Pages

Showing posts with label mappillai vinayagar. Show all posts
Showing posts with label mappillai vinayagar. Show all posts

Friday, May 21, 2010

பன்னீர் சோடாஆஆஆ.......

முதன் முதலா எப்போ பன்னீர்ஜோடா குடிச்சேன்னு சரிய நினைவில்லை. 1985 -கொண்டித்தோப்புல இருந்தப்போ ரவி மாமா மெரீனா பீச்சுக்கு கூட்டிண்டு போகும்போது பஸ்ல எனக்கு வாந்தி வராப்ல இருந்தது. உடனே ஏதோ ஒரு ஸ்டாப்புல எல்லாரும் இறங்கி, பன்னீர் சோடா வாங்கிக்கொடுத்தார்.
இந்த மாதிரி ஒரு ட்ரிங்க் இருக்குன்னு அப்போத்தான் தெரிஞ்சது. அப்போ ஆரம்பிச்ச பன்னீர் சோடா பைத்தியம், சமீபத்துல ஏதோ ஒரு பொட்டிக்கடையில பன்னீர்சோடா வாங்கிக்குடிச்சு அதுல என்னென்னமோ குப்பை எல்லாம் விழுந்திருக்க, நைனாவிடம் திட்டு வாங்கினாலும் பன்னீர் சோடா பன்னீர் சோடாதான்னு சூளுரைக்கிற அளவுக்கு எனக்கு இஷ்டம்!

எங்கே போனாலும், ஏதாவது ஒரு பெட்டிக்கடையில பன்னீர் சோடா குடிக்காம இருந்ததே இல்லை! குறிப்பா பன்னீர் சோடா  ரொம்ப ரொம்ப ரசிச்சுக்குடிச்சது திருப்பரங்குன்றத்துலன்னு நினைவு. ப்ராண்ட் - மாப்பிள்ளை விநாயகர். ஆஹா.. அப்படி ஒரு சுவை. தரமான சோடா, தரமான இனிப்பு, தரமான பன்னீர் இதையெல்லாம் கலக்கினா அருமையான பன்னீர்சோடா!

சில இடங்கள்ல கன்வென்ஷனல் பாட்டில்கள்ல பன்னீர்சோடான்னு லேபிள் ஒட்டி வரும்! அநியாய டேஸ்டா இருக்கும். ஏன்னா சோடா ரொம்ப காட்டா இருக்கும். இனிப்பும் போடுவாங்க. ஆனா முக்கால்வாசி இடங்கள்ல பன்னீர்சோடா வெறும் சர்க்கரை+அழுக்குத்தண்ணி தான். அட்லீஸ்டு எனக்கு தெரிஞ்ச மட்டில், என்னுடைய பெர்ஸனல் எக்ஸ்பீரியன்ஸ்!

மாப்பிள்ளை விநாயகர் மாதிரியான் ஒரு சோடாவை அடுத்து நான் எங்கேயும் குடிக்கலை. சிதம்பரம் கோவில் கிட்டே ஏதோ ஒரு கடையில் யானை விலை கொடுத்து வாங்கி குடிச்சோம். அந்த சுவைக்கு யானை விலை கூட கொடுக்கலாம். அதான் சட்டுன்னு மனசுல நிக்கிது. எங்க மாமியாருக்கு முதல்முறையா பன்னீர் சோடா வாங்கிக்கொடுத்ததும் சிதம்பரத்துல தான். மேல்மருத்துவரில் வாங்கிக்கொடுத்தப்போ நல்லா இருக்கலை! சிதம்பரத்துல அவங்களுக்கு ரொம்ப பிடிச்சது!

(படத்துக்கு புதுகைத்தென்றல் அக்காவுக்கு நன்றி, கூகிள்ல தேடினப்போ அவங்க தளத்துல இருந்து தான் கிடைச்சது! அடுத்த வெக்கேஷன் போனா மா.வி சோடாவை படமெடுத்து அப்லோடு பண்ணனும். படமே இல்லை! )

கண்ட கண்ட ’கலர்’களை விட இது எவ்வளவோ பெட்டர்ங்கறது என் கருத்து.
முன்னக்காலத்துல எல்லாம் யாராவது விருந்தாளி வந்தா போய் கலர்வாங்கிட்டு வான்னு தான் சொல்லுவாங்க!

