இதை ஃபேஸ்புக்கில் ஏற்கனவே போட்டுட்டேன், இருந்தாலும் ஒரு ரெக்காடுக்காக இங்கேயும் போடுறேன். மறுபடியும் படிக்க வேண்டாம் என்று தாழ்மையுடன் வேண்டிங்க்ஸ்!
முதல்
வாட்டி பியூட்டி பார்லர் போனது 1993யில். ரெண்டு புருவத்தையும் வில்லாக
வளைத்துக் கொடுத்தாள் - ஆம்ரபாலியில் - மலாட் ஈஸ்ட், மும்பய். அவ்வாவிடம்
சத்தமாக ஆர்க்யூ பண்ணி, அம்மா அழைச்சுண்டு போனார். காடாய் வளர்ந்த
புருவத்தை அவள் வெடுக் வெடுக் இழுத்த போது விண் விண் வலி இருந்தாலும் ஏதோ
மாற்றம் வரப்போறதுன்னு திடுக் திடுக் இதயத்தோடு ஆசையா இருந்தேன்.
புருவச் செதுக்கல் முடிஞ்சு, கண்ணாடியில் பார்த்தபோது, அடேடே.. முகமே
மாறிவிட்டதேன்னு படு சந்தோஷப்பட்டேன். அந்த சந்தோஷம் அதிக நாள்
நிலைக்கவில்லை. குரோம்பேட்டையில், தி நகரில் திருச்சியில்(ஜங்ஷன்
பக்கத்தில்) எங்கேயும் பாம்பே எஃபக்ட் கிடைக்கலை. தமிழ்நாட்டில் ஒரு தம்ப்
ரூல் வைத்திருந்தார்கள். நிச்சியம் ரெண்டு புருவமும் ஐடெண்டிக்கலாக
இருக்கக்கூடாது.. கட்டாயம் ஒன்று வளைந்தும் அடுத்தது கோடு மாதிரியும்
அமைப்புடையதாகத் தான் இருக்கணும் என்று ஒரு சட்டம் வைத்திருந்தார்கள்.
அல்லது ஒன்றரை வயதுக் குழந்தை சுவற்றில் க்ரேயான்ஸால் போடும் தீற்று மாதிரி
இருக்கணும் என்றும் சில பார்லர்களில் சொல்லிக்கொடுத்திருந்தார்கள். அந்த
மாதிரியான பார்லர்களில் ட்ரெயினிங் செண்டர் அட்டாச்டு என்றும் போர்டு
போட்டிருந்தார்கள். சொல்லிவைத்தாற்போல ஒரு கத்துக்குட்டி வந்து என்
புருவத்தை பதம் பார்த்துவிடும்!
”ஏற்கனவே இவ மஹா மேதாவி. இதுல
புருவத்தை வேற என்னமோ கோரம் பண்ணிண்டு வந்திருக்கா பாரு மூதேவி என்று
நைனாவின் (ஹைக்கூ) நான்ஸ்டாப் லட்சார்ச்சனைக்கு அஞ்சாமல், அஞ்சால் அலுப்பு
மருந்து சாப்பிட்டு, நான் மட்டும் மஹா நம்பிக்கையுடன் உருப்படியாக புருவம்
செதுக்குபவளை தீவிரமாக தேடிக்கொண்டிருந்தேன்.
அடுத்த படியாக
அந்தக் கால கட்டத்தில் ஃபேஷியல் படு ஃபேமஸ். இப்போ இருக்கற மாதிரி
விதவிதமாக எல்லாம் இருக்காது. ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு ஹெர்பல்
ஃபேஷியல். வித விதமான வாசனைப் பூச்சுக்களை முகத்தில் தடவி,ஊறவிட்டு,
வேகவிட்டு, அப்புறம் மேல் பூச்சு பூசி, சுண்ணாம்பு மாதிரி அடித்து,
காயவிட்டு, அப்புறம் அலம்பிவிட்டு அனுப்பி விடுவார்கள். இதற்கு நடுவில்
மூக்கின் மேற்பரப்பில் ப்ளாக் ஹெட்ஸ் எடுக்கிறேன் பேர்வழி என்று (Saw -
Part 1-7) ஜிக்ஸாவை (Jigsaw) விட அதிகமாக ரூம் போட்டு யோசித்து டார்ச்சர்
செய்வார்கள். இதனால் மூக்கின் கரும்புள்ளிகள் போயிடும். ஆனால் மூக்கின்
டிஃபால்ட் ஷேப் அப்படியே தான் ரீட்டெயின் ஆகும் என்பதை நினைவில் கொள்க!
என்னைப்போல மூக்கு டிஃபெக்டிவ்வாக இருப்போருக்கு எந்த முன்னேற்றமும்
தெரியாது.
இந்த மூக்கு ப்ளாக்ஹெட்ஸ் ரிமூவ் பண்ணப்பட்ட
பெண்களுக்கு மூக்கு மட்டும் ஆஞ்சு டார்லிங் மாதிரி சிவந்து வீங்கி விடும்.
