கேஃபிட்டீரியாவில் உட்கார்ந்துண்டு என்னிக்குமில்லாம இன்னிக்கி அத்திப்பழ ஐக்கீம் சாப்பிடலாம்ன்னு சபலம். அது அத்திப்பழ குல்ஃபி. குச்சியை கைல பிடிச்சுண்டு ஆ....னன்.....தமா சாப்பிட்டுண்டு இருந்தேன். நம்ம ஆவின் திரட்டிப்பால் இருக்கோன்னோ? அதுல கொஞ்சம் அத்திப்பழத்தை நறுக்கிப் போட்டு நடுல நடுல வந்துண்டு இருந்தது. செம டேஸ்ட்.
சாப்பிடும்போது ஒண்ணு ஃபோன் பாக்கணும். இல்லே, டீவி. ஃபோன் இன்னிக்கி ஓவரா களைச்சு போய் , பேட்டரி பிராணனை விட்டுடுத்து.
சரின்னு ஃபாக்ஸ் லைஃப் டீவி பார்த்துண்டே குல்ஃபியை உறிஞ்சினேன். அது ஊர் ஊராப் போய் அவா சமயலை சாப்பிட்டுப் பார்த்து சமயல் கற்கும் ஸ்பெஷல் நிகழ்ச்சி. குபுஸ் எப்படி பண்றதுன்னு காமிச்சுட்டு, இப்போ இதுக்கு தொட்டுக்க என்ன பண்ணலாம்ன்னு கேட்டாளா? நம்ம கஷ்டகாலம், மாமிஸத்தை அப்படியே நறுக்கி, கொத்தி, மலை மாதிரி கூட்டி, பரோட்டா மாவு மாதிரி பிசைஞ்சு, சேமியா மாதிரி பிழிஞ்சு, அதுல என்னென்னமோ சம்பந்தமேயில்லாம தக்காளி, கோதுமை ரவை(?) கொத்தமல்லி (50 கட்டு) கடைசி வரை உப்பே போடாம, நத்தை ஓடு இருக்குல்ல? அதுல அந்த ஃபில்லிங்கை நிரப்பி ஓவன்ல வைச்சு அதை எடுத்து, அதை ஃபோர்க்கால குத்தி குத்தி.. சரி வுடுவொம்.
இப்படி மூளையின் ரிஸப்டார்களை இந்த காட்சிக்கோவையிலேந்து டெலிப்பரேட்டா முடக்கிட்டு, நாக்கை பிரதானமா வைச்சுண்டு ரசிச்சு ருசிச்சு அத்திப்பழ ஐக்கீமை முடிக்கறச்சே கேஃபிட்டீரியா கேர் டேக்கர் ஒருத்தர் என்கிட்ட வந்து, ”மேடம், பிக் தானே சாப்பிடறீங்க?”
தூக்கி வாரிப்போட்டது எனக்கு!
என்னது? pig ஆ?ன்னேன் அதிர்ந்து.
உடனே, ஆமா மேடம், இது பிக் தான்.
அடராமா, ஜெல்லி, சாக்கலேட்ல அனிமல் ஃபேட் போடற மாதிரி இப்போ ஐக்கீம்லையும் பன்னிக்கறியா? ஆவின் திரட்டுப்பால் இல்லியா இது? வாய்ல ஒண்ணும் சேமியா தட்டுப்படலியே! கடவுளே, என்ன பண்ணுவேன்! ஐய்யோ ஐய்யோன்னு பதறினேன்.
அதுக்குள்ள அவர், அத்திப்பழம் மேடம்ன்னார்.
அத்தி...ப்பழமா.. ஓ ஃபிக்... fig ஐ சொல்றீங்களா?
நிம்மதிப் பெருமூச்சு.
ஷப்பா! ஏண்டா இப்பிடி பீதியைக் கிளப்பறீங்க?

No comments:
Post a Comment