். அடை மாவு ரெண்டு கரண்டி அரிசி மாவை விழுங்கிட்டு கள்ளூளிமங்கன் மாதிரி அப்படியே இருந்தது. சரி வேணா கொஞ்சம் சுவைக்கு கடலைமாவு போட்டா என்ன? எப்படியும் பருப்புக்கள் தானே சேர்த்திருக்கோம்.. ஒரு டேஸ்டு என்ஹான்ஸரா இருக்காது? இந்த மாதிரி ஐடியாவுக்கெல்லாம் இன்னொருத்தி பொறந்துதாண்டீ அநன்யா வரணும். உன்னை மிஞ்ச முடியுமா?ன்னு சந்தோஷமா க.மாவையும் கலந்தாச்சு.. மறுபடியும் கள்ளூளிமங்கன் ஹரா பரா அடைமாவு விழித்தது.. ஒரு நிமிஷம், என்னை விட்டூடு அநன்யான்னு கெஞ்சித்து! ஹ.. என்னிடமா நடக்கும்ன்னு வீர வசனம் பேசிண்டே ஒரு ஸ்பூனால அடை மாவை எடுத்து அரிசிமாவில் போட்டு பிரட்டி,  எண்ணெயில் ஸ்ஸொயீன்னு போட்டு பொறிக்க ஆரம்பிச்சுட்டேன்.

அசப்புல பார்க்க அது பச்சை அடை உருண்டை மாதிரியே தான் இருந்தது. ஆனா கரகரன்னு இருக்கவேண்டாமோ? அதென்னமோ சவுக் சவுக்ன்னு இருந்தது. பார்த்தாலே பூலோக பக்கியான தக்குடு கூட வேண்டாம்ன்னு சொல்லிடுவான்னா பாருங்களேன்! (ஹிஹி, இவனை வம்புக்கு இழுத்து ரொம்ப நாளாச்சு!)ஹாம்.. அதுக்கு கொடுத்த வெச்சது அவ்ளோதான்னு மனசைத்தேத்திண்டு பாக்கி எல்லாத்தையும் இதே மாதிரி பொறிச்சுடலாம். இனி இதுக்கு அலங்காரம் பண்ணி மாளாதுன்னு ஒரு முடிவுக்கு வந்தேன்.

இதுக்குள்ளே ரங்கு மூக்குல வேர்த்து கிச்சனுக்கே வந்துட்டார். என்னம்மான்னு ரொம்ப ஆதரவா கேட்டார். எனக்கு அழுகை முட்டிண்டு இருந்தது.  இவ்ளோ ரகளை பண்ணினதுனால கிச்சன்வேற குருக்ஷேத்திரம் மாதிரி ஒரே களேபரமா இருந்தது! வடையும் சொதப்பல் கிச்சனும் கொடூரமா இருந்ததுனால ரொம்ப உடைஞ்சு போயிட்டேன். அவர் கிட்டே நடந்ததை சொன்னேன்.

உடனே நம்ம ரங்க்ஸ், இதுக்கெல்லாமா கவலைப்படுவாங்க? ச்சீ அசடுன்னு(உண்மையைச்) சொல்லி, ஒரு ஹைலி அப்ஸார்பண்ட் டிஷ்யூவை கிழித்து ஒரு தட்டுல வெச்சு அ.மாவை அதில் கொட்டினார். ஏதோ ஒரு படத்துல போண்டா மணி,”மாப்ளை சீப்பை திருடிட்டேன், அவர் எப்படி தலை வாருவார், எப்படி தாலி கட்டுவார்”ன்னு கேப்பாரே அதே பீலிங்கி தான் வந்தது! உஸ்ஸ்ன்னு நினைச்சுண்டே, ”வேற உருப்படியா ஏதாவது ஐடியா தர்றேளா”ன்னு கேட்டேன்.

உள்ளே போய் ஒரு பத்து நிமிஷம் தேடி ஒரு பழைய மயில்கண் வேஷ்டியை கொண்டு வந்து கோமணம் மாதிரி நீளவாக்கில் கிழிச்சார். என்னத்துக்கு இப்படி கிழிக்கறேள்ன்னு கேட்டுண்டே இருக்கேன், உஷ்.. உனக்கு தெரியாது.. இப்போ பார்ன்னு கோ. துணியை சின்க் கிட்டே விரித்து, ஒரு சல்லடையையும் எடுத்துண்டு இந்த அடைமாவை மொத்ததையும் அதில் கொட்டி, அதை சுருட்ட ஆரம்பிச்சார்.

