Pages

Showing posts with label ajinomoto. Show all posts
Showing posts with label ajinomoto. Show all posts

Sunday, May 9, 2010

மனம் ஒரு குரங்கு - 13

ச்சும்மா கொஞ்சம் வம்பு!

வெட்டிப்பேச்சு பேசி ரொம்ப நாளாச்சு. அதான் ஒரு போஸ்டு வெட்டி வம்புக்கு டெடிக்கேட் பண்ணிடுறேன்.

எல்லா இடத்துலேயும் அன்னையர் தினம் ஸ்பெஷல் பதிவு போடுறாங்க. சாரி. எனக்கு இந்த அமெரிக்க கலாச்சார தாக்கம் கிடையாது. நான் டிப்பிக்கல் மருதைக்காரி. அதும் கிராமத்துக்காரி. ஸோ, நீங்க எதிர்ப்பார்க்குற அளவுக்கு எனக்கு சோஃபிஸ்டிக்கேஷன் எல்லாம் போறாது.

நான் காற்றை உணர்ந்து சுவாஸிக்கறது உண்மையானா, இனி வருங்காலம் நல்லா இருக்கும்ன்னு நான் நம்புறது உண்மையானா,  பகவத் ஸ்மரணையில் நான் சஞ்சரிக்கறது உண்மையானா, நிச்சியமா எங்கம்மாவை ஒரு க்ஷண நேரம் கூட மறக்கலைங்கறது தான் உண்மை. நான் மட்டுமில்லை எல்லோருமே அப்படித்தான்.  அவங்களுக்கு ஒரு நாளை ஒதுக்கி செலெப்ரேட் பண்ணி கார்டு குடுக்கறது, பாட்டு டெடிக்கேட் பண்றது, பதிவு போடுறது இதெல்லாம் எனக்கு சுத்தமா பிடிக்கலை. வியாபார நோக்கோடு செய்யப்பட்ட இந்த மாதிரி முட்டாள்த்தனமான அமெரிக்க கலாச்சாரம் எனக்கு தேவையில்லை. இதை நான் நிராகரிக்கறேன்.  இன்னும் சொல்லப்போனா இதெல்லாம் எங்கம்மாவை நான் கேவலப்படுத்தற மாதிரி தோணறது. மேற்கத்திய கலாச்சாரம் என்னிக்கும் என்னை பாதிக்காது.
மாத்ருதேவோ பவ. சதாஸ்ம்ருதிஹி!


இப்பெல்லாம் அபுதாபி வாழ்க்கையே மாறிப்போச்சு. முன்னே மாதிரி வருத்தமோ வெறுப்போ இருக்கறதில்லை. அப்படி என்ன மாற்றம்ன்னு யோசிச்சப்போ ரெண்டு விஷயங்கள். ஒண்ணு புது நட்பு. புதுத்தோழிகள் கிடைச்சிருக்காங்க. ரெண்டு சென்னை ரேடியோ. ஆஹா.. ஹலோ எஃப்.எம். கேட்டுண்டே வேலையேல்லாம் நிமிஷமா ஆயிடுறது. சதா வளவள பேச்சுன்னு மக்கள்ஸ் கம்ப்ளெயிண்ட் பண்ணினாலும் என் சுபாவத்துக்கு இந்த ரேடியோ ரொம்பவே பொருத்தம் தான்.குறிப்பா சென்னை விளம்பரங்கள் எல்லாம் வர்றது. ராஜா பாதர் ஸ்ட்ரீட் ரத்னா ஃபேன் ஹவுஸ்,லேட்டஸ்டு சினிமா, லேட்டஸ்டு பாட்டு  இதெல்லாம் கேக்கும்போது சென்னையில இருக்கற மாதிரியே ஒரு ஃபீலிங்கி! ஒரு அஞ்சாறு வருஷம் முன்னாடி கார்த்தால சுசித்ரா குரல் கேக்காட்டி விடிஞ்சதா அர்த்தமே இல்லை. அந்த அளவுக்கு ரேடியோ கேட்டு இருக்கேன்.  அதுலேயும் அந்த நாலு மணி வாலு அலோஷியஸும் சாயந்திரம் ப்ரைம் டைம் ஷோ நடத்தும் சுரேஷும் சூப்பர். ரொம்ப நல்லா எனர்ஜிட்டிக்கா நடத்துறாங்க. குரல் மட்டும் நல்லா இருந்தா போறாது நல்லா சுவாரஸ்யமா நிகழ்ச்சி நடத்த தெரியணும். நிறைய விஷயங்கள் இருக்கு. இங்கே துபாயில் சக்தி எஃப்.எம். ஆர்.ஜேஸ் கேட்டப்போ நான் அப்ளை பண்ண ரொம்ப ஆசைப்பட்டேன். ஆனா அவங்க அலுவலகம் வேற ஊர்ல இருந்ததால அந்த எண்ணத்தை கைவிட்டுட்டேன்.
யாருக்காவது சென்னை ரேடியோ கேக்கணும்ன்னா இங்கே க்ளிக்கவும்.


