(இதென்ன தொடர் பதிவு சீஸனா???!!!தொடர் பதிவு ஒரு விதத்துல ரொம்ப நிம்மதி! என்ன எழுதறதுன்னு யோசிச்சு மண்டை உடைச்சுக்க வேண்டாமே!!ஹீ ஹீ)
எப்போவுமே, சினிமாவா இருந்தாலும் சரி, சில பாட்டுக்களா இருந்தாலும் சரி அதை மீண்டும் பார்க்கும்போதோ கேட்கும்போதோ, சில நல்ல நினைவுகளை கொண்டு வரும். அந்த நிமிடங்களை மறுபடியும் வாழ வழி வகுக்கும். சினிமாவை ரசிக்க ஆரம்பிச்சது சில வருஷங்களுக்கு முன்னாடி தான்னாலும், சின்ன வயசுல இருந்து கேட்ட, பார்த்த சினிமா இந்த லிஸ்டில் அடக்கம்.
இது பெஸ்டு லிஸ்டு இல்லாம இருக்கலாம். ஆனா என் குழந்தைப்பருவ நினைவுகளை எல்லாம் திருப்பி தருவதாக அமைவதால் இது என்னுடைய பெர்ஸனல் ஃபேவரைட்டாக இருக்கிறது.
1.சங்கராபரணம் (தெலுங்கு - 1979)
கே.விஸ்வநாத்தின் அற்புதமான காவியம் என்றே சொல்லலாம். சோமையாஜூலுவின் நடிப்பும் மஞ்சுவின் பக்தியும் இசையும் நடனமும் பேபி துளசியின் சூட்டிகையும் இந்த படத்தின் ஹைலைட்டு. எல்லா கே.விஸ்வநாத்தின் படங்களிலும் நம் நாட்டு கலாச்சாரத்தின் பெருமைகளை எடுத்துச்சொல்வது மாதிரி தான் கதையம்சம் இருக்கும். சங்கராபரணம், சாகர சங்கமம்,ஸ்ருதிலயலு, ஸ்வர்ணகமலம் இப்படி எல்லா படங்கள்லேயும் இசை நடனத்துக்கு ஏகப்பட்ட முக்கியத்துவம் கொடுத்து இருப்பார். குறிப்பா ஏன் இந்த படம்ன்னா, நான் குழந்தையா இருந்தப்போ, எங்க வீட்டுல ஒரு புஷ் டேப்ரிக்கார்டர் இருந்தது. அதுல சதா இந்த பாட்டுக்களை கேட்டுக்கேட்டு மனப்பாடம் ஆயிடுத்து. இந்தப்படத்தை ரெண்டு வருஷம் முன்னாடி
ராஜஸ்ரீயில் டவுன்லோடு பண்ணி வெச்சுண்டு அப்பப்போ பார்ப்பதுண்டு. சமீபத்தில் விஷுவுக்கு Ntvயில் போட்டு புண்ணியம் கட்டிண்டாங்க. பேபி துளசியுடன் மஞ்சு பார்க்க, கோதாவரிக்கரையில் ஸ்நானம் பண்ண சங்கர சாஸ்த்திரிகள் வர்றார். அதுல இருந்து தான் பார்க்க முடிஞ்சது. இருந்தாலும் அந்த காட்சிகளில் இருந்த அழுத்தம், அந்த பக்தி பாவம், அந்த நெகிழ்ச்சி அப்படியே என்னை அழ வெச்சுடுத்து. கண்ல தாரைதாரையா
கண்ணீரோடு பார்த்தேன். சாகர சங்கமமும் எத்தனை வாட்டி போட்டாலும் பார்ப்பேன்.
