இந்த ரங்கு இருக்காரே..... ஒரு இடத்துக்கு போகணும்னா 1008 டவுட்டு வரும். கிளம்பினோம், யாராவது தெரிஞ்சவா கிட்டே வழி கேட்டுக்கலாம்ன்னு வந்தா தேவலை.. எதிர்ல வரவா எல்லார் கிட்டேயும் கேட்டுண்டே வருவார்..
அதுவும் மாயவரம்ன்னா கேட்கவே வேண்டாம். பஸ்ஸ்டாண்டுலே இறங்கினா கடைத்தெரு, எதிர்லே மணிக்கூண்டு. எதிர்லே இருக்கற மணிக்கூண்டுக்கு எப்படி சார் போறதுன்னு ஒரு கடைக்காரன் விடாம கேட்கறார். நேக்கே மானம் போறது! ஒரு கடைக்குள்ளே போய் வழி கேட்டுட்டு வெளியே வந்து, ரொம்ப தூரம் வந்துட்டோமே.. இன்னும் மணிக்கூண்டு வரலையேன்னு அடுத்த கடைக்குள்ளே போறார்... கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
சரி முதல் வாட்டி தான் அப்படி கேட்டாரா, எல்லாரும் சளைக்காம தோ... இதான் சார் மணிக்கூண்டுன்னு சொல்லிண்டே இருந்தா. மாயவரம் ‘சிட்டி’யில் இருக்கறதே ஒரேயொரு ஹிஸ்டாரிக்கல் லேண்டு மார்க் அந்த மணிக்கூண்டு தான். அதைச்சுற்றித்தான் ஊர் விரியும்.. சுற்றும் 2கிமீ ரேடியஸில் வீடுகள் ரோடுகள் எக்ஸட்ரா...
இதுல டவுட்டு வருது பாருங்க.. உஸ்ஸ்ஸ்...
சரி முதல் வாட்டி எல்லாக்கடையிலும் ஏறி டவுட்டு கேட்டு மணிக்கூண்டை கண்டு பிடிச்சு காளியாக்குடியில் கொட்டிண்டு கோவிலுக்கு போயிட்டு வந்தாச்சோல்லியோ... அடுத்த வாட்டியாவது தானா போகலாம் இல்லே? பஸ்டாப்புலே இறங்கின உடனே ஆரம்பிச்சுட்டார்.. மறுபடியும் அதே கேள்வி , ”மணிக்கூண்டுக்கு எப்படி போறது சார்?” அந்த ஊர்க்காராளை சம்மதிக்கணுங்கேட்டேளா... அவ்ளோ எக்ஸைட்மெண்டு அவாளுக்கு.. இதோ.. இப்படி மெயின்ரோடுல திரும்பினீங்கன்னா...ன்னு அவாளும் சொல்ல ஆரம்பிச்சுடுவா.. நேக்கு தான்ப்ளட் பிரஷர் கூடும்.
“அது ஏன்னா தெரிஞ்ச இடத்துக்கே வழி கேக்கறேள்?”ன்னு கேட்டா எல்லாம் ஒரு கன்ஃபர்மேஷன் தாண்டீன்னு ஒரு சப்பைக்கட்டு.. நான்ஸன்ஸ்... இந்த ஆம்பளைங்களே இப்படித்தான் பா...
சில முக்கியமான நேரங்கள்லே ரங்கு கேனத்தனமா.. அதாவது எப்போவும் போலவே...வழி கேப்பாரா... அங்கே சொல்லிவெச்சமாதிரி ஒரு பதில் வரும். அது என்ன போன ஜென்மத்து பாவமோ எதிரிங்களோட சாபமோ தெரியாது.. ரங்குவோட அஜாக்கிரதை தான். சரியாக ஒரு மாங்கா மண்டையனை செலக்டு பண்ணி வண்டியை நிறுத்தி, வணக்கம் வெச்சு”சார்.... மேடவாக்கம் எப்படி போறது?” ன்னு ஒரு மில்லியன் டாலர் கேள்வி கேட்டா .. நடுமண்டையில நச்சுன்னு அடிச்சாப்புலே ”தெரியாதுங்க.. நான் ஊருக்கு புதுசு.“ ன்னு கூலா சொல்லிட்டுப் அவா அவா வேலையப்பார்த்துண்டு போயிடுறா..
பாலச்சந்தர் படத்துல புர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு ஜெயசித்ரா ஒரு சிரிப்பு சிரிப்பாளே... அதே மாதிரி சிரிச்சுடுவேன்.
அன்னிக்கி ஃப்ரைடே.. இளம் கணவன் மனைவிக்கு (அட நாங்க தேன்)வீக்கெண்டு மூடு.சரி மாயாஜால் போய் ஆரண்ய காண்டம் பார்க்கலாம்ன்னு சொன்னார். நேக்கு மாயாஜால், கீயாஜால் எல்லாம் எங்கே இருக்குன்னு தெரியாதுன்னு சொல்லிட்டேன்.இடம் தெரியாட்டி ரங்கு பண்ணும் ஹோம்வொர்க் இருக்கு பாருங்கோ.. ஜஸ்டு டயல் கூப்பிட்டு மணிக்கணக்கா லேண்டு மார்க் லேட்டிட்யூட் லாஞ்சிட்யூட் எல்லாம் கேட்டுண்டு இருப்பார். இது போறாதுன்னு கூகிள் எர்த்தில் தேடி கண்டிபிடித்து நோட்ஸ் எடுத்துக்கொண்டு ஒரு பழம்பொருள் ஆராய்ச்சியாளர் தோர்த்துப்போகும் ரேஞ்சுக்கு பில்டப்பு கொடுப்பார்.கண்ல கண்ணாடி,முதுகுல பை, தலையிலே க்ளிண்ட் ஈஸ்டுவுட் தொப்பி எல்லாம் போட்டுண்டு தான் கிளம்புவார்ன்னா பார்த்துக்கோங்களேன்.
