Pages

Friday, July 26, 2013

கம்ப்யூட்டர் கன்ஃப்யூஷன்ஸ் - எனக்கும் கம்ப்யூட்டருக்குமான அபூர்வ பந்தம் Part -2 - முற்றும் :)

பாத்தீங்களா.. நான் நினைச்ச மாதிரியே.. இது ரொம்ப நீள்... பதிவா போயிடுத்து.. மன்னிக்கவும்.

இதனுடைய முந்தய பதிவு  பாகம் -1 இங்கே இருக்கு

அப்படியாக ”இவள் கோலப்பொடி விற்கத்தான் லாயக்கு”ங்கற ரீதியில எனக்கு ப்ரில்லியண்ட்ஸ் சர்டிஃபிக்கேட் எல்லாம் கொடுத்தாங்க.. அதான் ஏதோ டிப்ளமா இன் சம்திங் சம்திங்.. அதெல்லாம் எங்கே இருக்கோ.. ஒருத்தருக்கும் தெரியாது. இது வரை ஒரு நாய் கூட அதை சீண்டினதில்லை! இதுக்கு யூனிவர்ஸிட்டி மாதிரி ஒரு சிவப்பு சீல்! அதுக்கு ஒரு வைஸ் சான்ஸில்லர் சிக்னேச்சர் வேற! ஹய்யோ ஹய்யோ! ஒவ்வொரு வாட்டி இண்டர்வ்யூவுக்கு போகும்போதெல்லாம் அப்பா, அந்த சர்டிஃபிகேட் எடுத்துண்டியான்னு மறக்காம கேப்பார்.. ஃபைலெல்லாம் எடுத்துண்டு வேகாத வெயில்ல டி.எம்.எஸ் போய் இறங்கினா.. லேசு பாசா கேள்வியெல்லாம் கேட்டுட்டு ”வீ வில் கெட் பேக் டு யூ”ன்னு கழட்டி விட்ருவாங்க.. நான் தான் படு பயங்கர ப்ரில்லியண்ட்ன்னு எல்லாருக்கும் தெரியுமே!

பைடெக் வந்தப்போ கொஞ்சம் அட்வான்ஸ்ட் கோர்ஸஸ் எல்லாம் படிக்கலாம்ன்னு நினைச்சேன்(க்கும் பேஸிக் கோர்ஸ்ல தான் புலி ஆயிட்டேன்ல?)ஸி++, ஜாவா, விஷுவல் பேஸிக், ஆரக்கிள், பவர் பில்டர், ஹெச்.டி.எம்.எல், ஸி.ஜி.ஐ பேர்ல், இப்படி புரியாத மொழியில் பல கோர்ஸுகளுக்கு சேர்ந்தேன்.24 அவர்ஸ் லேப் உண்டு என்றார்கள், அதுக்கு அட்வான்ஸ் புக்கிங் உண்டாம். இருக்கற செஷனே நான் ஒழுங்கா அட்டெண்ட் பண்ணினதில்லை. இதுல எக்ஸ்ட்ரா செஷன்ஸ் வேறு!  ஒரு எழவும் சத்தியமா என் (மர) மண்டையில் ஏறவே இல்லை! போனாப்போறது.. அப்பா பாவம்ன்னு க்ளாஸுக்கு போயிட்டு வந்தேன். பின்னே என்னவாம், ”இவ பணத்தை கட்டிடு க்ளாசுக்கே போக மாட்டேங்கிறா பீடை”ன்னு அஷ்டோத்திரம் வாசிக்கறார் அவர். இதுக்கு ஒரு சில ரெக்காடுகளை ஃபில்டர் போட்டு புழிஞ்சு எடுத்துட்டு grant/revoke பண்ணும் புரியாத SQL Queryஏ எவ்வளவோ பெட்டராக இருந்தது.

