Pages

Showing posts with label Girilakshmi Miss. Show all posts
Showing posts with label Girilakshmi Miss. Show all posts

Tuesday, April 27, 2010

கிரிலக்ஷ்மி மிஸ் -2 கற்றது தமிழ்

கிரிலக்ஷ்மி மிஸ் -2


ஹைத்ராபாதிலிருந்து சென்னை வந்தப்போ ஸ்கூல் அட்மிஷனுக்கு அம்மா அவஸ்தை படலை. ஏன்னா அம்மாவோட போடி,  பங்கஜம் கேர்ள்ஸ் ஹைஸ்கூலில் ஹெட்மிஸ்ட்ரெஸா இருந்த அதே திருமதி அய்யாசாமி (ஆமாங்க, பெண் தான்) தான் இங்கேயும் பிரின்ஸிபால். ஏதோ சினிமா மாதிரி இருந்தது எனக்கு. போடி எங்கே ஹஸ்தினாபுரம் எங்கே? இருந்தாலும் கடவுள் எனக்கு இந்த இடத்துல தான் ரொம்ப சாதகமா பண்ணி வெச்சார். எந்த டெஸ்டும் இல்லாம,” லக்ஷ்மி குழந்தைகளா?”ன்னு உடனே சேர்த்துண்டாங்க. அம்மா தான் ஸ்கூல் ஃபர்ஸ்டாச்சே! அதுனால எங்க மேலையும் அப்படி ஒரு (தப்பான) நம்பிக்கை. தங்கைமணி 4லேயும் நான் 7லேயும் சேர்க்கப்பட்டேன்.

அட்மிஷன் அப்போ தான் அய்யாசாமி மேடம் கேட்டாங்க,” தமிழுக்கு என்ன பண்ணப்போறே”ன்னு. ஆமாம் எங்க ரெண்டு பேருக்கும் தமிழ் தெரியாது. போடியில சண்முகன் அருள் நெறி ஸ்கூல்ல ஒண்ணாப்பு ஓபி அடிச்சதிலே(ஆமா, நான் அப்போவே அப்படித்தான்!) உயிரெழுத்துக்கள் மெய்யெழுத்துக்கள் மட்டும் தான் தெரியும். விகடன்ல விட்டுக்கள் படிப்பேன், கோகுலம் முக்கி முனகி ஒரே ஒரு குட்டிக்கதை படிச்சுட்டு புஸ்த்தகத்தை தூக்கி எறிஞ்சுடுவேன். அவ்ளோ சுறுசுறுப்பு.

அப்படி அய்யாசாமி மேடம் கேட்டப்போ, எங்கம்மா, ”நான் பெர்ஸனலா கோச் பண்ணி எப்படியும் பிக்கப் பண்ண வெச்சுடறேன் மேடம்”ன்னு அபார நம்பிக்கையோட கமிட் பண்ணினாங்க. எனக்கா தலை சுத்திடுத்து. தங்கை மணிக்கு சுத்தமா தமிழே தெரியாது. அது தெலுங்கு படிச்சது. பாவம் தான்னாலும் 4வதுக்கு அவ்ளோ சிலபஸ் இருக்காது, இவளுக்கு ஈஸி தான்னு அம்மா சொல்லிட்டாங்க. நான் தான் வசம்மா மாட்டிண்டேன்.

முதல் நாள் ஸ்கூலுக்கு போனப்போ சிவப்பா, அழகா, நீளமான கூந்தலோட, கொஞ்சம் ஜெயா அத்தை ஜாடையா உயரமா இந்த மிஸ் க்ளாஸுக்கு வந்தாங்க. எல்லாரும் எழுந்து ”வணக்கம் ஆசிரியை”ன்னு சொன்னாங்க. எனக்கு ரொம்ப புதுமையா இருந்தது. இது நாள் வரை ஆந்திராவில் டீச்சர், மிஸ், மேடம்ன்னு கூப்பிட்டு தான் பழக்கம்.

ரொம்ப எளிமையா,  இனிமையா அதே நேரம் ரொம்ப கண்டிப்பாகவும் நடந்துண்டாங்க. அவங்க பேர் தான் கிரிலக்ஷ்மி டீச்சர்.. டா.....ன்... (பின்னே ஹீரோயின் இண்ட்ரொடக்‌ஷன் ஆச்சே! அதுக்கோசம் மிஸ்ஸை டான்ஸெல்லாம் ஆட சொல்லக்கூடாது) முதல் நாளே மிஸ்ஸை அம்மா மீட் பண்ணி என்னை பத்தி வத்தி வெச்சாச்சு. மஹா பயம் எனக்கு. நான் எழுத்து கூட்டி ஒரு வரி படிக்கறதையே சாதனையா நினைச்சுண்டு இருந்த நேரத்துல ஆசிரியை , உரைநடையில் ரா.பி. சேதுப்பிள்ளையின் பேச்சு வழக்கு பத்தி  முதல் பாடம் எல்லாம் நடத்த எனக்கு தலை சுத்திச்சு. என்ன தான் அம்மா கோச் பண்ணினாலும் என்னால இலக்கணம் எல்லாம் பிக்கப் பண்ணவே முடியல.

