Pages

Tuesday, July 9, 2013

ரங்குவின் ரொமான்ஸ்கள்

”ஏன்னா, நேக்கு ஒரு முழம் பூ வாங்கிக்கொடுக்கக்கூடாதோன்னு உங்க கேள்ஃப்ரெண்ட்ஸுக்கு தினமும் வாங்கித்தரேளே”ன்னு நான் கேட்டேன்னு வைச்சுக்கோங்களேன், உடனே இவர் சொல்லும் சால்ஜாப்பு இருக்கே, ”அவாள்ளாம் ஒரு கண்ணி பூ தான் வெச்சுக்கறா, நீ மூணு முழம் கேக்கறாய், நூறு ரூபாய் ஆறது.. அதுக்கு நான் ஒரு லிட்டர் பெட்ரோல் போட்டுக்கலாம். சில சமயம் பூ விலை ஜாஸ்த்தியானா, செம்பருத்திப்பூவை செடியில இருந்து பிச்சுக்கொடுத்தாலும் என் கேள்ஃப்ரெண்ட்ஸ் சந்தோஷிக்கறா.. நீ புலம்பறாய்” அப்படீங்கறார்!

தினமும் சாயந்திரம் ஃப்ரெஷ்ஷா குளிச்சுட்டு பட்டையெல்லாம் போட்டுண்டு 6 மணிக்கு ஆசமனீயம் பண்ணிட்டு, இவர் “ஒருத்தரை சந்திக்கணும்”ன்னு கூசாம என்கிட்டே பொய் சொல்லிட்டு போகும் இடம் - அயோத்தியா மண்டபம். அங்கே ஸ்ரீஅண்ணாவின் மஹாபாரத சொற்பொழிவு நடக்கறதில்லையா.. அதுக்கு போகலை.. அங்கே வரும் வயசான மாமிகளை சைட்டடிக்க போறார். வாசல்லேயே நிப்பார்.. ஆட்டோ, டூவீலரில் வரும் மாமிகளை கையை பிடிச்சுண்டு கூட்டிண்டு போய் உள்ளே ( ஏற்கனவே ஆத்துல இருந்து எடுத்துண்டு போன) ஜமுக்காளத்தில் உட்கார வெச்சுட்டு தண்ணி, வென்னியெல்லாம் கேட்டு உபச்சாரம் பண்ணிட்டு மறுபடியும் நெக்ஸ்டு மாமி வேட்டைக்கு ரெடி ஆயிடுவார். இதெல்லாம் போதாதுன்னு அவா முன்னாடி ஸ்ரீ அண்ணாவுக்கு வரும் டவுட்ஸ் க்ளேரிஃபை  பண்ற மாதிரி ஃபிலிம் காட்டுவார்! இந்த சின்ன பசங்க ரெண்டு கையையும் விட்டுட்டு சைக்கிள் ஓட்டுவாங்களே.. சேம் டைப்ஸ்.

அந்த மாமிகளை ரோட் க்ராஸ் பண்ணிவிடுவது, தீர்த்தம் வாங்கிண்டு வந்து அவா பொக்கை வாயில் (ர்ர்ர்ரொமாண்டிக்காக) ஊற்றுவதுமாக இவர் பண்ணும் ரவுஸு தாங்கலையாம்,  அந்த அயோத்தியா மண்டப ஆஃபீஸ்காரா சொல்லி சலிச்சுக்கறா. இவரை உள்ளே விடக்கூடாதுன்னு ஜெனரலா பேசிக்கறா.

சரி இந்தக்கால யூத்ஸ் மாதிரி அப்படி என்னெல்லாம் பண்ணி ரங்ஸ் மாமிகளை மடக்கறார்ன்னு ஒரு சின்ன ஆராய்ச்சி பண்ணறோமா?

