தூசி உறிஞ்சி
இன் 1992ல மை நைனா சென்னைக்கு ட்ரான்ஸ்ஃபர் ஆகி வந்தார். ரெண்டு எஸ்டாப்ளிஷ்மெண்டா இருந்ததில் இருந்து சிங்கிள் எஸ்டாப்ளிஷ் மெண்ட் ஆனதிலிருந்து கொஞ்சம் செழிப்பா இருந்தோம்.
ஒரு நாள் சாயந்திரம் ஒரு ஆள் வந்தார். கையில ஒரு பெய்ய்ய்ய்ய Bag! வந்து அம்மாகிட்டே ஏதோ சொன்னார். அம்மாவும் தி நைனா வரும் நேரத்தை சொன்னவுடன் அவர் நைனா இருக்கும்போது வருவதாக சொல்லிட்டு போயிட்டார். எனக்கும் தங்கைமணிக்கும் ஒரே ஆசை! அப்படி என்னம்மா இருக்கும் அந்த பேக்லன்னு பேசிண்டு இருந்தோம்.
னெக்ஸ்ட் டைம் அவர், மை நைனா இருக்கும் நேரமா பார்த்து வந்துட்டார்! சார் சார்ன்னு மரியாகதையா பேசிண்டு வாக்யூம் க்ளீனர் விற்பதாகவும் யூரேக்கா ஃபோர்ப்ஸிலிருந்து வருவதாகவும் சொன்னார். மை நைனாவுக்கு அனாவஸ்ய செலவெல்லாம் பிடிக்கவே பிடிக்காது. மோரோவர் ராஜகுமாரின்னு ஒரு லேடி வேலைக்கு இருக்கும்போது எதுக்கு வாக்யூம் க்ளீனரெல்லாம்ன்னு அந்த சேல்ஸ் மேனை விறட்டி விட்டுட்டார். நான் தங்கை மணி அம்மா மூணு பேரும் புஸ்ஸ்ஸ்ஸ்ன்னு ஆயிட்டோம்.
அடுத்த வாரம் அந்தாள் மறுபடியும் வந்தார். ”சார் நீங்க வாங்க வேண்டாம். எனக்கு டெமோ டார்கெட்ஸ் இருக்கு நான் இத்தனை பேருக்கு டெமோ காட்டியாகணும் ப்ளீஸ் டெமோ பார்த்துட்டு உங்க ஃபீட்பேக் சொல்லுங்க சார்”ன்னு கெஞ்சினார். இரக்க குணம் அதிகமாக படைச்ச மை நைனா இதுக்கு ஒத்துண்டார். அப்போத்தான் அதை முதன் முதலாக நாங்க பார்த்தோம்!
சிவப்பும் க்ரீமுமாக இருந்த அந்த வாக்யூம் க்ளீனரை பார்த்த நிமிஷமே 15 மெக்டவர் பர்கர்களுக்கு திறப்பது போல வாயை பிளந்தோம்ன்னா அது மிகையல்ல! (இதை வைக்கறதுக்கு ஒரு பேக் வேறு, ஹை பேக் ஃப்ரீயாம்மா) டெமோ ஆரம்பிச்சார். சக்ஷன் ப்ளோயர், அட்டாச்மெண்ட்ஸ், டஸ்ட் பேக், கார்ப்பெட் க்ளீனிங், பில்லோ க்ளீனிங், டீவீ க்ளீனிங் ரேடியோ க்ளீனிங், டைனிங் டேபிள் க்ளீனிங் சிங்க் க்ளீனிங்(ஹிஹி) போன்ற பல விஷயங்களை டெமோவினார். ஆக்சுவலி ஒரு வெள்ளை கர்ச்சீப்பை அந்த ட்யூபில் சொறுகி, ”தலைகாணிக்குள் எவ்வளோ டஸ்ட் இருக்கு பாருங்க” என்று அவர் கர்ச்சீஃப்பின் ரவுண்டு வடிவ அண்டப்பிரபஞ்சத்தின் அழுக்குத்திட்டை காட்டியப்போ நிஜம்மாகவே மிரண்டு தான் போனோம்!
டெமோ முடிந்து நன்றி சொல்லிட்டு அவர் போயாச்சு. போகும்போது ஒரு கார்டு கொடுத்துட்டு போனார். என்னிக்கி அந்த கர்ச்சீஃப் அழுக்கை பார்த்தோமோ அன்னிக்கே நானும் தங்கை மணியும் முடிவு கட்டிட்டோம் இதை வாங்கியே தீருவதுன்னு (பிற்காலத்துல அஃப்கோர்ஸ்) மை நைனா அண்டால் இதுக்கு சுத்தமா மசியவே மாட்டார்ன்னு தெரியும் எங்களுக்கு.
