Pages

Showing posts with label exhibition. Show all posts
Showing posts with label exhibition. Show all posts

Saturday, April 24, 2010

சந்தை & அபுதாபி கார்னிஷ்


கழுதை கெட்டா குட்டிச்சுவர்ன்னு சொல்றதை மாதிரி நாங்களும் வீக்கெண்டுக்கு வீக்கெண்டு கார்னிஷ் போயிடுவோம். கார்னிஷ்ன்னா என்னன்னு பலர் கேக்கலாம். கார்னிஷ்ன்னா கடற்கரையோரமா இவங்க, 6 கிலோமீட்டருக்கு மும்பாய் மெரீன் ட்ரைவ் மாதிரி கட்டி, அதை சுத்தி ஃபவுண்டெயின்ஸ், மரங்கள், பூச்செடிகள், புல்த்தரை இப்படி செயற்கையா செஞ்சு வெச்சு இருக்காங்க. இங்கேத்த ஷேக்குக்கு பசுமை, ஃபவுண்டெயின்னா ரொம்ப பிடிக்குமாம். அங்கே போனாலே ரொம்ப ரம்மியமா இருக்கும்.

 யாரெல்லாம் கார்னிஷ் ரோடுல இருக்காங்களோ அவங்களெல்லாம் ரொம்ப குடுத்து வெச்சவங்க. ஒரு பத்து நிமிஷம் அங்கே இருக்கற காற்றை சுவாசிச்சாலே உடம்புல இருக்கற வியாதி எல்லாம் டாட்டா சொல்லிடும். அவ்ளோ தூய்மையான காற்று மண்டலம். பத்தாக்குறைக்கு லேசான அலைகளோட சலசலக்கற தண்ணீர், ஆங்காங்கே வசீகரமான கனோபிகள், நடக்க அழகிய அகலமான நீல நடைபாதை, ஸ்கேட்டிங், சைக்கிளிங் இதுக்கெல்லாம் தனி ட்ராக், மிகப்பெரிய குழந்தைகள் ப்ளே ஏரியா, வாட்டர் தீம்ஸ், பார்பிக்யூ ஏரியா இப்படி பல ஐடியாக்களால் இந்த இடம் தான் ஒட்டுமொத்த அபுதாபி வாசிகளுக்கு சுவர்க்கபுரி.

இதை முனிசிபாலிட்டி ரொம்ப நல்லா மெயிண்டெயின் பண்றாங்க. செடி பராமரிப்பு, நடக்கும் பாதையை சுத்தப்படுத்தறது இப்படி பல நடவடிக்கைகள் எடுத்து எப்போ போனாலும் மனம் கொள்ளை போகும் அளவுக்கு அருமையான ஒரு இடம். எத்தனை வாட்டி போனாலும் ஹை, இது போன வாட்டி நாம பார்க்கலையேன்னு தோணும். புதுசு புதுசா ஏதாவது ஒரு வால்யூ அடிஷன் பண்ணிண்டே இருக்காங்க. போன வாரம் போனப்போ புதுசா எக்ஸர்ஸைஸ் மெஷின்ஸ் வெச்சு இருக்காங்க. பார்க்க மேலே, படம். நிறைய பேர் ஃபுல்லார்ம் ஷர்டெல்லாம் போட்டுண்டு எக்ஸர்ஸைஸ் பண்றாங்க. அந்த அளவுக்கு ஈடுபாடு பார்க்க முடியுது.



நேத்திக்கி வழக்கம்போல கார்னிஷ் தான் போயிருந்தோம். புதுசு புதுசா ஸ்டால்ஸ், பட்டாணிகள் கூட்டம், குதூகலத்துடன் குழந்தைகள், பெரியவர்கள், பார்க்கவே ரொம்ப சந்தோஷமா இருந்தது. என்னன்னு கவனிச்சா, ராயல் எமிரேட்ஸ் க்ரூப் நடத்தும் ஃபன் ஃபேர். அதாவது ஜாலி சந்தை.