2.தில்லு முல்லு (தமிழ் 1981)
அருமையான டைரக்ஷன், சூப்பர் பாடல்கள், ரஜினியின் டைமிங் எல்லாமா சேர்த்து இந்தப்படமும் என் ஆல் டைம் ஃபேவரைட்ஸ் லிஸ்டுல வரும். இண்டெர்வியூ காட்சியும் ஃபுட்பால் மேட்ச் காட்சியும் க்ளைமாக்ஸ் காட்சியும் யாராலும் மறக்க முடியாது. தேங்காய் ஸ்ரீநிவாசன் மாதிரி இந்த பாத்திரத்தை வேறு யாராலையும் நடிச்சிருக்க முடிஞ்சிருக்காதுன்னு தான் நான் நினைக்கறேன். ஸ்பெஷல் மென்ஷன் டு செளகார் ஜானகி! எனக்கு பொதுவே உத்பல் தத்னா ரொம்ப இஷ்டம். ஆனா அவரை மிஞ்சிட்டார் தேங்காய்ன்னே சொல்லலாம். அவ்ளொ கலக்கான ஆக்டிங்.
3.மணல் கயிறு (தமிழ் 1982)
நாடகத்தனமா இருந்தாலும் எஸ்.வீ.சேகரின் 8 கண்டிஷன்களும் விசுவின் ராகம்போட்ட பேச்சும் இருந்தாலும் பலவாட்டி பார்த்து பார்த்தும் போரே அடிக்காத படம் இது. ஆல் டைம் ஃபேவரைட். சமீபத்துல ராஜ்ஸ்ரீயில் பார்த்தோம். ரசித்தோம். இப்போவும் நல்லாத்தான் இருக்கு. இந்தப்படத்தின் ஹைலைட் & ஒரிஜினல் ஹீரோன்னு கேட்டா அது வேறு யாருமில்ல, கிஷ்மூ தான். அவ்ளோ அருமையான உடல்மொழி. தலையை முன்னாடி துருத்திண்டு, துர்கா துர்கான்னு புலம்பிண்டு, சூப்பர்.நீங்களே பாருங்களேன்.. ஒவ்வொரு வாட்டி பார்க்கும்போதும் இப்படி அல்பாயுசுல போயிட்டாரேன்னு மனசு பதறும். ராயல் சல்யூட் கிஷ்மூ சார்.
4.அஹா நா பெள்ளண்ட்டா (தெலுங்கு 1986)
ஜந்தியாலா டைரக்ஷனில் அல்ட்டிமேட் காமெடியாக எடுக்கப்பட்ட சூப்பர் படம் இது. சிரிச்சு சிரிச்சு வயித்த வலி வந்துடுத்து. அவ்ளோ காமெடி இந்தப்படம். ராஜேந்திரப்பிரசாத் தான் ஹீரோ. இந்த ஜந்தியாலாவோட ஸ்பெஷாலிட்டியே சில குறிப்பிட்ட குணாதிசியங்களோட பாத்திரப்படைப்பு இருக்கும். உதாஹரணத்துக்கு இந்த படத்தில் வரும் அப்பா பாத்திரம் (கோட்டா ஸ்ரீனிவாச ராவ்) மஹா கஞ்சன், பேசுறதுக்கே காசு கேக்குற ஆளு.
நம்ம ஹீரோவோட அப்பா மரண மொக்கை போடுற கேசு. யாரைப்பார்த்தாலும் தன் ஆட்டோ பயோகிராஃபியை சொல்ல ஆரம்பித்து விடுவார். கேக்கறவங்க மண்டை காய்ஞ்சு நொந்து போயிடுவாங்க. அந்த அளவுக்கு நச்சு கேஸ். இந்தப்படத்தில் தான் பிரும்மானந்தம் வெளிச்சத்துக்கு வந்தார். இவர் ’மொழி’படத்துலஅபார்ட்டுமெண்ட் செக்கரெட்டரியா வருவாரே!
