Pages

Saturday, August 28, 2010

மதறாஸப்பட்டினமும் என் கஷ்டகாலமும்!

முதன் முதலாக இந்தப்படத்தின் டிரெயிலரை ஜிகர்தண்டா சொல்லி யூ டியூபில் பார்த்தேன்.. நொந்தேன்.. அதென்னம்மோ தெரியலை.. என்ன மாயமோ தெரியலை ட்ரெயிலரே பிடிக்கலை.. லகானின் ஜாடைகளுடன், நாடோடித்தென்றல் மாதிரி இருக்கும்ன்னு மனசுக்கு பட்டது.
சரி சென்னை வந்தப்போ எல்லாருமே மதறாஸபட்டினம் ஆஹா ஓஹோன்னு ஒரே பேச்சு. என் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸாக(!!???!!) இருக்கட்டுமேன்னு என் தங்கையும் சேகருமா சேர்ந்து இந்தப்படத்துக்கு கூட்டிண்டு போயிட்டாங்க. காசி தியேட்டர் கூட்டத்தில் நான் நிஜம்மாவே படம் நல்லாத்தான் இருக்கும்போல இருக்குன்னு நம்ப்ப்ப்ப்ப்பி உள்ளே போய் உட்கார்ந்தேங்க..

உஸ்ஸ்... முடியலை..

என்னம்மோ படம் பூராவுமே ஒரு Dejavu effect! இதை எங்கியோ பார்த்திருக்கோமேன்னு தோணிண்டே இருந்தது. ஒரு redundancy! எரிச்சல் தான் வந்தது.. பாட்டுக்கள் முக்கால்வாசி மொக்கை அல்லது அவற்றை ரசிக்கும் திறன் எனக்கில்லை.. கதை = இது வரை வந்த பல படங்களின் பாதிப்பில் இருந்ததால் கதைன்னு ஒண்ணு இருக்கறாப்புல எனக்கு தெரியலை.
நடிக நடிகையர்களுக்குள்ளே அந்த பிரிட்டிஷ் பொண்ணு மட்டும் தான் மனசுல நிக்கறா.. குறிப்பிட்டு சொல்லணும்ன்னா நம்ம வி.எம்.ஹனீஃபா.. மத்தபடி.. சாரி..
அம்மா படம் ஆரம்பிச்சு மூணு வாட்டி குறட்டை விட்டு தூங்கிட்டாங்க.. எழுப்பிண்டே இருந்தோம். எப்போடீ முடியும்ன்னு கேட்டு நச்சரிச்சுண்டே இருந்தாங்க.. நானோ வேற வழியில்லாம உட்கார்ந்து பார்த்தேன்..

தங்கை மணி ஃபுல் ஃபார்ம்ல செம்ம கமெண்ட்ஸ் பாஸ் பண்ணிண்டே இருந்தா.. பின்னாடி ரெண்டு பொடிமாஸ்(அதாவது டீனேஜ் பையன்கள்) உக்காண்டு படுபயங்கர கலாசல்.. முக்கியமா துரையம்மா(!!!???) ஆர்யாவை தண்ணிக்குள்ளே தள்ளிவிடும் காட்சியில் அவர்களையும் அறியாமல், ஜாக்... ரோஸ்..ன்னு டைட்டானிக் ஸ்டையில்ல கத்திட்டாங்க.. அப்படி ஒரு அட்டக்காப்பி அந்த சீன்ல.. அதே ஸ்டயில்ல அங்கே ஒரு நெக்லஸ் மாதிரி இங்கே ஒரு தாலி!!! தமிழ்ப்படம். என்னிக்கு உருப்படும்? தியேட்டரே கொல்ல்!!! அப்புறம் நம்ம ஈரோயினி தமிழ் பேசினப்போ யம்மா தாயீ, நீ இங்கிலீஷ் பேசினாலே பரவாயில்லை எங்களுக்கு சுமாரா புரியும்.. தமிழை வுட்ரும்மான்னு கலாட்டா..

நான் கேக்கறேன் நம்மூர்ல எந்த சலவைக்காரர் ஓவர்கோட் மட்டும் போட்டுண்டு வேலை பண்றாங்க?