இன்னோரு அதிர்ச்சி என்னன்னா, தமிழுக்கு ரெண்டு பேப்பராம். அடக்கஷ்டமே.. ஒரு பேப்பர் எழுதறதுக்கே சரக்கில்லை. 2 பேப்பர் என்னத்த எழுதப்போறேனோன்னு ஒரே டென்ஷன். எப்படியோ சமாளிச்சு முதல் மிட் டெர்ம் எழுதியாச்சு. மார்க்கு வந்தப்போ பயங்கர அதிர்ச்சி. முதல் பேப்பர் செய்யுள் உரைநடை 34/50, ரெண்டாவது பேப்பர், இலக்கணம், கட்டுரை, மெழி பெயர்ப்பு -18/50. ஃபெயில்! எனக்கு உலகமே இருட்டிண்டு வந்தது. பின்னே. இது நாள் வரைக்கும் பாலாமணி மாதிரி பண்ணினாலும் ஃபெயில் ஆனதா சரித்திரம் இல்லை. ஏதோ தொட்டுக்கோ துடைச்சுக்கோன்னு ஒரு பார்டர்லயாவது பாஸ் பண்ணின ஆளு.. இப்படி கேவலமா வாழ்க்கையில தோத்துட்டோமேன்னு மனசு வெறுத்து போயிடுத்து. நமக்கெல்லாம் வாழத்தகுதியே இல்லைன்னு நினைச்சுண்டேன்.  அம்மா கிட்டே சொன்னா அவ்வளவு தான். திட்டி பிரிகட்டிடுவாங்கன்னு ஒரே பயம். ஒரு வாரம் கப்சிப்ன்னு இருந்தேன். அம்மா தினமும் கேட்டாங்க. பேப்பர் வரலைன்னு கூசாம பொய் சொன்னேன்.

அப்புறம் மனசு ரொம்ப குறுகுறுக்க பிராக்ரஸ் ரிப்போர்டு குடுத்த அன்னிக்கு சொல்லிட்டேன். அம்மா ரொம்ப கூலா சொன்னாங்க. அவ்ளோ தானே? நீ இந்த மார்க்கு கூட வாங்குவேன்னு நான் நினைக்கலை. பரவாயில்லை, எப்படியும் குவார்டர்லிக்குள்ளே உன்னை கோச் பண்ணிடுவேன் அப்படீன்னு சொன்னப்போ பெரிய ரிலீஃப்.

முதல்லே, ப்ளெயின் பேஜ்ல எழுதவே கஷ்டமா இருந்தது. தமிழ் ஆரம்பத்துல இருந்து எழுதிப்பழகாதது எப்பேர்ப்பட்ட பிழைன்னு ரொம்ப வருத்தப்பட்டேன். ஒற்றெழுத்து எல்லாம் ஒரேடியா தப்பு விடுவேன். இப்போவும் இந்த பிரச்சினை இருக்கு. தக்குடு மாதிரி ற,ர, ன,ண இண்டெர்சேஞ் இஷ்யூஸ். அநியாய ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ். அம்மா ஸ்கேல் வெச்சுண்டு அடி போட்டு திருத்துவாங்க. சரி, பாடங்கள் எல்லாம் ஓரளவுக்கு படிச்சு, வேற்றுமை உருபுகள் எல்லாம் புரிஞ்சும் புரியாமலும் நெட்று அடிச்சு, குற்றியலுகரம், குற்றியலிகரம் எல்லாம் டப்பா அடிச்சு ஒரு மாதிரி குவார்டர்லி பரீட்சை எழுதிட்டேன்.

