Pages

Thursday, January 16, 2014

மதர் தெரஸாவின் மோட்டர் பைக் மெமரீஸ்

மதர் தெரஸாவின் மோட்டர் பைக் மெமரீஸ்

வலையில் சுத்திக்கொண்டிருக்கும் மாமிகளைப் பத்தின ஒரு பதிவை படிச்சு டிஸ்கஸ் பண்ணிண்டு இருக்கும்போது இரா முருகன் ஜி ஆரம்பிச்ச ஒரு ஸ்பார்க் தான் இது! Thank you Sir!

மதர் தெரஸா ரொம்ப கஷ்டப்பட்டு சைக்கிள் எல்லாம் கத்துண்டு வண்டி ஓட்ட ஆரம்பிச்சா! தி நைனா in 1997 வாங்கிக்கொடுத்த முதல் பைக் TVS Champ.

1. மதர் தெரஸா முதலில் புடவையை துக்கிக்கட்டிப்பார். இல்லாட்டி புடவை சக்கரத்தில் சிக்கி ரெண்டு ஆபத்து வரும். 1. புடவை கிழியும், 2. நமக்கு ஆக்ஸிடெண்டு ஆகும்!

2. ஸ்டாண்டு போட்டவாரே க்ளட்சையும் ஆக்ஸிலரேட்டரையும் கெட்டியா பிடிச்சுண்டு பெடலை சுழட்டி, ஸ்டாட்டெல்லாம் ஜம்முன்னு செய்வார். எக்காரணத்தை கொண்டும் மெயின் ரோட்டுக்கு போயிடக்கூடாது என்ற மிக மிக ஸ்ட்ரிக்ட் கொள்கைகளை உடையவர்! 90களியேலே ட்ராஃபிக்கை பார்த்து பயந்தவர்!

3. காலை அந்தப்பக்கம் போட்டு சீட்டில் உட்கார்ந்தவுடன் நாமெல்லாம் என்ன பண்ணுவோம்? காலைத்தூக்கி பெடலின் மேல் வைச்சுப்போமா இல்லியா? மதர் தெரஸா காலை தொங்கபோட்டுண்டே (போர்க்கால நடவடிக்கை, பாலன்ஸ் போயிடுமாம், விழுந்துடுவாளாம்) 2 கிலோமீட்டரும் போயிடுவா! (அவ்ளோ தான் பெர்மிட்டட் டிஸ்டன்ஸ்!) ரெண்டு கிலோமீட்டருக்கு ஒரு மில்லிமீட்டர் ஜாஸ்தியானாலும் நிம்மியோ (ஹிஹி நான் தேன்) அல்லது நம்மாவோ தான் ஓட்ட வேண்டும்!

4.பெர்மிட்டட் ஸ்பீடு லிமிட் = 5 கிலோமீட்டர் பெர் அவர். ஸ்டார்ட் பண்ணின உடனேயே காலை கீழே தேய்ச்சுண்டே போனால் அப்படித்தான் போக முட்யிஉங்கறேன்! 25 ல போனாலே முட்டிவரைக்கும் தேய்ஞ்சு ரத்தம் வந்திடாது?

5. சில சமயம் வண்டி நகரவே நகராது! ரெண்டு பிரேக்கையும் கெட்டியா பிடிச்சுண்டு உக்காண்டா எப்படி நகருங்கறேன்?

6. முக்கியமான பாயிண்டை கவனிக்கவும், பைக்கை ஓட்டும்போது தோள்பட்டை, கை கால் எல்லாம் மஹா ஸ்டிஃப்ஃப்ஃப்ஃபாக வைத்தல் வேண்டும். ரிலாக்ஸ்டாக ஓட்டினால் ஆக்ஸிடெண்ட் ஆகிவிடும்!

7. தூ...........ரத்தில ஒரு பஸ் வந்தா, அவ்வளவு தான்! சைடில் தென்படும் ஏதாவது கடைக்குள்ளே பைக்கை நிறுத்திட்டு காத்துண்டு இருப்பாங்க. கடைக்காரர் முறைப்பார்! (கடையின் ஸ்டோர் ரூமில் எல்லாம் பைக்கை வைக்கக் கூடாதாமே?)

8.மை நைனா இஸ் எ உலக மகா நச்சு கேஸ். அவர் ஓட்டவும் மாட்டார். மதர் தெரஸா பின்னாடி உக்காண்டு நச்சிண்டே போறது!  தெருவின் நடுவில் ஏதாவது பள்ளம் வந்தால் கொஞ்சமே கொஞ்சூண்டு ஹேண்டிலை திருப்பி தள்ளி ஓட்டிண்டு போறதெல்லாம் ரொம்பவே போர்க்கால நடவடிக்கை ஃபார் மை மதர் தெரஸா! நைனா கதறக் கதற பள்ளத்துக்குள் டமால்ன்னு வண்டியை இறக்க - ஏத்தி, பைக்குடன் சோமர்சால்டெல்லாம் அடிச்சு...  பாவம் தி நைனா.. வீட்டுக்கு வந்து உங்கம்மா கூட வண்டியில போனா உடம்பெல்லாம் வலிக்கிதும்பார்! நேரா பள்ளத்தையோ அல்லது ரோட்டுக்கு நடுவில் இருக்கும் பெரிய கல்லையோ  டார்கெட் பண்ணி ஓட்டுறாங்களாம்!