மோஸ்ட்லி வீட்டுக்கு வந்தவுடன் வடைமாலை போட்டு, வெண்ணைக்காப்பு சார்த்தி
விடுவார்கள். மூக்கின் மேல் இருக்கும் வலிக்கு சில சமயம் கருப்பாக திட்டு
திட்டாக அகிவிடும். மூக்கு ஒரு வாரத்தில் ஒரு வழியாக சரியாவதற்குள், முகம்
வழக்கம் போல கருத்து விடும். இதனால் ஃபேஷியல் செய்யாமல் இருப்பதே பெட்டர்
அல்ல, பெஸ்டாக்கும்.
பிஃபோர் ஃபேஷியல் அண்ட் ஆஃப்டர் ஃபேஷியல்
முகத்தை பார்த்தால் பிஃபோரே பெட்டர் என்று தோன்றும். இதில் வேக வைத்து
முகமசாஜ் கொடுத்த பெண், “பாத்தீங்களா மேடம், டேன் எல்லாம் நல்லா
போயிடுச்சு, பளிச்சுன்னு க்யூட்டா இருக்கீங்க” என்பாள். சரிதான்
போல்ருக்குன்னு ஈன்னு மவுத்ஃபுல்லாஃப் டீத்துடன் மறுபேச்சு எதுவும் பேசாமல்
200 ரூபாய்(அப்பெல்லாம் அவ்வளவு தான்) கொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்தால்,
”என்னடீ மூஞ்சிக்கு ஒண்ணுமே பண்ணிக்கலையா, நாளைக்கி யாரோ பார்க்க வராளாம்”
என்பார் மை மதர் தெரஸா! செல்லவ்வா வந்து, ”மூஞ்சி கருப்பா அழுக்கா
இருக்கு, சோப்போட்டு அலம்பி பவுடர் போட்டுக்கோ” என்பார். (இந்த ரெண்டுமே
செய்யக்கூடாது என்று அந்த பார்லர் பெண் வேலை மெனக்கெட்டு
அறிவுருத்தியிருப்பாள்) அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்! மை மைண்ட் வாய்ஸ் - 200
ரூபாய்க்கு சங்கா???? (செல்லவ்வாவிற்கு பீட்டி பார்லர் எல்லாம் சுத்தமா
பிடிக்காது. அதுனால மூச்!)
அப்புறம் நாள் பட, இந்த ஃபேஷியல்
பண்ணிக்க போகும்போது, மேடம் புதுசா பிக்மெண்டேஷன் பேக், டிஃப்ராக்மெண்டேஷன்
பேக், அமல்கமேஷன் பேக், மெட்ரிக்குலேஷன் பேக் இருக்கு. ஆய்லிஸ்கின், ட்ரை
ஸ்கின், டேமேஜ்ட் ஸ்கின், ப்ளேடால கீச்சின ஸ்கின் இதுக்கெல்லாம் போட்டா
அதிகமான பலன் கிடைக்கும். விலை 300 ரூபாய் தான். போட்டுக்கோங்க, முகம்
கருக்கவே கருக்காதுன்னு க்ராஸ் ஸெல்லிங், அப்ஸெல்லிங் எல்லாம் செய்வார்கள்.
ஃபேஷியலுக்கு 300, தனியாக போடும் பேக்குக்கு இன்னொரு 300! கடைசியில் அந்த
டிஸ்க் டிஃப்ராக்மெண்டேஷன் பேக்கானது நம்ம கேசவ முதலியார் நாட்டு மருந்து
கடையில் கிடைக்கக்கூடிய முல்த்தானி மிட்டி/நெல்லிக்காய்ப்
பொடி/கருஞ்சீரகப்பொடி, பெருஞ்சீரகப்பொடி, கடுக்காய்ப்பொடி இதில் ஏதாவது
ஒன்றாகத்தான் இருக்கும்! இதுக்கு 300 ரூபாயா! 10 ரூபாயில் முடிய வேண்டிய
விஷயம்!
ஒரு வாட்டி குரோம்பேட்டையில் பார்லருக்கு போயிட்டு,
ப்ளீச் போட்டுக்கோங்க ப்ளீஸ்ன்னு கெஞ்சினார்கள். நானும் சூனாப்பானா வடிவேலு
மாதிரி சர்த்தான் களுதைய போட்டுப்பாப்போம்ன்னு போட்டுண்டா, மூஞ்சி பூரா
பொசுங்கிடுத்து! அவ ஏதோ ஆஸிட்டை போய் ப்ளீச்சா போட்டுட்டா போல்ருக்கு!