 குழந்தைகளுக்காகவே  விதவிதமான பெரிய பெரிய ரைடுகள், ரயில், ரோலர் கோஸ்டர் போன்ற சமாச்சரங்கள் வந்திருக்கு. குழந்தைகள் ஸ்பெஷல் ஒரு ராட்சதப்பந்தை உள் வழியா உருட்டிண்டே போறது. நான் இதை சினிமாவில் மட்டுமே பார்த்து இருக்கேன்! பயங்கர ஆச்சிர்யம்.



ஒரு குறிப்பிட்ட இடம் வழியா போயிண்டு இருந்தோம். திடீர்ன்னு பார்த்தா நம்ம ரங்க்ஸ் ஆளைக்காணோம். பின்னாடி திரும்பி பார்த்தா அங்கே செருப்பு என்னமோ ஃபெவிக்கால் போட்டு ஒட்டி வெச்சாப்புல ’ஞ’ன்னு நின்னுண்டு இருந்தார். எதைப்பார்த்து இப்படி ஸ்தம்பிச்சு போயி நின்னுண்டு இருக்கார்ன்னு பார்த்தா, இதான்.



வாயில் டன் டன்னா ஜொள். கண் ரெண்டும் வெளியில, சுருட்டி வெச்ச பாயை பிரிச்ச மாதிரி நாக்கு வெளியில ரோல் அவுட்டாகி பஞ்சு மிட்டாயை பார்த்துண்டே நின்னுண்டு இருந்தார். ப்ளூக்கலர் பஞ்சு மிட்டாய் சூப்பரா இருந்ததே, அதுனால அந்த ஃபிலிப்பினோ கிட்டே பெர்மிஷன் கேட்டு ஃபோட்டோ எடுத்துண்டு ஒரு ’பஞ்சுமிட்டாய்க்கலர்’ பஞ்சு மிட்டாய் (:-P) வாங்கிண்டு, மேல நடந்தோம். நிறைய கடைகள், ஏகப்பட்ட பெப்ஸி வெண்டிங் மெஷின்கள், ரெஸ்டாரண்டுகள், சைனா எலக்ட்ரானிக்ஸ் கடைகள், வீட்டு அலங்காரப்பொருட்கள், (உலகின் எந்த மூலையாக இருந்தாலும்) பெண்கள் விரும்பி கூட்டம் போடும் ஃபேன்ஸிக்கடைகள், துணிக்கடைகள் இப்படி ஒரே கடைகள் மயம்! நாளையிலிருந்து தான் திறப்பார்களாம். வெள்ளியாதலால் அவர்கள் சாஸ்த்திரத்துக்கு திறந்த மாதிரி எனக்கு பட்டது. (ஹீ ஹீ)

இதையெல்லாம் பார்த்து ஒரு இனம் புரியாத சந்தோஷம் எனக்கு.

சின்ன வயசுல அவ்வாகூட வீரபாண்டித் திருவிழாவுக்கு போயிருக்கோம். புதுசா வளையல், ரிப்பன், எல்லாம் அவ்வா வாங்கிக்குடுப்பாங்க. பயங்கரக்கூட்டமா இருக்கும். மே திருவிழான்னா, அதுக்கு முன்னாடியே போடியில ரோட்ல ‘கொட்டு’ வரும். வித்தியாசமான மேள சத்தத்துடன் கரகம் எல்லாம் எடுத்து டான்ஸ் ஆடிண்டே போவாங்க. அதை பார்க்க அப்படி ஒரு ஆவல். அடிச்சு பிடிச்சுண்டு வாசப்பக்கத்துல இருந்து கொல்லைப்பக்கம் ஓடுவோம். (1கிமீ இருக்கும், ஹீ ஹீ). பயங்கரமான ‘கப்பு’ இருந்தாலும், (open drainage system) இந்த கொட்டு வந்தா கொல்லைப்புறக்கதவை திறந்துண்டு நின்னு வேடிக்கை பாக்குற சுகம் இருக்கே.. ஹ்ம்ம்.. இந்தக்கொட்டுக்கு ஒரு தீம் கலர் இருக்கும். Any guesses? கரெக்டு. மஞ்சள். எல்லாமே மஞ்சளா இருக்கும். அவங்க உடை, ஆக்ஸஸரீஸ், காவடி, கரகம், முகம் உட்பட! அதான் இத்தனை வருஷம் ஆனாலும் இன்னும் பசுமையா அப்படியே இருக்கு அந்த நினைவு.