1.யூத்ஸ் எல்லாம் தத்தம் ஃபிகர்களை மடக்க செய்யும் பேஸிக் டெக்னிக் இது
கேள்ஃப்ரெண்ட்: ”ஏதாவது இண்ட்ரெஸ்டிங்கா பேசேண்டா”
பாய்ஃப்ரெண்ட்: ”அனிதா”(அதான் கேள்ஃப்ரெண்டின் பெயர்)
கேள்ஃப்ரெண்ட்: ”ஹி ஹி ஹி” (இது போதாதா? அவள் விழுந்தாச்சே!) 

இப்போ ரங்ஸின் டெக்னிக் பார்க்கலாம்: 
ரங்ஸ்: மாமி ஜடபரதர் உபாக்யானத்தில் வர கதை தெரியுமோ உங்களுக்கு
மாமி: தெரியாதே.. (ஆச்சு அடுத்து ரங்ஸ் அந்த மாமியை இம்ப்ரெஸ் பண்ண ஒரு ஐஞ்சு நிமிஷம் போறுமே!) 
இந்த ஜடபரதர் உபாக்யானம், காஞ்சி வரதராஜர் வைபவம், நாலாயிரத் திவ்விய பிரபந்தம் இப்படி கைவசம் நிறைய சரக்கு வெச்சுண்டு இருக்கார். தினசரி ஸ்ரீஅண்னாவின் ஆடியோ பிரவசனங்கள் எல்லாம் கேட்டு கிளைக்கதைகள் ஆயிரம் கைவசம் இருக்கே!ஆல் தி மாமீஸ் ஃப்ளாட்டல்லவோ? இதுவே நான் டவுட்டு கேட்டா மட்டும், அதான் டீவில வரதே.. பார்த்தாத்தானே? சதா ஃபேஸ்புக், ஜிடாக்! நீயெல்லாம் எங்கே உருப்படறதுக்கு அப்படீங்கறார்! க்கும்!

2. இப்போ யூத்ஸ் எல்லாம் தத்தம் கேள்ஃப்ரெண்ட்ஸுக்கு டெட்டி பேர், பூ பொக்கே, ஆண்டிக் ஜுவல்லரி,  ஊஸ்மணி, பாஸ்மணி எல்லாம் வாங்கிக்கொடுப்பாங்க இல்லியா.. அதே மாதிரி நம்ம ரங்ஸின் டெடிக்கேஷன் என்ன தெரியுமோ? சுகர் டெஸ்ட் கிட், BP Test கிட், பல்செட்டு, க்ளாஸ் டம்ளர்,  latest prescription two weeks drug sponsorship, அம்ருதாஞ்சனம், மூட்டுவலி வாலினி ஸ்ப்ரே, ஜெல் இப்படியா வாங்கி கொடுத்து மடக்கிடுவார்.நான், “நேக்கெதாவது வாங்கிண்டு வந்தேளான்னா”ன்னு ஆசையா கேட்டா பர்ஃபி ரன்பீர் மாதிரி காலி பாக்கெட்டை வெளியே எடுத்து காட்டுவார்! ஹும்..

3. பாய்ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் அவா அவா கேள்ஃப்ரென்ட்ஸை பைக்ல கூட்டிண்டு போய் காலேஜ், ஆஃபீஸ்ல ட்ராப் பண்ணியூட்டு பிக் பண்ணுவாளே.. அதே மாதிரி தான் நம்ம ரங்ஸ் 6 மணிக்கெல்லாம் ஆல் மாமிஸ் பிக்கப்.. அவா அவா ஆத்துல இருந்து.. அப்புறம் நேரே அயோத்தியா மண்டபம் ட்ராப்.. ராத்திரி பிரவசனம் முடிஞ்சுட்டு மறுபடியும் அ.ம பிக்கப் பண்ணிட்டு, மாமிஸை ஆத்துல ட்ராப் பண்ணிடுவாருக்கும்.. இதுல வேல்யூ ஆடட் பேக்கேஜ் என்னன்னா, மாமிகள் நடுவுல் பூ வாங்கணும், காப்பிப்பொடி வாங்கணும், கீரை வாங்கணும்ன்னு சொன்னா, ரங்ஸ் பொறுமையா நிறுத்தி சமர்த்தா ஸ்பான்ஸர் பண்ணி வாங்கிக்கொடுபபார். இதுவே நான் கேட்டா, ஸ்கூட்டி எதுக்கு வெச்சுண்டு இருக்கே? எடுத்துண்டு போய்  வாங்கிக்க வேண்டியது தானேன்னு கலாட்டா பண்ணுவார்.. வெவ்வ்வ்வே!