5.க்ஷணக்க்ஷணம் (தெலுங்கு 1991)
ராம் கோபால் வர்மாவின் டைரக்ஷனில், வெங்கடேஷ்,ஸ்ரீதேவி,பரேஷ் ராவல் நடித்த ஒரு சூப்பர் படம். இதன் மெயின் ஹைலைட் ஸ்ரீதேவி. எத்தனையோ தமிழ்ப்படங்களில் ஸ்ரீதேவியைப் பார்த்திருந்தாலும், இந்த படமும் இவர் நடிப்பும் அந்த விறுவிறுப்பும் அலுக்கவே இல்லை. நல்ல ஜாலி படம். எம்.எம்.கீரவாணியின் இசையில் சூப்பர்ஹிட் பாடல்கள். எனக்கும் தங்கைமணிக்கும் ஆல்டைம் ஃபேவரைட்ஸ்!
6.Forrest Gump (ஆங்கிலம் 1994)
முதல் முறையா ஒரு ஹாலிவுட் படம் பார்த்து ரொம்ப ரொம்ப அழுதேன்னா அது இந்தப்படம் தான். என்ன உணர்ச்சின்னு சரியாச்சொல்ல தெரியலை. ஒரு வித பரிதாபமா, ஒரு நெகிழ்ச்சியா அது என்னவா வேணா இருக்கட்டும். அருமையான நடிப்பு(ஆஸ்கர் கிடைச்சது) என்னை மொத்தமா கவர்ந்தார் டாம் ஹான்க்ஸ். தனியா வீட்டுல இருந்தப்போ அமைதியா உக்காந்து பார்த்தேன். எவர் லாஸ்டிங் இம்பாக்டுன்னு சொல்லலாம். அவ்ளோ ஒரு அருமையான படம். அமெரிக்க வரலாற்றில் நடந்த நிகழ்வுகளை அழகாக படத்தில் கோர்வையாக சேர்த்திருப்பார்கள். ஒவ்வொரு நிகழ்ச்சியும் அந்தந்த காலகட்டத்தில் ஒரு ஜர்னல் போல ஒரு டயரி போல எடுத்திருப்பார்கள். இந்த காவியத்தின் தழுவல் தான் மிகப்பரிதாபமாக தமிழில் வாரணம் ஆயிரம் & ஹிந்தியில் மை நேம் இஸ் கான். சாரி.. ரெண்டும் மெகா சொதப்பல். நீங்க இன்னும் பார்க்கலையா? அப்போ கட்டாயம் பாருங்க. மேலதிக விவரத்துக்கு இங்கே க்ளிக்கவும்.
7.பம்பாய் (தமிழ் 1995)
1995இல் இந்தப்படம் மவுண்டு ரோடு தேவி தியேட்டருக்கு அப்பா கூட்டிண்டு போனார். நான் தங்கைமணி, N.K.ஸ்ரீவித்யா, கண்ணா அண்ணா, லதா எல்லாரையும் கூட்டிண்டு போனார். மறக்க முடியாத படம்.
முக்கியமா, மறக்க முடியாத இசை. பாம்பே ரயட்ஸில் ஏ.ஆர்.ஆரின் இசையில் நான் உணர்ந்த வைப்ரேஷன்ஸ் என்னால என்னிக்குமே மறக்க முடியாது. படம் பார்த்த ஒரு வாரம் வரைக்கும் அந்த அதிர்ச்சி இருந்ததுன்னா பார்த்துக்கோங்க. அந்த ட்ரம்ஸ் சில சமயம் இப்போகூட கேக்கும் என் காதுல. முக்கியமா க்ளைமாக்ஸ் காட்சி ரொம்ப பாதிச்சது. பாட்டு எல்லாமே செம அல்ட்டிமேட் ரகம்! இண்டர்வெலுக்கு அப்புறம் ஒரு சுவையான நிகழ்வு தியேட்டரில். மனிஷா அரவிந்த் தம்பதியின் இரட்டைக்குழந்தைகளை காணோம்! மனீஷா தேம்பித்தேம்பி அழுதுண்டே எங்கே?... என் குழந்தைங்க எங்கே?ன்னு கேக்கறாங்க. உடனே தியேட்டரில் ஏதோ ஒரு விஷமி,” இரும்மா டீ சாப்பிட போயிருக்காங்க வந்துருவாங்க”ன்னு சொல்ல, படத்தை உருக்கமா
பார்த்துண்டு இருந்த கூட்டம் ஒரு நிமிஷம் கொல்லுன்னு சிரிச்சுடுத்து. எதுக்கு சொல்ல வர்றேன்னா அவ்ளோ நிசப்தம் தியேட்டர்ல. படம் முடிஞ்சதுக்கப்புறம் கார்னெட்டோ ஐஸ்கிரீம் கூட மறக்க முடியவில்லை .. மறக்க முடியவில்லை!