தொண்ணூறுகள்ல திடீர்ன்னு ஒரே நெருக்கடி வந்துடுத்து. மார்க்கெட்ல பன்னீர் சோடாவுக்கு பதிலா அல்ப்பமா ரஸ்னா வந்திடுத்து. சர்க்கரையே பத்தாம, வெறும் ஆரஞ்சு கலருக்காக ரஸ்னாவை பாட்டில் பாட்டிலா 2 ரூபாய் கொடுத்து மக்கள்ஸ் குடிச்சுண்டு இருந்தாங்க! மேங்கோ தான் இருக்குன்னு சில சமயம் சொல்லுவாங்க. மேங்கோவாவது, ஆரஞ்சாவது, ரெண்டுமே மஹாக்கேவலமாத்தானிருக்கும் .

அம்மா பண்ற ரஸ்னா நாங்க ரசிச்சு குடிப்போம். எல்லா ஃப்ளேவரும் அம்மா 80ஸ்லேயே பண்ணிக்கொடுத்தாச்சு. அதைக்குடிச்ச நா, இதெஇயெல்லாம் ரசிக்கலை! நானும் கடைகடையா கேட்டு கேட்டு பார்க்கறேன் பன்னீர்ஜோடா இல்லேன்னு தான் எல்லா இடத்துலேயும் சொன்னாங்க!

94ல கோக் வந்தது. ஐஞ்சே ரூபாங்கறதால மெதுவா பன்னீர் சோடா எல்லாம் நலிஞ்ச தொழில் ஆயிடுத்து!

இன்னிக்கு எம்.பீஸி2 வில் சைலன்ஸ் ஆஃப் தி லாம்ப்ஸ் படந்த்தின் அடுத்த பார்டு ‘ ரெட் டிராகன்’ போட்டு இருந்தான். அதுல ஒரு டிட்டெக்டிவ் ஏதோ ஒரு பானத்தை குடிச்சுண்டே ஆராய்ச்சி பண்ணிண்டு இருந்தான். நான் ரங்குவை கேட்டேன் இவாள்ளாம் என்ன குடிப்பா? ரங்கு சும்மா இருக்காமல் “ஆங்.. பன்னீர்சோடா ! கேக்குற கேள்வியைப்பாரு? ”ன்னு சொல்லிட்டார். எனக்கு கை கால் புரியாம பன்னீர்சோடா சபலம் வந்திடுத்து.

ஆயிரம் தான் இருந்தாலும் நம்ம கலாச்சாரத்தை எல்லாம் விட்டுட முடியுமா சொல்லுங்க?

வீட்டுல பன்னீர்சோடா எல்லாம் பண்ண முடியும்ன்னு நான் நினைச்சதே இல்லே! பன்னீர்சோடா உடனே தயாரிச்சுட்டேன். போன மாசம் சத்யநாராயண பூஜைக்காக வாங்கின பன்னீர் இருந்தது. இதோ பன்னீர்சோடா செய்யும் முறை

பன்னீர் -கால் டம்ளர்
சர்க்கரை (அ) ஆர்ட்டிஃபீஷியல் ஸ்வீட்னர் -Sugar Substitute -2 ஸ்பூன்
சோடா-1 கேன்
ரோஸ் எஸன்ஸ் - 2-3துளிகள்

முதல்ல பன்னீர்ல சர்க்க்ரையை நல்லா கலந்துண்டு, எஸன்ஸ் விட்டு ஸ்பூனால கொஞ்ச நேரம் கலக்கணும். அடுத்து ஸ்பூனால கலக்கிண்டே சோடா விட்டு உடனே சர்வ் பண்ணனும். ஆச்சு பன்னீர் சோடா ரெடி!

இந்த சோடாவை சம்மர்ல எஞ்சாய் பண்ணுங்க! முக்கியமா வெளிநாட்டுல இருக்கறவங்க ரொம்ப ரசிப்பாங்கன்னு நம்பறேன். எங்கே போறீங்க நீங்களும் மாப்பிள்ளை விநாயகரை வீட்டுலேயே பண்ணப்போறீங்களா?
Related Posts with Thumbnails