எனக்கு தெரிஞ்சு இந்தப்படத்துல ஒரே ஒரு ஆறுதல் தான்.. ஆர்யாவுக்கு ஒரு முறைப்பொண்ணை வெச்சு, அது இவனை ஒரு தலையா லவ்வி, ஆர்யாவை துரத்தி துரத்தி ஒரு பாட்டு,கல்யாணக்கனவோட இன்னொரு பாட்டு, அப்புறம் அவன் கிடைக்கமாட்டான்னு சோகத்துல ஒரு பாட்டு, இவ உயிரைக்கொடுத்து ஆர்யா உயிரை காப்பாத்திட்டு ஒரு பாட்டுன்னு ரேஞ்சுல இன்னும் ஜவ்வா இழுக்காம க்ரிஸ்ப்பா கதையை முடிச்சதுக்கு இயக்குனர் விஜய்க்கு ஒரு ஷொட்டு.

19 comments:

Prathap Kumar S. said...

hahaha...நல்லாருக்குன்னு சொன்னாங்க சிலபேரு...
... கிரேட் எஸ்கேப்பு...

Annamalai Swamy said...

அநன்யா!
இப்படம் முற்றிலும் பிடிக்கவேயில்லை என்ற உங்கள் விமர்சனம் கொஞ்சம் ஆச்சர்யம் அளிக்கிறது. ஏதோ ஒரு முன் தீர்மானத்துடன் இப்படத்தை பார்த்திருக்கிறீர்கள் என்றே தோன்றுகிறது. படத்தில் titanic பாதிப்பு இருந்தது உண்மை, மற்றபடி நன்றாகவே இருந்தது. அப்புறம் ஆர்யா அணிந்திருப்பது ஓவர் கோட்டா? லகானில் ஆமிர் காணும் அதே ஓவர் கோட்டைத் தான் போட்டிருந்தார்.

ஜெய்லானி said...

அப்போ ஓசி டீவிடில கூட பாக்க லாயக்கில்லையா...ஹி..ஹி..

Chitra said...

என்னம்மோ படம் பூராவுமே ஒரு Dejavu effect! இதை எங்கியோ பார்த்திருக்கோமேன்னு தோணிண்டே இருந்தது. ஒரு redundancy! எரிச்சல் தான் வந்தது.. பாட்டுக்கள் முக்கால்வாசி மொக்கை அல்லது அவற்றை ரசிக்கும் திறன் எனக்கில்லை.. கதை = இது வரை வந்த பல படங்களின் பாதிப்பில் இருந்ததால் கதைன்னு ஒண்ணு இருக்கறாப்புல எனக்கு தெரியலை.


......உங்கள் மன வலி, தலை வலி, கழுத்து வலி எல்லாம் புரியுது..... இப்படி படத்துக்கு எதுக்கு போய் தற்கொலை முயற்சி பண்ணிக்கணும்? அவ்வ்வ்வ்.....

Anonymous said...

அனன்யா எல்லோராலும் பெரிசா பேச பட்ட அந்த சினிமா நீங்களும் பார்த்தீங்க ..நான் பார்க்லே பா இப்போ நீங்க சொன்ன பிறகு பார்க்க வேண்டுமென்ன ஐடியா வும் போச்சு ..எதோ தங்கை கூட கொஞ்சம் நேரம் உட்காரா முடிஞ்சதே உங்களால் அது போராதா ..அப்போ நீங்களும் அசோக் நகர் வாசியா ?

நான் அசோக் நகரில் தான் இருக்கேன்..அருண் வருண் லூட்டி பத்தி என்னிக்கு எழுதுவீங்க ?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:)அம்மா பாவம்

ஹுஸைனம்மா said...

அடக்கொடுமையே!! (படத்துல) இருக்கிற எல்லாத்தையும் நல்லால்லன்னு சொல்லிட்டு, இல்லாத முறைப்பொண்ணுக்காகப் பாராட்டிருக்கீங்க??!! இதான் “அநன்யா டச்”சோ?

;-)))

ஸ்ரீராம். said...

பின்னாடி ரெண்டு பொடிமாஸ்(அதாவது டீனேஜ் பையன்கள்..."//

ஹா...ஹா...நல்ல உவமை..!!

பொறுமையாய் படம், அதுவும் தியேட்டர்ல, பார்த்ததற்கு பாராட்டுக்கள்.

Muthu Kumar said...
This comment has been removed by a blog administrator.
R.Gopi said...

அநன்யா....

லீவுக்கு சென்னை பட்டிணம் போன நீங்க, யார் கொடுத்த தைரியத்துல “மதராசப்பட்டிணம்” போனீங்க....

இருந்தாலும் நீங்க பெரிய தில்லு துரையம்மா தான்... இல்லேன்னா, இந்த படத்த போய் பார்த்து இருப்பீங்களா?/

சரி...சரி... எப்போ ரிட்டன்? ட்ராமா கேட்க முடிஞ்சதா?