8.தெனாலி(தமிழ் 2000)
மைக்கல் மதன காமராஜனைப்பத்தி ஒரு தனி பதிவு போட்ட நிலையில் இன்னோரு வாட்டி அதைப்பத்தியே எழுத வேண்டாம்ன்னு தான் இந்தப்படத்தை பத்தி எழுதறேன். கமலின் க்ரேஸி காம்பினேஷனில் வந்த எல்லாப்படங்களுமே என் ஃபேவரைட் என்றாலும் இலங்கைத்தமிழ் பேசும் (கொஞ்சம் கிழடு தட்டினாலும்)தாமரைப்போன்ற அகன்ற கண்களுடன் கமலஹாசனின் அப்பாவித்தனமான நடிப்பு அப்படி ஒரு ஈர்ப்பு. மதன்பாப், டெல்லி, சுரேஷ்க்கிருஷ்ணா, இவங்க கூட சேர்ந்துண்டு ஜெயராம் அடிக்கிற லூட்டி பயங்கர ரசனை. டீ.வீ.டீ இருக்கு. அடிக்கடி பார்க்கறேன். எத்தனை வாட்டி பார்த்தாலும் ஏதாவது ஒரு புதிய ஜோக் அகப்படாம இருந்ததில்லை. அவ்ளோ டைமிங். பஞ்சதந்திரம், பம்மல் சம்பந்தம்,காதலா காதலா, அபூர்வ
சகோதரர்கள், சிங்காரவேலன் இதெல்லாம் கூட எனக்கு பிடிக்கும். தெனாலி என்னிக்கும் கொஞ்சம் அதிக இஷ்டம்.
9.அன்பே சிவம் (தமிழ் 2003)
ஒவ்வொரு முறை இதைப்பார்க்கும் போதும் சுந்தர் சி யின் (காலி) மண்டையிலிருந்து எப்படி இந்த மாதிரி ஒரு காவியம் வந்திருக்க முடியும்ன்னு யோசிக்காம இருந்ததில்லை. இந்தப்படத்தின் பின்னணியில் கட்டாயம் கமலஹாசன் தான் இருந்திருக்க வேண்டும் என்று திட்டவட்டமா நம்பும்படியா இருக்கும். காட்சிக்கோர்வையும் சரி, மதனின் வசனங்களும் சரி, கமலின் நல்லா கெட்டப்பும் நடிப்பும், முதிர்ச்சியும், கெட்டிக்காரத்தனமான
பேச்சும் எதை எடுக்க எதை விடுக்க. சந்தேகமே இல்லை. ஆல்டைம் ஃபேவரைட்ஸ் இது.
