Pages

Tuesday, August 20, 2013

அருண் வருணின் வரலக்ஷ்மி விரதம்



தங்கையாத்துல பூஜை பார்த்துட்டு, நோன்புச்சரடு கட்டிக்கலாம்ன்னு போயிருந்தேன். வழக்கம் போல வீடு ரெண்டா இருந்தது. உபயம்: அருண் வருண். கிடுகிடுன்னு பேசிண்டு, சிரிச்சுண்டு, வேடிக்கை பார்த்துண்டு, ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் கதை எல்லாம் அம்மாகிட்டே சொல்லிண்டு, வருண் பண்ற ரகளையெல்லாம் ஃபாலோ அப் பண்ணிண்டே,  கொழக்கட்டை பண்ணி முடிச்சோம்.

நான் போறதுக்குள்ளே அம்மா பாயஸம், சித்ரான்னம், மம்மு, பப்பு எல்லாம் பண்ணியாச்சு. அம்மனை அழைக்கணும் போய் கோலத்தை போடுன்னு அம்மா சொல்லவும். நானும் ட்ரை அரிசி மாவை எடுத்துண்டு போய் ப்ரும்ம ப்ரய்த்னம் பண்ணி படுத்துண்டு படிக்கோலம், ஹால் பூரா எக்ஸ்டெண்டடா வர மாதிரி போடணும்ன்னு தான் நினைச்சேன். ஆனா பாருங்க.. அந்த படிக்கோலமானது.. ஒரு ராம்பஸ் மாதிரி ஆயிடுத்து. என்னமோ ஏரோபிக்ஸ் பண்ணறா மாதிரி கையெல்லாம் கோணலா.. ஒரு பக்கமா இழுத்துண்டு சாய்ச்சு, மஹா கண்ணறாவியா போயிடுத்து.

ஒரு சின்ன சதுரம் போடுறதுக்கு இவ்வளோ நேரமான்னு அம்மா வந்து பார்த்துட்டு ஹை குட் ஜாப்ன்னு சொன்னப்போ நான் அதிர்ந்தேன். அதுக்கு அம்மா,  அவங்க வரைஞ்ச கோலத்தை காட்டினாங்க. என்னமோ கிட்னி ஃபெயிலியர் ஆன வியாதிஸ்தன் மாதிரி ரொம்ப அகலமா, மந்தமா இருந்தது. வேறு யாருக்காவது படிக்கோலத்தை பார்த்தா இப்படியெல்லாம் தோணுமா? பின்னூட்டம் ப்ளீஸ். பல முகங்கள், பாவங்கள், குணாதிசயங்கள் எனக்கு பளிச்சுன்னு நினைவுக்கு வரும். இது கூட ஒரு வியாதி தான்!

வஸ்த்திரம் பண்ணியாச்சான்னு வழக்கமா லாஸ்ட் மினிட் ஷவுட்டிங் எதுவும் இல்லை.. இப்பெல்லாம் ரெடிமேடா கிடைக்கிறாதாம். (நிம்மதி, அந்த இலவம் பஞ்சை கிள்ளி, விதை எடுத்துட்டு, அதை கண்டிஷன் பண்ணி, அதை ஒரே மாதிரி உருட்டி நடுவுல பே பேன்னு வராம, ஸ்ப்ரெட் பண்ணி, அதுக்கு மஞ்சள் குங்குமம் வெச்சு.. உஸ்ஸ்.. நமக்கு டிஸைனர் வஸ்த்ரம் தைக்கறது கூட சுலபம் போல்ருக்கே?)