4. யூத்ஸெல்லாம் கேள்ஃப்ரெண்டுகளின் ஆபத்பாந்தவனாக அனாதரக்ஷகனாக இருக்கா இல்லையா... அப்ளிக்கேஷன் ஃபார்ம் லாஸ்ட் டேட், அர்ஜெண்டா பேங்குக்குப் போய் டீ.டீ எடுக்கறது இந்த மாதிரியான விஷயங்களுக்கு ஹெல்ப் பண்ணுவா இல்லையா.. அதே மாதிரி ரங்ஸை மாமிஸ் கிரி ட்ரேடிங் போறதுக்கு, அபிஷேகப்பால் கோவில்ல கொண்டு குடுக்கறதுக்கு, செருப்பு டோக்கன் பத்திரப்படுத்துறதுக்கு,பிரசாதம் வாங்கிண்டு வந்து கொடுக்கறதுக்கு  இப்படியெல்லாம் யூஸ் பண்ணிப்பா. தாளிக்க எண்ணெய் வெச்சுட்டு “நா கடுகு காலி ஆயிடுத்துன்னா ப்ளீஸ் கொஞ்சம் வாங்கிண்டு வந்துடுறேளான்னு நான் கேட்டா, உடனே இதெல்லாம் முன்னாடியே பார்த்து ரீஃபில் பண்ணி வெச்சுக்கறதுக்கென்ன நோக்கு?”ம்பார். கிர்ர்ர்ர்.. ரொம்ப ஓவர் இது.

5.  யூத்ஸ் அவா கேள்ஃப்ரென்ட்ஸை எல்லாம் ஜாலியா பீச், பப், சினிமா, மால் இப்படி கூட்டிண்டு போவா இல்லையா.. அது மாதிரி இவர் சாரதா பீடம், சங்கர மடம், நவக்கிரக கோவில்ஸ், கும்பகோணம், காஞ்சி கோவில் டூவர் இப்படியா கூட்டிண்டு போவார். என் பர்த்டேன்னா.. கோவிலுக்கு போலாமான்னு கேட்டாக்கூட அவசரமா டைரியை புரட்டி ஷெட்யூல் செக் பண்ணிட்டு , இன்னிக்கி சுலோ மாமியை கூட்டிண்டு மைலாப்பூர் கபாலி கோவில் வரை போயாகணும்ம்மா.. நீ தனியா போயிட்டு வந்துடேங்கறார்..இதெல்லாம் அந்த பகவானுக்கே அடுக்காது. 

இதே ரேஞ்சுல போச்சுன்னா பேசாம இவரையும் ஒரு நல்ல ஓல்டேஜ் ஹோமா பார்த்து சேர்த்து விட்டுடுவேன் நான்! முடியலை!

27 comments:

திவாண்ணா said...

:-))))))))))))))

சாந்தி மாரியப்பன் said...

மேலோட்டமா பார்க்கறதுக்கு ரங்குவை வார்ற மாதிரி தோணினாலும், அவரோட ரொமான்சை நீங்க எவ்ளோ ரசிக்கிறீங்கன்னு தெரியுது :-))

அவரது சேவை நாட்டுக்குத்தேவை. மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்...

raji said...

எனக்கென்னமோ ரங்கஸ் மேல ரொம்ப பொறாமை படறாப்பலன்னா படறது

Geetha Sambasivam said...

