டிஸ்கி: இந்த போஸ்டு எழுத ஐடியா கொடுத்த அன்புத்தம்பி நாஞ்சில் பிரதாப்புக்கு சமர்ப்பணம்.
வெட்டி: ”ஹலோ ஜஹாலக்ஷ்மியாங்க?” ஸ்லர்க்(ஜொள்)
ஜஹா: ”ஆமாங்க, சொல்லுங்க யார் பேஸ்றீங்க”
வெட்டி: ”நான் தாங்க வெட்டிச்சாமி பேசறேன், சோம்பேறிபுரத்துல இருந்துங்க”
ஜஹா: ”என்ன பன்றீங்க(இது எழுத்துப்பிழை அல்ல, அவர்களின் நுனிநாக்குத்தமிழ்) வெட்டிச்சாமி?”
வெட்டி: ”நான் வெட்டியாத்தான் இருக்கேனுங்க. ஸ்லர்க், இப்போ உங்க கிட்டே பேசிகிட்டு இருக்கேங்க” ஸ்லர்க்.
ஜஹா: ”ஹா ஹா ஹா.. ”
வெட்டி: ஸ்லர்க் ஸ்லர்க், ”ஹே ஹே..நீங்க இன்னிக்கி ரொம்ப க்யூட்டா இருக்கீங்க” (என்னான்னா ஜோக் சொல்லிட்டாராம்)
ஜஹா: (இப்போ இவங்களும்) ஸ்லர்க் ஸ்லர்க் ”ரொம்ப தாங்க்ஸ்ங்க
வெட்டி: ”இந்த இயர்ரிங் உங்களுக்கு ரொம்ப சூட் ஆகுதுங்க
ஜஹா:”ஒ, ரொம்ப தாங்கஸ்ங்க
வெட்டி:”இந்த பேங்கிள் எங்க ரங்கனாதன் ஸ்ட்ரீட்லேயா வாங்கினீங்க?”
ஜஹா: ” இல்லேங்க, புரசைவாக்கத்துல. ”
வெட்டி:”ரொம்ப அருமையா இருக்கு உங்க கைக்கு. (ஸ்லர்க் ஸ்லர்க்)
ஒவரா ஜொள் விட்டதுல எங்க லாண்ட் லைன் ஃபோன் ரிசீவர் ஈரமாயிடுச்சு. நான் கார்டுலெஸ் எடுத்துக்கறேன். ப்ளீஸ் வெயிட்.
ஹலோ, ஹான், என் தம்பி ஜொள்ளணும்ங்றான், ச்சே ச்சே, இல்லே, பேசணும்ங்கிறான் மேடம். ”
ஜஹா: ”சரி குடுங்க”
வெ.த:”ஹலோ ஜஹாவா.. எப்படி இருக்கீங்க?”
ஜஹா”ஆமாங்க, சொல்லுங்க உங்க பேரென்னங்க?”
வெ.த:”நான் சாப்பிட்டாச்சு மேடம், இப்போத்தான் இட்லி சாப்டேன், நீங்க என்ன சாப்பிட்டீங்க?”
“!!!!, அதில்லீங்க, உங்க பேரென்னங்க?”
வெ.த:”என் பேரு வெட்டித்தம்பிங்க. நானும் வெட்டியாதான் இருக்கேங்க. எங்களுக்கு உங்களை ரொம்ம்ம்ம்ம்ம்ப பிடிக்கும்ங்க”.
(ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ச்லர்க்)
ஜஹா:”சரி வெட்டித்தம்பி, உங்க டீவீ வால்யூம் கம்மி பன்றீங்களா?”
வெ.த::”கேக்லைங்க.. ஹலோ”
ஜஹா:சற்று உரக்க, “உங்க டீவீ வால்யூம், கம்மி பன்றீங்களா?”
வெ.த::”கேக்கலைங்க.. என்னாங்க சொல்றீங்க? ஹலோ”
ஜஹா:இன்னும் உரக்க,”உங்க டீவீ சவுண்டு கம்மி பன்னுங்க”
வெ.த:: ”எங்க வீட்டுல டீவீயே இல்லைங்க எங்கேந்து வால்யூம் கம்மி பண்றது?”
ஜஹா:@#$@!#$!@#$@!#$@!#$@!#$@#$@#$@#$
(கடைசி வரி மட்டும் விவேக்கின் ஒரு ஜோக்கிலிருந்து எடுத்திருந்தாலும், பாக்கி எல்லாம் நான் பார்த்த நிகழ்ச்சிகளில் இருந்து எடுக்கப்பட்டவையே)
ஹப்பா, கான்வர்ஸேஷன் முடிஞ்சிருச்சு. இப்போ மைக் எனக்குத்தான்..ஹய்யா ஜாலி!