சரடு ரெடியா ரெடியான்னு ரெண்டு மூணு வாட்டி அம்மா ஞாபகப்படுத்தினப்போ தான் தங்கைமணிக்கு சரடு வாங்க மறந்த விஷயமே ஞாபகத்துக்கு வந்தது. உடனே அவசரத்துக்கு இந்த மளிகைக் கடையில் பொட்டலம் கட்டும் நூல் சரடு இருக்கே.. அதை எடுத்துண்டு வந்தா.. அவாத்துல இன்னும் 8-10 ஜென்மத்துக்கு வரலக்ஷ்மி நோன்புக்கு சரடு வாங்க வேண்டி இருக்காது. அவ்ளோ பெரிய பண்டில் சரடு இருக்கு. சொல்ல விட்டுப்போச்சு.. அந்த சரடைக் கையில கட்டிண்டு மூணாவது நாளே ஒரே கையெல்லாம் அரிச்சிங்ஸ்.. வீசி எறிஞ்சுட்டேன். மூணாவது சரட்டில் ஏழாவது முடிச்சை கொஞ்சம் அழுத்தி போடும்போதே.. பொட்டுன்னு அறுந்து போயிடுத்து!

ஒரு வழியா அம்மனை அழைச்சாச்சு. வருண் மட்டும் உட்காராமல் ரகளையை மஹா ஆவேசமாக தொடர்ந்தான். பூஜை ஆரம்பிக்கும் சமயம் வந்தப்போ அவனை அடக்கி பக்கத்துல உக்கார வெச்சுண்டேன். வருண் பாரு, இப்போ கணபதி பூஜை பண்ணணும். எங்கே சொல்லு, கஜானனம்..ன்னு சொல்லி அவனை பூஜையில இண்ட்ரெஸ்ட் வரும்படி மோட்டிவேட் பண்ணிணேன். உடனே, சமர்த்தா சுலோகம் மொத்தத்தையும் சொல்லிட்டு மறுபடியும் முதல்லேந்து சொல்ல ஆரம்பிச்சான். பாரு, பிள்ளையார் ஜேஜா தான் எப்போவுமே எல்லாத்துக்குமே ஃபர்ஸ்ட் ஜேஜா.. ”பெய்யம்மா அப்போ செகண்ட் ஜேஜா யாரு?”ன்னு “டாடி எனக்கொரு டவுட்டு”அப்படீங்கற முன்னுரையே இல்லாமல் கேட்டுட்டான். நானும் எவ்வளவோ சமாளிச்சிங்ஸ் ஆஃப் இண்டியா..வுட மாட்டேங்கிறான். ”செகண்ட் ஜேஜா யாரு பெய்யம்மா”ன்னு விடாம நச்சினான். சரி சொல்லு.. கஜானனம்ன்னு மறுபடியும் ஆரம்பிச்சு விட்டேனா, அதையே இண்டெஃபனட் லூப்ல சொல்லிண்டு இருந்தான்.

பூவை மூணு பங்கா பிரின்னு அம்மா சொல்லியிருந்தா.. எல்லாத்தையும் ஆய்ஞ்சு மூணு பாத்திரத்தில் போட்டிருந்தேன். அது வரைக்கும் சோஃபாவில் உக்காண்டிருந்த அருண், எழுந்து வந்து அவாம்மா பக்கத்துல ஒட்டிண்டு உக்காந்து, பூ வெச்சிருந்த பாத்திரத்தை பக்கத்துல இழுத்து வெச்சுண்டு..அஷ்டோத்திரத்துக்கு அத்தனை பூவையும் ஃப்ரிஸ்பீ மாதிரி எறிய ஆரம்பிச்சுட்டான். பூவெல்லாம் பூஜை ரூம் பூரா சிதறி, ஒரே களேபரம். பார்க்க படம். சின்ன வயசுல வாசல் தெளிப்போமே.. அதே மாதிரி பூ பாத்திரத்தை வருண் வெச்சுண்டு பூக்களை நீர் போல் பாவித்து அள்ளி அள்ளி தெளிச்சுண்டு இருந்தான். ச்சே.. இறைச்சுண்டு இருந்தான். நிற்க.. இப்போ வெறும் பிள்ளையார் பூஜை மட்டும் தான் முடிஞ்சிருக்கு. இன்னும் அங்க பூஜை, லக்ஷ்மி அஷ்டோத்திரம் எவ்வளவோ இருக்கு.. அட்சதை கூட மிஞ்சாது போல்ருக்கேன்னு நினைக்கும்படி அருண் வருண் பூவெல்லாம் கேட்டுப்பார்ன்னு மொத்தத்தையும் இறைச்சுட்டாங்க!

