ஆளாளுக்கு ஃபில்டர் காஃபியை பத்தியே ஸ்டேட்டஸ் போடுறாங்க ஃபேஸ்புக்ல.. அதான் நாம அதைப் பத்தி இதுவரை ஒண்ணுமே எழுதலியேன்னு எழுத வந்தேன்.
போடியில் எஸ்டேட்டிலிருந்து காப்பிக்கொட்டை வரும். அதை அவ்வா பார்த்து பத்திரமாக வறுத்து, ஒரு பெஞ்சியில் கனெக்டப்பட்ட காஃபி கிரைண்டிங் மெஷினில் போட்டு அதன் கைப்பிடியை சுழற்றினால் திரித் திரியாய் பொடி விழும்.
பெரிய பித்தளை ஃபில்டரில் தான் காஃபி போடுவார் அவ்வா. விறகடுப்பு (அ) கும்முட்டி அடுப்பில் (ஆமா, அதுலே எல்லாம் எப்படி அடுப்பை ’சிம்’ பண்ணினாங்களோ?) ஃப்ரெஷ் எருமைப் பாலை காய்ச்சி நுரை ததும்ப, ஆவி பறக்கும் காஃபி அருமையாக டபராவுடன் கொடுப்பார்.
காலப்போக்கில் அது ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஃபில்டர் ஆச்சு. தீக்ஷித் காஃபி, சித்ரா காஃபி, ராஜாஸ் காஃபி, அப்புறம் 90களில் லியோ, நரஸுஸ், காஃபி டே, கோதாஸ் காஃபி என்று பொடியும் மாறியது.
முன்னெல்லாம் நம்மாத்துல பெரிய ஃபில்டர்ல ரொம்ம்ம்ம்ப ஸ்ட்ராங் எல்லாம் இருக்காது. சுமாரா ஒரு மாதிரி சிக்கனமா போடுவா. ஸ்பூன் கணக்கு தான். 5 ஸ்பூனுக்கு மேல போடாதேன்னு அம்மா இன்ஸ்ட்ரெக்ஷன் குடுத்துட்டு வெளீல போவா. அவ்ளோ தான் முதல் முதலான என் காஃபி எக்ஸ்பீரியன்ஸ்.
கல்யாணத்துக்கப்புறமா ரங்ஸ் வந்து தான் காஃபி போடும் என் திறமையை வளர்த்தார். ஒரு நாள் ஃபில்டரில் தண்ணீரை , நாயர் கடையில் சாயா ஆத்துர மாதிரி தூக்கி விட்டேன்.. ரங்ஸ் துடிச்சு போயிட்டார். காஃபியோ கன கண்றாவி! அப்போ தான் எனக்கு ஞானோதயம், கீத்தோபதேசம் எல்லாம் ரங்ஸ் கிட்டேந்து கிடைச்சது. ரெண்டு பேர் தானே.. குட்ட்ட்டியூன்ன்ன்ன்ண்டு ஃபில்டர். அதுல கரெக்டா பொடி போட்டு, மெதுவா துளியூண்டு தண்ணி ஊத்தி, ஒரு bed form பண்ணணுமாம். அதுக்கப்புறம் ஒரு சில நிமிஷங்கள் கழிச்சு அடுத்த ரவுண்டு மறுபடியும் இன்னும் கொஞ்சூண்டு. இப்படி ரெண்டு மூணு வாட்டியா விட்டா.. செம்ம திக்க்க்க்க்க்க்க்க்க்கா ’கள்ளிச்சொட்டு’ என்று அன்புடன் அழைக்கப்படும் டிகாஷன் இறங்கும்ங்கற அந்த சீக்ரெட்டை எனக்கு சொல்லிக் கொடுத்தார். அத்துடன் அல் ரவாபி ஃப்ரெஷ் மில்க்கை காய்ச்சி அளவ்வா சர்க்கரை போட்டு ஒரே ஆத்து ஆத்தி, நுரை ததும்ப குடிச்சா.. யப்பா... Blissful! (எல்.கே இந்த அருமையான காஃபியை குடிச்சா கிடைக்கும் உணர்வுக்கு என்ன பேர்ன்னு கேட்டிருந்தார் - அதுக்கு பெயர் : ’ஜென்ம சாபல்யம்’) .. ஆஹா.. அதி அற்புதம்!