மெதுவா என் ப்ளட் பிரஷர் ஏற ஆரம்பிச்சது.. அதிக தண்ணியை பிழியும் முயற்சியில் ஒரு கரண்டி மாவு சல்லடையில் விழுந்தது. அந்த துண்யின் விளிம்பு ஓப்பன் ஆகி, மாவு வெளியில் பிதுங்க, “ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்டாப்பிட்”ன்னு காதலன் நக்மா மாதிரி கத்திட்டு, அவர் கிட்டே இருந்து அந்த துணியை மாவுடன் வாங்கி அவரை சபை நீக்கம் பண்ணினேன்.

மெதுவா பார்த்து தேங்காய்ப்பால் எடுக்கறமாதிரி எக்ஸஸ் வாட்டரை எடுத்தேன். அந்யாய பொறுமை வேணும் இதுக்குன்னு தோணித்து.. யப்பா.. எவ்ளோ நேரம் மாவும் வெளியேறாம கர்ம சிரத்தையா பண்றது!  அப்புறம் கட்லெட் மாவுமாதிரி கெட்டியா கிடைச்சது. அந்த கபாப்ஸை பொறிச்செடுக்கறதுக்குள்ளே என் தாவு தீந்துடுச்சு!

கிச்சனை க்ளீன் பண்ணிட்டு, எடுத்த 108 பொருட்களை யதாஸ்தானம் பண்ணிட்டு கபாப்ஸுடன் சூடான காப்பியை எடுத்துண்டு ஹாலுக்கு வந்து மணி பார்த்தா 7.15! நான் ஆரம்பிச்ச நேரம் 6! என்ன ஒரு சோதனை!

இவர் உடனே, ”உனக்கு எப்போ என்ன டவுட் இருந்தாலும் உடனே என்னைக்கேளு.. நான் மட்டும் இன்னிக்கி இல்லைன்னா என்ன ஆயிருக்கும்!”ன்னு ஓவரா பில்டப்பு ஸ்டார்ட் பண்ணிட்டார்! இங்கே ஒரு முக்கியமான பாயிண்ட் கூறிக்கொள்ள விரும்புகிறேன். இந்த ரங்கு கிச்சனுக்கு வர ஒரே ஒரு காரணம் - விபூதி பாடி பேக் (Body pack) போட்டுக்கத்தான். இதுல பெரிய பெரிய டயலாக்ஸ் கற்பனை பண்ணி சொல்ல ஆரம்பிச்சுட்டார்!

“இந்த விஷயத்தை இன்னிக்கி நீ மறக்க நினைச்சாலும், இன்னும் ரெண்டு நாள்ல எப்படியாவது நினைவு வந்துடும்”ன்னார்.” ஏன்னா”ன்னு அப்பாவியா கேட்டேன்.. ”எப்படியும் இன்னும் ரெண்டு நாள்ல இதே மாதிரி ஏதாவது சொதப்பாமலா போவே நீ?”ன்னு கேக்கறார்..

கீத்தாமாத்தா சும்மாவா சொன்னார்? சுற்றி இருப்பவர்கள் எல்லாருமே புரூட்டஸ்களான்னா இருக்காங்க!

28 comments:

Porkodi (பொற்கொடி) said...

கிச்சன்ல இருந்து எடுத்துட்டு போனது வரைக்கும் சரி, அதுக்கு அப்புறம் என்ன நடந்தது? ரங்கு வாயில போட்டாரா? நாக்கு ஃப்ராக்சரா இல்ல பல்லு காலியா இந்த டிடெயில்லாம் சொல்லாம போனா நல்லாவா இருக்கு?

அடாடாடாடாடா.. என்னே உங்க ரங்கு ப்ரெஸென்ஸ் ஆஃப் மைண்ட்! :‍)

எல் கே said...