தூபம் தீபம் காட்டும்போது மணி அடின்னு அருண் கிட்டே ஒரு ஜாப் டெலிகேட் பண்ணி இருந்தாங்க. அவன் இன்னொரு மணியும் எனக்கு வேணும்ன்னு சொல்லி மேல் வீட்டுத்தாத்தாவுக்கு ஹார்ட் அட்டாக் வரும்படியாக, அவருக்கு ஆம்புலன்ஸ் மணி அடிக்கும் அளவுக்கு மஹா ஆக்ரோஷத்துடன் தலைகீழாக பிடிச்சுண்டு அந்த மணியை அடிச்சு உஸ்ஸபா...

மந்த்ர புஷ்பம் போடும்போது அம்மா, அருண் வருணிடம் “தாயே நல்ல புத்தி கொடும்மான்னு, நான் சமர்த்தா இருக்கணும்மா”ன்னு வேண்டிக்கோங்க ன்னு சொல்ல, தங்கைமணி ’களுக்’குன்னு சிரிச்சுட்டா.” என்ன சிரிப்பு?”ன்னு அம்மா முறைக்க, ”அதில்லைம்மா.. இந்த மாதிரியெல்லாம் பிரார்த்தனை பண்ணா, வரலக்ஷ்மி தேவி பாவாடையை (இந்தியன் படத்துல மாப்பிள்ளையின் காரில் சாணி தட்டும் கஸ்தூரியை மாதிரி) வரிஞ்சு கட்டிண்டு தலையில இருக்கற தேங்காயை பாலன்ஸ் பண்ணியுண்டு எஸ்கேப் க்ரேட் எஸ்கேப்புன்னு கத்தியுண்டே ஓடிடுவாம்மா”ன்னு ரொம்ம்ப அப்பாவியா மூஞ்சியை வெச்சுண்டு சொல்றா!ஏண்டீன்னு அம்மா கேட்டப்போ, ”பின்னென்னம்மா நிச்சியம் கொடுக்க முடியாததை, நடக்காததையெல்லாம் பிரார்த்தனையில கேட்டா? அம்மன் என்ன பண்ணுவா? ”

கொஞ்ச நேரம் நிம்மதியா பூப் போட்டு அம்மனை ஸ்மரிச்சு,  நிவேத்யம் பண்ணி சரடு கட்டும் சடங்கு ஆகறதுக்குள்ளே இப்போவே எனக்கு ஆக்ட் 2 பாப்கான் வேணுன்னு வருண் அடம். இதுல காமெடி என்னன்னா.. ஒரு பெரிய டப்பா நிறைய ராஜாராம்ஸ் பாப்கான் (பொறிச்சதே) இருக்கு. அதை தின்ன மாட்டானோ.. இல்லே இது தான் வேணும்.. இன்னிக்கே.. இப்போவேன்னு ரகளை. மை மதர் முடியாதுன்னு ரொம்ப ஸ்ட்ரிக்டா மறுக்கவே, நான் வீத்தை வித்து போறேன்னு(அருஞ்சொற்பொருள்: வீட்டை விட்டு போறானாம்) அவன் செருப்பை போட்டுண்டு கிளம்பிட்டான். ஒருத்தரும் அவனை கண்டுக்கலை. அதிர்ச்சியில நான் நிக்கறதை பார்த்து, ”தங்கைமணி, அதெல்லாம் சும்மா.. பில்டப்பு.. கீழே போய் ஃப்ளாட் பசங்க கூட விளையாடிட்டு வந்துருவான்” அப்படீங்கறா. அதே மாதிரி 5 நிமிஷத்துலேயே (இன்னும் கொஞ்ச நேரம் விளையாடி இருக்கக் கூடாதோ) வந்துட்டன்!(பஞ்ச தந்திரத்தில் யூகி சேது சொல்லுவாரே அதை அப்படியே ஆண்பாலுக்கு மாத்திக்கோங்க)