கம்ப்யூட்டர் க்ளாஸுக்கு போகும்போது நடக்கும் ஒரே நல்ல விஷயம் குரோம்பேட்டையிலிருந்து தாம்பரம் வரை சைக்கிளில் ட்ராஃபிக்கே சுத்தமாக இல்லாத ஜி.எஸ்.டி ரோடில் ஜாலியாக போவது. என்ன ஒரு சிம்பிள் வாழ்க்கை அது? அங்கே நடந்த சுவாரஸ்யமான விஷயம் இதான்: அங்கே lab அஸிஸ்டெண்டுகள் இருப்பார்கள்.

லேப் செஷன் முடியும் போது நிச்சியமாக கம்ப்யூட்டரை ஆஃப் பண்ணனுமாம். ப்ளீஸ் ஷட்டவுன் தி கம்ப்யூட்டர் வென் யூ லீவ்ன்னு சொல்லி இருந்தார். அவர் பார்க்கும்போது நான் ரொம்ப பெருமையா, நேரா அந்த ஆன்/ஆஃப் சுவிட்சை டப்புன்னு ஆஃப் பண்ணிட்டேன்.. கையெழுத்து போடாதீங்க தம்பீ.....ன்னு அவர் ஓ....டி வருவதற்குள் பாவம் அந்த கம்ப்யூட்டர் சப்த நாடியும் ஒடுங்கி ஆஃப் ஆயிருந்தது. அடுத்த பதினஞ்சு நிமிஷம் அந்த Lab faculty எங்கப்பா மாதிரி ஒரே அஷ்டோத்திர சத நாமாவளி சொல்லி எனக்கு அர்ச்சனை பண்ணினார்.. ஓஹோ. இதுல இவ்ளோ இருக்கான்னு நினைச்சுண்டேன். அந்த ஒரு வருஷத்தில் எனக்கு பிடிச்ச ஒரே விஷயம் ஒவ்வொரு சனிக்கிழமையும் ஜாலியா பஜனை இருக்கும்.. ஃபேக்கல்டியும் ஸ்டூடண்ட்ஸும் சேர்ந்து புதுப்புது டாப்பிகில் ப்ரெஸெண்டேஷன்(யாருக்கு வேணும்?), க்விஸ் (ரெண்டு வருஷம் இந்தமாதிரி இன்ஸ்டிட்யூட்களில் பஜனை பண்ணினதுனால, இதெல்லாம் கொஞ்சம் தெரிஞ்சது எனக்கு) அப்புறம் ஆட்ஸாப்(ஹை), டம்ப்சராட்ஸ்(அடெடே, பட் ஒன்ல்லி டெக்னிக்கல் டேர்ம்ஸ் :( )இதெல்லாம் நடந்தது. ஷி இஸ் வெரி ஸ்மார்ட்ன்னு சொல்லிகிட்டாங்க..  பொத்தாம் பொதுவா. ஹி ஹி.. நான் ராம் இன்ஃபோடெக்(வேளச்சேரி)ல போய் ஒரு ப்ரோக்ராமிங் டெஸ்டு எழுதி, அந்த ரிஸல்டப்போ என்னை (மட்டும்) பெர்ஸனலா கூப்பிட்டு..காரித்.. சரி விடுங்க.. அந்தக் கதையெல்லாம் இப்போ எதுக்கு? தோ பாருங்க.. கல்லெல்லாம் விட்டெறிஞ்சீங்கன்னா உங்க மானிட்டர் தான் பாழாகும்! அப்புறம் ரீயெம்பர்ஸ்மெண்ட்டெல்லாம் கேட்கலாது... ஓக்கே? ப்ளீஸ் கூல் டவுன்.