10.தன்மாத்ரா (மலையாளம் 2005)
மோஹன்லாலின் நடிப்பாற்றலில் இந்தப்படம் பார்த்த ஒரு வாரம் அப்படியே ஸ்தம்பிச்சு போயிட்டேன். அவ்ளோ மன பாரம். சோகமான படங்கள் இனிமே பார்க்கவே கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன். இந்தப்படத்துல சோகம்ங்கறதை விட யதார்த்தம் நிறைய இருக்கும். நல்லா இருக்கற ஒரு மனுஷன் ஒரு கொடிய மனநோய் தாக்குறதுனால எப்படி அவன் குடும்பமும் அவனும் கஷ்டப்படுறாங்கங்கறது தான் கதைன்னாலும் மோஹன்லாலின் கண்ணிமைகள் கூட நடிச்சு இருக்கறது ரொம்ப ஆச்சிர்யம் எனக்கு. மறக்க முடியாத ஒரு படம். ரெண்டாவது வாட்டி பார்க்க தைரியம் இருக்கலை.
- நந்தனார்
- ஹரிதாஸ்
- சிவகவி
- பக்த மீரா
- சக்ரதாரி
- ஒளவையார் (கே.பி.சுந்தராம்பாள்)
- பராசக்தி
- வியட்நாம் வீடு
- கொஞ்சும் சலங்கை
- கர்ணன்
- தில்லானா மோஹனாம்பாள்(வைத்தி)
- கெளரவம்
- பாலும் பழமும்
- பாகப்பிரிவினை
- ஆயிரத்தில் ஒருவன் (பழைய எம்.ஜி.ஆர் படம்)
- அன்பே வா
- அவள் ஒரு தொடர்கதை
- தனியாவர்த்தனம்
ஓ, இதுவா? இது என்னை போஸ்டு எழுத விடாமல் நச்சு பண்ணி ரங்கு தந்த லிஸ்டு. நான் சொல்லியாச்சு இது எனக்கு பிடிச்ச படங்கள் லிஸ்டுன்னு.நான் சொன்னேன் நான் வேணா உங்களுக்கு ஒரு ப்ளாக் ஓப்பன் பண்ணிக்குடுக்கறேன்னு. ரங்கு கேட்டாத்தானே? நானும் இதுல தான் சொல்லுவேன்னு அடம் பிடிச்சு குடுத்து இருக்கார், இந்த கற்கால மனிதன். சில படங்கள் வந்தப்போ இவர் பிறக்கக்கூட இல்லை. ஏன் தான் இப்படியோ.. நான் என்ன பண்ணட்டும்? 10 படங்கள் தான்னு சொல்லியாச்சு. கேட்டாத்தானே? சொல்லிண்டே போறார். அப்புறம் மாடிஃபிக்கேஷன் வேற.. இது வேண்டாம். அது. அது வேண்டாம் இதுன்னு. இதான் ஃபைனல் லிஸ்டுன்னு எல்லாம் சொல்ல முடியாது. சாயங்காலம் வந்து உக்காண்டு வேற பேரெல்லாம் சொல்லப்போறார். உடனே எல்லாரும் ஜால்ரா அடிச்சுண்டு ரங்கு லிஸ்டு தான் பெஸ்டுன்னு பின்னூட்டம் போடுவீங்களே? இதே வேலையாப்போச்சுப்பா..
குறிப்பா நான் தொடர் பதிவுக்கு அழைக்க விரும்புவது
ஜிகர்தண்டா கார்த்திக்
எல்.கே
பாஸ்டன் ஸ்ரீராம் (ஒரே ஒரு கண்டிஷன் கமல் படங்களை தவிர்த்து மற்றவை, ஹீ ஹீ எங்களுக்கு தெரியாதா?)
பொற்ஸ்
சித்ரா
முகுந்தம்மா
புதுகைத்தென்றல்
முத்துலெட்சுமி
ஸாதிகா அக்கா
மிஸ் சிட்சாட்
குறிப்பு:வேறுயாருக்காவது எழுதணும்ன்னு தோணிச்சுன்னா எழுதிடுங்க. கேட்டாலும் கிடைக்காது இந்த மாதிரி ஒரு அல்வா பதிவு. லின்க் குடுக்க மறக்காதீங்க.