//பார்த்தாலே பூலோக பக்கியான தக்குடு கூட வேண்டாம்ன்னு சொல்லிடுவான்னா பாருங்களேன்!///

அருமை


அப்புறம் பாவம் ரங்கஸ் எதோ பாவமேன்னு உதவி பண்ணா

Chitra said...

kitchen goof-up - haha,ha,ha,ha....

ஸ்ரீராம். said...

என்னா ஃபீலிங்கி...! எல்லா மாவையும் குக்கர்ல வச்சி எடுத்துட்டு எண்ணெய்ல போட்டிருந்தா..?

ஜெய்லானி said...

//”எப்படியும் இன்னும் ரெண்டு நாள்ல இதே மாதிரி ஏதாவது சொதப்பாமலா போவே நீ?”ன்னு கேக்கறார்..//


ஹி..ஹி...ஹா....க்கி..க்கி..

pudugaithendral said...

கிச்சன்ல இருந்து எடுத்துட்டு போனது வரைக்கும் சரி, அதுக்கு அப்புறம் என்ன நடந்தது? ரங்கு வாயில போட்டாரா? நாக்கு ஃப்ராக்சரா இல்ல பல்லு காலியா இந்த டிடெயில்லாம் சொல்லாம போனா நல்லாவா இருக்கு//

கன்னா பின்னா ரிப்பீட்டு

எல் கே said...

appavi rangamanigal sangam start aaga pothu

Jaleela Kamal said...

ஒரு வழியா வடை ஹரா பரா கப்பாப் நல்ல வந்துடுத்தே அதே பெரிய்விழியம் இல்லையா?

வாழ்த்துகள். ப்ரொம்ப தாங்க்ஸ் புது ரெஸிபி கத்துண்டேன்/

geethasmbsvm6 said...

பார்த்தாலே பூலோக பக்கியான தக்குடு கூட வேண்டாம்ன்னு சொல்லிடுவான்னா பாருங்களேன்! //

ஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹி,

நேத்திக்கு சூரி சார் கூட இதுக்காகவே தொலைபேசினார், ராத்திரி ஒன்பது மணிக்கு. என்னடானு பார்த்தாக்க தாக்குடுவோட இந்த பூ.ப. பத்திச் சொல்லத்தான்னு அப்புறமாப் புரிஞ்சது. அதைக்கண்டு கொண்ட அறிவாளியான அநன்யா அக்காவுக்கு ஒரு ஜே! ஜேஎஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ

geethasmbsvm6 said...

கீத்தாமாத்தா சும்மாவா சொன்னார்? சுற்றி இருப்பவர்கள் எல்லாருமே புரூட்டஸ்களான்னா இருக்காங்க! //

heheheheheஆமோதிச்சதுக்கு நன்னி ஹை, ஆனால் நான் சொன்ன ப்ரூட்டஸ்களிலே நீங்களும் ஒண்ணு, சொல்லப் போனால் தலைமை/முதன்மை?? ப்ரூட்டஸே நீங்க தான்! :P:P:P

geethasmbsvm6 said...

இப்போ மாட்டருக்கு வருவோமா?? பாலக் கீரையிலேயே தண்ணிச் சத்து அதிகமா இருக்கும், வேக வைக்கக் கூட மறந்து கூட தண்ணீர் விடக் கூடாது. மற்றக் கீரைகளுக்கு ஒரு டேபிள் ஸ்பூனாவது விடலாம்.

இவற்றை எல்லாம் நன்கு பொடிப்பொடியாக நறுக்கி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துக் கொஞ்ச நேரம் வைச்சுட்டு அப்புறம் கபாப் மாவிலே போட்டுக் கலந்து நேரடியாகத் தோசைக்கல்/அல்லது க்ரில் போன்றவற்றில் போட்டுப் பொரிக்கலாம், இல்லாட்டி எண்ணெயிலேயே வடை மாதிரியும் போடலாம். கீரையை நறுக்கிட்டு நல்லாத் தண்ணி விட்டு அலசறதுக்கெல்லாம் லாப்டாப்பைப் பார்த்தால் இப்படித்தான்! :P:P:P சுடுதண்ணியிலும் அலசலாம், பச்சைத் தண்ணியிலும் அலசலாம். மிக்சியிலே போட்டெல்லாம் அடிக்க வேண்டாம். பொடியாக நறுக்கினாலே போதுமானது.