இந்தக் களேபரத்துல அருண் மட்டும் ரொம்ப அக்கறையா சோஃபா கைப்பிடியின் மேல் ஏதோ துணியை போட்டுண்டு இருந்தான். ஆஹா.. இதுவல்லவோ குழந்தைன்னு அவனை கட்டிண்டு கொஞ்சினா.. குறும்பு கொப்பளிக்க சிரிக்கறான். என்னன்னு பார்த்தா, விபூதி டப்பா காலியா அவன் கையில வெச்சுண்டு இருக்கான்! என்ன பண்ணினே அருண்ன்னு ஹை டெஸிபெல்ல கத்தினேன். சிரிச்சுண்டே இருக்கான். மெதுவா அந்த துணியை நீக்கிப்பார்த்தேன். சோஃபா கைப்பிடியின் மேல் மூணு லேயர்கள் போட்டிருந்தான். 1. சோஃபா கவர், 2. ஒரு ஈரத்துண்டு 3.மூங்கிலால் ஆன ஜபிக்கும் பாய், அந்த சோஃபா கவருக்கு மேல மொத்த விபூதியையும் கொட்டி வெச்சிருக்கான்! நைஸ்ஸா அதை மறைக்கறதுக்காக இவ்ளோ டெக்கரேஷன்.. ஒரு ஈரத்துண்டு வேற.. ஏதாவது சைண்டிஃபிக் அப்ஸார்ப்ஷன் டெக்னிக்கா இருக்குமோ? இவன் ஏன் (இன்னும்) ஏதாவது ஒரு சாக்கை வெச்சுண்டு கோச்சுண்டு வீட்டை விட்டு போகலைன்னு யோசிக்க ஆரம்பிச்சுட்டேன்.



ஆரத்தியின் போது சாமலே மினாஸி... சுண்டரேஸ ஸாஸி (சியாமளே மீனாக்ஷி சுந்தரேஸ்வர சாக்ஷியாமா)ன்னு வருண் பாடியது அம்மனுக்கு மஹா பிரஸன்னம்!இதி வரமஹாலக்ஷ்மி பூஜை சம்பூர்ணம்!

14 comments:

sury siva said...

super varalakshmi .
super nombu.
super sundaresa lasi.

subbu thatha.
www.subbuthatha72.blogspot.com

எல் கே said...

hahaha

ஸ்ரீராம். said...

அருண்-வருண் கலாட்டாவில் பூஜை மிகச் சிறப்பா நடந்ததுன்னு சொல்லுங்க!

திண்டுக்கல் தனபாலன் said...

ரகளை செம...!

geethasmbsvm6 said...

வீட்டை வித்துட்டுப் போறேன்னதும் ஒரு நிமிஷம் ஷாக் அடிச்சது. உங்கம்மாவோட பிரார்த்தனையும் தங்கைமணியோட பதிலும் பிரமாதம்! ரெண்டு பேரும்நல்லா அநுபவஸ்தர்களாகப் பேசி இருக்காங்க. :))))

மணி அடிச்ச சப்தம் இங்கே கேட்டதா, என்னடாப்பானு யோசிச்சேன். இப்போத் தான் புரிஞ்சது.

அது சரி, பஞ்சதந்திரத்திலே யூகி சேது என்ன சொன்னார்னு விலாவரியா எழுதி இருக்கக் கூடாதோ?

உங்களுக்கும் நம்ம வீட்டிலே மாதிரி நோம்பு இல்லாத புகுந்த வீடா? :(

geethasmbsvm6 said...

கோலம் போட்ட அழகை விட்டுட்டேனே! அதை ஒரு படம் பிடிச்சுப் போட்டிருக்கக் கூடாதோ! :P :P :P

Mala said...

ஹ ஹ ஹ ஹா.....பசங்க பெயியம்மா வ விட ஜோரான புள்ளைங்க...