நான் அம்மாகிட்டே அடிக்கடி ”அம்மா காஃபி கிடைக்கும்ங்கற ஒரே காரணத்துக்குத்தாம்மா நான் காலேல எழுந்துக்கறேன்.. இல்லேன்னா தூக்கத்தை மத்தியானம் வரை கண்டின்யூ பண்ணிடுவேனாக்கும்”ன்னு சொல்லிருக்கேன். அம்மாவும், “ஆஹா, இதுவல்லவோ வாழ்க்கைக் குறிக்கோள்.. சூப்பர்டா செல்லம்”னு உச்சி முகர்ந்து ச்சே.. உச்சி மண்டையில நணங்குன்னு சவுண்டு வரமாதிரி ஒரு குட்டு வெச்சு, அடி உதையெல்லாம் கொடுத்திருக்கார். ஹி ஹி!
முன்னாடியெல்லாம் ரங்ஸ் எந்த ஹோட்டலுக்கு போனாலும் டபுள் ஸ்ட்ராங், டபுள் சர்க்கரைன்னு ஆடர் பண்ணுவார். தனக்கு மட்டும் சொல்லிண்டா தான் பரவாயில்லியே! எனக்கும் அப்படியே ஆடர் பண்ணித் தொலைச்சு.. நான் கொஞ்சம் பால், இன்னும், இன்னும்ன்னு கேட்டு மொத்தம் மூணு காஃபி ஆயிடும்.(எனக்கு மட்டுமே சொன்னேன்!) கஷ்டம் கஷ்டம்!
ரங்ஸுக்கு ஒரு டம்ப்ளர் கள்ளிச்சொட்டில் ஒரு சொட்டு, ஒரே சொட்டு பால் போறும். எனக்கு காலரைக்கால் டம்ப்ளர் கள்ளிச்சொட்டில் மீதி ஃபுல்லா பால். சரி ரெண்டு பேர் தானே.. கொஞ்சம் வேரியேஷன்ஸ் இருந்தாத்தான் என்ன?ன்னு நீங்க கேக்கலாம். கரெக்ட்.. ஆனா பெரிய குடும்பங்களில் இருக்கும் வேரியேஷன்ஸ் இருக்கு பாருங்க...
அம்மாவின் நிர்வாகத்தில் இருக்கும் கிட்டத்தட்ட ஒரு காஃபி ஷாப் தங்கைமணியின் கிச்சனாகும். மை நைனா மீடியம் ஸ்ட்ராங்.. சுகர் ஃப்ரீ போடணும். தங்கையாத்துக்காரருக்கு தக்குனூட்டு டம்ளரில் முழுதும் கள்ளிச்சொட்டு ப்ளஸ் இன்க் ஃபில்லரில் பால் விடணும். சர்க்கரை பிடாது.. டிஸயர் ஷுகர். தங்கை மீடியம் ஸ்ட்ராங்.. ஆனா வெரி வெரி லைட் சுகர் அல்லது டிஸயர், அருண் வருண் ஃபுல் மில்க் ப்ள்ஸ் இன்க் ஃபில்லரில் கள்ளிச்சொட்டு டிகாஷன்.இதுல செல்லவ்வாவுக்கு மட்டும் ஒன்றரை டம்ளர் வெந்நீர் ப்ளஸ் இன்க் ஃபில்லரில் கள்ளிச்சொட்டு காப்பி(கலந்தது தான், இந்த மாதிரி கள்ளிச்சொட்டு பூலோகத்துல யாரும் குடிக்க மாட்டாங்கப்பா, எனக்கெல்லாம் ஜீரணம் ஆகாது”!) அப்பாடி எல்லாருக்கும் கொடுத்தாச்சுன்னு நிம்மதி பெருமூச்சு விடும் நேரத்தில் மை நைனா செக்கண்ட் காப்பிக்கு ரெடி! இவ்ளோ களேபரத்தில் மை மதர் தெரஸா - பாவம் தான் ஃபர்ஸ்ட் காஃபி குடிச்சோமா இல்லியான்னு மறந்துஃபையிங்..இதுனாலேயே இந்த கஸ்டமைஸ்டு காஃபி செக்ஷனை அவுட்ஸோர்ஸ் பண்ணலாமான்னு ஷி இஸ் யோசிச்சிங் ஆஃப் தி!ஆனா நிச்சியம் எக்ஸ்பெக்டட் அவுட்கம் இருக்காதுன்னு ஷி இஸ் வெரி வெரி ஷ்யூர்! த்சோ த்சோ!