கொஞ்ச நாள்ல ப்ரவுஸிங் செண்டர்ஸ் வந்துடுத்து. மெட்ரோ சிட்டியான குரோம்பேட்டையிலும் அப்படி ஒரு அபூர்வ சாதனமாக சக்திகுமார் சாஃப்ட்னெட் விளங்கித்து. இப்போ நளாஸ்/ பூர்வீக்கா இருக்கும் இடமானது 1998ல் ஒரு ஸ்டோரி பில்டிங்.. சரி சரி.. ஒரு மாதிரி கொட்டகை போட்ட மொட்டை மாடியாக இருந்தது. அங்க தான் சக்திகுமார் சாஃப்ட்னெட்டை ஆப்பரேட் பண்ணிண்டு இருந்தாங்க. எங்களது எல்லா இண்டர்னெட் சேவைகளையும் அந்த கடை தான் பார்த்துண்டது. நானும் தங்கைமணியும் போய் 1998ல் ஹாட்மெயிலில் ஒரு அக்கவுண்ட் ஓப்பன் செஞ்சோம். பேரே செம்ம காமெடி.. nirmmalanarmadha@hotmail.com ப்ர்ர்ர்ர்ர்ர்... அதுக்கு பாஸ்வேட் அதை விட காமெடி - மூர்த்தி (எங்கப்பா பேராம்.. என்ன ஒரு அன்பு அர்ச்சனை பண்ணும் நைனாவிடம்?) அங்கே தான் resume அடிக்கறதும் ப்ரிண்டவுட் எடுப்பதும்.. ஏக பிஸியான இடம் அது அப்போ. அப்பெல்லாம் இண்டர்னெட் படு காஸ்ட்லியாக்கும். அரை மணி நேரத்துக்கு 50 ரூபாய் வாங்கிண்டு இருந்தான் தட் பகல் கொள்ளைக்காரன். ஆனாலும் கம்ப்யூட்டர் மோகம்! வாட் டு டூ.. 4000 ரூபாய் சம்பளத்திலும் மாசம் 200 ரூபாய் அங்கே கொண்டு போய் மொய்யெழுதிட்டு வருவேன்.

அப்புறம் சகாய விலையில் படு சூப்பர் இன்ஃப்ராஸ்ட்ரக்சருடன் கூடிய பிரவுஸிங் செண்டர் ஆக்வகாம் வந்தது. அங்கே போய் ஜாலியா தங்கைமணியும் நானும் மெயில் பார்ப்பதும் சாட் செய்வதும்.. ஹய்யோ ஹய்யோ.. அதுக்கும் தி நைனா திட்டோ திட்டுன்னு.. சரி.. வேறென்ன பண்ணுவார்...ஆக்சுவலி அவர் என்ன சொன்னார்னா.. சம்பளத்தையெல்லாம் முழுசா கொண்டு போய் ஆக்வகாம்ல மெம்பர்ஷிப்புக்கு கட்டக்கூடாதாம்.கொஞ்சம் பேங்க்ல போடணுமாம்.. ஏன்ப்பா இவ்ளோ அவுட்டேட்டடா இருக்கீங்கன்னு கேப்பேன். இப்படியாக நான் கம்ப்யூட்டரில் சால சிறந்து விளங்கிண்டு இருந்த அந்த காலகட்டத்தில்... ஹெல்லோ, யாருங்க அது சாணியெல்லாம் விட்டெறிஞ்சுண்டு? வெள்ளை சுரிதார்ல கறை பட்டா நீங்களா ட்ரை க்ளீன் பண்ணித்தருவீங்க?

என்ன சொல்லிண்டு இருந்தேன்.. ஆங்.. அந்த காலகட்டத்தில்.. மை  நைனா.. ஸ்டில் நம்புஃபைட் மீ.. ஆஹா குழந்தை சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்யறாளேன்னு (சாஃப்ட்வேர் கம்பெனி தான், என்ன உத்தியோகம்ன்னு அவர் யோசிக்க வாண்டாம்? நான் ரெக்ரூட்மெண்டில் குப்பை கொட்டிண்டு இருந்தேன்!!) எனக்கே எனக்கா ஒரு கம்ப்யூட்டர் வீட்டுலேயே வாங்கலாம்ன்னு டிஸைடு பண்ணினார்.. கம்ப்யூட்டர் வாங்கிய கால கட்டம் 2000 அக்டோபர்.. தீபாவளி ஆஃபர் எல்லாம் பார்த்து.. ஸ்ரீனியை கூட்டிண்டு போய் (விஷயம் தெரிஞ்சவனாம்) மவுஸ் பேட் ஃப்ரீயா கிடைக்குமான்னு 2க்கு 4வாட்டி கேட்டு  ப்ரிண்டர் சகிதம் ஒரு HCL Busy Bee வாங்கிண்டு வந்தோம்.