நேக்கு எல்லாம் தெரியும்ன்னு ரங்கு சொன்னப்போவே நான் சுதாரிச்சு இருந்தேன்னா கெட்டிக்காரி.. அதான் இல்லையே.. அப்புறம் புலம்பி என்னத்த ப்ரயோஜனம்? வண்டியை எடுத்துண்டு ஈஸீஆர்ல போனோம்.. போனோம்.. போயிண்டே இருக்கோம்... வாழ்க்கையின் ஓரத்துக்கே போனோம்.. ஆனா இந்த பிரும்மஹத்தி மாயாஜால் எங்கே போய் உக்காண்டிருக்குன்னு ஒரு ஐடியாவும் இல்லை.நடுக்காட்டில் ஒரு சில சம்பந்தமேயில்லாத ரெஸ்டாரண்டுக்கள், பேக்கரிகள், துணிக்கடைகள்(யாரு வருவாங்க இங்கெல்லாம்ன்னு மனசுக்குள்ளே ஒரு கேள்வி!) அங்கே இடம் பார்த்து பல்பு வாங்க ரங்கு காத்துக்கொண்டு இருந்தார். இப்போ பாருங்கோ டெம்ப்ளேட் பதில் தான் வரப்போறது.. ”தெரியாதுங்க நாங்க ஊருக்கு புதுசு”ன்னு சொல்லி கேலி பண்ணீண்டே வந்தேனா.. ரங்கு ரெண்டு யூத்து பாய்ஸ் கிட்டே நிறுத்தி, இவாளுக்கு கட்டாயம் தெரிஞ்சுருக்கும். ஏங்க மாயாஜால் எங்கே இருக்குன்னு தைரியமா கேட்க, அவர்களும் வழக்கமாக,”தெரியாதுங்க, நாங்க இங்கே புதுசா வந்திருக்கோம்”ன்னு சொல்லிட்டாங்க! நான் மறுபடியும் ஜெயசித்ரா ஸ்டையில் கிக்கீ...புர்ர்ர்ர்ர்ர்ர்ர்... கொஞ்சம் வண்டியை தள்ளி நிறுத்திவிட்டு இந்த வாட்டி ரங்குவும் சிரிச்சுட்டார்.

என் கிட்டே என்ன ஒரு பிரச்சினைன்னா... அளவுக்கு அதிமான சூட்சுமம் நேக்கு.. ஸோ.. ஈவென் சின்னச்சின்ன கடைகள் கூட பளிச்சுன்னு என் நினைவுல நிக்கும் பார்த்துக்கோங்கோ.. என்னை பிக் பண்ணுவதுக்கு ரங்ஸ் ஃபோன் பண்ணி,”நீ எங்கே நிக்கறாய்”ன்னு ஒரு வேளை கேட்கிறார்ன்னு வெச்சுக்கோங்களேன்.. நானும் ரொம்ப பெரிய போர்டு இருக்கும் ”பாஷாபாய் பேக் ஒர்க்ஸ்”, ”மெஜஸ்டிக் ஜூஸ் கடை”, ”ராம் தையலகம்”, ”பத்ரினாத் பாதாம் மில்க்” , ” பேரூனாத் குல்ஃபி”, சாய்பாபா வண்டி, ”பனாரஸ் பான் ஸ்டால்”, இப்படி மல்டி நேஷனல் ப்ராண்டு நேம்ஸ் இருக்கும்படியா கடைகளைத்தான் லேண்டு மார்க்காக சொல்லுவேன்.. காரணம் அவ்ளோ கவனம். எல்லாத்தையும் பார்த்து வெச்சுப்பேனாக்கும். அது இவரோட மரமண்டைக்கு தெரியாது.
ஆனா இவருக்கோ ஐஸி ஐ ஸி ஐ பேங்க்,ஷெல் பெட்ரோல் பங்க், ஹோண்டா ஷோரூம், வோடாஃபோன் ஸ்டோர் இப்படி துக்கடா லேண்டு மார்க் தான் பிடிக்கும்.
ஆனா இவருக்கோ ஐஸி ஐ ஸி ஐ பேங்க்,ஷெல் பெட்ரோல் பங்க், ஹோண்டா ஷோரூம், வோடாஃபோன் ஸ்டோர் இப்படி துக்கடா லேண்டு மார்க் தான் பிடிக்கும்.
அன்னிக்கி அப்படித்தான்,”அந்த அஜித் ரசிகர் மன்றம் இருக்குமேன்னா அந்த வழியா போயிடுங்கோ”ன்னு சொன்னேனா.. ரங்கு செம்ம டென்ஷன்.. சரின்னு இடப்பக்கம் வலப்பக்கம்ன்னு வழி காட்டினா.. ”எங்கேடீ ரசிகர் மன்றம்”ன்னு கேட்கறார்.உடனே நான் அந்த போர்டை காட்டினேன்.. திட்டோ திட்டுன்னு வண்டியை நிறுத்திட்டு அரை மணி நேரம் திட்டினார்ன்னா பார்த்துக்கோங்களேன்.அதென்னன்னா, நல்லையா தெருன்னு மஞ்ச போர்டு எழுதியிருப்பாளே.. அப்படி சின்னதா தான் எழுதியிருக்காம். இதையெல்லாம் அடையாளமா சொல்லக்கூடாதாம்.. நான்ஸன்ஸ்! இந்த ஆம்பளைங்களே இப்படித்தான் பா... வெரி ஆஃப் தி மோசம்!