இந்த ஃபில்டர்கள் சில சமயம் செய்யும் புல்லுருவி வேலைகள் இருக்கு பாருங்க. மெதுவ்வ்வ்வா பத்திரமா பார்த்து விட்டாலும் டர்ர்ர்ர்ர்ன்னு குட்டிப்பாப்பா மூச்சா போனாமாதிரி இறங்கிடும். வாசனையும் மிஸ்ஸிங்.. லை....ட்ட்டா இருக்கும். இதுக்கு முக்கியமான காரணம் வந்து, பொடியை ரொம்ம்ம்ம்ப லூஸாக ஃபில்டரில் போடுவது. அந்த மாதிரி தருணங்களில் மை மதர் தெரஸா என்ன சொல்லியிருக்கான்னா, விழுந்திருக்கும் டிகாஷனை மறுபடியும் சர்வ ஜாக்கிரதையாக எடுத்து அகெய்ன் புட் இட் இன் தி காஃபி பொடின்னு சொல்லி இருக்கா. அப்படி பண்ணும்போது இந்த வாட்டி திக்கா விழுமாம். பேக் டு கள்ளிச்சொட்டு ஃபார்ம்.
சில சமயம் இந்த ஃபில்டர்ல பொடியும் போட்டு தண்ணியும் விட்டா கல்லூளி மங்கன் மாதிரி கம்முன்னு இருக்கும். டிகாஷன் விழுந்தாத்தானே? இதுக்கு முக்கியமான ரீஸன்ஸ் ஃபில்டர் துவாரங்கள் அடைச்சுஃபிக்கேஷன் தான். கான்ஸ்டிப்பேஷன் வந்தாப்புல முக்கி முனகி ஒரே ஒரு சொட்டு ஒன்லி ஃபாலிங்ஸ்.. வெரி ஏமாத்திங்ஸ் அண்ட் ஃபீலிங்ஸ்.. சில பேர் ஆத்துல இடுக்கியைக் கொண்டு ஃபில்டரின் மண்டையில் லொட்டு லொட்டுன்னு தட்டுவா.. இதனால் ஃபில்டரின் மண்டை விளிம்பில் பலத்த காயம் ஏற்படுமேயன்றி கள்ளிச்சொட்டு விழாது என்பதை புரிந்த மங்கையர் அரிதாததலால், முக்காவாசிப்பேர் ஆத்துல அந்த ஃபில்டரானது, நசுங்கிப் போன அலுமினியப் பாத்திரம் மாதிரி தான் இருக்கும். ப்ளஸ், இவா அதை படுத்தின பாட்டுக்கு அது தன்னொட மூடியை டைவர்ஸ் செய்திருக்கும். காஃபியின் மணம் எஸ்கேப்பாகமல் இருக்க மூடலாம்ன்னு பாத்தா, கொள்ளாது.
அதுக்கு அவ்வா என்ன பண்ணுவான்னா, அந்த பித்தளை ஃபில்டரின் அடிப்பாகத்தை விறகடுப்பில் கொஞ்ச நேரம் காட்டுவா.. அதுல அடைஞ்சிருக்கற காப்பிப் பொடியெல்லாம் எரிஞ்சு, துளைகள க்ளியர் ஆயிடும். அப்போ வெளிச்சத்தில் வெச்சு பாத்தா, க்றிஸ்டல் க்ளியரா.. பெர்ஃபெக்ட்லி கான்ஸெண்ட்ரிக் சர்க்கிள்ஸில் புள்ளிகள் தெரியும்.. அது கூட ஒரு சந்தோஷமா இருந்தது.
இந்த மாதிரி பொடி போட்டும் டிகாஷன் விழாம சதி பண்ணறதுக்கு இன்னோரு காரணம் வாட் மீன்ஸ், பொடி ரொம்ம்ம்ம்பவும் நைஸாக போட்டு அரைத்துவிடுகிறார்கள் கடையில்.