காதில் ராட்சத வளையங்கள் போட்டுக்கொண்டு, கிட்ஸ் செக்ஷனில் வாங்கிய துணிமணி அணிந்து, இடமும் வலமும் முன்னும் பின்னும் ஆடிய படி கெக்கே பிக்கே என்று பிதற்றும் வீடியோ ஜாக்கிகள்(ஹய்யயே, ஜட்டி இல்லீங்க, தொகுப்பாளர்களை சொல்றேன்) ஒரு புறமென்றால், இன்னொறுபுறம் வேலையில்லாமல் அல்லது வேலை இருந்தாலும் அதையெல்லாம் விட்டு இவர்களுக்கு ஃபோன் செய்ய தேவுடு காக்கும் மக்கள்ஸ் இன்னொறு பக்கம். பெண்கள் ஆண்கள் இருபாலாரும் இதில் அடக்கம்.
இந்த நிகழ்ச்சி நடத்துவது மிகவும் ஒரு போரான விஷயம். பின்னே ஃபோன் செய்பவர்களிடம் எல்லாம் ஒரே கேள்வியைத்தான் கேட்கணும். என்ன பண்றீங்க? சாப்டீங்களா? காலைக்கடன்கள்(!!!!) முடிச்சாச்சா இப்படி கேக்கணும். இது இல்லேன்னு வெச்சுக்கோங்க, ஏதாவது ஒரு பாடாவதி கான்செப்டு வெச்சிருப்பாங்க. மடத்தனமான ஒரு சினாரியோ குடுப்பாங்க. இந்த முகவுரை எல்லாம் சுருக்கமா முடிச்சுண்டு அதுக்கு தாவிடுவாங்க!
அவர்கள் தரும் சினாரியோ மிகவும் பரிதாபமா இருக்கும். நீங்க சமயல் பண்ணும்போது உப்பு குறைந்து விடுகிறது. உங்கள் மனைவி அவசரத்திற்கு எடுப்பது பூரிக்கட்டையா விளக்குமாறா என்ற ரேஞ்சில் போகும்! இதையும் பொறுமையாக கேட்டு கணவன்மார்கள் பதில் சொல்லிக்கொண்டு இருப்பார்கள்!
அதுல பாருங்க பெண்கள் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியாக இருந்தால், ஆண் காலர்ஸ் முன்னெச்சரிக்கையாக கழுத்தில் ஒரு பக்கேட் அணிவது உத்தமம். இல்லாவிடில் கீழே அண்டா வைத்துக்கொள்ளலாம்.(சில நிமிடங்களிலேயே அந்த ஆள் அழைத்திருந்த) கொசப்பேட்டையில் கடும் வெள்ளம் என்று ஸ்க்ரால் நியூஸூம் போட்டு விடுவார்கள்.
சில ஆண் பிருஹஸ்பதி காலர்கள், பெண்கள் மட்டும் பேசும் நிகழ்ச்சியாக இருந்தாலும் குரலை மாத்தி பேசும் அளவுக்கு தொகுப்பாளினி மீது மோகம் கொண்டு இருக்கும்.
பெண்களுக்கான ஸ்பெஷல் நிகழ்ச்சி என்றால், கேட்கவே வேண்டாம், அவர்கள் வீட்டுக்குறிப்புடன் தான் ஃபோன் செய்யணுமாம். எனக்கு குறிப்பெல்லாம் ஒண்ணும் தெரியாதுங்கன்னு ஒரு பெண் கதறக்கதற, இந்த தொகுப்பாளினி விடாமல் குறிப்பு கேட்டு கடைசியில் அந்தப்பெண், முகம் பளபளப்பாக இருக்க, கடுகு மிளகு, காய்ந்த மிளகாய் இவற்றை சம அளவில் எடுத்து பொடித்து, காலை மாலை இருவேளை ,முகத்தில் பூசி வர, மாசு மருக்கள் மறையும், முகம் பொலிவு பெறும்ன்னு சொல்லி விட்டு அப்பீட் ஆவார். இந்த மாதிரி டுபாக்கூர் குறிப்பெல்லாம் என்னிக்காவது அந்த தொகுப்பாளினி ட்ரை பண்ணி இருப்பாரா? இல்லை நான் கேக்கறேன், நம்ம பார்வையாளர்களோ மிகப்பெரிய தில்லாலங்கடிகள். இதில் ஏதாவது ஒன்றை முயற்சி பண்ணி பார்த்தா, அதன் கொடூரமான விளைவுகளுக்கு பொறுப்பேற்பது யாருங்க? குறிப்பு தெரியாதுன்னு சொன்ன காலரா, இல்லே, குறிப்பு சொல்லியே ஆகணும்னு வற்புறுத்திய அந்த தொகுப்பாளினியா? இல்லே நிகழ்ச்சி தயாரிக்கும் சானலா? இல்லே அந்த ப்ரொட்யூசரா? நான் கேட்கிறேன் இந்த அராஜகத்துக்கெல்லாம் ஒரு அளவே இல்லையா?