Ananya Mahadevan said...

மாமி என் கட்டுரையை திருப்பி படிங்க. நான் நறுக்கிட்டு அலசலை! நன்னா அலசிட்டு பிழியாம நறுக்கிட்டேன். அதான் ஒரே பெரிய தப்பு. இனி இந்த தப்பு பண்ணினா என்ன பண்ணனும்ன்னு ராத்திரி பூரா யோச்சிச்சு முடிவுக்கு வந்துட்டேன்! டீ வடிகட்டியில வடிகட்டிட வேண்டியது தான்.

geethasmbsvm6 said...

இனி இந்த தப்பு பண்ணினா என்ன பண்ணனும்ன்னு ராத்திரி பூரா யோச்சிச்சு முடிவுக்கு வந்துட்டேன்! டீ வடிகட்டியில வடிகட்டிட வேண்டியது தான்.//

ஜூப்பர்! சவாலே, சமாளி! மதுரைக்காரி இல்லை! ஒரு கை இல்லை ரெண்டு கையும் பார்த்துட வேண்டியது தான். :))))))))))))

நஜீபா said...

என்னங்க, கபாப் என்றாலே மாமிசம் தான் என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம். :-) அதையும் விட்டு வைக்காமல் வெஜ்-ஜில் பண்ணி அசத்திட்டீங்களா? இனிமேல், நாங்களும் உங்க வெஜ் அயிட்டங்களிலே நான்-வெஜ் சேர்த்து பதிலுக்கு பதில் கொடுக்க வேண்டியது தான் போங்க! :-))

ஆனாலும், ஒரு வாட்டி பண்ணிப் பார்க்கணுமுன்னு ஆசையென்னவோ இருக்கு!

கௌதமன் said...

கபாப் எப்படி இருந்ததோ தெரியவில்லை. ஆனால் இந்தக் கட்டுரை சுவையாக இருக்கிறது.

பத்மநாபன் said...

//சரி போனாப்போறது வேணா ஹரா பரா அடைன்னு பண்ணி கொடுத்துடலாமேன்னு நினைச்சேன்! ரங்கு ஒத்துக்க மாட்டார்.// உங்க சவுரியத்துக்கு கரா புரான்னு பன்றதையெல்லாம் எப்படி ஒத்துக்கிறது..
அப்புறம் வளைகுடாவில் `கடிகள்` பெயரெல்லாம் வித்தியாசமாக இருக்குது..இங்க இதே கிரைவடையை துண்டுகள் பண்ணி அதை சப்பாத்தி மாதிரி ஒரு சமாச்சாரத்துல் சுருட்டி சாண்ட்விச் என்று தருவார்கள்...பெயர் ஃபிலாஃபில் ( Filafil )...
சபை நீக்கம் ...யதாஸ்தானம் ....வடை வந்துச்சோ இல்லையோ ... வார்த்தைகள் பொருத்தமா த்தான் வருது..( சர்ரீ.. யதாஸ்தானம் னா என்ன?

Asiya Omar said...

very interesting.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//எப்படியும் இன்னும் ரெண்டு நாள்ல இதே மாதிரி ஏதாவது சொதப்பாமலா போவே நீ?”ன்னு கேக்கறார்..//

Hats off to Mr. Ananya.... தீர்க்க தரிசி தான் போ...

ஆன நீ ஒண்ணும் இதுக்கெல்லாம் பீல் பண்ணாதே....ரங்க்ஸ்கெல்லாம் வாரத்துக்கு நாலு தரம் அச்சு பிச்சுனு எதாச்சும் பண்ணுவாங்க... நாம எல்லாம் வாரதுக்கு ஒண்ணோ இல்ல ரெண்டோ தானே.... So you see, the proportion is much favourable to us... ஹி ஹி ஹி ....

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//geethasmbsvm6 said...
heheheheheஆமோதிச்சதுக்கு நன்னி ஹை, ஆனால் நான் சொன்ன ப்ரூட்டஸ்களிலே நீங்களும் ஒண்ணு, சொல்லப் போனால் தலைமை/முதன்மை?? ப்ரூட்டஸே நீங்க தான்! :P:P:P//

நான் ஒண்ணும் சொல்லலப்பா..... ஹி ஹி ஹி ....