வீரபாண்டித்திருவிழா கடைசியா போனது, 1992வில். சரோஜி அத்தை கூட்டிண்டு போனாங்க. அப்போவும் ரிப்பன் பஞ்சு மிட்டாய், சர்க்கரை மிட்டாய், தேன் மிட்டாய் எல்லாம் தான் வித்துண்டு இருந்தாங்க. சென்னையில படிச்சுண்டு இருந்த எங்களுக்கு அது ஒரு புதிய அனுபவமா இருந்தது. கோவிலுக்குள்ளே அம்மனை பார்க்கவே முடியல. கூட்டம் முண்டி அடிச்சது. அந்தக்காலத்துல முக்கியமா சந்தை/திருவிழாக்களுக்கு போனால் கண்டிப்பா பண்ற விஷயம் ஸ்டூடியோவில் ஃபோட்டோ எடுத்துக்கறது. தாஜ்மெஹல் ஸ்க்ரீன் முன்னாடி மணி மாமா என்னை தூக்கி வெச்சுண்டு எடுத்த போட்டோ ரொம்ப தெளிவா நினைவிருக்கு.



அடுத்தடுத்து சந்தை திருவிழா எல்லாம் பார்க்க சான்ஸ் கிடைக்காம போயிடுத்து. விஜயவாடாவில இருந்த போது எக்ஸிபிஷன் தான். அங்கே போனா அப்பா மசாலா அப்பளம், ரஷ், கோல்டுஸ்பாட் எல்லாம் வாங்கிக்கொடுப்பார். ஒரு பாட்டில் வாங்கும்போது இருக்கும் சுவாரஸ்யம் அதை குடிக்கும்போது இருக்காது. பயங்கர சோடா. அந்த காரம் மூக்குல ஏறும். ஒவ்வொரு வாட்டியும் அதை குடிக்கும்போது ச்சீ ச்சீ இந்த பழம் புளிக்கும் இதை இனிமே வாங்கவே கூடாதுன்னு நினைச்சுப்போம், ஆனா டீவீயில கவாஸ்கர் வந்து ரஷ் குடிக்க சொன்ன உடனே மனசு சரின்னு சொல்லிடும்.


சென்னை வந்ததுக்கப்புறமா தீவுத்திடல் ரெண்டு மூணு வாட்டி போய் இருக்கோம். அப்படி ஒண்ணும் பெரிய இம்ப்ரஸிவ்வா இருக்காது. கூவம் கப்புல மூக்கை மூடிண்டு தான் ஃபன் ரைட்ஸ் எல்லாம் போக முடியும். அதுவும் எனக்கு, ஜெயண்ட் வீல் எல்லாம் ’வீல் வீல்’ன்னு கத்தற அளவுக்கு பயம். அதுனால அந்த வம்புக்கெல்லாம் நான் போனதே இல்லை. தங்கைமணி பயங்கர அட்வென்சரஸ். எல்லாத்துலேயும் போகும். எக்ஸிபிஷன்லஎல்லாம் இருக்கற அட்ராக்‌ஷனே லைட்டுகள் தான். நிறைய விதவிதமான கலர்ல வெளிச்சம் போட்டு இருப்பாங்க. லாஃபிங்ஹவுஸில் கண்ணாடிகள் இருக்கும். மேஜிக் ஷோ நடுத்துவார்கள். அந்த வயசுல எங்களுக்கு நிச்சியமாய் அது ஒரு வினோத உலகம் தான்.
 
சரி, சரி,  புள்ளை குட்டியெல்லாம் கூட்டிண்டு அபுதாபி வரதா இருந்தா, கண்டிப்பா கார்னிஷ் ஒரு நடை போயிட்டு வாங்க. குழந்தைகள் ரசிக்கும்.
Related Posts with Thumbnails