காலையும் நீ யே.. மாலையும் நீயேன்னு பாடிண்டே... அதை ஒரு குழந்தை போல பாவித்து சிஸ்ருக்ஷை பண்ணிண்டு இருப்போம்.. ஒகே தூசின்னு அவ்வா அதை துடைப்பாங்க.. துணி போட்டு மூடணும்ன்னு அம்மா சொல்லுவாங்க. அதுக்குன்னு ஒரு கவர் கூட தைச்சாங்க. அடுத்த ஆயுத பூஜைக்கு அதுக்கும் குங்குமம் சந்தனம் வெச்சு பூ வெச்சு பாலாஜி நமஸ்கரிச்சான், யாரும் பார்க்காதப்போ கம்ப்யூட்டருக்கு ஒரு கிஸ் கொடுத்தான். அலைபாயுதே.. கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் ஹே ராம் போன்ற பாடல்களை அதில் போட்டு கேட்டால் அந்த சுகம் இருக்கே! ஆஹா.. அற்புதம்.

லோன் எல்லாம் போட்டு க்ம்ப்யூட்டர் வாங்கிக்கொடுத்த எங்கப்பாவை திருப்தி படுத்த நான் அனாயாசமா ராவும் பகலும் உழைச்சேன். மனுஷன் ஆடிப்போயிட்டர். அதாவது அந்த நேரத்துல சி.டி ஆடியோ ஃபார்மெட்ல இருக்கற பாடல்களை எம்.பி.3யா கன்வெர்ட் பண்ற ஒரு ஃப்ரீ சாஃப்ட்வேர் இருந்தது. அதை ஸ்ரீனி தேடி தர, அதை யூஸ் பண்ணி ரெண்டு ஸி.டில இருக்கற பாட்டை எம்.பி3யா கன்வெர்ட் பண்ணி நைனாவிடம் காட்டினப்போ ”இவ ரொம்ப கெட்டிக்காரியா இருக்கா”ன்னு அம்மாவிடம் கிச்சனில் போய் நைனா சொல்லியிருக்கார். (எச்சி துப்பணும்ன்னா ப்ளாக் ல எல்லாம் துப்பக்கூடாது..உங்க ஸ்க்ரீன் தானே பாழாகுது? போய் வாஷ்பேஸின்ல துப்பிட்டு வாங்க)

ஆப்ஜக்ட் ஓரியண்டட் ப்ரோக்கிராமிங்கில் மிகச்சிறந்து விளங்கிய நான்(எனக்கு தெரியாது, உங்க கம்ப்யூட்டர், உங்க மானிட்டர், சதா துப்பறது, உடைக்கறது, சாணி, அழுகல் தக்காளி, அந்து போன செருப்பை  விட்டெறியறது இதெல்லாம் பண்ணாமல், பல்லைக்கடிச்சுண்டு, முஷ்டியை மடக்கிண்டு பேசாம மேல படிங்க) , ஏதோ ஒரு பிரபலமான ஜாவா புஸ்த்தகம் வாங்கி வீட்டுல வெச்சுண்டேன். ஹெலோ வேல்டுன்னு அவுட்புட் வரா மாதிரி ஒரு ப்ரோக்ராம் எழுதி அம்மா, அவ்வா, அப்பா இவாளையெல்லாம் செம்மையா இம்ப்ரெஸ் பண்ணினேன். ஆடிப்போயிட்டாங்க.. அப்புறம் ஓவர்ரைடிங் பத்தி அவாளுக்கு புரியற மாதிரி க்ளாஸெல்லாம் எடுத்தேன்.. பாவம் யாருக்கும் ஒண்ணும் தெரியலை.. ஆனா இவ ஜாவாவுல சூரப்புலின்னு மட்டும் அப்பா நினைச்சுண்டார்.