பாலக்காடு கல்பாத்தியில் என்ன ஒரு ஐடியா பாருங்களேன்.. அக்ரஹாரத்துக்கு நடுவில் ஒரு காஃபி டே அவுட்லெட் திறந்திருக்கா! மாமி, கொஞ்சம் காப்பிப் பொடி தரேளான்னு யாரும் இரவல் கேட்டு வந்தா.. அதான் கடை திறந்திருக்கேன்னு சொல்லி விரட்டி விட்டுடுவா! ”ஹி ஹி.. மாசக்கடைசியா இருக்கேன்னு கேட்டேன்” னு தலையைச் சொறிஞ்சா.. என்ன பண்ணுவாளா இருக்கும்?
பொடியை ரொம்ம்பவே நைஸாக அரைச்சா, ஃபில்டரில் விழாது..விழவே விழாது.. ஒன்லி காஃபிமேக்கரில் தான் விழும். வொய் மீன்ஸ் காஃபி மேக்கரில் ஃபில்டர் படு ஃபைன் துவாரங்ள்ஸ் ஆர் தேர். ஹவ் எவர்.. எங்களுக்கு காஃபி மேக்கர் அவ்வளவாக பிடிக்கறதில்லை. ஒன்லி ட்ரெடிஷனல் மெத்தட்ஸ் ஆர் பெஸ்ட் சூட்டட் ஃபார் அவர் காஃபி நீட்ஸ்!
அபுதாபியில் இருந்தப்போ “இத்னி ஸ்வாதிஷ்ட் காஃபி மைன்னே கபி நஹி பீ ஹை”ன்னு விஷாகாவும், “ஆப்கி காஃபி கைஸே இத்னா ஸ்பெஷல் பன்தா ஹை”ன்னு ரேஷ்மாவும் கேட்டது அடிக்கடி நினைவுக்கு வரும்.. நாக்கு நாலடி நீளமா இருந்தா.. காஃபி என்ன, தண்ணி கூட ஸ்வாதிஷ்ட்டா சவரணையா குடிக்கலாம்!
நமஹ் காஃபீ... பத்தயே.. ஹர் ஹர மஹாதேவா...... :P :P :P
25 comments:
சுவையான பதிவு. பேஷ்.... பேஷ்... ரொம்ப நன்னாயிருக்கு போங்கோ...
காஃபினா, அநன்யா-பிலாகுல தந்த காஃபிதான்.. செமையா இருக்கு போங்கோ..
# If you feel Ananya(blog) is famous for'Copy', then, I am not responsible..
கமகமன்னு வாசனை வருதேன்னு பார்த்தா அனன்ஸ் காபி கொடுக்கறாங்க.
எங்கூட்லயும் பில்டர் காப்பி பிடிக்கும்ன்னாலும் வசதியை முன்னிட்டு நெஸ்கஃபேக்கு மாறிட்டோம். வேணுங்கறப்ப குடிச்சுக்கலாம். பில்டரில் போட்டு வெச்சாத்தான் கிடைக்கும். மறந்துட்டா அவ்ளோதான் :-)
//மெதுவ்வ்வ்வா பத்திரமா பார்த்து விட்டாலும் டர்ர்ர்ர்ர்ன்னு குட்டிப்பாப்பா மூச்சா போனாமாதிரி இறங்கிடும். //
வி.வி.சி.கு.கு.சி. முடியலை!:))))))
//இதனால் ஃபில்டரின் மண்டை விளிம்பில் பலத்த காயம் ஏற்படுமேயன்றி கள்ளிச்சொட்டு விழாது என்பதை புரிந்த மங்கையர் அரிதாததலால், முக்காவாசிப்பேர் ஆத்துல அந்த ஃபில்டரானது, நசுங்கிப் போன அலுமினியப் பாத்திரம் மாதிரி தான் இருக்கும். //
இப்படி எல்லாம் செய்ஞ்சாலும், ஃபில்டரின் துவாரங்களை நெருப்பில் வாட்டினாலும் சில சமயம், இல்லை, இல்லை, பல சமயம் டிகாக்ஷன் இறங்காமல் சண்டித்தனம் பண்ணும். அப்போ என்ன பண்ணறீங்க, ஒரு குழிவான தட்டு ஃபில்டரை மூடறாப்போல, அல்லது கிண்ணத்தில் குளிர்ந்த ஜலத்தை விட்டு ஃபில்டர் மூடியை எடுத்துட்டு இதை வைங்க. ஐந்து நிமிஷத்துக்குள் எல்லா டிகாக்ஷனும் சமத்தா இறங்கிடும். காஃபிலே நமக்கு இல்லாத அனுபவமா?