ஃபயர் சர்வீஸுக்கு ஃபோனைப்போட்டு வரவழைக்க வேண்டிய கட்டாயம். நான் மட்டும்
அப்போ ஒரு கஸ்டமர் சர்வீஸ் ஸ்பெஷலிஸ்டா இருந்திருந்தா அவங்களை கன்ஸ்யூமர்
கோர்ட்டுக்கே இழுத்திருப்பேனாக்கும். மூஞ்சி எறிஞ்சிங் + டார்க் பேட்சஸ்.
இம்மீடியட்டாக ஜில் தண்ணி ஊத்தி, ஏதேதோ கிரீமெல்லாம் தேய்ச்சு கொஞ்சம் அந்த
டார்க் பேட்சஸ் குறைஞ்சது! அன்னீல இருந்து நோ ப்ளீச் ப்ளீஸ்ன்னு நான்
தீர்மானமா சொல்லிடுறது.
ஒரு 4-5 வருஷம் முன்னாடி ஒரு பார்லர்ல
போனப்போ ஸ்டீமிங்க் பண்றதுக்கு ஒரு மெஷின் வெச்சிருந்தா. அடடே.. டெக்னாலஜி
ஹேஸ் இம்ப்ரூவ்ட் வெரி மச்ன்னு மகளிர் மட்டும்ல வர பேஷண்ட் மாதிரி
சந்தோஷப்பட்டுண்டு மூஞ்சியை கொடுத்தா.. அந்த மெஷின் ஏதோ ரிப்பேர்
போல்ருக்கு.. அதுலேந்து கொதிக்கும் வென்னீர்த்துளிகள் தேமேன்னு படுத்துண்டு
இருந்த எம்மேல விழு, அலறி அடிச்சுண்டு ஓடியாந்துட்டேன்! பாருங்க,
ஃபேஷியலுக்கு போன இடத்துல தீப்புண்கள்! ப்ளடி பிட்பாக்கெட்!
கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம் மாதிரி மை நைனா முகலிவாக்கம்ங்கற ஒரு இடத்துல
வீடு கட்டினார். அத்துவானக்காடு. அங்கே பார்லரே இல்லை. எதுக்கெடுத்தாலும்
போரூர் ஜங்க்ஷன் தான் போகணும். கொஞ்ச காலத்துல பக்கத்துலேயே ஏஞ்சல்ன்னு
ஒருத்தி பார்லர் திறந்தா. பழக்கப்படுத்திண்டு அக்கவுண்ட் வெச்சுக்கலாமேன்னு
போய்ப்பாத்தோம். பேர் தான் ஏஞ்சல். அங்கே வேலை செஞச ரெண்டு ஸ்டாஃபும்
பூச்சாண்டீஸ் மாதிரி தான் இருந்தா. அந்த CEO அதை விட பயங்கரம். உஸ்ஸ்..
சரி.. அவங்க வேலை எப்படின்னு பார்த்தோமானா.. புருவம் ஷ்யுவர் ஷாட்
அலங்கோலம் பண்ணிட்டுத்தான் விடுவாள். கண்டிப்பாக ஏதாவது ஒரு சொதப்பல்
இருக்கும். நகங்களை வெட்டாமலே பெடிக்யூர் பண்ணிடுவா. எல்லா வேலையுமே
அரைகுறை. மொத்தத்துல அங்கே ஐஸ்வர்யா ராய் போனாலும் பூச்சாண்டி மாதிரி தான்
திரும்பி வரணும். பேசாம பூச்சாண்டி பேஸ் ஸ்டேஷன்னு பேரை கன்வீனியண்டா
மாத்தி வெச்சுக்கலாம் இல்லே?
இப்பெல்லாம் நோ ஃபேஷியல். இருக்கற
முகமே போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து! இப்போ தெரிஞ்சதா என் அழகின்
ரகஸியம்?
5 comments:
மறுபடியும் படிக்கவில்லை...!
இதுக்குத் தான் அழகு நிலையங்கள் பக்கமே இதுவரை போனதேயில்லை....:))
ஐஸ்வர்யா ராய் போனாலும் பூச்சாண்டி மாதிரி தான் திரும்பி வரணும்//
சூப்பர்.
இந்த மூக்கு ப்ளாக்ஹெட்ஸ் ரிமூவ் பண்ணப்பட்ட பெண்களுக்கு மூக்கு மட்டும் ஆஞ்சு டார்லிங் மாதிரி சிவந்து வீங்கி விடும். மோஸ்ட்லி வீட்டுக்கு வந்தவுடன் வடைமாலை போட்டு, வெண்ணைக்காப்பு சார்த்தி விடுவார்கள்.
சுற்றி வந்து பிரத்ட்சணமும் பண்ண்ல்லியா..!!???
நல்லா எழுதி இருக்கீங்க.. எத்தனை அடிச்சாலும் தாங்கிக்கிட்டு காசெல்லாம் கொடுத்துட்டு வந்துருக்கீங்க.. உங்களை யாரும் 'இவ ரொம்ப நல்லவ' அப்படின்னு சொல்லலியா?
Post a Comment