தி நகர் டெர்மினஸ்ல நின்னுண்டா பஸ் வர்றதுக்குள்ள ஊர்ப்பட்ட வம்பு சேகரிக்கலாம். வேடிக்கை பார்க்கறதுங்கறது எங்க பஸ் பிக்கப் பாய்ண்டு பக்கத்துலேயே உக்காந்து இருக்கற பூக்காரம்மாவுக்கும் எனக்கும் பரம இஷ்டம்.
எனக்கென்ன கடுப்புன்னா பூக்காரம்மா நாள் பூரா அதான் செய்யறா. எனக்கு இப்போ பஸ்சு வந்துடுமே!
அந்த பூக்கார அம்மா வேற படு அழகு. பெரீய்ய பொட்டு + பளீர்ன்னு பல்வரிசையுடன் கூடிய சிரிப்பு. காரே பூரேன்னு ட்ரெஸ் பண்ணிண்டு ஆபீஸ் போற எனக்கு தினோம் பூ விக்க ட்ரை பண்ணுவா. செல்லிங் ஸ்கில்ஸ் கத்துக்கலாம். "இன்னிக்கு ஆடிபூரம்மா பூ வாங்கிக்கம்மா. இன்னிக்கு கிர்த்தியைம்மா" இப்படி தினோம் எதாவது சொல்லுவா. நானும் "நான் போறது ஆபீஸுக்குங்க" ந்னு சொல்லி சிரிப்பேன். சினேகமா பார்த்து தலையாட்டுவா.
********
கமிங் பேக் டு தி நகர் டெர்மினஸ், சுவாரஸ்யத்துக்கு பஞ்சமேயில்லை. டெர்மினஸ்லேந்து பஸ்ஸை நகர்த்தி உஸ்மான் ரோடுக்கு நடுவே கொண்டு வந்து நிறுத்தி எங்கிருந்தோ காளகேயர்களை போல பஸ்ஸை பிடிக்க வெறியுடன் ஓடி வரும் பயணிகளை அன்புடன் அக்காமடேட் செய்யும் டிரைவர்கள் இருக்கிறார்களே. .அவர்கள் எல்லோருக்கும் என் நமஸ்காரங்கள். அப்படி ஏத்திக்கும் போது, ரோட்டில் கடகடன்னு வண்டிகள் சேர்ந்துடும்.பின்னாடி முப்பது வண்டிகள் நின்னுண்டு இருந்தாலும் வயசான ஆண்களும் பெண்களும் இருபது பேருடன் பாட்டி & தாத்தா தம்பதி சமேதரா ஏறும் வரைக்கும் 9M டிரைவர் பொறுமையா வண்டியை நிப்பாட்டி, அவங்களை ஏத்திண்டு போவார். அவங்க ஏறும் வரை பின்னாடி காத்திருக்கும் வண்டிகள் எதுவும் ஹார்ன் அடிச்சு யாரும் கடுப்பேத்தாம இருந்தது பார்த்து எனக்கு மஹா ஆச்சர்யம். இன்னொண்ணு, ,நீ என்னமும் பண்ணு, பப்ளிக் சர்வீஸ் தான் எனக்கு முக்கியம், இவங்களை ஏத்திக்காம நான் கிளம்பறதா இல்லைங்கற அந்த டிரைவரின் ஆட்டிட்யூடுக்கு நான் பரம ரசிகை.பின்னாடி நிக்கறவங்களுக்கு வேற ரக்ஷையில்லை. பஸ் கிளம்பினாத்தானே இவங்க் போக முடியும்? எல்லாருக்கும் எப்போவும் அவசரம்.
OMRல் பஸ் ஓட்டுறது ஒண்ணும் சாமானியமில்லை. சிக்னல் போட்ருக்கோ இல்லையோ மக்கள் பாட்டுக்க ஜாலியா ரோட்டை கிராஸ் பண்ணுவாங்க. யாருக்கும் அடித்தவங்களை பத்தின அக்கறையோ அவங்க அசெளகர்யத்தை பத்தின ஞாபகமோ இருக்கறதில்லை. பஸ்ஸுக்கு வழி விடாம மெதுவா மத்தியிலேயே டூ வீலர் போயிண்டு இருக்கும்.
இம்மீடியட் ரைட்ல திரும்ப வேண்டியவன் இடது பக்க கடைசி லேனிலிருந்து கண்டுக்காம வலது பக்கம் போவான். நல்ல புத்தியிருந்தா சில சமயம் இண்டிக்கேட்டர் போடுவான். அனேகமா கெட்ட புத்தி தான்.
ஐடி பெண்கள் எல்லாரும் நடு ரோட்டில் காதில் இயர் ஃபோன்ஸ் வைச்சுண்டு கேட் வாக்கிங் தான். எவன் எக்கேடு கெட்டு போனா எனக்கென்ன? அப்புறம் பெங்காலி அஸாமி நேப்பாளி மக்கள் குமார் சானுவை செல்கானில் அலற விட்டுண்டு சோகத்துடன் நடப்பாங்க. பஸ்ஸில் முன்னாடி உக்காண்டா இவங்க பண்ற அராஜகத்தைல்லாம் பார்த்தா நமக்கு BP எகிறிடும். அதனால பின்னாடியே உக்காண்டுக்கறது.
இவங்க அத்தனை பேருக்கும் பொது மன்னிப்பு வழங்கி, அமைதியின் திருவுருவாக வாட்ஸப் பார்க்காம பஸ் ஓட்டிண்டு போற அம்மஹானுபாவனின் திருவுள்ளாத்தை என்னன்னு சொல்லி பராட்டுறது?
*****

2 comments:
வருக வருக....
நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் பகிர்வு. மகிழ்ச்சி.
hi, this is Radha, Content expert in parentune.com. Am searching for a Tamil blogger. kindly send ur number to radhashrim@gmail.com. thank u
Post a Comment