//ஒன்லி ட்ரெடிஷனல் மெத்தட்ஸ் ஆர் பெஸ்ட் சூட்டட் ஃபார் அவர் காஃபி நீட்ஸ்!//
ஹூம், என்னத்தைச் சொல்ல, நம்ம ரங்க்ஸுக்கு இப்போ திடீர்னு காஃபி மேக்கர் மோகம் பிடிச்சு ஆட்டோ ஆட்டுனு ஆட்டி இப்போ ஆறு மாசமாக் காஃபி மேக்கரில் தான் காஃபி டிகாக்ஷன் இறக்கியாறது. அதிலேயும் கள்ளிச் சொட்டுக்கு வழி கண்டுபிடிச்சுட்டோமுல்ல! :)))
காஃபி பத்தின நம்ம பதிவை, (எப்போவோ போட்டுட்டோமுல்ல) சுட்டி தரேன், பாருங்க. மொக்கைகள் போட்ட நேரத்தில் போட்ட பதிவு அது.
http://sivamgss.blogspot.in/2006/11/148.html
நேரம் இருந்தா போய்ப் படிங்க. :))))
ஒரே ஒரு சின்ன டவுட்டு. 'கள்ளிச் சொட்டு' என்கிற பதம், பாலின் தன்மை / திண்மை பற்றியது அல்லவா? நீர் கலவாத திக் பாலை, கள்ளிச் சொட்டு என்று கூறுவார்கள் என்று நினைக்கின்றேன். தஞ்சாவூர், கும்பகோணம் மக்கள் பதில் கூறவும்.
கெட்டியா திக்கா இருக்கும் அனைத்துக்குமே "கள்ளிச் சொட்டு" பதம் பொருந்தும். முதல் டிகாக்ஷனைக் கள்ளிச் சொட்டு என்றே சொல்லிக் கேட்டிருக்கேன்.
Thanks Mami, Madurai side la Kallichottu is used to indicate the thick Dicoction only. Heard this usage from RVS Anna as well.. Please confirm Tanjore/Kumbakonam/Mayavaram/Mannaarkudi side people!
மீ த ஒன் அன்ட் ஒன்லி ரெப்ரசன்டேடிவ் ஃபார் மதுரை அன்ட் தஞ்சாவூர் ஜில்லா. இரண்டுக்கும் சேர்த்துத் தான் பதில் சொன்னேனாக்கும்!
Madhavan Anna, RVS Anna, Mr KGJ, ivaa than naan indicate pannina Tanjore kara! naamellaam madurai side allavo?
Amaidhicharal, 2009 la when we went to Al Ain for a 2 day trip from Abudhabi, I vividly remember taking the hot water kettle, coffee filter, coffee powder, sugar and we made our own coffee in the hotel. We find it very difficult to adjust with coffee outside. It is usually horrible esp in the pantry cars in The Indian Railways. so we switch to tea in case we cant make our own coffee! :D andha alavukku addiction! :(
grrrrrr post inspired by LK
LK, உனக்கே இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியலை? உன் பெயரை மென்ஷன் பண்ணி இருக்கேனே? இந்த டாபிக் நாங்க ப்ளாக்கர்ஸ் மீட்டின் போது பேசிண்டோம். நீ வேணா RVS அண்ணாவை கேட்டுப்பாரு.. என்ன அண்ணா?
பில்டர் காபி போல பதிவும் கம... கம...
அருமை...