மெதுவாக இங்கே வெயில் காலம் ஆரம்பமாயிடுத்து. பகல்லே ஃபுல் டைம் ஏசீ போட்டுக்க வேண்டி இருக்கு. போன மாசம் வெளியே போகும் போது ஈச்சமரத்தில துளிர் விட்டுண்டு இருந்தது. ஈச்சந்தளிர் (சொற்றொடர் சரியான்னு தெரியாது) முதல் முறையா ரொம்ப கவனிச்சு பார்க்க முடிஞ்சது. இங்கே சாலையோர குட்டை மரங்கள்ல இருந்து தென்னந்துளிர் மாதிரி பச்சையா வந்ததை கவனிச்சேன்.

இங்கே எல்லாம் இது சர்வ சாதாரணம். இந்த ஈச்சந்துளிர் வந்த உடனே, வலை கட்டி விட்டுடுவாங்க. பேரீச்சைப்பழங்கள் எல்லாம் அந்த வலையில கனிஞ்சு தானா சேர்ந்துடும்.உங்களுக்காக ஒரு 3டைமென்ஷனல் ஈச்சமரம்.



 நல்லா இருக்கு இல்லே? :-)


UAE யில் மட்டும் 4 கோடி ஈச்ச மரங்கள் இருக்காம்! ஜபலாலியில வேலை செய்ஞ்சப்போ எங்க ஆபீஸ் வாசல்ல ஒரு 10 மரங்கள் இருந்தது. எல்லா மரங்கள்ல இருந்தும் இந்த பழங்கள் கீழே விழுந்து இருக்கும். கனிஞ்சு தொங்கிண்டு இருக்கும் பேரீச்சை பழங்களை உயரமான ஒருத்தரை பறிச்சுத்தரச்சொல்லி க்கேட்டப்போ அவருக்கு பயங்கர ஆச்சரியம்! இங்கே இருக்கும் அரபியர்கள், மற்ற நாட்டவர்கள் எல்லோருக்கும் இந்த மாதிரி நான் பண்ணினதுல ரொம்ப ஆச்சிரியம். இவங்களுக்கு அப்படியெல்லாம் பண்ணனும்ன்னு தோணலை போல இருக்கு! நான் தான் ஃப்ரீயா கிடைச்சா ஃபினாயிலைக் குடிக்கிற கேஸு. அதுமட்டுமில்லை, ஆனஸ்டா சொல்லணும்னா,  ஃப்ரெஷ்ஷா பறிச்ச ஈச்சம்பழம் எப்படி இருக்குன்னு பார்க்கணும்ன்னு எனக்கு ரொம்ப ஆர்வம். அதான் அப்படி கேட்டேன். ஹீஹீ.. என்னதான் நாம பூசி மொழுகினாலும் நம்ம உண்மை எல்லாம் வெட்ட வெளிச்சம்தானே?


சைனீஸ் சால்டு எனப்படும் அஜினோமோட்டோ (மோனோ சோடியம் க்லூடமேட்) பொட்டலத்துல கட்டி வாங்காதீங்கன்னு இப்போ விழிப்புணர்வு கொண்டு வந்திருக்காங்க. என்ன ப்ரயோஜனம்? நாள்பட அதை சாப்பிட்டா நல்லதில்லைன்னு படிக்கறேன்.ஏகப்பட்ட சைடு எஃபக்ட்ஸ் இருக்குன்னு பக்கம் பக்கமா எழுதறாங்க.

சைனீஸ் ஃபுட் சிண்ட்ரோம்ன்னு எல்லாம் சொல்லிக்கறாங்க. இவ்ளோ ரிஸ்க் எடுத்து அதை சமைக்கணுமா? அவாய்டு பண்றது தான் நல்லதுன்னு நான் அதையெல்லாம் உபயோகிக்கறதில்லை. நம்ம ஊர்ல இருக்கற ஸ்பைஸஸ் போறுமே.. என்னத்துக்கு நாடு விட்டு நாடு வந்ததெல்லாம் சமைச்சு பிரச்சினையை விலை கொடுத்து வாங்கணும்? தேவையா?  நல்லதுன்னு பரவலா விளம்பரப்படுத்தினாலும் வேண்டாம்ன்னு ஒரு சாராரும் சொல்றாங்களே? இப்படி ஒரு காண்ட்ரவர்ஷியல் ஐட்டத்தை சமைச்சே ஆகணுமா? உங்க கருத்தை சொல்லுங்க.