என்னாமா ஆட்டி வைக்கிறாங்க..!௧ வா"ல்"க வாலுங்க !!

கதம்ப உணர்வுகள் said...

அசத்துக்கண்ணா அசத்து...

இப்படி ஒவ்வொருத்தரையும் இழுத்து வெச்சு கன்னத்துல முத்தம் கொடுத்து சொல்லனும் போல இருக்கு..

அனன்யா மட்டும் தான் வால் நம்பர் ஒன்னுன்னு நினைச்சேன். பின்ன?

படிக்கோலம் போடுறேன் பேர்வழின்னு அங்கபிரதட்சணம் பண்ணினா என்ன அர்த்தம்??

இப்படி கோயான் குப்பான் கோலம் போட்டும் அம்மா பார்த்துட்டு குட் ஜாப்னு சொல்றாங்களே சம்திங் இஸ் ராங் சம்வேர்னு நான் நினைச்சது போலவே.. அம்மா போட்ட கோலம் அதை விட மாடர்ன் ஆர்ட்டால்ல இருக்கு ? :)

அருண் வருண் எங்க பிள்ளை இபானோட ரெண்டே நாள் தங்குங்க சாமிகளா.. இபான் திருந்திருவான் கண்டிப்பா. அமைதியா நல்லப்பிள்ளையாயிருவான். இல்ல இல்ல.. அருண் வருண் இபானை நல்லப்பிள்ளை ஆக்கிருவாங்க.. அமைதியாக்கிருவாங்க..

அடேங்கப்பா...

அருண் வருண்.. வீத்தை வித்து போறேன்... அனன்யாவின் மைண்ட் வாய்ஸ் போலவே கேட்குது எனக்கென்னவோ..

சரடு ரெடியான்னு கேட்டா.. இந்த சோம்பேறிக்குட்டி அனன்யா பொட்டலம் கட்ற கயிறு ஐய்யோ படிக்கும்போதே சிரிச்சு சிரிச்சு.. எங்க மேனேஜர் வந்து கேட்கிறார்..

என்னப்பா இது அக்கப்போரா இருக்கு :) செம்ம சிரிப்புப்பா...

அசத்தல் அனன்யா...

'பரிவை' சே.குமார் said...

ஹா... ஹா... கலாட்டாவில் கலக்கிட்டாங்க....

ரிஷபன் said...

என்னமோ கிட்னி ஃபெயிலியர் ஆன வியாதிஸ்தன் மாதிரி ரொம்ப அகலமா, மந்தமா இருந்தது.

சிரிக்க வைப்பது ஒரு கலை.. கலையரசிக்கு நமஸ்தே..

ஸ்ரீஜெயந்திக்கு பாதம் வைக்கிறேன்னு எல்லாமே வலது கை குவிச்சு வச்சுட்டு.. அப்புறம் கிருஷ்ணா ஒத்தைக் கால்ல எப்படி நொண்டியடிச்சு வருவார்னு லாஜிக் இடிக்க.. இடது கை குவிச்சு பக்கத்துலயே இன்னொரு அடியும் வச்சு சமாளிச்ச ஞாபகம் வந்தது.. பூஜைன்னா கலாட்டா இல்லாமலா :)

Madhavan Srinivasagopalan said...

Sorry, no time to register my comment (I have already Read this post fully)

Madhavan Srinivasagopalan said...

// கிருஷ்ணா ஒத்தைக் கால்ல எப்படி நொண்டியடிச்சு வருவார்னு லாஜிக் இடிக்க.. //

தீராத (நொண்டிக்கோடு) விளையாட்டு(டும்) பிள்ளை

Porkodi (பொற்கொடி) said...

still loffing!!!! chanceless post.. Arun-Varun pattus kalakunga!

சுசி said...

Kuzhanthaigal romba samathu pola irukke. ippadithaan irukkanum.

naan veetai vittu poren.adutha velai saapaattukku thaan thirumbivaruven nnu illa sollirukkanum. en kita anuppungo naan solli tharen. :)))

Related Posts with Thumbnails