நீ மூணு முழம் கேக்கறாய், நூறு ரூபாய் ஆறது.. அதுக்கு நான் ஒரு லிட்டர் பெட்ரோல் போட்டுக்கலாம். சில சமயம் பூ விலை ஜாஸ்த்தியானா, செம்பருத்திப்பூவை செடியில இருந்து பிச்சுக்கொடுத்தாலும் என் கேள்ஃப்ரெண்ட்ஸ் சந்தோஷிக்கறா.. நீ புலம்பறாய்” அப்படீங்கறார்!//

சென்னையிலே பூ இத்தனை விலையா? இங்கே 20 ரூபாய்க்கு நாலு முழம் கட்டறேனே! அநியாயக் கொள்ளை. அதான் ரங்கு வாங்கித் தரலை. கரெக்டு!

//கிர்ர்ர்ர்.. ரொம்ப ஓவர் இது.//

ராயல்டி, ராயல்டி,

Geetha Sambasivam said...

பாவம், ரங்கு! இத்தனை மெனக்கிடறார். அவரை ஓல்ட் ஏஜ் ஹோமிலே சேர்க்கணுமா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், சரியான பெண்ணாதிக்க அநன்யா அக்காவின் பிடியிலிருந்து ரங்குவை விடுவிக்கத் தோழர்களே, தோழிகளே, நண்பர்களே, நண்பிகளே, தொண்டர்களே, குண்டர்களே, தயாராகுங்கள்.

போராடுவோம்.

vetti said...

Pesaama neeyum Sulo maamiyai azhaichundu porachey thotthindu poga vendiyadhu dhaaney? Adhai vittuttu...btw, yaaru indha Sulo mami?

sathishsangkavi.blogspot.com said...

ரங்ஸ் பாவங்க...

ஸ்ரீராம். said...

பர்ஃபி படமா, திண்பண்டமா? ரன்பீர் என்பது ஏதாவது ஜிஞ்சர்பீர் மாதிரியா?

ஓ.. ஸ்கூட்டி வச்சுருக்கீங்களா நீங்க? அதுலதான் ஆஃபீசா?

இன்னிக்கு உங்க பர்த் டேயா?

மற்றபடி ரங்ஸுக்கு எங்கள் பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

இராஜராஜேஸ்வரி said...

ரொம்ப ஓவர் இது.
ஓவர் மேல் ஓவராய் புகார் பட்டியல்..!

Shanthi Krishnakumar said...

Best, nee sulo maamiyaththu mamaavukku help panna arambi. :P

வெங்கட் நாகராஜ் said...

அட பாவங்க ரங்கு.... இப்படியா ஓட்டுவீங்க!

'பரிவை' சே.குமார் said...

அவரை திட்டுறமாதிரி சேட்டைகளை ரசிக்கிறீங்கக்கோவ்...

மாமா பாவம் இப்பவே முதியோர் இல்லத்துக்கு எல்லாம் அனுப்பிடாதீங்கோ...

இமா க்றிஸ் said...

;))))

Elaichii said...

Super post! I am coming here for the first time and enjoyed reading many of your posts.
One thing for sure, is you gave me a stomach ache today! I haven't laughed this much in a long time.
Nengalum chrompet, naanum chromepet
( now in Us of A) Romba unarchi vasapattuten!

Priya

RVS said...

அதகளம். அபாரம் அனன்ஸ். ரங்க்ஸுக்கு ஒரு தடவை படிச்சுக் காமிச்சீங்களா?

எனக்கும் இந்தமாதிரி நிறைய கேள்ஃப்ரெண்ட்ஸ் உண்டு. உங்க ரங்க்ஸ் மாதிரியே கைவசம் கொஞ்சம் சரக்கு வச்சுருக்கேன்.

ரங்ஸின் ரொமான்ஸுக்கு செம ரெஸ்பான்ஸ் இருக்கே! சூப்பர்ப். :-)

Ananya Mahadevan said...

Thank you all for your generous comments. RVS அண்ணா அவருடன் உக்காந்து டிஸ்கஸ் பண்ணித்தான் இதை எழுதியிருக்கேன். இன்புட்ஸ் எல்லாம் கொடுக்கறது அவர் தானே? :))
சிவப்ரியா, ரொம்ப நன்றி! :) ஓ குரோம்பேட்டையா? :) சூப்பராச்சே!