கிரிலக்ஷ்மி ஆசிரியை ஆன்ஸர் பேப்பர் கொடுக்க கொடுக்க, வயித்தக் கலக்கிடுத்து. ஏதோ ஒரு பையன் தான் க்ளாஸ் டாப்பர்ன்னு நினைவு. ஏதோ ஒரு ஆர்டர்ல கொடுத்த் மாதிரி எனக்கு பட்டது. ஆனா எப்போ என் பேப்பர் வரும்ன்னு ரொம்ப ரெஸ்ட்லெஸ் ஆயிண்டு இருந்தேன். எல்லோருக்கும் கொடுத்து முடிச்சப்புறம் ஒரே ஒரு பேப்பர் வெச்சு இருந்தாங்க. எனக்கு கன்ஃபார்மா தெரிஞ்சு போச்சு.. இன்னைக்கு சங்கு தான் நமக்கு. ஸ்பெஷல் அர்ச்சனை, அடி எல்லாம் கிடைக்கப்போறதுன்னு ரொம்ப வேர்த்துக்கொட்ட ஆரம்பிச்சுடுத்து. ஆசிரியை சொன்னாங்க, ”தமிழே தெரியாம இருந்தாக்கூட நல்லா படிச்சு முதல் மதிப்பெண் வாங்கி இருக்கா” ன்னு என் பேர் சொன்னப்போ நான் வாயப்பொளந்ததுல ரெண்டு பூச்சி வாய்க்குள்ளே போயிடுச்சு. ”எல்லோரும் கைத்தட்டுங்க”ன்னு ஆசிரியை சொன்னப்போ நான் இது நிஜம் தானான்னு நம்ப முடியாம திணறினேன். அது வரைக்கும் மேக்ஸிமம் மார்க்கு 67ன்னு கேட்டது. நான் 73! பேப்பர் வாங்க கிட்ட போன போது மிஸ்,” இந்த வாட்டி பரவாயில்லை ஆனா அடுத்த முறை இந்த மாதிரி ஹாண்டுரைட்டிங் இருந்தா ஸீரோ தான் போடுவேன்”னு சொன்னாங்க. அதெல்லாம் எங்கே என் காதுல விழுந்தது? நான் பறந்துண்டுன்னா இருந்தேன்!

சந்தோஷம்னா சந்தோஷம் அப்படி ஒரு சந்தோஷம். மார்க்குக்கு இல்லை, ஆசிரியை கிட்டே கிடைச்ச அங்கீகாரத்துக்கு. அம்மாவுக்கும் தான் நன்றி சொல்லணும் பெண்டு நிமித்தினாங்களே. ஆனா ஆசிரியை என்கிட்டே ஒரு ஸ்பெஷல் கரிசனம் காட்டுவாங்க. ஒரு எம்பதி. அவங்க அப்ரோச்ல நிறைய தாய்மை இருக்கும். ஆசிரியை வெறும் தமிழ் மட்டும் சொல்லித்தரலை, நாலடியார், நான்மணிக்கடிகை, திருக்குறள் இப்படி எல்லா வாழ்க்கை நெறி முறைகள அழகாக எடுத்து சொல்லி இருக்காங்க. ஹ, அது சிலபஸ்ல இருக்கு, என்ன பெரிய விஷயம் எல்லா ஆசிரியர்களும் பண்றது தானேன்னு கேக்கலாம். ஆனா இவங்க இந்த விஷயங்களை மனசுல விதைச்ச விதம் இருக்கே.. இன்னிக்கும் கள்ளி வயிற்றில் அகில் பிறக்கும்ன்னு நான் ஞாபகமா சொல்றேன்னா அதுக்கு காரணம் அவங்க தான். அது மட்டுமில்லை 7வது வகுப்பில் நிறைய கிரியேட்டிவ் ரைட்டிங் எழுத தூண்டியவர். கதை கவிதை, பட்டிமன்றம் இப்படி நிறைய பங்கு கொள்ள பண்ணினாங்க.  ஆக, இன்னிக்கி ஏதோ ஒரு சில ஸ்பெல்லிங் டவுட்டுகளை பாஸ்டன் ஸ்ரீராமண்னா கிட்டே கேட்டுண்டு எழுதினாலும், மத்தபடி ஏதோ இப்படி தத்தி தடுமாறி தமிழ்ல ப்ளாக் எழுத படிக்க முடியறதுன்னா அதுக்கு மூல காரணம் அம்மா & ஆசிரியை. இவங்க அன்னிக்கு போட்ட சுழி தான் இன்னைக்கும் நான் ஏதோ தெரிஞ்ச அளவுல கடை போட்டு கல்லா கட்டிண்டு இருக்கேன்.

Training is an ungrateful profession ன்னு நிறைய பேரு அடிக்கடி சொல்ல, கேட்டு இருக்கேன். நானும் அதே துறையை சேர்ந்தவள்ங்கற முறையில என்னிடம் படிச்சவங்க எல்லாம் என்னை மறந்துட்டாங்கன்னு நினைக்கும்போது ரொம்ப வருத்தமா இருக்கும். ஆனா நான், என்னை உருவாக்கிய ஆசிரியர்களை மறக்கவே இல்லை. ஏதாவது ஒரு வழியில அவங்களையும் அவங்க நினைவுகளையும் அசை போட்டுண்டே தான் இருப்பேன்.

நீங்க எங்கே இருக்கீங்கன்னு தெரியலை, ஆசிரியை. ஆனால் ஒரு அற்ப மாணவியின் நினைவுகள்ல நீங்க எப்போவும் இருக்கீங்க. வணக்கம் ஆசிரியை.
Related Posts with Thumbnails