ஒரு டயல் அப் ஃபோன் லைன் கொடுத்து.. கீ... பூ... ட்ட்ட்ட்ர்... க்கீக்கீ... புர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... பீஈஈஈஈஈஈஈப்.. இப்படி வினோதமான சத்தங்களுடன் அது ஆத்தண்டிக்கேட் பண்ணி கனெக்ட் பண்ணும் அந்த நிமிடங்கள் படபடப்பாக இருக்கும். ஏன்னா முக்காவாசி அது ஏதாவது சொதப்பி விடும். அப்படி பிரும்ம ப்ரய்த்னம் பண்ணி கனெக்டப் படுகிற கம்ப்யூட்டர்களில் முதன் முதலாய் ஓப்பன் செய்வது ஹாட்மெயிலாகவோ.. ரிடிஃப் மெயிலாகவோ.. USA.net, லைகாஸ்  மெயிலாகவோ தான் இருக்கக்கூடும். ஆனா பாருங்க.. எப்போவும் 0 அன்ரெட் மெஸேஜஸ்ன்னு தான் காட்டும்.. ஏன்னா அப்போ மெயில் அனுப்ப ஆளேயில்லையே! யாருமே இல்லாத டீக்க்டடையில் யாருக்குடா சிங்கு டீ ஆத்துறேன்னு கேட்டுக்குவோம். MSN மெஜஞ்சர் தான் அப்போ படு ஹாட். நேரா அதுல லாகின் பண்ணி USஇல் இருக்கும் நட்பு வட்டத்துடன் பேசுவது..வட்டம்ன்னா

நீங்களா 10-20 பேர்ன்னு நினைச்சுண்டா நான் என்ன பண்றது? ஒண்ணோ ரெண்டோ பேர் அங்கே இருந்தாங்க.. ஜாலி அரட்டை.. ஈமெயில் இதெல்லாம் வீட்டில் இருந்த படியே.. ஆஹா.. என்ன இன்பமயமான நாட்கள் அவை! நைனா மட்டும் ஏதாவது படியேண்டீன்னு திட்டுவார். பாவம். வெட்டி வேலை எதுவானாலும் தான் நான் ரெடியாச்சே.

அதுக்கடுத்தாப்புல ரிடிஃப் சாட் வந்தது.. சகட்டு மேனிக்கி எல்லாரையும் யாஹூவில் சேர்த்துண்டு கும்மி அடிக்க வேண்டியது.. அப்படி கிடைத்த ஒரு அபூர்வ மாணிக்கமான சரத்பாபு இன்னிக்கும் என் மிக நெருங்கிய நட்பு வட்டத்துல இருக்கான்னு சொல்லிக்கறதில பெருமைப் படறேன். 

அதுக்கப்புறம் என்னாச்சா? ஏன் இவ்ளோ ரணகளம் போறாதா? சரி ஆசைப்பட்டுட்டீங்க சொல்றேன்.. நான் அதுக்கப்புறம் மேன்மேலும் சிறப்படைந்து Windows OS, MSWord, Ms Excel,Ms Powerpoint, Notepad, Word pad, MS Paint, Windows Media Player, VLC Player இப்படி பலப்பல புதுப்புது லேட்டஸ்ட் சாஃப்ட்வேர்களை கரைச்சு குடிச்சுட்டேன். சும்மா இதே வேலை உங்களுக்கு.. கல்லால அடிக்கறது.. போங்க எல்லாரும்.. இதுக்கு மேல சொல்ல மாட்டேன்! X-(

ஆக இத்துடன் இந்த பதிவு நிறைவடைகிறது. மேலும் இந்த பதிவை தொடர நான் அழைக்கப்போவது:

1. அப்பாவி தங்கமணி டாலிங்
2.ரேவதி வெங்கட் டாலிங்
3.எல்.கே மை பிரதர் டாலிங்
4.RVS அண்ணா
5.திரு ஜவர்லால் ஜி

இன்னும் யார் யாருக்கு எழுதணும்ன்னு தோணுதோ.. எழுதுங்க.. ஆனா இங்கே லின்க் மட்டும் கொடுத்துடுங்க! :) :)

13 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா...ஹா... அனுபவமும் எழுத்தும் சுவாரஸ்யம்... கருத்தை விட்டெறிந்து விட்டேன்... ஹிஹி...