டேஸ்டி காஃபி.... :)
மணக்கும் காபி ...!
http://jaghamani.blogspot.com/2011/02/blog-post_3993.html
காபி in ஆஸ்திரேலியா
தஞ்சாவூரையும் மதுரையையும் ரெப்ரசண்ட் செய்ய நானுமிருக்கிறேன்..... உக்கும்.... (கனைப்பு)
கள்ளிச்சொட்டு என்பதற்கான அர்த்தம் சரிதான். டிகாக்ஷனைச் சொன்னால் தப்பில்லை என்பதும் சரிதான். ஆனாலும் பெரும்பாலும் கள்ளிச்சொட்டாய் என்ற வார்த்தையை நாம் பாலுக்குதான் உபயோகிக்கறோம் என்பதும் உண்மையே.... !!!!
எல்கே... நான் கூட சென்ற வாரம் முகநூல் ஸ்டேட்டசில் காஃபியை ரெஃபர் செய்திருந்தேன் என்பதை இங்கு அழுத்தமாகப் பதிவு செய்ய விரும்புகிறேன். எனவே ஆக்கத்தின் ஊக்கத்தில் எனக்கும் பங்கு உண்டு என்பதையும் அதே வகையில் அழுத்தமாகப் பதிவு செய்து கொள்ள விரும்புகிறேன் என்பதையும் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன் என்பதையும் சேர்த்தே பதிவு செய்ய விரும்புகிறேன். எனவே நானும் சொல்லலாம் grrrrrrrrrr...!!
கள்ளிச் சொட்டு என்பது Density யைக் குறிப்பதாக இருந்தால் அதை டிக்காஷனுக்கும் பயன்படுத்துவது சரியாக இருக்கும். ஆனால் அது Viscosity ஐக் குறிக்கிறது. தண்ணீர் பாலில் மட்டுமே விஸ்காஸிட்டியை பாதிக்கிறது. டிக்காஷனின் விஸ்காஸிட்டி தண்ணீரால் பாதிக்கப்படுவதில்லை. குறைந்த தண்ணீர் என்றால் டிக்காஷனில் டென்ஸிட்டி அதிகமாகும், விஸ்காஸிட்டி அல்ல.
http://kgjawarlal.wordpress.com
தெளிவுரைக்கு நன்றி ஜவர்ஜி! சாரிப்பா.. அப்போ கே.ஜி.ஜி சொன்னது சரிதான். பாலுக்கு தான் கள்ளிச்சொட்டு. இனி அப்போ ஸ்ட்ட்ட்ட்ராங் டிகாஷனுக்கு என்ன சொல்றதுன்னு யோசிக்கணும்!
கருத்து சொன்ன எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி! ஃபேஸ்புக்ல காஃபியை பத்தி ஸ்டேட்டஸ் போட்டோருக்கும்.. போடாதோருக்கும்.. ஆல் தி பஹுத் பஹுத் நன்றி!
யக்.
நேக்கு கா ஃ பி யே பிடிக்காது..
ஆனா உன்ர ரைட்டிங்....செம செம செமையோ செம....
மவளே...கையாலயா எழுதுற? டைப்புற? மனசெல்லாம் கிளு கிளுன்னு சந்தோஷமா இருக்கு...
வா"ள்" க !! வ "ல"ர் க !!!
மனசெல்லாம் ‘கிளு கிளு’ வா? அவ்வ்... அப்படி எதுவும் இந்த பதிவுல எழுதினாப்புல தெரியலையே? அவ்வ்வ்வ்! :S
கள்ளிச்சொட்டுக் காஃபி என்பது திக்கான காஃபி. தண்ணி ஊற்றிய ரெண்டாந்தர டிகாக்ஷன் காஃபி நீர்த்துப்போய் சூடான ஜலம் மாதிரி இருக்கும். பால் திக்கா இருந்தாலும். திக்னெஸ்ஸுக்கு முக்கிய இடம் பாலால் வருவதால் பாலுக்கு முதலிடம். ஆனாலும் டிகாக்ஷனும் கள்ளிச்சொட்டுக்குப் பங்களிப்பதால் இரண்டையும் இணைத்தே சொல்வது உசிதமாகும்.
ஜாவர்லால் சாரின் விஸ்காஸிட்டி டென்ஸிட்டி போன்றவைகள் இப்பதிவிற்கு விஞ்ஞானச் சுவை யேற்றுவதால் இன்னும் ருசியாக இருக்கிறது.
க்ரேட் அனன்ஸ்!! :-)
Post a Comment