ஆனா பாருங்க, ஆச்சர்யம்ஸ் ஆஃப் இண்டியா, அவர் டீவீயின் ஸ்க்ரீனை அந்த நாஸில் அட்டாச்மெண்ட் கொண்டு உறிஞ்சினார் இல்லியா, அன்னீல இருந்து ”டீவி நல்லா தெரியுது இல்லே?”ன்னு அடிக்கடி மை நைனா சொல்லிண்டு திரிஞ்சார்.. (ஆமா பெரிய HDTV, துணியை வெச்சு துடைச்சுட்டு பார்த்தா நன்னாத்தான் தெரியும்)
மெதுவாக நைனா பேங்க்லிருந்து சுரேஷ் குமார்(அதான் அந்த சண்டாளனின் பேர்)க்கு ஃபோன் பண்ணி, வீட்டுக்கு வரச்சொல்லி, ஃபுல் பேமெண்ட் கேஷாவே கொடுத்து(அதுவும் ஏதோ லோல் போட்டு.. சாரி லோன் போட்டு) 4000 ரூபாயோ என்னவோ(அப்பெல்லாம் அது ஒரு 35000க்கு சமானம்) வாங்கினோமோ இல்லியோ.. அவ்ளோ தான்.. மெஷின் வேலையே செய்யலை!
சுரேஷ் குமார் அடுத்த பலியாடு தேடி பிஸி ஆயிட்டான் போல்ருக்கு! ஃபோன் பண்ணிப்பண்ணி பார்த்த நைனா செம்ம கோபம்ஸ். உடனே என்ன பண்ணினார் தெரியுமோ? கன்ஸ்யூமர் கோர்ட்டுக்கு பில்லுடன் ஒரு லெட்டர் எழுதி அதை சுரேஷ் டார்லிங்குக்கும் அனுப்பினார். அடுத்த நாளே லத்தி போட்டுண்டு சுரேஷும் இன்னொரு லேடியும் ஓடோடி வந்தாங்க. ”இன்ஸ்ட்ருமெண்ட் ஃபால்ட் சார். வேற மாத்தி கொடுத்துடறேன்”ன்னு மரிகாதையா சொல்லிட்டு, அடுத்த நாளே மாத்தி கொடுத்தாங்க! அன்னீல இருந்து என் வாழ்வே சந்தோஷமா மாறியது. நானும் தங்கைமணியும் எக்ஸைட்மெண்ட்டில் நீந்தினோம்!
முதல் ரெண்டு வாரம் தலைகாணி படுக்கை டைனிங் டேபிள் ஃப்ரிஜ் டீவீ ஃப்ளோரிங், டோர்மேட்(கார்ப்பெட் எல்லாம் இல்லை எங்காத்துல) எல்லாத்தையும் ஜரூராக க்ளீன் பண்ணினோம். அப்புறம் மூணு மாசத்துக்கு ஒரு வாட்டி ஜன்னல்ல்லாம் திறந்து விட்டு ப்ளோயர் போடுவோம். தூசி தூள் பறக்கும்!ஒட்டடை, குப்பை, பல்லி , பூச்சி, எதுவானாலும் நொடியில் உறிஞ்சிடும்.”எந்த அட்டாச்மெண்டை எதுக்கு யூஸ் பண்ணனும்ன்னு நிம்மிக்குத்தான் நன்னா தெரியும்”ன்னு மதர் தெரஸா, வீட்டுக்கு வரும் மாமிகள் கிட்டே பீத்தினார். கால் சுளுக்கு வலின்னு வந்துட்டா எடு வேக்யூம் க்ளீனரை, வேப்பரைஸர்ன்னு ஒரு அட்டாச்மெண்ட் அதுல அம்ருதாஞ்சனத்தை போட்டு கால்ல காமிச்சுண்டா சூடான ஹெர்பல் காத்து வந்து கால்வலியை போக்கிடுமாம். என்ன எழவோ. அப்புறம் ஸ்ப்ரே பெயிண்டிங் பண்றதுக்கு ஒரு பாட்டில், அது இதுன்னு காலணாவுக்கு பிரயோஜனமில்லாத எக்கச்செக்க ஆப்ஷன்ஸ். ஹேர் ட்ரையர் ஆப்ஷன் எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்தது. ஆனா வழக்கம் போல அவ்வா அதுக்கும் அப்ஜெக்ஷன்!
வாக்யூம் க்ளீனர் போட்டா, ஃபாக்ட்ரில மெஷின் ஓடுறாப்புல அப்படி ஒரு சத்தம்! தி நைனாவுக்கு சத்தமே ஆகாது. ஆனா அவர் செம்மையா கத்துவார், அதெல்லாம் நாம தட்டிக் கேட்கக்கூடாது! அடுத்த ரூம்ல இதை இழுத்துண்டே போய் க்ளீன் பண்றது கஷ்டமா இருந்தது. கூடவே டஸ்ட் பேக்ஸ் மாற்றும் நச்சு! லா ஆஃப் டிமினிஷிங் மார்ஜினல் யூட்டிலிட்டியின் பிரகாரம், கொஞ்ச காலத்துலேயே வாக்யூம் க்ளீனர் வெறுத்துடுத்து! மை நைனா அதை பரண்ல எடுத்து போட்டார்.
முந்தா நாள் அதைப் பார்த்தேன். அதன் சிவப்புக்கலர் மேற்பரப்பில் ஒரே தூசி. அந்த க்ரீம்கலர் பரப்பில் எக்கச்செக்க ஒட்டடை !ஹும். எல்லாம் நேரம்.
;-) ;-)