எல் கே said...

இன்னிக்கு மாம்பலம் வந்து அடிக்கபோறேன்

கார்த்திக் சரவணன் said...

அந்தக் காலத்தில் ஒருமணி அரை மணி நேரத்துக்கென்று ஐம்பது நூறு என்று வாங்கிக்கொண்டிருந்தார்கள்... ஒரு ஐந்து நிமிடத்துக்காக பிரவுசிங் சென்டரில் நான் சண்டை போட்டிருக்கிறேன்.... மலரும் நினைவுகள்...

இராஜராஜேஸ்வரி said...

சுவாரஸ்யமான பொழுதுகள்..!

raji said...

ஏதேதோ புரியாத மொழில எழுதிப்புட்டு என்னை வேற கிழிக்க கூப்புட்டுருக்கீங்க.ஆனா பாருங்க உங்க அளவு நாலெட்ஜ் லாம் நமக்கில்ல.நான் எதோ என்னைப் பத்தி ஒரு இமேஜ் ரெடி பண்ணி வச்சுருந்தேன். ஹூம்....!!

அப்பாதுரை said...

எனக்கு சேர்த்து ரெண்டு.. எல்.கே.

ஸ்ரீராம். said...

ம்..... இரண்டாவது பகுதிலதான் உங்க டச் தெரியுது...

ஓ.... குரோம்பேட்டை மூர்த்தி ஸாரோட பொண்ணா நீங்க... சொல்லவேயில்லை?

RVS said...

வரேன்..வரேன்.. :-)

geethasmbsvm6 said...

haahahaaha,//Windows OS, MSWord, Ms Excel,Ms Powerpoint, Notepad, Word pad, MS Paint, Windows Media Player, VLC Player//

புரியாத மொழியிலே என்ன என்னமோ சொல்லி இருக்கீங்களே, இதெல்லாம் என்ன?? :)))))))

'பரிவை' சே.குமார் said...

உங்களது நகைச்சுவையில் கலந்து அருமையான அனுபவப் பகிர்வு...

வெங்கட் நாகராஜ் said...

நகைச்சுவை......

ரசித்தேன்.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//லேசு பாசா கேள்வியெல்லாம் கேட்டுட்டு ”வீ வில் கெட் பேக் டு யூ”ன்னு கழட்டி விட்ருவாங்க//

அங்க போயும் கோவிந்தா பாட்டு பாடி இருப்பே நீ...:))//விஷுவல் பேஸிக், ஆரக்கிள், பவர் பில்டர்,//

சாரி பவர் ஸ்டார்னு படிச்சுட்டேன்...ஹ ஹ


"இவ ரொம்ப கெட்டிக்காரியா இருக்கா”ன்னு அம்மாவிடம் கிச்சனில் போய் நைனா சொல்லியிருக்கார்

ஐயோ பாவம்... உங்கப்பா கூட என்னை மாதிரி அப்பாவி தான் போல இருக்கு...ஹ்ம்ம்


முடியல அனன்யா... நெஜமாவே முடியல... இதுக்கு பலிக்கு பலி நான் போஸ்ட் போட்டு தான் தீத்துக்கணும்...:))) தொடர் பதிவா... அதுவும் நானா? ஹையோ ஹையோ... இரு இரு போடறேன்...:)

சாந்தி மாரியப்பன் said...

ஹைய்யோ.. பெரிய பெரிய படிப்பெல்லாம் கம்பூட்டர்ல படிச்சிருக்கீங்கன்னு தெரிஞ்சுக்கிட்டேன் :-)

Related Posts with Thumbnails