9. ரோட்டில் அம்மா போகும்போது யார் ஹான் அடிச்சாலும் இம்மீடியட்டாக அவருக்கு வழி விடப்படும். தேவைப்பட்டால் சைடில் இருக்கும் டிவைடரின் மேல் வண்டியை ஏத்தி நின்னுப்பாங்க. ஆனா நிச்சியம் மத்தவாளின் செளரியமும் நேரமும் தான் முக்கியம்!

10.சின்ன்ன பூனைக்குட்டி போனாலும் உயிரைக்கொடுத்து சேம்பின் ஹான் அடிக்கப்படும். ஆனால் அதுவோ ட்ராஃபிக் சத்தத்தில் அடிக்கும் மொபைல் மாதிரி ஹீனஸ்வரத்தில் மந்த்ரஸ்தாயியில் தான் அடிக்கும்!

11.அதுல பாருங்க முகலிவாக்கம் ரொம்ப பாஷ் லொக்காலிட்டி. ஹான் அடிச்சா எல்லாம் ஒருத்தரும் நகரமாட்டா! நாம தான் ஹான் அடிச்சுண்டே வளைஞ்சு வளைஞ்சு மாட்டு மந்தை கூட்டத்தை தாண்டி போயாகணும். நாங்க மெயின் ரோட்டுக்கு போய் ஏதாவது வாங்கிண்டு வரணும்னா 20 நிமிட்ஸ் ஆகும். ஆனா மதர் தெரஸா போனாசுமார் 1.15 மணி நேரம் ஆகும். பின்னே? அவா எல்லாரும் (காலேல தூக்கக் கலக்கத்தில்) மொள்ள நடப்பா. மதர் அவா நகரும் வரை பிரேக் போட்டு காத்துண்டு இருந்து அதுக்கப்புறான்னா காய்கறி கடைக்கு போவா?

12. ஒரு வேளை மை மதர் தெரஸா நாம பின்னாடி உக்காண்டு வந்தால், நாம கண்ணை தகிரியமா மூடிண்டுடலாம்! ஏன்னா மதர் தெரஸா,” ஓரமா போ, மெதுவா போ, ஸ்லோ பண்ணு, பஸ் போகட்டும், சேலை முள்ளுல விழுந்தாலும் முள்ளு சேலையில விழுந்தாலும் நஷ்டம் என்னமோ சேலைக்குத்தான், பாத்து அவன் இடிக்கற மாதிரி வரான், அவனை முன்னாடி விட்டுடு, நமக்கு அவசரம் இல்லை(நிஜம்மாவே அவசரமா இருந்தாலும்) , இன்னும் நிறைய்ய்ய்ய்ய்ய டயம் இருக்கு” போன்ற பொன்மொழிகளை ஒப்பிச்சுண்டே வருவார்! அதாவது ஓட்டாமல் வண்டியை ஓட்டுவார்!

என்னதான் இத்தனை பிரச்சினைகளும் இருக்கட்டுமே, நான் ஷீரடிக்கு சென்றிருந்த போது, தி நைனாவுக்கு ஒரு தடவை டயப்படீஸினால் பாராலிட்டிக் அட்டாக் வர, மனந்தளராமல்,  தனியாளாக பைக்கில் போரூர் ட்ரன்க் மெயின் ரோட்டில்நைனாவை அவ்வை சண்முகி மாமி மாதிரி அழைச்சுண்டு போய் ராமச்சந்திராவில் அட்மிட் செய்து அவரை காப்பாற்றிய அம்மவாரு திஸ் லக்ஷ்மி! அதே மாதிரி நடக்குமான்னு நினைச்சுண்டு இருந்த மை கல்யாணத்துக்கு மண்டபம் ஃபிக்ஸ் பண்ண பைக்குல போனதும் தி மதர் லக்ஷ்மி தான்!

7 comments:

திவாண்ணா said...

திட்டு திட்டுன்னு திட்டி கமென்ட் போட நினைச்சேன்! கடேசி பாரால மனச மாத்திட்டியே! செண்டி செண்டி...

'பரிவை' சே.குமார் said...

கடைசிப் பாராவில் அம்மா டச்சிங்க்...
நல்ல பகிர்வு.

'பரிவை' சே.குமார் said...

கடைசிப் பாராவில் அம்மா டச்சிங்க்...
நல்ல பகிர்வு.

Anonymous said...

படித்தேன்; ரசித்தேன்; பாராட்டுக்கள்!
பேஷ் பேஷ் madam!

வெங்கட் நாகராஜ் said...

ரசித்தேன்.....

கடைசி வரிகள்...

Chocks said...

அம்மாவுக்கும் உங்களுக்குமான அன்னியோன்யம் பதிவில் தெரிகிறது..நல்ல எழுத்து .வாழ்த்துக்கள்

Jagadeesan R said...

Last para: You only have the power to change the flow suddenly in a single line!

Related Posts with Thumbnails