மங்குனி அமைச்சர் said...

ஆண்டவா , ஏழுகுண்டலவாடா (உங்க வடா இல்லைங்க ) இந்த சாப்டுவேர் சமையல் குயின் கிட்ட இருந்து இந்த உலகத்த நீதான் காபத்தணும் (அது எப்படிங் அந்த "ஸ்ஸொயீன்னு" டைப் பண்ணிங்க ??? )

geethasmbsvm6 said...

(அது எப்படிங் அந்த "ஸ்ஸொயீன்னு" டைப் பண்ணிங்க ??? //

ஜிம்பிளான விஷயமே தெரியலையே?? இப்போத் தானே வரீங்க?? ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸொயீங்க்க்க்க்க்க்னு எல்லாம் அடிப்போம். அப்படி இருக்கறச்சே இது என்ன பிரமாதம்??? :P

R.Gopi said...

கவுதமன் சார் சொன்ன மாதிரி கபாப் விட இந்த கட்டுரை நல்லா இருக்கு..

நல்ல வேளை... அந்த கபாப் 1 / 2 பீஸ் அபுதாபி ரோட்ல விழாம இருந்தது... இல்லன்னா, ரோட்ல போற வண்டியெல்லாம் பெரிய ஆக்ஸிடெண்ட்ல மாட்டி இருக்கும்..

இன்னொரு நல்ல விஷயம் அபுதாபில மெட்ரோ ரயில் இல்ல... இல்லேன்னா, அங்கேயும் களேபரங்கள் அரங்கேறி இருக்கும்...

சரி... எப்படி இருந்தது அந்த கபாப் முறுக்கு...

ஹுஸைனம்மா said...

//ஹாலுக்கு வந்து மணி பார்த்தா 7.15! நான் ஆரம்பிச்ச நேரம் 6!//

ரொம்ப ஃபாஸ்டா இருக்கீங்க? நான் கிண்டல் பண்ணலைப்பா, நிஜம்தான். நானா இருந்தா, டிஃபனுக்குன்னு ஆரம்பிச்ச கபாப் டின்னருக்குன்னு ஆகியிருக்கும்.

வார்த்தைகள் சரளமா விளையாடுது போங்க!!

அப்றம் ரங்ஸ் சொன்னதுல என்ன தப்பு? நமக்கெல்லாம் (ஹி.. ஹி.. கேக்காமலே கூட்டணி போட்டாச்சு) சமையல்ல சொதப்புதலே தொழில்!! (அப்ஜெக்‌ஷன் இருந்தா, ”கிரேஸி கிச்சன் கில்லேடி!” யை ஒருக்கா பாத்துட்டுச் சொல்லவும் (கண்ணாடியில் பாத்தாலும் சரி, பதிவுல பாத்தாலும் சரி!!) )

:-))))))))))

Ananya Mahadevan said...

@பொற்ஸ்,
ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்ன்னு சொல்லுவாய்ங்களே.. உனக்கு தெரியாதா? அதுக்குத்தான் ஃபோட்டோ போட்டு இருக்கேன்..பார்த்த எப்பூடி? ஹ.. நம்ம கிட்டேயேவா? 4 பாக்கி வந்தது, அடுத்த நாளும் ரங்கு நியாபகப்படுத்தி கேட்டு வாங்கி சாப்பிட்டார்.
நன்னி ஹை!

@எல்.கே,
டாங்கீஸ் !

@சித்ரா,
வருகைக்கும் கருத்துக்கும் டாங்கீஸ்பா!

@ஸ்ரீராமண்ணா,
நீங்க வேணா அப்படி பண்ணி பார்த்திட்டு எனக்கு லெட்டர் போடுங்களேன்.. க்ர்ர்..
ஒரு வேளை நீங்க அப்பாவியா நல்லெண்ணத்துடன் இந்த குறிப்பு கொடுத்து இருந்தீங்கன்னா, அதுக்கு என் பதில் இதோ. ஸ்டீமிங், ப்ரெஷர் குக்கிங் ஒரு ப்ராஸஸ். அதுக்கப்புறம் பொறிச்சு எடுக்க முடியாது. பருப்புசிலி மாதிரி ஆயிடும். நல்லாவே இருக்காது!வேணா தக்குடுவுக்கு கொடுக்கலாம். முயற்சி பண்ணிட்டு பார்ஸல் பண்ணவும். நன்னி ஹை!