இந்த அக்ஷ்ய த்ருதீயை லொள்ளு தாங்க முடியலை! புதுசா காழியூர் நாராயணன் ரேடியோல வந்து ப்ளாட்டினம் நல்ல எனர்ஜியாக்கும் அப்படியாக்கும் இப்படியாக்கும்ன்னு எல்லாம் உதார் வுட்டு, இந்த அக்ஷ்யதிருத்தியைக்கு கண்டிப்பா எல்லோரும் ப்ளாட்டினம் வாங்குங்கன்னு சொல்லிட்டு எஸ் ஆயிட்டார். இந்த மனுஷனாலத்தான் சில வருஷம் முன்னாடி இந்த அக்ஷய த்ரிதியை இப்படி கன்னா பின்னான்னு பாப்புலர் ஆச்சு. ஜீ.ஆர்.டிக்குள்ளே கடுகு போட இடம் இல்லை!!!! மன்ச்சி யாவாரம் எல்லாருக்கும். மூணுவருஷம் முன்னாடி தமாஸ்ல கூட செம்ம கூட்டம். பேசாம வேற ஏதாவது டுபாக்கூர் ஜோஸியரை கூப்பிட்டு உப்பு, சர்க்கரை, தண்ணி இதெல்லாம் வாங்கினா வருஷம் பூரா மங்களகரமா இருக்கும்ன்னு  ஒரு திரியை கொளுத்தி போட சொல்லணும். எரிச்சல் தாங்க முடியலை! X-(

போன வாரம் ஷார்ஜா போயிருந்தோம். குழந்தைகளுடன் கீதா மன்னி வந்திருந்தார். ரங்குவுக்கு அங்கே போனா குளிர் விட்றும்ன்னு முன்னாடியே சொல்லி இருக்கேனே.. ஹீ ஹீ.. எனக்கும் தான்.. செம்ம கலாட்டா கச்சேரி நடக்கும். அதுலேயும் அண்ணா இருந்தா கொஞ்சம் அடக்கி வாசிப்பேன். அன்னிக்கி அண்ணாவுக்கு ட்யூட்டி. விடிய விடிய கலாட்டா கச்சேரி. ரங்கு என்னை ஓட்ட நான் ஓட்டப்பட.. (ஹிஹி) இப்படி தொடர்ந்தது.
“மன்னி ஹலோ எஃப்.எம் ல சாயந்திரம் 7-9 எனக்கு பிடிச்ச பாட்டா போடுவான் மன்னி, அது கழிஞ்சு இவருக்கு பிடிச்ச பாட்டு எல்லாம் வரும். அதாவது பி.யூ சின்னப்பா, எம்.கே.டீ, கே.பீ. சுந்தராம்பா, கிட்டப்பா இப்படி போடுவான் மன்னி” ”அப்படியா மோஹன், அவ்ளோ பழைய பாட்டெல்லாம் நோக்கு டேஸ்டுண்டா?-” இது மன்னி. ரங்கு, சதாரம், சாந்த சக்குபாய்,சிவகவி,ஹரிதாஸ், அரிச்சந்திரா இப்படி எது போட்டாலும் கேட்டுண்டு இருப்பார். கொஞ்சம் மிகைப்படுத்த நினைச்ச நான் சொன்னேன்,”
நீங்க வேற மன்னி, இவர் ஆலம் ஆரா பாட்டு போட்டா கூட விசில் அடிச்சுண்டு ரசிச்சு கேப்பார்” .(புரியலையா? ஆலம் ஆரா இந்தியாவின் முதல் டாக்கி - பேசும் படம்.)

சினிமா பாட்டுல இருந்து டிஸ்கஷன் மெதுவா எனக்கு பிடிக்காத டாப்பிக் பக்கம் வந்தது. என்ன டாப்பிக்கா? படிப்பு. அடுத்து என்ன படிக்கலாம்ன்னு லக்ஷ்மி கேட்டுண்டு இருந்தா. எல்லாந்தெரிஞ்ச ஏகாம்பரம், நம்ம மொக்கை ரங்கு மைக்கில்லாம பிரசங்கம் நடத்திண்டு இருந்தார். கடுப்புல நான் கேட்டுண்டு இருந்தேன். ”கோந்தே, காமர்ஸ் தான் இந்த காலத்துக்கு ஏத்த படிப்பு. காமர்ஸ் மெயின் கோர்ஸா படிச்சுட்டு மேற்கொண்டு எம்பிஏ, ஃபைனான்ஸ், ஸிஸ்டம்ஸ் இப்படி படிச்சா இந்த காலத்து சர்வைவலுக்கு ரொம்ப உபயோகமா இருக்கும். மத்த படி வெறும் காமர்ஸ் மட்டும் படிச்சுட்டு சும்மா இருந்தா வேஸ்டுன்னு மெதுவா என் பக்கம் ஒரு திருட்டு முழி வீசினார். ருத்ர தாண்டவம் ஆட ஏதுவா ஒரு இடத்தை தேடிண்டு இருந்த நான், ”ஹான்?”ன்னு உரக்க கத்தினேன். உடனே அட்டேன்ஷன்ல நின்னுண்டு காமர்ஸ் படிச்சுண்டு ஹிந்தியும் படிச்சுண்டா சித்தி மாதிரி ஹைலி சக்ஸஸ்ஃபுல்லா ஆகலாம் கோந்தேன்னு மெதுவா ப்ளேட்டை திருப்பிட்டார்!
மன்னி & குழந்தைகள் தேடினேன் காணோம். பின்னே? கீழே விழுந்து புரண்டு சிரிச்சுண்டு இருந்தாளே!
Related Posts with Thumbnails