இந்த நிகழ்ச்சியில் கேட்ட இன்னும் சில வீட்டுக்குறிப்புகள்:
உதடுகள் சிவப்பாக இருக்க, பிளேடால் உதட்டை கீறவும், ரத்தம் பீறிடும், உதடுகள் தானாக சிவப்பாக மாறும்..
வீட்டில் இருக்கும் துர்திருஷ்டி அகல, வீட்டு வாசலில் உங்கள் பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை வைக்கவும்.
வீடு துடைக்கும் தண்ணீரில் கொஞ்சம் ரோஸ் எசன்ஸ் விட்டு துடைத்தால் வீடே ரோஜாப்பு மணமாக இருக்கும்
டூத்பேஸ்டால் கக்கூஸ் கழுவ, கிருமிகள் மாயும். கக்கூஸும் கண்ணாடி போல் மின்னும்!
மொத்தத்தில் எது எது எதுக்கு யூஸ் பண்ணனுமோ அதைத்தவிர பாக்கி எல்லாத்துக்கும் யூஸ் பண்ணச்சொல்லுவாய்ங்க!
ஸ்ஸ்ஸ்ஸ்... முடியல!
சில காலர்ஸ் பாட்டு பாடுறேன்னு சொல்லி .. ஒய் ப்ளட் சேம் ப்ளட் ரேஞ்சுக்கு பாடி டார்ச்சர் பண்ணுவார்கள். சிரிப்பை அடக்கிக்கொள்ள தொகுப்பாளர்கள் படும் அவஸ்த்தையை சொல்லி மாளாது!
போன போஸ்டுல கமெண்டி இருந்த அனுஷா சித்ரா சொன்னாப்புல ஒவ்வொரு காலரும் ஒவ்வொரு விதம்! சில காலர்ஸ் ரெகுலரா கூப்பிடுவாங்க. வீ. ஜேயை பயங்கரமா சொந்தம் பண்ணிப்பாங்க. இந்த தொகுப்பாளினி நினைவு வெச்சுக்காட்டி கோவிச்சுப்பாங்க. யாரும் கால் பண்ணாட்டி என்ன பண்றதுன்னு டீவீக்காரங்க, சில காலர்ஸை ஏற்கனவே செட் பண்ணி வெச்சு இருப்பாங்களோன்னு தோணும் அளவுக்கு இருக்கும் சில காலர்ஸ் தோரணை. ஏய், அந்த பாட்டு போடு என்று அதிகாரம் தூள் பறக்கும்.
பிரபலங்களுடன் வரும் நிகழ்ச்சிகளில் அதெப்படீன்னே தெரியாது சரியா அந்த பிரபலத்தோட பொண்டாட்டிக்கோ, புருஷனுக்கோ, அம்மா, நைனாவுக்கோ லைன் ஆப்டுடும். நாமெல்லாம் இங்கே ட்ரை பண்ணினா, எங்கேஜ்டா இருக்கும். அவங்களும் குரலை மாத்தி பேசுவாங்க. இந்த பிரபலங்களுக்கும் தெரியவே தெரியாது. தமிழ்ப்படத்துல சிவா கன்னத்துல மச்சம் வெச்சுண்டா மத்தவளுங்கு இவர் யாருன்னே அடையாளம் தெரியாதே அதே மாதிரி!
இதென்னங்க டெடிக்கேட் பண்ணும் கலாச்சாரம்? யார் கண்டு பிடிச்சு இருப்பா? இந்த பாட்டு என் ஃப்ரெண்டுக்கு டெடிகேட் பண்றேன்னு ஒரு பிரஹஸ்பதி சொல்லும். அதைப்பிடிச்சு, டாய், உண்மைய சொல்லு, டெடிக்கேட்ன்னா என்ன அர்த்தம்ன்னு கேட்டு பாருங்க, அது பேந்த பேந்த முழிக்கும்!
இருக்கறதுலேயே ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப நாராசமா இருக்கறது காதலர்களுக்காக வரும் பாட்டு நிகழ்ச்சி.. ரொம்ப கொடுமையா இருக்கும். அந்த கொடுமையை விவரிக்க என்கிட்ட வார்த்தைகள் இல்லாததால் இத்துடன் என் உரையை முடித்துக்கொள்கிறேன்.
பி.கு:-உனக்கெப்படி இவ்ளோ விஷயம் தெரிஞ்சு இருக்கு, அப்டீன்னா நீயும் தானே இந்த நிகழ்ச்சிகளையெல்லாம் பார்த்து இருக்கேன்னு நீங்க கேட்கலாம். எனக்கு அப்போ தனிமை, பெங்களூரு வாசம், வேற சானல்கள் ல மெகா சீரியல் பிடுங்கல், அதான் இதில் வரும் பாடல்களுக்கோசம் இந்த கொடுமைகளை எல்லாம் சஹித்துக்கொண்டு இருந்தேன். இல்லாட்டி அன்னிக்கே ஒரு போஸ்டு போட்டு இருப்பேனாக்கும்.