@ஜெய்லானி,
வாங்க, ஆமாங்க.இவர் எப்போவும் இந்த மாதிரி ஏதாவது சொல்லிண்டே தான் இருப்பார்.

@புதுகை அக்கா,
அதுல பாருங்க, எனக்கு தற்பெருமை பிடிக்காது. நானே அதைப்பத்தி பெருமையா சொல்லிண்டா நல்லா இருக்காதுன்னு தான் சொல்லாம விட்டேன். ஃபோட்டோ பாருங்க.. எப்பூடீ?

@எல்.கே..
ஸ்டார்ட் பண்ணுங்களேன்.. பார்ப்போம்.. நாங்களா நீங்களான்னு.. ஹ..

@ஜலீலா அக்ஸ்,
வருக வருக! நிச்சியம் பெரிய ரிலீஃப். நிறைய மாவுகளை சேர்த்தேன்னு ஒரு நகைச்சுவைக்காக எழுத வேண்டியதா போச்சு. ரொம்ப சுவையா இருந்தது. நீங்களும் ட்ரை பண்ணுங்க. ரொம்ப ஹெல்த்தி கூட. கீரையை மட்டும் ஒட்ட பிழிஞ்சுடுங்க. குழந்தைகள் இருந்தா உ.கிழங்கு கூட வேகவைத்து சேர்க்கலாம். ஜோரா இருந்தது.

@கீத்தா மாத்தா,
நன்னி ஹை! எனக்கு தெரியும், சதா உங்க நாமத்தை ஜபிக்கும் என்னை நீங்க சரியா புரிஞ்சுக்கலை! பரவாயில்லை.. குரு தன் சிஷ்யர்களை சோதிப்பார். ஆனா சிஷ்யர்கள் எப்போவும் குருவின் ஸ்மரணையை விடுவதில்லை! ஜெய் ஜெய் மாத்தா ஜெய் ஸ்ரீ மாத்தா! :))
தாக்குடு பத்தின விஷயம் சரிதான். எப்போ அவன் கூட திங்கற ஐட்டம்ஸ் பத்தி பேசினாலே உடனே கடுப்பேத்தாதேன்னு சொல்லுவான். மெதுவடை, சேமியா கேசரி, மோர்க்குழம்பு இதெல்லாம் சொல்லி பாருங்களேன்.. வெகுண்டு எழுந்துடுவான். :))

நான் டீ வடிகட்டியில வடிகட்டுவேன்னு சொன்னது கீடை விழுதை மட்டுமே. தென் அண்டு தேர் அதை சரி பண்ணி இருந்தா இவ்ளோ வேலை வளந்திருக்காது! அச்சு பிச்சு வேலை!

@நஜீபா,
வாங்க! என் லாஜிக் படி, நான் வெஜ் ஐட்டம்ஸ் வெஜிட்டபிள்ஸ் இல்லாம பண்ண முடியுமா? இஞ்சி பூண்டாவது வேணுமே! ஆனா நாங்க ஸ்டாண்டலோன்! ஹிஹி! நோ அஃபன்ஸ்! கட்டாயம் ட்ரை பண்ணுங்க. ரொம்ப சுவையா இருந்தது.

@கெளத்தம்ஜி,
ஹரா பரா கபாப் சூப்பர் டேஸ்டு!

@பத்து அங்கிள்,
காரே பூரேன்னு ஹரா பரா அடை பண்ணிக்கொடுத்துடலாம்னு பார்த்தா ரங்ஸ் விட மாட்டாரே.. ஆமா ஃபெலாஃபெல் பத்தி கேட்டு இருக்கேன். எனக்கு இண்டெர்னேஷனல் ஃபுட்ஸ் அவ்ளோவா பிடிக்கறதில்லை! என்ன பண்றது?யதாஸ்தானம்ன்னா அதை அதை எடுத்த இடத்துல வைப்பது!

@ஆஸியா அக்ஸ்,
வெல்கம்! டாங்கீஸ்

Ananya Mahadevan said...