Dubukku said...

//மேலோட்டமா பார்க்கறதுக்கு ரங்குவை வார்ற மாதிரி தோணினாலும், அவரோட ரொமான்சை நீங்க எவ்ளோ ரசிக்கிறீங்கன்னு தெரியுது //

- இதை நான் எக்கச்சக்கமாய் வழிமொழிகிறேன் :))
குத்தம் சொல்கிற மாதிரி சொல்லி அனு அனுவாய் ரசிச்சிருக்கீங்க. வர்றேன் வர்றேன் வந்து ரங்க்ஸ் கிட்ட சில டெக்னிக்ஸ் கத்துக்கறேன் :)))


அருமையாய் எழுதியிருக்கிறீர்கள் அனன்யா. வாழ்த்துகள் !!!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//நீ மூணு முழம் கேக்கறாய்//

அந்த முக்கால் இன்ச் கூந்தலுக்கு மூணு முழம் கொஞ்சம் ஓவர் தான்...:)


// சதா ஃபேஸ்புக், ஜிடாக்//

இது பாய்ண்டு...:)


//சுகர் டெஸ்ட் கிட், BP Test கிட், பல்செட்டு, க்ளாஸ் டம்ளர், latest prescription two weeks drug sponsorship, அம்ருதாஞ்சனம்//

ஹ ஹ ஹ... செம செம செம


//இதே ரேஞ்சுல போச்சுன்னா பேசாம இவரையும் ஒரு நல்ல ஓல்டேஜ் ஹோமா பார்த்து சேர்த்து விட்டுடுவேன் நான்! //

அடிப்பாவி...:)


அநியாயத்துக்கு கலாய்ச்சு இருக்கே நீ அவர...:)))

Mala said...

இப்படியாப்பட்ட ஃ ப்ரெண்டை த்தான் நான் தேடிண்டு இருக்கேனாக்கும்.
கடே..சீ காலத்துல ரொம்ப தேவையா இருக்கும்னேன்... என்ன சேவை என்ன சேவை... (சேச்சே அந்த சேவை இல்ல நா சொல்றது...!)
...லிங்க் குடு அ... னன்... யா ...ஆஆஆஆஆஆஆஆஆஆ...

Mala said...

இப்படியாப்பட்ட ஃ ப்ரெண்டை த்தான் நா தேடிண்டு இருக்கேனாக்கும்....
கடேசி காலத் ல ரொம்ப வேண்டியிருக்கும்....என்ன சேவை என்ன சேவை....... (நோ நோ நா சொல்றது அந்த சேவை இல்லே )
லிங்க் குடு
அ ன ன்யா.....ஆஆஆஆஆஆஆஆஆஆ :p

Porkodi (பொற்கொடி) said...

// மேலோட்டமா பார்க்கறதுக்கு ரங்குவை வார்ற மாதிரி தோணினாலும், அவரோட ரொமான்சை நீங்க எவ்ளோ ரசிக்கிறீங்கன்னு தெரியுது :-)) //

unmai unmai unmai!! kanna pinnavena vazhi mozhigiren!!!

ஸ்ரீராம். said...உங்களை ஒரு தொடர்பதிவு எழுத அழைத்திருக்கிறேன். தயவு செய்து எங்கள்ப்ளாக் வந்து படிக்கவும்! தொடரவும்!

திண்டுக்கல் தனபாலன் said...

Visit : http://blogintamil.blogspot.in/2013/07/3_25.html

வாழ்த்துக்கள்...

சுசி said...

my thalai is also of your rangs type only. I will insert a special post about this for his birthday.

குட்டிசாத்தான் சிந்தனைகள் said...

yekka ippathaan paditchu mudichen, hahahaha rangu pannum alumbal super. jadikkeththa moodi.....:P

Unknown said...

Hilarious to say the least. You are gifted Ananya. :-)

Unknown said...

Hilarious! You are gifted Ananya :-)

Related Posts with Thumbnails