பத்மநாபன் said...

இப்ப வர்ற சினிமா எல்லாம் ரெண்டே பிரிவுதான்...மொக்கை, படுமொக்கை..இதுல இது எதுல சேர்த்தி...பழைய சென்னை வாசிகளுக்கு நோஸ்டாலிஜிக் டச் இருக்குன்னு சொன்னாங்க...தனியா கேட்டா ரெண்டு பாட்டு நல்லாருக்கு..
பாவம் கஷ்டப்பட்டு படம் எடுக்கறாங்க..கடைசில நம்மளயும் கஷ்ட படுத்திற்றாங்க.

Matangi Mawley said...

namakku rusk-um pudikkaathu/ risk-um pudikkaathu... naan trailer-oda niruththintaen.. :D thanks!!! en mudiva valu paduththinathukku...

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ada avlo mosamaa andha padam? naan innum paakalai... nee sonnapuram paakanumaanu yosikkaren... then how r u?

எல் கே said...

@muthu

avanga padathapathithan sonnanga.. chennayai pathi onnume sollalaiyee????

எல் கே said...

nan pakkaratha illai

இனிய தமிழ் said...

என்னங்க இப்படி எழுதிட்டீங்க...உண்மை தானோ...

மனோ சாமிநாதன் said...

அநன்யா! எனக்கு உங்களின் விமர்சனம் ஆச்சரியமாக இருந்தது! Negative feelings-உடன் இப்படித்தான் படம் என்ற முடிவுடன் சென்றதால் ரசிக்க முடியவில்லையோ? குத்துப்பாட்டு இல்லாமல், நீங்களே இறுதியில் சொன்ன மாதிரி எந்த லாஜிக்கிற்கும் ஒத்து வராத காட்சிகள் இல்லாமல், விரல் தீண்டல்கள்கூட அதிகம் இல்லாமல் ஒரு மென்மையான காதலும் அதன் உறுதியும் சொல்லப்பட்டிருக்கும் விதமும் ஒரு கவிதை மாதிரி இருப்பது உங்களால் ரசிக்க முடியவில்லையா? அப்புறம் பாடல்கள்- எல்லோராலும் புகழப்பட்ட பாடல்கள் ஒரு புறம் இருக்கட்டும், ‘பூக்கள் பூக்கும் தருணம்’ என்ற ஒரு அருமையான பாடலும் அதை உனர்ச்சியுடன் பாடிய ஹரிணி-ரூப்குமார்-இவர்களின் குரலினிமையும் நா.முத்துக்குமாரின் கவிதையும்கூடவா உங்களை ஈர்க்கவில்லை?
இந்த படத்தைப்பற்றி மீடியாக்கள், பொது மக்களின் பாராட்டுக்கப்புறம் இதன் டைரக்டர் விஜய்யை அவரவர் போட்டி போட்டுக்கொண்டு புக் செய்வதைப் பற்றி படிக்கவில்லையா?
வலைத்தளங்களின் விமர்சனங்களைப் பார்த்துத்தான் நானும் என் கணவரும் இந்தப்படத்தைப் பார்க்கச் சென்றோம். ஆனால் அவற்றிற்கும் அப்பாற்பட்டு சிறந்த ஒரு படத்தை ரொம்ப நாளைக்கப்புறம் பார்த்த மன நிறைவுடன் வெளியே வந்தோம்!!

Ananya Mahadevan said...

டியர் மக்கள்ஸ்
நோ அஃபென்ஸ் மெண்ட் டு எனிஒன்! நான் எனக்கு தோணினதை மட்டும் தான் சொன்னேன். என்னைப்பொறுத்த மட்டுல பிடிக்கலை. அவ்ளோ தான். படம் சூப்பர் ஹிட்.. லண்டன்ல இந்தப்படத்துக்கு ஸ்டாண்டிங் ஒவேஷன் எல்லாம் கிடைச்சிருக்குன்னு ஹலோ எஃப்.எம்ல எல்லாம் சொன்னாங்க.. வாழ்த்துக்கள். இதே மாதிரி ரெண்டு மூணு வேற்றுமொழி படங்கள் பார்த்திருந்ததுனால அந்த பாதிப்புல இருந்து என்னால மீளமுடியலை. அதான் போர் அடிச்சது.. மனோ அக்கா உங்களுக்கு இந்தப்படம் பிடிச்சிருந்ததுன்னு சந்தோஷம். :)

Nelson said...

akkavukku sura thaan pudikkum pola :)

Related Posts with Thumbnails