@அ.த.து(அப்படீன்னா அப்பாவித்தங்கமணி துரோஹி) :P
கூட இருந்துண்டே குழி பறிச்சா அப்பூடித்தேன் சொல்லுவாக! அங்க மட்டும் என்ன வாழுது? இட்லி சமாச்சாரத்தை எடுத்தா ஊரே சிரிப்பா சிரிக்கிது! ஹிஹி.. சான்ஸ் கிடைக்கும் இடத்துல எல்லாம் இட்லி டாப்பிக் எடுக்கணும்ன்னு எல்.கே கூட காண்ட்ராக்டு இருக்கும்மா.. என்ன பண்ண?
ப்ரூட்டஸ்களைப்பத்தி நீ பேசாதே.. உனக்கு அருகதை இல்லே.. நீ பஸ்ஸுக்கு வரதுக்கு முன்னாடி என்ன சொன்னே? இப்போ என்ன பண்ணிண்டு இருக்கே? மனசாட்சி படி யோசி.. அப்புறம் ஒரு முடிவுக்கு வா.. ஆமா.. என்ன அக்கிருமமா இருக்கு! உஸ்ஸ், அடங்க மாட்டேங்கிறாளுவ..

@மங்குனி
உஸ்ஸ்... ஒண்ணு உங்களுக்கு என் கட்டுரை நீளமா இருக்கும். இல்லாட்டி டைப்பிங் மிஷ்டேக்கு கண்டு பிடிக்கறீங்க.. உங்க லொள்ளுக்கு ஒரு அளவே லேதா?

@கோபீ!!!
பஹூத் பஹூத் நன்னி ஹை!
புல்லுருவி, நயவஞ்சகா..
கபாப் முறுக்கா? துரோஹி.. உங்களுக்கு அப்பாவி தங்கமணியே பரவாயில்லை போல்ருக்கு!
குரூப் குரூப்பாத்தான்யா கிளம்பி இருக்காய்ங்க!
பை தி பை, கபாப் நிஜம்மா ரொம்ப ருசி.

@ஹூஸைனம்மா,
ஹய்யோ நீங்க வேற, ஒரு 15 நிமிஷ வேலை தான்.. மிக்ஸி ல ஒரு சுத்து சுத்தி எல்லாத்தையும் பொறிச்சு எடுக்க மேக்ஸிமம் அரை மணி நேரம் தான் ஆகும். மஹா களேபரமா ஆயிடுத்து.

அதுக்கென்ன கூட்டணி தானே? நீங்க ரொம்ப தன்னடக்கம் வாயஞ்சவங்கன்னு எனக்கு தெரியும். நானும் அந்த குரூப்ன்னா கசக்கவா செய்யும்? ஹிஹி!
க்ரேஸி கிச்சன் கில்லேடி எண்ணெயை கொட்டினா.. மத்தபடி எதுவும் அவள் கண்ட்ரோல்ல இல்லாத விஷயங்கள். :))
நன்னி ஹை ஹூஸைனம்மா!

Anonymous said...

ஹரா பரா கபாப் செம்ம டேர்ரரா தான் இருக்கு ...



“இந்த விஷயத்தை இன்னிக்கி நீ மறக்க நினைச்சாலும், இன்னும் ரெண்டு நாள்ல எப்படியாவது நினைவு வந்துடும்”ன்னார்.” ஏன்னா”ன்னு அப்பாவியா கேட்டேன்.. ”எப்படியும் இன்னும் ரெண்டு நாள்ல இதே மாதிரி ஏதாவது சொதப்பாமலா போவே நீ?”ன்னு கேக்கறார்.

செம்ம ஜோடி தான் பா நீங்க.

Harini Nagarajan said...

hahahaha! super kebab and super kalaai! thakkuduke "thakkudu theriyuma thakkudu thakkudu"nu sathyaraj style la solli irukkel!

BTW oru small tips antha keeraya oru chinna kadaai la potu oru 10 mins kothikka vittu irunthel na athu getti aagi irukkum! adutha vaati intha maari yethaavathu aachuna useful a irukkume! :P

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் (இந்தப் பதிவு) வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/09/blog-post_21.html) சென்று பார்க்கவும்...

Related Posts with Thumbnails